Monday, November 30, 2009

ஜெட்லி வழங்கும் பொது அறிவு செய்திகள்

ஜெட்லி வழங்கும் பொது அறிவு செய்திகள்.

முக்கிய செய்திகள்:

# "கற்பழிப்பு காட்சியில் நடிக்க பயப்படமாட்டேன்,தொடர்ந்து
நடிப்பேன்"நடிகை கீர்த்திசாவ்லா பேட்டி.(இதுவல்லவோ வீரம்!)

சமீபத்தில் திரைக்கு வந்தவுடன் திரையை விட்டு வெளியேறிய
ஸ்வேதா என்ற படத்தில் கீர்த்திசாவ்லா அவர்கள் நன்றாக
திறமை காட்டியதாக ஊர் முழுக்க பரபரப்பான பேச்சு அடிபட்டது.
நான் கூட போனும்னு நினைச்சேன் ஆனா அதுக்குள்ள படத்தை
எடுத்து விட்டார்கள்(ச்சே...).மேல உள்ளே பேட்டி படம் வெளிவந்த நான்கு நாள் கழித்து
கீர்த்திசாவ்லா கூறியதாம்.(எப்படியெல்லாம் படத்துக்கு விளம்பரம்
செய்றாங்க!!).ஏன் இது மாதிரி ஒரு விளம்பரம் ஏதோ நான்
நடித்து தேசிய விருது வாங்குவேன் என்றாள் பாராவயில்லை
ஆனால் கீர்த்தியோ கற்பழிப்பு காட்சியில் தொடர்ந்து நடிப்பேன்
என்கிறார்...என்னமோ போங்க.....

ஆனாலும் கீர்த்திசாவ்லாவின் சேவை
தமிழ்நாட்டுக்கு தேவை.(ஹீ.. ஹீ..).

******************************************
விளம்பர இடைவேளை:

(பி.கு: தற்புகழ்ச்சிக்கு அல்ல)

போன வாரம் ஒரு அன்பர் கைபேசியில் அழைத்தார்.அவர்
கூறியதாவது தான் பப்ளிக் சர்வீஸ் தேர்வுக்கு தயார்படுத்தி
கொள்ள எனது பொது அறிவு செய்திகள் மிகவும்
பயனுள்ளதாக இருக்கிறது என்று என்னை மிகவும்
பாராட்டினார்.அப்புறம் மப்புசாமி சாரி குப்புசாமி அப்படின்னு
ஒருத்தர் நெதர்லாந்தில் இருந்து மெயில் அனுப்பி தன்
பொது அறிவு வளர நானும் ஒரு காரணம் என்று எழுதி
இருந்தார், நேரம் வரும் போது அந்த மெயில் உங்கள்
பார்வைக்கு வரும்.ஆதரவு தரும் அனைவருக்கும் நன்றி.

***********************************************

பயம் அறியான் அப்படின்னு ஒரு படம் வரபோகுது அதில்
தற்போது உதயதாரா அவர்கள் கதாநாயகி வேஷம் கட்டுகிறார்.
புதுமுக நடிகர் கதையின் நாயகனாக நடிக்கிறார்.நமது
பொல்லாதவன் புகழ் கிஷோரும் இருக்கிறார் சரி இது அல்ல
விஷயம்....

சில பட ஸ்டில்கள் என்னை ஈர்த்தன இதோ உங்கள்
பார்வைக்கும் எல்லோரும் வாலை நீட்டாதே என்பார்கள்
ஆனால் இந்த ஹீரோவுக்கு நாக்கை நீட்டாதே என்று சொல்ல வேண்டும் போல...(ஏன்டா ஜெட்லி அவர் நாக்கு அவர்
நீட்டுராறு உனக்கு என்னடா என்று நீங்கள் கேட்பது சரிதான்
).

மனதை ஒரு நிலைப்படுத்தும் கேள்வி:

இந்த ரெண்டு படத்துக்கும் என்ன வித்தியாசம்??
ஹீரோ ஒரு படத்தில் இடது புறம் இருக்கிறார் இன்னொரு
படத்தில் வலது புறம் இருக்கிறார் என்று தயவு செய்து
சொல்லாதிங்க...படத்தை நல்லா பாருங்க வேறு வேறு
பெண்கள்.இதில் இருந்து என்ன தெரியுது கதாநாயகியை
மாற்றி விட்டார்கள்.(கதாநாயகி மாறினாலும் அதே சீனை
திரும்பவும் படம் எடுத்த இயக்குனர் வாழ்க என்று ஹீரோ
மனதில் நினைத்திருப்பார்!!)

********************

புடவையில் முமைத்கான்:

திரையில் எப்போதும் கர்சீப்பை விட சிறியதாக ஆடையை
அணிந்து வரும் முமைத்கான் பவுர்ணமி நாகம் என்ற
டப்பிங் படத்தின் பாடல் வெளியிட்டு விழாவுக்கு முழு
நீள புடவையுடன் வந்து நம்மை கண்ணீர் கடலில்
ஆழ்த்தினார்.அந்த விழாவில் நடிகர் கருணாஸ் பேசும் போது
முமைத்கானுடன் தான் நடித்தது தான் செய்த பெரும்
பாக்கியம் என்றும் அதற்காக அவர் கடவுளுக்கு நன்றி
கூறியதும் நம்மை மெய் சிலிர்க்க வைத்தது.

****************************************

இந்த வார பொது அறிவு கேள்விகள்:


# தற்போது கலைமாமணி விருது பெற்ற தளபதி யார்?

A. புரட்சி தளபதி விஷால்

B. இளைய தளபதி விஜய்

C. சின்ன தளபதி பரத்

(மினி தளபதினு யாராவது அடுத்து வர போறாங்க!!)

# அடுத்த சிம்ரன் என்று இயக்குனர் ஷங்கர் யாரை கூறினார்??

A.பறவை முனியம்மா

B.தமன்னா

C.சுனைனா

பதில் தெரிந்தால் 55540 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டாம்
மீறி அனுப்பினால் உங்கள் கைப்பேசியில் மூன்று ரூபாய்
போய் விடும்.பதில் தெரியாதவர்கள் கமெண்ட் செய்து கேட்டு
தெரிந்து கொள்ளலாம்.

இந்த பொது அறிவு செய்திகள் அனைவரையும் சென்று அடைய
ஒட்டு போடவும்....

நன்றி:
indiaglitz.com

உங்கள்
ஜெட்லி சரண்.

Friday, November 27, 2009

யோகி?? - விமர்சனம்

யோகி ??இயக்குனர் அமீரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் யோகி.
சுப்ரமணியன் சிவா கதையிலும் இயக்கத்திலும் அமீரின்
வசனத்திலும் திரைக்கதையிலும் இன்று உலகம் முழுவதும்
ரிலீஸ்.படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட் என்பதாலும்
அமீரின் தயாரிப்பு என்பதாலும் படத்துக்கு ஏக எதிர்பார்ப்பு
இருந்தது உண்மை.ஆனால் யோகி எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றியதா??

பாசம் கிடைக்காமல் கொலை மற்றும் கொள்ளை
செய்யும் மனிதனாக அமீர் அவன் வாழ்வில் தீடிர்னு
ஒரு குழந்தை வந்தா என்ன ஆகும் இது தான் கதை.
அமீர் திரையில் தோன்றி முதல் பாடலில் குத்து மற்றும்
பரத நாட்டிய டான்ஸ் எல்லாம் ஆடுகிறார்.அமீரின்
கூட்டாளியாக பாடலாசிரியர் சிநேகன் ஒன்னும் பெருசா
வேலை இல்லை.மதுமிதா தன் பங்கை சிரிப்பாக செய்து
இருக்கிறார்.வின்சென்ட் அசோகன்,சுவாதிக்கா எல்லாம் வந்து
போகிறார்கள்.


ஒளிப்பதிவு நன்றாக இருந்தது.அமீரின் வசனம் படத்துக்கு பெரிய
ப்ளஸ்.முதல் பாதி முழுவதும் அமீரின் கேரக்டர் என்னவென்று
புரியவில்லை ஒரு வேளை சினிமா ரவுடி எல்லாமே இப்படிதான்
இருப்பாங்களா என்று டவுட் வருகிறது.ஒபெநிங் சீன் கொஞ்சம்
வித்தியாசமா இருந்தது.

காரில் குழந்தை கிடைத்தவுடன் அமீரின் தீடிர் மாற்றம் நமக்கு
விளங்க வில்லை.குழந்தையின் அழுகையை நிறுத்த அவர்
செய்யும் குறும்புகளை மற்றும் ரஜினி பாட்டுக்கு டான்ஸ்
ஆடுவது எல்லாம் ஒரு பத்து வருஷம் முன்னாடியே பார்த்த
காரணத்தால் சலிப்பு ஒன்றே ஏற்படுகிறது.அது ஏங்க புள்ளை
ரவுடி ஆனா அப்பாவை மட்டும் காரணம் சொல்றாங்க??
பிளாஷ்பேக் காட்சிகள் எதுவும் மனதில் ஒட்டவில்லை அமீரின்
மேல் பரிதாபத்தையும் வரவழைக்கவில்லை என்பது மட்டும்
உண்மை.

படம் திருவான்மியூர் ஏரியாவில் நடப்பதாக காட்டுகின்றனர் அதுவும் நான் படம் பார்த்த ஜெயந்தி தியேட்டர் பெயரை கூட ஒரு சீனில் சொல்வார்கள்.ஆனால் திருவான்மியூரில் இருக்கும் அமீர் குழந்தையுடன் சிட்டி சென்டர் சென்று பர்ச்சேஸ் செய்து விட்டு சத்யம் சினிமாஸ் பாத்ரூம்க்கு போறது கொஞ்சம் ஓவர்.

கஞ்சாகருப்பு செம மொக்கை ,ஈ படத்தில் வருகிற ஜீவாக்கும்
அமீர்க்கும் ரெண்டு வித்தியாசம் தான் ஜீவா ஈ படத்தில் யாரையும்
கொன்று விட்டு கொள்ளை அடிக்க மாட்டார் யோகியில் அமீர்
கொலை செய்ய தயங்காதவர். ஜீவா ஈயில் பாசத்துக்கு எல்லாம்
ஏங்க மாட்டார் ஆனால் இதில் அமீர் குழந்தை வந்தபின் எதற்கெடுத்தாலும் கண்கலங்கி விடுகிறார் பின்னணி வேற அந்த வயோலின் இசை(முடியல!).

குழந்தையை ஊரே தேடுமாம் ஆனா நம்ம அமீர் அண்ணன்
மட்டும் குழந்தையை பையில் அல்லது கூடையில் வைத்து அடிக்கடி மதுமிதா வீட்டுக்கு போய் குழந்தைக்கு பால் ஊட்ட சொல்வாராம்,இதை வேற கடைசியில் போலீஸ் விசாரணையில் தான் கண்டு பிடிப்பார்கலாம்.காதுல ஒரு முழம் சுத்தலாம் ஒரு பூக்கூடையை சுற்றினால் எப்படி.அமீரின் இயக்கி நடிக்காத அடுத்த படைப்பான கண்ணபிரானை காண துடிக்கும் அமீரின் ரசிகர்களில் நானும் ஒருவன்.

ஜெட்லி டவுட்:

# அது ஏன் கிளைமாக்ஸ் சீன் மட்டும் கட்டி முடிக்கப்படாத
பில்டிங்ல வைக்கிறாங்க?? அதுவும் மொட்டை மாடியில்
போய் ஏன் நிக்கிறாங்க??. பதில் தெரிஞ்சா சொல்லுங்க பாஸ்.

தியேட்டர் ரசிகர்கள் கமெண்ட்ஸ்:

# நல்லதானே படம் எடுத்துட்டு இருந்தார்..ஏன் இப்படி??

# கடைசியில் HULK மாதிரி கத்தி பைட்லாம் ஓவர் மச்சி.

இந்த விமர்சனம் பல பேரை சேர ஒட்டு போடவும் முக்கியமா
கமெண்ட் போடுங்க.

உங்கள்
ஜெட்லி சரண்.

