Sunday, January 3, 2010

புத்தகத்திருவிழா 2010 - நாள் 4
"மேய போற மாட்டுக்கு கொம்புல வைக்கோல்"ன்னு எங்க ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க, அதே மாதிரி புத்தக கண்காட்சிக்கு போகும்போதே நண்பன் நடராஜுக்கு கொடுக்குறதுக்காக, கிமு கிபி, மனிதனுக்குள் மிருகம் (ரெண்டும் மதன்), இலைகளை வியக்கும் மரம் (எஸ்ரா) என்று எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு கிளம்பினேன். முதலில் நுங்கம்பாக்கத்தில் பார்க்கலாம்ன்னு சொல்லி, அப்புறம் அது சேத்துபட்டுன்னு மாறி கடைசியில், பீச் ஸ்டேஷனில் போய் அவனை அழைத்துக்கொண்டு வந்தேன். புத்தகம் வாங்க போகிற ஆர்வத்தில், அடுத்து வந்த சிக்னலில், சிகப்பை கவனிக்காமல் சென்று, போக்குவரத்துக் காவலரிடம் பொன்மொழி ஒன்றை பெற்றுக்கொண்டு சென்றோம் (நல்ல வேளை துரத்திப் பிடிக்கல).
நூறடி அகலத்துல ரோடு போடுறாங்களோ இல்லியோ, நூறடிக்கு ஒரு சிக்னல் வச்சிருக்காங்க, ஒரு வழியா நாலு மணியோட வந்து சேர்ந்தோம். முந்தாநேத்து பதினஞ்சு, நேத்து பத்து, இன்னிக்கு அஞ்சு. பார்கிங் கட்டணத்தைத்தான் சொல்றேன், ஒண்ணும் புரியல. வண்டிய நிறுத்திட்டு நடந்து வந்தா, பக்கத்துல பிரபல எழுத்தாளர் வராருன்னு எல்லாரும் வழி விட்டு ஒதுங்குனாங்க. யாருன்னு பார்த்தா நம்ம நர்சிம். (அது எப்புடி எப்பவுமே ஸ்மார்டா இருக்கீங்க?). நேர போய் ஒரு ரெண்டு நிமிஷம் பேசினேன். அப்புறம் அவரோட பொன்னான நேரத்த வீணாக்க வேண்டாமேன்னு, கைகுலுக்கிட்டு உயிர்மை அரங்கில் சந்திக்கலாம்னு விடைபெற்றோம்.  இன்னிக்கு நல்லாவே கூட்டம் இருந்தது. ஆனாலும் ரெண்டு கவுண்டர்ல தான் டிக்கெட் குடுக்குறாங்க. மூணு நாளா வாங்க வேண்டிய புத்தக பட்டியல் தெளிவா இருந்ததால் குறிப்பிட்ட அரங்கங்களுக்கு மட்டும் போய் வந்ததால், இன்னிக்கு ஒவ்வொரு வரிசையா பார்க்கலாம்னு முடிவு பண்ணினோம்.நடராஜ் முதல் அரங்கிலேயே  மதனின் வந்தார்கள் வென்றார்கள் (விகடன் - Rs 135) வாங்கினான். அப்புறம் இருந்த வரிசைகளில் ஒன்றும் தேறவில்லை. ஞாநியின் தீவிர வாசகனான நண்பனுக்கு அவர் அரங்கில் இல்லாதது ஏமாற்றமளித்தது. இன்னும் இரண்டு வரிசைகள் சுற்றி முடிக்க மணி ஐந்தானது, நேரே உயிர்மை அரங்கம் நோக்கி சென்றோம், வழியில் யாரோ அழைப்பது போல் தோன்ற, பார்த்தால், தண்டோரா, கேபிள், அத்திரி மற்றும் பொன்.வாசு. அவர்களையும் அழைத்துக்கொண்டு உயிர்மை செல்ல, அரங்க வாசலில் சாருவும், எஸ்ராவும் வாசகர்கள் சூழ நின்று கொண்டிருந்தார்கள், அரங்கினுள்ளே இன்னுமொரு வாசகச் சுழல் தெரிந்தது, அகப்பட்டிருப்பது யாரென்று பார்த்தால், மீண்டும் நர்சிம். எஸ்ராவையும் சாருவையும் எளிதாய் படமெடுக்க முடிந்த என்னால் நர்சிமை கடைசிவரை பிடிக்கவே முடியவில்லை.
இதற்கிடையே சாருவுக்கு தேநீர் வந்தது, அவரோ அன்புடன் அதை அத்திரிக்கு கொடுக்க, பாச மழையில் திக்குமுக்காடிப்போனார் அத்திரி. தேநீருடன் பேசிக்கொண்டிருந்த போது அவரும் எங்க ஊர்க்காரர் என்று தெரிந்தது (அவரு ஊர் அம்பாசமுத்திரத்துக்கு மேற்கே ஏழு கிமீ, எங்க ஊரு வடக்கே ஏழு கிமீ). கொஞ்சம் ஊர்க்கதை பேசிவிட்டு விஜயா பதிப்பகம் சென்றோம்.


