Friday, July 31, 2009

சிந்தனை செய் - விமர்சனம்

சிந்தனை செய் --- நான் செய்யலையே???

நடிகரும் இயக்குனரும் ஆன யுவன் தான் படத்தின் நாயகன்.
அசப்பில் நடிகர் ரஞ்சித்தை போல் உள்ளார். யுவன்,சபி,நிதிஷ்,
பாலா மற்றும் செஷாந்த் ஐவரும் சிறுவயதில் ஒன்றாக பள்ளியில்
மிடில் பெஞ்சில் அமர்ந்த மாணவர்கள். படத்தின் ஆரம்பத்திலே
மிடில் பெஞ்ச் மாணவர்கள் எதுக்கும் லாயக்கில்லை என்று
கூறும் அறிமுக காட்சிகள் நன்று.இந்த படத்தில் நட்பின் அருமையை கூறவில்லை துரோகத்தை பற்றி கூறுகின்றனர்.

யுவனும் பாலாவும் விபச்சார விடுதிக்கு சென்று பணம்

இல்லாமல் செக் கொடுப்பது செம காமெடி, மேலும் போலீஸ்
ஸ்டேஷனில் மயில்சாமி மற்ற மூவரும் மாட்டி அடிவாங்குவது
அதை விட சூப்பர் காமெடி.சபியும் நிதிஷும் இடைவெளி
காட்சிக்கு முன் தான் வருகிறார்கள்.முதல் பதினைந்து
நிமிடம் திரைக்கதை கொஞ்சம் குழம்பினாலும் அப்புறம் தெளிவாகி விடுகிறது.

தனக்கு பிடித்ததை மட்டும் செய்யும் புதுமுக நாயகி மதுஷர்மா,
நாயகியை பற்றி சொல்வதற்கு ஒன்றும் பெருசாக மன்னிக்கவும் புதுசாக ஒன்னும் இல்லை. கல்யாணமான அடுத்த நாளே நீ
எனக்கு வேண்டாம் என்று சொல்வதெல்லாம் ஓவர். நல்ல
வேலை முதல் பாதியில் அவர்களின் காதல் காட்சியை
சீக்கிரம் முடித்து விட்டார்கள்.

படத்தின் இசை சுமார் ரகம் தான், ஒளிப்பதிவு நன்றாக உள்ளது,
அதை விட எடிட்டிங் அருமை.ஹீரோ யுவன் எப்போதும் கஞ்சா
அடித்தது போல திரிகிறார். காதல் தண்டபாணி அவரை

சந்திக்கும் முதல் காட்சிகள் அனைத்தும் நாடகம் பார்ப்பது
போல் இருந்தது.படத்தின் முதல் பாதி அதுவும் இன்டெர்வல்
பிளாக் இடத்தில் நல்ல முடிச்சு. முதல் பாதி உண்மையான ஜெட் வேகம்.

பப்ஸ் சாப்பிட்டு சீட்ல வந்து ஆவலா உக்காந்தா, ரெண்டாம்
பாதி முழுவதும் யூகிக்க முடிந்த திரைக்கதை.ஜஸ்ட் லைக் தட்
அவர்கள் பாங்கில் கொள்ளை அடிப்பது நம்பும் படி இல்லை,

ஆனா அதை வைத்து தான் கதையே. கொள்ளையடித்த பணத்தை
பங்கு போடும் போது தான் பிரச்சனை ஆரம்பம் ஆகிறது.
யுவன் ஏன் அப்படி செய்கிறார் என்பதுக்கு வலுவான காரணம்
இல்லை.

ஆக மொத்தத்தில் முதல் பாதி அருமை, இரண்டாம் பாதி????
இரண்டாம் பாதியில் வன்முறை கொஞ்சம் அதிகம் தான்.
ஒன்னுமே இல்லாத யுவனை ஒரே மாதத்தில் காதல் செய்து
கல்யாணம் செய்வது பிறகு விரட்டுவது திரும்பவும் சேர்வது
எதுவும் நம்பும் படி இல்லை.கருத்தெல்லாம் வேற சொல்றாரு
யுவன்.படத்தின் முதல் பாதிக்காக ஒரு தபா பாக்கலாம்ப்பா....... போறதுக்கு முன்னாடி எதுக்கும் நீங்களும் சிந்தனை செய்யுங்க.....


திரைக்கதையில் சொதப்பல்:

முதல் காட்சிக்கு அப்புறம் யுவனும் தண்டபாணியும் சந்திக்க
மாட்டர்கள், மேல உள்ள கலக்குறான் பாட்டில் தீடிரென்று காதல் தண்டபாணி தோன்றுவார், ஆனால் படத்தின் கடைசியில் நான் உன்னை பார்த்து ரொம்ப நாளாச்சே, நீ இன்னும் உயிரோடவா இருக்க அன்னிக்கே நீ தற்கொலை பண்ணி செத்து இருப்பன்னு நினைச்சேன் என்று யுவனை பார்த்து கூறுவார்.பாட்டுக்கு மட்டும் ஏன் வந்தார். தண்டபாணி என்ன ரகசியவா?? , குத்து டான்ஸ் போடுறதுக்கு.இல்லனா தனியா விளம்பரத்துக்கு மட்டும் அந்த பாட்டை உபயோக படுத்தி இருக்கணும்.

ஜெட்லி பஞ்ச்:

முதல் பாதி ஸ்பீட்ஆ போன வண்டி , இரண்டாம் பாதி பஞ்சர் ஆச்சு..........

நீங்கள் படித்த விமர்சனம் அனைவரையும் சென்று அடைய
ஒட்டு போடுங்கள்.

நன்றி
indiaglitz

உங்கள்
ஜெட்லி

Thursday, July 30, 2009

நானும் கைப்பேசியும்

நானும் கைப்பேசியும்:

தீடிரென்று நேற்று என் கைப்பேசி வேலை செய்யவில்லை,
எப்படியும் யாரும் அழைக்க போவது இல்லையென்றாலும்
ஒரு முன் அறிவிப்பாக தெரிவித்து கொள்கிறேன்.
நேத்து மதியத்தில் இருந்து செத்த எனது கைப்பேசியை
இன்று தான் சரி பார்க்க கடையில் கொடுத்து உள்ளேன்.
அநேகமாக இன்று இரவு சரி செய்து வந்து விடும் என்று நம்புகிறேன். வீட்டுக்கு வந்தால் இல்லாத கைப்பேசியை அடிக்கடி தேடிகிறேன்.

இதுக்கு பேர் தான் மொபைல்இல்லாமல்இருக்கும்மேனியா என்று நினைக்கிறேன்.கைப்பேசி இல்லாததால் என் விரல்களுக்கு
எதையவாது அமுக்க வேண்டும் போல் தூண்டுகிறது(கைப்பேசியை
அழுத்துவது பற்றி தான் சொல்கிறேன்!!!).

நானும் புது கைப்பேசி வாங்க வேண்டும் என்று எண்ணி பல
மாதங்கள் ஆகிறது, என் நண்பர்களில் சில பேர் நான்
கைப்பேசி வாங்க வேண்டும் என்றாலே என்னை ஒரு
மாதிரி பார்ப்பார்கள். சில பேர் "மச்சான் இவனும் பல
வருஷமா சொல்றான் ஒன்னும் வாங்குற மாதிரி தெரியுல"
என்று கலாயிப்பவர்களும் உண்டு.(அப்படி சொன்ன
நண்பர்களில் ஒருவர் கல்லூரி முதல் வருடத்தில் மொபைல்
வாங்க வேண்டும் என்று கல்லூரி கணினி லேப் நேரத்தை
இணையத்தில் கழித்தான், ஆம் அவன் மொபைல் வாங்கி
விட்டான் எப்போது? மூன்றாம் ஆண்டு படிக்கும் போது!!!)



நான் இன்னும் ஏன் கைப்பேசி வாங்கவில்லை என்றால் மனதுக்கும்,

பணத்துக்கும் பிடித்த கைப்பேசி இன்று வரை வெளிவாரதது கைப்பேசி
நிறுவனங்களின் தவறு. இதைவிட முக்கிய காரணம் நான் இப்போது
உபயோகப்படுத்தும் கைப்பேசியின் செண்டிமெண்ட் தான்
காரணம்
என்று பலருக்கு தெரியாது(ஹி ஹி!!).

அப்புறம் இந்த இணையத்தில் வரும் கைப்பேசிகளின் விமர்சனத்தை

படித்தால் எனக்கு கைப்பேசி வாங்கணும் என்றாலே கசக்கிறது.
ஒன்னு இருந்தா ஒன்னு நல்லா இல்ல,என்று குறைகள் வேறு
கூறுகிறார்கள். ஆக மொத்தத்தில் அடுத்த மாதம் வெளி வர இருக்கும்
சோனி நைட் என்ற கைப்பேசியை வாங்க முடிவு செய்து இருக்கிறான்
இந்த ஜெட்லி.ஒரு நிமிஷம் இருங்க என் கைப்பேசியின் அழைப்பு
மணி போல் கேட்கிறது கிழே போய் பார்த்து விட்டு வருகிறேன்.

முடிஞ்சா ஒட்டு போடுங்க... உங்கள் சின்னம் tamilsh.

மேனியாவுடன்
ஜெட்லி

Wednesday, July 29, 2009

கிளுகிளுப்பா இன்னொரு காதல் கதை

கிளுகிளுப்பா இன்னொரு காதல் கதை :
(வயது வந்தவர்கள் மட்டும்)

"ஜூலீ இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்கே தெரியுமா...." எப்படியாவது ஜூலீயை இன்று கரெக்ட் செய்யும் நோக்கில் கூறினேன்.

"இன்னைக்கு அய்யா ரொம்ப மூடு போல..." என்றாள் ஜூலீ.

"ஆமாம் நீ என்னை ஒரு வாரமா பட்டினி போட்டுட்ட"
என்றேன் ஆதங்கத்துடன்.

அப்போது ஒரு கார் ஏற்றுவது போல் வந்தது, நானும் ஜூலீயும்
ஒதுங்கி நின்றோம்.

"என்னத்த காரை ஒட்டுறாங்களோ ஒரு ஹோர்ன் கூட அடிக்கிறதில்ல..." கோபத்துடன் கூறினாள் ஜூலீ.

"நேத்து நீயும் டேவிடும் சரசம் பண்ணிங்க போல, ஊர்ல
உள்ள எல்லாரும் சொல்றாங்க?"என்று கேட்டேன் நான்.

"அதான் இன்னைக்கு வேணாம்னு சொன்னேன்" என்று
நடையை கட்டினாள் ஜூலீ.

"நான் இன்னைக்கு ரொம்ப மூடாக இருக்கேன், உன்னை
விடமாட்டேன்" என்று அவளை மறித்து தேகத்தை முகர்ந்தேன்.
என் முத்தத்தை அவள் தேகம் முழுக்க பதித்தேன், அவள்
கொஞ்சம் முரண்டு பிடித்தாள்.

நான் அவள் முதுகை பிடித்து ஏறியதும் , தூரத்தில் இருந்து
வந்த ஒரு கல் என் முகத்தை பதம் பார்த்தது.

க்யோ க்யோ என்று கத்தி கொண்டே நாலு கால் பாய்ச்சலில்
குரைத்து கொண்டே ஓடினேன்.



இந்த மனுசங்களுக்கு தங்களை தவிர யார் காதல் செய்ஞ்சாலும் பிடிக்காது போல......





முந்தைய கிளுகிளுப்பு கதை படிக்க இங்கே கிளிக் செய்யவும்
கிளுகிளுப்பா ஒரு காதல் கதை

பிடிச்சா கண்டிப்பா ஒட்டு போடுங்க.....


உங்கள்
ஜெட்லி

© The content is copyrighted to JETLI and may not be reproduced on other websites.

Monday, July 27, 2009

மோதி விளையாடு....எங்கே போய் மோதுறது ???