Thursday, November 26, 2009

ஓர் இலக்கிய திறனாய்வு

நீங்கள் தமிழ்வழி கல்வியில் உங்கள் பள்ளிக்காலத்தை கழித்திருந்தால், உயர்நிலை வகுப்புகளில் இலக்கிய திறனாய்வு என்றொரு விஷயத்தை தமிழ் இரண்டாம் தாளில் கடந்து வந்திருப்பீர்கள். பயின்ற வகுப்பையும் அவ்வாண்டின் பாடத்திட்டத்தையும் பொறுத்து "செவ்வாழை"யையோ, "குறட்டை ஒலி"யையோ, "முள்முடி"யையோ கொத்துக்கறி போட்டிருப்பீர்கள். இதோ மீண்டுமொரு அரிய வாய்ப்பு. ஒரே வேறுபாடு, நீங்கள் ஆராயப்போவது கதையோ கவிதையோ இல்லை, ஒரு நகைச்சுவை துணுக்கு. ஆரம்பிக்கலாமா?

இரண்டு நாட்களாய், வடகிழக்கு பருவமழை போலவே, வருவதும் போவதுமாய் போக்கு காட்டிக்கொண்டிருந்த காய்ச்சல் முழுவீச்சில் தொடங்கியதாலும், அலுவலகத்தில் ஏசி அதிகமாயிருந்த காரணத்தாலும் சீக்கு வந்த கோழிபோல் தலையை தொங்கப்போட்டுக்கொண்டு ரயிலில் வீடுதிரும்பிக்கொண்டிருந்தேன். முன்னொருமுறை இதுபோன்றதொரு சூழலில் இதேபோல் தலையை தொங்கப்போட்டுக்கொண்டு வந்தபோது, ஒரு பெண்ணிடம் கொண்ட மோகத்தால் இறங்க வேண்டிய நிலையத்தை தவறவிட்டு அடுத்ததில் இறங்கி, அதற்குப்பின் வேருவண்டியும் இல்லாத காரணத்தால் ஐந்து கிமீ நடந்த அனுபவம் இருப்பதால், தூங்க விடாத இரைச்சலாக இருக்கட்டுமென பண்பலையை ஆன் செய்து handfreeயை காதில் வைத்தேன்.அலைவரிசை மாற்றி மாற்றி கேட்டுக்கொண்டிருந்தபோது காதில் விழுந்தது ஒரு முத்து. இந்த ஆண்டின் மிகச்சிறந்த நகைச்சுவையென சுஜாதா விருது கொடுத்திருக்கக் கூடிய அந்த ரத்தினம் இதோ."நீங்கள் அடுத்து கேட்கப்போவது இளையதளபதி விஜய் நடித்த வில்லு என்ற சூப்பர் ஹிட் திரைப்படத்திலிருந்து ஓர் அழகான, இனிமையான பாடல்"

இங்கே துவங்குகிறது உங்களுக்கான சவால், மேலே இருக்கும் வரியில் அடிக்கோடிடப்பட்டிருக்கும் எந்த வார்த்தை அதிகபட்ச நகைச்சுவை உணர்வைக் கொண்டிருக்கிறது? எந்த வார்த்தை இந்த வாக்கியத்தை உலகத்தரத்திற்கு உயர்த்துகிறது? உங்கள் இலக்கிய திறனாய்வை பின்னூட்டத்தில் சமர்ப்பிக்கலாம். மிகச்சிறந்த ஆய்வுக்கட்டுரைகளுக்கு முதல் பரிசாக, வெளிவர இருக்கும் வேட்டைக்காரன் திரைப்படத்தின், முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட் ஒன்று வழங்கப்படும். அந்தக் காட்சிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் கம்பெனி சார்பில் புக் செய்யப்படும் என்பதையும் உங்களுக்கு ஒரே ஒரு டிக்கெட்தான் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம் (தற்கொலை செய்துகொள்ள தனியாய்தான் செல்ல வேண்டும்). இரண்டாம் பரிசாக வில்லு மற்றும் குருவி திரைப்படங்கள் அடங்கிய DVD வழங்கப்படும். மூன்றாம் பரிசாக என்ன கொடுக்கலாம் என்பதையும் பின்னூட்டத்தில் குறிப்பிடலாம்.

இந்த ஒற்றைவரி தந்த உற்சாகத்தாலும், புதியதொரு இலக்கிய படைப்பை உங்களுக்கு வழங்க ஒரு வாய்ப்பு கிடைத்த சந்தோஷத்தாலும், கொதிக்கும் உடம்பையும் மறந்து சைக்கிளை உருட்டியபடி ஸ்டேஷனிலிருந்து வீடுவந்து கொண்டிருந்தபோது, Z போல் வளைத்து வளைத்து ஓட்டிவந்த ஒரு புண்ணியவான் வண்டியை நேரே என் சைக்கிளில் விட்டார், அவர் அணிந்திருந்த ஸ்லீவ்லெஸ் T-Shirt உம், கையில் கட்டியிருந்த கைக்குட்டையும் பார்த்தபோது, அவர் விஜய் ரசிகராயிருக்க கூடிய சாத்தியங்கள் மிக அதிகமென தோன்றியது. யோசனை செய்தபோதே வண்டியில் வந்து மோதுபவர்கள், வீட்டுக்கு ஆட்டோ அனுப்பினால் என்ன செய்வது என்ற அச்சம் இருக்கும் போதிலும், நீங்கள் தரப்போகும் ஆதரவின் தைரியத்தில்இப்பதிவை இடுகிறேன்.

டிஸ்கி:
இப்பதிவை படிக்கும் ரசிகர்கள் யாரும் கோபப்படவேண்டாமென்றும், அசல் மற்றும் சிங்கம் திரைப்படங்கள் வெளிவரும்போதும் இதுபோன்ற போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

Wednesday, November 25, 2009

2012 இல் நம் நடிகர்கள்.....

2012 இல் நம் நடிகர்கள்.....


2012 என்ற படத்தில் நம் ஊர் நடிகர்கள் நடித்திருந்தால் எப்படி
இருந்திருக்கும் என்ற ஒரு சிறு கற்பனையே இந்த இடுகை.
அந்த படத்தின் ஹீரோவே நம்ம தமிழ் நடிகர் போல் தான்
நடிச்சிருந்தார் என்று நீங்கள் சொல்வது சரி, இருந்தாலும் நம்ம
ஊர் நடிகர்கள் கிட்ட வர முடியுமா.....முக்கியமான விஷயம்

பின்வரும் யாவையும் சிரிக்க மட்டுமே தயவு செய்து சிந்திச்சுராதிங்க.

முதலில் அஜித்:

அந்த எரிமலை வெடிக்கும் சீனில் நம் தல அஜித் இருந்திருந்தால்


தல அவர்கள்,எரிமலை பந்துகளை பேஸ்பால் மட்டையால்
அடித்து திரும்பி எரிமலைக்குள்ளே அனுப்புகிறார்.கடைசி
எரிமலை பந்தை காலால் நிறுத்தி அதன் பின் அந்த எரிமலை
பந்தில் சிகரட் பத்த வைக்கிறார்.அப்புறம் வழக்கம் போல்
பேஷன் ஷோவில் நடப்பது போல் திரையில் நம்மை பார்த்து
நடந்து வருகிறார்.(என்னது அதே கருப்பு கலர் கோட்டு பின்னாடி
பில்லா பாட்டா??).


சூர்யா:

சூர்யா இதுல கை குழந்தையா வர்றாரு... ஆமா ஆமா அதே
ஒட்டு வேலை தான்.1990 ல கை குழந்தையா இருக்கும் போதே
வீட்டை விட்டு ஓடி போயிடுறாரு ஸாரி தவழ்ந்து போயிடுறாரு.
அப்புறம் 22 வருஷம் கழிச்சு அவருக்கு 23 வயசு ஆயிடுது.
படத்துல அந்த கண்ணாடி பில்டிங் ஒன்னு விழுமே அதை
நம்ம சூர்யா தாங்கி பிடிக்கிறாரு அங்கே தான் சமீராரெட்டியை பார்க்கிறார்,அப்புறம் என்ன லவ்ஸ் தான் ரோமென்ஸ் தான்
உலகம் அழிஞ்ச அவங்களுக்கு என்ன....


விஷால்:

நம்ம புரட்சி தளபதி விஷாலுக்கும் எதிர் வீட்டில் இருக்கும்
ஸ்ரேயாவுக்கும் லவ்ஸ்.அப்போதான் நிலநடுக்கும் வருது.
படத்தில் சூப்பர் மார்க்கெட் ரெண்டாக பிளக்குமே அது போல்
விஷால் வீட்டுக்கும் ஸ்ரேயா வீட்டுக்கும் இடைய உள்ள
ரோட் பிளந்து விடுகிறது.அப்ப தான் நம்ம விஷால் மண்ணு
கூட ஒரு அரைமணி நேரம் மொக்கை போட்டு பேசுறார்.
( எ.கா- தோரணை கிளைமாக்ஸ்) விஷாலின் மொக்கை
தாங்காமல் உடனே தானாகவே பிளந்த ரோட் ஒட்டிகொள்கிறது
அப்புறம் என்ன பாட்டுதான்.விஜய்:

விஜய் கப்பலில் முட்டிக்கு கீழ் ஒரு கர்சீப் கட்டி கொண்டு
தலையில் ஒரு தொப்பி போட்டு கொண்டு எதிரிகளுக்கு
தெரியாமல் மாறுவேஷத்தில் இருக்கிறார்.அப்போ தான்
சுனாமி வருது.2012 படத்தில் ஒரு தாத்தா சுனாமியை
கப்பலில் வெளிய வந்து பார்ப்பாரே அது போல் நம் விஜய்
வந்து பார்க்கிறார்.(என்னது பஞ்ச் டயலாக்கா??) சுனாமிக்கு
எல்லாம் பஞ்ச் உட்ட எப்படி.சுனாமி கப்பல் கிட்டே நெருங்கும்
போது சுசுன்னு ஊதுகிறார் அவளோதான் சுனாமி அப்படியே
திரும்பி போய் விடுகிறது.
(போவாதுனு சொல்றிங்களா ?? )


டி.ஆர்:

ஸ்பேஸ் ஷிப் ஏறி தப்பிக்க டி.ஆர் வருகிறார் அப்போது அவரை
காவலாளி தடுத்து நிறுத்துகிறார்.

டி.ஆர்: நான் யார் தெரியுமா?முன்னால் சிறுசேமிப்பு துறை
தலைவர் என்னை முதல்ல உள்ள விடுயா...

காவலாளி: மந்திரிகளே பின்னாடி தான் நிக்குறாங்க நீங்க
அவுங்க பின்னாடி போய் நில்லுங்க.

டி.ஆர்: u r appressing suppressing deppressing supervising a tamilian...
நான் தமிழன்டா பச்சை தமிழன்டா...

காவலாளி: இப்போ யாரு இல்லன்னு சொன்னங்க??

டி.ஆர்: நான் மூச்சை பிடிச்சு பேசுனா நீ என்னையே கலாயிக்கிரியா!
சரி விடுப்பா நான் சால்ட் கொட்டா சரசு கிட்டயே போறேன். என்று திரும்பி போகிறார்.மும்தாஜ்க்கு போன் போட்டு
எங்கே இருக்கே அடுத்து நான் வீராசாமி பார்ட் -2 எடுக்க போறேன் நீ தான் நாயகி.நம்ம படம்தான் 0001 வருஷ பொங்கலுக்கு முதல் ரிலீஸ்.

சரத்குமார்:

சரத்குமார் கட்சி அலுவலத்தில் இருந்து நமக்கு வந்த கடிதம்
தேதி 10.12.12.

20.12.12 அன்று உலகம் அழியும் என்று அறிவித்து இருக்கிறார்கள்.
இதை எங்கள் கட்சி மென்மையாக கண்டிக்கிறது.என் படம்
ஜக்குபாய் 20.12.12 அன்று ரிலீஸ் தேதி அறிவிக்கபட்டு ஒரு
வருடம் ஆகிறது.என் வளர்ச்சியை பிடிக்காத யாரோ பீதியை
கிளப்பி விடுகிறார்கள்.நாங்க கண்டிப்பா 0004 ஆம் வருஷம்
ஏதோ ஒரு நாட்டில் அல்லது கிரகத்தில் ஆட்சியை பிடிப்போம்.