அங்கே நடராஜ் உபபாண்டவம் (விஜயா - Rs 200) வாங்கினான். உயிர்மைக்கு திரும்பி வந்து எஸ்ராவிடம் ஒரு கையெழுத்து வாங்கிக்கொண்டு, இந்த வருட புத்தகப்பட்டியல் அவருடைய உபயம் என்பதால் ஒரு நன்றியும் சொல்லிவிட்டு விடை பெற்றோம்.


நண்பனுக்கு வேறு வேலைகள் இருந்ததால் அவன் கிளம்பிவிட, அப்போது வந்து சேர்ந்த என் தங்கைக்கும் தோழிக்கும், அவர்கள் வாங்க வேண்டிய அரங்கங்கள் இருக்குமிடத்தை சொல்லிவிட்டு நான் சுற்ற ஆரம்பித்தேன்.இன்று வாங்கிய புத்தகங்கள்,

தலைவர் பரிந்துரை, 

காந்தியும் புலிக்கலைஞனும் 
- அசோகமித்திரன் - கவிதா - Rs 80
வாசவேச்வரம் - கிருத்திகா - காலச்சுவடு - Rs 140
பொய்த்தேவு - கநாசு - காலச்சுவடு - Rs 150

நேற்று பதிவிலிட்ட அலைபேசி எண்ணைப் பார்த்து அழைத்துப் பேசிய அண்ணன் பிரபாகரின் பரிந்துரை

கரையெல்லாம் செண்பகப்பூ - சுஜாதா - விசா - Rs 77
மீண்டும் ஜீனோ - சுஜாதா - விசா - Rs 115

கண்ணில் பட்டதால்,

ரப்பர் - ஜெயமோகன் - கவிதா - Rs 75
சுண்ணாம்பு கேட்ட இசக்கி - அ.கா.பெருமாள் - தமிழினி - Rs 85
குமாயுன் புலிகள் - ஜிம் கார்பெட் (தமிழில் திஜர) - காலச்சுவடு - Rs 125

நீண்டநேரம் தேடி, "மதினிமார் கதை", அன்னம் வெளியீடு என்பதை கண்டுபிடித்தேன். (வீடு வந்து சேர்ந்து, மின்னஞ்சலை திறந்து பார்த்தால்,  கார்த்திகை பாண்டியன் தகவல்களை அனுப்பிருந்தார், நன்றி அண்ணே) ஆனால், புத்தகம் இருப்பில் இல்லை என்றும், அடுத்த பதிப்பு வருமா என்று தெரியாது என்றும் பதில் வந்ததை, தமிழினியில் சந்தித்த சிவராமனிடம் சொல்ல, அவர், தனது வீட்டிலிருந்து நாளை கொண்டுவந்து தருவதாக கூறியுள்ளார். ஒரே ஒரு நிபந்தனை, படித்துவிட்டு புத்தகத்தைப் பற்றி பதிவிட வேண்டும் என்றார். நிச்சயம் செய்துவிடலாம். அவருடன் சுரேஷ்கண்ணனும் இருந்தார். அவர்கள் இருவருடனும் கொஞ்ச நேரம் சுற்றி விட்டு நாளை மீண்டும் வருவதாய் சொல்லி விடைபெற்றேன்.

இன்று கண்ணை உறுத்திய புத்தகங்கள்
என் சரிதம் - உவேசா - Rs 300
தமிழில் பிழையில்லாமல் எழுத ஒரு வழிகாட்டி - அரங்கு எண் 60-80ல்  எங்கோ பார்த்தேன், தேட வேண்டும்.

பின்குறிப்பு :

பிரபா கேட்ட, "ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி" எங்கு தேடியும் கிடைக்கவில்லை. யார் கண்ணிலாவது பட்டால் சொல்லவும்.

