Saturday, May 30, 2009

பொடிமாஸ் .....

பொடிமாஸ் .....

********************************


ஜோக்:

(நண்பர்களின் வேண்டுகோள் படி இந்த வார சைவம் ஜோக்)


ஒருவன்: சார் " மனைவியை அடக்கி ஆள்வது எப்படி" ங்கற
புத்தகம் எங்கே இருக்கு?


லைப்ரேரியன்: கற்பனை நாவல் எல்லாம் கடைசி ஸெல்ப்பில்(shelf) இருக்கும்.


ஒருவன்: ? ? ? ? ?.


*********************************

சமீபத்தில் வலைப்பதிவு நண்பர் லோகுவுடன் நானும் சாட் செய்யும் போது என்னால் லோகுவின் நகைச்சுவை உணர்வை மேலும் உணர முடிந்தது, அந்த சாட்டில் இருந்து சில வரிகள் உங்களுக்காக

நான் : எந்த படத்தில் இருந்து உனக்கு அஜித்தை பிடிக்கும்?


லோகு : நெஞ்சினிலே.

(நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன், விஜயை இதை விட மொக்கை பண்ண முடியுமா? )

*************************************

எனக்கு பிடித்த பொன்மொழிகள்:

# பறக்கும் முத்தத்தை கொடுப்பவர்கள் - படுசோம்பேறிகள்.


- பாப் ஹோப்.


# ஏமாற்றத்தை தள்ளி போடுவதற்கு பெயர்தான் - நம்பிக்கை.

-பரிட்டன் பால்.


**********************************************

(பாட்டி சும்மா போஸ் தான் குடுக்குது, யாரும் நம்பாதிங்க)நாளைக்கு(31.5.09) உலக புகையிலை எதிர்ப்பு தினமாக கொண்டாட படுகிறுது. நேத்து ரேடியோல என்ன சொன்னாங்கனா நாளைக்கு எந்த கடையிலும் சிகரட் விக்க மாட்டங்களாம், அதையும் பாக்க தானே போறேம்.நம்ம நாட்டுல இந்த போதை பாக்குக்கு தடை பண்ணி பல வருஷம் ஆச்சு, ஆனா கடையுல சரம் சரமாக தொங்கத்தான் செய்யுது. முதல்ல சிகரட் தயாரிப்பதை நிறுத்தினாலே அனைவரும் புகை பழக்கத்தில் இருந்து மீண்டு விடுவார்கள். அதை விட்டுட்டு ஒரு நாள் சிகரட் விக்காம இருந்தா யாரும் திருந்த மாட்டாங்க, அதான் உண்மை.எதுக்கும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, வலையுலக நண்பர்களே தயவு செய்து முன்னாடியே ஒரு பாக்கெட் சிகரட் வாங்கி வச்சுக்குங்க. நம்ம ஆளுங்க தமிழ் படம் வில்லனுங்க மாதிரி தீடிர்னு திருந்திற போறாங்க.


*************************************

படித்தது:


ஹிட்லர் யூதர்களை அடியோடு வெறுத்தவர். ஒரு தடவை ஒரு ஜோதிடரை அழைத்து அவரிடம் ஹிட்லர் "நான் எப்போது சாவேன்?" என்று கேட்டார்.அதற்கு ஜோதிடர் "நீங்கள் யூதர்களின் விடுமுறை நாளன்று மரணம் அடைவீர்கள்" என்றார்.


"யூதர்களின் விடுமுறை நாள் என்றைக்கு?" என ஹிட்லர்
மறுபடியும் வினாவினார்.


"நீங்கள் இறக்கும் நாள்தான் யூதர்களின் விடுமுறை நாள்!"
என்று ஜோதிடர் பதிலளித்தார்.


****************************************

கேட்டது:

யுவனின் இசையில் சமீபத்தில் ஜெய் நடித்த வாமணன் படத்தில் ஒரு பாடல் வித்யாசமான மெலடியாக இருந்தது "ஒரு தேவதை" என்று தொடங்கும் பாடல் ரூப்குமார் ரதோட் என்பவர் பாடியுள்ளார் . டைம் கிடைச்சா கேட்டு பாருங்க.


************************************

பிடித்தது:

இந்த வாரம் இராகவன் , நைஜிரியா , கடைக்குட்டி ,சக்கரை சுரேஷ் இவர்களின் பதிவு அருமையாக இருந்தது, அதுவும் இராகவன் சார் பதிவு நல்ல நகைச்சுவையாக இருந்தது. நீங்களும் அவர்களின் பெயரை கிளிக் செய்து படிக்கவும்.


********************************************


நடந்தது:

டாஸ்மாக் கடையில் நான்கு நண்பர்கள் சுதி ஏத்தி
கொண்டிருந்தனர். நான்கு ரவுண்டுக்கு அப்புறம் அதில் ஒருத்தன் தீடிர் என்று மது பாட்டில் லேபுளை பார்த்து தன் எதிரில் இருக்கும் நண்பனிடம்....


"மச்சான் நீ லவ் பண்றத பத்தி இந்த பாட்டில் லேபுளில்
போட்டிருகாங்க, தயவு செய்து லவ் பண்றதா விட்ரு மச்சி".


"டேய் குடிச்சிட்டு போலம்பாதாட, நான் லவ் பண்றதை பத்தி அந்த பாட்டில்ல என்னடா போட்ருக்கு"


"இங்க பாரு மச்சி மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடுன்னு, உன் லவ்வர் பேர் மது தானே..."


*********************

மேலும் என் பழைய பொடிமாஸ் படிக்க இங்கே அமுக்கவும் பொடிமாஸ் 3 ,
பொடிமாஸ் 2 ,
பொடிமாஸ் 1 .


********************

உங்கள்

ஜெட்லி.

Friday, May 29, 2009

தோரணை -- புரட்சி தளபதிக்கு ஒரு கடிதம்.

வணக்கம் புரட்சி தளபதி விஷால் அவர்களே,இப்பதான் உங்க தோரணை படம் பார்த்து விட்டு வந்தேன்,
பொதுவா நான் விமர்சனம் தான் எழுதுவேன் ஆனா என்னமோ தெரியுல இன்னிக்கு உங்களுக்கு கடிதம் எழுதுனும்னு தோணிச்சு. இந்த கடிதம் உங்கள் பார்வைக்கு வருமான்னு எனக்கு தெரியாது ஆனா நம்ம ப்ளாக் படிக்கும் அனைவரையும் சென்று அடைந்தால் போதும்.படத்துக்கு வருவோம், முதல் பாதி படம் உங்களுக்கு காமெடி
வரும்னு தூள் கிளப்பிட்டிங்க. நீங்களும் சந்தானமும் அடிக்கும்
லூட்டியில் என் வயிறு வலிக்கும் அளவுக்கு நான் சிறிது மகிழ்ந்தேன், திரைஅரங்கம் முழவதும் சிரிப்பு சரவெடி தான் போங்க. அதுவும் மயில்சாமியும் சந்தானுமும் பறவை முனியம்மாவிடம் அந்த புது பில்டிங்கில் நடக்கும் கூத்து சூப்பர் சூப்பர் சூப்பர்.படத்தில உங்க ஒபெநிங் என்னை நிமிர்ந்து உட்கார வைத்தது,
ஆனால் அதுக்கு அடுத்த காட்சியே உங்களுக்கு ஒரு ஒபெநிங் சாங், நீங்களே உங்களுக்கு பில்ட் அப் கொடுத்துட்டு அதை நீங்களே கிண்டல் பண்ணிகிரிங்க( எங்களுக்கு முன்னால நீங்களே முந்திகிட்டிங்க). உங்க தோரணை படத்தோட போஸ்டர் எல்லாம் சண்டைகோழி ஸ்டில் மாதிரி இருந்தது, படத்தை பார்த்த தான் தெரியுது தோரணை உங்கள் எல்லா படத்தையும் சேர்த்த ஒரு கலவை என்று.

ஸ்ரேயா, இவரின் தாராள மனம் படத்துக்கு பலம் சேர்க்கவில்லை, பாடல் காட்சிகள் தவிர இவருக்கு ஒண்ணும் பெருசா வேலை இல்லை. படத்தின் பின் பாதியில் நீங்களும் ஸ்ரேயாவும் போடும் மொக்கை தாங்க முடியவில்லை.


நீங்க வேற படத்துல உங்க அண்ணனை தேடிட்டு சென்னைக்கு வரிங்க, நான் படம் ஆரம்பிக்கும் போதே நினைச்சேன் ஒண்ணு பிரகாஷ்ராஜ் அல்லது கிஷோர் தான் உங்கள் அண்ணன் என்று. நீங்க நடுவுல ஸ்ரீமனை காட்டி என்னை குழப்பிவிட்டதாய் எண்ண வேண்டாம். அதுவும் திடிர்னு நீங்க ஆந்திரா காரை காட்டுவதும், ஆந்திரா எழுத்தில் உள்ள கடைகளை காட்டுவதை
உங்கள் குழுவின் அலட்சியத்தை காட்டுகிறது.
இரண்டாம் பாதி முழுவதும் மனதில் ஒட்டாத காட்சிகள், உங்க அம்மா , அண்ணன் செண்டிமெண்ட் எதுவும் எடுபடவில்லை. நான் நீங்கள் நடித்த சத்யம் படத்தை பார்க்கவில்லை, ஆனால் நீங்கள் நடித்த அனைத்து படங்களும் சிவப்பதிகாரம் தவிர எனக்கு மிகவும் பிடிக்கும்.
அப்புறம் சார் உங்க படத்துல என் சார் அரைச்ச மாவையே ஏன் அரைக்கிரிங்க, பைட் காட்சிகள் ரொம்ப பில்ட் அப். நான் இந்த படத்தை பாக்கறதுக்கு முக்கிய காரணம் பொல்லாதவன் புகழ் கிஷோர். அவரின் நடிப்பு மிக அருமையாக இருக்கும். ஆனால் அவர பேச விடாம அவரை மருத்துவமனையில் படுக்க வச்சிடிங்க. சரி, அவர் தான் பேசல ஆனா நீங்க பேசியே உங்க அண்ணன் அடியாட்களை திருத்திரிங்க. பேசாம நீங்க எதாவது ஒரு கல்லூரியில் விசிடிங் பேராசிரியாராக போக உங்களுக்கு நல்ல திறமை இருக்கு.அப்புறம் அது எப்படி சார் நீங்களும் கிஷோரும் கார்ல மாட்டிகிரிங்க, போலீஸ் உங்க காரை சல்லடையாக துப்பாக்கியால் துளைத்து விடுகிறார்கள் அப்புறமும் நீங்க காரை எடுத்துக்கிட்டு போறீங்க, என்கிட்டே மட்டும் சொல்லுங்க சார் "நீங்க கார்ல எந்த இடத்துல்ல ஒளிஞ்சி இருந்திங்க". இத எல்லாம் சொல்ல உனக்கு என்ன அருகதை இருக்குன்னு நீங்க கேக்கலாம் முதல் நாள் உங்கள் படத்தை பார்த்த ஒரு தகுதி போதும்ன்னு நினைக்கிறேன்.


உங்கள்

ஜெட்லி.

முத்தான 32 கேள்விகள் - தொடர் பதிவு.

தொடர் பதிவு என்ற இந்த புதிய விஷயத்தை எங்களுக்கு அறிமுகம் செய்து அதில் கலந்து கொள்ள ஒரு அழைப்பு (வாய்ப்பு) தந்த கடைக்குட்டி மற்றும் லோகுவுக்கு எங்கள் நன்றி.

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
எங்கள் குடும்பத்தில் எனக்கு தெரிந்த வரையில் ஒரு ஐந்து தலை முறையாக (சிதம்பரம், திருப்புகழ், சிதம்பரம், திருஞானம், சித்தரஞ்சன்) அதாவது C அடுத்து T மாறி மாறி வரும், எங்கள் குடும்ப பெயரே (C.T.& Sons) தான். அதனால் C என்று தொடங்க ஒரு பெயர் வைக்க வேண்டும் என்று முடிவு செய்து முதலில் சாணக்யன் என்று தான் எனக்கு பெயர் வைத்தனர் பிறகு என்ன தோன்றியதோ அதை மாற்றி சித்தரஞ்சன் என்று சூட்டினர்.

எனக்கு கண்டிப்பாக எனது பெயர் பிடிக்கும், எனது பெயர் தான் எனது முகவரி (Identity) . உங்களுக்கு தெரிந்த யாராவது இந்த பெயரில் இருக்கிறார்களா?? அதனால் ஒரு சின்ன பெருமையும் கூட. ஆனால் சில நேரங்களில் சில இடங்களில் பலருக்கு ஏன் பெயரை சொல்லி புரிய வைப்பதற்கு சிரமம் தான், அதனால் சித்து என்றே கூறிவிடுவேன்.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
கடைசியாக அழுதது எப்பொழுது என்று எனக்கு சரியாக நினைவில்லை, ஆனால் உள்ளுக்குள் அழுதது பல முறை. கடந்த அக்டோபர் மாதம் நான் சபரி மலை சென்று திரும்பி வந்து கொண்டிருந்த பொழுது என் ராக்கி இரண்டு தினங்களுக்கு முன்பு இறந்து விட்ட தகவல் வரவே சற்று நேரம் அழுது விட்டேன்.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
என்னோட கையெழுத்து எனக்கு கண்டிப்பாக ஓரளவுக்கு புடிக்கும், ஆனால் மற்றவர் ஒருவருக்கும் புடிக்காது. கோழிக்கும் எனக்கும் ஒரு போட்டி வைத்தால் அனேகமாக வெற்றி எனக்கு தான்.

4.பிடித்த மதிய உணவு என்ன?
எனக்கு பிடித்த மதிய உணவு தயிர் சாதம் தான், அதுவும் இந்த வெயிலுக்கு ரொம்பவே சூப்பர். இது தவிர தோசை, சப்பாத்தி எந்த நேரம் குடுத்தாலும் கூச்ச படாமல் சாப்பிடுவேன்.

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனேவச்சுக்குவீங்களா?
பொதுவாக எனக்கு கல்லூரியிலும் சரி பள்ளியிலும் சரி நிறைய நண்பர்கள் உண்டு, யாரை பார்த்தாலும் Hi, Hello கண்டிப்பாக சொல்வார்கள். ஆனால் என்னுடைய நெருங்கிய வட்டம் மிகவும் சிறியது தான். அதனால் கண்டிப்பாக நட்பை வளர்த்துக் கொள்ள விரும்புகிறேன், வாங்க பழகலாம்.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
எனக்கு கடலில் குளிக்க அவ்வளவு புடிக்காது, காரணம் அந்த உப்புத் தண்ணீர்.
அருவியில் குளிப்பதையே மிகவும் விரும்புகிறேன், அதுவும் பழத் தோட்டம், கிளியூர் அருவி போன்றதென்றால் அங்கேயே கிடப்பேன்.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
முதலில் அவரின் முகத்தை தான் கவனிப்பேன், குறிப்பாக கண்கள். அவை கூறிவிடும் அவர் நம்மை எவ்வாறு நினைக்கிறார் என்று.

