Saturday, January 30, 2010

பதிவர் தருமிக்கு உதவி தேவை.




நேற்று எங்கள் பதிவில் ஏற்பட்ட குளறுபடிகள் உங்களுக்கு நன்றே தெரியும், எந்த ஒரு Link Click செய்தாலும் அது எங்கயோ சென்றது. பிறகு அதை ஒரு மாதிரியாக சரி செய்தோம். இன்று பதிவர் தருமி (http://www.dharumi.blogspot.com/)   அவர்களின் பதிவும் hack செய்யப்பட்டுள்ளது,


 ஆனால் இது நேற்றை விட ரொம்ப மெருகேறி Sophisticated-a இருக்கு. நான் ஒரு சிறு முயற்சி செய்து பார்த்தேன் அவருக்கு உதவ ஆனால் எனக்கு இந்த அளவுக்கு Technical Brain இல்லை அதனால் விஷயம் தெரிந்த Computer சூறாவளிகள் அவருக்கு உதவி செய்யுங்கள். அவரை நீங்கள் dharumi2@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம். இரண்டாவது நாளாக இது நடப்பதால் வயிற்றில் புளியை கரைக்கிறது அதனால் Template Backup எடுத்துவிட்டோம் நீங்களும் எடுத்துக்கொள்ளுங்கள். யாராவது பதிவுகளின் (Posts Backup) எடுப்பது எப்படி என்று சொன்னால் ரொம்ப உதவியாக இருக்கும். 


நன்றி 

சித்து.

தமிழ் படம் - பார்வை

மச்சான் காக்க காக்க, பாட்ஷா மாமா, டேய் போக்கிரிடா, இது நாயகன், அது பில்லா. இதெல்லாம் தமிழ் படம் பார்த்துக் கொண்டிருந்தபோது, முன், பின் சைடு இருக்கைகளில் இருந்தவர்கள் பேசிய வாசகங்கள். நாடோடிகளுக்குப் பிறகு இவ்வளவு கொண்டாட்டங்களுடன் பார்த்த படம் இது தான்.




நம்ம ஊரிலிருந்து யாராவது சினிமாவில் ஹீரோவாக நடிக்கப் போனா, அவுங்க குடும்பத்தை ஊரை விட்டு தள்ளி வைக்கணும், அவுங்களோட பழகுறவுங்க, அதுக்கு தண்டனையா, விரல் சுத்துற தம்பி படத்தை நூறு தடவை பார்க்கணும், என்ற நாட்டாமையின் தீர்ப்புடன் படம் தொடங்கும்போதே, அதகளம் ஆரம்பமாகிவிடுகிறது. அதன் பின் பாரபட்சமே பார்க்காமல் சகட்டுமேனிக்கு கலாய்த்திருக்கிறார்கள்.

பல படங்களின் பிரபலமான காட்சிகளை அப்படியே எடுத்துக் கொண்டு, முடிவில் மட்டும் ஒரு வேட்டு வைத்திருக்கிறார்கள். ட்ரைலரில் பச்ச, மஞ்ச தமிழன் பாட்டுப் போடும்போது, இந்தப் பாடலைப் பாடியவர் உங்கள் சிவா என்று போடுவார்கள், படத்தில், சில நொடிகளுக்குப் பின் அடுத்த வரி வருகிறது, என்று அவர் போடச் சொன்னதால் போடுகிறோம்.

சந்தானம் நடிச்சிருக்கலாமோன்னு சில இடங்களில் தோணினாலும் அவரோட நக்கலான உடல் மொழியும் குரலும் அதைக் கெடுத்துவிடும் என்றும் தோன்றியது. படத்தில் அங்கங்கே கொஞ்சம் லொள்ளு சபா வாசனை அடித்தாலும், ஒவ்வொரு காட்சியையும் முடிக்கும் விதத்தில் சிரிப்பில் கண்களில் நீர் நிறைகிறது.