புதுமைப்பித்தன் சிறுகதைகளின் முழுத் தொகுப்பு

காலச்சுவடு -  Rs 450
சந்தியா பதிப்பகம் - Rs 350
மணிவாசகர் - Rs 200 (2 தொகுதிகள்)
செண்பகா - Rs 200 (5 தொகுதிகள்)

யோசித்து முடிவு செய்யவும்

ஞாயிறும் செல்வேன், இணைந்து கொள்ள விரும்புவோர், தொடர்பு கொள்க, 9884088078

நன்றி
சங்கர்

30 comments:

சங்கர் said...

தமிழ் மணம் என்னை உள்ளே நுழைய விடவில்லை, யாராவது இந்தப் பதிவை இணைத்து விடவும்

சுசி said...

அப்பா.. கண்காட்சிக்கு போய் வந்தா மாதிரியே இருக்கு.
நாளைக்கும் போக ரெடி ஆய்ட்டேன் :))
மறக்காம கூட்டிட்டு போங்க சங்கரு.

cheena (சீனா) said...

அன்பின் சங்கர்

அருமையான இடுகை - பரிந்துரைத்த - வாங்கிய புத்தகங்கள் - அனைத்தும் மற்றவர்களுக்கும் உதவும் வண்ணம் இடுகை இட்டது நன்று.

நல்வாழ்த்துகள்

சரண் said...

உண்மையில் இத்தனை நாள் கண்காட்சிக்கு போக வாய்ப்பு கிடைத்ததே பெரிய கொடுப்பினை நண்பா. அதை யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்று அலுப்பு பார்க்காமல் உடனடியாக பதிவிட்டது சிறப்பு.

நான் இந்த பதிவுக்கான சுட்டியை தமிழ்மணத்தில் இருந்துதானே பெற்றேன்?

புலவன் புலிகேசி said...

நானும் வரலாமுனு இருக்கேன். அப்பாலீக்கா அழைக்கிறேன்..

துளசி கோபால் said...

நான் திங்கள் மாலை போகப்போறேன். தெரிஞ்சவுங்க யாராவது என்னைப் பார்த்தால் வந்து பேசுங்கப்பா.

எனக்கு யாரைப்பார்த்தாலும் தெரிஞ்சவுங்க மாதிரியே இருப்பதால் ..........

நாளை சந்திப்போம்!!!!

கடைக்குட்டி said...

nice post.. gud work..

பயணக் கட்டுரைல இது புது ட்ரெண்டா?? நல்லா இருக்கு :-)

பிரபாகர் said...

சங்கர்,

சீனா அய்யா சொன்னதுபோல் சொல்லிய யாவும் அருமை.

சிந்தாமணி கிடைக்குமா? காத்திருக்கிறேன்....

பிரபாகர்.

பின்னோக்கி said...

அருமைங்க. கண்காட்சிக்கு போகமுடியாத குறையை உங்களின் பதிவுகள் தீர்த்துவைக்கிறது. நன்றிகள் பல. அப்படியே, ஒரே புத்தகம் இரண்டு பதிப்பகத்தில் வெளிவந்து, விலை வித்தியாசம் இருக்கும் எதாவது புத்தகங்களைப் பற்றி சொன்னால் உபயோகமாக இருக்கும். செய்வீர்களா ?.

சங்கர் said...

@சுசி

வாங்க போவோம்

சங்கர் said...

@ cheena (சீனா)

வாங்க ஐயா, நீங்களும் சென்னையில் இருந்திருந்தா சேர்ந்தே போயிருக்கலாம்

சங்கர் said...

@சரண்

பத்து நாள் விடுமுறை, வீட்டில் வெட்டியாய் இருப்பதைவிட, அங்க போனால் நண்பர்களை பார்க்கலாம்னு தான்,

வெற்றி said...

நல்ல முயற்சி நண்பா!!
மதனின் மனிதனும் மர்மங்களும் படித்திருக்கிறீர்களா?
இல்லை என்றால் வாங்கி விடவும்!
சுவையான பல தகவல்கள் அதில் இருக்கும்.

சங்கர் said...

@புலவன் புலிகேசி

வந்தா போன் பண்ணுங்க

சங்கர் said...

@துளசி கோபால்

வாங்க, நான் ஐந்து மணிக்கு மேல் வருவேன், போன் பண்ணுங்க

//எனக்கு யாரைப்பார்த்தாலும் தெரிஞ்சவுங்க மாதிரியே இருப்பதால் ........//

நானும் உயிர்மை, தமிழினில சிலரை பார்த்து, கேட்டு பல்பு வாங்கினேன்

சங்கர் said...