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம்என்ன ?
நான் பொதுவாக நண்பர்களை விட மற்றவரிடம் சற்று அதிக பொறுமையை கடைபிடிப்பேன். இதுவே எனக்கு பிடிச்ச மற்றும் பிடிக்காத விஷயம். அதே போல் யாரையும் எளிதில் நம்பிவிடுவேன் இதனால் ஏகப் பட்ட இழப்புகள்.

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
இன்னும் அந்த சரி பாதி கிடைக்க வில்லை, கிடைத்த பின் பார்க்கலாம்.

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
அப்படி முன்பு நிறைய வருந்தியிருக்கேன், ஆனால் அது தேவையில்லாதது. Whatever happens life has to go on.

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
Light Orange Shirt, Black and green Mix Jean. என்ன இப்பவே கண்ண கட்டுதா?? நேற்று கரகாட்ட காரன் படம் பார்த்த பாதிப்புன்னு நினைக்கிறேன்.

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
கம்ப்யுட்டர் மானிட்டர் பார்த்துக் கொண்டே (வேண்டாம் உங்க கொலை வெறி பார்வை) தெருவில் போகும் வாகனங்களின் சத்தமும், தலைக்கு மேல் சுழலும் மின் விசிறியின் சத்தத்தையும் கேட்டுக் கொண்டே எழுதுகிறேன்.

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாகஉங்களுக்கு ஆசை?
கண்டிப்பாக கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு.

14.பிடித்த மணம்?
மண் வாசனை, குழந்தைகளுக்கு அணிவிக்கும் வசம்பு, டீசல் வாசம், மாம்பலம், காகித வாசம், Red Ferrari Perfume இப்படி பல உண்டு.

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம்.அவரை அழைக்கக் காரணம் என்ன ?

அவீங்க ராஜா - இவருடைய பல பதிவுகளை நான் பல முறை திரும்ப திரும்ப படித்துள்ளேன், இவர் எழுது நடை அப்படியே ராம் பட கஞ்சா கருப்பு பேசுவது போலவே இருக்கும். ரொம்ப பாசக்காரப்பய.

எடக்கு மடக்கு R.Gopi - துபாய் பற்றிய இவரின் பதிவுகள் என்னை மிகவும் கவர்ந்தவை. ஜோக்கிரி என்று இன்னொரு பதிவும் எழுதுகிறார்.

ஆதிமூலகிருஷ்ணன் நண்பர் ஆதிமூலக்ரிஷ்ணன் ஒரு இயல்பான நடையில் பல விஷயங்களை ஆழமாக எடுத்துரைக்கும் திறன் படைத்தவர்.

கிரி இவர் தீவிர ரஜினி மற்றும் நமீதா ரசிகர், இவரின் பதிவு முழுவதும் தீவிர சமூக சிந்தனைகள் கொட்டிக் கிடக்கும்.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்தபதிவு ?
எனக்கு இதை அனுப்பிய கடைக் குட்டியின் பதிவுகளில் சூர்யா பற்றிய பதிவுகள் அனைத்தும் புடிக்கும், மேலும் அவர் எழுதும் அனேக பதிவுகள் Short and Sweet ஆக இருக்கும் அது நெம்ப பிடிக்கும்.

17. பிடித்த விளையாட்டு?
எனக்கு பிடித்த விளையாட்டு உலகக் கோப்பை நடக்கும் பொழுது கால் பந்து, இந்தியா பாகிஸ்தான் விளையாடும் பொழுது கிரிக்கெட், நான் விளையாடும் பொழுது Computer games மட்டும் (U C basically i'm very சோம்பேறி ).

18.கண்ணாடி அணிபவரா?
ஆம், இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை, அப்புறம் Laser சிகிச்சை மேற்கொண்டுவிட்டதால் இப்பொழுது only Sunglass (யாருப்பா அது டேய் இது ரொம்ப ஓவர்னு சொல்றது??). லேசர் சிகிச்சை பற்றிய என்னுடைய இந்த பதிவை படித்து பயன் பெறவும்.

19.எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?
எனக்கு பொதுவாக Action, Romantic Comedy, History, Masala படங்கள் தான் புடிக்கும், என்னை பொறுத்த வரை படம் பார்ப்பது அந்த மூன்று மணி நேரம் நிம்மதியாக பொழுதை கழிக்கவே தான் அதனால் பொதுவாக சோகமான மற்றும் மொக்கை படங்களுக்கு போவதில்லை.

20.கடைசியாகப் பார்த்த படம்?
சர்வம், வேறு வலி?? தலைவிதி. நண்பர்கள் வற்புறுத்தி கூட்டி சென்றார்கள், பாதியில் ஓடிவிடலாமேன்றால் விடலையே.

21.பிடித்த பருவ காலம் எது?
குளிர் காலம் தான் எனக்கு பிடித்த காலம்.

22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
நேற்று தான் நண்பன் இலக்கியம் என்ற புறா என்ற சங்கர நாராயணன் கொடுத்த ஜெ.எஸ்.ராகவன் எழுதிய "தத்தக்கா புத்தக்கா" முடித்து விட்டு, க.சீ.சிவகுமார் எழுதிய "ஆதிமங்கலத்து விசேஷங்கள்!" ஆரம்பித்துள்ளேன்.

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒருநாள் மாற்றுவீர்கள்?
பொதுவாக நான் மாற்றுவதே இல்லை, ஒன்றிரண்டு மாதங்கள் மேல் கூட ஆகலாம்.

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்த சத்தங்கள் பல உண்டு, பறவைகள் எழுப்பும் ஓசை, என்னுடைய இடிப்பறவை (அதாங்க Thunderbird) எழுப்பும் ஓசை, டீசல் ரயில் என்ஜின் ஓசை, கொலுசு ஓசை, ஓட்டின் மேல் விழும் ஆலங்கட்டி/மழையோசை இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
பிடிக்காதது, டிராபிக் இல் சில வானரங்கள் ஓட்டும் வாகனங்களின் ஹாரன் சத்தம் எனக்கு தலைவலியையே உண்டு பண்ணிடும்.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
நான் சென்னையில் இருந்து இது வரை அதிக பட்சம் 11,319 km தொலைவு உள்ள New Zealand (அதாவது Auckland வரை இந்த தூரம் Christchurch இன்னும் 762km தூரம்) தான், ஏன் வாழ் நாளில் மறக்க முடியாத பயணம் அது. ஒரு பதிவே போடலாம், போடறேன்.
இந்தியாவில் நான் அதிக தூரம் சென்றது சுமார் 1042km தூரம் உள்ள புனே (Pune), ஷீரடி சென்றுவிட்டு ரயிலேற இங்கு சென்றோம், எனக்கு தெரிஞ்சு சென்னை ஒன்னுமே இல்லைங்க அது கிட்ட, அடியாத்தி என்ன ஒரு முன்னேற்றம்.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
அப்படி எதுவும் இருக்குற மாதிரி தெரியலைங்க, எதாவது உங்களுக்கு தெரிஞ்ச சொல்லுங்க.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
நம் நாடு இந்த அரசியல் வியாதிகள் கையில் சிக்கி சின்னாபின்னம் ஆவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதற்கு பதில் ஐந்து வருட ராணுவ ஆட்சியோ அல்லது, அனைவருக்கு கட்டாயம் மூன்று வருட ராணுவத்தில் சேவை செய்யவோ வழி வகுக்க வேண்டும்.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
கோபம், ஈகோ.

29.உங்களுக்கு பிடித்த (சுற்றுலா) தலம்?
நான் சென்ற இடங்களில் எனக்கு மிகவும் பிடித்த இடங்கள், முதலில் New Zealand, அடுத்தது பெங்களுரு, அடுத்தது சென்னை முதல் பெங்களுரு வரை உள்ள தங்க நாற்கரை சாலை அதில் பைக் அல்லது கார் இருந்தால் போதும் ஜாலிஆக சுற்றி வருவேன்.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
எல்லோருக்கும் நல்லவனாக இருக்க முடியாது, அதனால் ஏன் மனசாட்சிக்காவது நல்லவனாக இருக்க ஆசை.

31.மனைவி(கணவன்) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
நண்பர்களுடன் ஊர் சுற்றுவது.

32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
எல்லாம் நன்மைக்கே என்று எந்த ஒரு துன்பத்தையும் எதிர்கொள்ளுங்கள், எல்லாம் நன்மைக்கே.

சோலையார்பேட்டையும் சுட்டெரிக்கும் வெயிலும்.

இந்த பதிவு சென்னை, வேலூர் இன்னும் பிற வெயில் வாட்டி எடுக்கும் பகுதிகளில் வசிக்கும் பதிவர்களின் வெறுப்பையும் வயித்தெரிச்சலையும் பெறவே எழுதப் பட்டது.

நேற்று முழுவதும் நல்லா வெயிலில் ஊர் ஊராக (நாய் மாதிரி தான்) அலையற வேலை, தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பேருந்து ஏறி இன்னொரு பேருந்து மாறி இப்படியாக ஒரு பயணம் மேற்கொண்டு இறுதியாக பிருந்தாவன் விரைவு வண்டி ஏற சோலையார்பேட்டை (அதாங்க ஜோலார்பேட்டை) வந்து சேர்ந்தேன் (நொந்து நூடுல்ஸாக). இந்த ஊரைப் பற்றியும் ரயில் நிலையத்தைப் பற்றியும் ஏற்கனவே நான் எழுதிய பயணக் குறிப்பை படிக்கவும் , அப்படி இருந்த இடம் இன்று பாலைவனமாக சுட்டது, கண்கள் அப்படியே சிவந்து அவிந்து போயின.

பிறகு ஒரு நிழல் பார்த்து ஒதுங்கி திரு.ஜே.எஸ்.ராகவன் அவர்களின் "தத்தக்கா புத்தக்கா" புத்தகம் படிக்க ஆரம்பித்தேன். புத்தகத்தில் மூழ்கி விட்டதால் சுற்றி நடப்பதை கவனிக்கவில்லை (கருப்பு கண்ணாடி வேறு) . சற்று நேரத்துக்கெல்லாம் வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது,. கண்ணாடியை கழட்டிப் பார்த்தால் வெயில் சுத்தமாக மறைத்துக் கொண்டு கார் மேகங்கள் ஏலகிரி மலையை முட்டிக் கொண்டு இருந்தது. ஒரு ஐந்து நிமிடங்களில் அங்கே சூழ்ந்து இருந்த வெட்கை நாலு கால் பாய்ச்சலில் ஓடி விட்டது, "தென்றல் வந்து என்னை தொடும் ஆஹா ........." இப்படியாக நிலைமை மாறியது.

சிறிது நேரத்துக்கெல்லாம் லேசாக மழை தூர ஆரம்பித்தது, நான் எழுவதாக இல்லை (பின்ன இதுக்காக தானே தவம் இருந்தேன்) ஆனால் மழை மிக வேகமாக அடிக்க ஆரம்பித்தது, ஒரு பக்கம் அதிரடி தாக்குதல் அதே நேரத்தில் குற்றால சாரல் வேறு. சும்மா ஒதுங்கி நின்றிருந்த அனைவரையும் இந்த சாரல் குளிப்பாட்டியது. அடுத்ததாக நான் கூறப்போகும் விஷயம் தான் உங்கள் Stomachburn-i (அதாங்க வயித்தெரிச்சல்) கிளப்பும்.

திடீரென தட தட, தம தம, சல் சல் இப்படி பல மெல்லிய சத்தங்கள் பிறகு அதுவே மிக பலமாக, ஒன்றுமே விளங்கவில்லை எனக்கு என்னவென்று பார்த்தால் ஆலங்கட்டி மழையாம். என்னுடைய இருபத்தைந்து வருட வாழ்க்கையில இதை முதல் முறையாக நான் அனுபவிக்கிறேன், ஹைய்யோ என்ன ஒரு அழகு என்ன ஒரு குளிர்ச்சி என்ன ஒரு சந்தோசம் அங்கு இருந்த அனைவரின் முகத்திலும். ஒவ்வொரு ஐஸ் கட்டியும் ஒரே மாதிரி அளவில், வடிவில், குளிரில், (ஒரு ஐஸ் கட்டியை எடுத்து சுவைத்து பார்த்தேன் "அட போங்கடா நீங்களும் உங்கள் Mineral water-um") சிறிது நேரத்துக்கெல்லாம் அந்த நடை மேடை முழுவதும் வெள்ளியை உருக்கி முலாம் பூசியது போல் அழகாக காட்சியளித்தது. என்னதான் ரெண்டு கழுதை வயது ஆனாலும் (ஆமா இதென்ன கணக்கு??) ஒரு சின்ன குழந்தையை போல அதை அழகாக ரசித்துக் கொண்டே இருந்தேன்.


பிறகு ரயில் வந்து அதில் ஏற ஆனா சுமார் ஐந்து நொடிகளுக்குள் நன்றாக நனைந்து விட்டேன் என்றால் பாருங்களேன், உள்ளே எல்லோரும் என்ன ஒரு மாதிரி பார்த்தார்கள். ஆலங்கட்டி மழையின் இசைக் கச்சேரி ஒரு பத்து நிமிடம் தொடர்ந்தது பிறகு வாணியம்பாடி வரை மழை பெய்தது அதற்குப் பிறகு அதற்கான ஒரு சுவடு கூட தெரியல. நேற்றைய சென்னையின் வெப்பம் 41. சரி சரி நீங்க எல்லோரும் என்ன கொலை வெறியோட பார்ப்பது தெரியுது அதே வெறியோட ஒரு ஓட்டு ஒரு பின்னூட்டம் போடுங்க பார்க்கலாம்.

நன்றி.
சித்து.

Thursday, May 28, 2009

உங்களால் இதெல்லாம் முடியுமா?

உங்களால் இதெல்லாம் முடியுமா?

*************************

# நீங்கள் உங்கள் நண்பனின் மொக்கை பேச்சை அமைதியாக
காது
கொடுத்து கேப்பவரா?


#நீங்க நண்பர்களோடு எப்போ ஹோட்டல்லில் சாப்பிட்டாலும்,
நீங்க தான் பில் செட்டில் பண்ணுவிங்களா?


மேல கூறியுள்ள மாதிரி பழக்கங்கள் உள்ள நபரா நீங்கள்?

அப்போ வாங்க பழகுவோம். உங்களை மாதிரி ஒருத்தரை தான்
தேடிட்டு இருக்கேன். ஆமாம் உங்க வீடு எங்க இருக்கு?

*******************************************************

#விஜய் நடித்த ஆதி, குருவி , வில்லு போன்ற படங்களை தொடர்ந்து
ஒரே நாளில் பார்க்கும் தில்லு உடையவரா நீங்கள்?


#உங்களால் ஆறு பீரை ஒரே சமயத்தில் குடிக்க முடியுமா?
(என் நண்பன் ஐந்து பீர் குடிப்பான்)மேல கூறியுள்ள விஷயம் உங்களக்கு ஜுஜுபி என்றால்......

உண்மையிலே நீங்கள் எதையும் தாங்கும் இதயம் படைத்தவர்.
உங்களை என் மைண்ட்ல வெச்சிரிகேன்.

