Tuesday, March 30, 2010

எல்லாம் ஒரு வெளம்பரம் தான்!!

கோவா vs தமிழ்ப்படம் விளம்பர மோதல்!! இன்ன பிற விளம்பரங்களும்

சமீபத்தில் நான் ரசித்த மற்றும் சிரித்த சில விளம்பரங்களை
உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.நீங்க இந்த
விளம்பரத்தை பார்த்து இருக்கலாம் இருந்தாலும் வெளிநாட்டில்
உள்ளவர்களுக்கும் பேப்பர் படிக்காதவர்களுக்கும் என்னால்
முடிந்த சிறு உதவி!!

முதல்ல....

கோவா படத்தின் விளம்பரம்...கடந்த வெள்ளிக்கிழமை கோவா படத்தின் 9 வது வாரம் வெற்றி??? விளம்பரத்தில் சரோஜா சிவா ஸ்டில்லை போட்டு "எனக்கு தமிழ்ப்படம்- களிலேயே மிகவும் பிடித்த படம் கோவா" என்று தமிழ்ப்படத்தை நக்கல் அடித்தனர் கோவா குழுவினர்.தமிழ்ப்படம் விளம்பரத்தில் "ஊரறிய ஜெயிச்சவன் நான்தாண்டி,என்கிட்டே
காட்டாத பூச்சாண்டி" என்று அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில்
சிவா நடிக்கும் பூச்சாண்டி படத்தின் வாசகத்துடன் வெளம்பரம் வந்தது....

ஆஹா...சண்டையே ஆரம்பிச்சுட்டாங்க என்று நினைத்தேன்...
சண்டே பேப்பரில் தமிழ்ப்படம் விளம்பரத்தில் வந்ததை
நீங்களே படத்தை கிளிக் பண்ணி பாருங்க....கோவா படத்தை
செமையா ஒட்டி இருக்காங்க!!

சிவா: அண்ணே கோவாக்கு டூர் போனீங்களே என்ன ஆச்சு??

சண்முகசுந்தரம்: ஊராப்பா அது? ஒரு மூஞ்சி கூட பார்க்குற
மாதிரி இல்ல.அதான் திரும்பி இங்கியே வந்துட்டேன்.
ஆனா ரெண்டு படத்துக்கும் மிக பெரிய ஊறுகாயாக சிவாவும் ஷண்முகசுந்தரமும் இருக்கிறார்கள் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை!!
கண்டிப்பா இவங்க இதை ஜாலிக்கு தான் பண்றாங்கனு நினைக்கிறேன்.நாம் நண்பர்களை கலாய்ப்பது போல் அவர்கள் பேப்பர் விளம்பரத்தில் செய்கிறார்கள் போலும். ஏற்கனவே ndtv hands - up ஷோவில் மாற்றி மாற்றி கலாய்த்து இருக்கிறார்கள்.உங்களை யாராவது ஒட்டுனா நீங்க திருப்பி கலாய்க்க மாட்டீங்களா.... ஓட ஓட ஓட்டுறது இல்ல அந்த மாதிரி தான் இதுவும்!!சில பேர் இதை நம்மை april fool பண்ணத்தான் செய்கிறார்கள்
என்று சொல்கிறார்கள்.அவுங்க மாத்தி மாத்தி கிண்டல் பண்றதை
நாம் ரசிக்கிறோம் அவ்ளோதான்...இதில் april fool பண்ண என்ன
இருக்கிறது...!


இன்னைக்கு கோவா விளம்பரம் பாருங்க.....கொஞ்சம் ஓவர்ஆ தான் இருக்கு....கோவா சூப்பர் படமாக இருந்தா அவர்கள் விளம்பரம் செய்வதை ரசிக்கலாம் ஆனால் இப்போது அவர்கள் விளம்பரத்தை பார்த்தால் "செத்த கிளிக்கு ஏன்டா சிங்காரம்" என்று தான் தோன்றுகிறது.....

(செவ்வாய்க்கிழமை(இன்றைய) கோவா விளம்பரம்)


நாளைக்கு தமிழ்ப்படம் என்ன விளம்பரம் பண்ண போறாங்கனு ஆர்வமா இருக்கேன்...கண்டிப்பா இதே பதிவில் நாளைக்கு அப்டேட் செய்வேன் வந்து பாருங்க....


**************************************

அசல் வெற்றி...

ஹேஹே....ஹேஹே.... எங்கே தல படம் நூறு நாள் ஓடிடுச்சு... ஸாரி அம்பது நாள் ஓடிடுச்சு....இது தான் அசல் வெற்றி..... எனக்கு ஒரு டவுட்ங்க ஏகன் படம் கூட சாந்தி தியேட்டர்ல தான் ஒடிச்சு! என்னை பொருத்தவரை அசலுக்கு ஏகன் எவ்வளவோ பரவாயில்லை.சொந்த தியேட்டர் சொந்த தயாரிப்பு மட்டுமே அசல் படம் ஓட காரணம் என்பது சின்ன குழந்தைக்கு கூட
தெரியும்.
இதை நான் ஏன் சொல்றேன்னா எனக்கு அஜித்தை இந்த விஷயத்தில் ரொம்ப பிடிக்கும் படம் நல்லா இல்லைன்னா காசு கொடுத்து நூறு நாட்கள் ஓட்டமாட்டார்.அஜித் இது போன்று விளம்பரங்களை வெறுப்பவர். என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு புரிந்தால் சரி!!

மறுபடியும் சொல்றேன் நான் அஜித் எதிர்ப்பாளன் கிடையாது, அவரின் கோடான கோடி நலவிரும்பிகளில் நானும் ஒருவன், ரசிகனாக அல்ல!!
குறிப்பு: சைடில் உள்ள படங்களை(வடிவேலு,சின்ன பையன்) பார்த்து தவறாக நீங்களே எதுவும் எண்ணி கொள்ள வேண்டாம்!!

***********************************************************

ஆயிரத்தில் ஒருவன்:நாம எப்போவும் நேர்மையா இருக்கணும்....
ஆயிரத்தில் ஒருவன் ஒரு நல்ல பொழுதுப்போக்கு படம்
என்பதில் இதுவரை எனக்கு எந்த மாற்று கருத்தும் கிடையாது...!!
ஆனால் இவர்களின் 75 நாள் விளம்பரம் கொஞ்சம் எரிச்சலை
ஏற்படித்தியது, காரணம் படம் பேபி ஆல்பர்ட்இல் இருந்து
தூக்கி ஒரு வாரம் ஆச்சி!! கண்டிப்பா கார்த்தியின் செல்வாக்கை
உயர்த்த தான் இந்த நூறு நாள் மோகம்....!
வேண்டாம் கார்த்தி காமெடி ஆயிடும்.....
என்ன ஏற்கனவே ஆயிடுச்சா?? மீ எஸ்கேப்.....

உங்கள் ஆதரவை தெரிவிக்க ஓட்டும் விவாதிக்க பின்னூட்டமும்
போடுங்கள்!!
ஜெட்லி

Monday, March 29, 2010

வலை பதிவர் சங்கம் - ஆணியே புடுங்க வேணாம்

சங்கம் ஆரம்பிச்சாச்சு, எப்படியும் நம்மளைதான் தலைவரா தேர்ந்தெடுப்பாங்க, தேர்ந்தெடுத்த உடனே மாலை போடுவாங்க, ஆயிரமா, ஐநூறா இல்ல அம்பது ரூபாயோட நிறுத்திக்குவாங்களா? அப்படி மாலை போடும்போது போட்டோ எடுக்க தயாரா இருக்குற பலாபட்டறையை எப்படி அப்புறப்படுத்துறது? மாலை போட்ட உடனே மைக்க குடுத்து பேச சொல்லுவாங்களே, என்ன பேசலாம்? அப்புறம் பொன்னாட வேற போத்துவாங்களே, அதெல்லாம் வீட்டுக்கு கொண்டு வர்றதுக்கு? லாரி ஏதாவது தேவைப்படுமா? ஆட்டோ போதுமா? ஒருவேளை தனியா ஒருத்தர் மட்டும் தலைவர்னு கிடையாது, ஒரு குழுதான்னு சொல்லிட்டாங்கன்னா எப்படி போஸ் குடுக்குறது, ரெண்டு பக்கம் நிக்கிற ஆட்களோட கைகோர்த்து நிக்கணுமா? இவங்க தனியா மேடை வேற போடமாட்டாங்களே, நம்ம உயரத்துக்கு யார் பக்கத்துல நின்னு போஸ் குடுத்தா சரியா இருக்கும்? ஒருவேளை நம்மள தலைவரா தேர்ந்தெடுக்கலைன்னா போராட்டம் நடத்த வலையுலக தாக்கரேவையும் மோடியையும் கூப்பிடலாமா? உள்ளூர் புலியையும் சிங்கை சிங்கத்தையும் கூப்பிடலாமா?

இதெல்லாம் தான் சங்க கூட்டத்துக்கு வந்துக்கிட்டு இருக்கும்போது மனதில் ஓடிக்கிட்டிருந்த கேள்விகள்.


ஆறு மணி கூட்டத்துக்கு அஞ்சே காலுக்கே போய் நின்னா, நம்மக்கு முன்னாடியே அஞ்சாறு பேரு வாசல்ல நின்னுக்கிட்டுருந்தாங்க, அண்ணன் தண்டோரவோட கிளம்பி போய் நாலு பாட்டில் தண்ணி வாங்கிட்டு வந்தேன். சொன்ன சொல் தவறாம சரியா ஆறு மணிக்கு கூட்டத்த ஆரம்பிச்சாங்க. உ.த. அண்ணன் கொண்டு வந்திருந்த சுண்டலை, ச்சே, பேப்பரை எல்லாருக்கும் குடுத்தாரு. படிச்சிட்டு நிமிரும் போதே, அண்ணாச்சி நாமெல்லாம் எதுக்காக கூடி இருக்கோம்னு ஒரு பேருரை நிகழ்த்த தொடங்கி இருந்தார். அவர் பேசி முடிச்சிட்டு மைக்கை அண்ணா சிவராமனிடம் கொடுத்தார், சிதைவுகள்னு ப்ளாகுக்கு பேர் வச்சாலும் வச்சார், என்னோட கனவுகளையெல்லாம் ஜல்லி ஜல்லியா சிதைக்கிற அளவுக்கு ஒரு கேள்வி கேட்டாரு பாருங்க "எதுக்காக நாம சங்கம் ஆரம்பிக்கணும்?". அப்புடியே, கண்ணுக்கு முன்னாடி ஒரு ஒளிவட்டம் தெரிஞ்சது. அடுத்து சில கேள்விகள் கேட்டாரு, அதுல முக்கியமான ஒன்னை தவிர மத்த எல்லாத்தையும் பத்தி எல்லாரும் பேசினாங்க, அந்த முக்கியமான கேள்விக்கு கடைசியா பேசின நர்சிம் தான் பதில் சொன்னாரு. அது என்னன்னு கடைசில சொல்றேன்.


அடுத்து வந்த ஞாநி பேசினாரு, பேசினாரு, பேசினாரு, ஸ்ஸ்ஸ்ஸபப்பா இதுக்கே எனக்கு மூச்சு வாங்குதே, அவரு அவரோட முப்பத்து வருட தொழிற்சங்க வாழ்க்கை பத்தி பேசிட்டு உக்காந்தாரு. திரும்பவும் எந்திரிச்சு இந்த கூட்டத்தை நடத்த ஒருங்கிணைப்பாளர் அவசியம்னு சொன்னாரு. சொன்னவரு, வரும்போது கோபிக்கிட்ட கேட்டு ஒரு கோட்டு வாங்கிட்டு வந்திருந்தா, நீயா நானாவோட தீவிர ரசிகரான நர்சிம்முக்கு போட்டு அவரையே ஒருங்கிணைக்க சொல்லியிருக்கலாமேன்னு எனக்கு தோணிச்சு. அவரு கேபிள் பக்கத்தில நின்னுக்கிட்டிருந்த என்னை பார்த்துதான் சொன்ன மாதிரி தோணிச்சி, "அய்யா, நானு பேசி களைச்சி போனா எல்லாருக்கும் காப்பி, தண்ணி குடுக்கதான் நின்னுக்கிட்டுருக்கேன்"னு சொல்லலாம்னு நினைச்சேன், அதுக்குள்ளே கடைசி பெஞ்சில் இருந்த கார்க்கி கூப்பிட்டாருன்னு அங்க போயிட்டேன். அப்புறம் வந்த எல்லாரும் பேசினாங்க, பேசினாங்க அவுங்களும் பேசினாங்க, உட்காந்திருந்தவுங்களும் அவுங்களுக்குள்ள பேசினாங்க. எந்த நேரமும் ஏதாவது நடக்கலாம்னு நினைச்ச நான் எஸ்கேப் ஆகுறதுக்கு வசதியா வாசல் பக்கத்தில நின்னுக்கிட்டேன்.


சரி, வெள்ளாட்டு போதும், இப்போ கொஞ்சம் சீரியஸ்


சிவராம் அண்ணன் கேட்ட கேள்விகள் நல்ல ஒரு ஆரம்பப்புள்ளி தான்,


எதுக்காக இப்போ இந்த சங்கம்?


இதுவரைக்கும் என்ன பண்ணிக்கிட்டிருக்கோம்? அதை எதுவாக மாத்தப் போறோம்? அல்லது


இதுவரைக்கும் பண்ணாத எந்த விஷயத்தை புதுசா சங்கம் மூலமா பண்ணப் போறோம்?

