Wednesday, July 29, 2009

கிளுகிளுப்பா இன்னொரு காதல் கதை

கிளுகிளுப்பா இன்னொரு காதல் கதை :
(வயது வந்தவர்கள் மட்டும்)

"ஜூலீ இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்கே தெரியுமா...." எப்படியாவது ஜூலீயை இன்று கரெக்ட் செய்யும் நோக்கில் கூறினேன்.

"இன்னைக்கு அய்யா ரொம்ப மூடு போல..." என்றாள் ஜூலீ.

"ஆமாம் நீ என்னை ஒரு வாரமா பட்டினி போட்டுட்ட"
என்றேன் ஆதங்கத்துடன்.

அப்போது ஒரு கார் ஏற்றுவது போல் வந்தது, நானும் ஜூலீயும்
ஒதுங்கி நின்றோம்.

"என்னத்த காரை ஒட்டுறாங்களோ ஒரு ஹோர்ன் கூட அடிக்கிறதில்ல..." கோபத்துடன் கூறினாள் ஜூலீ.

"நேத்து நீயும் டேவிடும் சரசம் பண்ணிங்க போல, ஊர்ல
உள்ள எல்லாரும் சொல்றாங்க?"என்று கேட்டேன் நான்.

"அதான் இன்னைக்கு வேணாம்னு சொன்னேன்" என்று
நடையை கட்டினாள் ஜூலீ.

"நான் இன்னைக்கு ரொம்ப மூடாக இருக்கேன், உன்னை
விடமாட்டேன்" என்று அவளை மறித்து தேகத்தை முகர்ந்தேன்.
என் முத்தத்தை அவள் தேகம் முழுக்க பதித்தேன், அவள்
கொஞ்சம் முரண்டு பிடித்தாள்.

நான் அவள் முதுகை பிடித்து ஏறியதும் , தூரத்தில் இருந்து
வந்த ஒரு கல் என் முகத்தை பதம் பார்த்தது.

க்யோ க்யோ என்று கத்தி கொண்டே நாலு கால் பாய்ச்சலில்
குரைத்து கொண்டே ஓடினேன்.இந்த மனுசங்களுக்கு தங்களை தவிர யார் காதல் செய்ஞ்சாலும் பிடிக்காது போல......

முந்தைய கிளுகிளுப்பு கதை படிக்க இங்கே கிளிக் செய்யவும்
கிளுகிளுப்பா ஒரு காதல் கதை

பிடிச்சா கண்டிப்பா ஒட்டு போடுங்க.....


உங்கள்
ஜெட்லி

© The content is copyrighted to JETLI and may not be reproduced on other websites.

14 comments:

டக்ளஸ்... said...

ஹி..ஹி..சும்மா பொழுது போகல அதானுங்கோவ்.

யோ (Yoga) said...

கொஞ்சம் ஓவரா தான் எதிர்பார்த்துடேனோ? ஹி ஹி

லோகு said...

இப்படி எதாவது பண்ணுவன்னு நெனச்சேன்..

SUREஷ் (பழனியிலிருந்து) said...

o. k.., o.k...,

SUREஷ் (பழனியிலிருந்து) said...

சித்துவுக்கு விருது கொடுத்திருக்கோம் தல..,

வந்து வாங்கிக் கொள்ளுங்கள்

Bala De BOSS said...

உனக்கு இதே வேலையா போச்சு. ஏதாவது கிளு கிளுப்பா தலைப்பு வச்சு எங்கள காய வைக்கரத எப்போதான் நிறுத்த போறீங்களோ?????

ஜெட்லி said...

வருகைக்கு நன்றி டக்லஸ்

ஜெட்லி said...

ஸாரி யோ

ஜெட்லி said...

@லோகு
மச்சி என்னை பத்தி தெரிஞ்சவன் நீ ஒருத்தன் மட்டும் தான்

ஜெட்லி said...

@சுரேஷ் பழனி

தல, நம்ம சித்து சிறிது காலம் ஓய்வில் உள்ளார்,
அவர் ப்ளாக் எல்லாம் படிகிறாரா? என்று கூட
தெரியவில்லை.....

ஜெட்லி said...

@பாலா

மச்சி நீ இந்தியாவுக்கு வா, உனக்கு சரோஜா
தேவி புக் வாங்கி தரேன்.....நீ எதிர்பார்த்து
எல்லாம் அதில் இருக்கும்.

Ram said...

ஒரே ஒரு Add-தமிழ் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள் அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.

உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதே
Add-தமிழ் பட்டன் இணையுங்கள் !

அதற்கான முகவரி : www.findindia.net

Kutty Ponnu said...

helo nice story adi dhool

Kutty Ponnu said...

Nice.. light da doubt irruthuchu..
kathai ippadithan mudiyum.. anywae nice.. thanks.. n view my blogs okay