முதல் முதலாய் பார்க்கும் மகன், தந்தையின் உரையாடல்
அப்பா : மெட்ராசில என்ன பண்ற
சிவா : நான் பெரிய தளபதியா, ஸ்டாரா ஆயிட்டேன்,
அப்பா : இதுக்கு தான் அப்பவே சொன்னேன், கள்ளிப்பால் கொடுத்து கொன்னுடலாம்னு

சிவாவின் கல்லூரி நண்பர்களாய் வரும், வெ..மூர்த்தியும், பாஸ்கரும், மனோபாலாவும், ஒவ்வொரு காட்சியிலும், மச்சான், மச்சி என்று அழைத்துக் கொள்ளும்போது, சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
சமீபகாலத்து படங்களை கொத்துக்கறி போட்டவர்கள், ஏனோ சிவாஜி, எம்ஜியாரை விட்டுவிட்டார்கள். நாயகன், மவுன ராகம் தவிர்த்து எல்லாமே, கடந்த பதினைந்து ஆண்டுகளில் வந்த படங்கள் தான். இவ்வளவு பெரிய தயாரிப்பாளர் இருக்கும் போது, இன்னும் கொஞ்சம் காரம் தூவியிருக்கலாம் என்றும் தோன்றியது.

சுவாரஸ்யமான காட்சிகள் பற்றி அதிகம் சொல்ல ஆரம்பித்தால் முழுத் திரைக்கதையையும் சொல்ல வேண்டிவரும் என்பதால்கடைசியாக ஒன்றே ஒன்று, இவர்களிடம் ஆற்காடு வீராசாமியும் தப்பவில்லை (காட்சி எது என்பதை படம் பார்த்துக் கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்)

முக்கிய குறிப்பு
படம் பார்க்க தனியாக செல்ல வேண்டாம், சிரித்து வயிற்று வலி வந்தால் மருத்துவமனைக்கு கூட்டிச் செல்லக்கூடிய தக்க நண்பர்கள் துணையுடன் படத்தை பார்க்கவும்

பின்குறிப்பு
இதுவரை சினிமா விமர்சனம் எழுதிப் பழக்கம் இல்லை, எனவே கொஞ்சம் முன்னே பின்னே இருந்தால் பொறுத்துக்கொள்ளவும்.

கடைசிக் காட்சி : படம் முடிந்து வரும்போது நண்பன் கேட்டான், இதுக்கு அப்புறமும் தல,தளபதி எல்லாம்  இப்படி படம் எடுப்பாங்கன்னு நினைக்கிறியா? நான் கேட்டேன், எடுத்தால் நீ போய் முதல் நாள் முதல் காட்சி பார்க்காமல் இருக்கப்போறியா?

நன்றி
சங்கர்

Friday, January 29, 2010

கோவா - பால்கோவா வா??

கோவா - பால்கோவா வா??


இரண்டு வெற்றி படங்களுக்கு பிறகு வெங்கட் பிரபுவின்
மூன்றாவது படைப்பு கோவா.யுவனுக்கு முன்னாடி இளைய
இசைஞானி என்று அறிமுகத்தோடு படம் கிராமத்தில்
தொடங்குகிறது.





பல கிராம படத்தில் பார்த்த பஞ்சயாத்து காட்சியை நக்கல்
செய்து இருக்கிறார்கள்.குறிப்பாக அந்த ஆனந்த்ராஜ்
பிளாஷ்பேக் செம நக்கல் அதுக்கு அடுத்து பிரேம்ஜியின்
பிறப்பு பற்றி கூறுவது செம....விஜயகுமார்,சந்திரசேகர்
சண்முக சுந்தரம் எல்லோருமே சீரியஸ்ஆக காமெடியா
நடிச்சு இருக்காங்க.



ஜெய்,வைபவ்,பிரேம்ஜி மூணு சுப்ஜெக்ட் ஹீரோ என்றாலும்,
படத்தை தனித்து ஆளுவது பிரேம்ஜி தான்.அவருக்கு ஒரு
பைட் வேற இருக்கு அதில் வேட்டைக்காரன் படத்தில் விஜய்க்கு
காப்பு ஏறுவது போல் இவருக்கும் ஏறும்.பிரேம்ஜி ஒவ்வொரு
தடவையும் அந்த இங்கிலீஷ்காரியை பார்த்து கண்கள் இரண்டால்
பாட்டுக்கு தலையாட்டுவது பல தடவை சிரிப்பு வந்தாலும்
சில நேரங்களில் அலுப்பு வருகிறது.

