Saturday, May 16, 2009

இலவசம் ஐயோ! ஐயோ!


வணக்கம் பதிவர்களே!

வர வர நம்ம நாட்டுல எதுக்கு எதுக்கு இலவசம் குடுக்கறதன்னு விவஸ்தை இல்லாம போச்சுங்க.

இப்படித்தான் மூணு வருஷம் முன்னாடி:

# ஒரு சட்டை வாங்கின ஒரு சட்டை இலவசம்ன்னு சொன்னாங்க .


இரண்டு வருஷம் முன்னாடி


# இரண்டு சட்டை வாங்கின அஞ்சு சட்டை இலவசம்ன்னு சொன்னாங்க.


போன வருஷம்

# ஒரு செல்போன் வாங்கின இரண்டு செல்போன் இலவசம்ன்னு சொன்னாங்க.


இப்போ என்னன்னா

# ஒரு கணினி வாங்கினால் இன்னொரு கணினி இலவசம்ன்னு சொல்றாங்க.....



இலவசங்களை நம்பி நாம் கடைக்கு போனால் அவன் 1008 கண்டிஷன் போடுவான். அப்புறம் நாமும் மேல உள்ள படத்தில் மாதிரி நொந்து நூடுல்ஸ் ஆகி விடுவோம் . எது எப்படியோ மேல உள்ள இலவசங்கள் நம் சிலருக்கு தான் உதவும் .

**********************************************

இந்த மாதிரி இலவசம் கிடைச்ச எப்படி இருக்கும்.


#வில்லு, குங்கும பூ, சர்வம் போன்ற படங்களை பார்த்தவர்களுக்கு இலவசமாக ஊக்க தொகை அளிக்கலாம்.(எனக்கும் கிடைக்கும்).


# ஒரு லிட்டர் பெட்ரோல் போட்ட இன்னொரு லிட்டர் பெட்ரோல் இலவசம்ன்னு குடுத்த நல்ல இருக்கும்.(புண்ணியமா போகும்).


# விஜய் படத்தை ஓட வைப்பதற்கு ஒரு டிக்கெட் எடுத்தால் பத்து டிக்கெட் இலவசம் என்று கொடுக்கலாம்.


#அஜித் படத்துக்கு டிக்கெட் தரும் போது கூட இலவசமா ஒரு தலைவலி தைலம் தரலாம்.


#டாஸ்மாக் கடையில் ஒரு quarter வாங்கினால் இன்னொரு quarter இலவசமாக தரலாம்.


# ஒரு சவரன் தங்க நகை வாங்கின இன்னொரு சவரன் நகை இலவசம்ன்னு குடுக்கலாம்.


#டி.ஆர் படத்துக்கு போகும்போது இலவமாக ஒரு குரங்கு பொம்மை கொடுக்கலாம்.


இன்னும் உங்களக்கு தோன்றியே இலவசங்களை பின்னூட்டத்தில் எழுதவும்.

12 comments:

Vijay Anand said...

JK ரித்திஷ் படத்துக்கு போகும்போது இலவமாக பிரியாணியூம் quater இலவசமாக தரலாம்.

test said...

குரங்கு பொம்மை எதுக்கு ஐயா ? அவர் உருவ பொம்மையே தரலாமே ! இந்த எலக்‌ஷன்ல எத்தனை ஓட்டு வாங்கி இருக்கிறார்.!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

படம் பார்க்க துணைக்கு ஒரு ஆள் இலவசமாக அனுப்பினால் உதவியாய் இருக்கும் தல

ஜெட்லி... said...

உங்கள் கருத்துக்கு நன்றி விஜய் ஆனந்த்,
நீங்கள் சொல்வது உண்மை சம்பவம்.

ஜெட்லி... said...

வினோத் உங்கள் வருகைக்கு நன்றி.

ஜெட்லி... said...

ராஜா உங்களக்கு குசும்பு அதிகம், நான் இந்த வம்பில் மாட்டி கொள்ள விரும்பவில்லை.

ஜெட்லி... said...

சுரேஷ் தலைவரே உங்களுக்கு ரொம்ப ஆசை தான்....
கூட வரும் ஆள் ஆண் பாலா? இல்லை பெண் பாலா?.........

Anonymous said...

Kaadhali illada pasangalukku ilavasa kaadhali tharalaam


Chicken briyaniyil ilavasamaaga oru mutton piece tharalaam


Namitha padam paarpavargalukku neraya thunimanigal ilavasamaaga tharalaam

Bala De BOSS said...

S. J. Surya படத்துக்கு போகும்போது, ஒரு figure, Condom கொடுத்து, ஹோட்டெல்ல ரூம் போட்டு தரலாம்

Thomas Ruban said...

உங்கள் பதிவை படிப்வர்களுக்கு என்ன இலவசமாக தரலாம்?
ஒரு கணினி

லோகு said...

இதை வன்மையாக கண்டிக்கிறேன்..

பொருளாதார ரீதியா தோல்வி அடைஞ்ச படங்களுக்கும், தலைவலி தர படங்களுக்கும் வித்தியாசம் இருக்குங்க.. தல படம் தோல்வி அடஞ்சு இருக்கலாம்.. ஆனால் கேவலமாக இருந்திருக்காது..

எல்லா நடிகர்களையும் கிண்டல் செய்வதால் எல்லாரும் ரசிப்பார்கள் என்று என்ன வேண்டாம்..

ஜெட்லி... said...

பாலா மாமு .... உங்களக்கு கொஞ்சம் ஜாஸ்திதான்...
நான் குசும்ப சொன்னேன் மாமு.