Friday, November 13, 2009

ஒடுங்க ஒடுங்க உலகம் அழிய போகுது

"ஒடுங்க ஒடுங்க உலகம் அழிய போகுது......"
நான் இதுவரைக்கும் இப்படியொரு ஒபெநிங் எந்த ஹாலிவுட் படத்துக்கும் பார்த்ததில்லை.ராமநாராயணன் செமையா கல்லா கட்டிட்டாரு என்றே சொல்ல வேண்டும்.நான் இந்த படத்தை தமிழில் தான் பார்த்தேன்.தமிழ் பற்று என்று நினைத்து கொள்ள வேண்டாம் ஆங்கிலத்தில் பார்த்தால் கொஞ்சம் புரியாது என்ற காரணத்தால் பைலட் தியேட்டரில் பார்த்தேன்
.வரும் திங்கள்கிழமை கண்டிப்பாக இன்னொரு தடவை தேவி தியேட்டர் சென்று பார்ப்பேன்.ஆனால் இன்று போல் நான் பைலட் தியேட்டரில் இப்படி ஒரு கூட்டத்தை நான் பார்த்ததில்லை.


நீங்க ரோட்ல போகும் போது யாரவது இப்படி பேசினா

"அது சரியா நம்மளை எத்தனை மணிக்கு தாக்கும்",

"அங்கே ஏதோ ஒன்னு வருது"

என்று அவர் மனைவியை பற்றி சொல்லிகொண்டிரிந்தால் அவர் கண்டிப்பாக டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவோ இல்லை என்னை போல் டப்பிங் படம்

பார்ப்பவராகவோ இருக்க வேண்டும்.டப்பிங் படங்கள் எங்களை போன்ற பாமரர்களை மட்டும் அல்லாமல் அனைவரையும் ஈர்த்து உள்ளது என்றால் அது மிகையல்ல.படத்தில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் செம... நான் வாய் பிளந்து பார்த்து கொண்டிருந்தேன்.ஹீரோ CON AIR புகழ் ஜான் குஸக் ஒவ்வொரு தடவையும்

தப்பிக்கும் போது தியேட்டரில் செம கைதட்டு.படத்தில் பல டச்சிங் சீன்கள் இருக்கின்றன(மனதை தொடும் காட்சிகள்).படத்தில் அமெரிக்கா அதிபராக
LEATHAL WEAPON புகழ் டேனி க்லோவேர், ரொம்ப இயல்பா தன் நடிப்பை வெளிபடுத்தியுள்ளார்.

முக்கியமாக ஜான் ஒரு மாப்பை தேடி வேன்க்குள் செல்வார் ஆனால் அதற்குள்
வேன் பிளந்த பூமியில் போய்விடும்,அவர் எப்படியும் வந்து விடுவார் என்று தெரியும் இருந்தாலும் நம்மை அறியாமல் நம் மனம் கை தட்டுகிறது. தியேட்டரில் இந்த காட்சிக்கு செம ரெஸ்பான்ஸ்.


படத்தின் நிஜ ஹீரோ இயற்கை தான்(நமக்கும் தான்).இந்த படத்தின் டைரக்டர் நமக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இது போல் படம் எடுக்கிறாரா?? இல்லை நம் சாவை நம் கண் முன் காட்டி இப்படி தான் சாகபோறிங்கன்னு சொல்றாரா?? என்று கேட்டால் ரெண்டுமே தான்.


இந்த படத்தில் ஒரு வசனம் வரும் அது

" மனிதனுக்கு எப்போ அன்பு குறையுதோ அந்த நிமிஷமே
உலகம் அழிஞ்சிடும்"
என்று.

படம் பார்த்துட்டு பைக் எடுக்கும் போது ஒருத்தன் என் காலை
மிதிச்சிட்டான் ஒரு ஸாரி இல்லை ஒரு பார்வை கூட பார்க்கல
அப்போ உலகம் சீக்கரம் அழிந்து விடுமா??....

