நம் ப்ளாக்கர்கள் நலம் காத்திட என் குரு கில்மானந்தாவிடம்
புத்தாண்டு ஆசி வாங்க சென்றேன்.அப்போது அவர் வெட்டியாக
இருந்ததால் நம் நன்மைக்காக சில சொற்பொழிவை ஆற்றினார்
அது உங்கள் பார்வைக்கு இப்பொழுது.....
கில்மானந்தா: "ஜெட்லி நீ என் புகழை பரப்புவதில் எனக்கு மிக்க
மகிழ்ச்சி...ஆனால் நீ அதற்காக அமௌன்ட் கேப்பதெல்லாம்
அதிகம்ப்பா"...
ஜெட்லி : "சரி சரி உங்க உரையை ஆரம்பிங்க...."
***********************************
யதார்த்தம் என்றால் என்ன??
யதார்த்தம், நாம் இதை எங்கு போனாலும் தேடுகிறோம்.
ஒரு பக்கா மசாலா படத்தை,பதார்த்தம் தின்னுட்டே பார்த்துட்டு
அதில் யதார்த்தம் இல்லை என்று குறை சொல்கிறோம்.
எது யதார்த்தம் என்பதை அலசுவோம்...வாருங்கள்...
பல பேர் விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தை ரொம்ப
எதிர்ப்பார்த்து ஏமாந்து விட்டார்கள்...விஜய் கிட்ட இருந்து யதார்த்த சினிமா எதிர்ப்பார்த்தால் ஏமாற்றம் தான் மிஞ்சும்...அதான் அவரே
திருமலை படத்தில் சொன்னாரே வாழ்க்கை ஒரு வட்டம்னு....
அதுல அவரு சிக்கிட்டாரு...............!!
*****************************************
எது உண்மையான நட்பு:
பிட்டு ஒரு அட்டு என்றாலும் நம்மில் பலபேர் காலையில் பிட்டு(புட்டு) சாப்பிட்டு கொண்டே பிட்டு பார்க்கிறோம் என்பது தான் யதார்த்தம்....இதை தான் நான்...
பிட்டுசி.டி கொடுக்காதார் நட்பு அரைநட்பு
அந்நட்பை உடனே கட் செய்தல் நன்று....
விளக்கம்:
ஆபத்து காலத்தில் நமக்கு பிட் படம் தராதவன் நட்பை
உடனே கட் செய்வது சால சிறந்தது...
**************************************
மற்றவர்களுக்காகவும் வேண்டுங்கள்:
கங்கண சூரிய கிரகம்.
வரும் ஜனவரி மாட்டு பொங்கல் அன்று கங்கண சூரிய கிரகத்தை நாம் வெறும் கண்ணால் காணலாம் ஆனால்...இதற்கும் நம் தாம்தூம்படத்தில் நடித்த கங்கனா ரனௌத்க்கும் எந்த தொடர்பும் இல்லை....கங்கனா ரனௌத்க்கு ஒன்றும் சொல்லி கொள்கிற மாதிரி பெரிதாய் (வாய்ப்பு)இல்லை என்றாலும் இந்த 2010 இல் அவருக்கு கடவுள் அருள் கிடைக்க நாம் ப்ராத்தனை செய்வோம்....!!
"ஹோ...கில்மா ஜே ரவ" என்ற மந்திரத்தை இந்த தருணத்தில் இரண்டு தடவை கூறவும்...
****************************
வாழ்க்கை தத்துவம்:
பஸ் ஸ்டாப்பில் பஸ் நிக்கறது இல்லைனாலும் அதை நாம
பஸ் ஸ்டாப் என்று தான் சொல்றோம் அது போல் தான்
நம்ம வழுக்கையும் சாரி வாழ்க்கையும்....நான் என்ன சொல்ல
வரேன்னா பஸ் எங்கே நிக்குதோ அங்க போய் ஏறுங்கனு சொல்றேன்!!
********************************
உலகத்திலே பெரிய வலி:
காதலியை பிரியும் போது வரும் வலியா?? இல்லை நட்பை இழக்கும் போது வரும் வலியா?? இல்லை மொக்கை படம் பார்க்கும் போது வரும் வலியா?? இல்லை சரக்கு அடிச்சுட்டு வாந்தி எடுத்தா நம்ம நண்பர்கள் கிண்டல் செய்வார்களே அது தான் பெரிய வலி.காலத்தாலும் அழியாத வலி....சரக்கு ஓவர்ஆக அடிச்சா வாந்தி வரும் அது தான் காலத்தின் கட்டாயம் இதை தெரியாமல் நண்பர்கள் கேலிக்கு ஆளாகுபவர்கள்நெஞ்சில் மிக பெரிய வலியாக இந்த ஆப்பாயில் இருக்கும்.!!