கமல்:

தேதி: உலகம் அழியும் கடைசி நாள்.
நேரம்: சுனாமி வரும் நேரம்
.

அசின்: ஏன் உலகம் அழியுது அழியுதுனு சொல்றேள்..

கமல்: நான் அழியனும்னு சொல்லல அழிஞ்சா நல்ல இருக்கும்னு
தான் சொன்னேன்.


உங்களுக்கு பிடிச்சா கண்டிப்பா ஒட்டு போடுங்க , கமெண்ட்
போட்டால் சந்தோசம்.

உங்கள்
ஜெட்லி சரண்.

Monday, November 23, 2009

உங்களோட கொஞ்சம் பேசணும்

அலுவலகத்தில் மும்மரமாக வேலை (!!) செய்து கொண்டிருந்தபோது, இன்டர்காம் கத்தியது, யாரென்று பெயரை பார்த்தபோது, அவள், குறுக்கும் நெடுக்கும் நடக்கும் போது அவள் அரைக்கண்ணாலும் (எப்போதாவது), நான் முழுக்கண்ணாலும் (எப்போதும்) பார்ப்பது தவிர, இதுவரை ஒரு வார்த்தை பேசியதில்லை, வேறு வேறு துறைகளில் இருப்பதால், பேச அவசியமும் ஏற்பட்டதில்லை. இப்போது எதற்கு அழைக்கிறாள், அழைப்பதுஅவள்தானா அல்லது வேறு யாரும் அவள் மேஜையிலிருந்து அழைக்கிறார்களா, இப்படியெல்லாம் எண்ணங்கள் ஒரு நொடிக்குள் மனதில் கடந்துபோக, தொலைபேசியை எடுத்தேன்.
நான் : ஹலோ, சங்கர்

அவள் : நானதான் பேசறேன்,

நான் : சொல்லுங்க,

அவள் : உங்க கூட கொஞ்சம் பேசணும்,

நான் : பேசலாமே, இப்போ நான் Free (வெட்டி) தான்,

அவள் : போன்ல இல்லை, நேர்ல பேசணும்,

நான் : சரி, நீங்க என் இடத்துக்கு வாங்க,

அவள் : ஆபிஸ் விஷயம் இல்லை, கொஞ்சம் பர்சனலா பேசணும், வெளியில எங்கேயாவது பேசலாம்,

நான் : சரி, எங்கே பார்க்கலாம்னு நீங்களே சொல்லுங்க,

அவள் : பக்கத்து பில்டிங்ல இருக்கிற சாப்பாட்டு நீதிமன்றத்துல (Food court) பார்க்கலாம்,

நான் : ஆமா, என்ன விஷயம்னு சொல்லவே இல்லியே,

அவள் : இப்போதான் கேக்கணும்னு தோணிச்சா?

நான் : நீங்களே சொல்லுவீங்கன்னு காத்திருந்தேன் (நாங்கல்லாம் ரொம்ப நல்லவங்க),

அவள் : நேர்லயே சொல்றேன்,

டொக் (ஒருகாலத்துல, நாங்கல்லாம் ராஜேஷ்குமார் விசிறிகள்)
மதியம் ஒரு மணி, சோத்துக்கடை, இருவரும் எதிரெதிர் இருக்கைகளில்,

நான் : சொல்லுங்க, என்ன விஷயம்,

அவள் : நான் சொல்றது இருக்கட்டும், நான் என்ன பேசப்போறேன்னு எதிர்பார்த்து வந்தீங்க?

நான் : நான் எந்த விஷயத்திலும், எதையும் எதிர்பார்ப்பது இல்லைங்க,

அவள் : பொய் சொல்லாதீங்க, சும்மா சொல்லுங்க

நான் : எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லை, ஆனா, சில யூகங்கள் இருந்தது,

அவள் : என்ன யூகங்கள்?

நான் : "நீங்க தானே பிரபல (!!!) பதிவர் சங்கர், உங்க பதிவுகள் (மொத்தமே பத்து தான்) எனக்கு ரொம்ப பிடிக்கும், நான் உங்க விசிறி," அப்படின்னு சொல்லுவீங்களோன்னு நினைச்சேன்,

அவள் : இது உங்களுக்கே ரொம்ப ஓவரா தெரியல? அடுத்து என்ன.

நான் : "நேத்து நீங்க ஒரு புத்தகம் வச்சிருந்தீங்களே, அதை எனக்கு தர முடியுமா, ரொம்ப நாளா படிக்கணும்னு ஆசை,"

அவள் : நீங்க நேத்து ஆபிஸ் வந்தீங்களா இல்லையான்னே எனக்கு தெரியாது, இதுல புத்தகத்த வேற கேக்குறாங்களா? அடுத்து,

நான் : "உங்க சொந்த ஊர் அம்பாசமுத்திரம் தானே, எங்க ஊரும் அதுதான், எங்க அப்பாவுக்கு உங்க அப்பாவ நல்ல தெரியுமாம், உங்கள வீட்டுக்கு கூட்டிவர சொன்னார்"

அவள் : எங்க அப்பா பொறந்து வளர்ந்தது எல்லாம் இந்த சிங்காரச் சென்னையில்தான் இதுல இதுவேறயா, அப்புறம்,

நான் : வேறென்ன, "உங்க நடை (!) உடை (!!) பாவனை எல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, நீங்க மத்தவங்களோட பழகற விதம் என்ன உங்கள நோக்கி ஈர்க்குது (!!!), நீங்க ரொம்ப அழகா (!!) வேற இருக்கீங்க, மொத்ததுல உங்கள எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு"

அவள் : இப்படீல்லாம் வேற நினைப்பிருக்கா, அப்புறம்,

நான் : வேற ஒண்ணும் இல்லீங்க, நீங்களே சொல்லிடுங்க, இதுல ஏதாவது ஒண்ணுதானே?

அவள் : ஒரு புண்ணாக்கும் இல்லை, ஒருவாரமா பதிவு எழுத விஷயம் கிடைக்காம மண்டைய உடைச்சிக்கிட்டிருக்கியே, அதுதான் இப்படி பேசணும்னு கூப்பிட்டா அதையே பில்ட்-அப் பண்ணி ஒரு பதிவா எழுதிரமாட்ட, அதுக்குதான்.


நன்றி
சங்கர்


டிஸ்கி

  • இது கதை மாதிரி இல்லையே, நடந்த விஷயம் மாதிரி இருக்கேன்னு கேட்பவர்களுக்காக "கதை" என்ற லேபிளும், எனக்கு நடந்த விஷயம் இவனுக்கு எப்படி தெரியும்னு ஆச்சரியபடரவங்களுக்காக "சம்பவம்" என்ற லேபிளும் தரப்பட்டுள்ளது,


  • பேர் போடாம அவள் அவள்னே சொன்னதுனால எனக்கு தைரியமில்லைன்னு நினைச்சிடாதீங்க, ஒரே நேரத்தில ஏழெட்டு பேர் கண்ணுல வடபடறாங்க (தென்படும்போது, வடபடக்கூடாதா? (நன்றி கசீ சிவகுமார்)) அதுல யாருக்காவது உண்மைலேயே ஏதாவது அபிப்ராயம் இருந்து, நான் வேற யார் பேரையாவது போட்டுரக்கூடாது பாருங்க, அதுக்குதான்.


புகைப்படம் நன்றி : Sulekha.com

Friday, November 20, 2009

பழசிராஜா - விமர்சனம்

பழசிராஜா - விமர்சனம்


இன்னைக்கு காலையில் 11 மணி வரைக்கும் நான் பழசிராஜா படத்துக்கு போகணும்னு நினைக்கில,காரணம் வூட்லண்ட்ஸ் தியேட்டரில் பழசிராஜா மலையாளத்தில் திரையிட்டு இருக்கிறார்கள். நமக்கு தான் மலையாளத்தில் நல்ல படம் பார்த்து பழக்கம் இல்லையே என்று யோசித்தேன்.அப்புறம் தான் தெரிந்தது தியாகராஜாவில் நான்கு ஷோ பழசிராஜா போட்டு இருக்கிறார்கள்
என்று.காலையில் நான் தியேட்டரில் பார்த்த போது ஆதவன் போஸ்டர் தான் ஒட்டி இருந்தார்கள் தீடிர்னு பழசிராஜா வந்துட்டாரு சரின்னு நானும் போய்ட்டு பார்த்து வந்துட்டேன்.

கேரளாவில் வயநாடு தான் பழசிராஜாவின் கோட்டை அங்கு
ஆக்கரமிக்கும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போர் புரிந்த மன்னனின்
கதை தான் பழசிராஜா.படம் கிட்டதட்ட மூணு மணி நேரம்,
இவங்க உஷாரா முதல் ஒரு மணி நேரத்தில் இன்டெர்வல் விட்டுட்டு
அடுத்து ரெண்டு மணி நேரம் நம்மை உட்கார வைக்கிறார்கள்.


மம்மூட்டி பழசிராஜாவாக வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.போர் படை தலைவராக வரும் நம்ம சரத்குமார்க்கு அவ்வளவு முக்கியத்துவம் இல்லைனாலும் அவரின் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்.குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் மனோஜ் ஜெயன் அருமையாக நடித்து இருக்கிறார்.சுமன் ஆங்கிலேயர்களின் கைப்பாவையாக வருகிறார்
சரத்குமாரின் கையால் உயிர்விடுகிறார்.


மற்றபடி கனிகா அவர்கள் நன்றாக திறமையை வெளிபடித்தி
உள்ளார், நான் நடிப்பு திறமையை பற்றி சொல்லவில்லை என்று
நீங்கள் டி.வி.யில் பாடல் காட்சி வந்தால் அறிவீர்கள்.பத்மப்ரியா
ஏதோ வர்றார் போறார் அவ்வளவுதானு இல்லாம ஆண்களுக்கு
நிகர போர் சண்டை போடுறாங்க.

வாழ்க்கை வரலாறு படம் என்றாலே மெதுவாகத்தான் போக
வேண்டுமா?? இல்லை படத்தின் நீளம் அதிகமாகத்தான் இருக்க
வேண்டுமா??.

பொதுவாகவே எனக்கு வரலாறு சம்பந்தப்பட்ட அனைத்து புத்தகங்கள் மற்றும் படங்களும் பிடிக்கும்.இந்த வார விகடனில் வந்த "இந்த சிறுமி இப்போது" என்ற தலைப்பில் வந்த அ.முத்துலிங்கம் எழுதிய கட்டுரை மற்றும் அந்த பேட்டியை தான் முதலில் படித்தேன். எனக்கு அந்த அளவுக்கு வரலாறு மேல காதல்.

ரைட் பழசிராஜாவுக்கு வருவோம், படத்தில் கொட்டாவி வர
வைக்கும் காட்சிகள் இருக்கு.ஒரு வேளை அது டப்பிங் என்ற
காரணத்தால் கூட இருக்கலாம் அல்லது பக்கத்துக்கு மாநில
என்ற வாசனையாக கூட இருக்கலாம்.ஒரு காட்சியில்
மம்மூட்டியை கைது செய்து அழைத்து செல்ல ரெடிஆக
இருப்பார்கள் அப்பொழுது கனிகா தண்ணி கொண்டு வரும்
காட்சி மிக அருமை(யாரு கனிகாவா??அது இல்லங்க அதுக்கு
அப்புறம் வர்ற காட்சி).


பழசிராஜா, ஒருவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் போர்தந்திரத்தை
அறிந்த கொள்ள நல்ல படம்.ரெண்டு குத்து பாட்டு மற்றும் மூணு சண்டை காட்சிகள் எதிர் பார்ப்பவர்களுக்கு இந்த பழம் புளிக்கும்.

போனஸ் செய்தி :


இடைவெளியின் போது டைட்டானிக் புகழ் இயக்குனர் ஜேம்ஸ்
கமேரூன் இயக்கிய அவதார் என்ற படத்தின் ட்ரைலர் செம
அட்டகாசம்.உலகம் முழுவதும் அடுத்த மாதம் 18 தேதி
ரிலீஸ் ஆகிறது. வேட்டைகாரனுக்கு போட்டியாக அவதார் இருக்கும்.

