Wednesday, November 25, 2009

2012 இல் நம் நடிகர்கள்.....

2012 இல் நம் நடிகர்கள்.....


2012 என்ற படத்தில் நம் ஊர் நடிகர்கள் நடித்திருந்தால் எப்படி
இருந்திருக்கும் என்ற ஒரு சிறு கற்பனையே இந்த இடுகை.
அந்த படத்தின் ஹீரோவே நம்ம தமிழ் நடிகர் போல் தான்
நடிச்சிருந்தார் என்று நீங்கள் சொல்வது சரி, இருந்தாலும் நம்ம
ஊர் நடிகர்கள் கிட்ட வர முடியுமா.....முக்கியமான விஷயம்

பின்வரும் யாவையும் சிரிக்க மட்டுமே தயவு செய்து சிந்திச்சுராதிங்க.

முதலில் அஜித்:

அந்த எரிமலை வெடிக்கும் சீனில் நம் தல அஜித் இருந்திருந்தால்


தல அவர்கள்,எரிமலை பந்துகளை பேஸ்பால் மட்டையால்
அடித்து திரும்பி எரிமலைக்குள்ளே அனுப்புகிறார்.கடைசி
எரிமலை பந்தை காலால் நிறுத்தி அதன் பின் அந்த எரிமலை
பந்தில் சிகரட் பத்த வைக்கிறார்.அப்புறம் வழக்கம் போல்
பேஷன் ஷோவில் நடப்பது போல் திரையில் நம்மை பார்த்து
நடந்து வருகிறார்.(என்னது அதே கருப்பு கலர் கோட்டு பின்னாடி
பில்லா பாட்டா??).


சூர்யா:

சூர்யா இதுல கை குழந்தையா வர்றாரு... ஆமா ஆமா அதே
ஒட்டு வேலை தான்.1990 ல கை குழந்தையா இருக்கும் போதே
வீட்டை விட்டு ஓடி போயிடுறாரு ஸாரி தவழ்ந்து போயிடுறாரு.
அப்புறம் 22 வருஷம் கழிச்சு அவருக்கு 23 வயசு ஆயிடுது.
படத்துல அந்த கண்ணாடி பில்டிங் ஒன்னு விழுமே அதை
நம்ம சூர்யா தாங்கி பிடிக்கிறாரு அங்கே தான் சமீராரெட்டியை பார்க்கிறார்,அப்புறம் என்ன லவ்ஸ் தான் ரோமென்ஸ் தான்
உலகம் அழிஞ்ச அவங்களுக்கு என்ன....


விஷால்:

நம்ம புரட்சி தளபதி விஷாலுக்கும் எதிர் வீட்டில் இருக்கும்
ஸ்ரேயாவுக்கும் லவ்ஸ்.அப்போதான் நிலநடுக்கும் வருது.
படத்தில் சூப்பர் மார்க்கெட் ரெண்டாக பிளக்குமே அது போல்
விஷால் வீட்டுக்கும் ஸ்ரேயா வீட்டுக்கும் இடைய உள்ள
ரோட் பிளந்து விடுகிறது.அப்ப தான் நம்ம விஷால் மண்ணு
கூட ஒரு அரைமணி நேரம் மொக்கை போட்டு பேசுறார்.
( எ.கா- தோரணை கிளைமாக்ஸ்) விஷாலின் மொக்கை
தாங்காமல் உடனே தானாகவே பிளந்த ரோட் ஒட்டிகொள்கிறது
அப்புறம் என்ன பாட்டுதான்.விஜய்:

விஜய் கப்பலில் முட்டிக்கு கீழ் ஒரு கர்சீப் கட்டி கொண்டு
தலையில் ஒரு தொப்பி போட்டு கொண்டு எதிரிகளுக்கு
தெரியாமல் மாறுவேஷத்தில் இருக்கிறார்.அப்போ தான்
சுனாமி வருது.2012 படத்தில் ஒரு தாத்தா சுனாமியை
கப்பலில் வெளிய வந்து பார்ப்பாரே அது போல் நம் விஜய்
வந்து பார்க்கிறார்.(என்னது பஞ்ச் டயலாக்கா??) சுனாமிக்கு
எல்லாம் பஞ்ச் உட்ட எப்படி.சுனாமி கப்பல் கிட்டே நெருங்கும்
போது சுசுன்னு ஊதுகிறார் அவளோதான் சுனாமி அப்படியே
திரும்பி போய் விடுகிறது.
(போவாதுனு சொல்றிங்களா ?? )


டி.ஆர்:

ஸ்பேஸ் ஷிப் ஏறி தப்பிக்க டி.ஆர் வருகிறார் அப்போது அவரை
காவலாளி தடுத்து நிறுத்துகிறார்.