இதுக்கப்புறம் ஞாநி கேட்டது இதே தொனியில் தான் இருந்தது,


சங்கம் ஒரு சட்டரீதியான, பதிவுபெற்ற நிறுவனமாக செயல்படுமா?
சங்கம் போராட்டங்களை முன்னெடுத்து நடத்துமா?
சங்கம் உறுப்பினர்களை கட்டுப்படுத்துமா? ஆம் என்றால் எல்லை எது?

அடுத்து பேசிய எல்லாருமே இதை ஒட்டி / வெட்டியே பேசினார்கள்

இப்போ என்னோட (அங்கே கேட்க நினைத்து, நான் நினைத்ததன் சாரத்தை நர்சிம் பேசிவிட்டதால் கேட்காமல் விட்ட) சில கேள்விகள்,

ஆரம்பம் முதல்

எதற்கு சங்கம்?  சங்கம் என்ன செய்யப் போகிறது? என்ற தொனியில் பேசிய எல்லாரும் கூறிய ஒரு விஷயம், போராட்டம் மற்றும் பிரச்சனைகளை எதிர் கொள்வது,

எனக்குப் புரியவில்லை, எதற்காக நாம் போராட வேண்டும்? நமக்கு எதையும் எழுதும் கட்டற்ற சுதந்திரம் இருப்பதாக சொன்னார்கள், நம்முடைய சுதந்திரம் சினிமா விமர்சனம் வரையிலும், சாரு, ஜெமோ வரையிலும் கட்டற்றதாக இருக்கலாம், அரசியல் பேசினால் ஆட்டோ வரும் என்ற பயம் இல்லாத பதிவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்? இப்படி ஒரு சூழலில் போராட்டம் என்பதும், பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பதும் முதல் உரிமை கொடுக்கப் பட வேண்டிய விஷயங்களாக எனக்குத் தோன்றவில்லை.


போராட்டத்திற்காக மட்டும் தான் சங்கம் கூட்டவேண்டுமா? சந்தோஷத்தை, ரசனையை பகிர்ந்து கொள்ள சங்கம் கூட்டக் கூடாதா? அது ஒரு காஸ்மோ பாலிட்டன் க்ளப் போல் ஆகிவிடும் என்றால், அதில் என்ன தவறு?


பதிவெழுதுவதையே முழு நேரத் தொழிலாகக் கொண்ட, மாதம் ஒரு லட்சம் வருமானம் ஈட்டும் பதிவர் ஒருவரை IndiBlog பதிவர் சந்திப்பில் சந்தித்ததாகவும், நாமும் முயற்சித்தால் அதை இங்கே நடைமுறைப்படுத்தலாம் என்று லக்கி கூறியது, MLM செய்பவர் குரல் போல பலருக்கு ஒலித்திருக்கலாம், ஆனால் அதை நாம் ஏன் இங்கே நிஜமாக்க முயற்சிக்கக்கூடாது?


தீவிர இலக்கிய ரசனை என்பது சித்த வைத்தியம் போல குறிப்பிட்ட சிலரிடமே தங்கி விடாமல், பரவலாக்கலாமே? நான் சொல்வது பட்டறைகளைப் பற்றி அல்ல, கதை/கவிதை வாசிப்பு, அதை விளக்கி சொல்வது என்று மாதம் ஒரு நாள் செய்யலாமே, உதாரணமாக, எனக்கு ஜீரோடிகிரி புரியவில்லை அதனால் பிடிக்கவில்லை, அது ஒரு பின்நவீன நாவல், படிம நாவல் என்றெல்லாம் படித்துப் புரிந்து கொண்டவர்கள், எங்களுக்கும் கொஞ்சம் சொல்லலாமே


ரவிசங்கர் சங்கம் வேண்டாம் என்று பேசினார், ஏனென்றால் சும்மா இருப்பதே சுகம் என்றார், 
"அண்ணே இப்பவும் அதே தான் பண்ணபோறோம், சங்கம் ஆரம்பிக்கலாம் ஆனா ஆணி எதுவும் புடுங்கவே வேண்டாம்" (அப்பாடா தலைப்பை கொண்டு வந்தாச்சி),
இன்னொரு விஷயம், தன் கருத்தை சொல்லும்போது, சாமியார் சம்சாரியான கதை ஒன்றைச் சொன்னார், சாமியாரின் கோவணத்தை கடித்த எலியை ஒழிக்கத்தான் பூனை வாங்குவார் சாமியார், அது கடைசியில் சாமியாரை சம்சாரியாக்கி விடும், எதற்காக இதெல்லாம் என்று ஒருவர் கேட்கும் போது சாமியார் சொல்வார் "எல்லாம் ஒரு கோவணத்துக்காகத்தான்". ரவிசங்கர் இதை சொல்லும்போது முதலிலும் முடிவிலும் கோவணத்தை விட்டு விட்டார்,
"அண்ணே, சபை நாகரிகம் கருதி நீங்க அதை நீங்கள் விட்டிருந்தால், ஸாரி, சங்கத்தில் உறுப்பினராவதற்கு முன் உங்களுக்கு நிறைய பயிற்சி தேவைப்படும் :)"


கடைசியாக , சிவராம் அண்ணா முதலில் கேட்ட விஷயம்,

இந்த சங்கம் பதிவர்கள் பெயர், முகவரி, தொடர்பு விபரங்கள் கொண்ட தகவல் தளமாக மட்டுமே செயல்படப் போகிறதா?

அதில் என்ன தவறு இருக்க முடியும்? நம்மில் பெரும்பாலோர் எழுதுவது சுய இன்பத்துக்க்காகத்தான், நான் இங்கே வந்தது ஒத்த ரசனை உள்ள நண்பர்களைத் தேடியும், ரசனைக்குரிய விஷயங்களை பகிர்ந்து கொள்ளவும் தான், தற்போது ஆங்காங்கே சிறு சிறு குழுக்களாய் இருக்கும் ரசனைகள் ஒரு பெரிய குழுவாக சேர்வதில் என்ன தவறு? நான் சந்திப்புக்கு வரும்போது கவலைப்பட்ட ஒரு விஷயம், அந்த இடம் நமக்கு போதுமா என்பது தான், ஆனால் வந்தவர்கள் வெறும் ஐம்பது பேர்தான் என்பதில் எனக்கு ஏமாற்றமே! இங்கே எத்தனை குழுக்கள் இருக்கின்றன என்று எத்தனை பேருக்குத் தெரியும்?  அத்தனை குழுக்கள் பற்றிய விஷயங்களும் ஒரு இடத்தில் இருப்பது பெரியதொரு வசதி தானே. தகவல் தளமாக இயங்கும்பட்சத்தில், அதை நிர்வகிக்கவும், தினம்தோறும் அப்டேட் செய்யவும் ஒரு குழு தேவை தானே அது சங்கமாக இருந்துவிட்டுப் போகட்டுமே.

நர்சிம் கடைசியாக பேசும்போது, சமீபத்தில் அவருக்கு ஏற்பட்ட பிரச்சனை பற்றியும், அதில் பதிவர்கள் வானம்பாடி ஐயாவும், மருத்துவர் புருனோவும் செய்த உதவிகள் பற்றி சொன்னார். எனக்கு வானம்பாடிகள் ஐயாவை பதிவுகள் மூலம் பழக்கம் என்றாலும் அவரது தொழில் பற்றி எதுவும் தெரியாது. சங்கம் ஒரு தகவல் தளமாக இருந்தால் எதிகாலத்தில் பிரச்சனைகளில் உதவிக்கு ஆள் இருக்கு என்ற நிம்மதி கிடைக்கும்.

எது இல்லாவிட்டாலும், "பொண்ணு ஓகேதானே மாப்ள, நீ எதுக்கும் கவலைப்படாத, நாங்க நூறு பேர் இருக்கோம்,எத்தனை பேர் வந்தாலும் சமாளிக்கலாம்" என்று சொல்வதற்கு நண்பர் பட்டாளம் இருந்தால் சந்தோஷம் தானே.

அண்ணன் கேபிள் வாங்கிகொடுத்த இட்லியின் சுவையில் மயங்கியபடி இரவு பத்தரைக்கு வீடு வந்து சேர்ந்தேன்
 
 
நன்றி

சங்கர்

Friday, March 26, 2010

அங்காடி தெரு-விமர்சனம்

அங்காடி தெரு


மூணு மணிநேரம் ரெங்கநாதன் தெருவில் இருந்தது போல் இருந்தது அங்காடி தெரு.வசந்தபாலன் அவர்களின் மூன்றாவது படம்.படத்தின் களம் புதுசு.தி.நகர் ரெங்கநாதன் தெரு தான் படத்தின் ஹீரோ.சைதை ராஜில் முதல் காட்சிக்கு கூட்டம் ஓரளவுக்கு வந்தது.அங்கே பதிவர்கள் கேபிள் சங்கர் அண்ணனும் தண்டோரா அண்ணனும் வந்திருந்தார்கள்.


புதுமுக நாயகன் மகேஷ் அறிமுகம் மாதிரியே தெரியவில்லை.
மிக நன்றாக நடித்து இருக்கிறார்.நாயகி அஞ்சலி பத்தி நிறைய
சொல்லலாம்.நன்றாக நடிப்பு திறமையை வெளிப்படுத்தி
இருக்காங்க.கனா காணும் காலங்கள் பாண்டி நாயகனின்
நண்பனாக சில இடங்களில் பழைய மொக்கைகளை போட்டாலும்
பல இடங்களில் சிரிக்க வைக்கிறார்.


தி.நகர் சரவணா ஸ்டோர்ஸ் மாதிரி ஒரு கடையில் வேலை
செய்பவர்களின் வாழ்க்கையை யதார்த்தமாக படம் பிடித்திருந்தாலும்
பல விஷயங்களில் எனக்கு உடன்ப்பாடு இல்லை.முக்கியமா
ஊழியர்களுக்கு சாப்பாடு அளிக்கும் முதல் காட்சி.ஆனா
அடுத்த தடவை அந்த காட்சி வரும் போது எல்லோரும்
அமைதியாக வரிசையில் நின்று சாப்பிடுகிறார்கள்....


ரிச்சர்ட் அவர்களின் ஒளிப்பதிவு சூப்பர்.படத்துக்கு அடுத்த
பலம் ஜெயமோகன் அவர்களின் வசனம்...பல இடங்களில்
பளிச் பளிச் என்று இருக்கிறது.முக்கியமா மகேஷ் அஞ்சலி
தூங்கி கொண்டிருக்கும் இடத்தில் தேடி போய் பார்த்து
பேசுவாரே மற்றும் மாற்று திறன் படைத்த ஒருவருக்கு
குழந்தை பிறந்தவுடன் அதான் தாய் கூறும் வசனமும் செம!!

இரண்டு பாட்டு படத்துக்கு மிக அழகு, கடைசியாய் துணி
கடையில் ஆடும் பாட்டு படத்தின் வேகத்தை குறைக்கிறது
ஆனா கதைக்கு தேவையானது.முதல் பாதியில் சில இடத்தில்
கொட்டாவி விட்டேன் அதை வேற கேபிள் அண்ணன் பாத்துட்டு
"என்னப்பா கொட்டாவி விட்டுட்டு இருக்கே" என்று தண்டோரா
அண்ணனிடம் கூறி கலாய்க்க ஆரம்பித்து விட்டார்.


இந்த படம் பாசிடிவ் படம் அப்படின்னு சொல்லலாம்.....
இயக்குனர் சில இடங்களில் முக்கியமா அந்த கழிவறையை
பார்த்து கொள்பவர்,அந்த கண்ணு தெரியாத தாத்தா என்று
பலர் மூலம் நம்முள் நம்பிக்கை ஏற்படுத்துகிறார்.அதே
போல் வெங்கடேஷ் நாயகனிடம் "இந்த தெருவில் உனக்கு
யாரும் வேலை தராமாட்டங்க..பிச்சை தான் எடுக்கணும்"
என்பார்.அதற்கு நாயகன்"யானை வாழ்ற காட்டில் தான்
எறும்பும் வாழுது, நாங்களும் வாழ்ந்து காட்டுவோம்" என்று
பதில் அளிப்பார்....செம...!!


அங்காடி தெரு,சில இடங்களில் தொய்வு இருந்தாலும் ரசிக்கலாம். இந்த படம் கண்டிப்பா சுத்தமான மசாலா காதலர்களுக்கு ஏற்றது அல்ல!! தண்டோரா அண்ணன் சொன்ன அதே கருத்தை நானும் சொல்றேன் கொடுத்த அம்பது ரூபாய்க்கு படம் வொர்த்!!


தியேட்டர் நொறுக்ஸ்:

# சைதை ராஜை தல தியேட்டர்னு சொல்லலாம்,அட எங்க
உட்கார்ந்தாலும் யார் தலையாவது மறைச்சுகிட்டே இருக்கும்னு சொன்னேங்க!!

# சூப்பர்வைசர் ஆக இயக்குனர் வெங்கடேஷ், மனுஷன் முதல்
காட்சியில் இருந்து தொடர்ந்து மூர்க்கத்தை காட்டிவிட்டு பின்பு இன்டெர்வல் முடிந்தவுடன் ஆளை காணோம்...நான் ஒரு அரை மணி நேரம் கழிச்சு கேபிள் அண்ணன்கிட்ட "எங்கே அண்ணே வெங்கடேஷை காணோம்??" என்று கேட்டேன்."இதோ இது அவர் வர வேண்டிய சீன்தான்" என்றார். அண்ணன் சொன்ன மாதிரி வெங்கடேஷ் அந்த சீன் வந்து தலை காட்டி விட்டு போனார்.