இந்த விமர்சனம் பிடிச்சா கண்டிப்பா ஒட்டு போடுங்க முக்கியமா கமெண்ட் போடுங்க.

உங்கள்
ஜெட்லி சரண்

Thursday, November 19, 2009

தேவியும் நானும் பின்னே ஒரு செட் பூரியும்.....

தேவியும் நானும் பின்னே ஒரு செட் பூரியும்.....நண்பர்களே நீங்க பாட்டுக்கு தலைப்பை பார்த்து தப்பா பீல் பண்ணாதிங்க.நான் சொல்ல வந்தது எனக்கும் தேவி தியேட்டருக்கும் ஆன பிணைப்பு பற்றி.எனக்கு நினைவு தெரிஞ்சு தேவியில் நான் பார்த்த முதல் படம் உயிரே, ஏன் அவ்ளோ லேட்ஆ அங்கே படம் பார்த்தேன் என்றால்
என்னை சுற்றி எங்கள் ஏரியாவில் நான்கு தியேட்டர்கள் உள்ளன. அதனால் முக்காவாசி படங்கள் எங்கள் ஏரியாவில் ரிலீஸ் ஆகிவிடும்.அதுவும் இல்லாமல் அறியா வயசில் அவ்ளோ தூரம் சென்று படம் பார்ப்பது ரொம்ப கஷ்டம்.

ஆனால் ஒன்று நான் மொக்கை படங்கள் பார்ப்பது இன்று நேற்றல்லா என் சிறு வயது முதல் நான் மொக்கை படங்களையும் பார்த்து வளர்ந்து இருக்கிறேன் என்பது மட்டும் உண்மை.

கொசுவர்த்தி சுருள்(அதாங்க பிளாஷ்பேக்):

அடிக்கடி தேவி தியேட்டர் போக ஆரம்பித்தது நான் இளநிலை
பட்டபடிப்பு படித்த??போது தான்.அப்போது எனக்கும் சித்து மற்றும்
நட்டுடன் அவ்வளவு நெருக்கம் இல்லை.விவேக்கும் வடிவேலும்
கலக்கிய மனதை திருடி விட்டாய் என்ற படம் தான் நான்
கல்லூரியில் சேர்ந்த போது பார்த்த படம்.அந்த படம் தேவி
கலாவில் ஓடியது.நானும் என் சில நண்பர்களும் சென்றோம் அங்கே
பார்த்தால் சித்துவின் குழு எங்களுக்கு முன்னவே செம
ரகளை செய்து கொண்டிரிந்தனர்.தியேட்டர் புல்லா கல்லூரி
மாணவர்கள் தான் செம அட்டகாசம் செய்தோம்.
http://www.orkut.co.in/Main#Community?cmm=93414598

உங்களுக்கு இந்த பதிவு பிடிச்சிருந்தா ஒட்டு போடுங்க..
கமெண்ட் போட்டால் மேலும் சந்தோசம்.

அன்புடன்
ஜெட்லி சரண்.


தேவி என்னை போன்ற சினிமா ரசிகர்களுக்கு இன்னொரு
வீடு என்றே சொல்ல வேண்டும்,ஏன் என்றால் அங்கே
முக்காவாசி படங்கள் ரிலீஸ் ஆகிவிடும்.நான் கடைசியாக
அங்கே பார்த்த படம் சக்கரக்கட்டி என்று நினைக்கிறேன்,
நிறைய பேர் அதை மொக்கை படம் என்று சொன்னார்கள்
இருந்தும் நான் போய் படம் பார்த்தேன் அது ஏன் என்றால்
எப்படி அவளோ கேவலமா படம் எடுத்துங்கானு தெரிஞ்சிக்கதான்.
நேபாளி மற்றும் கற்றது தமிழ் படம் பார்க்கும் போது காலுக்கு
அடியில் பெருச்சாளி ஓடியது இன்றும் என் நினைவில் உள்ளது.

பிளாஷ்பேக் ஓவர்.இனி:

திங்கள் அன்று நான் தேவிக்கு சென்ற போது தற்காலிக வண்டி நிறுத்தும் இடத்தில் வண்டியை நிறுத்தி டிக்கெட் எடுக்க சென்றேன்,
ஒன்றும் கூட்டமில்லை ஆனால் முன்பதிவு முன்பே நடைபெற்று
இருந்ததால் நான் M வரிசை டிக்கெட்டை கேட்டு வாங்கினேன்.
அங்கே வேலை செய்யும் பெண் பாதுகாவலரிடம் எப்போது உள்ளே
அனுமதிப்பிர்கள் என்று கேட்டேன் அதற்கு அந்த பெண் 2.45 மணிக்கு
உள்ளே அனுமதிப்போம் என்றாள்.


சரி ரைட் அப்படின்னு சொல்லி சாந்தி தியேட்டர் அருகே சப்வேயில்
இறங்கி அந்த பக்கம் இருக்கும் பிளாட்பாரம் புத்தக கடைக்கு
(நோட் பண்ணுங்க நல்ல புத்தக கடை நீங்க பாட்டுக்கு சரோஜாதேவி இல்ல கில்மா என்று நினைக்க வேண்டாம்) சென்று ஏதாவது வாங்குற மாதிரி இருக்கான்னு பார்த்தேன்.பார்த்தவுடன் திரும்பி தேவிக்கு சென்றுவிட்டேன். ஏன் என்றால் அந்த புத்தக கடையில் ஒரு புத்தகத்தை நன்றாக பார்வையில் தெரியும் படி வைத்திருந்தனர், அது நீயா நானா புகழ் கோபிநாத் எழுதிய "ப்ளீஸ்! இந்த புத்தகத்தை வாங்காதீங்க"!!.பெரிய நாட்டமை அவரே சொல்லிட்டார் அப்புறம் போய் என்னத்த வாங்கிட்டு,படிச்சிட்டு....

தேவி என்றாலே பெரிய திரையும் சவுண்டும் தான் சூப்பர்.
இப்போது புது பொலிவுடன் இருக்கும் தேவி நன்றாகவே
உள்ளது.புதுபிக்கப்பட்ட தேவியை பற்றி என் அபிப்ராயங்கள்
சில

தங்களின் போட்டியாளராக நினைக்கும் தியேட்டர் அளவுக்கு
தேவி தியேட்டர் இல்லாதது வருத்தமே!!.நான் சொல்வது உள்கட்டமைப்பில் அல்ல,பார்வையாளர்களை திருப்திப்படுத்தும்
வகையில்.தேவி தியேட்டர் பாதுகாவலர்களுக்கு இன்னும் பயிற்சி
வேண்டும் என்பது என் கருத்து, முக்கியமாய் பார்வையாளர்களை
அவர்கள் நடத்தும் முறை சரியில்லை.போக போக எல்லாம்
சரியாகும் என்று நினைக்கிறேன்.2012 படம் பார்க்கும் போது
சில காட்சிகளில் அவ்வளவு தெளிவில்லை.

மற்றபடி தேவி தேவிதான்.ரசிகர்களுடன் உற்சாகமாக படம்
பார்க்க நம்ம தேவியை விட்டா வேற யாரு இருக்கா.....

போனஸ் செய்தி:

ஹோ ! பூரி பத்தி சொல்லவே இல்லைல, சாந்தி தியேட்டர்
பக்கத்தில் ஒரு டாஸ்மாக் இருக்கும் அங்கே போகாதிங்க!!
அதுக்கு பக்கத்தில் ஒரு டீ கடையில் சுட சுட பூரி போட்டு
தருவாங்க,அந்த பக்கம் போன ட்ரை பண்ணி பாருங்க.
இந்த படத்தில் இருக்கிற மாதிரி எல்லாம் இருக்காது
பக்கா லோக்கல்ஆக இருக்கும்.ஆர்குட்டில் தேவி குழுமத்தில் சேர இந்த லிங்கை சொடுக்கவும்..

Tuesday, November 17, 2009

சூரியனுக்கே டார்ச் அடிப்போம் - இன்னுமொரு ஆராய்ச்சிக் கட்டுரை

இப்போது எங்கு பார்த்தாலும், உலகம் வெப்பமயமாகிறது, பனிமலை உருகுது, கடல் நீர்மட்டம் உயருதுன்னு தான் பேச்சு. வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள், வளர்க்கப்படும் நாய்கள், ச்சே, நாடுகள்னு, எல்லா நாட்டு தலைவர்களும் கூடிக் கூடி பேசறாங்க. இதே நிலைமை நீடிச்சா முதலில் கடலுக்குள் போகும்னு நம்ம விஞ்ஞானிகள் ஜோசியம் சொல்லி இருக்கும் மாலத்தீவு மக்களோ, 'எவனோ தூங்கறதுக்கு, நாங்க எதுக்கு கண் முழிக்கணும்னு', கேட்டுக்கிட்டிருக்காங்க. நாமோ, வீட்டுக்குள்ள சுனாமி வரும்வரை எங்களுக்கு கவலை இல்லை என்று சுற்றித் திரிகிறோம். எப்படியும் இருநூறு வருஷத்துக்குள்ள வேறு இடம் தேடவேண்டி இருக்கும், அது ஒரு நூறு வருஷம் முன்னாடியே நடந்தா ஒண்ணும் தப்பில்லை. எந்த சிக்னலிலும் வண்டிய ஆப் பண்ண வேண்டாம், இருக்கற ஏரி, குளமெல்லாம் வீடு கட்டலாம், இருக்கும் கொஞ்ச நஞ்ச காட்டையும் வெட்டி விற்றுவிடலாம், ஆளுக்கு ஒரு கடப்பாரை எடுத்து ஓசோன் மொத்தத்தையும் ஓட்டையாக்கி விடலாம், இன்னும் ஒரு அம்பது வருஷம் முன்னாடியே இடத்தை காலி செய்துவிடலாம், ஒண்ணும் தப்பில்லை.சூரியனிலிருந்து வரும் புறா ஊதா (UV) கதிர்கள் பூமியை தாக்காமல் தடுக்க இயற்கை அமைத்த குடைதான் இந்த ஓசோன் படலம் (ஆறாம் வகுப்பிலேயே படித்த விஷயம்னு கூறுவது காதில் விழுகிறது), எத்தனையோ கோடி ஆண்டுகளாய் சூரியனாலேயே தாண்ட முடியாத அந்த படலத்தை, வெறும் நூறாண்டு விஞ்ஞான வளர்ச்சி மூலம் கிழித்தெறிந்தது, மனித குலத்தின் மகத்தான சாதனை தான். வட அமெரிக்கா முழுவதையும் விழுங்கும் அளவு விரிந்துவிட்ட ஓட்டையை பார்த்தபின்தான், விஷயம் கை மீறி செல்வதற்குள் ஏதாவது செய்தாகவேண்டும் என்று முடிவு செய்த உலக விஞ்ஞானிகள், ஏசி ரூம் போட்டு யோசித்து ஒரு புது வழி கண்டுபிடித்திருக்கிறார்கள், அதன் ஒரு வரிச்சுருக்கம் தான் இந்த கட்டுரை தலைப்பு.