டி.ஆர்: நான் யார் தெரியுமா?முன்னால் சிறுசேமிப்பு துறை
தலைவர் என்னை முதல்ல உள்ள விடுயா...

காவலாளி: மந்திரிகளே பின்னாடி தான் நிக்குறாங்க நீங்க
அவுங்க பின்னாடி போய் நில்லுங்க.

டி.ஆர்: u r appressing suppressing deppressing supervising a tamilian...
நான் தமிழன்டா பச்சை தமிழன்டா...

காவலாளி: இப்போ யாரு இல்லன்னு சொன்னங்க??

டி.ஆர்: நான் மூச்சை பிடிச்சு பேசுனா நீ என்னையே கலாயிக்கிரியா!
சரி விடுப்பா நான் சால்ட் கொட்டா சரசு கிட்டயே போறேன். என்று திரும்பி போகிறார்.மும்தாஜ்க்கு போன் போட்டு
எங்கே இருக்கே அடுத்து நான் வீராசாமி பார்ட் -2 எடுக்க போறேன் நீ தான் நாயகி.நம்ம படம்தான் 0001 வருஷ பொங்கலுக்கு முதல் ரிலீஸ்.

சரத்குமார்:

சரத்குமார் கட்சி அலுவலத்தில் இருந்து நமக்கு வந்த கடிதம்
தேதி 10.12.12.

20.12.12 அன்று உலகம் அழியும் என்று அறிவித்து இருக்கிறார்கள்.
இதை எங்கள் கட்சி மென்மையாக கண்டிக்கிறது.என் படம்
ஜக்குபாய் 20.12.12 அன்று ரிலீஸ் தேதி அறிவிக்கபட்டு ஒரு
வருடம் ஆகிறது.என் வளர்ச்சியை பிடிக்காத யாரோ பீதியை
கிளப்பி விடுகிறார்கள்.நாங்க கண்டிப்பா 0004 ஆம் வருஷம்
ஏதோ ஒரு நாட்டில் அல்லது கிரகத்தில் ஆட்சியை பிடிப்போம்.

கமல்:

தேதி: உலகம் அழியும் கடைசி நாள்.
நேரம்: சுனாமி வரும் நேரம்
.

அசின்: ஏன் உலகம் அழியுது அழியுதுனு சொல்றேள்..

கமல்: நான் அழியனும்னு சொல்லல அழிஞ்சா நல்ல இருக்கும்னு
தான் சொன்னேன்.


உங்களுக்கு பிடிச்சா கண்டிப்பா ஒட்டு போடுங்க , கமெண்ட்
போட்டால் சந்தோசம்.

உங்கள்
ஜெட்லி சரண்.

29 comments:

SUREஷ் (பழனியிலிருந்து) said...

நல்லாயிருக்கு தல

சின்ன அம்மிணி said...

super

கடைக்குட்டி said...

விஷால் செமங்க.. ஹா ஹா.. மொக்க தாங்காம அதுவே செந்துக்குதா...

சூர்யா கைகுழந்தையா ஓடி..ச்சே தவழ்ந்து...
சூப்பர்..

விஜயும்..
விஜய டி.ஆர்.ம் டாப்பு...

சரத் , கமல் புடிக்கலிங்க.. :-)

சரவணகுமரன் said...

//u r appressing suppressing deppressing supervising a tamilian...
//

:-)

பிரியமுடன்...வசந்த் said...

முழுதும் ரசித்தேனப்பா

டீ ஆரும்,சரத்குமார் யோசிச்சதும் சூப்பர்ப்..

250WcurrentIsay said...

I too was thinking on the same lines.... neenga mundhikitteenga

யோ வொய்ஸ் (யோகா) said...

நல்லாயிருக்கு தல 2012 பார்த்திட்டு மீண்டும் இந்த பதிவ வாசிக்க வேண்டும்

புலவன் புலிகேசி said...

நல்ல நகைச்சுவை தல..விஜயும் அஜீத்தும் தான் உச்சக் கட்ட நகைச்சுவை...

Chitra said...

ha,ha,ha,... ..Kamal piece is the best!

விக்னேஷ்வரி said...

யாவையும் சிரிக்க மட்டுமே தயவு செய்து சிந்திச்சுராதிங்க. //
மறந்தும் சிந்திக்கத் தெரியாது எனக்கு. :)

சுனாமி கப்பல் கிட்டே நெருங்கும்
போது சுசுன்னு ஊதுகிறார் அவளோதான் சுனாமி அப்படியே
திரும்பி போய் விடுகிறது. //
ஹாஹாஹா எல்லாமே கலக்கல். இது டாப்பு.