# அப்புறம் சில இடங்களில் நானும் கேபிள் அண்ணனும் படத்தை பற்றி மாத்தி மாத்தி கேள்வி கேட்டுட்டு இருந்தோம்
என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெட்லி பஞ்ச்:

அங்காடி தெரு - ஒரு ரவுண்ட் அடிச்சுட்டு வரலாம்.


இந்த விமர்சனம் பல பேரை சென்று அடைய ஒட்டு போடுங்கள்,
முடிந்தால் பின்னூட்டம் போடுங்கள்!!


நன்றி
ஜெட்லி

நன்றி:cinesnacks

Thursday, March 25, 2010

ஆலோசனை / உதவி தேவை

"இப்பவே சொல்லிடுதேன், அந்த வீட்டை வாங்காதீரும், நாங்க அதை யாருக்கும் விக்க விடமாட்டோம், உங்க பெரியப்பா அதை வித்தா, ஒண்ணு எங்களுக்கு விக்கணும் இல்ல அது இடிஞ்சு விழணும். நீரு வெலகிக்கிடும், மீறி வாங்கினா, வில்லங்கமாகிப் போகும், இப்பமே சொல்லிட்டேன், அப்புறம் வருத்தப்படாதீரும்.""நான் அந்த வீட்ட வாங்க முழு பணமும் ஆறு மாசம் முந்தியே குடுத்தாச்சு, பத்திரம் பதிவு பண்ண வேண்டியது மட்டும் தான் பாக்கி, இப்போ வந்து இப்படி பேசினா என்ன நியாயம்? "


"நியாய அநியாயமெல்லாம் பேசாதீரும், உங்க பெரியப்பா, அந்த வீட்டுக்கு அடுத்த வீட்டை எங்களுக்கு விக்கும்போது, இந்த வீட்டையும் எங்களுக்கு தரேன்னு சொல்லியிருக்காரு, நீங்கன்னு இல்ல வேற யாரு அந்த வீட்ட வாங்கினாலும் நான் விவகாரம் பண்ணுவேன், அவ்வளவு தான் சொல்லுவேன்"

"பெரியப்பா அப்படி சொல்லியிருந்தா நீங்க அவர் கிட்டத்தான் பேசணும்,"

"அவர் கிட்ட நாங்க பேசிக்கிடுதோம், நீங்க இதிலேருந்து விலகிக்கிடுங்க, அவ்வளவு தான்"

"நான் இந்த வீட்ட வாங்கி பேங்குல அடமானம் வச்சு என் தங்கச்சி கல்யாணத்துக்குக் கடன் வாங்கலாம்னு இருந்தேன், நீங்க அந்தப் பணத்தைக் குடுத்துட்டு வீட்ட வாங்கிக்குங்க"

"இந்த மாதிரி அர்த்தமில்லாத பேச்சு எங்கிட்ட பேசாதீரும், நீரு விலகிக்கிடுறது தான் நல்லது, மீறி வாங்கினா, வந்து இருக்க விட மாட்டோம்,"
அம்பாசமுத்திரம் அருகே ரெங்கசமுத்திரம் என்ற சிறு கிராமம் தான் என் சொந்த ஊர். ஊரை விட்டு, என் கல்லூரி படிப்பு செலவுக்காக குடியிருந்த வீட்டை விற்று, குடும்பத்தோடு இடம் பெயர்ந்து, சென்னை வந்து பத்து வருடங்கள் ஆகிவிட்டன. துடிக்கும் மனதை சமாதானப்படுத்த, ஆண்டுக்கு ஒரு தடவையாவது ஊரைச் சென்று பார்த்து வரும் ஒவ்வொரு முறையும், அங்கே சொந்த வீடு என்றொரு பிடிப்பு இல்லாதது மனதில் உறுத்திக் கொண்டே இருக்கும்.


சென்ற வருடம் என் ஒன்றுவிட்ட பெரியப்பா வீட்டை விற்க முன்வந்த போது, ஒரு வழியாக இந்த வருத்தம் முடிவுக்கு வந்துவிடும் என்று தோன்றியது. இரண்டு தவணைகளில் பணமும் கொடுத்து முடித்து நான்கு மாதங்கள் ஆகிவிட்டது. அப்படி இப்படியென்று நாட்கள் ஓடி, ஒரு வழியாக, பத்திரம் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை கவனிக்கலாம் என்று கடந்த வாரம் ஊருக்கு புறப்பட்டுப் போன அப்பா, இரண்டாம் நாள் திரும்பி வந்து சொன்னது “நமக்கு அந்த வீடு வேண்டாம்டா, பக்கத்து வீட்டுக்காரன் பிரச்சனை பண்றான்”கடந்த வெள்ளிக்கிழமை அவசர பயணமாக ஊருக்கு புறப்பட்டேன். கல்லிடைகுறிச்சியில் இருக்கும் பெரியப்பாவை போனில் கூப்பிட்டு வந்திருப்பதை சொன்னபோது, ”நான் மதுரைக்கு வந்திருக்கேன், திரும்பி வர நாலு நாள் ஆகும், நீ அங்க போய் அவங்கிட்ட எதுவும் பிரச்சனை பண்ணிடாதே” என்றார். அங்கே போய், பார்த்து பேசிய போது நடந்த உரையாடல்தான் மேலே உள்ளது.


பெரியப்பா கறாராகப் பேசியோ, வேறு வழியிலோ பிரச்சனையை தீர்த்து வைப்பதாகத் தோன்றவில்லை.


நானோ, என் அப்பா, அம்மாவோ வருடத்திற்கு ஒன்றிரண்டு முறை தான் ஊருக்கு சென்று பார்க்க முடியும்வீடு அவர்களுக்கு கிடைக்கப்போவதில்லை என்று ஆகிவிட்டால், நாங்கள் இங்கே இருக்கும் போது, அவர்கள் அங்கே வீட்டை ஏதாவது செய்து விடுவார்களோ (ஓட்டை பிரிப்பது, சுவற்றை இடிப்பது) என்ற பயமும் உள்ளது


இந்த நிலையில் நான் என்ன செய்ய வேண்டும்?


துணிந்து வீட்டை வாங்கி விடலாமா? அல்லது வேண்டாம் என்று பெரியப்பாவிடம் சொல்லி பணத்தை திருப்பி வாங்கி விடலாமா?


எங்களை மிரட்டிப் பேசிய அவர்கள் மேல் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கலாமா? (இந்த உரையாடல், அவர் வீட்டினுள் நடந்தது, சாட்சிகள் ஏதும் கிடையாது)


வீட்டை வாங்கிவிடுவதென்றால், விவகாரம் ஏதும் நடக்காது இருக்கவும், அவர்களிடமிருந்து வீட்டைக் காப்பாற்றவும் சட்ட நடவடிக்கைகள் ஏதாவது முன்கூட்டியே எடுக்க முடியுமா?


விபரம் அறிந்தவர்கள் ஆலோசனைகள் சொல்லி உதவுங்கள்


நன்றி
சங்கர்

Wednesday, March 24, 2010

நான் ஏன் கவிதை எழுத கூடாது....??

நான் ஏன் கவிதை எழுத கூடாது....??
முன்தினம் இரவு தூங்கும் போது நானே எனக்கு கேட்ட கேள்வி இது.அது நான் ஏன் கவிதை எழுத கூடாது?? "டேய் ஜெட்லி ஏற்கனவே உன் அக்கப்போர் தாங்கல இதுல கவிதை வேறயா..." என்று நீங்கள் நினைப்பது
எனக்கு புரியாமல் இல்லை.இருந்தாலும் கடந்த ஒரு நாளா என் அறை முழுவதும் கவிதை கவிதை என்று சுவர்களில் இருந்து சத்தம் வருவது போல் ஒரு பிரம்மை!!

நான் இதற்கு முன் சில மாதங்கள் முன்பு ஒரு கவிதை எழுதினேன்.அதை கவிதை என்று கடைசி வரை என் நண்பன் ஒத்துகொள்ளவில்லை.ஏதோ ஏதோ பல்கலைகழகத்துக்கு எல்லாம் அங்கீகாரம் கிடைத்த போதும் என் கவிதைக்கு அங்கீகாரம் அப்போது கிடைக்கததால் நான் கவிதை எழுதுவதை
விட்டுவிட்டேன்.இதோ அந்த கவிதை உங்கள் பார்வைக்கு....
யாரும் டென்ஷன் ஆகாதிங்க...பீ கூல்....

***********************************

நான் அவளை பார்த்தேன்


அவள் என்னை பார்த்தாள்


பூ போல் சிரித்தாள்


செல்லமாய் வெட்கப்பட்டாள்


என் உடம்பு சிலிர்த்தது


அவள் அருகில் சென்றேன்


பின்பு தான் புரிந்தது


அவள் ஹெட் போனில் யாருடுனோ


பேசி கொண்டிரிக்கிறாள் என்று...........!!

***********************************************

குரு கில்மானந்தாவின் யோசனை:

தீடிர்னு கவிதை எழுதணும் என்ற வீபரித ஆசை வந்தவுடன் என் குரு கில்மானந்தாவிடம் ஆசி வாங்க சென்றேன்.அப்போது தான் அவர் K.F.STRONG பீரை தன் வாயால் ஓபன் செய்தார். நான் கவிதை எழுத போறேன் சாமி என்றேன்.அவர் காதில் வாங்கினாலும் முகத்தில் எந்த வித ரியாக்சன் காட்டாமல் பீரை க்ளாசில் ஊற்ற ஆரம்பித்தார்,பீர் பொங்கி க்ளாசை
விட்டு வழிந்தது.அப்போதும் குரு நிறுத்தாமல் ஊற்றி கொண்டே இருந்தார்.....

அப்போது நான் "சாமி கிளாஸ் தான் புல் ஆச்சி இல்ல.... அப்புறம் ஏன் இன்னும் ஊத்திக்கிட்டே இருக்கீங்க?"என்றேன்.

உடனே குரு "அது போல தான்ப்பா நீ கவிதை எழுத போறேன்னு சொல்ற ஆசையும்....பீர்ல இருந்து வர நுரை ஒரு நிமிஷம் கூட க்ளாசில் இருக்காது...அது போல தான் உன் ஆசையும்....தயவு செய்து மக்களுக்கு நல்லது செய்றதா நினைச்சு அந்த கவிதை எழுதனும்னு நினைக்கிற அந்த எண்ணத்தை விட்டுரு ஜெட்லி...." என்றார்.

"முடியாது சாமி.....நான் ஆசைப்படறது தப்பா...??" என்று கேட்டேன்.

உடனே குரு "ஆசைப்படறது தப்பு இல்ல.அதுக்குனு அளவு இருக்கு.இதை தான் ஸ்ரீ ஸ்ரீ செல்வராகவா சுவாமிகள் 'என் எதிரே ரெண்டு பாப்பா கை வச்சா என்ன தப்பா' என்று மனிதனின் ஆசையின் அளவுகோலை மிக அழகாக சொன்னார்" என்று முடித்தார்.

சரி இனிமே இவர்கிட்ட யோசனை கேட்டா வேலைக்கு ஆகாது என்று அங்கிருந்து கிளம்பினேன்!!


****************************************************************

பலா(ன)பட்டறை கவிஞர் ஷங்கர் அவர்களின் யோசனை:

"அண்ணே கவிதை எழுதணும் ஏதாவது டிப்ஸ் சொல்லுங்க"
என்று அண்ணன் பலாபட்டறை ஷங்கரிடம் கேட்டேன்....

"முதல்ல நாம கவிதைக்கு வைக்கிற டைட்டில் பேரே புரியக்கூடாது...அப்புறம் கவிதையே புரியக்கூடாது....."
என்றார் அவர்.

"என்ன அண்ணே கவிதை புரியலைனா எப்படி.....?" என்றேன் நான்.

"தம்பி...கவிதை புரிஞ்சா அந்த பதிவோட முடிஞ்சு போய்டும்...
ஆனா புரியலைன்னு வை இன்னொரு பதிவு போட்டு விளக்கவுரை கொடுத்தடலாம்" என்று பயங்கர ஐடியா கொடுத்தார்.

"என்ன இருந்தாலும்?" என்று இழுத்தேன்


"என்ன ஐடியா பிடிக்கலையா??இல்ல ரெண்டு பதிவோட கவிதை முடிஞ்சிடுமோன்னு...பயப்படுறியா அவ்ளோதானே, கவலைய விடு, அப்படியே இத தொடர நான் அழைப்பவர்கள்னு ஒரு 10 பேர கூப்பிட்டுவிடு.." முடிக்கும் முன்பே நான்


"என்னது கவிதைய தொடர்றதா ரொம்ப டெர்ரர்ரா இருக்கேண்ணே.."
என்றேன் விழிபிதுங்க.....


"அட வரலாறு முக்கியமில்லையா?? இது வரைக்கும் யாராவது கவிதை தொடர்பதிவுன்னு போட்டுருக்காங்களா பாரு..இதுக்கு தான் ஊருக்குள்ள என்னை மாதிரி ஐடியா'மணி' வேணும்ங்கறது" என்றார் ஐடியாவாக

"ஆஹா செம ஐடியாணே இது" என்று அங்கிருந்து கிளம்பினேன்!!