*************************
2012 ருத்ரம் படம் சூப்பர்...ருத்ரம் வரிவிலக்கு வேறு.இனிமே எத்தனை ருத்ரம் வரபோகுதோ தெரியவில்லை....

சில சாம்பிள்

ருத்ர நாள்
ருத்ர மங்கை
ருத்ர தங்கை
ருத்ரன் (எந்திரன் மாதிரி)
ருத்ர இரவு
ருத்ர மத்தியானம்
.... போதும் முடியல இல்ல...ரைட்.

ஆக மொத்தம் படத்தை பாருங்க ரசிங்க கொஞ்சம் இயற்கையை பத்தி
டைம் இருந்த சிந்திச்சு பாருங்க...

உங்கள்
ஜெட்லி சரண்.

14 comments:

SUREஷ் (பழனியிலிருந்து) said...

//ஒடுங்க ஒடுங்க உலகம் அழிய போகுது......"
//

ஓடு ஓடு அது வாலால் அடிக்கும்.

ஜூராசிக் பார்க் படத்தில் எங்களை மிகவும் கவர்ந்த வசனம். பல மாதங்கள் எங்களால் அந்த வசனம் பல இடங்களில் உபயோகப் படுத்தப் பட்டுவந்தது

பிரபாகர் said...

விமர்சனத்தில் ருத்ரதாண்டவம் செய்திருக்கிறீர்கள். (ருத்ரம் வரணும்ல?)

பாத்துடலாம். எனக்கும் ஆங்கில படத்தை தமிழில் பார்க்க ஆசைப்படுவேன், காமெடிக்காக.
ஜாக்கி சான் கேட்பார், இது விஜய் யூஸ் பண்ணின துப்பாக்கியான்னு...

நல்லாருக்கு சரண்.

பிரபாகர்.

புலவன் புலிகேசி said...

இன்னைக்கி போவோம்ல.......

ஜெட்லி said...

@ suresh

nandri thala


@ pirabakar

ada neengalum namma aalu

@pulikesi

parthutu sollunga

யோ வொய்ஸ் (யோகா) said...

ருத்ர பதிவு போட்டிருக்கிறீர்கள்

Mrs.Menagasathia said...

" மனிதனுக்கு எப்போ அன்பு குறையுதோ அந்த நிமிஷமே
உலகம் அழிஞ்சிடும்"என்று.

படம் பார்த்துட்டு பைக் எடுக்கும் போது ஒருத்தன் என் காலை
மிதிச்சிட்டான் ஒரு ஸாரி இல்லை ஒரு பார்வை கூட பார்க்கல
அப்போ உலகம் சீக்கரம் அழிந்து விடுமா??....// அடப்பாவி இப்படியும் சில ஜென்மஞ்கள் இருக்கு..

//ஒடுங்க ஒடுங்க உலகம் அழிய போகுது // நான் தலைப்பை பார்த்து பயந்து போய்ட்டேன் .எங்கட நாம ஒடுறதுன்னு..படித்து பார்த்தப்புறம் தான் தெரிந்தது விமர்சனம்னு...

Mohamed Bismillah said...

இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாகட்டும். நானும் படத்தை முதல் நாளிலே பார்த்தேன். படம் மிகவும் அற்புதம். படம் நிச்சயம் நன்றாக ஓடும். உங்கள் விமர்சனமும் இனிய நடையில் உள்ளது. வாழ்த்துக்கள். உலக மக்கள் அனைவரும் பார்க்க வேண்டிய மிக முக்கியமான படம். இங்கே அனைவருக்கும் ஓன்றை சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். மனிதரில் பல மாக்களும் உள்ளனர் அவர்கள் இப்பொழுது திருந்தாவிட்டாலும் ஒரு நாள் திருந்திதான் ஆக வேணடும்.இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாகட்டும்

ஜெட்லி said...