***********************************


#தாசில்தார் அலுவலகத்தில் ஒரே நாளில் உங்கள் வேலையை முடிக்க முடியுமா?


#டிராபிக் போலீசிடம் சிக்கி பணமே தராமல் உங்களால் தப்பித்து வர முடியுமா?


#வங்கியுள் சென்று ஐந்து நிமிடத்தில் பணத்தை போட்டோ அல்லது எடுத்து கொண்டோ வர முடியுமா?மேல கூறியுள்ள விஷயமெல்லாம் உங்களுக்கு அல்வா விஷயம் என்றால்,


எனக்கு உங்கள் கைபேசி நம்பரை தயவு செய்து தரவும், ஏன்னா கண்டிப்பா நீங்க பெரிய கையாக தான் இருக்க வேண்டும்.

**************************************************


#
சத்யம் திரை அரங்கில் உங்களால் பத்து ரூபாய் டிக்கெட் எடுக்க
முடியுமா?(சாதாரணமா நினைச்சிராதிங்க கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்).


#டாஸ்மாக் கடையில் இரவு 9.30 மணிக்கு அவளோ கூட்டத்தில்
உங்களால் சீக்கரம் சரக்கு வாங்கி வர முடியுமா?


மேல கூறியுள்ள விஷயம் உங்களக்கு கை வந்த கலை என்றால்...

என்னையும் உங்கள் பார்ட்னர் ஆக சேர்த்து கொள்ளவும்.
(என்னடா இவன் சரக்கு வாங்குறதுக்கு பார்ட்னர் கேக்குறானே
அப்படின்னு நினைக்காதிங்க, சும்மா பஸ்ல போகும் போது
டாஸ்மாக் கடை பக்கம்
சும்மா திரும்பி பாருங்க.(பி.கு:நானும்
அப்படி பார்த்து தான் உங்களுக்கு சொல்றேன்).

************************************************


உங்கள் ,

ஜெட்லிகவுண்டமணிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
( இது எங்களது 50 வது இடுகை, இந்த இடுகையை அவரது பிறந்த நாளான மே 25 ஆம் தேதி போட முடியாததால் இன்று போடுகிறேன்,காரணம் நண்பர்களோடு ஏற்காடு பயணம். உங்கள் பேராதரவை எங்களுக்கு தொடர்ந்து வழங்கும் படி கேட்டு கொள்கிறோம் )

belated birthday wishes to கவுண்டமணி.
கவுண்டமணி, என்றதும் நம் மனதும், உதடும் நம்மை அறியாமலேயே
பூத்து குலுங்கும்.தற்போது கவுண்டமணி அவர்கள் K.S.ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் நடிக்கும் ஜக்குபாய் படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்கிறார் என்பது நம் போல் ரசிகர்களுக்கு இன்பமான செய்தியாகும்.கவுண்டமணி ஓவர் சவுண்ட் விடுவார் என்று அவர் மேல் ஒரு குற்றச்சாட்டு உண்டு, ஆனால் அந்த சவுண்ட் தான் அவரை 1978 முதல் இன்று வரை அவர் தமிழ் திரையுலகில் நீங்கா இடம் பெற காரணமாக அமைந்தது. நம்ம சராசரி வாழ்க்கையில் கவுண்டமணி பேச்சுகள், நடவடிக்கைகள் நம்முள் சில சமயம் வெளிப்படும் ஏன் என்றால் அவரின் நக்கல் பேச்சுகள் நம்முள் கலந்தது தான் காரணம்.


நாங்கள் ஏற்காடு கிள்ளியூர் பால்ஸ் செல்லும் வழியில் நண்பர்கள் அனைவரும் தங்களுக்கு கவர்ந்த கவுண்டமணி வசனம் மற்றும் காட்சிகளை பேசி கொண்டே கிழே சென்றோம். அப்போது நான் அவர்களிடம் உங்களுக்கு நம் சென்னை பாஷையின் முக்கிய வார்த்தை இதை போட்டு தான் தொடங்குவார்கள் **த்த இதன் அர்த்தம் என்ன என்று தெரியுமான்னு கேட்டேன், அவர்கள் தெரியாது என்றார்கள். இதன் அர்த்தம் எனக்கும் முதலில் தெரியாது அப்புறம் கவுண்டமணி நடித்த படம் தாலாட்டு கேக்குதும்மா அதில் செந்தில் புலிபாண்டியாக வருவார். அந்த காட்சியை நீங்களே பாருங்க...............செந்தில் எந்த நேரமும் கவுண்டமணியிடம் அடி வாங்கி கொண்டிரிப்பார் இதெல்லாம் ஒரு காமெடிஆ என்ற கேட்பவர்களும் நம் ஊரில் இல்லாமல் இல்லை. செந்தில் இல்லாத எத்தனையோ படங்களில் கவுண்டமணி கலக்கு கலக்கு என்று கலக்குவார் உதாரணம்: நடிகன், பிரம்மா,புது மனிதன் , சூரியன். எனக்கு புடிச்ச காம்பினேஷன் என்றால் அது சத்யராஜும் கவுண்டமணியும் சேர்ந்து நடித்த அத்தனை படங்களும் எனக்கு பிடிக்கும். பிரம்மா படமெல்லாம் சான்சே இல்லை.அதுவும் அந்த ஹோட்டல் காட்சியில் தனக்கு பேப்பர் ரோஸ்ட் வேண்டும் என்று அவர் அடிக்கும் லூட்டி இன்னும் ஏன் கண் முன்னே இருக்கிறது. என் பல நடவடிக்கையில் கவுண்டமணி அவர்கள் நக்கல் பேச்சு என்னுள்ளும் வெளிபட்டிரிக்கிறது. உங்கள் நடவடிக்கையிலும் அவரின் நக்கல் இருக்கலாம், ஏன் என்றால் அவர் நம் வாழ்வில் இரண்டற கலந்து விட்டார்.


இப்போ இந்த ஆதித்யா, சிரிப்பொலி போன்ற காமெடி டி.வி யில் கவுண்டமணி காமெடி அவ்வளவாக ஒளிபரப்புவதில்லை அது ஏன் என்று நண்பனிடம் கேட்டதுக்கு மிச்சவன் "எல்லாம் காசு கொடுத்து போட சொல்வாண்ட" என்றான். இந்த காமெடி டி.வி களுக்கு ஒரு வேண்டுகோள் கவுண்டமணி இல்லாத தமிழ் சினிமா காமெடி இல்லை என்பதை புரிந்து மக்களின் மனம் அறிந்து கவுண்டரின் காமெடியை தயவு செய்து ஒளிபரப்புவும்.


கவுண்டமணி சிம்பு மோதல்:

சிம்புவின் மன்மதன் படத்தில் நடித்தது அவருக்கு மிகுந்த மனகசப்பை தந்தது அதற்க்கு காரணம் கவுண்டமணி நடிச்ச பல காட்சிகளை சிம்பு படத்தில் சேர்க்கவில்லை. இதை ஆதங்கமாக கவுண்டர் அவர்கள் குமுதத்தில் படம் வெளியான பின் பேட்டி கொடுத்தார்.தான் அந்த படத்தில் நடிப்பதில் இஷ்டம் இல்லை என்று கூறிய பின் சிம்பு தொடர்ந்து நீங்கள் நடித்தால் தான் நல்ல இருக்கும் என்று அடம்பிடித்தார் அதனால் தான் ஒத்து கொண்டேன்
என்றார் கவுண்டர்.

ஆனால் ஒரு சீனியர் நடிகர் என்ற மரியாதை கூட சிம்பு பின் பற்றாமல் கவுண்டரக்கு எதிராக பேட்டி அளித்தார். அதாவது கவுண்டமணியால் மன்மதன் படம் ஓட வில்லை என் திறமைக்கு படம் ஓடுகிறது என்று கவுண்டர் மேல் வாரி இறைத்தார்.


இதனால் டென்ஷன் ஆன கவுண்டமணி " இந்த வயசுல இவ்ளோ தலைகனம் கூடாது" என்று எகிறினார். மன்மதன் படம் தந்த பாடமோ என்னவோ அதில் இருந்து அவர் சின்ன பசங்க படத்தில் நடிக்க அழைத்தாலும் அவர் நடிக்க போவதில்லை.
***********

இப்போது கவுண்டமணியின் நக்கல் , அந்த டைமிங் எல்லாத்தையும் சந்தானம் பின்பற்றுகிறார். அவரும் கவுண்டமணி மாதிரி harrypotter வாயா போன்ற வசனங்களை கூறி நம்மளை சிரிக்க வைக்கிறார். ஆனாலும் கவுண்டமணி இடத்தை யாராலும் பிடிக்கமுடியாது.கவுண்டமணி அவர்கள் பத்து படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்,பல படங்களில் அவர் இரண்டாவது ஹீரோவாக வருவார். இடையில் அவரின் உடல்நிலை சரியில்லாததால் அவர் மெலிந்து காணப்பட்டார்,அவரை மீண்டும் ஜக்குபாயில் பார்க்க நான் ஆவலாக உள்ளேன்.


எனக்கு பிடித்த சில கவுண்டமணியின் வசனங்கள்:


# ஏன்டா எப்ப பார்த்தாலும் எருமை சாணியே மூஞ்சிலே அப்புன மாதிரியே திரியிற......# செந்தில்: உங்க தாத்தா புட்டுகிட்டரா?

கவுண்டர்: இல்ல நேட்டுகிட்டார்!


# கவுண்டமணி: உக்காருங்க, நான் எப்பவும் படிப்பு சொல்லி தரவங்களுக்கு ரொம்ப மரியாதையை கொடுப்பன்.


குமரிமுத்து: நான் எங்க தங்கறது?


கவுண்டமணி: ஏன் வீட்ல தங்குங்க, இல்லன ரூம்ல தங்குங்க
ஆமாம், எத்தனாவது பசங்களுக்கு பாடம் எடுக்க போறீங்க?


குமரிமுத்து: இல்லங்க நான் வாட்ச்மேன்.


கவுண்டமணி: அப்புறம் ஏன் உக்காந்து இருக்கே...!


குமரிமுத்து: நீங்கதானே உட்காரா சொன்னிங்கே


கவுண்டமணி: நான் கரண்ட் கம்பி மேல உட்காரா சொல்லுவேன்,
அதுல போய் உட்காந்துருவியா ?
இன்னும் நிறைய வசனங்கள் இருக்கு அதை எல்லாம் போட்டால் இடுகை ரொம்ப ரொம்ப பெருசா ஆயிடும். அதனால் உங்களுக்கு பிடித்த வசனத்தை பின்னூட்டமாக(கமெண்ட்) போடவும்.


உங்கள்

ஜெட்லி.

Thursday, May 21, 2009

நான் அவள் அது...............

நான் அவள் அது......

(குறிப்பு: இந்த கதை உண்மை சம்பவத்தை அடிப்படையாக
கொண்டு எழுதப்பட்டுள்ளது)

________________________________

நானும் எனது நண்பர்கள் டேவிட் , ராம் , ராஜா, சதீஷ் ஆகியோர் ஒரு மாதம்
முன்பே கொடைக்கானல் போவதாக முடிவு செய்து இன்று கொடைக்கானல் காற்றை சுவாசித்து கொண்டிருக்கிறோம் . சீசன் டைம் என்பதால் எளிதில் எங்களுக்கு ஹோட்டல் கிடைக்கவில்லை, அங்கும் இங்கும் அலைந்து கொஞ்சம் ஒதுக்கு புறமாக ஒரு அறை கிடைத்தது. நாங்கள் தங்கிருந்த இடம் ரொம்ப அமைதியாக ஆள் நடமாட்டம் இன்றி காணப்பட்டது.என்னை பத்தி நானே சொல்லிக்க கூடாது , நான் எவ்வளவு தான் சரக்கு அடித்தாலும் சுய நினைவோடு தான் இருப்பேன் . என் நண்பன் டேவிட் மிகுந்த இறை பக்தி உடையவன் தினமும் தூங்கும் முன் பைபிள் படித்து விட்டுதான் தூங்குவான். மீதி மூன்று நண்பர்களும் அரட்டை அடிப்பதில் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல.டேவிட் தவிர எங்கள் அனைவருக்கும் குடி பழக்கம் உண்டு, எல்லாம் அளவோடு தான். முதல் நாள் எங்கு போவது என்று ஒரே குழப்பம். ராம் ஒரு இடம் சொல்றான் சதீஷ் வேற இடம் சொல்றான். எங்களுக்குள் குழப்பம் அதனால் நான் ஒரு முடிவு எடுத்து, முதலில் நாம் டால்பின் நோஸ் செல்வோம் என்றேன்.


டால்பின் நோஸ் இதை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டர்கள், மரங்கள் சூழ்ந்துள்ள ஒரு இயற்கையான இடம். அங்கு நானும் நண்பர்களும் சென்று மரத்தின் மீது ஏறுவதும் குதிப்பதமாக சேட்டை செய்து எங்கள் பொழுதை கழித்தார்கள். ஒரு கட்டத்தில் ராஜா கொண்டு வந்த டிஜிட்டல் கேமெராவில் படங்களை எடுத்து மகிழ்ச்சி அடைந்தோம் . நான் படம் எடுக்க மீதி நால்வரும் போஸ் கொடுத்தார்கள், நான் எடுத்த போட்டோவை preview பார்க்கவில்லை,
ஒரு வேளை பார்த்து இருந்தால் அந்த நொடியே நாங்கள் சென்னைக்கு கிளம்பி இருப்போம் . அந்த படத்தில் என் நண்பர்களுக்கு கீழ் ஒரு சிறுமி தலவெறி கோலத்தில் உட்கார்ந்து இருந்து எங்கோ பார்த்து கொண்டு இருந்தாள். ஆனால் அந்த சிறுமி நேரில் யார் கண்ணுக்கும் தெரியவில்லை.


பொழுது சாய்ந்ததும் நாங்கள் அறைக்கு சென்றோம் , ஊர் சுற்றிய களைப்பில் அனைவரும் சோர்ந்து படுத்து இருந்தோம் . ராஜா மது பாட்டில் எடுத்ததும் அனைவரும் உற்சாகமாக ரவுண்டு கட்டி சரக்கு ஏற்ற ஆரம்பித்தோம் . டேவிட் வழக்கம் போல் பைபிள் படித்து விட்டு படுக்கைக்கு சென்றான்.மது முடிந்த பின் சிறிது நேரம் டாபிக் போட்டு பேசி அப்படியே எங்களை அறியாமல் தூங்கிவிட்டோம்.

சிறிது நேரத்தில் டேவிட் என்னை எழுப்பினான் நான்

"ஏன்டா தூக்கத்தை கெடுக்குற" என்று அலுத்து கொண்டு கேட்டேன்.


அவன் முகம் வெளிறி போய் இருந்தது. என்னடா என்றேன், அதற்க்கு அவன்
" டேய் இங்க என்னமோ இருக்குடா, யாரோ கழுத்தை புடிச்சி நெரிக்கிற மாதிரி இருக்குடா, என் மார்ல யாரோ உட்கார்ந்து அமுக்குற மாதிரி இருக்குடா" என்று
புலம்பி தள்ளினான்.