சூப்பர் ஸ்டாரை மட்டும் விட்டுட்டீங்களே, ஏன்...

லோகு said...

சூப்பர் மாப்ள... ரொம்ப நல்லாருக்கு.. நல்லா சிரிச்சேன்...

ஜெட்லி said...

@ ப்ரியமுடன் வஸந்த்

நன்றி நண்பா..

@ சரவணகுமரன்

நன்றி..

ஜெட்லி said...

@ கடைக்குட்டி

ஏன் சரத் ரசிகரா??...
அட விடுப்பா என்கிட்டே இருக்கிற சரக்கு
அவ்வளவு தான்...

ஜெட்லி said...

@ சின்ன அம்மிணி

நன்றிங்க அம்மிணி...


@ சுரேஷ்

நன்றி தல

ஜெட்லி said...

@ சித்ரா

மிக்க நன்றி...

@ புலவன் புலிகேசி

நன்றி நண்பா

ஜெட்லி said...

@ யோ

அப்படி வாசித்தால் இன்னும் நன்றாக புரியும் யோ...

ஜெட்லி said...

@250WcurrentIsay

அப்ப உங்களுக்கும் எனக்கும் கரண்ட் ஒரே வேவ்ல
பாஸ் ஆகுதுன்னு சொல்லுங்க....

ஜெட்லி said...

@ லோகு

நன்றி லோகு ..

ஜெட்லி said...

@ விக்னேஸ்வரி

சூப்பர் ஸ்டார் பார்த்தாலே சுனாமி பத்தடி தள்ளி
போயிரும்... இத வேற ஏன் எழுதிட்டுன்னு தான்
விட்டுடேன்....

Bala De BOSS said...

>>>>>>>விஜய் கப்பலில் முட்டிக்கு கீழ் ஒரு கர்சீப் கட்டி கொண்டு
தலையில் ஒரு தொப்பி போட்டு கொண்டு எதிரிகளுக்கு
தெரியாமல் மாறுவேஷத்தில் இருக்கிறார்>>>>

ஹ ஹஹா . அருமையான மாறுவேஷம். யாராலையும் கண்டுபிடிக்கவே முடியாது. எப்படிதான் இப்படியெல்லாம் யோசிக்கிறீங்களோ.

T.R, சரத்குமார் அருமை நண்பா.

இதுபோல பல பதிவுகளை எதிபார்க்கிறேன்.

Mrs.Menagasathia said...

முடியல முடியல்.செம காமெடி.டி.ஆர் காமெடி படி ஜோர்!!

வால்பையன் said...

//விஜய் கப்பலில் முட்டிக்கு கீழ் ஒரு கர்சீப் கட்டி கொண்டு
தலையில் ஒரு தொப்பி போட்டு கொண்டு எதிரிகளுக்கு
தெரியாமல் மாறுவேஷத்தில் இருக்கிறார்.//

செம நக்கல்!

Mrs.Menagasathia said...

pls see this link

http://sashiga.blogspot.com/2009/11/blog-post_25.html

போவாஸ் said...

சூப்பாரோ சூப்பர்தலைவா. 'மாலுமி' விஜயகாந்த விட்டுடிங்களே ?.

ஜெட்லி said...

@ மேனகா

மிக்க நன்றி...


@ வால் பையன்

உண்மையேதான் சொன்னேன்
தலைவரே....

ஜெட்லி said...

@ பாலா மாமு..

நன்றி மாமே... தொடர்ந்து போடுவோம்..

kanagu said...

nalla comedynga... vijaythu super.. :) :)

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//போவாஸ் said...
November 25, 2009 10:34 PM
சூப்பாரோ சூப்பர்தலைவா. 'மாலுமி' விஜயகாந்த விட்டுடிங்களே ?//
விஜயகாந்த் நடித்திருந்தால், சுனாமி வரும்போது, இப்படி பேசியிருப்பார் :-

"ஜப்பான்ல நீ வந்தா, முன்னாடியே அவங்களுக்கு தெரியுது, அமெரிக்கால வந்தா, அதையும் அவங்க முன்னாடியே கண்டுபிடிச்சுடுவாங்க;
ஆனா தமில் நாட்டுக்கு வரும்போது மட்டும் தெரியாம வந்துடுவ, ஏன்னா, தமிலன் இளிச்சவாயன், அதான? ஆனா, நான் ஒருத்தன் இங்க இருக்கறவரைக்கும் உனக்கு இங்க வேலை கிடையாது அங்.........."
இதுக்கு மேலயும் சுனாமி அங்க நிக்கும்?

spiritual ocean said...

நல்லாவே கிண்டல் பண்றீங்க இப்படிக்கு www.aanmigakkadal.blogspot.com