மோதி விளையாடு....விமர்சனம்

ஜெட்லியின் முன்னுரை :

முதல் நாளே இந்த படத்தை பார்க்க பல பிளான்கள் போட்டு
அனைத்துமே நாசமா போச்சு....அடுத்த ரெண்டு நாளில் பல பேர் என்னிடம் இன்னும் படம் பார்க்கலியா??? என்று கேட்டு அதிசிய பட்டார்கள் என்பது மட்டும் உண்மை.ரைட் நாம படத்துக்கு வருவோம்....


சரண் படம்னாலே நாடகம் மாதிரி இருக்கும் என்பது எல்லோருக்கும்
தெரிந்த ஒன்று தான் அதில் இது மட்டும் என்ன விதிவிலக்கா?....
படத்தை ஒரு பில்லா ரேன்ஜ்க்கு எடுக்கனும்னு நினைச்சார் போல
நான் சொல்றது stylish மற்றும் ஒளிப்பதிவில்,ஆனா ஒபெநிங்
நல்ல தான் இருந்தது ஆனா பினிஷிங் சரி இல்லையே.

வினய் தன் சொந்த குரலில் பேசி நம்மை காதை மூட
வைக்கிறார். மற்ற படி வினய் நடிப்பு ஓகே ரகம்.
காஜல் அகர்வால், இந்த அனகோண்டா படத்துல பாம்பு
வந்து வெளியே தலையே நீட்டுமே அந்த மாதிரி அடிக்கடி
பார்க்கிறார். வினய் வீட்டில் காஜல் வேலை செய்வதெல்லாம்
சுத்த அக்மார்க் நாடகம்.

அடுத்து சந்தானம், கண்டிப்பா சிரிக்க வைக்கிறார் இவருக்கு
இன்னும் காட்சிகள் கொடுத்து இருந்தால் நன்றாக இருந்துருக்கும்.
கலாபவன் மணி பெரிய தொழில் அதிபர், ஆனால் செய்வது
எல்லாம் கேடிதனங்கள். இவரு படத்துல அடிக்கடி புல்ஷிட்(bull shit)
என்கிற வார்த்தையை பயன்படுத்துவார், உண்மையிலேயே
படத்தின் கடைசி நூப்பது நிமிடங்கள் தான் புல்ஷிட்.

ஹரிஹரன் இசையில் பாதி காதல், மோதி விளையாடு
ரெண்டும் கேக்கும் ரகம். படத்தில் காட்சிகளில் ஒரு
காட்சிதொடர்பு(continuity) என்பதே இல்லை, வீடு அடையார்
போட் கிளப் என்று காட்டுவார்கள் தீடிரென்று மலேசியாவில்
கார் சேசிங் நடக்கும், அப்புறம் அப்படியே பாண்டியை காட்டுவார்கள்.

மற்றபடி பெரிய குறை ஒன்றும் இல்லை, கத்தி பேசும் வசனம்
இல்லை, அரிவாள் சண்டை இல்லை, ஒருத்தர் நூறு பேரை
அடிப்பது போல் காட்சி இல்லை, முகம் சுளிக்கும் காட்சிகள்
இல்லை. சரண் அடிக்கடி படத்துல வேற தல(அஜித்) புராணம் பாடுறாரு... படம் என்னை பொறுத்த வரை சுமார் சுமார் ரகம்.
அவ்வளவு மொக்கையில்லை.....

இந்த விமர்சனம் பல மக்களை சென்று அடைய ஒட்டு போடுங்கள்.

நன்றி
indiaglitz

உங்கள்

ஜெட்லி.


© The content is copyrighted to JETLI and may not be reproduced on other websites.

வதந்திகள் இப்படித்தான் பரவுமோ...?

வதந்திகள் இப்படித்தான் பரவுமோ...?

வதந்தி என்னும் தீ பரவுவது அவ்வளவு நல்லதில்லை.
ஐயோ! மேல உள்ளே வரி ரொம்ப சீரியஸ் ஆக இருக்கோ.
ரைட் மேட்டர்க்கு வரேன். நான் அப்போ எம்.சி.ஏ படிச்சிட்டு
இருந்தேன்(போன வருஷம் தாங்க).என்னோடைய சில
நண்பர்கள் மிக நல்லவர்கள். எப்போதும் ஒன்றை பத்தாக
திரித்து கூறும் நல்ல பழக்கம் உடையவர்கள்.

முக்கியமா தெரியாதவங்க யாரும் சிக்குனா டின் கட்டிரிவானுங்க.
சில உதாரணங்கள் கிழே....

கல்லூரி இடைவெளி போது நாங்கள் வழக்கமாக எதிரில்
இருக்கும் கடைக்கு சென்று டீ , சமோசா, பஜ்ஜி சாப்பிடுவது
வழக்கம்.ஒரு நாள் நண்பர்களுடன் செல்லும் போது டீக்கடையில்

சமோசா தட்டில் இருந்து ஒரு சமோசா கிழே விழுந்துவிட்டது, அந்த சமோசாவை மாஸ்டர் தட்டில் வைத்து கடைக்கு வந்த இன்னொரு பையனிடம் கொடுத்து விட்டார்.

இதை நான் பார்த்து விட்டேன்.நான் சும்மா இருந்தாலும்
என் வாய் சும்மா இருக்காது.....

"அண்ணே இரண்டு சமோசா, கிழே விழாததா கொடுங்க"
என்று கூறினேன்.

நண்பர் அனைவரும் சிரித்துவிட்டார்கள், மாஸ்டர்
கொஞ்சம் கடுப்பு ஆயிட்டார்.

இதே சம்பவத்தை ஆறு மாதம் கழித்து வேற ஒரு புது
நண்பனிடம் இப்படி கூறினார்கள் என் நண்பர்கள்:

# என்ன அண்ணே டீ கேட்டா பாதி டீ குடிச்சிட்டு
கொடுக்கிறிங்க, இவ்ளோ கம்மியா இருக்கு.

# என்னங்க பஜ்ஜி சுடுற எண்ணையே எப்போ
மாத்துவிங்க,பல வருஷமா ஒரே எண்ணையலேயே
சுடுரிங்க.

# ஏன்பா தேங்காய் சட்னி கேட்டா சுண்ணாம்பு தண்ணி
உத்துற?.....இப்படியெல்லாம் நான் சொன்னேனாம்...

யாரும் என்னை நம்பாமல் நீ சொல்ல கூடியவன் தாண்ட
என்று கலாய்ப்பார்கள்.

***************************************
என் வாழ்க்கையில் நான் கேட்ட சில உண்மை வதந்திகள்:

# சுனாமி வந்த அன்று.....

நாங்கள் இருப்பது திருவான்மியூர் தியாகராஜா தியேட்டர்
எதிரே, அன்று எனக்கு தெரிந்த ஒருவர் வந்து

"பார்த்துப்பா வண்ணாந்துறை பக்கம் போகதே கடல் தண்ணி இடுப்புக்கு மேல நிக்குதுப்பா... நான் போக முடியாம திரும்பி வந்துட்டேன்" என்றார்

வண்ணாந்துறை இருப்பது பெசன்ட் நகர் கடலில் இருந்து
ஒரு கிலோ மீட்டர் தள்ளி.... எனக்கு டவுட், அது எப்படி
அவளோ தூரம் தண்ணி வரும் என்று. நான் என் வண்டியை
எடுத்து கொண்டு போய் பார்ப்போம் என்று சென்றால்
ஒரு சொட்டு தண்ணி கூட பெசன்ட் நகர் பீச் மணலை
தாண்டி ரோட்டுக்கு வரவில்லை.ஆனா உண்மையில் பீச்
ஒட்டி உள்ள மக்கள் கஷ்டபட்டர்கள், பீச் முழுவதும் ஏதோ
போர் ஓய்ந்தது போல் இருந்தது.

# பூகம்பம் வந்த சமயம்:

அதே மாதிரி வேற ஒரு நாதாரி வந்து
" தம்பி அடையார் பிரிட்ஜ் வந்த பூகம்பத்துல்ல உடைஞ்சி
போச்சாம்ப்பா"

இந்த வாட்டி நான் உஷாராக

நீங்க போய் பார்த்திங்களா என்றேன்

இல்லப்பா அந்த பீடா கடைக்காரன் சொன்னான் என்றார்

சரி ரைட் அப்பவே புரிந்தது இதுவும் வதந்தி தான் என்று,
வதந்தி பரப்புவர்களின் நோக்கம் என்ன? அவர்களுக்கு
என்ன லாபம்? யாரவது தெரிந்தால் சொல்லுங்கள்....!!!
உங்களுக்கும் இது போல் அனுபவம் இருந்தால் பகிர்ந்து
கொள்ளுங்கள்......

முடிஞ்சா ஒட்டு போடுங்க......

கேள்வியோடு ??
ஜெட்லி




Saturday, July 25, 2009

எனக்கு பிடித்த பத்து ஓடாத படங்கள்.

எனக்கு பிடித்த பத்து ஓடாத படங்கள்.

இப்பவும் என் நெஞ்சை விட்டு நீங்காத சில படங்கள்
உள்ளன, அவற்றில் சில படங்கள் வணிக ரீதியாக வெற்றி அடையாதவை(சில உண்மையாகவே மொக்கை படங்கள்).

உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். உங்களுக்கு
பிடித்த ஓடாத படங்கள் பற்றி நீங்கள் கமெண்ட் அனுப்பலாம்

சாமுராய்:

காதல் படத்தின் டைரக்டர் பாலாஜியின் முதல் படம் இது.
தன் குருவை(ஷங்கர்) போல சர்ச்சையான மற்றும் அதிக
பட்ஜெட்டில் எடுத்த படம். பல பிரச்சனையால் படம் மிக
தாமதமாக வெளிவந்தது. படத்தின் தோல்விக்கு காரணங்கள்
திரைக்கதை, எடிட்டிங், மற்றும் அதே சமயத்தில் வெளிவந்த
அதே கதையை உடைய சிட்டிசன் படமும் ஆகும்.
எனக்கு இந்த படத்தில் விக்ரமின் கேரக்டர் ரொம்ப பிடிக்கும்,
பிளஸ் பாடல்கள் அதுவும் மூங்கில் காடுகளே பாட்டுக்கு நான்
அடிமை. முக்கியான விஷயம் வசனம் சூப்பர்.

கற்றது தமிழ்:

ஜீவாவிற்கு இந்த படம் கண்டிப்பா ஒரு மைல்கல் தான் படம்
வெற்றி அடைந்து இருந்தால். நல்ல உழைப்பு, தமிழ் உச்சரிப்பு
இருந்தாலும் இந்த படம் மென்பொருள் வேலைக்கு செல்பவர்களையும் பி.பி.ஒ வேலைக்கு செல்பவர்களையும்
தாக்கி நிறைய வசனம் இருந்ததால் அதுவே படத்தின் தோல்விக்கும் வழி வகுத்தது. நான் இந்த படத்தை சாந்தம்
தியேட்டரில் பார்க்கும் போது பாதி பேர் இடைவெளியிலே
சென்று விட்டனர் அவர்கள் அனைவரும் பி.பி.ஒ,மென்பொருள்
வேலை செய்பவர்களே. படத்தில் என்னை கவர்ந்தவை
பாடல்கள், வசனம், ஜீவாவின் வாய்ஸ் மொடுலேசின்
போன்று சொல்லி கொண்டே போகலாம்.


பட்டியல்:

இந்த படம் வெளி வந்த சமயத்தில் டி.வி களுக்கு காட்சிகள்
மற்றும் பாடல்கள் கொடுக்க கூடாது என்று தடை போட்டு
இருந்தனர், அந்த தடையே இந்த படத்தின் தோல்விக்கு
முக்கிய காரணம்(உண்மை தாங்கோ).மிச்ச படி படம் சூப்பர்
பாடல்கள் ஹிட்.

நேபாளி:

துரை எனக்கு பிடிக்காத இயக்குனர்களில் ஒருவர், ஏன்
என்றால் ஓவர் பந்தா பார்ட்டி.(நான் அந்நியன் படம்
பார்க்க ஆல்பர்ட் தியேட்டர் சென்ற போது என் முன்
இருக்கையில்(பாக்ஸ்) துரை இருந்தார். அவரோட
உதவியாளர் அப்படின்னு நினைக்கிறேன், அவரை
புடிச்சு என்ன வேலை வாங்குறாரு, திட்றாரு. உதவியாளர்
காண்டு ஆனானோ இல்லையோ நான் காண்டுயிட்டன்.
இதுல வேற துரை அந்நியன் படத்தை நக்கல் செய்தார்).

