Wednesday, May 13, 2009

முடிந்தது தேர்தல்


அப்பாடா ஒரு வழியா தேர்தல் திருவிழா முடிவுக்கு வந்தது, தமிழகத்தில் எதிர்பார்த்ததை விட வண்முறை வெறியாட்டம் குறைவாகவே இருந்தது. எங்கள் பகுதியில் அமைதியாகவே தேர்தல் நடந்தது, நான் மதியமே சென்று ஓட்டு போட்டு விட்டேன் பெரிய கூட்டம் ஒன்றும் இல்லை. அடிக்கடி கருப்பு வெள்ளை சீருடையில் இரு கழகங்களின் குண்டர் படை வந்து தேர்தல் நடப்பதை பார்வையிட்டு சென்றுக் கொண்டிருந்தது. நான் ஓட்டு போட்ட சாவடியில் மூன்று பாகங்களின் வாக்காளர்கள் போடலாம் ஆனால் காவலுக்கு இருந்ததோ வெறும் இரண்டு சிரிப்பு போலீஸ் தான், இத்தனை கம்பெனி அத்தனை கம்பெனி துணை ராணுவம் வந்தது என்று செய்தியில் சொன்னார்களே அவர்கள் எங்கே? புல்லு புடுங்க போய்ட்டாங்களா?? நான் எதிர்பார்த்து போலவே மதியம் மேல் குத்துங்கம்மா ஓட்டு நம்ம நாக்க மூக்க சின்னத்துக்கு என்று ஆரம்பித்து விட்டனர், என் நண்பன் நான்கு மணிக்கு சென்றவன் இதைக் கண்டவுடன் ஓட்டு போடாமலே வந்து விட்டான்.

ஐஸ் ஹவுஸ் தொகுதியில் குப்பை தொட்டி தேர்தலில் நடப்பது போல வண்முறை வெறியாட்டம் அவிழ்த்து விடப் பட்டது, தொகுதியே போர்கோலம் பூண்டது. காவல் நிலையத்திலே வேட்பாளர் தாக்கப் படுகிறார் என்றால் கழக ஆட்சி எவ்வளவு சிறப்பாக நடக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம். ஒரு தொகுதியில் இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு போட்டால் அது உதய சூரியனில் சிகப்பு விளக்கு எரிகிறது என்று அம்மையார் கூறுகிறார், எனக்கு என்னவோ நேற்றைய மின் வெட்டுக்கும் இதற்கும் ஏதோ தொடர்பு இருப்பதாக தான் தெரிகிறது. பொதுவாக மின் வெட்டு ஏற்பட்டாலும் ரயில் நிலையங்கள் வழக்கம் போல் இயங்கும் ஆனால் நேற்று அப்படி இல்லை அனைத்துமே இருளில் மூழ்கின. என்னவோ நடக்குது மர்மமா இருக்குது.


வட சென்னையில் சில இடங்களில் வோட்டுக்கு நூறு முதல் இருநூறு வரை வழங்கப்பட்டதாக கேள்வி, என்னை பொறுத்த வரையில் ஓட்டுக்கு பணம் வாங்குவதில் தவறில்லை. அவர்கள் வாரி வழங்கும் பணத்தை தாராளமாக பெற்றுக் கொள்ளுங்கள் ஆனால் யாருக்கு நீங்கள் ஓட்டு போடுவது என்று முடிவு செய்தீர்களோ அவர்களுக்கே ஓட்டு போடுங்கள். என்ன இருந்தாலும் நம் பணம் தானே, அவர்கள் நம் ஓட்டை பெற்றுக் கொண்டு நமக்கு துரோகம் செய்கிறார்கள் நாம் அவர்கள் குடுக்கும் பணத்தை பெற்று துரோகம் செய்வோம், எந்த தவறும் இல்லை.


மக்களின் மனநிலையை பார்க்கும் பொழுது ஒரு உறுதியான முடிவுக்கு வர முடியவில்லை அதனால் இரு நாட்களுக்கு எந்த வேட்பாளருக்கும் தூக்கம் வரப் போவதில்லை (குறிப்பாக கை சின்னத்தவர்கள் நம்பிக்கை இல்லாமல் தான் இருப்பார்). திருமங்கலம் தொகுதியில் அஞ்சா நெஞ்சன் நாற்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று மார்தட்டினார் அதே போல் நடந்தது (எப்படி என்று அனைவரும் அறிவர்) அதே போல் தி.மு.க முக்கிய வேட்பாளர்கள் சரி வர பிரச்சாரம் கூட செய்யாமல் மிகவும் தைரியமாக பேட்டி அளிக்கின்றனர் அதை நினைக்கும் பொழுது இங்கேயும் பல உள்ளடி வேலைகள் நடந்திருக்குமோ???