ஜெய், ஓட்டை இங்கிலீஷ் வைத்து கொண்டு மனுஷன்
சலம்பி இருக்கிறார். exampel : u believeO notO......,
two coffee one no sugar one yes sugar....,அப்புறம் முக்கியமா
பிரேம்ஜி கண்ணை சாமி குத்தியிடுச்சு என்று வைபவ்விடம்
சொல்லும் காட்சி சூப்பர்.வைபவ், இந்த படத்தில் இவர்
மூஞ்சில் லைட் அடிச்சா பழைய பாட்டு.தன் பங்கை
கரெக்ட்ஆக செய்து இருக்கிறார்.ஆனா இவருக்கு கொஞ்சம்
வாய்ப்பு கம்மி.

சம்பத் குமார், இதுவரை நடிக்காத ஒரு வேடம் நமக்கும்
புதுசு.தொண்டை கிழியே கத்தியே இவரை பார்த்த நமக்கு
இதில் ஒரு அட்டு கேரக்டர்இல் வருகிறார்.அரவிந்த்,சிக்ஸ்
பேக் உடன் சுத்திகொண்டு இருக்கிறார் இவர் தான் வில்லன்
என்று பார்த்தால் இவரும் சம்பத்தும்....ஐயோ சொல்லவே
கூச்சமா இருக்குங்க.....!நைஸ் ஜாப் அரவிந்த்.

பியா, சின்ன பொண்ணுன்னு பார்த்தா முக்காவாசி பாதி
டவுசரில் தான் பொண்ணு வருது, கிஸ் அடிக்குது....
நல்ல முன்னேற்றம் நடிப்பில் தான்!!சிநேகா, கடைசில
வராங்க வைபவ் ஏதோ கதை சொல்றாரு.
சிநேகா அவங்ககிட்ட உள்ள திறமையை காட்டுறாங்க.

வெங்கட் பிரபு சின்ன சின்ன விஷயம் கூட சூப்பர்ஆ பண்ணியிருக்கார்.குறிப்பா சொல்லணும்னா ஒரு காட்சியில்
பியா ஒரு பார்ட்டி மேடையில் இங்கிலீஷ் பாட்டு பாடிட்டு
இருக்கும் அப்போ கிழே நம்ம பிரேம்ஜியின் வெள்ளைக்கார
காதலி அவள் நண்பர்களுடன் இங்கிலீஷ்இல் பேசுவாள்...
அப்போ தீடிர்னு கொஞ்சம் ரீவைண்ட் பண்ணி மேடையில்
பியா ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடல் பாடுவது
மாதிரியும் கிழே வெள்ளைக்காரிகள் தமிழில் பேசுவார்கள்.

பல விஷயங்கள் இருந்தும் படத்தில் சில இடங்களில் தேக்கம்
காணப்படுகிறது.முதல் பாதி கலகலப்பு என்றாலும் அதிலும்
சில காட்சிகள் போர் அடிக்கிறது.பின் பாதியில் பல காட்சிகளில்
போர் அடிக்கிறது என்பது உண்மை.வெங்கட் சில காட்சிகளை
சீரியஸ்ஆக எடுதுட்டாரோ......முக்கியமா பிரேம்ஜியின்
வெள்ளைக்கார காதலி,சம்பத் அரவிந்த்,ஜெய் பியா பேசும்
காட்சிகள் அலுப்பு தட்டுகிறது.அப்புறம் சின்ன எரிச்சல் அந்த
கோவா தீம் மியூசிக் அடிக்கடி போட்டு நாங்க மலேசியாவில்
இல்ல கோவாவில் இருக்கோம்னு சொல்ற மாதிரி இருந்துச்சு.

படத்தில் சீரியல் நடிகர் ஒருத்தர் பல காட்சிகளில் பல
தோற்றங்களில் வருகிறார்...ஏன்னு காரணம் சொல்லி
இருந்தா நல்ல இருந்துருக்கும்,கடைசி வரைக்கும் சொன்ன
மாதிரி தெரியல.முக்கியமா அந்த சிநேகா வைபவ் காட்சிகள்
சுத்தம்....செம போர்...அந்த பாடல் காட்சி கிட்டத்தட்ட
ரெண்டாவது இன்டெர்வல் மாதிரித்தான்.....