"குடிச்சது நாங்க ஆனா நீ உளர்ற அதெல்லாம் ஒண்ணும் இல்ல போய் படுத்து தூங்கு" என்று அவனை சமாதான படுத்தி நான் என் தூக்கத்தை தொடர்ந்தேன்.


டேவிட் திரும்பவும் பைபிள் எடுத்து படிக்க ஆரம்பித்தான்.திரும்பவும் அவனுக்கு யாரோ ரூமில் நடப்பது போன்று தோன்றியது. எங்களை எழுப்பினான் நான் சலித்து கொண்டே "என்னடா" என்றேன் .

"டேய் மச்சான் இந்த ரூம்ல என்னவோ இருக்கு வாங்க சென்னைக்கு போய்டலாம்" என்றான்.

டேவிட் சொன்னதை கேட்டு அனைவரும் சிரித்தனர். "டேய் தண்ணி அடிச்ச நாங்களே சும்மா இருக்கோம் உனகேன்னட ஆச்சு" என்று கேலி செய்தனர். அனைவரும் தூங்க சென்றனர்.டேவிட் அன்று இரவு தூங்கவில்லை.


மறுநாள் காலையில் டேவிட்க்கு பயங்கர ஜுரம் அடித்தது. என்னிடம் வந்து தான் திருச்சியில் இருக்கும் தன் அத்தை வீட்டுக்கு போவதாக கூறினான். நாங்களும் சரி அவனுக்கு உடம்பு சரியில்லை என்று அனுப்பிவைத்தோம்.
"சரி அவன் போன போரண்ட நாம என்ஜாய் பண்ணுவோம்" என்று சதீஷ் அனைவரையும் உற்சாக படுத்தினான்.


அன்று நாங்கள் suicide point மற்றும் சில இடங்களை பார்த்து எங்கள் அறைக்கு திரும்பினோம் . மீண்டும் மது உற்சாகம் களைகட்டியது, அறையில் இருந்த அந்த பெரிய டேபிள்லில் வட்டம் போட்டு அரட்டை அடித்து டைம் போனதே தெரியவில்லை.அப்போது ராஜா தூங்க டைம் ஆச்சுன்னு டி.வி யை ஆப் செய்தான் . அப்போது தான் அந்த வீபரிதம் ராஜாவின் கண்ணுக்கு தெரிந்தது, ஆப் செய்த டி.வி யை உற்று நோக்கினான் அதில் ஒரு சிறுமி தலை விரி கோலத்துடன் hanger மாட்டும் இடத்தில் தொங்கி கொண்டு இருந்தாள்.திரும்பி பார்த்தால் ஒன்றும் தெரியவில்லை,டி.வி யை பார்த்தால், அந்த சைடு சிறுமி தொங்கி கொண்டு இருந்தவள் கிழே இறங்க ஆரம்பித்தாள். ராஜாவுக்கு பயம் வந்து என்னிடம் கூறினான்.நாங்கள் ஆப் பண்ண டி.வி யை பார்த்த போது அந்த சிறுமி எங்கள் அருகில் வந்து விட்டதை பார்த்து திகில் அடைந்தோம் . அந்த சிறுமி தலைவிரித்து ஒரு சோக முக பாவனையில் இருந்தது.கண்டிப்பா அவள் மனுஷியில்லை என்று நாங்கள் அனைவரும் உணர்ந்தோம்.


அவள் அருகே வந்தாள் நண்பர்கள் அனைவருக்கும் போதை இறங்கி பயம் வந்து விட்டது,அவள் நேரே வந்து என் கழுத்தை பிடித்து

"நேத்து காலையில போட்டோ எடுத்த இல்ல அத அழி" என்றாள்.


எனக்கும் என் நண்பர்களுக்கும் எந்த போட்டோ என்று தெரியவில்லை தைரியம் வந்து சதீஷ் "முதல்ல அவன விடு" என்றான்.

அந்த சிறுமி கேட்கவில்லை, நான் அந்த சமயம் என் கையில் கிடைத்த கம்பியால் டி.வி யை பார்த்து அந்த சிறுமி இருக்கும் பக்கம் கம்பியை வீசினேன் . அந்த கம்பி அவள் மேல் பட்டு அவள் அழ ஆரம்பித்தாள். அந்த சிறுமி எங்களிடம்

'இங்க இருக்காதிங்க மொதல்ல கிளம்புங்க' என்று எச்சரிக்கை விடுத்தாள்.


நண்பர்கள் அனைவரும் அழும் நிலைக்கு வந்து விட்டனர் . நான் அந்த போட்டோவை அழித்து விட்டதாக கூறினேன் .


அப்போதும் அந்த சிறுமி "இங்க இருந்து போய்டுங்க உங்க நல்லதுக்கு தான் சொல்றேன்" என்றாள். நாங்கள் நால்வரும் டர்ராகி வெளியில் வந்து , யாரைவது உதவிக்கு அழைக்கலாம் என்றால் ஒரு ஆளையும் காணோம். அறையில் வேலைக்கு இருப்பவர்கள் இரவில் தங்கள் வீட்டுக்கு சென்று விடுவது வழக்கமாம் .நாங்கள் மேலும் பயம் கொண்டு ரோட்டில் ஓரத்தில் உக்காந்து இரவு பொழுதை கழித்தோம். என் வாழ்க்கையில் இந்த சம்பவம் ஓர் உண்மையை உறைத்தது அது ஆவி இருக்கிறது என்று.


மறுநாள் காலையில் வேலைக்கு வந்த நடுத்தர வயது உடைய நபரிடம் நாங்கள் இது மாதிரி ஒரு சிறுமியை கண்டதாக கூறினோம் . அதுக்கு "அவர் சும்மா தண்ணி போட்டு ஒலராதிங்க தம்பி" என்றார்.தான் அறையை போய் சுத்தம் செய்வதாக கூறி அறைக்கு சென்றார் நாங்கள் பயந்து போய் அறைக்கு செல்லவில்லை. அறைக்கு சென்ற நபர் உடனே வெளியில் வந்து

"நேத்து நைட் என்ன பண்ணிங்க" என்றார்.


"ஒண்ணும் இல்லன நாங்க பாட்டுக்கு சரக்கு சாப்பிட்டு தூங்க போனோம் அப்பதான் அந்த பொண்ணு வந்து ..." என்று இழுத்தேன் .உடனே அந்த நபர் "போய் அந்த டேபிள்அ பாருங்க" என்றார்.நாங்கள் அனைவரும் சென்று டேபிளில் என்ன என்று பார்த்தோம் . நாங்கள் அனைவரும் மூச்சடைத்து நின்றோம், அடுத்த நொடி பெட்டி பையை எடுத்து ஊருக்கு கிளம்பினோம்.

அந்த டேபிள் மீது ஒரு பெண்ணின் கூந்தல் முடி கொத்தாக இருந்தது.


முற்றும்.

(
இதை சிறுகதைன்னு சொல்லலாமா? நீங்கள் தான் சொல்ல வேண்டும்.)

Wednesday, May 20, 2009

பொடிமாஸ்

பொடிமாஸ் ...............


குஸ்வந்த் சிங் ஜோக்:


"அப்பா உங்களக்கு இருட்டை கண்டால் பயமா ?" - குழந்தை கேட்டது


"இல்லையே. யார் சொன்னார்கள், எனக்கு இருட்டை கண்டால்
பயமென்று?" - அப்பா சொன்னார்


"யாரும் சொல்லவில்லை. பின்னே நீங்கள் ஏன் அம்மாவின் படுக்கையில் ஏறி அவளுடைய போர்வைக்குள் புகுந்து கொள்கிறிர்கள்?"
-குழந்தை மறுபடியும் கேட்டது.
(விவகாரமான புள்ள)

********************

பொன்மொழிகள்:


@ உன்னை நீ நாணயமானவனாக மாற்றி கொண்டால்,
உலகத்தில் ஒரு அயோக்கியன் குறைந்து விட்டான் என்று
நீ திடமாக நம்பலாம்.--தாமஸ் கார்லைல்.@ ஞாயிற்றுக்கிழமை தவறாமல் பிரார்த்தனை கூட்டத்திற்கு
வருவதை வைத்து, ஒருவரை எடை போட கூடாது. அவர்
மற்ற கிழமைகளில் என்ன செய்கிறார் என்பதையும் கவனிக்க
வேண்டும்.--தாமஸ் புல்லர்.

********************


வரும் சனிகிழமை நான், சித்து, அருண் , இலக்கியம் மற்றும் பலர் ஏற்காடு
செல்வதால் ஒரு நாலு நாளைக்கு எங்களிடம் இருந்து உங்களுக்கு
விடுதலை. இது நாப்பத்தி எட்டாவது இடுகை..... ஏற்காடு போயிட்டு ரூம் போட்டு யோசிச்சு எங்களது அம்பதாவது இடுகையை மேலும் சிறப்பாக வெளியிடுவோம் என்று நம்புகிறேன் .


*******************நீங்கள் எல்லாம் எந்த வயசில் குடிக்க ஆரம்பித்திர்கள் ....கிழே நம்ம
பய புள்ளைய பாருங்க ..........

என்ன கொடுமை சரவணன் இது!

*************************************

ஹிட்லரின் நல்ல குணங்கள்:

சர்வாதிகாரியான ஹிட்லர் பல விருதுகளை பெற்ற ஒரு சிறந்த
போர் வீரர். அவர் ஒரு vegetarian . புகை பிடிக்கும் பழக்கம் இல்லாத
அவர், எப்போதாவது பீர் மட்டும் அருந்துவார். தன மனைவியை தவிர, மற்ற பெண்களோடு, அவர் தொடர்பு வைத்து கொண்டதே கிடையாது. உலகிலேயே மிக பெரிய கார் உற்பத்தியாலராகிய ஹென்றி போர்ட், ஹிட்லரின் விசிறி. போர்டுடைய ஆபீஸ் மேசை மீது ஹிட்லர் உடைய போட்டோ வைக்கபட்டிருக்கும்.

***************************************


கேட்டது:


அண்மையில் பிக் F.M இல் பாஸ்கி அவர்கள் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் அவர் பேசிய பேச்சு என்னை கவர்ந்தது. அதாவது ஜானி படம் ரீமேக் தொடர்பாக அவர் கூறியதாவது:

"வர வர நம்ம நாட்டுல கதைக்கு பஞ்சம் வந்துடிச்சி போல, எல்லோரும் ரீமேக் படம் எடுக்க ஆரம்பிச்சிடாங்க, அதுவும் பழைய ரஜினி படத்த எடுக்குறதுல ஆர்வமா இருக்காங்க.ஆனா இந்த பழைய படத்த ரீமேக் பண்ணும் போது அந்த originality போய்டுது. நான் என்ன சொல்ல வரானே ரீமேக் படம் எடுங்க ஆனா ரிலீஸ் பண்ணும் போது அதுக்கு பக்கத்துக்கு theatreல பழைய ரஜினி ஜானி படத்தையும் ரிலீஸ் பண்ணனும். அப்போ நாம பாப்போம் எந்த படத்துக்கு கூட்டம் போகுதுன்னு".

பாஸ்கி சொல்றதும் உண்மைதானே. ரீமேக் பண்ணுகிறேன் என்று சொல்லி படத்தை கெடுத்து விடுகிறார்கள்.

****************************


இந்த வார சிந்தனை:
-------------------------------


நம்முள் பல பேர் இதை பத்தி யோசிச்சி சிந்திச்சி சந்திச்சி இருப்போம், அது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லங்க. அதாவது விஜய் படம் எவ்வளவு மொக்கையா இருந்தாலும் நூறு நாள் ஓடுதே அது எப்படின்னு. அது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லங்க இப்போ பாருங்க கஜா,வல்லமை தாராயோ, சற்று முன் கிடைத்த தகவல் போன்ற உப்புமா படங்கள் நூறு நாளை தாண்டி ஓடுகிறது. ஆனால் வெண்ணிலா, பொம்மலாட்டம் போன்ற நல்ல படங்கள் நூறு நாளை நெருங்குவதில்லை. இதில் இருந்து என்ன தெரிகிறது

" நூறு நாள் ஓடுற படமெல்லாம் நல்ல படமும் இல்ல,

இருபது நாள் ஓடுற படமெல்லாம் மொக்கை படமும் இல்ல."

(உங்கள் வாய்ஸ்: வேலை எதுவும் இல்லன இப்படிதான் சிந்திக்க தோணும்)

****************************************


Tuesday, May 19, 2009

ஒரு பாடல்... 100 ஸ்டைல்...


எந்திரன் படத்தில் ஒரே காட்சியில் 100 விதவிதமான ஸ்டைல்களில் ரஜினி ஆடிப் பாடுகிறார்.

ஹைதராபாத், ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பிரமாண்ட அரங்கு அமைத்து ரஜினி, ஐஸ்வர்யாராய் ஆடிப்பாடும் பாடல் காட்சியை இயக்குனர் ஷங்கர் படமாக்கி வருகிறார். இந்த பாடல் காட்சி ரஜினி படங்களில் இதுவரை வராத அளவு வித்தியாசமாக படமாக்கப்படுகிறது. அதாவது ஒரே பாடலில் ரஜினியின் 100 விதமான ஸ்டைல்கள் இடம் பெறுகின்றன. 22 நாட்கள் இந்த பாடல் காட்சியைப் படமாக்கினர்.

ரஜினி ஒவ்வொரு ஸ்டைலிலும் வெவ்வேறு ஆடைகள் அணிந்தார். பிரபுதேவா நடனம் அமைத்து கொடுத்தார். 100 விதமான ஸ்டைல்களை இப்பாட்டில் ரஜினி வெளிப்படுத்தியது பிரமாதமாக இருந்தது என்று படக்குழுவினர் பாராட்டினர்.

ஐஸ்வர்யாராயும் விதவிதமான காஸ்ட்யூம்களில் ரஜினியுடன் இப்பாடலுக்கு ஆடினார். அப்போது ரஜினியின் 100 ஸ்டைல்களை பார்த்து அவரும் வியந்தார். சிவாஜி படத்தில் முதல்பாதி சிவாஜி கேரக்டரில் நடித்தார். கிளைமாக்சில் எம்.ஜி.ஆர். என்ற பெயரில் அறிமுகமாகி அதிரடி செய்வார். ரசிகர்களை அந்த கெட்டப் மிகவும் கவர்ந்தது. அதே போன்று இப்பாடலில் ரஜினி வெளிப்படுத்திய 100 ஸ்டைல்களும் ரசிகர்களை ஆரவாரம் செய்ய வைக்கும் என்கின்றனர் படக்குழுவினர்.

source : rajinifans.com

கல் ஹோ நா ஹோTomorrow may never come.

நான் இதுவரை பார்த்து ரசித்து, திரும்ப திரும்ப பார்த்தும் ஒரு முறையேனும் சலிக்காத மிக சில படங்களுள் இந்த படமும் ஒன்று, எப்படியும் ஒரு பத்து முறைக்கு மேல் பார்த்திருப்பேன். இப்படி தான் நேற்றும் பார்த்தேன், அந்த சுகமான நினைவுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே இந்த பதிவு.