ஷங்கர் அண்ணன்கிட்ட பேசிட்டு வந்த அன்னைக்கு நைட் குப்புற
மற்றும் மல்லாக்க படுத்து யோசித்ததில் ஒரு கவிதை தோணிச்சு
அது இதோ........

(caution: following content may sema mokkai or marana mokkai...)

மேல பறக்குது காகா
ரோட்டில் பொண்ணு போற சோக்கா
எண்ணெய் வச்சா தலைக்கு போடணும் சீக்கா
கொய்யா மரத்தில் இருக்கும் கொய்யாக்கா
நான் மரம் ஏறி பறிச்சா எனக்கு மூணு பழம் தரியாக்கா!!இந்த கவிதையை எங்க பக்கத்துக்கு வீட்டு காது மற்றும் கண் பொக்கையான கிழவிக்கு படித்து காட்டியதில் படுத்த படுக்கை ஆகி விட்டார் என்பதும் மேலும் இந்த கவிதையை ரெண்டாம் வகுப்பு தமிழ் பாடத்தில் சேர்க்க சொல்லி டி.ஆர் தலைமையில் விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்த போறோம் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.


கவுண்டர் ஸ்டைலில் என் மனம்
"நான் கவிஞர்ங்கோ....ஐயோ நான் கவிஞர்ங்கோ...
நானும் கவிஞர்ங்கோ....." ஹி ஹே ஹே ஹி......


************************************************

அடுத்து வரும் வாரங்களில் வர போகிற தலைப்புகள்....

# நான் ஏன் சாமியார் ஆக கூடாது??

# நான் ஏன் மாஸ்டர்(டீ,குங்க்பூ,கராத்தே,பரோட்டா) ஆக கூடாது??


விரைவில்.....


தொடர்ந்து நான் கவிதை எழுத வேண்டாம்னு நீங்க நினைச்சா
கண்டிப்பா ஒட்டு போடுங்க.....பின்னூட்டத்தில் விவாதிப்போம்!!

ஜெட்லி....

Saturday, March 20, 2010

கச்சேரி ஆரம்பத்தை முன்தினம் பார்த்தேனே......2 இன் 1 பார்வை.

கச்சேரி ஆரம்பத்தை முன்தினம் பார்த்தேனே......"தீடிர்னு ஒரு நாள் ஹோட்டல்க்கு போறோம் அங்கே பூரி
ஆர்டர் பண்றோம்.வர ரெண்டு பூரியில ஒரு பூரி ஊப்பி
இன்னொரு பூரி சப்பி இருந்தாலும் நாம ரெண்டையும்
சாப்பிடறது இல்லையா அது போல தான் நம்ம வாழ்க்கையும்..!"

சாரிங்க,கச்சேரி ஆரம்பம் பார்த்த எபெக்ட்ல இப்படி எழுதிட்டேன்.
இந்த மாதிரி தான் ஜீவாவும் படத்தில் தாறுமாறா கருத்து
சொல்றாரு,பஞ்ச் சொல்றாரு இதை சீரியஸ்ஆ வச்சாங்களா
இல்ல காமெடிக்கு வச்சாங்களானு சௌத்ரி அவர்களுக்கே வெளிச்சம்.
கதையா..பிரசாந்த்,சிநேகா நடிச்ச ஆயுதம் மற்றும் நம்ம இளைய
தளபதியின் அப்பா இயக்கிய பந்தயம் ரெண்டு படத்தையும்
கலந்து கட்டி அடிச்சி இருக்காங்க.


சாம்பிள் பன்ச்:

" கை நீட்டுனா பிச்சை போடுவேன்....
கை ஓங்குனா உடைச்சு புடுவேன்...!"


சமீபகாலமா தமிழ் சினிமாவின் செண்டிமெண்ட் மற்றும்
வழக்கமான காட்சிகளை படத்தில் வைத்து அதை அவர்களே கிண்டல் அடிப்பார்கள் இதுவும் அது மாதிரி தான் ஸ்டார்ட் ஆச்சு.
ஆனா போக போக அந்த வழக்கமான கதையில் அவங்களும்
சிக்கி நம்மையும் சிக்க வச்சி சின்னாபின்னமா ஆக்கிட்டாங்க....

வடிவேலு, சில சமயங்களில் சிரிக்க வைக்கிறார் அவ்வளவுதான்..
கிரேன் மனோகர்,கிங்காங் சில டைமிங் காமெடிகள் நம்மை
சிரிக்க வைக்கின்றன.பூனம் பாஜ்வா அப்படியே தெனாவட்டில்
பார்த்த மாதிரி இருக்காங்க.சக்ரவர்த்தி பாவம் சார் இவரு...
இன்னைக்கு பேப்பர்ல கூட எனக்கு சூப்பர் ரோல்னு பேட்டி
கொடுத்து இருந்தார் ஆனா இவரை டம்மி பீஸ் ஆக்கிட்டாங்க!!ஜீவா, தன்னை கமர்சியல் ஹீரோவாக நிலை நிறுத்த இது
போன்று மசாலா படங்களில் நடித்து வருகிறார்.ஜீவாவை
இந்த படத்தில் ரசித்து இருந்துருக்கலாம் கொஞ்சம் அடக்கி
வாசித்து இருந்தால்.ஆனா ஒரு காட்சியில் டைமிங் காமெடி
மிகவும் ரசித்து சிரித்தேன் அது அந்த சப் வேயில் சாப்பிடும்
காட்சி.படத்தில் சில பைட் மற்றும் சில பாடல் காட்சிகள்
தேவை இல்லாதது.கிளைமாக்ஸ்இல் வசனம் பேசியே
வில்லனிடம் இருந்து கதாநாயகியை காப்பாற்றுகிறார்
என்பது குறிப்பிடத்தக்கது!!


தியேட்டர் நொறுக்ஸ்:

# ரொம்ப நாள் கழிச்சு நைட் ஷோ படத்துக்கு போனேன்...
நல்ல கூட்டம்.படம் இன்டெர்வல் வரைக்கும் கொஞ்சம்
கலகலப்பா போச்சு....ஆனா அதுக்கே நாலைஞ்சு டிக்கெட்
மட்டையாகி போச்சு....! எனக்கு இன்டெர்வல்க்கு பிறகு
கண்ணு சொருக ஆரம்பிச்சது.....

# ஒரு காட்சியில் சக்ரவர்த்தி பூனம் வீட்டுக்கு போய் அவள்
இல்லை என்றவுடன் வெளியே வந்துவிடுவார்.அங்கே காத்திருக்கும்
ஜீவா "என்ன அண்ணே கங்குலி மாதிரி போன உடனே வந்துட்டே" என்பார்...அப்போது தியேட்டரில் ஜீவாக்கு எதிராக பல குரல்கள் எழுந்தன...

# படம் முடியற முன்னாடி ஆர்த்திகிட்ட நம்ம ஜீவா காதல்
பத்தி ஒரு அஞ்சு நிமிஷம் நிக்காம மொக்கை போடுவாரு
பாருங்க.....ஐயோ சாமி....என்று தியேட்டரே அமைதியாய்
இருந்த போது படம் பார்த்து கொண்டிருந்த ஒரு குடிமகன் மட்டும் ஜீவா சொல்ற வசனம் மற்றும் கருத்துக்கு... ஆ..ஆ..ஆ என்று சவுண்ட் விட்டு கொண்டிருந்தார்.

ஜெட்லி பன்ச்:

கச்சேரி ஆரம்பம் : ஸ்பீக்கர்ல ஓவர் சவுண்ட்...!!

************************************************

முன்தினம் பார்த்தேனே.....
இந்த படத்தில் குத்து பாட்டு இல்லை,அலற வைக்கும் சண்டை
காட்சிகள் இல்லை,முகம் சுளிக்க வைக்கும் காட்சிகளும் இல்லை,
ஹீரோவுக்கு பன்ச் வசனம் இல்லை அது போல் படத்தில் சுவாரசியமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது!!

படம் ரெண்டு மணி நேரம் தான் என்றாலும் படம் எப்போ
முடியும் அப்படின்னு கேட்க வைக்கிறது திரைக்கதை.படம்
ஆமையை விட கொஞ்ச மெதுவா போது அவ்வளவு தான்.
உன்னாலே உன்னாலே மாதிரி ட்ரை பண்ணி இருக்காங்க
அப்படின்னு சொல்லலாம் ஆனா எல்லாமே பணால் ஆகி
போச்சி.....

டி.வி.சீரியல் நடிகர் சாய் பிரசாந்த் அந்த சல்சா ஜோடி செலக்ட்
பண்ணும் இடத்தில் சிரிக்க வைக்கிறார்.மிச்ச டைம் அவரு
காமெடி பண்றேன்னு முன்னாடியே சொல்லி இருந்தார்னா
சிரிச்சிருக்கலாம்......ஹீரோ சஞ்சய் நல்லாத்தான் இருக்காரு...
பார்ப்போம் அடுத்த படத்தில்....


கதாநாயகி...சத்தியமா என்ன பேருன்னு எனக்கு தெரியலைங்க...
மூணு கதாநாயகினு சொன்னாங்க ஆனா நான் ரெண்டு பேரை
தான் பார்த்தேன்.அதுவும் எல்லாம் ஒரே முக அமைப்பில்
இருப்பதனால் கொஞ்சம் கஷ்டம் ஆயிருச்சு.அப்புறம் கேரக்டர்
பேரு கூட மறந்துட்டேன்....அவ்வளவு குழப்பம்!!

தியேட்டர் நொறுக்ஸ்:

நொறுக்ஸ் எழுதுற அளவுக்கு தியேட்டர்ல ஆளு இல்லைன்னு
தான் சொல்லணும்.என்ன என்னையும் சேர்த்து இருபது பேர்
இருந்துருப்பாங்க சாய்சாந்தியில்.அதிலும் அஞ்சு ஜோடிகள் என்பது
குறிப்பிடத்தக்கது....நான் ஸ்க்ரீனை மட்டும்தாம்பா பார்த்தேன்....!!


காதலர்கள் கொண்டாட ஒரு படம் முன்தினம் பார்த்தேனே...
கண்டிப்பா படத்தை பார்த்து அல்ல!!


ஒரு வேளை வடிவேலு இந்த படத்தை பார்த்தால்...
படம் ஆரம்பிக்கும் முன் படியில் ஏறும் போது.....

" மாப்பு....மாப்பு....வச்சிட்டாங்கடா ஆப்பு....
அடேய் நானாதான் தனியா வந்து சிக்கிட்டேனா,...."

படம் முடிந்து வெளியே வரும்போது....தனக்கு தானே...

"உன்னை எவன்டா முந்தாநேத்து பார்க்க சொன்னது....
இனிமே பாப்பியா...இனிமே பாப்பியா..
பீ கேர்புல்"(என்னை சொன்னேன்!!).

ஜெட்லி பன்ச்:

முன்தினம் பார்த்தேனே - பார்க்காமலே இருந்திருக்கலாம்!!


இந்த விமர்சனம் பல மக்களை சென்று அடைய ஒட்டு மற்றும்
பின்னூட்டம் போடுமாறு கேட்டுகொள்கிறோம்.....ஜெட்லி.....

நன்றி:indiaglitz

Wednesday, March 17, 2010

லீலைகள்....!!

லீலைகள்....!!


லீலைகள் என்ற தலைப்பில் உங்களிடம் ஒரு ரெகார்ட் அல்லது
ப்ராஜெக்ட் சமர்ப்பிக்கிறேன்......எக்ஸாம் டைம்ல அதான் இந்த
பிட்.......!!

INDEX

1.நித்ய லீலை

2.லீலை

3.ராஜலீலை

4.கிருஷ்ணலீலை


***************************************************************

நித்ய லீலை :

என்ன சொல்றதனு எனக்கு தெரியிலங்க...இவரு படம் டி.வி.யில் ஓடுன அடுத்த நாள் காலையில் சில நண்பர்கள் எப்போ விமர்சனம் போட போற என்று கேட்டார்கள். இப்படி கேட்ட நண்பர்கள் மேல் கூட எனக்கு வருத்தம் இல்லங்க, எனக்கு நித்யானந்தா மேலதான் ஏகப்பட்ட வருத்தம்ங்க....
அவரு இப்படி பண்ணியிருக்க கூடாதுங்க, முக்கியமான காட்சியில் லைட் ஆப் பண்ணினாரு பாருங்க அது தான் என் வருத்தத்துக்கு காரணம்ங்க...!! அகில உலக காஞ்சிபுரம் தேவநாதன் ரசிகர் மன்றம் சார்பில் இதை லைட்டாக கண்டிக்கிறோம்ங்க.மற்றபடி அவரை பத்தி எனக்கு ஒன்னும் தெரியாதுங்க.திருவண்ணாமலை கிரிவலம் போகும் போது கூட அவரு ஆசிரமம் வந்தா ரெண்டு அடி தள்ளியே தான் நடப்பேன்ங்க...!

அப்புறம் நக்கீரன் புத்தகத்தின் விளம்பர போஸ்டர்களை பத்தி
சொல்லவே வேண்டாம்...கிழே சாம்பிள் தான்....இந்த போஸ்டரை
நாலஞ்சு பேரு சுத்தி நின்னு படிச்சிட்டு இருந்தாங்க...கஷ்டப்பட்டு
எடுத்தேன்......