நேபாளி பல குறைகள் இருந்தாலும் படத்தின் திரைக்கதை
என்னை மிகவும் கவர்ந்தது.படத்தின் ஓவர் வன்முறையால்
மக்கள் இடைய சேராமல் போய்விட்டது.

காதல்னா சும்மா இல்லை:

இந்த படத்தை பார்த்தது ஒரு விபத்து, வேறு படங்களுக்கு
டிக்கெட் கிடைக்காததால் இந்த படத்துக்கு போக நேர்ந்தது.
படம் உண்மையிலே நல்லா இருந்தது(என்னை பொறுத்தவரை
போர் அடிக்காம டைம் பாஸ் ஆனா போதும்
). ஓரிரு பாடல்கள்
கூட நன்றாக இருந்தது, அருமையான ஒரு பயண படம்.
கூடிய விரைவில் ராஜ் டி.வி யில் போடுவாங்க டைம் கிடைச்சா பாருங்க.


பொம்மலாட்டம்:

நானா படேகர், இவரின் நடிப்பை பார்த்து அசந்து விட்டேன்.
படம் டப்பிங் தான் என்றாலும் அந்த குறை அவ்வளவாக
தெரியவில்லை.அதவும் நானாவுக்கு நிழல்கள் ரவியின்
குரல் கனகச்சிதம். பாரதிராஜாவா இயக்குனர் என்று வியக்கும்
அளவுக்கு படம் சூப்பர். படத்தின் உயிரே அந்த கிளைமாக்ஸ்
காட்சி தான். சரியான விளம்பரம் இல்லாததால் படம் பெட்டியில்
படுத்து கொண்டது.

ஏகன்:

நான் முன்னாடியே சொன்னேன் என்னை பொருத்தவரைக்கும்
மொக்கை போடாம டைம் பாஸ் ஆகுதா அது போதும் அது
படம். அந்த வகையில் ஏகன் படம் எனக்கு பிடிக்கும். மொத்தமே
இரண்டு மணி நேரம் தான் படம் ஓடும். நல்ல காமெடி, பாட்டு.
அஜித் இந்த படத்தில் கொஞ்சம் கலகலப்பா இருப்பார்.
(பரமசிவன், ஆழ்வார் போன்ற படங்களை நினைத்தால்...?)


எவனோ ஒருவன்:

நல்ல கருத்து சொல்ல வந்த படம், ஆனால் திரைக்கதை
பயங்கர சொதப்பல். பாடல்கள் இல்லாத படமென்பதால்
இந்த படம் பிடிக்கும்.


அலிபாபா:

அருமையான திரைக்கதை + பிரகாஷ் ராஜ் இருந்தும் ஏன்
இந்த படம் ஒடலைன்னு எனக்கு டவுட். ஆனா அப்புறம்
தான் தெரிஞ்சது ஹீரோன்னு ஒருத்தன் எப்படி இருக்கான்
அப்படின்னு நம்ம மக்கள் பார்த்துட்டு தான் உள்ளே வாருவாங்கன்னு...!.

மிச்ச படி பாடல்கள் செம மொக்கை
ஆனா படத்தில் உண்மையா கடைசியில் செம ட்விஸ்ட்.


குளிர் 100 டிகிரி:

பாட்டு ஒன்னு போதுங்க இந்த படத்துக்கு, அப்புறம் கேமரா
சூப்பர். படம் கொஞ்சம் மெதுவா தான் போகும். மிச்ச படி
ஹீரோ சஞ்சீவ் நல்லா ஸ்மார்ட் ஆக இருக்கிறார். படத்தின்
கிளைமாக்ஸ் நச்.


நன்றி
indiaglitz

உங்கள் ஓட்டை தமிழிஷ்யில் போட்டு விட்டு செல்லுங்கள்.

பாசமுடன்
உங்கள்
ஜெட்லி.

Wednesday, July 22, 2009

குடிகாரர்களிடம் பிடித்த பத்து!

குடிகாரர்களிடம் பிடித்த பத்து!

இந்த இடுகை எங்கள் வால் பையன் அவர்களுக்கு சமர்ப்பணம்.
இது கண்டிப்பா அவரோட இடுகைக்கு எதிர்ப்பதிவு இல்ல.
படிக்க கிளிக் செய்யுங்கள்
குடிகாரர்களிடம் பிடிக்காத பத்து!

10. ஏதோ கோவில் பூஜைக்கு செல்வது போல் குளித்து
புத்துணர்ச்சியுடன் சரக்கு அடிக்க உட்காரும் போதும் ....

9. பாட்டில் திறக்கும் முன் இந்த பூனையும் பால் குடிக்குமா?
என்று இருக்கும் நபர்களை பார்க்கும் போதும்.....

8. குடிக்காத நண்பர்களுக்கு(அதாங்க சைடுடிஷ் மட்டும்
சாப்பிடும் நல் உள்ளம் கொண்டவர்கள்
) கணக்கு பண்ணி
சைடுடிஷ் அதிகமாக வாங்கும் போதும் .....

7. சரக்கு ஊத்தும் போது "மச்சான் கம்மியா ஊத்து டா"
என்று சொல்லும்போதும் .......

6. "மச்சான் பீர்ல நூரை அதிகமா இருந்தா மிச்சர் போட்டா
சரி ஆயிடும் மச்சி" என்று டிப்ஸ் தரும் போதும் .....

5. கண்டிப்பா ஒரு குழுவில் இந்த மாதிரி ஒரு நண்பர்
இருப்பார், சுத்தி உக்காந்து இருப்பவர்கள் அனைவருக்கும்
சரி சமமாக ஊத்தி கொடுக்கும் நல்உள்ளம் கொண்டவர்களை
ரொம்ப பிடிக்கும்.

6. சரக்கு கிடைக்கும் என்ற ஒரே காரணத்துக்காக நண்பர்களின்
அனைவரது பிறந்த தேதியையும் விரல் நூனியில் வைத்துருக்கும்
போதும்,எவ்வளவு சரக்கு அடித்து சலம்பி கொண்டு இருந்தாலும்
"மச்சான் போதையே இல்லடா" என்று சொல்லும் போதும்...

7. ஓவர் போதை ஆயி சலம்பி கொண்டிருக்கும் நண்பனின்
தொண்டை வரை கையை விட்டு வாந்தி எடுக்க வைக்கும்
போதும் .................


8. சரக்கு அடித்த பின் போதையில் இருக்கும் நண்பனை
"மச்சான் நீ செம போதை, உன்னை வீட்ல ட்ராப் பண்ணிடிரேன்" என்று ஸ்டெடியாக நிற்க கூட முடியமால் இருக்கும் நண்பன் கேக்கும் போதும்........

9.என்னதான் வாந்தி எடுத்தாலும்(இதை வேற வீடியோ
எடுப்பானுங்க) அடுத்த நாள் ஒன்னுமே தெரியாத பாப்பா
போல் இருக்கும் போதும்..........

10. கடைசியா ஒன்னு,எதுக்கெல்லாம் காசு போடுராங்கோல
இல்லையோ, ஆனா குடின்னு வந்துட்டா நம்ம ஆளுங்க
அள்ளி விசும் போதும்............... எனக்கு குடிகாரங்களை
ரெம்பா பிடிக்கும்......

வேற என்ன கேக்க போறேன்... புடிச்சா ஒட்டு போடுங்க....

போதையுடன்
ஜெட்லி

Tuesday, July 21, 2009

காதல்(பிட்டு)கதை- விமர்சனம்

வேலு பிரபாகரனின் காதல் கதை- விமர்சனம்.

அல்லது

சென்னையில் ஒரு மலையாள படம்.

ஜெட்லியின் முன்னுரை:

(ஏன்டா ஜெட்லி உனக்கு வேற வேலையே இல்லையா! ஊர்ல ஓடுற எல்லா மொக்கை படத்தையும் பார்த்துட்டு விமர்சனம் பண்றியே என்று கேட்கும் என் நல விரும்பிகளுக்கு இந்த பட விமர்சனத்தை சமர்பிக்கிறேன்.)


படத்துக்கு காதல் கதைன்னு பேர் வச்சதுக்கு காம கதை அப்படின்னு
பேர் வச்சிரிக்கலாம்.துள்ளுவதோ இளமை என்றொரு படம் உண்டு
அதில் எல்லா தப்பையும் காட்டி விட்டு அதற்க்கு விஜயகுமார் அவர்கள் கால் மணி நேரம் விளக்கம் சொல்வார். இந்த படத்தில் எல்லா பிட்டையும் காட்டிவிட்டு நடு நடுவே வந்து வேலு பிரபாகரன் அவர்கள் விளக்கம் சொல்வார்.

படத்தின் மற்றும் இயக்குனரின் கருத்து இதுவே காதல் என்று ஒன்று இல்லை,அது காமம் தான். ஏன் என்றால் எனக்கு மூணு முறை அனுபவம் இருக்கு என்கிறார் இயக்குனர். இயக்குனர் அவர்கள் எல்லா தப்பையும் செய்து விட்டு ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் அதனால் காதல் உண்மையில்லை என்று கூறுவதே படத்தின் கருத்து. பிளஸ் அங்கே அங்கே பெண்ணின் பெருமையை கூறுகிறார்(நிஜம்தாங்க!).

இந்த மாதிரி மலையாள பட ரேஞ்சுக்கு எடுத்த இயக்குனரின்
தைரியத்தை பாராட்டியே ஆக வேண்டும்.அவர் கூறும் சில கருத்துகள் உண்மையிலே நல்ல விஷயம் என்றாலும் அதை
அவர் காட்சி படுத்திய விதம் சீ சீ ரகம்.சில காட்சிகளின் பிட்ஸ் உங்களுக்கு....

# இந்த படத்தை பார்க்கும் போது பிட்டு படம் பார்க்கும் உணர்வே தோன்றியது ஊர் பெரியவர் கள்ள காதலில் ஈடுபடுவதும், மகன் வேறொரு ஜாதி பெண்ணை காதல் செய்வதும் ஒரே தாராள மயம்.

# ஊர் பெரியவரும் பாபிலோனாவும் கள்ள காதலில் கட்டிலில் இருக்கும் போது. பாபிலோனா கேட்ட கேள்வி......

பாபி: ஏங்க இதுதான் கள்ள காதலா?

ஊர் பெரியவர்: காதல்ல ஏதுடி கள்ள காதல் நல்ல காதல்,எல்லாமே காம காதல் தான்.

# படத்தில் ஒரு காட்சிகள் இயக்குனர் அவர்கள் பெரியார் தோற்றத்தில் வந்து பேசும் வசனம் உண்மையிலேயே நல்லா இருந்தது.

# இது வரை எந்த படத்திலும் இப்படி ஒரு கற்பழிப்பு காட்சியை எடுத்துருக்க மாட்டங்கனு நினைக்கிறேன்.

# இந்த படத்தை பார்த்துட்டு அவன் அவன் வீட்ல போய்
என்ன என்ன செய்ஞ்சனோ??? இயக்குனருக்கே வெளிச்சம்.


(ஏன்டா கிஸ் அடிக்க சொன்னா அவ வாயை கடிக்கிற...... )



# ஆனா ஊனா இவரு(இயக்குனர்) நம்ம காலச்சாரத்தை கிண்டல் அடிப்பதை சகித்து கொள்ள முடியவில்லை. அவர் சொல்ற சில விஷயங்களை என்னால் ஒத்து கொள்ள முடியவில்லை....

ஒரு காட்சியில் பீச்சில் மூன்று வெளிநாட்டு பெண்மணிகள் பிகினி உடையில் குளிப்பார்கள் பக்கத்தில் உள்ள மூன்று வெளிநாட்டு ஆண்கள் அதை சட்டை செய்யமால் புக் படிப்பதும் மற்ற சிந்தனையில் இருப்பார்கள். அதை காட்டி அவர் கூறும் வசனம்

"வெளிநாட்டுகாரான பாருங்க அந்த மூன்று பெண்களும் தங்கள் சதையை காட்டி கொண்டு குளித்தாலும் அவர்கள் அதை சட்டை செய்யவில்லை.ஏன் நம்ம நாட்ல மட்டும் இப்படி இருக்க மாட்டிக்கிறாங்க?".....