கதை என்னவோ காதல் கதை தான், அதை சொன்ன விதம் தான் அழகு. காதல், நகைச்சுவை, குடும்ப உறவுகள், கலாச்சார மாற்றங்களால் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் படும் துயர் மற்றும் இன்ன பிற விஷயங்களை கலந்து நவரசங்கள் பொங்கி வழியும் படமாக தந்துள்ளார் இயக்குனர் நிக்கில் அத்வானி. இது இவரின் முதல் படமாம், அப்பாடா நம்பவே முடியல. ஒவ்வொரு காட்சியையும் மிகவும் ரசித்து செதிக்கியிருக்கிறார் மனிதர். கதைக்குள் புகாமல் மேலோட்டமாக பார்ப்போம் அப்பொழுது தான் நீங்கள் படம் பார்க்கும் பொழுது சுவையாக இருக்கும்.நியூ யார்க் நகரம் அப்படியே நம் கண்ணுக்கு குளிர்ச்சி அளிக்கிறது, ஒவ்வொரு காட்சியும் மிக அழகாக தெள்ளத் தெளிவாக இருக்கிறது. ஆங்கிலப் படங்களுக்கு இணையான இந்த photography க்காகவே படம் பார்க்கலாம். ஒரு காட்சியில் ப்ரீத்தி ஜிந்தா ஒரு இடத்தில அமர்ந்திருப்பார் அப்பொழுது Long Shot'il இருந்து அவரை காண்பிப்பார்கள் அப்பொழுது அவர் நம் அருகில் வருவார் ஆனால் அவர் பின்பு உள்ள கட்டிடங்கள் தூரம் செல்லும், இப்படி நிறைய இடங்களில் Camera விளையாடியுள்ளது.

அடுத்தது இசை ஷங்கர், ஈஷான் மற்றும் லாய் கூட்டணி சும்மா கலக்கி இருப்பாங்க ஒவ்வொரு பாட்டும் அருமை, படம் முடிந்த பின்பு கூட அந்த பின்னணி இசை நம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. நம்ம S.A. ராஜ்குமார் படங்களில் வருவது போல் அந்த ஒரே இசை தான் பின்னணி முழுவதும் ஆனால் ரசிக்க முடிகிறது.

படத்தின் கதாபாத்திரங்களின் உடைகள் ஒவ்வொன்றும் கொள்ளை அழகு, இதற்க்கு நாம் மனிஷ் மல்ஹொத்ரா அவர்களை தான் பாராட்ட வேண்டும், ஒவ்வொரு காட்சிக்கும் ஏற்றவாறு பிரத்யேகமாக உடை வடிவமைத்துள்ளார். இந்த படத்தில் இருந்து தான் நிறைய விஷயங்கள் நம் உன்னாலே உன்னாலே படத்தில் பயன் படுத்தியுள்ளனர் (குறிப்பாக அந்த Day 1, 2........ அந்த காட்சிகள்) உடை விஷயத்திலும் இந்த படத்தில் சாயல் அதில் நிறையவே தெரிந்தது.இவ்வளவு பேசிவிட்டு கதையின் நாயகன் மற்றும் நாயகி பற்றி கூறவில்லையென்றால் ஏன் மனசாட்சியே என்னை சும்மா விடாது. ஷாருக் கான் மற்றும் ப்ரீத்தி ஜிந்தா நடிப்பை பார்க்க வேண்டுமானால் இந்த படம் தான் சிறந்த சாட்சி, இருவரும் போட்டி போட்டு நடிக்கின்றனர். அப்பாடா ஷாருக் இந்த அளவுக்கு உயர்ந்த இடத்தை பிடித்துள்ளார் என்றார் அதற்கு காரணம் இருக்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் சும்மா ரவுண்டு கட்டி அடிக்கிறாரு, "Wow, sema cool attidude".

ஜெர்மனி, போலந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் மொழி மாற்றம் செய்து ரிலீஸ் செய்யப்பட இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது, பல்வேறு சர்வதேச மற்றும் உள்நாட்டு விருதுகள் வாங்கி குவித்துள்ளது இந்த படம்.

நீங்கள் அனைவரும் அவசியம் இந்த படத்தை பார்த்து ரசிக்க வேண்டும், ரசித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் நன்றி.

நன்றி : Wikipedia, Google.

Saturday, May 16, 2009

இலவசம் ஐயோ! ஐயோ!


வணக்கம் பதிவர்களே!

வர வர நம்ம நாட்டுல எதுக்கு எதுக்கு இலவசம் குடுக்கறதன்னு விவஸ்தை இல்லாம போச்சுங்க.

இப்படித்தான் மூணு வருஷம் முன்னாடி:

# ஒரு சட்டை வாங்கின ஒரு சட்டை இலவசம்ன்னு சொன்னாங்க .


இரண்டு வருஷம் முன்னாடி


# இரண்டு சட்டை வாங்கின அஞ்சு சட்டை இலவசம்ன்னு சொன்னாங்க.


போன வருஷம்

# ஒரு செல்போன் வாங்கின இரண்டு செல்போன் இலவசம்ன்னு சொன்னாங்க.


இப்போ என்னன்னா

# ஒரு கணினி வாங்கினால் இன்னொரு கணினி இலவசம்ன்னு சொல்றாங்க.....இலவசங்களை நம்பி நாம் கடைக்கு போனால் அவன் 1008 கண்டிஷன் போடுவான். அப்புறம் நாமும் மேல உள்ள படத்தில் மாதிரி நொந்து நூடுல்ஸ் ஆகி விடுவோம் . எது எப்படியோ மேல உள்ள இலவசங்கள் நம் சிலருக்கு தான் உதவும் .

**********************************************

இந்த மாதிரி இலவசம் கிடைச்ச எப்படி இருக்கும்.


#வில்லு, குங்கும பூ, சர்வம் போன்ற படங்களை பார்த்தவர்களுக்கு இலவசமாக ஊக்க தொகை அளிக்கலாம்.(எனக்கும் கிடைக்கும்).


# ஒரு லிட்டர் பெட்ரோல் போட்ட இன்னொரு லிட்டர் பெட்ரோல் இலவசம்ன்னு குடுத்த நல்ல இருக்கும்.(புண்ணியமா போகும்).


# விஜய் படத்தை ஓட வைப்பதற்கு ஒரு டிக்கெட் எடுத்தால் பத்து டிக்கெட் இலவசம் என்று கொடுக்கலாம்.


#அஜித் படத்துக்கு டிக்கெட் தரும் போது கூட இலவசமா ஒரு தலைவலி தைலம் தரலாம்.


#டாஸ்மாக் கடையில் ஒரு quarter வாங்கினால் இன்னொரு quarter இலவசமாக தரலாம்.


# ஒரு சவரன் தங்க நகை வாங்கின இன்னொரு சவரன் நகை இலவசம்ன்னு குடுக்கலாம்.


#டி.ஆர் படத்துக்கு போகும்போது இலவமாக ஒரு குரங்கு பொம்மை கொடுக்கலாம்.


இன்னும் உங்களக்கு தோன்றியே இலவசங்களை பின்னூட்டத்தில் எழுதவும்.

Wednesday, May 13, 2009

முடிந்தது தேர்தல்


அப்பாடா ஒரு வழியா தேர்தல் திருவிழா முடிவுக்கு வந்தது, தமிழகத்தில் எதிர்பார்த்ததை விட வண்முறை வெறியாட்டம் குறைவாகவே இருந்தது. எங்கள் பகுதியில் அமைதியாகவே தேர்தல் நடந்தது, நான் மதியமே சென்று ஓட்டு போட்டு விட்டேன் பெரிய கூட்டம் ஒன்றும் இல்லை. அடிக்கடி கருப்பு வெள்ளை சீருடையில் இரு கழகங்களின் குண்டர் படை வந்து தேர்தல் நடப்பதை பார்வையிட்டு சென்றுக் கொண்டிருந்தது. நான் ஓட்டு போட்ட சாவடியில் மூன்று பாகங்களின் வாக்காளர்கள் போடலாம் ஆனால் காவலுக்கு இருந்ததோ வெறும் இரண்டு சிரிப்பு போலீஸ் தான், இத்தனை கம்பெனி அத்தனை கம்பெனி துணை ராணுவம் வந்தது என்று செய்தியில் சொன்னார்களே அவர்கள் எங்கே? புல்லு புடுங்க போய்ட்டாங்களா?? நான் எதிர்பார்த்து போலவே மதியம் மேல் குத்துங்கம்மா ஓட்டு நம்ம நாக்க மூக்க சின்னத்துக்கு என்று ஆரம்பித்து விட்டனர், என் நண்பன் நான்கு மணிக்கு சென்றவன் இதைக் கண்டவுடன் ஓட்டு போடாமலே வந்து விட்டான்.

ஐஸ் ஹவுஸ் தொகுதியில் குப்பை தொட்டி தேர்தலில் நடப்பது போல வண்முறை வெறியாட்டம் அவிழ்த்து விடப் பட்டது, தொகுதியே போர்கோலம் பூண்டது. காவல் நிலையத்திலே வேட்பாளர் தாக்கப் படுகிறார் என்றால் கழக ஆட்சி எவ்வளவு சிறப்பாக நடக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம். ஒரு தொகுதியில் இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு போட்டால் அது உதய சூரியனில் சிகப்பு விளக்கு எரிகிறது என்று அம்மையார் கூறுகிறார், எனக்கு என்னவோ நேற்றைய மின் வெட்டுக்கும் இதற்கும் ஏதோ தொடர்பு இருப்பதாக தான் தெரிகிறது. பொதுவாக மின் வெட்டு ஏற்பட்டாலும் ரயில் நிலையங்கள் வழக்கம் போல் இயங்கும் ஆனால் நேற்று அப்படி இல்லை அனைத்துமே இருளில் மூழ்கின. என்னவோ நடக்குது மர்மமா இருக்குது.


வட சென்னையில் சில இடங்களில் வோட்டுக்கு நூறு முதல் இருநூறு வரை வழங்கப்பட்டதாக கேள்வி, என்னை பொறுத்த வரையில் ஓட்டுக்கு பணம் வாங்குவதில் தவறில்லை. அவர்கள் வாரி வழங்கும் பணத்தை தாராளமாக பெற்றுக் கொள்ளுங்கள் ஆனால் யாருக்கு நீங்கள் ஓட்டு போடுவது என்று முடிவு செய்தீர்களோ அவர்களுக்கே ஓட்டு போடுங்கள். என்ன இருந்தாலும் நம் பணம் தானே, அவர்கள் நம் ஓட்டை பெற்றுக் கொண்டு நமக்கு துரோகம் செய்கிறார்கள் நாம் அவர்கள் குடுக்கும் பணத்தை பெற்று துரோகம் செய்வோம், எந்த தவறும் இல்லை.


மக்களின் மனநிலையை பார்க்கும் பொழுது ஒரு உறுதியான முடிவுக்கு வர முடியவில்லை அதனால் இரு நாட்களுக்கு எந்த வேட்பாளருக்கும் தூக்கம் வரப் போவதில்லை (குறிப்பாக கை சின்னத்தவர்கள் நம்பிக்கை இல்லாமல் தான் இருப்பார்). திருமங்கலம் தொகுதியில் அஞ்சா நெஞ்சன் நாற்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று மார்தட்டினார் அதே போல் நடந்தது (எப்படி என்று அனைவரும் அறிவர்) அதே போல் தி.மு.க முக்கிய வேட்பாளர்கள் சரி வர பிரச்சாரம் கூட செய்யாமல் மிகவும் தைரியமாக பேட்டி அளிக்கின்றனர் அதை நினைக்கும் பொழுது இங்கேயும் பல உள்ளடி வேலைகள் நடந்திருக்குமோ???

ஓட்டு போட்டு விட்டு வெளியே வந்த நம்ம Gaptain அவர்களை பேட்டி கண்டால் அனைவரையும் போல் நாற்பதும் நமதே என்றார், சரி எப்படி இவ்வளவு ஆணித்தரமாக சொல்கிறீர் என்றால் "மற்ற கட்சிகள் எந்த அடிப்படையில் வெற்றி பெறுவோம் என்று சொல்கிறார்களோ அதே போல் தான் நானும் சொல்கிறேன் அஹ்ங்க்க்!!!!!!!!" என்று கூறுகிறார். என்ன கொடுமை இது??? நான் அவர்கள் போல் இல்லை எனக்கு ஒரு முறை வாய்ப்பு அளித்து பாருங்கள், உணவகத்துக்குள் சென்று பார்த்தல் தான் தெரியும் அதன் சுவை சும்மா வெளியில் பார்த்துவிட்டு சென்றால் தெரியாது என்று மொக்கையாக பிரச்சாரம் செய்தவர் இப்பொழுது தான் அதே குட்டையில் ஊறிய மட்டை என்பதை நிரூபிக்கிறார். பார்ப்போம் இவர் பெரும் வாக்குகளை.

அடுத்ததாக நாராயணா இந்த கொசுத் தொல்ல தாங்க முடியல என்ற ரேஞ்சுக்கு ஒருவர் பலரை இம்சை செய்து வருகிறார், அதாங்க நம்ம சூப்பர் ஸ்டார் தான் "சும்மா ஆ ஊ நா ஆண்டவன் சொன்னா நிச்சயம் அரசியலுக்கு வருவேன் வெங்காயம் நறுக்குவேன் புல்லு புடுங்குவேன்" என்று பாவம் அவரது அதி தீவிர ரசிகர்களை இம்சிக்கிறார், சரி அவரும் தான் என்ன பண்ணுவாரு குசெலனிலேயே அவர் தெளிவா சொல்லிட்டாரு ஆனாலும் சும்மா தொந்தரவு தந்தா ஏதாவது ஒரு bitta போடவேண்டியது தான் என்று அடிச்சு விடறாரு.

சரி இவ்வளவு நேரம் மொக்க போட்டுட்டு ஏதாவது கிச்சு கிச்சு மூட்டலனா உங்ககிட்ட யாரு தர்ம அடி வாங்கறது? சங்கதி இதுதாங்க இந்த மாதம் பிறந்த நாள் கொண்டாடும் டாக்டர் நடிகர் கட்சி ஆரம்பிக்க போறதா கோடம்பாக்கத்து பட்சி ஒன்னு சொல்லுச்சு, நிறைய பதிவர்கள் இத பத்தி ஏற்கனவே எழுதி இருக்காங்க அதனால அந்த செய்து உண்மையாவே நடக்கனும்னு நாம பிரார்த்திப்போம். இவரோட இம்சை தாங்க முடியல.

சரிபா நான் கெளம்புறேன் காத்து வரட்டும், யாரும் ஆட்டோ அனுப்பிடாதீங்க அப்புறம் அழுதுடுவேன்.

Tuesday, May 12, 2009

சர்வம்..... 60 ரூபாய் போச்சே.....