இதே போல் ரெண்டு நாள் முன்னாடி "சாமியாருக்கு பேன் பார்க்கும் ரஞ்சிதா - இதுவரை வெளிவராத அதிர்ச்சி புகைப்படங்கள்"!! பேன் பார்ப்பதில் என்ன அதிர்ச்சி இருக்குதுன்னு சத்தியமா எனக்கு தெரியலைங்க..அப்புறம் சாமியார் பத்தி ரெண்டாவது நியூஸ் நக்கீரன்ல வரும்போது பேப்பர்கடைக்காரர் வேலை செய்யும் பையனிடம் "நக்கீரன் ஹாட் நியூஸ் தம்பி...மக்கள் டபுள் ரேட்னா கூட வாங்குவாங்க.." என்று கிண்டல் அடித்தார்.ஆனா அது கிண்டல் இல்லை அது தான் உண்மை.இன்னும் வரும் வாரங்களில் என்ன என்ன அதிர்ச்சி செய்தி வரபோகுதோ..!!


*******************************************************

லீலை

லீலை படத்தில் வரும் பாடல் ஜில்லென்ற ஒரு கலவரம் இசையமைத்தவர் சதீஷ் சக்கரவர்த்தி இப்போதைக்கு இது மட்டும் தான் நினைவில் இருக்கு....யாரு இயக்குனர்,நடிகர்கள் என்பதெல்லாம் மறந்து பல மாசம் ஆச்சு.தயவு செய்து அந்த பாட்டின் வீடியோ கிளிப்பிங்க்ஸை மட்டுமாவது டி.வி.யில் போட்டால் சந்தோஷப்படுவேன்....!படம் பார்க்கும் ஆர்வம்ல இல்ல,கேட்க நன்றாக இருக்கும் அந்த பாட்டை எப்படி
ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள் என்று பார்க்கத்தான்......

**********************************************************
ராஜலீலை :

இந்த படத்தை அக்குவேறா ஆணிவேறா ஏற்கனவே பிரிச்சாச்சு.
இன்னைக்கு இந்த படத்தோட 76 வது நாள்...!தொடர்ச்சியா ஒரு
தியேட்டரில் ஒட்டாமல் ஊரில் இருக்கும் பல அட்டு தியேட்டர்களில்
இணைந்த வாரமாக ஒட்டி படத்தை கண்டிப்பா நூறு நாள் ஒட்டி
விடுவார்கள்.இந்த படத்தை நல்லா இல்லைன்னு பல பேர்
சொல்லிட்டாங்க...இருந்தாலும் இவங்க விளம்பரம் தான் தாங்க
முடியல....!


ஏற்கனவே ராஜலீலை குறித்து எழுதியதை படிக்க கிளிக் செய்யவும்
ராஜலீலையும் தேவலீலையும்!!எது எப்படியோ நான் முன்னாடி ராஜலீலை லீலை பத்தி பதிவு போட்டதுக்கு அப்புறம் தான் விதம் விதமா தபு ஸ்டில் பேப்பரில் வந்தது என்று "ஜோதி"கிருஷ்ணா போனில் தெரிவித்தார்.வடை சூடும் ஆயா நாம் ஆர்ப்பாட்டம் நடத்த இடம் ஒதுக்கி தராமலேயே நமக்கு கிடைத்த வெற்றி இது...!!வருங்காலத்தில் இது போன்ற ஆக்கபூர்வமான விஷயங்களுக்கு
நமது போராட்ட அறிவிப்பு தொடரும் என தெரிவித்து கொள்கிறோம்.


*************************************************

கிருஷ்ணலீலை:

நம் தமிழ் திரையுலகில் ஆஸ்கார் வாங்க தகுதியுள்ள ஒரே
நாயகன் நடித்த படம் தான் கிருஷ்ணலீலை.
பல முகபாவனைகளை அட் ஏ டைம் காட்டும் ஒரே ஹீரோ
ஜீவன் தான் அது.இவர் கடைசியா நடிச்ச ஸாரி விக் வச்சி
வந்த நான் அவனில்லை பார்ட் 2வை பார்த்து மெய்
மறந்தவர்களில் நானும் ஒருவன்....!!யோவ்...என்னைய நீ இப்ப கிருஷ்ணலீலை பத்தி ஏன் இப்ப
எழுதுறனு நீங்க கேக்குறது எனக்கு புரியுது.காரணம்
லீலைகள்னு தலைப்பு வச்சாச்சு வேற என்ன பண்றது
மூணோட நாலா இருந்துட்டு போட்டுமே.....

கிருஷ்ணலீலையும் கந்தசாமியும் ஒரே கதையாம்....அதான்
படத்தை லேட் ரீலீஸ் பண்றாங்கனு கேள்விப்பட்டேன்..
கந்தசாமி படமே நாலைஞ்சு படத்தோட சேர்ந்த கதை அப்போ
கிருஷ்ணலீலை......??


********************************************************

இது போன்ற பொது அறிவு செய்திகள் அனைத்து மக்களிடமும்
சென்று அடைய ஒட்டு போடுமாறு கேட்டுகொள்கிறோம்.......

லீலைகள் தொடரும்........

ஜெட்லி

Monday, March 15, 2010

இது எங்க ஏரியா: பார்ட்-5 (சென்னை-28)

இது எங்க ஏரியா: பார்ட்-5 (சென்னை-28)

டிஸ்கி:


(நான் இந்த பதிவில் போட்டுள்ள ரெண்டு ஹோட்டல்களில்
இருந்து எனக்கு எந்த விதமான கமிஷன்'ஒ' எக்ஸ்ட்ரா
சிக்கன் பீஸ்'ஒ' தரவில்லை என்பதை வருத்ததுடன்
தெரிவித்து கொள்கிறேன்)


*******************************************

நமக்கு சென்னை-28 என்றவுடன் நினைவுக்கு வருவது
கண்டிப்பாக வெங்கட்பிரபுவின் படமாகதான் இருக்கும்.
சென்னை-28 என்பது ரெண்டு ஏரியாக்களை உள்ளடக்கியது.
ஒன்று மந்தைவெளி மற்றொன்று ஆர்.ஏ.புரம் என்று
அழைக்கப்படும் ராஜா அண்ணாமலைப்புரம்.

ராஜா அண்ணாமலைப்புரம்:

காஸ்ட்லியான ஏரியா என்று சொல்லலாம்.பல பிரபலங்கள்
பேர் வசித்து வரும் போட் ஹவுஸ் போன்ற இடங்களை உள்ளடக்கியது இந்த ஆர்.ஏ.புரம்.முன்னாடி இந்த ஏரியாவில் பூந்து டிராபிக் இல்லாமல் மயிலாப்பூர் மற்றும் ராயபேட்டை போன்ற இடங்களுக்கு ஈஸியாக போகலாம், ஆனால் இப்போது நிலைமையே வேறு...பீக் ஹவுர்ஸ்இல்
செம டிராபிக்.அதுவும் இல்லாமல் இப்போது பல இடங்கள் ஒரு வழி பாதையாக மாற்றிவிட்டார்கள்.அடையார் சத்யா ஸ்டுடியோ ரைட்டில்
இருக்கும் தினகரன் சாலையில் அமைந்துள்ள மேயர் ராமநாதன் ஹால்,ஐயப்பன் கோவில் எல்லாமே சென்னை-28 தான்.


அப்புறம் முக்கியமான இடம்,ரோட்டு முனையில ஏ.சி.டாஸ்மாக் இருக்கும் அங்கே போகாதிங்க அதை தாண்டி வந்தா சங்கீதாஹோட்டல் இருக்கும் அதையும் தாண்டி வந்தா எதிர்ல நம்ம லட்சுமி சரவணா பாஸ்ட் பூட் கடை இருக்கும்.பக்கா லோக்கல் கடை,வார இறுதி நாட்களில் கூட்டம் பிச்சுக்கும்.
பாஸ்ட் பூட் மட்டும் இல்ல இட்லி,தோசா,பரோட்டா என்று போடுவதானால் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும்.இவர்களிடம் பிடித்தது சிக்கன் 65,சும்மா மொறுமொறுனு பூண்டு மற்றும் மசாலா வாசனை செமையா இருக்கும்.சிக்கன் வறுத்த அரிசி அஜினோமோட்டோ உபயத்தால் டேஸ்ட்ஆக இருக்கிறது.கூட்டம் இல்லாத நேரத்தில் அஜினோமோட்டோ வேணாம் என்றால் போட மாட்டார்கள்.


கூடுதல் தகவல்:

பக்கத்தில் புதிதாக பிரியாணி எக்ஸ்பிரஸ் என்ற கடை ஆரம்பித்து இருக்கிறார்கள் இன்னும் சாப்பிட்டு பார்க்கலை...பக்கத்தில் ஒரு நல்ல டீ,ஜூஸ் கடையும்(melting point) உண்டு இவர்களிடம் பிரட் ஆம்லேட் நன்றாக இருக்கும்!!

மந்தைவெளி:

ராணி மெய்யம்மை,ராஜா முத்தையா,st .johns போன்ற பிரபல பள்ளிகள் அமைந்த இடம் மந்தைவெளி.மந்தைவெளி ஸ்டார்டிங்இல் இருக்கும் கிரௌண்ட்தெரியாதவர்கள் இருக்க முடியாது.மந்தைவெளிக்கும் குடிநீர் வாரிய ஊழியர்களுக்கும் கற்காலம் தொட்டே ஏதோபந்தம் இருக்கும் போல!! எனக்கு தெரிஞ்சு ஒன்பது வருஷத்தில் அங்கே ரோடுகளில் ஏதாவது ஒரு
இடத்தில் கால்வாய் பணி நடந்து?? கொண்டே இருக்கும்.

நடுவில் ஒரு வருடம் நன்றாக இருந்தது தற்போது ஆறு மாதம் முன்பு மறுபடியும் மயிலாப்பூர் நோக்கி செல்லும் ஒரு வழி பாதையில் வேலை நடந்து கொண்டு இருக்கிறது.புழுதி பறக்கும் சாலை என்றால் எனக்கு மந்தைவெளி தான் நினைவுக்கு வரும்.
மந்தைவெளியில் பிடித்த ஹோட்டல் ஆர்.கே.மடம் ரோட்டில் ஒரு வழி பாதையில் அமைந்துள்ள பாண்டி ஹோட்டல்.பரோட்டா நன்றாக இருக்கும் அதற்கு அவர்களின் சால்னா மற்றும் சிக்கன் குழம்பு செம!! எல்லா விதமான சைட் டிஷும்கிடைக்கும்.எனக்கு அவர்களின் சிக்கன் ப்ரை ரொம்ப பிடிக்கும்.தோசை கல் புல்ஆ இருந்தா கொத்து போட மாட்டாங்க!!,இது ஒரு முனியாண்டி விலாஸ் டைப் ஹோட்டல்.
பிரியாணி, சாப்பாடு என்று அனைத்துமே இங்கு உண்டு.ஒரு தடவை மீன் ப்ரை வாங்கினேன் அதுக்கு அப்புறம் எந்த ஹோட்டல்லிலும் மீன் ப்ரை வாங்குவதில்லை!!ஆனா சுறா புட்டு நல்லா இருக்கும் என்ன மீனோட தேங்காய் துருவல் கொஞ்சம் அதிகமா இருக்கும்...பட் வொர்த்.

அடுத்த இது எங்கே ஏரியாவில் வேறு இடத்தில் உள்ள ஸ்பெஷல்களை பார்க்கலாம்....

உங்களுக்கு இந்த பதிவு பிடிச்சிருந்தா ஓட்டும் ,பின்னூட்டமும் போடவும்....!!

ஜெட்லி....

Friday, March 12, 2010

மாத்தியோசி.... யோசிச்சாங்களா??

மாத்தியோசி.... விமர்சனம் மாதிரி!!

நந்தா பெரியசாமி ஒரு கல்லூரியின் கதைக்கு பின் இயக்கும்

படம்.நாலு பசங்க தான் நாயகர்கள்.ஷம்மு தான் நாயகி.
பொன்வண்ணன்,ரவி மரியா போன்றோரும் படத்தில் உள்ளனர்.
இசை புது ஆளு குரு கல்யாண்.

முதலில் இவங்க என்ன மாத்தியோசிச்சு இருக்காங்கனு
பார்க்கலாம்....மதுரையில் உள்ள கிராமத்தில் நாலு சட்டை
போடாத பசங்க....திருட்டு,மற்றும் ஊர் வம்புகள் தான்
தொழில்.அந்த ஏரியா போலீஸ் ஒருவரை கயிறு கட்டி
தொங்க விட்டு மொட்டை போடுகிறார்கள்...இந்த மாதிரி
ஒரு ஒரு விஷயம் செய்யும் போது பின்னணி இசையில்
மாத்தியோசி..மாத்தியோசி.. என்று குரல் வருகிறது.


சென்னைக்கு போறாங்க அங்க வழிப்பறி பண்ணி வாழ்க்கையை
ஓட்டுறாங்க! ஷம்முவை அந்த நாலு பேர்ல ஒருத்தர் கெட்டவன்
கிட்ட இருந்து காப்பத்துறார்...ஆ....வ்..சாரி கொட்டாவி....
அப்புறம் என்ன கேள்வி கேட்க்காம அந்த பொண்ணும் சரி
இவங்களும் சரி சென்னை முழுக்க சுத்துறாங்க......
அந்த பொண்ணு வெளிநாடு போனும்னு துடிக்குது....
இவங்க என்ன பண்ணாங்க என்பதே படத்தின் ஆ...வ் கதை!!
மேல உள்ள கதையில் என்ன மாத்தியோசிச்சு இருக்காங்கன்னு தயவு செய்து உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க......