சூரிய கதிர்கள் எவ்வளவு அதிகமாய் ஓசோன் ஓட்டை வழியே வருகிறதோ அவ்வளவுக்கவ்வளவு வேகமாய் பூமியில் பனிப்பாறைகள் உருகும், வெப்பநிலை உயரும். இந்த கதிர்களை வரும் வழியிலேயே மடக்கி திருப்பி அனுப்பிவிட்டால், பாதிப்பின் அளவு குறையும். இந்த திட்டத்தின்படி பூமியின் காற்றுமண்டலத்தின் மேலடுக்கான ஸ்டரடோஸ்பியரை (stratosphere), பல்லாயிரம் டன் எடை கொண்ட, எதிரொளிக்கும் தன்மை உடைய, சல்பேட் (sulfat) போன்ற வேதிபொருட்களை சிறுசிறு துகள்களாக செய்து நிரப்புவதன் மூலம் சூரிய ஒளியை எதிரொளித்து வெப்பத்தின் அளவை குறைக்கலாம் என கண்டறிந்திருக்கிறார்கள். கடந்த 1991-ஆம் ஆண்டு பிலிப்பைன்சின் பினாடுபோ (pinatubo) எரிமலை நெருப்பை கக்கிய போது வெளிவந்த சல்பர் புகை சில ஆயிரம் சதுர கிமீ பரப்பை வானம் தெரியாத அளவு மூடிவைத்தது. ஆனால் இந்த வெடிப்பின் மூலம் நிகழ்ந்த ஒரு பெரும் நன்மை, புவியின் வெப்பநிலை ஒரு பாரன்ஹீட் அளவு குறைந்தது. இந்த நிகழ்வுதான் மேலே சொன்ன யோசனையை விஞ்ஞானிகள் மத்தியில் தோற்றுவித்தது. இந்த மாபெரும் யோசனையின் நடைமுறை சாத்தியங்கள் குறித்ததான விவாதங்கள் உலகெங்கும் நடைபெற்று வருகின்றன.
சமீப காலமாய், இந்த ஆய்வை செயல்படுத்துவதற்கான முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. இதன் மேல்விவரங்கள் குறித்து கம்பேனி மேற்கொண்ட ஆய்வில், சில ஆச்சரியம் தரும் உண்மைகள் வெளிவந்துள்ளன. இந்த ஆண்டு ஆஸ்கர் விருது தேர்வுக்குழுவில் நாசா விஞ்ஞானி ஒருவரும் இடம்பெற்றுள்ளார். இந்தியாவின் சார்பில் ஒருமனதாய் பரிந்துரைக்கப்பட்டுள்ள "மதுரை சம்பவம்" எனும் திரைக்காவியத்தை இவர் பார்க்க நேர்ந்திருக்கிறது. அந்த படத்தில் எங்கள் நாயகன் ஹரிக்குமார் பேசிய "நாங்கல்லாம் சூரியனுக்கே டார்ச் அடிப்போம்ல" எனும் வசனம் தான், கடந்த சில ஆண்டுகளாய் கிடப்பில் போடப்பட்டிருந்த இந்தத் திட்டத்தை உலகின் பார்வைக்கு மீண்டும் கொண்டுவர காரணமாய் இருந்திருக்கிறது. இதனையடுத்து நாயகன் ஹரிக்குமாருக்கு ஆஸ்கர் விருது கொடுப்பது போதாதென்று கருதிய தேர்வுக்குழு, அடுத்த ஆண்டிற்கான 'உலக சமாதனம் மற்றும் மக்கள் நல்வாழ்வுக்கான' நோபல் பரிசுக்கு இவரை பரிந்துரை செய்துள்ளது. ஆனால் நோபல் பரிசுக்குழுவில் சிலரோ இந்த ஆண்டே இவருக்கு இப்பரிசை வழங்க வேண்டுமென விரும்புவதாய் அறிகிறோம். இதனால் ஒபாமாவிடமிருந்து பிடுங்கப்பட்டு ஹரிக்குமாருக்கு வழங்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தின் வசனகர்த்தாவின் பெயர் இயற்பியலுக்கான நோபல் பரிசுக்குபரிந்துரைக்கப்பட்டுள்ளது.


புதுமுக நடிகரின் படத்தில் ஒருவரி பன்ச் டயலாகுக்கே, இரண்டு நோபல் பரிசுகள் கிடைக்குமென்றால், நமது தலைகளும், தளபதிகளும் இன்னும் பலரும் பேசும் வசனகளுக்கெல்லாம் என்னென்ன கிடைக்குமென்று எண்ணிப்பாருங்கள். இது போன்ற அறிவியல் அல்லது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வசனங்கள் உங்களுக்கு நினைவில் வந்தால் மறக்காமல் பின்னூட்டத்தில் கூறவும். இந்த பதிவுக்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து, இப்பதிவையும் இன்னும் சில திரைக்காவியங்களையும் நாசாவுக்கு பரிந்துரைக்கலாம் என எண்ணுகிறேன், தமிழ்மண்ணின் பெருமையை உலக அரங்கில் உயர்த்திப்பிடித்திட, அனைவரும் வாரீர், ஆதரவு தாரீர்.

நன்றி
சங்கர்

படங்கள் நன்றி : galatta.com, ngm.nationalgeographic.com

மேல் விவரங்களுக்கு இங்கு செல்லவும்,

http://ngm.nationalgeographic.com/big-idea/01/shading-earth
http://www.theozonehole.com/ozoneholehistory.htm
http://ozonewatch.gsfc.nasa.gov/

Monday, November 16, 2009

யார் விதைத்த விதை??.

யார் விதைத்த விதை??.


"எனக்கு தலையே வெடிச்சிரும் போல இருக்கு,எனக்கு தலையே வெடிச்சிரும்
போல இருக்கு" என்று கடந்த வாரம் தினத்தந்தி பேப்பரை பார்த்ததிலிருந்து
எஸ்.ஜே.சூர்யா மாதிரி இருந்தேன்.(செயலில் அல்ல அவர் வசனம் மட்டும் தான்).காரணம் ஒன்றல்ல இரண்டு விஷயம்

#
அந்தோனி யார்?? என்ற திரைப்படத்தின் 101 வது நாள் விளம்பரம்,
அப்புறம் நாலு நாள் கழித்து 105 வது நாள் விளம்பரம்
.

#
மலை மலை (சுமாரான )படத்தின் நூறாவது நாள் விளம்பரம்.

அந்த படத்தின் விளம்பரத்தால் உனக்கு என்ன பிரச்சனைன்னு

கேக்குறிங்களா?? வரலாறு தப்பா போய்டும்ங்க.நமக்கு அடுத்த
தலைமுறை வந்து நாம பார்த்த நூறாவது நாள் படத்தை பார்க்க
ஆசைப்பட்டு அந்தோனி யார்,அழகர் மலை,தோரணை(50),சிவகிரி(50)
போன்ற படங்களை நம் அடுத்த தலைமுறை பார்த்தால் நம்மை
பற்றி என்ன நினைப்பார்கள் என்று சிறிது யோசித்து பாருங்கள்.
கடந்த மாதம் நான் சந்திரலேகா முதல் சந்திரமுகி வரை என்று சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சென்று இருந்தேன்.
அங்கே திரு.ஆனந்தன் அவர்கள் தமிழ் திரைப்படங்கள் பற்றி
ஒரு அரங்கு அமைத்து இருந்தார் அதில் நம் முதல் சினிமா படத்திலிருந்து இன்று வரை ஓடிய மற்றும் வெளியான படங்களின்
தொகுப்புகளை மிக அழகாக அமைத்திருந்தனர்.அதெல்லாம் நம்
தமிழ் சினிமா வரலாறின் தொகுப்பு.இன்னும் ஒரு நூப்பது வருடம்
கழித்து அதில் அந்தோணி யார்??, சிவகிரி,அழகர் மலை, குருவி,
தோரணை,சத்யம் போன்ற படங்கள் வெற்றி பெற்ற படங்களாக
கண்டிப்பாக இடம்பெறும்.


பதினைந்து வருடங்கள் முன்பு நம் தமிழில் நல்ல படங்கள் இருநூறு
நாள் கூட ஓடியுள்ளது,அது மக்கள் கொடுத்த வெற்றி.அதன் பின்
இப்போதெல்லாம் நல்ல படங்கள் கூட நூறு நாள் ஓடுவதே கடினமாக இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
இப்போது நூறு நாள் என்று சொல்லி கொள்ளும் மலை மலை,
அந்தோணி யார் போன்ற படங்கள் நாடோடிகள்,ஈரம்,வெண்ணிலா, யாவரும் நலம் போன்ற படங்களின் வெற்றியின் அருகில் கூட வரமுடியாது.


இந்த ஓடாத அட்டு படங்களை நூறு நாள் விளம்பரம் செய்து ஓட
வைத்தது யார்?? யார் விதைத்த விதை??

சூப்பர்ஸ்டார் ரஜினி அவர்களின் அருணாச்சலம் படம் ரொம்ப
சுமார்தான் என்று அனைவருக்கும் தெரிந்ததே...இருந்தாலும் அந்த
படத்தை நூறு நாள் ஒட்டினார்கள்.அதே போல் பாபா நம் மனசை
கவரதாதால் அதையும் நூறு நாட்கள் ஒட்டினார்கள்.கிட்டத்தட்ட
150 படத்திற்கு மேல் நடித்தவர் அவர் ஓட்டலாம் ஆனால் அவர்கூட
போட்டிபோட்டு சச்சின் என்ற படத்தை இருநூறு நாட்கள் ஓட வைத்தது யார்?? ரஜினி அவர்கள் சினிமாவின் மாபெரும் ஜாம்பவான். ரஜினி என்ற பெயருக்கே படத்தை நூறு நாள் ஓட்டலாம் என்பது என் கருத்து.சச்சின் படத்தை நான் பார்க்கவில்லை.இருந்தாலும் உங்களுக்கு தெரியாதது ஒன்னும் இல்ல!!. சச்சின் படத்த விடுங்க குருவி என்ற படத்தை 150 ஒட்டினார்கள்,குருவி படத்தின் தரம் நமக்கு தெரியாதது அல்ல.அந்த மாபெரும் காவியத்தை நான் பார்க்க நேர்ந்தது காலத்தின் கொடுமை என்றே சொல்ல வேண்டும்.இது போல் வீண் ஜம்பம் அடித்து தங்கள் பெயரை திரைப்பட வரலாற்றில் பதித்து கொள்கிறார்கள்.இதுக்காக என்னை விஜய் எதிர்ப்பாளன் என்று நினைக்க வேண்டாம்!!.நான் ஒரு சராசரி சினிமா ரசிகன் அவ்வளவே.


இனிமே வர போகிற நல்ல படங்கள் கூட நூறு நாள் ஓடுவது கடினம்,
சில படங்கள் தவிர.ஏன் என்றால் ரிபீட் ஆடியன்ஸ் கிடைப்பது
இப்போது கஷ்டம் ஆகிவிட்டது.ஒரு ஷோ போட்டு நூறு நாள் இருநூறு

நாள் ஓட்டும் படங்களின் தியேட்டர்கள்,காதலர்களின் கூடாரமாக
மட்டுமே இருக்கிறது என்பது நம்மில் பலருக்கு தெரிந்ததே.


கடைசியா ஒன்னு ஏற்கனவே சொன்னது தான்...

நூறு நாள் ஓடுவதெல்லாம் நல்ல படமும் அல்ல
முப்பது நாள் ஓடுவதெல்லாம் மொக்கை படமும் அல்ல....

உங்க கருத்து குத்துகளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்....
முடிஞ்ச ஓட்டும் போட்டு போங்க
.

உங்கள்
ஜெட்லி சரண்.

Friday, November 13, 2009

ஒடுங்க ஒடுங்க உலகம் அழிய போகுது

"ஒடுங்க ஒடுங்க உலகம் அழிய போகுது......"
நான் இதுவரைக்கும் இப்படியொரு ஒபெநிங் எந்த ஹாலிவுட் படத்துக்கும் பார்த்ததில்லை.ராமநாராயணன் செமையா கல்லா கட்டிட்டாரு என்றே சொல்ல வேண்டும்.நான் இந்த படத்தை தமிழில் தான் பார்த்தேன்.தமிழ் பற்று என்று நினைத்து கொள்ள வேண்டாம் ஆங்கிலத்தில் பார்த்தால் கொஞ்சம் புரியாது என்ற காரணத்தால் பைலட் தியேட்டரில் பார்த்தேன்
.வரும் திங்கள்கிழமை கண்டிப்பாக இன்னொரு தடவை தேவி தியேட்டர் சென்று பார்ப்பேன்.ஆனால் இன்று போல் நான் பைலட் தியேட்டரில் இப்படி ஒரு கூட்டத்தை நான் பார்த்ததில்லை.