சர்வம்..... 60 ரூபாய் போச்சே.....
(குறிப்பு: என் கணினி தாய் பலகை(mother board) பிரச்சனையால் இயங்க வில்லை. அதனால் internet centreIL இருந்து டைப் பண்ணுவதற்கு மிகவும் சிரமம் ஆக உள்ளது. எழுத்தில் தவறு இருந்தால் சகித்து கொள்ளவும்)

சர்வம் திரைப்படத்தை இன்று fdfs woodlands திரையரங்கில் பார்த்தேன். சர்வம் நான் மிகவும் எதிர்ப்பார்த்த படம் பில்லாவுக்கு அப்புறம் விஷ்ணுவர்தன் இயக்கும் படம். சர்வம் படத்தின் பாடல்கள் பற்றி சொல்ல வேண்டாம் சூப்பர் ஹிட். ஆனால் படம்?

ஆர்யா த்ரிஷாவை துரத்தி துரத்தி லவ்வுகிறார். இன்னொரு ட்ராக்கில் இந்தரஜித் மகனை கொள்ள தூடுக்கிறார் சக்கரவர்த்தி காரணம் இந்தரஜித் சக்கரவர்த்யின் மகனையும் மனைவியயும் கார் விபத்தில் தெரியாமல் ஏத்தி கொன்றுவிடுகிறார்.
இதனால் சக்கரவர்த்தி இந்த்ரஜித் மகனை பழிவாங்கி அதன் வலியை இந்த்ரஜித் அனுபுவிக்க வேண்டும் என்று மகனை கொலைவெறியோடு தொடர்கிறார். ஆர்யா இங்கே த்ரிஷாவை கரெக்ட் செய்து திருமணம் முடியும் தறுவாயில் விபத்தில் இறந்துவிடுகிறார். த்ரிஷாவின் இதயம் இந்த்ரஜித் மகனுக்கு பொறுத்த படுகிறது. இதன் பின் என்ன ஆர்யா இந்த்ரஜித் மகனை சக்கரவர்த்தியிடம் இருந்து காப்பாற்றுகிறார்.

படத்தின் மிகபெரிய பலவீனம் திரைக்கதை, நம்மால் எளிதில் யூகிக்க முடிந்த சப்பை திரைக்கதை. படம் ஸ்டார்டிங் சூப்பர்ஆ இருந்தது ஆனா போக போக மொக்கை தாங்கலப்பா. முதல் பாதி முழுவதும் காதல் காட்சிகள் சில காட்சிகள் ரசிக்கும் படியாக உள்ளன சில காட்சிகள் மொக்கை தான்.
முதல் பாதியில் த்ரிஷா உயிரை விட்டு விடுவார். சரி இனிமே படம் சூப்பர்ஆ இருக்கும்னு நம்பி உக்காந்தோம் இரண்டாம் பாதி படம் பாதி பார்த்ததில் முதல் பாதி எவ்வளவோ பராவில்லை என்று தோன்றியது. த்ரிஷா படத்தில் அழகாக இருக்கிறார்.

இந்த இரண்டாம் பாதி படத்தில் த்ரில்லர் என்று நம்மை கொல்கிறார்கள். இரண்டாம் பாதி ஆரம்பித்து பத்தாவது நிமிஷத்திலே படத்தின் கதை புரிந்து விட்டது திரைக்கதையும் புரிந்து விட்டது . அதுக்கு அப்புறம் நாம நினைக்கிறது ஸ்க்ரீன்ல நடக்கும். அதுவும் அந்த சின்ன பையன் இம்சை தாங்க
முடியுல, படமே மொக்கை அதுல அவன் வேற வந்து மொக்கை போடுறான். விஷ்ணுவர்தன் இந்த மாதிரி ஒரு படம் எடுப்பார்னு நினைச்சி பாக்கல.


இதுல வேற சிம்புவை கிண்டல் செய்வார்கள் ஒரு காட்சியில் த்ரிஷாவை மடக்க ஆர்யா ஒன்பதாவது மாடியில் இருந்து குதிக்க போறதா சொல்வார்.
அப்போது அவர் நண்பர் கிருஷ்ணா போன் செய்து "டேய் சிம்பு படத்துக்கு டிக்கெட் எடுத்து வெச்சிருக்கேன் எங்கட இருக்க ?" உடனே ஆர்யா "நான் ஒன்பதாவது மாடியில் இருந்து குதிக்க போறேன்" உடனே கிருஷ்ணா பதறி "சிம்பு படம் வேணாம்டா அப்போ அஜித் படத்துக்கு போலம்ட" என்பார். இந்த காட்சியில் திரைஅரங்கில் பயங்கர கைதட்டு. அஜித் படத்துக்கு போறதுக்கு ஆர்யா
எதோ சொல்வார் என் காதில் விழவில்லை. நண்பனிடம் இடைவெளியில் கேட்டேன் அவன் அதற்க்கு "ஆர்யா பத்தாவது மாடியில் இருந்தது குதிக்க போறேன்னு சொன்னண்ட" சொன்னான். அப்ப இந்த படம் பார்த்ததுக்கு எங்க இருந்து குதிக்கறது ...........


நான் இப்பவும் சொல்றேன் மொக்கை படம் பாக்கறது என் தப்பில்லை படம் எடுக்குறவன் தப்பு. அப்புறம் இன்னொன்னு ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு பீலிங்க்ஸ் உங்களக்கு படம் பிடிச்சி இருக்கலாம் ஆனா இதுதான் நம்ம விமர்சனம்.

செல்லிடப் பேசியும் செல்லாத பேச்சுக்களும்.........

நண்பர்களே, வணக்கம் சும்மா இந்த செல் பேசியில் அவனவன் பண்ற அலம்பல் தாங்கல, இந்த விஷயமா எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அப்பா அதை நினைத்தால் இப்பவே கன்னை கட்டுதே.......சென்ற செவ்வாய் KVB வங்கி சென்று ஒரு பத்து ருபாய் அதாங்க பத்தாயிரம் ஒரு கணக்கில் Deposit செய்வதற்கு சென்றேன். வெளியில் வெயில் மண்டைய பொலந்துடுக்சு உள்ள போனால் ஒரு ஐம்பது பேர் வரிசையில் நிற்கின்றனர், AC வேலை செய்தும் பயன் இல்லை, ஒரே வியர்வை வாடை வேறு. வரிசையோ ஆமை வேகத்தில் நகர்கிறது. அப்பொழுது ஒரு 40-45 மதிக்கத்தக்க பெண் உள்ளே நுழைந்தார், வரும் பொழுதே செல் போனில் சத்தமாக பேசியவாறே. பிறகு சலான் நிரப்பும் பொழுது கழுத்தை சாய்த்தவாறே பேசிக்கொண்டே இருந்தார்.

வந்து என் பின்னால் நின்று கொண்டார். முதலில் யாரோ ஒரு உறவினரை அக்கு வேறாக ஆணி வேறாக கிழித்து தொங்க விட்டார் "அதெப்படி அந்த ஆளு அப்படி பண்ணலாம்?? பெறகு எந்த மூஞ்சிய வச்சிக்கிட்டு எங்க வீட்டுக்கு வராரு??" இப்படியாக பேசினார். பிறகு "பேங்க் வந்திருக்கேன், அவரு போய் பத்தாயிரம் பணம் கட்ட சொன்னாரு" இப்படியே பேசிக் கொண்டிருந்தார், வரிசையில் நின்று கொண்டிருந்த பெரும்பாலானோர் இவரின் கச்சேரியை கேட்டவாறே நின்று கொண்டிருந்தனர்.

ஆனால் இதெல்லாம் விட அடுத்து சொன்னாரு பாருங்க "சீ நான் காலைலயே குளிச்சுட்டேன் பா, ஆமா நீல கலர் புடவை தான் கட்டிருக்கேன் அதான் பா அன்னிக்கு பாத்தியே அதே தான்!!!!!!!!" இதை பேசும் பொழுது அனேகமாக வங்கியில் இருந்த அனைவரும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர், உற்சாகத்தில் உரக்கக் கத்திக் கொண்டிருந்தார், அனைவரும் தன்னையே பார்க்கின்றனர் என்பதை அவர் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. பொது இடங்களில் எப்படி பேசுவது என்ன பேசுவது என்று தெரியாமல் இப்படியா பேசுவது?? யாரவது சில்மிஷ ஆசாமி இவர் பேச்சை வைத்து ஏதாவது Comment அடித்தால் அனாவசிய மனக்கஷ்டங்களும் பிரச்சனைகளும் தான் ஏற்படும்.இப்படி தான் திரை அரங்குகளில் சிலர் பண்ணும் அலம்பல்கள் தாங்க முடியாது, அவனவன் சோக காட்சியில் கண்ணீர் வடித்துக் கொண்டிருப்பான் ஆனால் சிலரோ அங்கேயே முழு மூச்சாக கடலை போட்டு கொண்டிருக்கின்றனர் "அப்படியா பப்பி குட்டி போட்ருக்கா?? வாவ்" இப்படி தொடங்கி இன்னும் என்னனமோ பேசுறானுங்க.

அன்று ஒரு நாள் ஒரு கலந்தாய்வின் பொழுது ஒருவரின் செல் போன் சிணுங்குது "கிட்ட நெறிங்கி வாடி கர்லா கட்ட உடம்பு காரி........" எந்த இடத்தில் செல் பேசியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று ஒரு வெவஸ்தையே கிடையாதா?? இப்படி தான் சமீபத்தில் கூட நடந்த ஒரு கூட்டத்தில் இயக்குனர் இமயம் ஈழத் தமிழர்களுக்காக பேசுகையில் இதே போன்று தான் நடந்துள்ளது அதை இன்று (12/05/2009) தினமலர் பார்க்கவும்.இந்த செல் போன் வந்தாலும் வந்தது அவனவன் பித்து பிடித்து போல் தனியே பேசுவதும், தலையாட்டுவதும் வாகனம் ஓட்டும் பொழுது கழுதை சாய்த்து கொண்டு பேசுவதும், தலைக் கவசத்துக்குள் சொருகிக் கொண்டு பேசுவதும் இன்னும் என்னென்னவோ வித்தையெல்லாம் காட்டுகின்றனர். முதலில் உங்கள் பாதுகாப்பை பார்க்கவும் அடுத்தது சுற்றம் பார்த்து பேசவும்.

சரி நண்பர்களே உங்களுடைய இது போன்ற அனுபவங்களை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். நன்றி.

Sunday, May 10, 2009

சந்திரபாபு, இவரை மாதிரி வாழ்ந்தவனும் இல்லை வீழ்ந்தவனும் இல்லை.


சந்திரபாபு என்ற பேரை கேட்டாலே நம் நினைவுக்கு வருவது முக்கியமா அவரது பாடல்கள் தான் நான் ஒரு முட்டாளுங்க,... புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை...... குங்கும பூவே கொஞ்சு புறாவே.......
எனக்கு அவர் பாடிய அனைத்து பாடல்களுமே பிடிக்கும், அவரின் வாய்ஸ் என்னை சிறு வயதிலிருந்து ஈர்த்து வந்துள்ளது என்றால் அது மிகையில்லை. நான் சிறு வயதில் இருந்து படுக்கைக்கு போகும் போது அவரின் பாடல்களை கேட்டு கொண்டே தூங்குவேன்,அவரின் பாட்டு எனக்கு தாலாட்டு. எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத காலத்தால் அழியாத பாடல்கள் அவை.

நான் சந்திரபாபுவின் வாழ்க்கையை பற்றி அறிந்து கொள்ள திரு.முகில் எழுதியுள்ள கண்ணிரும் புன்னகையும் என்ற புத்தகத்தை வாங்கி ஒரே மூச்சில் படித்தேன். அப்போது தான் சந்திரபாபு மாதிரி ஒருத்தன் வாழ்ந்ததும் இல்ல வீழ்ந்ததும் இல்லை என்று அறிந்து கொண்டேன்.

சந்திரபாபு பொதுவாகவே மேல்நாட்டு பாணியில் இருக்க விரும்புவார், ஸ்டைல்ஆக இங்கிலீஷ் பேசுவார் அவர் எவ்வளவு பெரிய மனிதர்கள் ஆயினும் மிஸ்டர் என்று சொல்லியே அழைப்பார் (எம்.ஜி.ஆரை கூட அவ்வாறே அழைப்பார்) யாருக்கும் பயப்பட மாட்டார். காக்க பிடிக்க மாட்டார். மனதில் பட்டதை பேசும் குணம் கொண்ட அவருக்கு இதனால் எதிரிகள் அதிகம் ஆயினர். அவருக்கு அவரின் திருமண வாழ்வு சந்தோசத்தை தரவில்லை அதனால் குடி பழக்கத்துக்கு ஆளானர்.
***********************************************************
(எனக்கு எப்படி வீடியோவை பதிவு ஏற்றுவது என்று தெரியவில்லை.
அதனால் கொஞ்சம் சிரமம் பாராமல் லிங்கை கிளிக் செய்து சந்திரபாபு வீடியோவை கண்டு ரசிக்கவும்.)
**********************************************************
சிவாஜியிடம் சபாஷ் மீனா கதை சொன்னார் தயாரிப்பளார், அந்த காமெடியன் வேடத்தில் சந்திரபாபு தவிர வேறு யாரும் நடிக்க முடியாது என்று கூறி சந்திரபாபுவை புக் பண்ண சொன்னார் சிவாஜி,

சந்திரபாபுவிடம் கதை சொன்னார் தயாரிப்பளார்.
உடனே சந்திரபாபு "யார் ஹீரோ ?"...

"சிவாஜி கணேசன்" என்று பதில் வந்தது.
"கணேசன், he is a good actor, எனக்கு என்ன சம்பளம்"? என்று கேட்டார் சந்திரபாபு.
"நீங்க எவ்வளவு எதிர்பார்க்கிரிங்க?" அப்படினார் தயாரிப்பளார் .
சந்திரபாபு "சிவாஜிக்கு என்ன சம்பளம்?"
"ஒரு லட்சம்"

"அப்போ எனக்கு லட்சத்தை விட ஒரு ரூபாய் அதிகம் தாங்க, ஒரு லட்சத்தி ஒரு ரூபாய்."
தயாரிப்பளார் டர்ராகி சிவாஜியிடம் வந்து விவரத்தை கூறினார்.உடனே சிவாஜி "அவன் கேக்குறத கொடுத்துடுங்க இதுல அவனுக்கு நல்ல scope இருக்கு, அவன் நடிச்சாதான் நல்ல வரும்" தயாரிப்பளாரும் அந்த சம்பளத்தை கொடுக்க ஒத்து கொண்டார். படமும் சூப்பர் ஹிட். .. அந்த படத்தை பார்த்துதான் நம்ம சுந்தர்.சி அவர்கள் உள்ளதை அள்ளித்தா
என்ற படத்தை எடுத்து வெற்றியும் அடைந்தார். இரண்டு படங்களிலும் வெற்றிக்கு காரணம் காமெடி ஜாம்பவான்கள் சந்திரபாபுவும், கவுண்டமணியும் என்றால் அது மறுப்பதற்கு இல்லை.
***********
நான் கண்ணதாசனின் புத்தகங்களை படித்ததில் கண்ணதாசன் சந்திரபாபுவால் பாதிக்க பட்டுள்ளதாக அடிக்கடி கூறுவார். கண்ணதாசன் அவர்கள் தயாரித்த கவலை இல்லாத மனிதன் படத்துக்கு சந்திரபாபு சரியாக படபிடிப்புக்கு வருவதில்லை, வீட்டில் இருந்து கொண்டே இல்லை என்று வேலைகாரர்கள் மூலம் சொல்லி அனுப்பிவிடுவார் என்றும், எம்.ஜி.ஆர் அவர்கள் தலையிட்டு பின்பு தான் சந்திரபாபு ஒழுங்காக நடித்து கொடுத்தார் என்று கண்ணதாசன் அவர்கள் எழுதியுள்ளார். கடைசியில் கவலை இல்லாத மனிதன் படத்தை தான் எடுத்து உலகத்தில் தன்னை கவலை உள்ள மனிதனாக ஆக்கி விட்டது என்பார் கண்ணதாசன்.
**************
திரையுலகில் யாரும் கட்டாத அளவுக்கு வீடு கட்டினார் சந்திரபாபு மாடி வழியே வீட்டுக்குள்ளையே காரை நிறுத்தும் அளவுக்கு பெரிதாக கட்டினார். பிறகு மாடி வீட்டு ஏழை என்ற படத்தை தயாரித்து இயக்க விரும்பினார் இதற்காக எம்.ஜி.ஆர் அவர்களை புக் செய்தார். ஆனால் எம்.ஜி.ஆர் சந்திரபாபு படத்துக்கு ஒத்துழைப்பு தராததால் சந்திரபாபு தன் சொத்துக்கள் அத்தனையும் இழந்தார். குடியால் அவருக்கு படங்களும் குறைந்தன கடைசியில் அவர் 1974
ஆம் ஆண்டு இந்த மண்ணுலகை விட்டு பிரிந்தார். சந்திரபாபு மறைந்தாலும் தன் பாடல்களால் அவரின் நடனத்தால் அவரின் காமெடியினால் அவர் இன்னும் நம்முள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.........