ராவா ஆயினும் நாகாக்க அளவு தெரியாமல்
குடித்தால் அது ஆப்பாயில் ஆக வரும்....
மற்றும்...
சரக்கை பெருங்கடல் என நீந்துவர் நீந்தாதார்
வீடு போய் சேரமாட்டார்....
******************************************
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....
இந்த புத்தாண்டில் மப்பும் டப்பும் செழிக்க அடியேனின்
வாழ்த்துக்கள்......."ஹோ...கில்மா ஜே ரவ"
இந்த சிந்தனைகள் பல பேரை சேர ஒட்டு போடுங்கள்...
முடிஞ்சா பின்னூட்டம் போட்டுட்டு போங்க.....
உங்கள்
ஜெட்லி சரண்....
16 comments:
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
புது வருட தொடக்கமே பட்டைய கிளப்புது..,
சினிமா பார்ப்பவர் அதைப்பார்க்கும்முன் ஜெட்லியின்
விமர்சனத்தைப் படித்தல் நன்று.
கடந்த ஆண்டில் சிறந்த சேவை ஜெட்லியின் சேவை.
இந்த சேவை நாட்டுக்கு என்றும் தேவை.
அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்............
ஜெய் கில்மானந்தா,
ஜெய் ஜெட்லி
ஹோ...கில்மா ஜே ரவ
ம்....
மனம் கனிந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....
பிரபாகர்.
:) வாழ்த்துகள் ஜெட்லி.. என்னா ஒரே மப்பாவே இருக்கு
//ஆபத்து காலத்தில் நமக்கு பிட் படம் தராதவன் நட்பை
உடனே கட் செய்வது சால சிறந்தது...//
அப்படியொரு ப்ரன்டு எதுக்குங்கறீங்க???
ஸ்ரீலஸ்ரீ அஜால் குஜால் கார்த்திகானந்தாவின் ஆசிகள் உங்களுக்கு உண்டு தோழா..:-))
:))))
saravana happy new year.......
Happy New Year.. =)
//பஸ் ஸ்டாப்பில் பஸ் நிக்கறது இல்லைனாலும் அதை நாம
பஸ் ஸ்டாப் என்று தான் சொல்றோம் அது போல் தான்
நம்ம வழுக்கையும் சாரி வாழ்க்கையும்....நான் என்ன சொல்ல
வரேன்னா பஸ் எங்கே நிக்குதோ அங்க போய் ஏறுங்கனு சொல்றேன்!!//
படிக்கும்போது மொக்க மாதிரி தெரிந்தாலும் இவ்வளவு அருமையான வாழ்வியல் உண்மையை சொல்லி புட்டீக...
@ அத்திரி
வாழ்த்துக்கள்
@சுரேஷ்
நன்றி தல...
@ பாலா மாமு
ஹோ...கில்மா ஜே ரவ.....
என்ன நண்பா ரொம்ப நாளா ஆளை காணோம்...
@Mrs.Faizakader
வாழ்த்துக்கள்..நன்றி.
@பிரபாகர்
என்ன ம்...
வாழ்த்துக்கள் அண்ணே..
@ அசோக்
எல்லாம் சும்மா டைம் பாஸ்க்கு டாக்டர்...
@ஷோபிகண்ணு
கருத்தை உள்வாங்கி கொண்டதுக்கு நன்றி...
@கார்த்திகைப் பாண்டியன்
நீங்களுமா??,....
நன்றி அண்ணே..
@பிரியமுடன்...வசந்த்
வாழ்த்துக்கள் நண்பா ....
அன்பின் ஜெட்லி
ரசித்தேன்
நல்வாழ்த்துகள் ஜெட்லி
@கலகலப்ரியா
வாழ்த்துக்கள்..நன்றி
@ சரண்
நீங்கதாங்க நமக்கு சரியான ஆள்...
@ சீனா சார்
நம்ம பக்கம் வந்ததுக்கு மிக்க நன்றிங்க...
ம்ம்.. ஆரம்பமே அசத்தல்...
ஆனாலும் அந்தத் தத்துவம் செமங்க.. ஃபு ஃப்லொல இருக்கீங்க போல...
20-10 வாழ்த்துக்கள்... :-)
வாழ்வு இனிக்கட்டும்...
"மப்"படித்து வாழ்வாரே வாழ்வார் பிறரெல்லாம்
"கப்"படித்து போவார் அறி.
Post a Comment