@ யோ

நன்றி யோ@ மேனகா

சும்மா ஒரு பில்ட் தான்....@ Mohamed Bismillah

நன்றி....தங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி...
நாம் திருந்த வேண்டிய நேரம் வந்து விட்டது...
இயற்கையை இனிமேலும் பாழ் செய்யாமல் இருந்தால் நல்லது.

RAMYA said...

//ஒடுங்க ஒடுங்க உலகம் அழிய போகுது......"//

ஐயோ பயந்து போனேன் இந்த தலைப்பைப் பார்த்து :)

டயலாக் தானே அதுனாலே பயம் போய்டுச்சு

//
" மனிதனுக்கு எப்போ அன்பு குறையுதோ அந்த நிமிஷமே உலகம் அழிஞ்சிடும்"என்று.
//

இருக்கலாம் எல்லாமே அன்பை மையப் படுத்திதான் இருக்கு :(


//படம் பார்த்துட்டு பைக் எடுக்கும் போது ஒருத்தன் என் காலை மிதிச்சிட்டான் ஒரு ஸாரி இல்லை ஒரு பார்வை கூட பார்க்கல
அப்போ உலகம் சீக்கரம் அழிந்து விடுமா??...
//

இது போல் செய்பவர்கள் தான் இப்போது அதிகம் :)
அழிஞ்சாலும் அழிஞ்சிடும் :((

angelintotheheaven said...

படம் பார்த்துட்டு பைக் எடுக்கும் போது ஒருத்தன் என் காலை
மிதிச்சிட்டான் ஒரு ஸாரி இல்லை ஒரு பார்வை கூட பார்க்கல
அப்போ உலகம் சீக்கரம் அழிந்து விடுமா??....


avaruku pathila nan sorry solidren. ok sir


ulagam pala kalam irukatum.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//படம் பார்த்துட்டு பைக் எடுக்கும் போது ஒருத்தன் என் காலை
மிதிச்சிட்டான் ஒரு ஸாரி இல்லை ஒரு பார்வை கூட பார்க்கல
அப்போ உலகம் சீக்கரம் அழிந்து விடுமா??...//
ஆனா நீங்க ஒரு வார்த்தை கூட பேசாம வந்துட்டீங்க இல்ல, உங்க அன்பு மனசுக்கு
இந்த உலகம் இப்போதைக்கு அழியாது.

நீங்க பதிவு போடுங்க.....போடுங்க......போட்டுகிட்டே இருங்க.

ஜெட்லி said...

@ ரம்யா

தங்கள் கருத்துக்கு நன்றி....@angelintotheheaven

உங்களுக்கு ரொம்ப பெரிய மனுசுங்க..
அடுத்தவன் பண்ண தப்புக்கு நீங்க சாரி கேக்குறிங்க...
ரைட்...


@பெயர் சொல்ல விருப்பமில்லை

உங்க பின்னூட்டம் என்னை புல் அரிக்க வைத்து
விட்டது நண்பா... என்னை இவ்ளோ பெரிய ரேன்ஜ்க்கு பீல் பண்ணியதருக்கு நன்றி

250WcurrentIsay said...

//மனிதரில் பல மாக்களும் உள்ளனர் அவர்கள் இப்பொழுது திருந்தாவிட்டாலும் ஒரு நாள் திருந்திதான் ஆக வேணடும்.///

romba feel pannitaaru pola.... odunga odunga ulagam azhiya pogudhu.... innum eththana naaluthaan ippadi peedhiya kelappi viduvaangalo theriyala......

கடைக்குட்டி said...

//ருத்ர மத்தியானம்//

மைன்ட்ல வெச்சு இருக்கேன்... குட் காம்பினேஷன்..

விமர்சனமும் மொக்க்.. மொக்க படத்த பத்தி எழுதுனா மொகயாத்தான் இருக்கும் மக்கான்னு சொல்றீங்களா???

ரைட்டு விடு...