Friday, May 8, 2009

நியூட்டனின் 3ஆம் சதி ஸாரி விதி

நியூட்டனின் 3ஆம் சதி

எனக்கு மொதல்ல இந்த படம் பாக்கனும்னே தோணல.....சில சதியால்
நான் நியூட்டனின் 3ஆம் விதியை வெள்ளிதிரையில் காண நேர்ந்தது. காலத்தின் கட்டாயம். கால கொடுமைன்னு கூட சொல்லலாம்.

சதிகள்:

1) மே 5 வழக்கம் போல் எனக்கு லீவ், சரி படத்துக்கு போலாம்னு யோசிச்சப்ப நான் இன்னும் பாக்காத படம் GAP10'S மரியாதை படம் மட்டும் தான் . மரியாதை படம் பாக்கறதுக்கு வீட்ல DVDல எதாவது இங்கிலீஷ் படம் பாக்கலாம்னு முடிவு பண்ணேன். அந்த நேரம் பாத்து
திடிர்னு திடிர்னு hang ஆயி என் கம்ப்யூட்டர் சதி பண்ணிடிச்சு.

2) அப்புறம் எப்படியோ முயற்சி பண்ணி பெரிய தலை al pacino நடிச்ச 88 MINUTES படத்தை ஒரு 45 MINUTES படம் ஓடிட்டு இருக்கும் போதே நம்ம கரண்ட் சதி பண்ணிடிச்சு. பொசுக்குன்னு போச்சு, நானும் வரும் வரும்னு பார்த்தேன் வரலே.

3) சரி நாம 1 மணி ஆட்டத்துக்கு எதாவது இங்கிலீஷ் படம் போவலாம்னு ஒரு முடிவு எடுத்தேன், அதுக்குள்ள பல் டாக்டர் போன் பண்ணி 12 மணிக்கு வாங்கன்னு சொன்னாரு. சரி 12 மணிக்கு தானே போயிட்டு ஒரு பத்து நிமிஷ வேலை முடிச்சிட்டு அப்படியே படத்துக்கு போலாம்ன்னு நினைச்சி போன எனக்கு முன்னாடி கிளினிக்ல மூணு பேர் ஆஹா டாக்டரும் சதி பண்ணிட்டாரேன்னு ரொம்ப பீலிங்க்ஸ் ஆயிடிச்சி.

4) கிளினிக் விட்டு வீட்டுக்கு வரும் போது மணி 1 , இனிமே எங்கே படத்துக்கு போறதுன்னு ப்ளாக் பார்த்து கொண்டு இருந்தேன். அப்போ சில ப்ளாக்ல நியூட்டனின் விதி நல்லா இருக்குன்னு சொன்னாங்க அத நம்பி 3.20 ஷோ சாந்தம்ல படம் பாக்க நானும் என் நண்பனும் போனோம்.

*********************************

சத்யம் திரைஅரங்கின் வெளிய நடந்த உரையாடல்:

நான்: டேய் இவன் படத்துக்கெல்லாம் 100 ரூபாய் டிக்கெட் அதிகம்டா.?

நண்பன்: வேற எங்க போறது, 10 ரூபாய் டிக்கெட் வாங்குவோமா?

(அங்கே போய் பார்த்தால் 10 ரூபாய் டிக்கெட் ஹவுஸ் புல்)

*************************************

வேற வழியில்லாமல் 100 ரூபாய் டிக்கெட் வாங்கி கொண்டு உள்ளே அமர்ந்து படத்தை ரசித்தோம். சும்மா சொல்ல கூடாது சாந்தம்ல அவ்ளோ காலிய நான் இது வரைக்கும் எந்த படத்தையும் பார்த்ததில்லை. எங்க ROWல நானும் என் நண்பனும் மட்டும் தான் உட்கார்ந்து இருந்தோம். வழக்கம் போல தள்ளிட்டு வரவங்களுக்கு இந்த படம் ஒரு வரபிரசாதம்(அரை மணி நேரம் பின்னாடி வந்து அரை மணி நேரம் முன்னாடி போறவங்களுக்கு).

படத்தை பத்தி சொல்லனும்னா, அதான் எல்லோரும் சொல்லிட்டங்கலே நல்ல திரைக்கதை, வசனம்,பின்னணி இசை... இந்த மாதிரி படத்தை பாக்கும்போது தமிழ் சினிமாவுக்கு பாட்டுக்கள் கண்டிப்பா
தேவையான்னு ஒரு கேள்வி எனுக்குள் எழுந்து அமுங்கிடிச்சு . படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் திரைஅரங்கில் ஒரே சிரிப்பு ரெண்டு பேரும் மாத்தி மாத்தி கேவலமா கத்துறாங்க. திரைஅரங்கில் சில பேர் தங்கள் நண்பர்களை திட்டி கொண்டு இருந்தார்கள் ஏன்டா சும்மா இருந்தவனை
இந்த மாதிரி படத்துக்கு கூட்டிட்டு வந்திங்கன்னு. ஆனால் இயக்குனர் தாய் முத்துசெல்வனை பாராட்டியே ஆக வேண்டும், அவர் திரைகதையில் செலுத்திய கவனத்தை கொஞ்சம் பாட்டிலும், ஹீரோ தேர்விலும் செலுத்தி இருக்கலாம்.Saturday, May 2, 2009

பொடிமாஸ்.......

பொடிமாஸ்.......அஜித் பேட்டி:

(ஆஞ்சநேயா படம் ரிலீஸ் ஆன டைம்)
(ஆன எனக்கு முழுவதும் ஞாபகம் இல்லை ஒரு பதில் மட்டும் என் மனதில் ஆழமா பதிந்தது)


நிருபர்: நீங்கள் நடித்ததில் உங்களக்கு பிடித்த படம் எது?
அஜித்: நான் நடிச்ச படத்தில் பாதி படம் நான் பார்த்ததில்லை , என்னா எனக்கு டைம் கிடைக்கவில்லை.
நம்ம டச்:
நான் இந்த பேட்டியை படித்து விட்டு அன்று FDFS ஆஞ்சநேயா படம் சென்றேன், அப்புறம் அவர் ஏன் அவர் படத்த பாக்கரதில்லைனு எனக்கு புரிந்தது. அன்றிலிருந்து தல படம் நல்ல இருந்ததான் போய் பாக்கறதுன்னு முடிவு பண்ணேன். ஆதனால் நான் திருப்பதி, ஆழ்வார், ராஜா போன்ற கண்டத்தில் இருந்து தப்பித்தேன். ஆனாலும் பில்லா , ஏகன் போன்ற படங்களை FDFS சென்றேன். என்னா ஒரு ஈர்ப்பு அதான் தல.
********************************************************************************
பொது அறிவு கேள்வி:

பொது அறிவு கேள்வி:

டாக்டர் விஜயிம் நடிகை சங்கவியிம் எத்தனை படத்தில் சேர்ந்து நடித்துள்ளனர்?

உங்கள் பொது அறிவை நிரூபிக்க பின்னூட்டத்தில் உங்கள் பதிலை தட்டுங்கள்.

சரியான விடை அனுப்புபவர்களுக்கு:

விஜய் நடித்த ஆதி மற்றும் குருவி படத்தின் DVD இலவசமாக வீட்டுக்கு அனுப்பிவைக்கப்படும்.

(பி.கு: இதனால் உங்கள் வீட்டில் பிரச்னை வந்தால் கம்பெனி பொறுப்பல்ல.)


Friday, May 1, 2009

பயணங்களும் மனிதர்களும்

சற்றே பெரிய பதிவு தான் கொஞ்சம் பொறுமையுடன் படித்து தான் பாருங்களேன்.

என் இனிய தமிழ் மக்களே உங்கள் பாசத்துக்குரிய சித்தரஞ்சன் பேசுகிறேன், முதல் முறையாக என்னுடைய ஒரு நாள் பயண அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். பயணங்கள் என்றைக்குமே எனக்கு சுகமானது தான் ஏனென்றால் எப்பொழுதுமே ஒரு இனிய சூழலில் அதிகம் வருத்திக் கொள்ளாமல் சுகமாக பயணம் செய்பவன் நான். ஆனால் நேற்றைய பயணம் எனக்கு முற்றிலும் ஒரு புதிய உலகத்தை காட்டியது, உலகம் எவ்வளவு அழகானது என்பதை காட்டியது, இந்த அழகை இவ்வளவு வருடங்கள் காணாமல் குருடாய் இருந்ததை எண்ணி மிகவும் வேதனை கொள்கிறேன்.நான் எப்பொழுதும் ஒரு குறிப்பிட்ட நாளில் ஒரு குறிப்பிட்ட வழித் தடத்தில் பேருந்தில் பிரயாணம் செய்வேன், அந்த வழித்தடம் எப்பொழுதும் 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து வந்து கொண்டே இருக்கும் அதனால் அனேகமாக நான் ஏறியவுடன் அமர இருக்கை கிடைக்கும். உடனே காதில் Earphones மாட்டிக் கொண்டு ஏதாவது புத்தகம் படித்தபடியே எனது 45 KM தூர பயணத்தை நிறைவு செய்வேன் அல்லது அவர்கள் ஒளிபரப்பும் ஏதாவது மொக்கை படத்தை (நான் பார்த்தவரையில் நூற்றுக்கு 95% டாக்டர் அவர்களின் படத்தை தான் போட்டு மக்களை கொல்வர், ஏன் இந்த கொலைவெறியோ?????) பார்த்துக் கொண்டே செல்வேன். அதாவது என்னை சுற்றி என்ன நடக்கிறது என்று சிறிதும் தெரிந்து கொள்ளாமல் பிரயாணம் செய்வேன்.

ஆனால் நேற்று நல்ல முகூர்த்தம் என்பதால் அந்த ஊரெங்கும் கல்யானமயம் அதனால் எங்கும் போக்குவரத்து நெரிசல் பேருந்துகளில் அதற்கு மேல் நெரிசல், நேரம் என்னை துரத்திக் கொண்டிருந்ததால் வேறு வழி இல்லாமல் முழுவதுமாக நிரம்பி தள்ளாடிக் கொண்டு வந்த அந்த அரசுப் பேருந்தில் ஏறினேன், படிக்கட்டில் ஒரு கால் மட்டும் வைக்க தான் இடம் இருந்தது அதாவது ஒரு கால் மேல் இன்னொரு கால் வைத்து நின்று கொண்டிருந்தேன் (கல்லூரி படிக்கும் பொழுது குரங்கு போல் தொத்திக் கொண்டு சென்றது, அதற்குப் பிறகு இப்பொழுது தான்) நல்ல வேலை கதவு இருந்ததால் சற்றே ஆறுதல். தொடர்ந்து ஐந்து ஊர்களில் பேருந்து நிற்கவே இல்லை அவ்வளவு கூட்டம், சரி என்ன படம் ஓடுகிறது என்று பார்த்தால் நம்ம குருவி, யப்பா முடியலடா சாமி காமெடி என்ற பெயரில் அவர்கள் பண்ணும் தொல்லை பிறகு ஒரு காட்சியில் அவர் லிஃப்ட் ஒன்றில் மாடிக் கொள்கிறார் கடைசி மாடியில் இருந்து அந்த லிஃப்ட் அறுந்து கீழே விழுகிறது என்னடாவென்று பார்த்தால் அப்படியும் குருவிக்கு ஒன்னும் ஆகவில்லை, அடப் போங்கடா அவனவன் தொங்கிட்டு இருக்கான் இது வேற............

சரியென்று இந்த கன்றாவியெல்லாம் பார்க்கவேண்டாம் என்று வெளியில் என்னுடைய பார்வையை செலுத்தினேன், பருவ மங்கையர் காதில் அணிந்திருக்கும் லோலாக்கு போல பச்சை, இளம் சிவப்பும் மஞ்சளும் கலந்த ஒரு நிறத்தில், மஞ்சள் ஆகிய நிறங்களில் மாமரங்களில் உள்ள மாங்கனிகள் குலுங்குவது, புகைப் படம் எடுக்க உயர வரிசையில் நிற்பது போல் நான்கு பனை மரங்கள், நடு நடுவே சிறிய குன்றுகள், கத்தாளை செடிகள், ஒரு அடியில் தொடங்கி நடுவில் இரண்டாக பிரிந்து வளர்ந்த தென்னை மரம், சில மைல்களுக்கு ஒன்றாக ஒரு செல்போன் கோபுரம், இடையிடையே சிறு சிறு கிராமங்கள் இளநரையை போன்று அங்கொன்றும் இங்கொன்றுமாக முகம் காட்டின. கீழே குனிந்து பார்த்தால் சாலை என்னவோ நீர் போல இருந்தது, இப்படிப்பட்ட ஒரு நிலப் பரப்பில் நான் சென்ற பேருந்து உறுமியவாறே அமைதியை கிழித்துக் கொண்டு சென்றது. நம்மைச் சுற்றி இருக்கும் இடம் எப்பொழுதுமே ஒரே மாதிரி தான் இருக்கிறது அதை பார்க்கும் நம் கண்கள் தான் வேறுபடுகின்றன, இந்த உன்னதமான உண்மையை நான் புரிந்து கொண்டேன். விவசாயம் செய்ய இயலாத செம்மண் நிலம் தான் வழி நெடுக இருந்தாலும் அந்த நிலப் பரப்பு ஏனோ என் கண்களுக்கு விருந்தாகத் தான் இருந்தது. அந்த பிரயாணத்தின் ஒரு கரும் புள்ளியாக ஒரு சம்பவம் நடந்துக் கொண்டே இருந்தது, நான்கு நண்பர்கள் அதில் ஒருவர் நல்ல போதையில் இருந்தார், அவர் தனது நண்பர்களுடன் பேசிய உரையாடல்களை இங்கு எழுத முடியாது அவ்வளவு தரம் தாழ்ந்தவை மற்ற மூன்று நபர்களும் தலையை தூக்க முடியாமல் வெட்கினர்.