(மேல உள்ளதை பத்தி பேச ஒரு பட்டிமன்றமே வைக்கலாம்!)

இன்டெர்வல் செய்தி:

கான்டீன்ல டீ வாங்கிட்டு திரும்புனா காதல் கதை போஸ்டர் பாக்க செம கூட்டம்,ஏன்டா படமே பாக்குறோம் போஸ்டர்ல அப்படி என்னதான் பாக்குறாங்க என்று நானும் எட்டி பார்த்தேன். அங்கே தணிக்கை குழுவின் வெட்டு பட்ட காட்சிகளின் தொகுப்புரை ஒட்டி இருந்தார்கள். அதுவே மூணு பக்கம் இருக்கு இது வரைக்கும் எந்த ஒரு படமும் இவளோ வெட்டு வாங்கி இருக்காது என்று நினைக்கிறேன். பல காட்சிகளில் அம்பது சதவிதத்தை வெட்டி விட்டார்கள்.
(வெட்டியே இவளோ பிட்டா? வெட்டாம இருந்தா.......செத்தாண்டா தமிழன்!).

# மொத்தத்தில் ரொம்ப நாள் கழித்து தியேட்டரில் மலையாள படம் பார்த்த ஒரு திருப்தி கிடைத்தது.


ஜெட்லி பஞ்ச்:

அட்டு படம் என்று கூறுவோர் சிலர்
பிட்டு படம் என்று கூறுவோர் சிலர்
அட்டோ பிட்டோ படம் செம ஹாட்.

இந்த விமர்சனம் பல மக்களை சென்று அடைய உங்கள் ஓட்டை குத்துங்கள்.

உங்கள்
ஜெட்லி.

Monday, July 20, 2009

நாட்டு நடப்பு நல்லாதானே இருக்கு!

இவங்க எப்போ திருந்துவாங்க.....

நேத்து காலையில பேப்பர் வாங்க போகும் போது ஒரு போஸ்டர் என் கண்ல பட்டுச்சு.வேற ஒன்னும் இல்லைங்க
நம்ம புரட்சி தளபதி(என்ன புரட்சி செய்தாரோ???) விஷால்
அவர்களின் தோரணை படம் 50வது நாள் வெற்றி போஸ்டர்
தான் அது.

அந்த போஸ்டர்ஆ பாக்குனுமே என்னமோ பெருசா சாதிச்ச
மாதிரி ஒரு ஸ்டில் குடுத்திரிக்கிறார்.ஒரு நிமிஷம், என்ன
சொன்னேன் பெருசா சாதிச்சிடாரான்னு கேட்டேன்ல.
கண்டிப்பா இது பெரிய சாதனை தான். தோரணை என்ன
மாதிரி படம்னு உங்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும்
இந்த உலகத்துக்கே தெரியும்.அந்த மாதிரி படமெல்லாம்
50 நாள் ஓடுன கண்டிப்பா பெரிய சாதனை தான்.

அது சரி என் கேள்வியெல்லாம் இது ஒன்னு தான் மொக்கை
படம்னு உலகத்துக்கே தெரியும் அதை இரண்டு வாரம்
ஓட்டிட்டு விட வேண்டியது தானே. ஏன் அதை காசு
கொடுத்து ஒட்டி அப்புறம் ஒரு போஸ்டர் வேற அடிச்சு?.
இந்த இடத்தில் அஜித் பத்தி சொல்லி ஆகணும் அவர்
தன் படங்கள் மொக்கை ஆனால் காசு கொடுத்து ஓட
வைப்பதில்லை.அது போல் எல்லோரும் இருந்தால்
என்ன? இவங்கெல்லாம் எப்போ திருந்துவாங்க? என்று
ஏக்கத்துடன் இருக்கும் ரசிகனில் நானும் ஒருவன்...!!!!

***********************************

இரண்டு மாதங்களுக்கு முன்:

நண்பர் ஒருவர் ஒருநாள் என்னிடம் "ஏன்டா நீ ப்ளாக்ல
சீரியஸ் ஆன விஷயமே எழுதமாட்டியா, சமுதாயத்தை
பத்தி இல்லன நம்மள சுத்தி நடக்குறத பத்தி" என்று
கேட்டார்.

"அதெல்லாம் எதுக்கு மச்சி, சும்மா ஜாலியா எழுதுனமோ
அவ்ளோதான்... ஆனா எனக்கும் ஒரு விஷயத்தை பத்தி
எழுதுனும்னு தோணுது..."என்றேன் நான்.

"என்ன"?

"நம்ம ஊர்ல இளைஞர்கள் நிறைய பேர் வேலைக்கு போகாம கொலை,கொள்ளை,வழிப்பறி....." நான் முடிக்கும்
முன்பே

"ப்ளாக் எழுதுறது!.." அப்படின்னு தீடிர்னு சொன்னான்,
அந்த சமயம் எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியுல.
அப்போது நான் அதை சீரியஸ் ஆக எடுத்து கொண்டாலும்,
இப்போது அதையெல்லாம் ஒரு மேட்டர்ஆக எடுத்து
கொள்வதில்லை.(கேட்டு கேட்டு புளித்து விட்டது).


************************
புடிச்சா கண்டிப்பா ஒட்டு போடுங்க.....

உங்கள்
ஜெட்லி

Saturday, July 18, 2009

ஹாரிபாட்டரும் எட்டுப்பட்டி நாட்டாமையும்.

ஹாரிபாட்டரும் எட்டுப்பட்டி நாட்டாமையும்.
****************************************************
னேனேன்னே....னேனேன்னே... என்ற பின்னணி இசையுடன்
நாட்டாமை விஜயகுமார் வந்து ஆலமரத்தடியில் இறங்குகிறார்.

நாட்டாமை: என்னடா பிராது இன்னைக்கு?

கவுண்டர்மணி: அய்யா நம்ம ஊர் ஹோவர்ட்ஸ் ஸ்கூல்ல
இந்த பானை மண்டையன் ஹாரிபாட்டர் ஒரு பெண்ணை கெடுத்துட்டான்ங்க......

நாட்டாமை: யாரது கண்ணு ஹாரிபாட்டர்.


ஹாரிபாட்டர்: நான் தாங்க அய்யா... என் மந்திரத்தால உங்க உடம்புல உள்ள சந்தனத்தை எடுத்துருலாம் அய்யா.... என்று மந்திர குச்சியை எடுக்கிறான்.

நாட்டாமை(கோபமாகிறார்): டாய்...ஹாரிபாட்டர் கண்ணு, நான்
இந்த சந்தனத்தை பூச ஒரு மணி நேரம் ஆகும்.இதுக்கு என்புள்ள சரத்குமாரும் குஷ்பூவும் உதவி செய்வாங்க... அத நீ எடுக்க போறியா கண்ணு. உன் குச்சை உள்ள வை.

ஹாரிபாட்டர் டர்ராகிறார்......

நாட்டாமை: ஏன் தம்பி! உன் குச்சியை(மந்திர) வச்சிக்கிட்டு சும்மா இருக்க மாட்டியா..... நீ ஏன்டா அந்த புள்ளையை கெடுத்த?

ஹாரிபாட்டர்: அய்யா...நான் அவ ரூமுக்கு போனது உண்மை, ஆனா
எனக்கு முன்னாடி யாரோ அவளை கெடுத்துட்டாங்க......

நாட்டாமை: அப்போ நீ அவளை கெடுக்கத்தான் போன கண்ணு.

ஹாரிபாட்டர்: ஐயோ இல்லைங்க... பாடத்துல ஒரு டவுட் அதான் போனேன்...இது ஏதோ ஒரு தீயசக்தியோட வேலைன்னு
நினைக்கிறேன்.இதெக்கெல்லாம் காரணம் அந்த வோல்டிமொர்ட்
தான் அய்யா.

நாட்டாமை: உனக்காக யாரும் சாட்சி சொல்ல வருவாங்களா?....

ரோன்(பாட்டரின் நண்பன்): அய்யா நான் பார்த்தேங்க.....


நாட்டாமை: யாரு கண்ணு நீ...

ரோன்: நான் ஹாரிபாட்டர் நண்பங்க...

நாட்டாமை: செல்லாது கண்ணு.

ஹெர்மாயினி (பாட்டரின் தோழி): அய்யா நான் பார்த்தேங்க...

நாட்டாமை: நீ யாரு கண்ணு.

ஹெர்மாயினி: பாட்டர் என் பெஸ்ட் பிரண்டு....

நாட்டாமை: செல்லாது செல்லாது....

அப்போது அங்கே ஹோவர்ட்ஸ் பள்ளியின் தலைமை ஆசிரியர்
டம்ப்ல்டோர் வருகிறார்.

கவுண்டர்மணி: நாட்டாமை அய்யா.. இந்த செம்மறி ஆட்டு மண்டையன் தான்ங்க டம்ப்ல்டோர்.

நாட்டாமை: என்னடா பேர் இது. டபுள்டோர், சிங்கள்டோர்ன்னு.


டம்ப்ல்டோர்: நாட்டாமை நியாயம் செத்து போச்சு, நீதி தொத்து போச்சு

ஹாரிபாட்டர் சின்ன பையன் அவன் இத செய்ஞ்சு இருக்க மாட்டான்.

கவுண்டமணி: சின்ன பையன் செய்யல, அப்ப பெரிய மனுஷன் நீ
செய்ஞ்சியா? என்று டம்ப்ல்டோரிடம் ஏறுகிறார்.

டம்ப்ல்டோர்: கெடுக்கப்பட்ட அந்த பெண்ணோட ரூம்ல சந்தன
வாசம் அடித்தது, அது மட்டும் இல்ல அவ உடம்பு மேலையும்
சந்தனம் இருக்கிறது. இதில் இருந்து யார் காரணம்னு தெரியுலேயே
நாட்டாமை.இது தீயசக்திகளின் வேலை. அவங்களை எதிர்க்கிற
நேரம் வந்துடிச்சு.

கவுண்டமணி: யோ..அப்ப நீ என்ன நாட்டாமைதான் இந்த
காரியத்தை செய்ஞ்சார் அப்படின்னு சொல்றியா....

அதற்குள் நாட்டாமை சுதாரித்து

என்னடா சொல்லிபோட்ட நீ...
உன்னை இந்த எட்டுப்பட்டி கிராமத்தை விட்டு
ஒதுக்கி வைக்கிறன்டா....
இனிமே சுத்துபட்டியிலே எந்த டாஸ்மாக்
கடைலயும் உனக்கு சரக்கு தர மாட்டங்கடா.
இதாண்டா இந்த நாட்டமை தீர்ப்பு.


பசுபதி வண்டியை உடுறா.....

நாட்டாமை(தனக்குள்): இனிமே இந்த மாதிரி தப்பு காரியம்
செய்யும் போது சந்தனத்தை தடவாம போனும்......

நாட்டாமை பாதம் பட்ட இந்த வெள்ளமாய் விளையுமடி
நம்ம நாட்டாமை கை அசைச்சா....................


அனைத்து மக்களுக்கும் போய் சேர tamilish யில் ஒட்டு போடவும்.

ஆக்கமும் எண்ணமும்.
உங்கள்
ஜெட்லி

Tuesday, July 14, 2009

இந்திரவிழா என்னும் திரைக்காவியம்.

இந்திரவிழா விமர்சனம்.