நான் ஏற்கனவே சொன்ன மாதிரி மதுரை பின்புலம், மதுரை
பேச்சு,இதில் பருத்தி வீரன் பாட்டு,நாலு பேரில் ஒருத்தர்
ஓவராக பேசுவது......இதெல்லாம் ஒரு படத்தை ஓட வைக்க
தகுதி இல்லை. திரைக்கதை தொய்வில்லாமல் போர் அடிக்காமல் இருக்க வேண்டும்.மாத்தியோசியில் சில இடங்களில் மாத்தியோசிச்சு இருந்தாலும் கைதட்டவோ நிமிர்ந்து உட்காரவோ முடியாதபடி இருக்கிறது.

படத்தின் பெரும் பின்னடைவு பாட்டுகள்....அதுவும் அவர்கள்
கடத்தி வரும் பெண் வயதுக்கு வந்தவுடன் பாட்டு,,முடியல
ஏன்ப்பா மாத்தி யோசிக்கிரிங்கன்னு கேட்க தோணுது!!
ஒரு கொலையை பண்ண சொல்லிட்டு இனிமே இந்த
மாதிரி தப்பெல்லாம் பண்ண கூடாது என்று சொல்லும்
நேர்மையான காவல்துறை அதிகாரியாக பொன்வண்ணன்.
ரவிமரியா திருநங்கை வில்லனாக நன்றாக செய்து இருக்கிறார்.
படத்தின் முதல் பாதியில் ஒரு வண்டியில் உள்ள பொருளை கொள்ளையடித்து கொண்டு இருக்கும் போது போலீஸ் துரத்தும்
அப்போது அவர்கள் அப்படியே கபடி ஆட்டத்தில் சேரும் போது
சிட்டி ஆப் காட் டி.வி.டி.யின் மகிமை புரிந்தது.மாத்தியோசிச்சு
வேற வேற படத்தில் இருந்து காட்சிகளை எடுங்க சார்...
இன்னும் எத்தனை நாள் தான் சிட்டி ஆப் காட் வச்சி
காலத்தை ஓட்டுறது!!


பொண்ணு பேர் தெரியாமலே அவர்களுடன் நாலு பேரும்
சுற்றுகிறார்கள்.நாலு பேர் சட்டை இல்லாம ஊரெல்லாம்
சுத்துறாங்க ஆனா ஷம்மு மட்டும் முழுசா மறைச்சு
சுத்துது...இது எந்த ஊரு நியாயம்...?? ஷம்மு உண்மையில்
கும்முன்னு இருக்காங்க.


ரேணிகுண்டா மாதிரியே படத்துக்கு விளம்பரம் வேற
பண்ணாங்க அதாவது ஒரு ஒரு இயக்குனரும் சொன்னதை
பேப்பர் விளம்பரத்தில் போட்டார்கள்.நாலு பசங்க ஒரு
பொண்ணு என்றவுடன் நான் கொஞ்சம் யோசிச்சேன்.
ஒரு வேளை ரேணிகுண்டா மாதிரி இருக்குமோனு.ஆனா
அப்படி இல்லை, ரேணிகுண்டா அளவுக்கு வராது.காரணம்
மனசை தொடுற மாதிரி எந்த காட்சியும் இல்ல.நான்
அவ்வளவா எந்த படத்தையும் இன்னொரு படத்துடன்
ஓப்பீடு செய்வதில்லை...ஆனால் மாத்தியோசியில் சில பல
இடங்களில் சில பல படங்களின் காட்சிகள் வந்து போயின!!


ஆனா ஊனா ஓணான்னா வர்ற பையன் தூப்பாக்கி எடுத்து காட்டுவது..பொட்டு பொட்டு என ஆட்களை சுடுவது,முடியல...!
சில காட்சிகளில் டப்பிங் வேறு சரியில்லை..ஊரில் கருவண்டாக
வரும் சின்ன பெண் கவர்ந்தாலும் சில சமயம் எரிச்சல்
வருகிறது....முதல் பாதி ஓரளவுக்கு போச்சி ஆனா ரெண்டாவது
பாதி எப்போ படம் முடியும் என்பது போல் இருந்தது....!!தனுஷ் புதுபேட்டை ஜெயில் இன்ட்ரோ ஸ்டைல் மாதிரி தான் சொல்லணும்...

"அந்த கார்னர் சீட்ல ஆள் இருக்கீங்களா.....கொடுமையா இருக்குது..
என்னால தாங்க முடியல.....ரொம்ப ரொம்ப கொடுமையா இருக்குது!!"


காரணம், தியேட்டரில் ஓரளவுக்கு தான் கூட்டம் இருந்தது....
ஆனா நான் உட்கார்ந்த வரிசையில் ஒரு முனையில் நான்
மறு முனையில் வேறு யாரோ உட்கார்ந்து இருந்தார்கள்,
நடுவில் யாருமில்லை...!!

தியேட்டர் நொறுக்ஸ்:

படம் பார்க்க ஒரு பெண் பயங்கர மேக்அப்பில் வந்திருந்தார்,
கொஞ்சம் கிழவி தான்.படம் பார்க்க வந்த ரெண்டு பேர்
அந்த பெண் தான் படத்தின் நாயகியாக இருக்கும் என்றபடி
பேசி கொண்டிருந்தனர்.நான் அவர்களிடம் இல்லை படத்தில்
சின்ன ரோலில் ஏதாவது வந்தீருப்பாங்க என்றேன்.

அந்த பெண் ஓரிரு காட்சிகள் படத்தில் தலை காட்டியிருந்தார்.
படம் முடிந்த பின் அந்த ரெண்டு பேரிடம் நான்
"அந்த அக்கா படத்தில் வந்தாங்களே பார்த்திங்களா??"என்றேன்
அவர்கள் அப்படியா எந்த சீன் என்று கேட்டார்கள்...நான் சீனை
சொன்னதும்...."சாரி பாஸ் படத்தை மெய் மறந்து பார்த்துட்டு
இருந்தோம்" என்றான் ஒருவன்."ஆமா ஆமா ரொம்ப மெய்
மறந்துட்டோம்" என்றான் சிரித்தபடியே அவனின் நண்பன்!!

ஜெட்லி பஞ்ச்:

மாத்தியோசி : தலைப்பில் மட்டுமே!!


இந்த விமர்சனம் பல பேரை சென்று அடைய ஒட்டு போடுங்கள்...பின்னூட்டத்தில் உங்கள் சந்தேகத்தை தெளிவுப்படுத்துகிறேன்!!ஜெட்லி.....

நன்றி:indiaglitz.com

Tuesday, March 9, 2010

தம்பிக்கு இந்த ஊரு - மகா மெகா காவியம்!!

தம்பிக்கு இந்த ஊரு


தயவு செய்து யாரும் என்னை திட்டாதிங்க,ஏதோ தெரியாதனமா
பைலட் தியேட்டர் பக்கம் போய்ட்டேன்.உண்மை என்னனா
நான் ராஜலீலை படம் பார்க்கலாம்னு தான் நினைச்சேன்
ஆனா அதுக்குள்ள ராஜலீலை படம் ஸ்டார்ட் ஆயிடுச்சு.
பத்து நிமிஷம் கழிச்சு போன கதை?? புரியாதுன்னு போகலை.
சரி அவ்ளோ தூரம் வந்துட்டோம் நம்ம சின்ன தளபதி நடிச்ச
படத்தை பார்ப்போம்னு உள்ளே என்டர் ஆயிட்டேன்.


சின்ன தளபதினு கார்டு போடும் போதே தலையெல்லாம் சுத்திச்சு...சீ சீ..மப்புல்ல இல்லங்க,சாதாரணமாவே தான்!முதல் சீனே விவேக் இன்ட்ரோ எனக்கு கொஞ்சம் டவுட் ஆயிடுச்சு,அதாவது படம் போடுறாங்களா இல்ல ஆதித்யா டி.வி. கட்டுராங்கலன்னு....படத்தில் விவேக்வோட அக்கபோர்
செம பிளேடு!!என்ன கதையா?? இருபது வருஷம் முன்னாடி உள்ள கதை...பயங்கரமான கதை...!!

இளைய,புரட்சி தளபதினு ரெண்டு பேருமே பன்ச் குறைச்சி
சும்மா இருக்கும் போது நம்ம சின்ன தளபதி மட்டும்
அறிமுக காட்சியில் இருந்து பஞ்ச் பஞ்சா உட்டு உடம்பை
பஞ்சர் ஆக்குகிறார்.பஞ்சர்னு சொன்ன உடனே இன்னொரு
விஷயம் நினைவுக்கு வருது......


நம்ம பரத் ஒரு பைட் சீன்ல நின்னுக்கிட்டு இருக்கிற பைக்கின்
டயரை சும்மா ஒரு கையில் இழுத்து எடுத்து வில்லன் மேல வீசுவாரு பாருங்க...சான்ஸ்ஏ இல்லை.எங்க வீட்டாண்ட உள்ள
பஞ்சர் கடையில் அவசரத்துக்கு வண்டியை விட்ட பஞ்சர் பார்க்க
அரை மணி நேரம் ஆகுது.அங்க மட்டும் நம்ம சின்ன தளபதி
இருந்தார்னு வைங்க அஞ்சு நிமிஷத்தில் பஞ்சர் பார்த்து
வண்டியை கொடுத்துடுவாங்க...சும்மாவா திருப்புழி,
ஸ்பேனர் இல்லாம வண்டி டயரை அழகா கழட்டுறார்.
ஒரே இழுப்பில் எந்த வித உபகரணமும் இல்லாமல்
டயரை கழட்டிய சின்ன தளபதி வாழ்க.....!!!அடுத்த மொக்கையாக ஆந்திராகாரர் வேடத்தில் பாஸ்கர்.இவர் ஹோட்டல்லில் போடும் மொக்கைக்கு அளவே இல்லை.அப்புறம் பாட்டெல்லாம் செம....ஒரு ஒரு பாட்டுக்கும் தியேட்டர்ல இருக்கிற நாப்பது பேர்ல இருபது பேர் வெளியே போய்டுறாங்க....படத்தின் ஒரே ஆறுதல் சானாகான் மட்டுமே...!!சானாகான் இன்னும் திறமையை வெளிப்படுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.


அப்புறம் செண்டிமெண்ட் சீன்...நிழல்கள் ரவி பரத் தன்
மகனில்லை என்று சொன்னதும் நமக்கு தண்ணி தாரை
தாரையாக ஊற்றுகிறது....அம்பது ரூவா போச்சே என்று!!
பிரபு வருகிறார் ஊறுமுகிறார் அப்புறம் என்ன ஆனார்னு
எனக்கு தெரியல....காரணம் படம் முடிய அரை மணி நேரம்
முன்னாடியே வெளியே வந்துட்டேன்!!வெளியே வந்ததுக்கு
காரணம் வீட்டில் சின்ன வேலை இருந்ததுனு சொன்ன
நம்பவா போறீங்க....


தியேட்டர் டிக்கெட் கவுண்டர் பக்கத்தில் இந்த வாக்கியத்தை
வைக்கணும்...மறந்துட்டாங்க போல....

WARNING:
(Beware of thambikku intha ooru..it contents mokkai comedy and bayangara
fights and it may harmful to ur health and purse too.)

தயவு செய்து இனிமே யாரும் ரஜினி,கமல் மற்றும் நல்லா
ஓடிய படங்களின் டைட்டிலை யூஸ் பண்ண வேணாம்னு
ஒரு சட்டம் போட்ட நல்லா இருக்கும்!!ரஜினியின் தம்பிக்கு
எந்த ஊரு படத்தின் தீவிர ரசிகன் நான்...ச்சே..இப்படி பேரை
கெடுக்குரானுங்கலே.....

கவுண்டர் கிட்ட இந்த படத்தை பத்தி கேட்டதுக்கு:

"அடங் கொன்னிய,இந்த காவியத்தை காண ரெண்டு கண்ணு
பத்தாது...அதனால மக்களே, இன்னும் கொஞ்ச நாள்ல கலைஞர்
டி.வி வெள்ளி பரிசில் இந்த படத்தை போடுவாங்க....உங்களுக்கு
உயிர் மேல ஆசை இருந்தா...இந்த படம் போடும் போது
கரண்ட் இல்லாத ஊருக்கு ஓடிடுங்க.என்னா டகால்டி காட்றானுங்க"


ஜெட்லி பஞ்ச்:

தம்பிக்கு இந்த ஊரு : வெளியே சொல்லிடாத....!


பல பேர் இதை படித்து விழிப்புணர்வு பெற ஒட்டு போடுங்கள்...
இந்த காவியத்தை பற்றி விவாதிக்க பின்னூட்டத்தில் சந்திப்போம்.

ஜெட்லி....

Monday, March 8, 2010

ஊருக்குதான் உபதேசமா???

ஊருக்குதான் உபதேசமா???