பிறகு அணைத்து வேலைகளையும் முடித்து விட்டு ரயில் நிலையம் வந்தேன்,ஒரு சரக்கு ரயில் உள்ளே நுழைந்தது, அப்பப்பா எவ்வளவு விதமான ஒலிகளை தன்னுடன் இழுத்து வந்தது, கிரீச், தடக் தடக் போன்று ஒவ்வொரு பெட்டியும் என்னை கடந்து சென்ற பொழுது ஏதோ காணாததை கண்டவன் போலவும் கேட்காததை கேட்டவன் போலவும் நின்று கொண்டிருந்தேன், ஒரு வழியாக அது நின்றவுடன் அங்கு நிலவிய அமைதி?? அது தான் மயான அமைதியோ??. அங்கும் நான் கண்ட காட்சிகள் எல்லாம் ஏதோ ஒரு அந்நிய நாட்டுக்கு சென்ற மாதிரி அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டிருந்தேன், இத்தனைக்கும் கடந்த இரண்டு வருடங்களாக எனக்கு மிகவும் பரிட்சயமான இடம் தான். ஒரு மழைத் தொடர் அதன் அடிவாரத்தில் இந்த ரயில் நிலையம், சூரியனின் கதிர்களை மேகங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக மறைக்க முற்பட்டதால் அந்த மலைப்பரப்பில் சில இடங்களில் பொன் நிறமாகவும் சில இடங்களில் இருளாகவும் காட்சி அளித்தது. குரங்குகளுக்கு அங்கு பஞ்சமே இல்லை, அப்பொழுது தான் வந்து சென்ற காகிநாடா எக்ஸ்பிரஸ் வண்டியில் இருந்த மக்கள் வீசிச் சென்ற ஆரஞ்சு பல தோல், ஆப்பில் ஜூஸ் டப்பாக்கள், உணவு பொட்டலங்கள் இன்னும் என்னன்ன குப்பை போட முடியுமோ அவ்வளவும் அந்த இடத்தில் கிடந்தது. இவற்றை அந்த குரங்குகள் மேய்ந்து கொண்டிருந்தன, காட்டில் நிஜ பழங்களை தின்று கொண்டிருந்த வானரப் படை இந்த ஜூஸ் டப்பாகளை பிய்த்து அந்த ஜூஸ் நக்குவதை பார்க்கும் பொழுது நாம் அவைகளுக்கு செய்யும் அநீதியை எண்ணி வெட்கினேன்.

இந்த இடத்தில் நான் ரயில் பயணிகள் மீது கோபம் கொள்கிறேன், இப்பொழுதெல்லாம் பகல் ரயில்களில் கண்டிப்பாக கதவருகே ஒரு குப்பை கூடை வைத்திருக்கின்றனர் அதே போல் ரயில் நிலையங்களிலும் நிறைய இடங்களில் குப்பை கூடைகள் இருக்கிறது உங்களுக்கு அதில் போடுவதில் அவ்வளவு சிரமமாக இருக்கிறதா?? ஒவ்வொரு ரயில் வந்து செல்லும் பொழுதும் அங்கே அந்த துப்புரவு தொழிலாளர்கள் அந்த குப்பையை சுத்தம் செய்ய படும் பாடு தான் எத்தனை?? பிறகு என் அருகில் ஒரு ஐந்து நபர் குழு வந்தது, அதில் இருவர் சத்தமாக பேசிக் கொண்டிருந்தனர் சரி ஏதோ நண்பர்களுக்குள் ஜாலியாக அரட்டை அடித்துக் கொண்டிருக்கின்றனர் என்று பார்த்தால் தங்களின் சில்மிஷங்களை துவங்கினார். ஒரு பெண் வந்து கொண்டிருந்தார் இவர்கள் இருவரும் அந்த பெண் வரும் வழியில நடைமேடைக்கும் தண்டவாளத்துக்கும் இடையில் சிறிய இடம் விட்டு நின்று அந்த பெண்ணையே வெறித்து பார்த்து இவர்களுக்குள் ஏதோ பேசினார் பாவம் அவர் மிகவும் பயந்து போனார், ஏன்டா நாய்களா உங்கள் வீட்டு பெண்களை யாராவ்து இவ்வாறு செய்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்?? மனிதர்கள் பல நேரங்களில் ஆறாவது அறிவை பயன்படுத்துவதே இல்லை.

பிறகு அரை மணி நேரம் தாமதமாக வந்த ரயிலில் ஏறி அமர்ந்தேன், எப்பொழுதுமே இந்த பிரயாணங்களில் நான் காணும் இந்த Vendor's எனப்படும் உணவு வகை விற்கும் நபர்கள் ஒரு நாளைக்கு விடியற் காலையில் சென்னையில் இருந்து புறப்பட்டு அந்த ரயில் கோயம்புத்தூர் அல்லது பெங்களூரு சென்று இரவு சென்னை திரும்பும் வரை அவர்கள் ஒவ்வொரு பெட்டியாக எத்தனை முறை தான் செல்வரோ அது ஆண்டவனுக்கே வெளிச்சம். இவர்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு ரயிலில் நடை பயணம் தான்.
பிறகு எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய கதாவிலாசம் புத்தகம் படிக்க எடுத்தேன், அதில் சரியாக "நிலா பார்த்தல்" கதை வந்தது, நான் காலையில் என்ன ஒரு அனுபவத்தை பெற்றேனோ அதே போல் ஆசிரியர் இரவில் நிலவை வைத்து பெற்றுள்ளார். மிக அருமையாக இருந்தது, அதுவும் உற்சாகமாக இருந்தது. அப்பொழுது நான் சிறுவனாக இருக்கையில் ரிக்ஷாவில் செல்கையில் வானத்தில் அந்த நிலவை பார்த்து எத்தனையோ நாட்கள் ஆனந்தம் அடைந்திருக்கிறேன் அதை எண்ணி மகிழ்ந்தேன். ஆனால் இன்றைய சிறுவர்கள் பொழுதுக்கும் TV கணினி என்று நேரத்தை வீனடிக்கிறனர். இப்படி நான் நினைவுகளில் மூழ்கியிருக்கும் பொழுது ஒரு சம்பவம் என் நிம்மதியை கெடுத்தது.

நான் அமர்ந்த இருக்கைக்கு முன் இருக்கையில் ஒரு 38-40 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் அமர்ந்திருந்தார் அவரது இரு சிறுவயது (ஒருவர் 8 மற்றொருவர் 5) பெண் குழைந்தைகள் அதற்கு முன் இருக்கையில் அமர்திருந்தனர். அந்த பெண்ணின் நுனி நாக்கு ஆங்கிலம் மற்றும் அவர் அணிந்திருந்த உடையை பார்க்கும் பொழுது அவர் ஒரு நவநாகரீக மங்கை என்று புரிந்து கொண்டேன். (ஆமாம் அதென்ன பாண்ட் சட்டை போட்டால் நவநாகரீகமா? அப்ப சேலைக் கட்டினா??? எவன்யா இந்த வார்த்தைய கண்டுபிடிச்சான்??) இப்படி ஒரு கோபம் எனக்கு அந்த பெண்ணின் நடவடிக்கையால் ஏற்பட்டது, தன் பௌர்ணமி நிலவு போன்ற முகமும் ஒளி பொருந்திய கண்களையும் ஓட்டை பல்லு சிரிப்புடன் விளங்கிய அந்த சிறு குழந்தையை அவர் படுத்திய கொடுமையில் எனக்கு மட்டுமல்ல அவரை சுற்றி அமர்ந்திருந்த அனைவருக்கும் பளார் என்று ஒரு அரை விடனும் போல் தான் இருந்தது. குழந்தை சிரிக்காதா அதை கானமாட்டோமா என்று அனைவரும் ஏங்குவர் ஆனால் இந்த அம்மணியோ அந்த குழந்தை சிரிக்கின்றது என்று சதா அதை போட்டு திட்டியும் அடித்தும் துன்புறுத்தினார், அந்த குழந்தை சிரிப்பது இவருக்கு மானம் போகிறதாம் அதனால் நல்வழிப் படுத்துகிறாராம், உன்னை தானம்மா நல்வழிப் படுத்த வேண்டும். வாழ்நாள் பூராவும் அந்த குழந்தை படப்போகும் இன்னல்களை நினைத்து என் உள்ளம் கனத்தது.

இதைக் காண முடியாதவனாக நான் இருக்கையை விட்டு வந்து கதவருகே நின்று கொண்டேன், Walkmanil பாட்டு கேட்போமென்று போட்டேன். முதலில் சூர்யா சமீராவுடன் "நெஞ்சுக்குள் பெய்திடும் மாமலை......." பட்டை அவர்களுடன் சேர்ந்து பாடியவாறே தலையசைத்துக் கொண்டிருந்தேன். அடுத்ததாக "அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சலை......" என்று சூர்யாவுடன் அழுதுகொண்டிருந்தேன். ஒரு நொடி இன்பம் மறு நொடி சோகம் என்னடா வாழ்கை இது என்று நொந்தவாறே அன்றைய நிகழ்வுகள் மனிதர்களை திரும்பிப் பார்த்தேன், வந்து சேர்ந்தது க்ரிஷ் குரலில் "நேற்று என்பது கையில் இல்லை நாளை என்பது பையில் இல்லை இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு......." எவ்வளவு சரியான வரிகள். இவ்வாறாக ஒரு கலவையான நினைவுகளுடன் இனிதே வீடு வந்து சேர்ந்தேன்.

இந்த பதிவை பற்றிய உங்கள் பொன்னான இடுக்கைகளை ஆவலுடன் எதிர்பார்கிறேன். இன்னொரு பயணத்தில் சந்திப்போம். நன்றி.

பசங்க விமர்சனம்

பசங்க விமர்சனம் தமிழ் திரையுலகில் அஞ்சலிக்கு பிறகு நீண்ட நாட்கள் கழித்து குழந்தைகளை மையப்படுத்தி வந்துள்ள படம் பசங்க. முதலில் இந்த மாதிரி ஒரு முயற்சி எடுத்ததற்கு தயாரிப்பாளர் சசிகுமார் மற்றும் இயக்குனர் பாண்டிராஜ் இருவருக்கும் ஒரு சபாஷ் போடலாம். படத்தில் நடித்த அனைத்து
குழந்தை நட்சத்திரங்களும் மிகவும் இயல்பாக தங்கள் நடிப்பை வெளிபடித்தியுள்ளனர், முக்கியமா அந்த புஜ்ஜி ஆக வரும் சின்ன பையன் செய்யும் குறும்புதனங்கள் நம்மை ரசிக்க வைக்கின்றன அவர் அடிக்கடி கூறும் வசனம் "எப்புடி" சூப்பர்ஒ சூப்பர்.

நான் படத்தின் PROMOS டி.வி.யில் பார்த்த உடன் என்னடா திரும்பவும் ஒரு வன்முறை படமா என்று நினைத்தேன் ஆனால் ஒரு வன்முறை கூட இல்லை. இந்த படம் கண்டிப்பாக மசாலா படம் பார்ப்பவர்களுக்கு பிடிக்க வாய்ப்பில்லை படத்தில் ஒரு பைட் கூட இல்லை எல்லாம் சின்ன பசங்க சண்டைதான். ஆனா அந்த சண்டை காட்சிக்கே ரொம்ப பில்டப் குடுக்குறாங்க.புதிதாக பள்ளிக்கு வரும் அன்பரசன் அங்கு ஏற்கனவே பள்ளியில் படிக்கும் ஜீவா இருவருக்கும் முதல் நாளே சண்டை ஆரம்பம் ஆகிறது. அதே பள்ளியில் ஜீவாவின் அப்பாவும் ஆசிரியராக பணியாற்றுகிறார். ஜீவா வால்தனம் மிக்கவன் ஆனால் அறிவு நல்ல புத்திசாலி, ஜீவா கடந்த ஐந்து வருடங்களாக கிளாஸ் லீடர் பதவியில் இருப்பவர் ஆனால் அன்பரசன் வந்த உடன் அந்த பதவியை பெறுகிறார். இதனால் இருவருக்கும் சண்டை ஆரம்பித்து அடிக்கடி அடித்து கொள்கிறார்கள். அன்பரசன் சித்தப்பாக்கும் ஜீவாவின் அக்காவுக்கும் காதல் மலர்கிறது, அப்புறம் நடுவில் இரண்டு குடும்பத்துக்கும் சண்டை வருகிறது இதையெல்லாம் மீறி அவர்கள் இருவரும் நட்பனார்களா? என்பதே கதை.

படம் ஆரம்பத்தில் விமல்(சித்தப்பா) பேர் முதலில் போட்டாலும் அவுருக்கு பெருசா ஒண்ணும் வேலையில்லை. வேகாவும் விமலும் காதல் காட்சிகள் ரசிக்கும் படி உள்ளன. ஜீவாவின் அப்பாவாக வரும் தயாரிப்பாளர் ஜெயபிரகாஷ் ஆசிரியராக நல்ல நடிப்பை வெளிபடுத்தியுள்ளார்.
ஜீவா கூட வரும் பக்கட(பகோடா இல்லை), குட்டிமணி இருவரும் நம்மை சிரிக்கவைகிறார்கள். அதுவும் அந்த பக்கட பையன் பேசும் வசனங்கள் மிகவும் அருமை. படத்தில் அனைவரும் தங்கள்
நடிப்பை மிக அருமையாக வெளிபடுத்தியுள்ளார், எப்படின்ன ஒரு REALITY இருக்கு.

படத்தின் முதல் பாதி ரொம்ப மெதுவாக நகர்கிறது, சின்ன பசங்க படம்னாலும் பில்டப்க்கு குறைவில்லை. முதல் பாதியில் நம்மை ரொம்பவே சோதிக்கிறார்கள்.இரண்டாம் பாதியில் வாழ்கைக்கான அறிவுரைகள் மற்றும் தன்னம்பிக்கை வளர்க்கும் காட்சிகள் இருக்கிறது. ஆனால் சில அறிவுரைகள் நம்மை சலிப்படைய செய்கின்றன. இந்த படத்தை கண்டிப்பாக
பசங்க பாக்கறாங்களோ இல்லையோ ஆனால் பெற்றோர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.இந்த படம் கண்டிப்பாக நம்மை வேறு உலகத்துக்கு கொண்டு செல்லும். படத்தில் சில குறைகள் இருந்தாலும் இது ஒரு தரமான படம். இந்த மாதிரி புது முயற்சிகள் வரவேற்க படவேண்டும்... மக்கள் வரவேற்பார்களா?