Tuesday, July 7, 2009

எனக்கா (பிரியா)மணி உனக்கா.

எனக்கா மணி உனக்கா.

நான் பார்த்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.


கடந்த வாரம் பேப்பரில் நீங்கள் ஒரு பட விளம்பரத்தை
கண்டிப்பாக பார்த்திருக்கலாம். எனக்கா மணி உனக்கா
இதாங்க படம் டைட்டில்.நம்ம அக்கா ப்ரியாமணி நீச்சல்
உடையில் ஒரு ஸ்டில் போட்டிருந்தாங்க. இந்த படம்
தெலுங்கில் துரோனா என்ற பெயரில் வெளியாகி திரும்பவும்
பெட்டிக்குள் போன மொக்கை படம். அதை இப்போது தமிழ்
ரசிகர்களுக்கு மொழிமாற்றம் செய்து ஒரு கேவலமான
விளம்பரத்தால் நம்மை தியேட்டர் பக்கம் இழுக்க
நினைக்கிறார்கள்.



(இந்த ரெண்டு படத்துல்ல எது போட்டங்கனு சரியா
நினைவு இல்லை.அதனால் இரண்டு படங்களும்
உங்கள் பார்வைக்கு. முடிந்தால் ஆறு வித்தியாசங்கள்
கண்டுபிடிக்கவும்.)






















படம் பெயரை பார்த்திங்களா, எனக்கா மணி உனக்கா.
இந்த மாதிரி படம் பேர் வைக்கவே 11 பேர் கொண்ட குழுவ
வச்சிருப்பாங்க போல?. துபாய் ராணி, காம சதி லீலாவதி,
பெயர் சந்தியா தொழில் தாசி இந்த மாதிரி டைட்டில் வச்சி
நம்மை போல் உள்ள ரசிகர்களை ,தியேட்டர் பக்கம்
இழுக்க பார்க்கிறார்கள் சில கயவர்கள்.




# சரி இந்த மாதிரி டைட்டில் வச்சா கூட்டம் பிச்சுகுமா என்ன?

# ஏன் இது போல் பட டைட்டில் வைத்து திரைப்படங்களை
கேவலப்படுத்துகிறார்கள்?


# வெறும் கவர்ச்சியை மையமாக வைத்து டப்பிங் படத்தை
வெளியிட்டால் நம் தமிழ் ரசிகர்கள் வந்து பார்த்து விடுவார்களா?

#தயவு செய்து இந்த மாதிரி டைட்டில் வைத்து மற்ற
படங்களை கெடுப்பதை நிறுத்தி கொள்வார்களா சம்பந்தப்பட்டவர்கள்?

ஒரு நிமிஷம் இருங்க போன் வருது பேசிட்டு வரேன்......
****************************************************

ஜெட்லி: சொல்லு பாலா...

பாலா: மச்சான் பல்லாவரம் லட்சுமில மரியா,ரேஷ்மா நடிச்ச வண்ணகிளிகள் படம் ஓடுது மச்சி.

ஜெட்லி: ஹோ அப்படியா, இப்பவே மணி பன்னிரண்டு ஆச்சி.. சீக்கரம் வா அப்பத்தான் படம் ஸ்டார்ட் பண்ணும் போது போக முடியும்.

*********************************************************
சாரிங்க நடுவுல போன் வந்துடுச்சு, எங்கே உட்டேன்

# இவனுங்கள திருத்த முடியாதுங்க.(யாரை???), இந்த மாதிரி
டைட்டில் வச்சி மயக்க பாக்குறாங்க.....

சரிங்க டைம் ஆச்சு நண்பன் வந்துரவான் லேட்ஆ போன
சில நல்ல காட்சிகள் மிஸ் ஆயிடும்.அதனால நெக்ஸ்ட்
டைம் மீட் பண்றேன்.....


(சும்மா ஒரு உதாரணதுக்காகத்தான் மேற்கொண்ட போன்
பேசும் நிகழ்ச்சி, யாரும் என்னை தவறாக எடுத்து கொள்ள
வேண்டாம். எனக்கு பல்லாவரம் எந்த பக்கம் இருக்குன்னு
கூட தெரியாது, நான் இதுவரைக்கும் ஜோதி தியேட்டர் பக்கம்
கூட போனதில்லங்க. நம்பினால் நம்புங்க)





முடிஞ்சா TAMILISHஇல் ஒட்டு போடுங்க அப்பதான் இந்த நல்ல
விஷயம் வெகுஜன மக்கள் இடையே போய் சேரும்.

உங்கள்

ஜெட்லி.

6 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

ஒன்னும் சொல்றதுக்கு இல்ல..:-))))))))

ஆபிரகாம் said...

இதேல்லாம் சகஜம் பாஸ்!

Anonymous said...

Hi

இது ரொம்ப ஓவர். உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

வால்பையன் said...

ஆறு இல்ல நச்சுன்னு ஒரே வித்தியாசம்!

ஒரு படத்துல லேசா தெரியுது!
இன்னொன்னுல அதுவும் இல்ல!


நல்லா பாருங்க பின்னாடி பச்சைகலரு சேர் தெரியும்!

ஓஜஸ் said...

ippo neenga title vera ethavathu koduthu , logo vera kodutha nanga visit panni iruppoma illati munnani idugaigala tamilishla vanthu irukuma. ellam buisness magnets boss

சௌந்தர் said...

(சும்மா ஒரு உதாரணதுக்காகத்தான் மேற்கொண்ட போன்
பேசும் நிகழ்ச்சி, யாரும் என்னை தவறாக எடுத்து கொள்ள
வேண்டாம். எனக்கு பல்லாவரம் எந்த பக்கம் இருக்குன்னு
கூட தெரியாது, நான் இதுவரைக்கும் ஜோதி தியேட்டர் பக்கம்
கூட போனதில்லங்க. நம்பினால் நம்புங்க)

நம்பிடோம் பாஸ் ...