இந்திரவிழா படத்துக்கு போனதுக்கு ஒரே காரணம் நமீதா.
தியேட்டரில் என்னையும் என் நண்பனையும் சேர்த்து சுமார்
இருபது பேர் படம் பார்த்தோம்.இது போன்று படங்கள் எடுப்பதில்
இயக்குனர்க்கு என்ன லாபமோ என்று தெரியவில்லை(இரண்டு
கதாநாயகிகள் தவிர).சில சுவையான சம்பவங்கள் படத்தின்
உள்ளேயும் வெளியேயும்:

********************************
# தியேட்டர் உள்ளே செல்லும் போதே செக்யூரிட்டி அங்கிள்
ஒன்னுக்கு ரெண்டு வாட்டி சொன்னாரு "தம்பி இந்திரவிழா
இந்திரவிழா படம் தான் ஓடுது வாமனன் காலையலே மட்டும் தான்"."இந்திரவிழா படத்துக்கு தான் வந்தோம், படம் போடுறிங்க
இல்ல, ஒரு வண்டியையும் காணோம்" என்று கேட்டேன் நான்.
"போங்க தம்பி இன்னும் படம் ஆரம்பிக்கல" என்றார்.

#படம் பார்த்த பத்தாவது நிமிடத்திலேயே படம் தேறாது என்று
தெரிந்த பின்னும் கனவு நாயகி நமீதா இன்னும் வரவில்லை
என்ற ஒரே காரணத்தால் படத்தை விழித்து கொண்டு
பார்த்தோம்.

#என்கிட்டே ஒரு கெட்ட பழக்கம்ங்க படம் மொக்கையா
இருந்துச்சுன்னா கொஞ்சம் கமெண்ட் அடிப்பேன். இந்த படத்துக்கு
சொல்லவே வேணாம். ஆனால் நான் கமெண்ட் அடிப்பதால்
முன்இருக்கை நபருக்கு கோபம் வந்து விட்டது.அது ஒன்னும்
இல்லைங்க மேல ஒரு நமீதா படம் இருக்குல அதுக்கு நான்
ஒன்னும் பெருசா சொல்லலங்க ,பக்கத்துல என் நண்பன்கிட்ட
தான் சொன்னேன்

"மேல பாருடா புலி தோலு, நடுவுல வரிக்குதிரை தோலு,
கிழே கறுப்பாடு தோலு. ஒரு தோலை மறைக்க எத்தனை
தோலு மச்சான்"(ஜெட்லி தத்துவம் நெ:356)

#ஒரு வழியா இன்டெர்வல் முடிஞ்சு வெளியே வந்தோம்,
திரும்பவும் நம்ம செக்யூரிட்டி அங்கிள் என்னை பார்த்து
புன்முறுவல் செய்தார்.
"அண்ணே நீங்க டிக்கெட் எடுக்கும் போதே இந்திரவிழா
இந்திரவிழான்னு சொல்லும் போதே நான் உஷார் ஆகிரிக்கணும் தப்பு பண்ணிட்டேன் தலைவா" என்று அவரிடம் சொன்னேன்.

"இந்த படத்துக்கு வாமனன் எவ்வளவோ மேல்ப்பா"
என்றார் செக்யூரிட்டி.

"படம் எத்தனை மணிக்கு அண்ணே முடியும்" அவரிடம்
கேட்டேன்.

"9.20 க்கு தம்பி"

"இன்னும் ஒரு மணிநேரம் இந்த கொடுமையை பாக்கணுமா?"

"இந்த படம் பரவா இல்லை தம்பி இதுக்கு முன்னாடி ஞாபகங்கள்
அப்படின்னு ஒரு படம் ஒடிச்சு , தொடர்ந்து மூணு நாள் நைட்
ஷோ படம் ஒட்டல.யாரும் தியேட்டர் பக்கம் எட்டி கூட
பாக்கல"

# வழக்கம் போல் அரைமணி நேரம் பின்னாடி (தள்ளிட்டு)
வருபவர்களும்,அரைமணி நேரம் முன்னாடி போறவங்களுக்கும் இந்த படம் ஒரு வரபிரசாதம் என்றே சொல்ல வேண்டும்.

# விவேக்கின் மொக்கை காமெடி மேலும் படத்தை மொக்கை
ஆக்குகின்றது.சில காட்சிகள் ரசிக்கலாம்.

# ஸ்ரீகாந்த் பத்தி சொல்றதுக்கு ஒன்னும் இல்ல, இனிமே அவரு
டான்ஸ் ஷோல மட்டும் தான் பாக்க முடியும்.

#கடைசி அரைமணி நேரம் நான் வீட்டுக்கு போய்விடலாம்
என்று எழுந்தேன் பார்த்த கரெக்ட்ஆ ஒரு நமீதா பாட்டு
அப்படியே உட்கார்ந்தேன், ஒன்னும் சொல்ற மாதிரி இல்ல
அந்த பாட்டுல.

#இந்திரவிழா ரொம்ப நாளாக படம் ரிலீஸ் ஆகாமல் இருந்தது,
படத்தை பார்த்த பின் படம் ரிலீஸ் ஆகாமலேயே இருந்திருக்கலாம்
என்று நினைத்தேன்.

ஜெட்லி பஞ்ச்:

டப்பா படம் பாக்கறது என் தப்பு இல்ல படம் எடுத்தவன்
தப்பு.

நீங்கள் படித்து ரசித்ததை அனைவரும் படிக்க ஒட்டு போடுங்கள்.
உங்கள் சின்னம் tamilish .



உங்கள்
ஜெட்லி.

Monday, July 13, 2009

பொடிமாஸ்....(13.7.09)

பொடிமாஸ்....

கடந்த சனிக்கிழமை நம்ம ப்ளாகை ஓபன் செய்ஞ்சா
எவனோ ஒருத்தன் ஹாக்(HACK) பண்ணி வச்சிரிக்கான்.
நான் கொஞ்ச நேரம் குப்புற படுத்து யோசிச்சேன்,
ஒன்னும் பிடிபடல.தீடிர்னு பார்த்தா இன்னைக்கு சரியாயிடிச்சு.
ஆனா சனிக்கிழமை வந்த 424 VISITORS என் மேல ரொம்ப
காண்டு ஆயிருப்பாங்க.... அது என் தவறில்லை, தொடர்ந்து
ஆதரவு தருவீர்கள் என்று நம்புகிறேன்.


******************************

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் பாடல்களில் ஹோ ஈஸா
மற்றும் உன்மேல ஆசைதான் பாடல் வேறு பாடல்களை
நினைவு படுத்தினாலும் கேட்பதற்கு நன்றாக தான் இருக்கிறது.
செல்வராகவன் படத்தை பற்றி சொல்லவேண்டாம் அவரின்
சில படங்களில் வக்கிர காட்சிகளுக்கு பஞ்சமே இருக்காது.

ஆயிரத்தில் ஒருவன் பாட்டில் இருந்து சாம்பிள் பாடல் வரிகள்.....

# நான் படைப்பேன் உடைப்பேன் உன் போல கோடி செய்வேன்....

#ஒரு நாளில் என்னுள் அடங்கும் தூசி நீ உன்னை கொன்று என்னை
யாசி........

#என் எதிர ரெண்டு பாப்பா கை வச்சா என்ன தப்பா.....

என்ன இருந்தாலும் போங்க... முதல் நாள் படம் பாக்குறோம்.


***********************************
ஜெட்லியின் தத்துவம் :

# என்னதான் கலர் கலரா சாம்பு இருந்தாலும்
தலையில போட்ட அது வெள்ளையாதான் நுரை வரும்.

***********************************

ஜோக்:

ஒரு மருத்துவமனையில் நான்கு நர்ஸ்கள் பேசி கொண்டிரிந்தனர்.

முதல் நர்ஸ்: நம்ம டாக்டர் வர வர ரொம்ப டார்ச்சர் பண்ரார்ப்பா
சம்பளம் வேற ஒழுங்கா தரதில்ல. அதனால நான் அவரோட
ஸ்டேட்ஸ்கோப்ல ஒரு சின்ன ரிப்பேர் பண்ணி வச்சிட்டேன்.

இரண்டாம் நர்ஸ்: நான் அவரோட தெர்மாமீட்டர்ல தப்பு தப்ப
டிகிரி காட்ற மாதிரி மாத்திட்டேன்.

மூன்றாம் நர்ஸ்: நான் டாக்டர் டேபிள் டிராயர்யில் உள்ள
condomல ஊசி வச்சி ஓட்டை போட்டுடேன்.

நான்காம் நர்ஸ் மயங்கி விழுகிறார்.

****************************

கடந்த வாரம் நெருங்கிய நண்பனின் அறைக்கு சென்று
இருந்தேன்.சும்மா கொஞ்ச நேரம் ப்ளாக் பத்தி பேசினோம்.
நான் அவன் கிட்ட சும்மா கில்மாவா டைட்டில் சொல்லு
மச்சி என்றேன்.

உடனே அவன் என்னிடம் ஒரு கேள்வி கேட்டான்.

"பிட்டு படம் பார்க்கும் போது நம் உடம்பில் மிகவும்
உணர்ச்சியுள்ள பகுதி எது
? என்றான்.

நான் "டேய் என்னடா கேள்வி இது" என்றேன்.

"உனக்கு தெரியுமா தெரியாதா" என்றான்.

"அடப்பாவி ஊருக்கே தெரியும்டா" என்றேன்.

"நீ ஏன் எப்பவும் தப்ப நினைக்கிற" என்று தொடர்ந்தான்.
"காது தான் மச்சான் பதில் அதுக்கு". அவனே விளக்கம்
வேற சொன்னான் "இப்போ வீட்ல பிட்டு படம் பார்த்தன்னு
வை, நீ யாரவது வந்துடுவாங்கோல என்ற பயத்தில் உன்
காது தான் பயங்கர உணர்ச்சியா இருக்கும்" என்றான்.

சே தப்பா நினைச்சிடேனே......(நீங்க???)

************************************

கேட்டது:

நேற்று நண்பர்கள் ராமும் அருளும் போன் பண்ணி நீ இதை பத்தி
கண்டிப்பா எழுதி ஆகணும்டா என்றார்கள். மேட்டர் கிழே

சென்னை புரசைவாக்கம் சொர்ண சக்தி அபிராமி தியேட்டருக்கு சென்ற நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர் காரணம் உள்ளே படம் பார்ப்பவர்களின் படத்தை வெளியே
பெரிய ஓடும் படமாக காட்டுகிறார்களாம். நண்பர்கள்
இருவரும் அனைத்து காதலர்களும் இதை தெரிந்து
கொள்ள வேண்டும் என்று நல் எண்ணத்தோடு என்னிடம் தெரிவித்தனர் அதை நான் உங்களிடம் சொல்லிவிட்டேன்
பார்த்து பண்ணுங்க....

(பி.கு:
என் நண்பர்கள் கூட வேறு யாரும் செல்லவில்லை
என்று நம்புவோம்
)

ஜெட்லி பார்வை:

கண்டிப்பா இது ஒரு நல்லா விஷயம்ன்னு நினைக்கிறேன்,
இந்த மாதிரி தங்களை ஒருத்தர் MONITOR பண்றாங்கன்னு
தெரிஞ்சா தியேட்டர் உள்ளே இருப்பவர்கள் எச்சில் தூப்பாமல்
இருப்பார்கள்.வேற எதுவும் சொல்வதற்கு இல்லை.

****************************


எதிர் பதிவு போடும் பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கை:

(சும்மா ஒரு பப்ளிசிட்டிக்குதாங்கோ)

சில பேர் பதிவுலகத்தில் எதிர்ப்பதிவு போடுவதே வேலையாக
திரிந்து கொண்டிரிக்கின்றனர். இனிமே யார் எதிர்ப்பதிவு போட்டாலும் அவர்களுக்கு ஞாபகங்கள் படத்தின் டிக்கெட்
அனுப்பி வைக்கப்படும்.அது மட்டும் இல்லாமல் தியேட்டரில்
DROP செய்ய INNOVA காரும் கூட இரு அடியாட்களும் அனுப்பப்படுவார்கள்.(படத்துக்கு வரமாட்டேன் என்று முரண்டு பிடித்தால்,உங்கள் மேல் விழும் குத்துக்கு கம்பெனி பொறுப்பல்ல).இது தவிர எங்கள் அண்ணன் தங்க கம்பி
சாம் ஆண்டர்சன் நடித்த யாருக்கு யாரோ பட டிவிடி
உங்களுக்கு தினமும் போட்டு காட்டப்படும்.