நீங்க ரோட்ல போகும் போது யாரவது இப்படி பேசினா

"அது சரியா நம்மளை எத்தனை மணிக்கு தாக்கும்",

"அங்கே ஏதோ ஒன்னு வருது"

என்று அவர் மனைவியை பற்றி சொல்லிகொண்டிரிந்தால் அவர் கண்டிப்பாக டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவோ இல்லை என்னை போல் டப்பிங் படம்

பார்ப்பவராகவோ இருக்க வேண்டும்.டப்பிங் படங்கள் எங்களை போன்ற பாமரர்களை மட்டும் அல்லாமல் அனைவரையும் ஈர்த்து உள்ளது என்றால் அது மிகையல்ல.படத்தில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் செம... நான் வாய் பிளந்து பார்த்து கொண்டிருந்தேன்.ஹீரோ CON AIR புகழ் ஜான் குஸக் ஒவ்வொரு தடவையும்

தப்பிக்கும் போது தியேட்டரில் செம கைதட்டு.படத்தில் பல டச்சிங் சீன்கள் இருக்கின்றன(மனதை தொடும் காட்சிகள்).படத்தில் அமெரிக்கா அதிபராக
LEATHAL WEAPON புகழ் டேனி க்லோவேர், ரொம்ப இயல்பா தன் நடிப்பை வெளிபடுத்தியுள்ளார்.

முக்கியமாக ஜான் ஒரு மாப்பை தேடி வேன்க்குள் செல்வார் ஆனால் அதற்குள்
வேன் பிளந்த பூமியில் போய்விடும்,அவர் எப்படியும் வந்து விடுவார் என்று தெரியும் இருந்தாலும் நம்மை அறியாமல் நம் மனம் கை தட்டுகிறது. தியேட்டரில் இந்த காட்சிக்கு செம ரெஸ்பான்ஸ்.


படத்தின் நிஜ ஹீரோ இயற்கை தான்(நமக்கும் தான்).இந்த படத்தின் டைரக்டர் நமக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இது போல் படம் எடுக்கிறாரா?? இல்லை நம் சாவை நம் கண் முன் காட்டி இப்படி தான் சாகபோறிங்கன்னு சொல்றாரா?? என்று கேட்டால் ரெண்டுமே தான்.


இந்த படத்தில் ஒரு வசனம் வரும் அது

" மனிதனுக்கு எப்போ அன்பு குறையுதோ அந்த நிமிஷமே
உலகம் அழிஞ்சிடும்"
என்று.

படம் பார்த்துட்டு பைக் எடுக்கும் போது ஒருத்தன் என் காலை
மிதிச்சிட்டான் ஒரு ஸாரி இல்லை ஒரு பார்வை கூட பார்க்கல
அப்போ உலகம் சீக்கரம் அழிந்து விடுமா??....

*************************
2012 ருத்ரம் படம் சூப்பர்...ருத்ரம் வரிவிலக்கு வேறு.இனிமே எத்தனை ருத்ரம் வரபோகுதோ தெரியவில்லை....

சில சாம்பிள்

ருத்ர நாள்
ருத்ர மங்கை
ருத்ர தங்கை
ருத்ரன் (எந்திரன் மாதிரி)
ருத்ர இரவு
ருத்ர மத்தியானம்
.... போதும் முடியல இல்ல...ரைட்.

ஆக மொத்தம் படத்தை பாருங்க ரசிங்க கொஞ்சம் இயற்கையை பத்தி
டைம் இருந்த சிந்திச்சு பாருங்க...

உங்கள்
ஜெட்லி சரண்.

Thursday, November 12, 2009

சென்னை மழையும் பின்நவீனத்துவமும்

வெற்றி, வெற்றி, வரலாறு காணாத வெற்றி, போன பதிவுக்குக் கிடைத்த ஓட்டுகளைதாங்க சொல்றேன், தமிழர்கள் அறிவியல் பார்வை கொண்ட அறிவுபூர்வமான ஆராய்ச்சிகளை எப்போதும் வரவேற்பார்கள் என்பதற்கு இது இன்னுமொரு அத்தாட்சி. இந்த மாபெரும் வெற்றியை கொண்டாடும் விதமாகவும், அப்பதிவின் கடைசி பத்தியில் சொன்ன சொல்லை காப்பாற்றவும் வேண்டி இந்த பதிவு.


முதலில் பின்நவீனத்துவம் என்பதை சுருக்கமாக சொல்ல முயற்சி செய்கிறேன், இவ்வளவு சிக்கலான விஷயத்தை எப்படி சுருக்கமாய் சொல்வது என்ற மலைப்பு தோன்றினாலும், அவ்வளவு பெரிய ராமாயணத்தையே "விட்டான் ராமன், கெட்டான் ராவணன்" என்று ஒரு வரியில் கூறிய சொல்லின் செல்வர்கள் பிறந்த மண்ணில் தான் நானும் வாழ்கிறேன் என்ற எண்ணம் தந்த தைரியத்தில், யோசித்துக்கொண்டிருந்தபோது காணக்கிடைத்தது, எங்கள் நாயகன், நடிப்பின் பரங்கி எஸ்ஜே சூர்யா (குறிப்பு 1: இமயமலையை இமயம் என்று சொல்லலாம் என்றால், பரங்கிமலையை பரங்கி என்று சொல்வதில் தப்பில்லை என்றே நினைக்கிறேன், ஏதோ விரலுக்கேற்ற வீக்கம்; குறிப்பு 2: நன்றாக கவனிக்கவும், பீரங்கி இல்லை பரங்கி, அப்புறம் அவர் அதற்கு வேறு அர்த்தம் சொல்வார்; குறிப்பு 3: பரங்கிமலை ஜோதியில் வெளியிடும் தரமுடைய படங்களை எடுத்தவர் என்பதால் இந்த பட்டத்தை வழங்கவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்; இன்னுமொரு குறிப்பு: ஜோதி தியேட்டர் இப்போது உள்கட்டமைப்பு சிறப்பாக மாற்றப்பட்டு புதுப்பொலிவுடன் உள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்) நடித்த அ.ஆ. படத்தின் ஒரு காட்சி, "ஒரு விஷயம் இருக்கு ஆனா இல்லை, இல்லை ஆனா இருக்கு" என்று அவர் பேசிய ஒரு வசனம் தான் என்னை நிமிர்ந்து அமர வைத்தது. இதை விட எளிதாய், சிறிதாய், தெளிவாய், சொல்வதற்கு, பின்நவீனத்தில் எங்கள் ஆசான் (விஜயகாந்த படம் இல்லை) சாருவால் கூட முடியாதே என்று மீண்டும் மனம் சோர்ந்தது. இருந்தாலும் 'ஸீரோ டிகிரியை' ஒரே இரவில் நூற்றிநாற்பது பக்கம் படித்ததை நினைவு கூர்ந்து, மனதை தேற்றிக்கொண்டு, நீங்கள் தந்த, தரப்போகும் ஆதரவின் தைரியத்தில் எழுத துவங்கிவிட்டேன்.
பின்நவீனத்துவம் என்றவுடன் முதலில் சொல்லப்படும் வார்த்தை கட்டுடைத்தல். அதாவது நீங்கள் பார்க்கும் விஷயத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அக்குவேறு ஆணிவேராய் பிரித்து மேய்வது, அதில் ஒரு புது அர்த்தம் காண்பது. தினம் தினம் தாம்பரம் முதல் தரமணி வரை பயணிக்கும் நான், போனவாரம் வரை நம்பிக்கொண்டிருந்தேன், அய்யாக்களும் அன்னைகளும் விமானம் ஏற வந்து போகும் வழி என்பதால் அழகாய் பராமரிக்கபடுகிறது இந்தச்சாலை என்று, அனைத்தையும் புரட்டிப்போட்டது இந்தவார மழை, பார்க்க பளபளவென்றிருந்தாலும், அனைத்தும் அவ்வப்போது செய்யப்படும் ஒட்டுவேலைகளின் ஜாலமே என புரியவைத்தது, என் எண்ணத்தை கட்டுடைத்தது மட்டுமல்லாமல் இதற்குமேல் உடைத்தால் மணல் தான் மிஞ்சும் என்று எண்ணுமளவு ஜல்லி ஜல்லியாய் பிரித்துபோட்டது மாமழை. இதற்கு
மேல் கட்டுடைத்தல் தேவையா??
வெறும் தரைவழி போக்குவரத்திற்கான ஊடகமாகவே பார்க்கப்பட்டு வந்த சாலைகளை, நீர்வழித்தடமாகவும் தோன்றவைத்த பெருமை இந்த மழையையே சாரும், மேலும், ஏரியாய் இருந்த இடங்களை தூர்த்துதான் இந்த சாலை அமைக்கப்பட்டது என்பதையும், இன்னும் சில ஆண்டுகளில் இந்த இடங்களெல்லாம் கடலின் ஒரு பாகமாய் மாறக்கூடும் என்பதையும் ஒருங்கே உணர்த்தி கடந்த காலத்தையும் எதிகாலத்தையும் ஒன்றாய் காட்சிப்படுத்திய இந்தப் பருவமழை கண்டிப்பாய் ஒரு பின்நவீனக்காட்சிதான்.இப்போதாவது புரிந்ததா கொட்டும் மழையென்பது இயற்கை எழுதும் பின்நவீன கவிதை என்று? எந்த ஒரு விஷயத்தையும் இப்படி பின்நவீனநோக்கில் பார்க்கலாம் என்பதை இன்னும் புரிந்துகொள்ள முடியாதவர்கள், பின்னூட்டத்தில் குறிப்பிட்டால், பின்நவீன பார்வைக் குறைபாட்டை நீக்கும் சிறப்பு கண்கண்ணாடி சலுகை விலையில் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். மழை நின்றுவிட்டதாலும் நிதிப்பற்றாகுறையாலும் முந்தய பதிவில் குறிப்பிட்ட "மழையும் பள்ளி விடுமுறையும்" என்னும் ஆராய்ச்சி அடுத்த மழை வரும்வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதை மிகுந்த வருத்ததோடு தெரிவித்துக்கொள்கிறோம்.


படங்கள் நன்றி: ஜாக்கி சேகர், cinesouth.com, techshout.com, என் N-70

நன்றி
சங்கர்


Monday, November 9, 2009

கொட்டும் மழை - என்ன காரணம் - ஆராய்ச்சி முடிவுகள்

வடகிழக்கு பருவமழை ஆரம்பித்து, கொட்டி தீர்த்துக் கொண்டிருக்கிறது, ஒரு தொலைக்காட்சி சானலில், எங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது, மக்கள் நீரில் தத்தளிக்கிறார்கள், அரசும் அதிகாரிகளும் எட்டியே பார்க்கவில்லை, மின்சாரம் தாக்கியும் வீடு இடிந்து விழுந்தும் இதுவரை பலர் இறந்து விட்டனர், இன்னும் பல நூறு பேர் சாகக் கிடக்கிறார்கள், மீட்பு படை வாகனங்களின் சக்கரங்களில் காற்று இல்லை, பன்றி காய்ச்சல் வந்துகொண்டே இருக்கிறது, மற்றொரு சானலிலோ, மக்கள் பத்திரமாக இருக்கிறார்கள், அரசு இயந்திரம் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளது (ஒரு சந்தேகம், மழையில் நனைந்து துருப்பிடித்துவிடாதா?), அமைச்சர்களே கைப்பட உணவு பொட்டலங்கள் கொடுக்கிறார்கள், அதிகாரிகளோ ஒருபடி மேலே போய் அவரவர் வீட்டிலிருந்தே கைப்பட சமைத்து கொண்டுவந்து வினியோகிக்கிறார்கள், மழை பெய்ய துவங்கிய உடனேயே மின்சாரம் நிறுத்தப்பட்டு விட்டது (அதற்கு முன் மட்டும் என்ன வாழ்ந்தது என்று கேட்ககூடாது)

இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும், சமீபகாலமாய் தமிழகத்தில் பெய்யும் மழைக்கும் வானிலை மையத்திற்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து ஒரு நம்பிக்கை இருந்து வருகிறது, அதாவது 'ரமணன் தொலைக்கட்சியில் வந்து இன்னும் 24 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என பேட்டியளித்தால் மறுநாள் வெயில் கொளுத்தும், புயல் திசை மாறிவிட்டது, மழை குறையும் என்றால், வீட்டை விட்டு கிளம்ப முடியாத அளவு மழை கொட்டும்' , ஆனால் கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் ரமணன் சொல்வது அப்படியே பலிக்கிறது, இந்த திடீர் மாற்றம் ஆர்வத்தை கிளப்பிவிட்டதால், இதன் பின்னணியில் இருக்கும் அறிவியல் காரணம் குறித்து நமது கம்பேனி சார்பில் ஆராய்ச்சி ஒன்று நடத்தப்பட்டது.
இந்த ஆராய்ச்சியின் முடிவில் ஒரு புதிய உண்மை கண்டறியப்பட்டுள்ளது, அதாவது ரமணன் முழுக்கை சட்டை அணிந்து பேட்டி அளித்தால் மேலே சொன்ன நம்பிக்கை நிஜமாகிறதென்றும், அவர் அரைக்கை சட்டையோ, டீ-ஷர்டோ அணிந்து காட்சியளித்தால், அவர் சொன்னபடி நடக்கிறது என்றும் தெரியவந்துள்ளது. இந்த ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட ஆவணங்களும் இறுதி அறிக்கையும் பெற விரும்புவோர், ஓட்டு போட்டு, பின்னூட்டத்தில் வேண்டுகோள் விடுக்கலாம்

இந்த கட்டுரைக்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து, 'மழைக்கும் பள்ளி விடுமுறைக்கும் உள்ள தொடர்பு' மற்றும் 'சென்னை மழை ஒரு பின் நவீனத்துவ பார்வை' ஆகிய ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிடப்படும் என்பதை கம்பேனி சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்

புதிர்.-சர்வேசன்500 - நச்னு ஒரு கதை 2009 - போட்டி

புதிர்.-சர்வேசன்500 - நச்னு ஒரு கதை 2009 - போட்டி

"டேய் நாதாரி கார்ல வந்தா நீ பெரிய புடிங்கியாட" என்று என் பின்னாலிருந்து குரல் வந்ததும் நான் சட்டென்று திரும்பி பார்த்தேன்.

பைக்கில் வந்த சிகப்பு சட்டை ஆசாமி காரில் வந்த ஒரு உள்ளூர்
அரசியல் பிரமுகரிடம் வாய் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தான்.

"நான் புடிங்கிதாண்ட ..த்தா என்னடா பண்ணுவே" பதிலுக்கு எகிறினார் அரசியல் பிரமுகர்.

நான் இருவரின் அருகிலும் சென்றேன், பைக்கின் வலது பக்கத்துக்கு இண்டிகேட்டர் உடைந்திருந்தது.

அரசியல் பிரமுகர் என்னை பார்த்தவுடன், நான் அவருக்கு வணக்கம் வைத்தேன் "யோவ் உன்னாலதான் இப்படி ஆச்சு, சும்மா காலங்காத்தால டென்ஷன் ஆக்குரிங்க". நான் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தேன்.

பின்னாடி வேறு ஹோர்ன் சத்தம் காதை பிளந்தது. "உன் டிரைவர் மேலதான் தப்பு , என் இண்டிகேட்டர்க்கு காசு கொடுத்தா தான் வண்டியை உடுவேன்" எகிறினான் அந்த சிகப்பு சட்டை ஆசாமி.

"யப்பா நீ அவனை இங்க இருந்து கிளப்பி விடு. சும்மா அவனா வந்து வண்டியில் விழுந்துட்டு பேசுறான் பாரு" என்று என்னிடம் கூறினார் அந்த அரசியல் பிரமுகர்.


நான் பைக் ஆசாமியிடம் சென்று "தம்பி சின்ன செலவுதான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி கிளம்புங்க"என்றேன்.

"நீ அவனோட சேர்ந்து எனக்கு ஆப்பு வைக்கிறியா, இருடி சாயங்காலம் பசங்களை கூட்டிட்டு வரேன்" என்று கிளம்பினான் பைக் ஆசாமி.


"ச்சே.. இவனுங்க ரவுசு தாங்க முடியுலப்பா" என்று நான் என் வேலையை பார்க்க போனேன். கையை மேலே தூக்கி எதிரே வரும் வாகனத்தை விசிலடித்து நிறுத்திய பின்,மக்கள் ரோட்டை கடந்தார்கள்.


சர்வேசன்500 - நச்னு ஒரு கதை 2009 - போட்டி

புடிச்சிருந்தா கண்டிப்பா ஒட்டு போடுங்க.... பின்னோட்டம் போட்டாலும் நன்றாக இருக்கும்...

உங்கள்
'ஜெட்லி' சரண்.

Friday, November 6, 2009

அதே (நேரம்)அடி அதே (இடம்)வலி.

அதே (நேரம்)அடி அதே (இடம்)வலி.


தயவு செய்து யாரும் என்னை திட்டாதிங்க,அப்புறம்"ஏன்டா படத்தில் நடித்த ஜெய்யே படம் ஒரு வாரம் கூட ஓடாதுனு சொன்னார் நீ போய் ஏன் பார்த்தேன்னு கேக்காதிங்க". இதுக்கெல்லாம் ஒரு காரணம் இருக்குங்க அது என்னனா மொக்கை படங்களை பார்ப்பதால் நமக்கு மன வலிமையும், சகிப்பு தன்மையும் வளர்வதாக சுவாமி கில்மானந்தா ஏற்கனவே என்கிட்டே சொன்னாருங்க.அதனால்தான் நான் என் சகிப்பு தன்மையை வளர்க்க இந்த படத்தை பார்க்க போனேன்னு சொன்ன நீங்க நம்பவா போறீங்க......


ரைட், அப்புறம் படத்துக்கு வருவோம். ஜெய் ஒரு விஷயத்தை தப்பா சொல்லிட்டார் அதாவது ஒரு வாரம் படம் ஓடும்னு சொன்னார் ஆனா எனக்கு என்னவோ இன்னைக்கு நைட் ஷோ வரைக்கும் ஓடினாலே பெருசு என்று தோன்றுகிறது.படம் அவ்வளவு மொக்கையான்னு கேக்காதிங்க ஏன்னா?
நான் படத்தை முழுசா பார்க்கவில்லை, மரண மொக்கைனு கூட சொல்லலாம்.மழை டைம் மற்றும் மொக்கை படத்துக்கு மட்டும் புல் ஏ.சி போடுறானுங்க அதான் இன்டெர்வல் முடிஞ்சி ஒரு பத்து நிமிஷம் பார்த்தேன்... முடியலை.....நியாயமா நான் படம் ஆரம்பிச்சு அரை மணி நேரத்தில் வெளியே வந்துருக்க வேண்டும் ஆனால் தியேட்டரில் வந்த கமெண்ட்ஸ் படத்தை விட காமெடியாக இருந்ததால் சிரித்து ரசித்தேன்.நான் முதல் பாடலுக்கு தான் என்ட்ரி கொடுத்தேன் அதனால் பிரேம்ஜி தான் பின்னணி இசை அமைத்தாரா என்று தெரியவில்லை ஒரு வேலை பிரேம்ஜிதான் பின்னணி இசை என்றால் "ரொம்ப கஷ்டம்".

இப்போ தியேட்டரில் நடந்த சுவாரிசியமான விஷயங்கள்.

தியேட்டர் நொறுக்ஸ்:

படத்தில் பெரிய மைனஸ் குழந்தைதனமான வசனம்

# விஜயலட்சுமி அழகாய் வர்ணிக்க ஜெய் கூறும் ஒரு வசனத்துக்கு
ரசிகர்கள் கொந்தளித்து போய் விட்டார்கள்...

" அவளுக்குக்காக ஆயிரம் தாஜ்மகால கட்டலாம் மச்சி" என்பார்.

#விஜயலட்சுமி அவர்கள் அடிக்கடி

" ஐ கப்பல் " "ஐ ரெயின்போ"
என்று கூறும் வசனங்களில் தியேட்டரில் செம ரெஸ்பான்ஸ்.

# படம் ஆரம்பித்து இருபது நிமிடம் டி.வி. சீரியல் மாதிரி
சென்றது, பின்னாடி இருந்து ஒருத்தர்

"யோ சீக்கரம் படத்தை போடுங்கயா".என்றார். அனைவரும்
குபீரென்று சிரித்தனர்.

இன்னொருவர் சிறிது நேரம் கழித்து

"எப்பா சேனல் மாத்துங்கப்பா" என்றார்.


# இதில் ஜெய் சில கருத்துக்களை அள்ளி தெளிக்கிறார்,
அது தான் செம காமெடி.

# படத்தின் ஒளிப்பதிவு தரத்தை பார்த்த ஒரு ரசிகர் அவர்
நண்பரிடம்

"டேய் ஷகீலா நடிச்ச மலையாள படம் மாதிரி படம் தெரியுது".

#படத்தில் பெரிய காமெடி இந்த சீன்தாங்க....விஜயலட்சுமி சின்ன பசங்க கூட கண்ணாமூச்சி விளையாடும்
போது பார்க்கில் உள்ள இந்த பெஞ்ச்க்கு கீழ் தான் ஒளிந்து
இருப்பார், அதை பார்க்காத ஜெய் அவரின் கையை மிதித்து
விடுவார் ஒடனே லவ் ஸ்டார்ட்......

# படம் ஆரம்பித்து அரை மணி நேரம் கழித்து...

ஒருவர் டிக்கெட் போட்ட அவரின் நண்பனிடம்

" ராமசாமி கொடுத்த காசு ஊ ஊ ஊ,...".

இன்னொருவர் " யோவ் என் அம்பது ரூவாய கொடுங்க
கிளம்பி போய்டுறேன்" என்று கத்தினார்.

# அனைவரும் கொலைவெறியில் உக்காந்து இருக்க,டாய்லெட் போயிட்டு வந்த நண்பர் அவர் நண்பரிடம்

"எந்த முக்கியமான 'சீன்'னும் மிஸ் ஆகலையே" என்று சவுண்ட்டாக
கேட்டார்,அப்புறம் தியேட்டர் முழுவதும் சிரிப்பு சத்தம் தான்.

# ஒரு வசனம் விஜயலட்சுமி ஜெய்யிடம்

"எல்லா லவர்ஸ்க்கும் பிடிச்ச இடம் எது" என்று கேட்பார்

பின்னால் நண்பர்கள் "சுடுகாடு, சுடுகாடு" என்று கத்தினார்கள்.# படத்தில் ஒரு காட்சியில் மழையில் விஜயலட்சுமியை நனையாமல் போய் லைப்ரரியில் விடுவதாக ஒரு கோட்டை வைத்து மறைத்து இருவரும் அண்ணா நகர் பூங்காவில் இருந்து இ.சி.ஆர் ரோட்டுக்கு நடந்தே வருவார்கள் திருப்பியும் அண்ணா நகர் போவார்கள். இதை கண்டு கோபம் அடைந்த பின் சீட் நண்பர்

"இவங்க தலைல எல்லாம் இடி விழாத".என்றார்.


(மேல உள்ளே படம் தான் அந்த சீன் )


# விஜயலட்சுமி சீன் காட்டறதுன்னு முடிவு பண்ணிட்டாங்க
போல.... ஆனா யார் பாக்கறது???...

# லொள்ளு ஜீவா பல டைம் மொக்கை போடுகிறார், ஏதோ
அந்த பாரில் நடக்கும் காமெடி ஓகே.

# தியேட்டரில் கேட்ட முக்கா வாசி வசனம் இது தான்

*
மச்சான் முடியுல....

* சும்மா இருந்த என்னை கூட்டு வந்து.....

* எவன்டா இந்த படத்துக்கு கூப்ட்டது....


# நான் பாதி பார்த்ததுக்கே போஸ்ட் கொஞ்சம் பெருசா போகுது
மீதி படம் பார்த்தா அவ்வளவு தான்....

ஜெட்லி பரிந்துரை:

உங்களுக்கு வேண்டாதவங்க மற்றும் எதிரிகளை தூன்பத்தில்
ஆழ்த்த அதே நேரம் அதே இடம் டிக்கெட்டை இலவசமாக
வாங்கி கொடுத்து அனுப்புங்கள்.அதுக்கு அப்புறம் உங்க சைட்
வரவே மாட்டங்க..... அப்புறம் படத்தை முழுசா பார்த்தவங்க
கடைசியில் என்ன ஆச்சுன்னு பின்னூட்டத்தில் போடுங்க...