நேற்று பெசன்ட் நகர் எலியட்ஸ் பீச்சில் ஆங்கில நியூஸ்
சேனல் NDTV ஒரு நிகழ்ச்சி நடத்தியது.அந்த நிகழ்ச்சியின்
பெயர் 'GREENATHON'.இந்த நிகழ்ச்சியின் மூலம் பல்வேறு
நல்விஷயங்களை செய்து வருகிறது.அதாவது மின் இணைப்பு இல்லாத கிராமங்களில் சூர்ய சக்தி மூலம் அவர்களுக்கு வெளிச்சம் கொடுக்கிறது.அது மட்டும் அல்லாமல் நாட்டை பச்சை பசேல் என்று வைத்திருக்க ஸ்கேடிங் பயணம் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியது,மரங்கள் நடுவது.
அது போல் பீச்சில் இருக்கும் குப்பைகளை கொண்டு ஒரு யானை பொம்மையின் மேல் குத்தி வைக்கும் நிகழ்ச்சியும் நடந்தது.இவை அனைத்துமே பாராட்ட பட வேண்டிய விஷயங்கள்.......இவையெல்லாம் செய்த இந்த செய்தி நிறுவனம் நிகழ்ச்சி
முடிந்த பின் அவர்கள் போட்ட குப்பையை கவனிக்காதது
வருத்தமே.....படங்கள் கிழே....

greenathon என்று நிகழ்ச்சிக்கு பெயர் வைத்து விட்டு
அவர்களே இப்படி குப்பை, பிளாஸ்டிக் மற்றும் சாப்பாட்டு
பொருட்களை கொட்டுவது என்ன விழிப்புணர்வு என்று
தெரியவில்லை...ஊருக்கு தான் உபதேசம் செய்வோம்
என்பதை நிருபித்து இருக்கிறார்கள்.

இதுதான் அவர்கள் greenathon மூலம் மக்களுக்கு சொல்லும்
செய்தியா?? விளம்பரதாரர் மற்றும் நடிகர்கள் பிரசாரம்
மூலம் டி.ஆர்.பி ரேடிங் மட்டும் ஏற்றினால் போதுமா??

இந்த குப்பைகளை இந்த நேரம் அங்கு வேலை செய்து
கொண்டு இருப்பவர்கள் சுத்தம் செய்து இருக்கலாம்...
ஆனால் நிகழ்ச்சி நடத்தும் இவர்களுக்கே குப்பையை
தொட்டியில் போட எண்ணம் வராதது வருத்தமே!!


***********************************************************

பீச்சை சுத்தமா வைக்க குப்பை போடாதீங்க அப்படின்னு
சொன்ன நம்ம ஆளுங்க கேக்கவே மாட்டாங்க,
சரி குப்பையை குப்பை தொட்டியில் ஆவது போடுங்க
என்றாலும் ஹ்ம்..சில பேர் தவிர பல பேர் போடுவது
இல்லை.

நாம போடுற குப்பையை மறுநாள் அள்ளி அதை குப்பை
தொட்டியில் போடுவதற்கு சில பேர் வேலை செய்து
கொண்டு இருக்கிறார்கள்.அதில் இந்த சிறுவனும் இருக்கிறான்.
சின்ன பையன் காலையில் எழுந்தவுடன் படிக்கலாம் இல்ல
விளையாட போலாம்....ஏன் அவனுக்கு இந்த வேலை??
அவன் வேலை செய்ய வேணுமானால் வறுமை காரணமாக '
இருக்கலாம் ஆனால் பீச்சில் குப்பை அள்ள நாம் போடும்
குப்பை தான் காரணம்!!அங்கு குப்பையை அள்ளி பீச்சை சுத்தம் செய்பவர்கள் யாரும் வேலை செய்யவில்லை நமக்காக சேவை செய்கிறார்கள் என்பதே உண்மை.அவர்கள் ஒன்றும் ஒரு சில தனியார் அமைப்புகள் மாதிரி எப்பொழுது ஆவது பீச்சை சுத்தம் செய்கிறேன் என்று ரெண்டு பேப்பர் எடுத்து கூட்டமாக போஸ் கொடுத்து அதை பேப்பர்க்கு அனுப்புபவர்களும் இல்லை!!


நாமும் நாட்டுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்றால்
நம்ம பங்குக்கு நம்மால் முடிந்த வரை சுற்றுபுறத்தை
தூய்மையாக வைத்து கொள்வோம்!!

ஜெட்லி....

Friday, March 5, 2010

அவள் பெயர் தமிழரசி

அவள் பெயர் தமிழரசி - என் பார்வையில்


எங்க ஏரியா பக்கம் எங்கையும் அ.பெ.தமிழரசி முதல்
காட்சி போடாததால் மாயாஜால் நோக்கி வண்டியை
விரட்டினேன்.11.20 ஷோவுக்கு 11.05க்கு டிக்கெட் எடுத்த
பிறகு தான் தெரிந்தது நான் 11ஆவது ஆள் என்று.
இதை ஏன் சொல்றேன்னா ஜெய் படத்தை பார்க்க
ஒபெநிங் இல்லை அதற்கு காரணம் அவரது முந்தைய
படங்கள் வாமனன்,அதே நேரம் அதே இடம்......
அவர் தனி ஹீரோவா நடிச்ச மூணு படத்தையும் முதல்
நாள் பார்த்த ஆள் நானாகதான் இருப்பேன்.(எனக்கு
ஏதாவது விருதோ பாராட்டு விழாவோ நடத்துங்க ஐயா!!)


தமிழரசி, கூத்து போடுபவர்களின் குடும்பத்தில் உள்ள
பெண்.படிக்க ஆர்வம் இருக்கும் பெண்.சின்ன வயது
தமிழரசியாக வரும் காவ்யா சிரிப்பு கொள்ளை அழகு!!
பெரிய வயது தமிழரசியாக வரும் நந்தகி தன் பங்கை
நன்றாக செய்துள்ளார்.


ஜெய், அமைதியாக வருகிறார்.சில காட்சிகளில் 'அட' போட
வைக்கிறார்.ஜெய்யின் தாத்தாவாக தியோடர் பாஸ்கர்.பேரன்
மேல் அன்பு பொழிவதிலும் கண்டிப்பு காட்டுவதிலும் இயல்பாக
நடித்து இருக்கிறார்.அப்புறம் என்னுயிர் தோழன் படத்தின்
நாயகி இதில் தமிழரசிக்கு அம்மாவாக வருகிறார்.


காமெடி என்று கஞ்சா கருப்பு ரெண்டு மூணு காட்சிகள்
வந்து போகிறார்.தலைவர் போனம்தின்னி வீடியோ காமெடி
ஓகே.முத்தையா கேமரா மூலம் வயல்வெளிகளின் அழகுகளை,
மற்றும் தசரா திருவிழாவின் காட்சிகளை நம் கண் நிறுத்தி
இருக்கிறார்.


கூத்து பற்றி அந்த பெரியவர் ஜெய் வீட்டில் சாப்பிடும் போது
சொல்வது, தமிழரசியின் தாய் ஜெய் வீட்டுக்கு வந்து தன்
மகள் கெட்டு போனதுக்கு யார் காரணம் என்று கேட்கும் போது,
தமிழரசியின் தம்பி ஜெய்யை அடிக்கும் போது பிளாஷ்பேக்
சொல்லமால் தம்பியின் வாயிலாகவே தாயின் மரணத்துக்கு
காரணம் சொல்லியது என்று பல இடங்களில் இயக்குனர்
நிமிர வைத்திருக்கிறார்.

படம் முதல்ல கொஞ்சம் கலகலப்பா போச்சு அப்புறம் போக
போக சலிப்பு வருகிறது.அப்புறம் இடைவெளி பிளாக் நல்லா
இருந்தது.இரண்டாவது பாதி வேகமாக போனாலும் சில
காட்சிகள் மனதில் ஓட்ட மறுக்கிறது.அவள் பெயர் தமிழரசி
ஒரு pure சினிமானு சொல்லலாம்.ஆனா மசாலா பட
காதலர்களை கவர்வது மிக கடினம்.கிளைமாக்ஸ் காட்சிகள்
அனைத்தும் ஒரு நாடகம் பார்ப்பது போல் பீலிங்க்ஸ்!!


என்னை பொருத்தவரை நான் பொழுதுபோக்கு அதாவது
டைம்பாஸ்க்கு படம் பார்ப்பவன் ஆனால் இந்த படத்தில்
டைம் அவ்வளவா பாஸ் ஆகலைன்னு தான் சொல்லணும்.
ஆனா குத்து பாட்டு,வில்லன் கத்தல்,முகம் சுளிக்கும்
காட்சிகள் என்று எதுவும் இல்லாமல் வந்திருக்கும் படம்
தான் அவள் பெயர் தமிழரசி.படத்தின் முதல் பாதியை
பார்க்க பொறுமை மிக அவசியம்.


தியேட்டர் நொறுக்ஸ்:

# படம் ஆரம்பித்து அஞ்சு நிமிஷம் கழிச்சு ரெண்டு பசங்க
வந்தாங்க...ஸ்க்ரீன்இல் ஜெய்யை பார்த்ததும் பக்கத்தில்
இருந்தவரிடம் என்ன படம் என்று கேட்டு பின்பு பக்கத்துக்கு
ஸ்க்ரீன்க்கு போகணும் என்று விண்ணை தாண்டி வருவாயா படத்துக்கு போனார்கள்!!


# அப்புறம் ஒரு ஹிந்தி குரூப் ஒன்னு படம் பார்க்க வந்தது.
என்னடா அதிசியமா இருக்குன்னு யோசிச்சிட்டு இருக்கும்
போதே அங்கே அங்கே ஜோடி ஜோடியா பிரிஞ்சு உக்காந்து
இருந்தா பரவாயில்லை ஆனா ஓவர் சவுண்ட்...அப்புறம்
நாங்க பின்னாடி இருந்த ஒரு அஞ்சு பேர் எதிர் சவுண்ட்
விட்டாவுடன் தான் அடங்கியது....!!

# எனக்கு பின்னாடி இருந்த மூணுபேர் பணம் போட்டு
படத்துக்கு கூட்டிட்டு வந்தவரை திட்டிட்டு இருந்தாங்க...
இன்டெர்வல்லே போய்டலாம் என்றார்கள் ஆனால் பணம்
போட்டு கூட்டி வந்தவர் இன்டெர்வல்க்கு அப்புறம் தான்
படம் சூப்பர்ஆ இருக்கும் என்று கூறி கஷ்டப்பட்டு நண்பர்களை
உட்க்கார வைத்தார்.

# வழக்கம் போல் படம் முடியுற முன்னாடி ஒரு ஒரு ஜோடியா
வெளியே போனாங்க...நம்ம rowல மூணு ஜோடி இருந்ததே
ரெண்டு தானே வெளியே போச்சு என்று எண்ணியவாரே
கடைசி சீட்டை பார்த்தேன்....அந்த கொடுமையை வேற
சொல்லனுமா....!!


ஜெட்லி பஞ்ச்:

அவள் பெயர் தமிழரசி : இருந்துட்டு போட்டும்.....


உங்களுக்கு இந்த பதிவு பிடிச்சு இருந்தா ஓட்டும் பின்னூட்டமும்
போடுங்க!!

ஜெட்லி

நன்றி:indiaglitz

Wednesday, March 3, 2010

ஜெட்லி வழங்கும் பொது அறிவு செய்திகள்

ஜெட்லி வழங்கும் பொது அறிவு செய்திகள்:(3.3.10)

முக்கிய அட்டு செய்திகள் :

***************************************************

கவர்ச்சி காட்டுவது தப்பல்ல.....
நீச்சல் உடையில் நடிப்பேன்.
-நடிகை பியா பரப்பரப்பு பேட்டி.

ஏகன், கோவா போன்ற படங்களில் மினி ட்ரெஸ்ஸில்
வந்து அசத்திய பியா அவர்கள் கதைக்கு தேவைப்பட்டால்
பிகினியில் நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்....இது குறித்து எமது செய்தியாளரிடம் கோவா படம் பார்த்து
வந்த வாலிபர் தெரிவித்தது.....

" பியா அவர்கள் ஏற்கனவே ஜட்டி போன்ற கால்சட்டையில்
நடிச்சாலும்,நாங்க அவரை பிகினியில் பார்க்க ஆவலாக

இருக்கோம்..!" என்று ஜொள் வழிந்தபடி அவர் கூறியது
காலை நினைத்தது.

"எதுவாக இருந்தாலும் பியாவின் தாராள சேவை தமிழ்நாட்டுக்கு
வழக்கம் போல் தேவை என்பதை தெரிவித்து கொள்கிறோம்."
ஜெட்லி செய்திகளுக்காக நைன்டி மைனா.

********************************************

ரொம்ப சீரியஸ் ஆன விஷயம்:

இடைத்தேர்தலில் சுயமரியாதையை விட்டுவிட்டு யாரையும்
ஆதரிக்க மாட்டோம்.....

ஆதரவு கேட்டால் மட்டும் ஆதரவு கொடுப்போம்....

விஜய.டி.ராஜேந்திரன் பேட்டி...(இதுக்கு என்ன கமெண்ட் பண்றதுனு எனக்கு தெரியல!!)

*************************************************

விளம்பர இடைவெளி:

உங்க சரக்கில் மப்பு இருக்கா??

மைக்குடன் ஒரு பெண் வீட்டினுள் நுழைந்து அங்கு
குப்புற படுத்து கிடந்தவரிடம்:" உங்களுக்கு காலையில்
எழுந்தவுடன் தலைவலி இருக்கா??"