@கடைக்குட்டி

அந்தப்பக்கம் வர்றதா இல்லியா ?

//பயணக் கட்டுரைல இது புது ட்ரெண்டா?? நல்லா இருக்கு :-)//

:)))

சங்கர் said...

//பிரபாகர் said...
சிந்தாமணி கிடைக்குமா? காத்திருக்கிறேன்....//

நேத்து தேடி பார்த்தேன் சிக்கல, இன்று மீண்டும் முயற்சிக்கிறேன்

சங்கர் said...

//பின்னோக்கி said...
அப்படியே, ஒரே புத்தகம் இரண்டு பதிப்பகத்தில் வெளிவந்து, விலை வித்தியாசம் இருக்கும் எதாவது புத்தகங்களைப் பற்றி சொன்னால் உபயோகமாக இருக்கும். செய்வீர்களா ?//

நீங்க வரலியா?

பெரும்பாலும், நாட்டுடைமை ஆக்கப்பட்ட புத்தகங்கள் இப்படி பல பதிப்பகங்களில் வெளியிடுகிறார்கள்,

உதாரணமாக, பொன்னியின் செல்வன் 175, 200, 325, 400, 525 என்று பல விலைகளில் கிடைக்கிறது, அடுத்த பதிவில் இது பற்றி எழுதுகிறேன்,

சங்கர் said...

//வெற்றி said...
மதனின் மனிதனும் மர்மங்களும் படித்திருக்கிறீர்களா?//

இதுவரை படித்ததில்லை, படித்துப் பார்க்கிறேன்

shortfilmindia.com said...

என் போட்டோவை அலங்கல் மலங்கலாய் போட்டதை வன்மையாய் கண்டிக்கிறேன்.:))
கேபிள் சங்கர்

செ.சரவணக்குமார் said...

நல்ல நூல்களை வாங்கியிருக்கிறீர்கள், பகிர்வுக்கு நன்றி.

டம்பி மேவீ said...

நீங்கள் எஸ்ராவிடம் கையெழுத்து வாங்கி கொண்டு இருக்கும் பொழுது நான் அவர் பக்கத்தில் தான் நின்று கொண்டு இருந்தேன்....... அது நீங்கள் தனா என்ற சந்தேகத்தில் உங்களை கூப்பிடாமல் இருந்து விட்டேன் ......

தண்டோரா ...... said...

அப்பு.. நாங்கதான் தெளிவில்லாமல்(அறிவு) இருந்தோம்னா உன் கேமராவுமா? அடுக்குமாலேய்!!

அத்திரி said...

ஹை என் போட்டோ நல்லா வந்திருக்கு

சங்கர் said...

//shortfilmindia.com said...
என் போட்டோவை அலங்கல் மலங்கலாய் போட்டதை வன்மையாய் கண்டிக்கிறேன்.:))//

//தண்டோரா ...... said...
அப்பு.. நாங்கதான் தெளிவில்லாமல்(அறிவு) இருந்தோம்னா//

நான் தான் சரியா எடுக்கலையோன்னு யோசிச்சுக்கிட்டிருந்தேன், இப்போ தான் காரணம் தெரியுது

சங்கர் said...

//செ.சரவணக்குமார் said...
நல்ல நூல்களை வாங்கியிருக்கிறீர்கள், பகிர்வுக்கு நன்றி.//


நன்றி, தொடர்ந்து வாங்க

சங்கர் said...

@டம்பி மேவீ

ஏங்க, கேட்டிருக்கலாமே, நானே பலபேரிடம் கேட்டு, கேட்டு தான், சிலரை கண்டுபிடித்தேன்

சங்கர் said...

//அத்திரி said...
ஹை என் போட்டோ நல்லா வந்திருக்கு//

சாரு பத்தி பதிவெழுதினாலே கூட்டம் கூடும், அவருகிட்டேருந்து டீ வாங்கியிருக்கீங்க, அதுனால தான்

jasmin said...

நீன்கள் போய் வந்ததை அழகாய் சொல்லி உள்ளீர்கள் நல்லது இந்த மாதிரி புத்தகம்கலை பார்க்கக் கூடிய இணயத்தழம்கலையும் கொடுத்திர்கல் ஆனல் நன்ராக இருக்கும்

Romeoboy said...

புத்தகங்கள் வித்தியாசமாக இருக்கும் போல .. கண்டிப்பா போன் பண்றேன் சங்கர் .