ஓட்டு போட்டு விட்டு வெளியே வந்த நம்ம Gaptain அவர்களை பேட்டி கண்டால் அனைவரையும் போல் நாற்பதும் நமதே என்றார், சரி எப்படி இவ்வளவு ஆணித்தரமாக சொல்கிறீர் என்றால் "மற்ற கட்சிகள் எந்த அடிப்படையில் வெற்றி பெறுவோம் என்று சொல்கிறார்களோ அதே போல் தான் நானும் சொல்கிறேன் அஹ்ங்க்க்!!!!!!!!" என்று கூறுகிறார். என்ன கொடுமை இது??? நான் அவர்கள் போல் இல்லை எனக்கு ஒரு முறை வாய்ப்பு அளித்து பாருங்கள், உணவகத்துக்குள் சென்று பார்த்தல் தான் தெரியும் அதன் சுவை சும்மா வெளியில் பார்த்துவிட்டு சென்றால் தெரியாது என்று மொக்கையாக பிரச்சாரம் செய்தவர் இப்பொழுது தான் அதே குட்டையில் ஊறிய மட்டை என்பதை நிரூபிக்கிறார். பார்ப்போம் இவர் பெரும் வாக்குகளை.

அடுத்ததாக நாராயணா இந்த கொசுத் தொல்ல தாங்க முடியல என்ற ரேஞ்சுக்கு ஒருவர் பலரை இம்சை செய்து வருகிறார், அதாங்க நம்ம சூப்பர் ஸ்டார் தான் "சும்மா ஆ ஊ நா ஆண்டவன் சொன்னா நிச்சயம் அரசியலுக்கு வருவேன் வெங்காயம் நறுக்குவேன் புல்லு புடுங்குவேன்" என்று பாவம் அவரது அதி தீவிர ரசிகர்களை இம்சிக்கிறார், சரி அவரும் தான் என்ன பண்ணுவாரு குசெலனிலேயே அவர் தெளிவா சொல்லிட்டாரு ஆனாலும் சும்மா தொந்தரவு தந்தா ஏதாவது ஒரு bitta போடவேண்டியது தான் என்று அடிச்சு விடறாரு.

சரி இவ்வளவு நேரம் மொக்க போட்டுட்டு ஏதாவது கிச்சு கிச்சு மூட்டலனா உங்ககிட்ட யாரு தர்ம அடி வாங்கறது? சங்கதி இதுதாங்க இந்த மாதம் பிறந்த நாள் கொண்டாடும் டாக்டர் நடிகர் கட்சி ஆரம்பிக்க போறதா கோடம்பாக்கத்து பட்சி ஒன்னு சொல்லுச்சு, நிறைய பதிவர்கள் இத பத்தி ஏற்கனவே எழுதி இருக்காங்க அதனால அந்த செய்து உண்மையாவே நடக்கனும்னு நாம பிரார்த்திப்போம். இவரோட இம்சை தாங்க முடியல.

சரிபா நான் கெளம்புறேன் காத்து வரட்டும், யாரும் ஆட்டோ அனுப்பிடாதீங்க அப்புறம் அழுதுடுவேன்.

5 comments:

SUREஷ் said...

லேபிளில் ரஜினிக்கு மட்டும் இடம்..?

சித்து said...

இல்லை நண்பா அதுக்கு மேல சேர்க்க முடியல.

shirdi.saidasan@gmail.com said...

//பெரும் வாக்குகளை.//----தப்பு

பெறும் வாக்குகளை ---- சரி.

முதலில் தமிழை ஒழுங்காக கற்றுக்கொள்ளுங்கள்.

shirdi.saidasan@gmail.com said...

//அவர்கள் நம் ஓட்டை பெற்றுக் கொண்டு நமக்கு துரோகம் செய்கிறார்கள் நாம் அவர்கள் குடுக்கும் பணத்தை பெற்று துரோகம் செய்வோம், எந்த தவறும் இல்லை//

super

சித்து said...

நன்றி shirdi.saidasan , அதற்கு தான் முயற்சி செய்கிறேன்.