***********************

புடிச்சா ஒட்டு போடுங்க....

உங்கள்
ஜெட்லி.


Friday, July 10, 2009

வாமனன் --- விமர்சனம்.

வாமனன் --- திரை விமர்சனம்.

சுப்ரமணியபுரம் படத்துக்கு பின் ஜெய் நடித்து அஹ்மத் இயக்கத்திலும் யுவனின் இசையிலும் அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவிலும் வெளிவந்திருக்கும் படம் வாமனன்.



வாமனன் படம் கொஞ்சம் அலிபாபா,கொஞ்சம் லாடம்,
நிறைய முத்திரை நிரப்பிய ஒரு காக்டெயில். ஆதிகாலத்து
கதை ஒரு அரசியல் பதவி கொலை அதை டேப் செய்வது
பின்பு ஹீரோ சிக்குவது இதுதான் வாமனன். முத்திரை
இரண்டுமே ஒரே ஒன் லைன் கதை, இரண்டுமே மொக்கை.

ஜெய், ஒபெநிங் சாங் வந்தவுடன் ஆரம்பிச்சுடாங்கப்பா என்று
நினைத்தேன் ஆனால் அதன் பின் ஜெய் படம் முழுவதும்
கொஞ்சம் அடக்கி வாசித்திரிக்கிறார்.ஜெய் அதே சென்னை
-28 பையன் இன்டெர்வல் முன் வரை ரசிக்கலாம்.

படத்துக்கு பெரிய பிளஸ் சந்தானம் காமெடி. சந்தானம்
இல்லையென்றால் அவனவன் இன்டெர்வெல் விட்டவுடன்
வீட்டுக்கு கிளம்பிடுவாங்க.புது நாயகி ஒன்னும் வேலை
இல்லை.அப்புறம் லட்சுமி ராய், கவர்ச்சி இதற்க்கு மட்டுமே
படத்துக்கு யூஸ் ஆனவர். படத்தில் லட்சுமி ராயின் குரல் அவர்
சொந்த குரல் மாதிரி தெரிகிறது கேக்கவே கேவலமா இருக்கு.

படத்தில் நடக்கும் முதல் கொலையிலே கதை எதை நோக்கி
போகிறது என்று எளிதாக யூகிக்கும் திரைக்கதையும், கொட்டாவி
வரவைக்கும் காட்சிகளும் அலுப்பை தவிர வேற எதுவும்
தரவில்லை. சிட்டி கமிஷனர் ஒரு ரவுடி மாதிரி ஜெயை
தூரத்துவது மொக்கை.அஹ்மத் ஏதோ புதுசா படம் இருக்கும்னு
சொன்னார் ஆனா படத்துல்ல ஒன்னும் புதுசா இல்ல என்பதே
உண்மை. ஏதோ செய்கிறாய், ஒரு தேவதை இரண்டு பாடல்கள்
தான் தூக்க கலக்கத்தை கலைத்தது.


ஜெட்லி டவுட்:

ஜெய் தன் படங்களில் வாமனன் தவிர வேற எதுவும் ஒரு வாரம்
கூட ஓடாது என்று பேட்டி அளித்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். வாமனன் படமே மொக்கை ஒரு வாரம் கூட தாங்காது
அப்போ மிச்ச படமெல்லாம்.........????????

ஜெட்லி பஞ்ச்:

மொக்கை படம் பாக்கறது என் தப்பு இல்ல அது படம் எடுத்தவன்
தப்பு.

முடிஞ்சா TAMILISHஇல் ஒட்டு போடுங்க அப்பதான் இந்த கெட்ட விஷயம் வெகுஜன மக்கள் இடையே போய் சேரும்.

நன்றி:indiaglitz
உங்கள்
ஜெட்லி

Tuesday, July 7, 2009

எனக்கா (பிரியா)மணி உனக்கா.

எனக்கா மணி உனக்கா.

நான் பார்த்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.


கடந்த வாரம் பேப்பரில் நீங்கள் ஒரு பட விளம்பரத்தை
கண்டிப்பாக பார்த்திருக்கலாம். எனக்கா மணி உனக்கா
இதாங்க படம் டைட்டில்.நம்ம அக்கா ப்ரியாமணி நீச்சல்
உடையில் ஒரு ஸ்டில் போட்டிருந்தாங்க. இந்த படம்
தெலுங்கில் துரோனா என்ற பெயரில் வெளியாகி திரும்பவும்
பெட்டிக்குள் போன மொக்கை படம். அதை இப்போது தமிழ்
ரசிகர்களுக்கு மொழிமாற்றம் செய்து ஒரு கேவலமான
விளம்பரத்தால் நம்மை தியேட்டர் பக்கம் இழுக்க
நினைக்கிறார்கள்.



(இந்த ரெண்டு படத்துல்ல எது போட்டங்கனு சரியா
நினைவு இல்லை.அதனால் இரண்டு படங்களும்
உங்கள் பார்வைக்கு. முடிந்தால் ஆறு வித்தியாசங்கள்
கண்டுபிடிக்கவும்.)






















படம் பெயரை பார்த்திங்களா, எனக்கா மணி உனக்கா.
இந்த மாதிரி படம் பேர் வைக்கவே 11 பேர் கொண்ட குழுவ
வச்சிருப்பாங்க போல?. துபாய் ராணி, காம சதி லீலாவதி,
பெயர் சந்தியா தொழில் தாசி இந்த மாதிரி டைட்டில் வச்சி
நம்மை போல் உள்ள ரசிகர்களை ,தியேட்டர் பக்கம்
இழுக்க பார்க்கிறார்கள் சில கயவர்கள்.




# சரி இந்த மாதிரி டைட்டில் வச்சா கூட்டம் பிச்சுகுமா என்ன?

# ஏன் இது போல் பட டைட்டில் வைத்து திரைப்படங்களை
கேவலப்படுத்துகிறார்கள்?


# வெறும் கவர்ச்சியை மையமாக வைத்து டப்பிங் படத்தை
வெளியிட்டால் நம் தமிழ் ரசிகர்கள் வந்து பார்த்து விடுவார்களா?

#தயவு செய்து இந்த மாதிரி டைட்டில் வைத்து மற்ற
படங்களை கெடுப்பதை நிறுத்தி கொள்வார்களா சம்பந்தப்பட்டவர்கள்?

ஒரு நிமிஷம் இருங்க போன் வருது பேசிட்டு வரேன்......
****************************************************

ஜெட்லி: சொல்லு பாலா...

பாலா: மச்சான் பல்லாவரம் லட்சுமில மரியா,ரேஷ்மா நடிச்ச வண்ணகிளிகள் படம் ஓடுது மச்சி.

ஜெட்லி: ஹோ அப்படியா, இப்பவே மணி பன்னிரண்டு ஆச்சி.. சீக்கரம் வா அப்பத்தான் படம் ஸ்டார்ட் பண்ணும் போது போக முடியும்.

*********************************************************
சாரிங்க நடுவுல போன் வந்துடுச்சு, எங்கே உட்டேன்

# இவனுங்கள திருத்த முடியாதுங்க.(யாரை???), இந்த மாதிரி
டைட்டில் வச்சி மயக்க பாக்குறாங்க.....

சரிங்க டைம் ஆச்சு நண்பன் வந்துரவான் லேட்ஆ போன
சில நல்ல காட்சிகள் மிஸ் ஆயிடும்.அதனால நெக்ஸ்ட்
டைம் மீட் பண்றேன்.....


(சும்மா ஒரு உதாரணதுக்காகத்தான் மேற்கொண்ட போன்
பேசும் நிகழ்ச்சி, யாரும் என்னை தவறாக எடுத்து கொள்ள
வேண்டாம். எனக்கு பல்லாவரம் எந்த பக்கம் இருக்குன்னு
கூட தெரியாது, நான் இதுவரைக்கும் ஜோதி தியேட்டர் பக்கம்
கூட போனதில்லங்க. நம்பினால் நம்புங்க)





முடிஞ்சா TAMILISHஇல் ஒட்டு போடுங்க அப்பதான் இந்த நல்ல
விஷயம் வெகுஜன மக்கள் இடையே போய் சேரும்.

உங்கள்

ஜெட்லி.

இதென்ன ரோடா இல்ல..........

நான் பெரும்பாலும் ஞாயிறு அன்று என் நண்பர்களுடன் பீச் ரோடு வழியாக மெரினா பீச் அல்லது பெசன்ட் நகர் பீச் செல்வது வழக்கம், அப்பொழுது நான் சாலைகளில் கண்டதை இங்கு கூறுகிறேன். சமீப காலமாக அதுவும் குறிப்பாக ஞாயிற்று கிழமைகளில் சாலைகளில் வாகனம் ஓட்டி சென்றோ அல்லது நடந்து சென்றோ விட்டு பத்திரமாக வீடு வந்து சேர்ந்தால் அது நம் முன்னோர் செய்த புண்ணியம் தான். இதற்கு முக்கிய காரணம் இரு சக்கர வாகனஓட்டிகள் தான், ஏதோ ரேஸ் ஓட்டுவது போல் இவர்கள் செய்யும் அட்டூழியத்துக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.


பொதுவாக இந்த சாலையில் சிக்னல் ரொம்ப கம்மியாக இருக்கும், அதனால் நல்ல வேகமாக செல்ல தூண்டும். ஆனால் நல்லா கூட்டமாக இருக்கும் (பெண்கள் கூட்டத்துக்கு கேட்க வேண்டுமா??) இதனால் ஒரு சவாலாக நல்லா வேகமா ஓட்டுறாங்க. இதில் மூன்று வகையாக பிரிக்கலாம்.

1. கூட ஒரு பொண்ணு இருந்தா இவனுங்க போற வேகம் இவர்களுக்கே தெரியாது, இவர்கள் வேறு ஒரு லோகத்தில் பறந்துகொண்டிருப்பதாக தான் ஒரு எண்ணம், அப்படியே கண்ட எடத்துல பிரேக் போடுறதும் பள்ளம் மேடு பாத்து பாத்து வேணும்னே ஏற வேண்டியது. பாவம் அந்த புள்ள ஒரு ஷேர் ஆட்டோ பயணம் தான், பெரும்பாலும் இவர்கள் காதலர்களாக தான் இருப்பார் அதனால் ஒரு வயசு முறுக்குல கொஞ்சம் வேகம் போவாங்க ஆனா ரொம்ப வேகம் போன பொண்ணு நல்லா பயத்துல தட்டுவா அதனால் இவர்களால் ஆபத்து கொஞ்சம் கம்மி தான்.

2. நம்ம பய தன நண்பன் கூட ஏதாவது வெட்டி கதை பேசிட்டே போவான், ஆனா வேற ஒருத்தன் சல்லுனு முந்திட்டா போதும் அவ்வளவு தான் சும்மா ஜல்லிக்கட்டு காளை மாதிரி வீறு கொண்டு எழுவான் இவன், உடனே இதை உணர்ந்து பின்னால இருக்கும் நண்பன் கெட்டியா புடிச்சிகிட்டா உண்டு, இல்லைனா அப்புறம் பாப்போம் மச்சினு ரேஸ் கெளம்பிடுவான் நம்ம ஆளு. இவங்களுக்கு ஈகோ தான் பிரச்சனை அதெப்படி karizma பெரிசா இல்லை Pulsar பெரிசா அப்படின்னு சோதனை பண்ண ஆரம்பிச்சுடுவானுங்க.