அவர் : "ஆ.ஆ ..ஆமா!!"

பெண்: உங்க சரக்கில் மப்பு இருக்கா??

அவர் :"லை..லை.. லைட்டா தான் இருக்கு...."

பெண் : "இந்தாங்க புதிய B.P.GOLD இனிமே உங்களுக்கு
மப்பு பிரச்சனையே இருக்காது...."

அவர்: "புதிய B.P.GOLD நாள் முழுதும் கிடைக்குமே மப்பு!!"

புதிய B.P.GOLD மப்புக்கு கியாரண்டி....!!

************************************************

சிறப்பு பார்வை:

சின்ன அசினா?? இல்ல சின்ன சிநேகாவா??....தொடர்ந்து மொக்கை படங்களை கொடுத்து வரும்
பூர்ணா என்ற நடிகை முதலில் தன்னை சின்ன அசின்
என்று கூறினால் சந்தோஷப்படுவேன் என்றார்.இப்போ
என்னனா சின்ன சிநேகானு சொன்ன சந்தோஷப்படுவேன்
என்கிறார்.

இது குறித்து ஒரு சிறப்பு பார்வை வழக்கம் போல் சாதாரண
கண்ணில் பார்த்தது தான்.

"நாடே கொந்தளிக்கிறது....யார் இந்த பூர்ணா??
இவர் சின்ன அசினா?? இல்லை சின்ன சிநேகாவா??
இதற்கு விடை தெரியாமல் மக்கள் கூட்டம் அங்கும்
இங்கும் இருக்கும் சுவர்களில் தங்கள் தலையை முட்டி
கொண்டு இருக்கிறார்கள்......"

இது பற்றி ஒரு குடிமகனிடம் கேட்டதற்கு....
"இவங்கள விட்டா நான் மினி நமீதா, குட்டி தமன்னானு
சொல்லிட்டே போவாங்க...." என்று மேலும் சோகத்தில்
ஒரு குவாட்டர் வாங்க சென்றார்.

****************************************************

பொது அறிவு கேள்வி :

சமீபத்தில் லிப் கிஸ் அடித்து ஜுரம் வந்த நடிகர் யார்??

A.பட்டாப்பட்டி சடகோபன் ரமேஷ்.

B.என் கூட பி.சி.ஏ. படிச்ச ரமேஷ்.

வழக்கம் போல விடையை யாருக்கு வேணும்னாலும்
அனுப்புங்க.....முடிஞ்சா பட்டாபட்டி படத்தின் டிக்கெட்
வாங்கி அனுப்புகிறேன்.....!!

***************************************

இது போல் நாட்டுக்கு தேவையில்லாத அட்டு செய்திகளை
உங்களுக்கு பிந்தி தருவது.......


உங்கள்
ஜெட்லி....

மேலும் உங்கள் பொது அறிவு வளர பின்னூட்டத்தை போட்டும்
ஒட்டு போட்டும் ஆதரவை தெரிவிக்குமாறு கேட்டு கொள்கிறோம்.

Monday, March 1, 2010

பழவேற்காடு - ஜாலி ட்ரிப்!!

பழவேற்காட்டில் நண்பர்களுடன்

கல்லூரி இறுதி ஆண்டின் இறுதித் தேர்வுகளுக்கு முந்தைய வாரத்தில், வகுப்பின் முப்பத்து ஒன்பது நண்பர்களும் மாமல்லபுரம் சென்றோம். ஆயன சிற்பியை அருகில் சென்று பார்ப்பதாய்ச் சொல்லி, யானையின் அருகே குனிந்து தலையில் இடித்துக் கொண்ட நண்பன் நடராஜ், நொடராஜ் ஆனதும், கொலம்பஸ் மாதிரி வழி கண்டுபிடிப்பதாய் சொல்லி பாறையில் ஏறி குப்புற விழுந்து கண்ணாடியைப் பறக்க விட்ட ஸ்ரீராமும், போகும் வழியில் கோவளத்துக்கு முன், இறங்கிக் குளிக்கும் போது, சுனாமிக்கு முன்பே கடலோடு போகவிருந்து கரையில் அள்ளிப் போடப்பட்ட நண்பன் செந்திலும், இன்றுவரை நிகழும் நண்பர் சந்திப்புகளில் கட்டாயம் பேசப்படும் விஷயங்கள்.


அதற்குப் பிந்தைய, இந்த ஆறு வருடங்களில், ஆளுக்கு ஒரு திசையில் போனபின் சந்திப்புகள் குறைந்து போய், எப்போதாவது ஏற்பாடு செய்யப்படும் கடற்கரைக் கூட்டங்களிலும், நண்பர்களின் திருமணங்களிலும் ஐந்து அல்லது ஆறு பேர் வருவதே பெரிய விஷயமாகிப் போனது. இந்த நேரத்தில் தான் வேடந்தாங்கல் செல்வது பற்றி நான், சித்து, நட்டு, மற்றும் ஜெட்லி பேசிக்கொண்டிருந்த போது, இதை ஏன் மீண்டுமொரு நண்பர் சந்திப்பாக ஆக்கக்கூடாது என தோன்றியது. பிற நண்பர்களிடம் சொன்னபோது, பாண்டி, பர்வதமலை, திருவண்ணாமலை என்று ஆளுக்கு ஒன்று சொல்ல, சந்தோஷ் சொன்ன பழவேற்காடு இறுதி முடிவானது. வழக்கம் போல இருபது பேர் வருவதாய் ஒப்புக்கொண்டார்கள், வழக்கம் போலன்றி இறுதிப்பட்டியல் பதினேழு பேரில் முடிந்தது.


ஆறு வருடங்களுக்கு முன் போன (சற்றேறக்குறைய) அதே நாளில், போய் வந்த பயணம் பற்றி ஜெட்லியும் சித்துவும் தொடர்கிறார்கள்
அனைவரும் பேசி தீடிரென்று நடந்தது இந்த பழவேற்காடு GET-TOGETHER. பொன்னேரி தாண்டி இருபது கிலோமீட்டர் சென்றால் அழகான பழவேற்காடு நம் கண்களுக்கு விருந்தாய் அமையும்

நண்பர்கள் சென்னை மாநகரம் முழுவுதும் படர்ந்து இருப்பதால் புழல் ஜெயிலை மீட்டிங் பாயிண்ட் ஆக பிக்ஸ் பண்ணினோம். எனக்கு நண்பர் கௌரி காரில் இடம் கிடைத்தது. கௌரி ஏற்கனவே மூணு நாலு தடவை பழவேற்காடு சென்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் இவர் புழல் போக பாடி ப்ரிட்ஜ் லெப்ட் எடுத்து ஆவடி செல்லும் போது என் மனசில் மணி அடித்தது, அது, "அநேகமா நாங்க ரேணிகுண்டா தான் போக போறோம்" என்று.


பழவேற்காடு செல்லும் வழி

பழவேற்காடு செல்ல இரு வழிகள் உள்ளன


1.மணலி, மீஞ்சூர், பொன்னேரி வழியாக அல்லது


2.புழல், பஞ்செட்டி (தாண்டியவுடன் Right Turn எடுத்து), பொன்னேரி வழியாக.

அங்கு சென்றவுடன் வழியெங்கும் பலர் படகு வேண்டுமா என்று கேட்பார்கள், அதில் உங்களுக்கு சரியான ஆள் யாரென்று படுகிறதோ அவர்களுடன் பேசி (ஒரு படகு 500 ருபாய்) செல்லலாம். காலை முதல் மாலை வரை அந்த படகு உங்களுக்காக தான்.

படகை வாடகைக்கு எடுத்து சிறிது தூரம் சென்ற பின் நண்பர்கள் படகை நிறுத்த சொன்னார்கள் காரணம் இன்று பிறந்தநாள் காணும் எனக்கும் (ஜெட்லி) , நாலாநேத்து பிறந்தநாள் கண்ட கெளரிக்கும் சேர்த்து கேக் வெட்ட சொன்னார்கள். கேக் எடுத்தவுடன் நண்பர்கள் எழும்பி நடக்க படகு பயங்கரமா ஆடியது.படக்கோட்டி வேறு அவரிடம் இருந்த பதினைந்து அடி கம்பை எடுத்து முட்டு கொடுத்து பார்த்தார். ஹ்ம்ம், ஆடுகிற படகை நிறுத்த முடியவில்லை. எனக்கு வேறு வரும் போது பொன்னேரியில் சாப்பிட்ட தோசை வெளியே வர மாதிரி இருந்தது.
பின்பு ஆழமில்லா இடத்தில் படகை நிறுத்தி அங்கு பிறந்தநாளை கொண்டாடினேன்.சத்தியமா இது வரைக்கும் இப்படி ஒரு பிறந்தநாளை நான் கொண்டாடியது இல்லை.நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்....!


அங்கே முதலில் சவுக்கு தோப்புக்கு உங்களை அழைத்து செல்வார்கள், அது ஒரு குப்பை காடு (அவ்வளவும் நம்மை போல சென்றவர்களின் கைங்கரியம் தான்). இங்கு ஒரு நல்ல இடத்தில் camp போடலாம். பல இடங்களில் கண்ணாடி பாட்டில் உடைந்து கிடக்கும் பார்த்து செல்லவும். அங்கு உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த போது, கார்த்தியிடம் வேறு குரூப்பை சேர்ந்த ஒருவன் வந்து "ரெண்டு தங்கராஜா வடிக்கட்டி இருந்தா கொடுங்க" என்றார். கார்த்தி இல்லை என்று சொல்லி பார்த்தாலும் அவன் போவதாக இல்லை. தன் நண்பர்கள் வாங்க சென்று இருக்கிறார்கள் வந்தவுடன் தந்து விடுகிறேன் என்று கேட்டு ஒன்று வாங்கி சென்றார்.


ஒரு முக்கா மணிநேரம் கழித்து மறுபடியும் வந்தான், திரும்பவும் தனக்கு தங்கராஜா வடிக்கட்டி வேணும் என்றான்.அப்போது மற்றொரு நண்பர் அடித்த கமெண்ட் "வரும் போது வெறும் வாயை மட்டும் தான் எடுத்து வந்திருப்பான் போல" என்றார். இந்த சம்பவத்தில் இருந்து தெரிவது என்னவென்றால் பழவேற்காட்டில் படகில் ஏறும் முன் அனைத்து பொருளையும் வாங்கி வைப்பது நலம்.நாங்க கொண்டு போன தண்ணி தீர்ந்து போச்சு ரொம்ப அவஸ்தைபட்டோம்.அட குடிக்கிற தண்ணி தாங்க!!

அடுத்ததாக மணல் திட்டு பகுதிக்கு அழைத்து செல்வர் இங்கு தண்ணீர் முட்டி அளவு தான் இருக்கு இங்கு நான் என் நீச்சல் திறமையை நண்பர்களுக்கு காட்டினேன்.தனது ஹேர்ஸ்டைல் காரணமாக "புறா" என்று நண்பர்களால் அன்புடன் அழைக்கப் பட்டு வந்த, பிரபல மொக்கைப் பதிவர் சங்கரின் படகு ஓட்டும் திறமையைப் பார்த்த நண்பர்கள் "சுறா" என்று புதுப்பெயர் சூட்டி மகிழ, நொந்து போனார் அவர்.பழவேற்காடு முழுவதும் ஒற்றை துண்டுடன் வலம் வந்த 'கவர்ச்சி கண்ணன்' கார்த்தி, நான் போஸ் கொடுக்க கூலிங்கிளாஸ் தந்த ஜெய்சன், எனக்கு 'ஒத்துழைப்பு' தந்த சித்து, நட்டு, ராகேஷ், ஆல்-இன்-ஆல் அருணாச்சலம், ஜீத், பிரியாணிக்கு ஆர்டர் கொடுத்த சந்தோஷ், எப்போதாவது கண்களுக்கு காட்சி தரும் முஜிபுர், என் முகத்தில் கேக் தடவிய சங்கர். எப்போதும் போல அமைதியாகவே இருந்தஸ்ரீராம், பிரபுராஜ், சாய்கணேஷ், நவீன்..... அனைவருக்கும் என் நன்றிகள்.

முக்கியமான ஒருத்தரை மறந்துட்டேனே.....
10.2 MEGA PIXEL,THAILAND மேக் மூலம் நமக்கு தெளிவில்லாதவர்களையும் தெளிவாக படம் எடுத்த, பக்கத்து வீட்டு குட்டிப் பையனிடம் கடனை வாங்கி வந்திருந்த கிரிக்கெட் மட்டையை தண்ணீரில் ஊறவைத்து வாழை மட்டைபோல் ஆக்கியதால், என்ன சொல்லப் போகிறானோ என்று புலம்பிக்கொண்டே போன, அம்பத்தூர் லெனின் நகர் சரவணன் அவர்களுக்கு நன்றிகள்......

ஆறு வருடங்கள் முடிந்து விட்ட போதும், சந்தித்த மறுகணம் அத்தனையும் தொலைந்து பதின்ம வயதுகளுக்கு பயணம் செய்ய வைத்த இது போன்ற பயணங்கள் இனி அடிக்கடி நடக்க வேண்டும் என்பதைக் கூறி, அடுத்த வாரம் நடக்க உள்ளே நண்பன் முஜிபுர் ரஹ்மானின் திருமணத்தில் சந்திப்பதாய் சொல்லி விடைபெற்றோம்


நன்றி
சங்கர், ஜெட்லி, சித்து