கடைசியில் கொஞ்சம் டைம் பாஸ் ஆச்சு காரணம் கடைசியில் வரும் முக்கிய ஸ்டார்கள்.அவுங்க யார்லாம்னு சொல்லவேணாம்னு நினைக்கிறேன்.....கடைசியில் பேர் போடும் முன் தியேட்டரை விட்டு போய் விட வேண்டாம்...... அது தான் அவுங்க ரெண்டாவது பாதிக்கு போட்ட மொக்கைக்கு ஆறுதல் தரும்
விஷயம் என்பது குறிப்பிடதக்கது.


தியேட்டர் நொறுக்ஸ்:

# முதல் இன்டர்வலில் காண்டீனில் பப்ஸ் வரவில்லை....
சரி சிநேகா வைபவ் பாட்டு ஒரு மினி இன்டெர்வல் தான்.
ஆனா அப்போவும் பப்ஸ் வரல....என்ன கொடுமை சார் இது!!

# மினி இன்டெர்வல்லின் போது டாய்லட் வந்த மூன்று நண்பர்கள்..

"டேய் தமிழ் படத்துக்கு போலாம்னு சொன்னேன் கேட்டிங்களா?"
என்றான் ஒருவன்,,,,

"ஏன் இதுவும் தமிழ் படம்தானே..." என்று மரண மொக்கை
போட்டான்.....

அடேய் உள்ள தான் மொக்கை தாங்கல டாய்லட் கூட நிம்மதியா போக விட மாற்றங்களே என்று மீண்டும் படம் பார்க்க சென்றேன்......


ஜெட்லி பஞ்ச்:

கோவா - சர்க்கரை இல்லாத பால்"கோவா"!!

இந்த விமர்சனம் எல்லோரையும் சென்று அடைய ஒட்டு மற்றும்
பின்னூட்டங்கள் போடுமாறு கேட்டு கொள்கிறேன்.....

உங்கள்


ஜெட்லி......
நன்றி: indiaglitz

Monday, January 25, 2010

ஜெட்லி வழங்கும் பொது அறிவு செய்திகள்

ஜெட்லி வழங்கும் பொது அறிவு செய்திகள் (25.1.10)

*************************************************
டிஸ்கி:

ஒரு வேளை நீங்கள் இதை படித்து முகம் சுளித்தால்,
நான் பொறுப்பல்ல...நான் படித்த காலை நாளிதழ்களில்
வந்த செய்திகள் இவை....விஜய் மேட்டர் தவிர!!
நீல கலர் எழுத்து மட்டும் என் கைவண்ணம்.....

***********************************************

முக்கிய அ(பி)ட்டு செய்திகள்:


அரை நிர்வாணமாக நடித்த கொல்கத்தா அழகி பரப்பரப்பு பேட்டி:



அந்தரங்கம் என்ற படத்தில் புதிதாக அறிமுகமாகும் கொல்கத்தா
அழகி கமலிகா ஒரு காட்சியில் துணிச்சலுடன் அரை நிர்வாணமாக
நடித்துள்ளார்....

(முழு படத்தை போட்டால் என்னை போன்ற சின்ன பசங்க
கெட்டு விடுவார்கள் என்ற காரணத்தால் எடிட் செய்யப்பட்ட
படம் கிழே.... முழு படத்தில் சொல்ற மாதிரி ஒன்னும் பெரிசா
எதுவும் இல்லை என்பது வேறு விஷயம்!!)




இதை பற்றி நடிகை கூறியது....

"கதைக்கு தேவைனு தான் அரை நிர்வாணமா நடிக்க
ஒத்துகிட்டேன்,படத்தில் 2 வினாடிகள் மட்டுமே இந்த
காட்சி வரும்.இயல்பாகவே நான் துணிச்சல் மிகுந்த பெண்,
அரை நிர்வாணமாக நடித்ததற்கு நான் வெட்கப்படவில்லை.
அதே சமயம்,எத்தனை கோடி கொடுத்தாலும் முழு
நிர்வாணமாக நடிக்க மாட்டேன்" என்று அவர் கூறியது
நெஞ்சை நெகிழ வைத்தது.