ஜெட்லி பஞ்ச்:

அதே அடி அதே (பயங்கர) வலி.


நன்றி
indiaglitz

இந்த விமர்சனம் அனைவரையும் சேர ஒட்டு போடுங்க, கமெண்ட்
போட்டு போங்க......


உங்கள்
ஜெட்லி சரண்.

Thursday, November 5, 2009

ஒரு வெயிற்பொழுதில்.....

ஒரு வெயிற்பொழுதில்.....

நம்மில் பலர் மெரீனா பீச்சுக்கு ஆதவன் தன் சூட்டை தணித்த பின் காற்று வாங்கவோ, காதலியை சந்திக்கவோ, குழந்தைகளுடன் விளையாடவோ,


நடைபயிற்சி செய்யவோ, அங்கு கூட்டமாக வரும் பெண்களை சைட் அடிக்கவோ,நண்பர்களை சந்திக்கவோ,சுண்டல் வாங்கி தின்னவோ, அல்லது ஏதாவது ஒரு வோவு க்கு சென்று இருப்போம்.

ஆனால் மதியம் நேரம் பன்னிரண்டு மணிக்கு போய் பார்த்து இருக்கிங்களா???
நான் பார்த்ததன் விளைவு தான் இந்த பதிவு. நீ ஏன்டா பன்னண்டு மணிக்கு உச்சி வெயில்ல பீச்சுக்கு போனேன்னு கேக்க கூடாது.ஏன்னா, நானும் ஒரு எழுத்தாளன்னு ஊருக்குள்ள ரெண்டு பேரு பேசிக்கிறாங்க.ஒன்னு கண்ணு அவிஞ்சு போன மூணாவது தெரு பாட்டி இன்னொன்னு தமிழ் தெரியாத எதிர் வீட்டு பார்ட்டி!.


பைக்கில் லைட் ஹவுஸ் அடைந்தவுடன் பச்சை பசேல் என்று
இருந்தது.சில பட்டாம்பூச்சிகள் என் மீது மோதியது.ஆனால் காந்தி
சிலை தாண்டிய பின் மரங்கள் அதிகமாக மரங்கள் இல்லை.
புல் கூட காய்ந்து இருந்தது, புல்லுக்கு தண்ணி அடிக்கும்
தானியங்கி கருவி நடைபாதையிலும் தண்ணி அடித்து வருவோர்
போவோர் மீதெல்லாம் தண்ணி அடித்தது.தண்ணி கஷ்டம் அப்படின்னு சொல்றாங்க ஆன இங்க தண்ணி வீணா போகுது!!.

சுற்றுலா பேருந்துகள் மற்றும் சில வேன்களை அதன்
டிரைவர்கள் மற்றும் கிளீனர்கள் துடைத்து கொண்டு இருந்தார்கள்.
பொது இடத்தில் வண்டி கழுவ கூடாது என்ற சட்டம் என்ன ஆனது
என்று அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்???.தள்ளு வண்டி கடைக்கு
சிறிது காலம் தடை போட்டு இருந்தார்கள் ஆனால் மீண்டும் கடைகள் முன்பை விட அதிகமாவே வந்து விட்டது.


பீச்சில் எந்நேரமும் அலைகளுக்கு மட்டும் தான் ஓய்வில்லை
என்று நினைத்து இருந்தேன், ஆனால் அங்கு காதலர்கள் செய்யும்
சில்மிஷங்களுக்கும் ஓய்வில்லை என்று இன்று தான் புரிந்து
கொண்டேன். சில ஜோடி குடையுடன் வெயிலை சமாளித்து கொண்டு
தங்கள் வேலையை தொடர்ந்தனர், சிலர் தங்கள் துப்பட்டாவை
உபயோகித்து தங்களை மறைத்து கொண்டனர்.


பீச்சில் முக்கிய பிரச்சனையே மொபெட் ஒட்டி வரும் பெண்கள்
தான், கண்டிப்பாக அவர்கள் பின்னால் ஒரு ஆண்மகன் உட்கார்ந்து இருந்தால் சொல்லவே வேண்டாம். அவர்கள் வண்டி ஒட்டி கொண்டே பண்ணும் சில்மிஷத்தை பார்த்தால் நைட் தூக்கம் வராது. எப்பா என்னம்மா வண்டி ஒட்டுதுங்க(உங்களுக்கு தெரியாதது ஒன்னும் இல்ல).

பீச்சில் நம்மை போன்று நடுத்தர வர்க்கத்தினருக்கு என்றே நீச்சல்
குளம், ஆனால் அதை ஒழுங்காக கிளீன் செய்வதே இல்லை.
நான் அந்த நீச்சல் குளத்துக்கு போய் ஒரு வருடம் மேல் ஆகிவிட்டது,
காரணம் நான் அங்கு கடைசியாக போன போது ஒருத்தன் சொன்ன
செய்தி தான் அது "தண்ணிரில் எலி இருக்குது" என்றான்.என்னை போல் நீங்களும் என்றைக்காவது தனியாக மதிய நேர பீச்சுக்கு செல்லலாம், அதனால் சில குறிப்புகள்:

# உங்க வண்டியை உங்கள் கண் முன் நிறுத்தி வைத்தால் நல்லது.

# நீங்க பாட்டுக்கு கடலை பார்த்து போகும் போது குடை அழகிகள் மத்தியில் சிக்காமல் இருக்க வேண்டும்.

# கரை பக்கத்தில் சிறு படகு இருக்கிறது என்று ஏறி உட்கார்ந்து
விட வேண்டாம்... உள்ளே யாரவது இருந்தாலும் இருப்பார்கள்.


மேல உள்ள தகவல்கள் அனைவரையும் சேர ஒட்டு போடுங்கள்...
கமெண்ட் பண்ணாலும் சந்தோசம்...

உங்கள்
ஜெட்லி சரண்.

Tuesday, November 3, 2009

கண்டேன்....கண்டேன் காதலை + சுனாமி!!

கண்டேன்....கண்டேன் காதலை + சுனாமி!!

என்னடா முதல் நாளே விமர்சனம் போடுவே ஏன் போடலன்னு
நிறைய பேர் போன் பண்ணி கேட்டாங்க(பில்ட் அப்)......எனக்கு
வெள்ளிக்கிழமை கொஞ்சம் வேலை இருந்ததால்(நம்புங்க!!)

கண்டேன் காதலை போக முடியவில்லை.கண்டேன் காதலை
படம் வேறு ஜெயந்தி தியேட்டரில் போட்டு இருப்பதால் அங்கே
படம் பார்த்து என் கண்ணை கெடுத்து கொள்ள விரும்பாமல்
அடுத்த நாள் சனிக்கிழமை அண்ணா தியேட்டரை நோக்கி
வண்டி சென்றது.

அங்கே போனால் கவுன்டரில் ஹவுஸ்புல் போர்டு மாட்டப்பட்டு

இருந்தது.தீடிர்னு ஒருத்தன் வந்து "அம்பது ரூபாய் டிக்கெட் நூறு ரூபாய்" என்றான்,கூட வந்த என் நண்பன் இவன் படத்தை நூறு ரூபாய் கொடுத்து பார்க்க முடியாது என்று சொன்ன காரணத்தால் வண்டி அந்த இடத்தை விட்டு கிளம்பி பைலட் தியேட்டர் வாசலில் நின்றது.2022 என்ற அந்த மகத்தான காவியத்தை காண பெருங்கூட்டம் அலைமோதியது காரணம் பல பேர் அதை 2012 படம் என்று நினைத்துவிட்டனர்.நான் 2022 தாய்லாந்து படம் என்று தெரிந்தே தான் போனேன்.
சும்மா சொல்ல கூடாது 2004 இல் சுனாமி வந்த போது வந்த நியூஸ் வீடியோ காட்சிகளை படத்தில் கச்சிதமாக(கேவலமாக) பொருத்தி இருந்தனர்.இது போன்ற மொழி மாற்ற படத்தை வைத்து தமிழனின் காசை பிடிங்கி விடுகிறார்கள்.இதுல வேற அடுத்து ஆவேச அலைகள் ப்படின்னு அடுத்த வாரம் ஒரு சுனாமி படம் வருது."டேய் நீ ஆவேச அலைகள் படம் பார்த்துட்டு கூட விமர்சனம் போடுவேடா" என்று நீங்கள் சொல்வது என் காதில் விழுகிறது.அதுதான் ஆண்டவன் கட்டளைனா நான் ஒன்னும் பண்ண முடியாது!!.சும்மா இருக்கிற கடல்ல நம்ம ஆளுங்க சுனாமி படம் போட்டு பொங்க வச்சிருவாங்க போல என்று கேட்க தோணும் அளவுக்கு வரிசையாக சுனாமி படங்கள்.

அதுக்கு அடுத்த வாரம் 2012 என்ற அக்மார்க் ஹாலிவுட் படம்
வருகிறது, அதை எல்லோரும் பார்க்க வேண்டும்.சரி கண்டேன்
காதலை படத்தை பத்தி எல்லோரும் சொல்லிட்டாங்க நான்
வேற என்ன புதுசா சொல்ல போறேன்.ஆனா எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சு ஆகணும் பரத்துக்கு சின்ன தளபதினு பட்டம் யாரு கொடுத்தாங்க?? நாராயண இந்த கொசு தொல்ல தாங்க முடியலைப்பா.நான் ஏற்கனவே

ஹிந்தியில் ஜப் வி மேட் படத்தை பார்த்து விட்டதால் தமிழில் அந்த அளவுக்கு படம் வரவில்லை என்றே கூற வேண்டும்.

சந்தானம், ஹிந்தியில் இவர் கேரக்டர் இல்லை தமிழில் மாற்றம்
செய்து உருப்படியான வேலை செய்து இருக்கிறார்கள்.இவர் இல்லை
என்றால் அலுப்பு தான் ஏற்பட்டு இருக்கும்.தமன்னா, கரீனா கபூரை
நன்றாக இமிடேட் செய்து உள்ளார் அதற்காக அவர் போட்டிருக்கும்
டிரெஸ்ஸை கூட காப்பி அடிப்பது கொஞ்சம் ஓவர்.பல பேர் தமன்னாவை தேனிகார பொண்ணு என்றால் நம்ப மறுப்பார்கள்.

ஜெட்லி சரண்.

பரத்,.. சாகித் கபூரை காப்பியடிக்க முயற்சி செய்து இருக்கிறார் ஆனால் பாவம் பாஸ் ஆகவில்லை, பாட்டுகளில் ஆமிர்கானை காப்பி அடித்து இருக்கிறார்... ஏன் பாஸ் உங்களக்கு சொந்த சரக்கு இல்லையா என்று கேட்க தோன்றுகிறது.இடைவெளி பின்புதான் ஹிந்தி படத்தில் ஒரு ஜீவன் இருக்கும் ஆனால் கண்டேன் காதலில் அப்படி ஒன்னும் தெரியலை.பாட்டு, ஏதோ ரெண்டு பாட்டு நல்லாயிருக்கு.படத்தின் ப்ளஸ் கதை,திரைக்கதை அதனால் மேல உள்ள விஷயங்கள் பெரிதாக தெரியவில்லை. ஆக மொத்தத்தில் கண்டேன் காதலை டைம் பாஸுக்கு கியாரண்டி!!!.

அது சரி கண்டேன் காதலை எங்கே பார்த்தேன் என்று
சொல்லலியே?? அதே அண்ணா தியேட்டரில் தான்.அதே
ஹவுஸ்புல் போர்டு அதே நூறு மட்டும் இல்லை எண்பது
ரூபாய்.சில போலீஸ்காரர்களின் பலத்த பாதுகாப்புடன்
டிக்கெட் விக்கும்போது தட்டி கேட்க நான் என்ன ஷங்கர்
பட ஹீரோவா?? இல்லை நம்ம உண்மை தமிழன் அண்ணனா??
நான் ஒரு சாதரண இந்திய நாட்டின் குடிமகன்!!.

பல மக்கள்கிட்ட சேர ஒட்டு போடுங்க, கமெண்ட் கூட பண்ணலாம்.

உங்கள்