3. இந்த மூணாவது குரூப் தானுங்க டெர்ரர் குரூப் (அவரு மாதிரி டெர்ரர் கிடையாது (:P ). இவனுங்க எப்பவுமே பன்னி மாதிரி, ஒரு கூட்டமா தான் சுத்துவானுங்க இது வந்து ஒரு Gang War மாதிரி. இரண்டு மூன்று குழுக்கள் ஒரு ஏரியால இருப்பானுங்க ஒரு குழுவுக்கு குறைந்தது பத்து நபர் இருப்பானுங்க. ஒரு நபர் 150 ருபாய் கொடுக்கணும் ஆகா 1,500/- பெட் கட்டி ரேஸ் ஆரம்பம் ஆகும். அதாவது பாரிமுனை தொடங்கி லைட் ஹவுஸ் அல்லது பெசன்ட் நகர் வரை யார் அல்லது எந்த குழு முதலில் செல்கிறதோ அவர்களுக்கு தான் அந்த முழு தொகையும். இதற்காக இவர்கள் வண்டியில் பல்வேறு மாற்றங்களை செய்து வைத்திருக்கின்றனர். இந்த வெறி தான் பேய் மாதிரி இவர்கள் செல்வதற்கு காரணம், பத்து பதினைந்து வண்டிகள் தொடர்ச்சியாக நூறு KM வேகத்தில் ரோட்டில் சென்றால் எப்படி இருக்கும்?? இதனால் பெண்களும் குழந்தைகளும் மனதளவில் பாதிக்கபடுகின்றனர். கரணம் தப்பினால் மரணம், சரி இவர்கள் இவ்வாறு சென்று செத்து தொலைத்தால் சரி, தான் செய்த தவறுக்கு தண்டனையாக எடுத்துக்கொள்ளலாம் ஆனால் இவர்கள் குடும்பத்தினர்?? இவர்களால் ஏற்படும் விபத்தில் பாதிக்கப்படும் அப்பாவிகள்?? யோசிப்பார்களா?? அப்படி ஜெயிக்கும் பணமும் நேராக TASMAC தான் செல்லும்.



இந்த இடத்தில ஒரு சம்பவத்தை நான் கண்டிப்பாக கூற வேண்டும். அதாவது இந்த குழு ஒரு முறை சாந்தோம் சர்ச் எதிரில் ஒரு பேருந்தை முந்தும் பொழுது அங்கு ரோட்டை கடக்க முற்பட்ட ஒரு பெண்னை ஏற்றியதில் அந்த பெண் அங்கேயே இறந்து போனார், இவர்கள் ஒரு நொடி நின்னு கூட எந்த உதவியும் செய்யவில்லை. அந்த பெண் யாரோ அவர் குடும்பம் இன்று என்ன ஆச்சோ?? அது எனக்கு தெரியாது ஆனால் அந்த பெண்னை கொன்றனவனின் நிலை என்ன தெரியுமா?? சரியாக இரு மாதங்களுக்குள் அதே இடத்தில அதே மாதிரி ஒரு பேருந்தை முந்தும் பொழுது எதிரே வந்த பேருந்தில் அடி பட்டு அதே போல் செத்து போனான். இதை என்னவென்று சொல்வது?? விதியா?? அந்த பெண்ணின் ஆவி அடித்துவிட்டதா?? அவளின் குடும்பத்தாரின் சாபமா?? கடவுள் தண்டித்து விட்டாரா?? அதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். இதில் ரொம்ப கொடுமையான விஷயம் என்னவென்றால் அவனை அவன் நண்பர்கள் நின்று உதவவில்லை அதே போல் சரியாக இரண்டே வாரங்களில் மீண்டும் தங்கள் வேலையே தொடங்கிவிட்டனர். இதை நம்புவதும் விடுவதும் உங்கள் இஷ்டம்.


இதுங்க வளர்ந்து கெட்டுபோனதுங்க இதுங்கள பாத்து வளர்ற பசங்க என்ன பண்ணுறாங்க தெரியுமா?? நம்ம மன்றோ சிலை இருக்குல, அந்த பக்கம் போகும் பொழுது ரொம்ப ஜாக்ரதையா போங்க. அங்க ஸ்கூல் பசங்க சைக்கிள்ல பண்ற வித்தை இருக்கே யப்பப்பா, இப்படி தான் நான் ஒரு நாள் வேலைய முடிச்சிட்டு இரவு ஒரு 08:30 மணிக்கு அந்த பக்கம் வந்துட்ருந்தேன் கரெக்டா அந்த சிலைய தாண்டியவுடன் நாடு ரோட்டில் ஒரு பத்து பசங்க சைக்கிள்ல முன் சக்கரத்த தூக்கிட்டு ஒரு சக்கரத்துல வேகமா ஓட்டிட்டு எனக்கு எதிர் திசைல வரானுங்க. கொஞ்சம் கூட பயம் இல்லை "இவனுங்க என்ன இடிசிடுவானுங்களா என்ன??" இப்படி ஒரு எண்ணம், சரியா அருகில் வந்தவுடன் அந்த மிலிடரி ரோடுக்குள் ஓடிட்டானுங்க. ஏதாவது கார் வேகமா வந்து இடிச்சா சட்னி தான்.

இந்த வித்தை காட்டுறது வேகமா போறது இதெல்லாம் பண்றதுக்கு தான் ஸ்ரீபெரும்புதூர் அருகே ரேஸ் கோர்ஸ் இருக்கே அங்க போய் பண்ண வேண்டியது தான?? யாரு வேண்டாம்னு சொன்னாங்க?? நம்ம காவல் துறையும் பாவமுங்க இதை ஒன்னும் பண்ண முடியல, முதல்ல இவங்க போற வேகத்துல ஏதாவது தடை பண்ணி அத பாக்காம இடிச்சி செத்து போனா பாவம் இவுங்க தலை தான் உருளும். அப்படியே புடிச்சிட்டா பெரிய எடத்துல இருந்து போன் வரும் உட்டுடுவாங்க.

நீங்க என்ன வேணும்னாலும் பண்ணுங்க அடுத்தவங்களுக்கு தொந்தரவு குடுக்காதீங்க.

நன்றி.

சித்து.

Monday, July 6, 2009

பிஞ்சுல பழுத்த பசங்க பார்ட்-2.

பிஞ்சுல பழுத்த பசங்க பார்ட்-2.

*************************************************************************

(கைக்கு எட்டனது வாய்க்கு எட்டலன்னு சொல்வாங்க....
ஆனா கைக்கே எட்ட மாட்டுகிதே.
என்ன கொடுமை சரவணா இது!......)



*************************************************************************

(என் உயிரே நீதான்....
நாளைக்கு எங்கே மீட்டிங்....)



*************************************************************************

தம்பி, இன்னும் சோடா வரல......


*************************************************************************

நாங்கெல்லாம் அட் எ டைம்ல வாய்ல இருந்து பாட்டில்
எடுக்காமலே குடிப்போம்லே......




*************************************************************************
யப்பா.. சரியா பத்த வைப்பா, இதை கூட ஒழுங்கா பத்த
வைக்க தெரியுல! நீயெல்லாம்.....



*************************************************************************
மட்டமான சரக்கா இருக்கும் போல, பாட்டில் காலியாயும்
போதை ஏறல மச்சி.....




*************************************************************************
வருங்கால சிம்பு....



*************************************************************************


பிஞ்சுல பழுத்த பசங்க பார்ட்-1 படிக்க கிளிக் செய்யுங்க....
எல்லாம் சும்மா தமாசுக்கு தான்ங்க.....
புடிச்சிருந்த ஒட்டு போடுங்க.....

உங்கள்
ஜெட்லி

Saturday, July 4, 2009

நண்பனின் காதல்.

நண்பனின் காதல்.(சிறுகதை)



என் நண்பன் முத்து உண்மையிலே மிக அருமையான நபர்,
நட்பு என்றால் என்ன என்று அந்த ஊருக்கு நாங்கள் தான் எடுத்துக்காட்டாக இருந்து வந்தோம்.ஒரே தட்டில் சாப்பிடுவது,
ஒரே க்ளாசில் சரக்கு அடிப்பது, முக்கியமாய் விட்டு கொடுத்து
செல்வது என்று எங்கள் நட்பு நன்றாக போய் கொண்டிரிந்த
சமயம், முத்து காதல் வயபட்டான். பக்கத்துக்கு ஊரில் தான்
டாவு கட்டும் பெண் இருப்பதாக என்னிடம் கூறினான்.

காதல் வந்தாலும் வந்தது பேனாவும் கையுமாக அலைந்தான்.

"என்னடே பேப்பர் பேனாவுமா சுத்துற" கேட்டேன்.

"இல்ல பங்காளி நம்ம ஆளுக்கு கவிதை கிறுக்கிட்டு இருக்கேன்"
என்றான்.

"நீயெல்லாம் கவிதை எழுதுரியா, மக்க செத்தாங்க போ"
என்று கிண்டல் அடித்து விட்டு படித்து காட்ட சொன்னேன்.

ஹ்ம் தொண்டையை சரி செய்து விட்டு முத்து தொடர்ந்தான்

"நீ இல்லாமல் நான் இல்லை
உன்னை என் நெஞ்சம் மறப்பதில்லை
அதனால் என் இதயம் சிறகடித்து பறப்பதில்லை
ஏன் என்றால் என் இதயம் என்னிடம் இல்லை"

"பின்னிட்ட போ, ஆமாம் இதை எங்கயோ படிச்ச மாதிரி
இருக்குடே" என்றேன்.

*************************************
கள் குடிக்க முத்துவும் நண்பனும் சென்றோம், முத்து போதை
ஏறியவுடன்

"பங்காளி இன்னொரு கவிதை இருக்கு கேக்குறியா" என்றான்.

சும்மாவே விடமாட்டான் இப்போ வேற போதை "ஹ்ம்ம் சொல்லுடே" என்றேன்

"டயரும் டியுபும் சேர்ந்தால் தான்
வீல் ஓடும்....
அது போல்
நானும் நீயும் சேர்ந்தால் தான்
என் வாழ்க்கை எனும் சக்கரம் ஓடும்."

க்க் என்று காரி தூப்பினேன், அவன் போதையில் கண்டு கொள்ளவில்லை.

***************************************
என்னிடம் அடிக்கடி பேசும்போதெல்லாம் தன் காதல் மேலும்
மேலும் இருகுவதாக கூறினான்.

"பங்காளி எனக்கு நீ தான் ஊரே எதிர்த்தாலும் கல்யாணம் பண்ணி
வைக்கணும்டே, நான் நீ இருக்கிற நம்பிக்கையில் தான் பக்கத்துக்கு
ஊரு பொண்ணை லவ் பண்றேன்டே" என்றான்.

ஆஹா நம்மளை நம்பிட்டான் நாமதான் அவனை சேத்து வைக்கணும் என்று முடிவு பண்ணினேன்.

திரும்பவும் ஒரு கவிதை படிக்க ஆரம்பித்தான் கவிஞர் முத்து

"நான் ஒரு பித்தன்
உன் பின்னால் அலையும் சித்தன்
நீ ஒரு மல்கோவா
நாம் எப்போது போவோம் கோவா?..... "

என்னடே வர வர கேவலமா போகுது, நாம வேற நேத்து நாடோடிகள் படம் பார்த்தோம். எதுக்கும் அவன் காதலில்
ஸ்ட்ராங்காக இருக்கானானு பாப்போம்,அப்புறம் சேப்போம்.
என்று மனதில் நினைத்து விட்டு அன்று நடையை கட்டினேன்.
*********************

அன்று நான் நண்பர் கவிஞர் முத்து அவர்களின் கவிதை
என்று கிறுக்கிய புத்தகத்தை காண நேர்ந்தது, அதில் ஒரு
கவிதையை படித்த படித்த பின் புத்தகத்தை காரி தூப்பிவிட்டு, இனிமே அந்த நாய் சைடு தலை வைத்து படுப்பதில்லை என்று முடிவெடுத்தேன்.

அந்த கவிதையை நீங்களே படிங்கள்........


நீ எனக்கு
நான் உனக்கு
நடுவில் உன்
புருஷன் ஏதற்கு?

(டிஸ்கி:இதெல்லாம் கவிதைன்னு வேற சொல்ல வேண்டியதா இருக்கு, கள்ள காதல் பண்றவன் கூட கவிதை எழுத ஆரம்பிச்சிடானே! )

****************************************
புடிச்சிருந்தா கண்டிப்பா ஒட்டு போடுங்க, பிடிக்கிலனாலும்
ஒட்டு போடுங்க அதனால ஒன்னும் தப்பு இல்ல.


உங்கள்

ஜெட்லி

Friday, July 3, 2009

நாட்டு நடப்பு நல்லாதானே இருக்கு.....

நாட்டு நடப்பு நல்லாதானே இருக்கு.....
*******************************************
நம் ஊர்களில் பேருந்துகளின் அவல நிலை....

கடந்த வாரம் நானும் எனது நண்பர்களும் ஒரு மினி பயணமாக மாம்மலபுரம் தாண்டி கடலூர்க்கு முன் இருக்கும் ஒரு இடத்துக்கு சென்றோம்.

(நாங்கள் இந்த பஸ்சில் செல்லவில்லை, வேற பஸ் படம் கிடைக்கவில்லை)


நாங்கள் ஏறிய பேருந்தில் இருக்கைகள் நிறைந்துவிட்டதால்
நாங்கள் அனைவரும் நின்று கொண்டே பயணித்தோம்.
அன்பு நண்பர் சின்ன தம்பி எனப்படும் சரவணன் அவர்கள்
பயண கழிப்பால் கண்டக்டர் அவர்களிடம் அனுமதி வாங்கி
டிரைவர் அருகே உக்காந்து கொண்டு வந்தார்.

நாங்கள் நின்று கொண்டே வந்தோம், E.C.R ரோட்டில் பஸ்
பறக்கும் என்று பார்த்தால். ஷேர் ஆட்டோகாரன் கூட எங்களை ஓவர்டேக் செய்து விட்டு போனான். எங்கள் பின்னாடி வந்த
அனைத்து பஸ்களும் எங்களை ஓவர்டேக் செய்து கொண்டு முன்னால் போனது.தீடிரென்று சரவணனிடம் இருந்து நண்பர் ராம் அவர்களுக்கு ஒரு sms ,

"டேய் டிரைவர்க்கு பஸ்ல ஆறாவது கீர் இருக்கிறது இப்பதாண்டா தெரியுது. இவ்வளவு நேரம் அஞ்சாவது கீர்லதான் வண்டி ஓட்டிட்டு வந்துருக்கார், அதை வேற டிரைவர் சிரிச்சிகிட்டே சொல்லி மாத்துறார் டா".

அவன் sms வந்த அஞ்சாவது நிமிஷத்தில் நாங்கள் இறங்க வேண்டிய பஸ் நிறுத்தம் வந்து விட்டது.

போனஸ் செய்தி:

பாவம் டிரைவர் இதுவரை ஐந்து கீர் உள்ள வண்டிதான் ஒட்டி
பழக்கமாம், அவரிடம் தீடிரென்று இந்த வண்டியை கொடுத்து உள்ளனர். அதுவும் இல்லாமல் வண்டி அடிக்கடி ஹீட் ஆகுதாம்.

(உங்க(டிரைவர்) குத்தமா அரசு குத்தமா யாரை நானும் குத்தம் சொல்ல)

******************************

டிராபிக் போலீஸ்

(இன்னைக்கு எவனும் சிக்கலையே.....சுழ்நிலை பாட்டு:காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி)


நீங்கள் பைக்கிலோ அல்லது காரிலோ போகும் போது உங்கள்
முன் ஆறு அல்லது எட்டு சக்கரம் கொண்ட லாரி சென்று
கொண்டிரிக்கலாம், அப்படினா அப்படியே பிரேக் போட்டு மெதுவா போங்க.தயவு செய்து அந்த லாரி பின்னால் போகாதிங்க, அது ஆட்டோ பின்னால் போவதற்கு சமம்.


ஏன்னா கண்டிப்பா அந்த ஸ்பீடாக வரும் லாரியை டிராபிக்
போலீஸ்காரர் கடமை உணர்ச்சியோடு கண்டிப்பாக நிறுத்துவார்.
ஆம் சென்னை நகரத்தில் காலை ஆறு மணி முதல் இரவு பத்து மணி வரை அந்த லாரிகளுக்கு உள்ளே வர அனுமதியில்லை.


சரி அந்த போலீஸ்காரர் நிறுத்தி பைன் போடுவார்ன்னு மட்டும்
நினைக்காதிங்க, எல்லாம் இருபது,முப்பது வாங்கத்தான் நிறுத்துவார். இந்த மாதிரி லாரி ஓட்டுனர்கள் காசை கொடுப்பதை
நான் தினமும் பார்த்து கொண்டு தான் இருக்கேன். முக்காவாசி
காலையில் தான் இது நடக்கும், டிராபிக் போலீஸ்காரர் அந்த
லாரி பின்னால் எந்த வண்டி வருகிறது அல்லது சைடில் எந்த
வண்டி வருகிறது என்று எதுவுமே அவர்கள் பார்ப்பதில்லை.
அந்த லாரியை பார்த்தாலே கை போட்டு விடுவார்கள் பின்னாடி
வரவன் எவ்வளவு பாஸ்ட் வரான் என்றெல்லாம் பார்க்காமல்
அவர்கள் பாட்டுக்கு நிறுத்துவதால் பல விபத்துக்கள் நடப்பதற்கு
டிராபிக் போலீஸாரே காரணம் ஆகி விடுகின்றனர் என்பது
கசப்பான உண்மை.அவர்கள் அந்த லாரியை மடக்கி நிறுத்தும்
கொஞ்ச நேரத்தில் டிராபிக் ஜாம் ஆகி விடும்.


(நம்புங்க... இவங்க லாரியை மடக்க நிற்கவில்லை)


நான் அனைவரையும் சொல்லவில்லை, சில நல் உள்ளம் கொண்ட டிராபிக் போலீசாரும் நம் ஊரில் உள்ளனர். இந்த மாதிரி லாரியை
கண்டால் தூரத்தி கொண்டு போய் பணம் பிடிங்கிவிட்டு தான்
மறு வேலை பார்க்கும் போலீஸாரும் உள்ளனர்.

சரி மக்களே பார்த்து வண்டி ஒட்டுங்கோ......

(ராஜா வசூல் ராஜா, மாமூல் வாங்க போவது யாரு... நீதான்).

இது போல் உங்களுக்கும் அனுபவம் இருந்தால், கமெண்ட்ல
எழுதி எங்க கூட பகிர்ந்துக்கலாம்.

உங்கள்
ஜெட்லி.

Wednesday, July 1, 2009

பில்ட்-அப் ஆசாமிகள்.

உங்கள நண்பர் பில்ட்-அப் ஆசாமியா?

சில பில்ட்-அப் படங்கள்:



நாம் இதுவரை வாழ்வில் சந்தித்த நபர்களில் எவரேனும்
ஒருவரையாவது, அதாவது பில்ட்-அப் பார்ட்டிகளை
சந்திக்கமால் இருந்திருக்க வாய்ப்பில்லை. பில்ட்-அப்
பார்ட்டிகளின் நோக்கம் தாங்கள் நண்பர்கள் மத்தியில்
மதிப்போடு இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தங்களுக்கு தெரியாதவற்றை பயங்கர பில்ட்-அப் செய்து கூறுவதே
இவர்களின் வேலை.

அது என் வாழ்வில் நான் சந்தித்த என் நெருங்கிய நண்பனின்
சில பில்ட்-அப்கள் இங்கே
,

எனக்கு கல்லூரியில் முதல் நாள் கிடைத்த முதல் நண்பன்
குமார்(பெயர் மாற்றபட்டுள்ளது).கல்லூரி காலத்தின்
ஆரம்பத்தில் அவன் எந்த ஒரு விஷயத்தையும் மிகையாக
தான் சொல்லுவான், அப்போது எங்களுக்கு தெரியாது அவன்
பில்ட்-அப் பார்ட்டி என்று.முதல் முதலில் அவன் சிக்கியது
விஜய் நடித்த பகவதி படத்தால். எனக்கு கொஞ்சம் சினிமா
நியூஸ் அத்துபடி. அந்த டைம் பகவதி டிரைலர் டி.வி.யில்
காண்பித்தார்கள்.ஆனா பாடல்கள் ரிலீஸ் ஆகவில்லை.

குமார்: மச்சி பகவதி பாட்டு கேட்டியா? செமையா இருக்குடா...

ஜெட்லி: ஆமாண்டா டிரைலர்ல பார்த்தேன்.

குமார்: டேய் நான் பகவதி பாட்டு சி.டி வாங்கிட்டேன் டா....
எல்லாமே சூப்பர் பாட்டு.

ஜெட்லி: உன்கிட்ட பகவதி பாட்டு சி.டி இருக்குதா மச்சான்?,
இல்ல விஜய் , தேவா உங்க மாமாவா?

குமார்: சீ..நேத்து தாண்ட நானும் வீட்டாண்ட பசங்களும் போய்
வாங்கிட்டு வந்தோம்.

ஜெட்லி: டேய் யார்கிட்ட கதை உடுற, இன்னைக்கு பேப்பர்ல
பாட்டு அடுத்த வாரம் தான் ரிலீஸ் ஆகும்னு
போட்டுருக்கான்.....

குமார்: மச்சான் எப்படிடா கண்டுபிடிச்ச.... ச்சே .சாரி ஸ்மால்
மிஸ்டேக்.

அன்னைக்கு மாட்டினவன் என் நண்பன். அவனை ஒட்டுரத
கேக்கவா வேணும்.
**************************************************
இன்னும் சில சாம்பிள்:
(கிட்ட தட்ட தலைநகரம் வடிவேலு மாதிரி ஆனா இது நடந்து ஆறு
வருடங்கள் மேல் ஆகி விட்டது)

குமார்: நாங்கெல்லாம் அசோக் நகர்ல பெரிய ரவுடி பிளஸ்2
படிக்கும் போதே சாரை(வாத்தியாரை) கிணத்துல கயிறி கட்டி
இறுக்கி விட்ருவோம்.

நாங்கள் நண்பர்கள் அனைவரும் அப்படியா என்று வியப்போம்.

குமார்: ஒரு வாட்டி இப்படி தான் மச்சி, ரோட்ல சின்ன பிரச்னை
ஆச்சி. வடபழனி சிக்னல்ல கல்ல விட்டு சிக்னலை உடைசிட்டோம்.



குமார் இதை கூறியது முதல் வருடத்தில், எனக்கு குமாரின்
நண்பன் அசோக் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கடைசி வருடத்தில்
தான் கிடைத்தது.அசோக்கும் குமாரும் ஒன்றாகவே பள்ளி படிப்பை முடித்தனர்.அவனிடம் இதை பற்றி கேட்டேன்

ஜெட்லி: என்ன +2 படிக்கும் போது சாரை கயித்துல கட்டி கிணத்துல விட்டானாமே?

அசோக்: நாங்க படிக்கும் போது சொன்னாங்க, எப்பவோ எங்க
ஸ்கூல்ல நடந்தது.

ஜெட்லி: அப்ப அவன் இல்லையா ஸ்பாட்ல?.... அவன் இருந்த மாதிரி
சொன்னான்.

அசோக்:யாரு அவனா, ஸ்கூல்க்கு வந்தா முடிட்டு உட்கார்ந்துட்டு
வீட்டுக்கு வந்துடுவான்.

ஜெட்லி: அப்புறம் ஏதோ பிரச்சனையில் வடபழனி சிக்னல் உடைச்சிடனாமே?

அசோக்: ஹ ஹ.. நல்ல காமெடி. இந்த மாதிரி கதையெல்லாம் உங்ககிட்ட வேற சொல்றானா. அந்த சிக்னல் உடைஞ்சது உண்மை
ஆனா அதை அவன் உடைக்கல.



இன்னும் பல விஷயங்கள் நண்பனை பற்றி சொல்லலாம்.
ஆனால் அவன் பழகுவதற்கு இனிமையனவான், அன்பனாவன்.
நட்புக்காக உயிர் கொடுப்பன் மேலும் நட்புக்காக படத்தை
பத்து தடவை மேல் பார்த்தவன்.(சிம்ரனுக்காக பார்க்கவில்லை).
இன்னும் சில பேர் இருக்காங்க படம் போஸ்டர்
பார்த்துட்டு படம் பார்த்த மாதிரி கதை சொல்வாங்க.
உங்களுக்கும் ஏதாவது இந்த மாதிரி அனுபவம் இருந்தா
கமெண்ட் பண்ணுங்க.....

உங்கள்
ஜெட்லி