"நமது எதிர்ப்பார்ப்பெல்லாம் அரை நிர்வாணமாக துணிச்சலாக
நடித்த கமலிகாவுக்கு இந்த வருடம் ஏதும் வீர் சக்ரா விருது
கிடைக்குமா என்பது தான்"...

ஜெட்லி செய்திகளுக்காக வடபழனி முட்டு சந்திலிருந்து இருந்து உங்கள் கட்டிங் குமார்.......


*******************************************
பொது அறிவு கேள்வி:

சமீபத்தில் மதுரவாயிலில் உள்ள எம்.ஜி.ஆர் பல்கலைகழகத்தின்
அங்கீகாரத்தை ரத்து செய்வதாக செய்தி வந்தது, உங்களுக்கு
தெரிந்ததே.......


இதான் கேள்வி,

அப்போ அங்க டாக்டர் பட்டம் வாங்குன நம்ம இளையதளபதி
விஜய் இப்போ டாக்டரா
??

A.ஆம்


B.இல்லை

உங்கள் பதிலை யாருக்கு வேணும்னாலும் அனுப்புங்கள்,
சத்தியமா எந்த பரிசும் தர மாட்டோம்.(சங்கம் கடன்ல
போதுங்க!!)

**********************************************
விளம்பர இடைவேளை:

நெப்போலியன் குடி மட்டை ஆவு மப்பு போட்டி ஆரம்பம்....


நீங்க ரெடியா...நீங்கள் செய்ய வேண்டியது இது மட்டும் தான்,எங்க நெப்போலியன் கலாட்டா குழு உங்கள் வீட்டுக்கு வரும்போது நீங்கள் நெப்போலியன் குடித்து மட்டையாகி இருந்தீர்கள் என்றால் உங்களுக்கு சிறப்பு பரிசு காத்திருக்கிறது.....
(குறிப்பு: நெப்போலியன் காலி பாட்டில் அருகில் இருக்க வேண்டும்).


**********************************************

பி(அ)ட்டு செய்திகள் தொடர்கிறது........

செக்ஸ் அர்ச்சகர் தேவநாதனின் கதை படமாகிறது:

கோவில் கருவறைக்குள் பெண்களை மயக்கி உல்லாசம்
அனுபவித்த அர்ச்சகர் தேவநாதனின் கதையை மையமாக
வைத்து ஒரு இயக்குனர் படம் எடுக்கிறார்.

இது குறித்து இயக்குனரிடம் கேட்டதற்கு

"நான் எடுக்கும் படத்தில் அர்ச்சகர் பாத்திரம் தான் ஹீரோ,
ஆனால் நான் தேவநாதனின் கதையை எடுக்க வில்லை".

இதை பற்றி ஒரு குடிமகனிடம் கேட்டதற்கு
"தேவநாதன் எடுத்த வீடியோ காட்சி அவ்வளவு தெளிவு இல்லை
அதனால இந்த இயக்குனர் எடுக்கும் படமாவது நல்லா தெளிவா
இருக்கானு பார்ப்போம்"...என்று ஏக்க பெருமூச்சு விட்டார்......

ஜெட்லி செய்திகளுக்காக மணலி டாஸ்மாக் பார் டாய்லட் பக்கத்தில் இருந்து அதே ஏக்கத்தோடு குவாட்டர் கோவிந்தன்.

**********************************
சிறப்பு பார்வை :

மனிஷா கொய்ராலா அவர்கள் மாப்பிள்ளை படத்தில்
தனுஷின் மாமியாராக நடிக்கிறாராம் அது குறித்து
சிறப்பு பார்வை(சாதாரண கண்ணில் பார்த்ததுதான்!!)

மும்பை படவுலகை சுமார் இருபது வருடங்கள் முன்
கலக்கிய மனிஷா அவர்கள் நம் தமிழ் திரையுலகில்
இந்தியன் படத்தில் அளவில்லா திறமை காட்டி
நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே பதினோரு வருடங்கள் முன் நடித்த முதல்வன்
படத்திலேயே மனிஷா அவர்கள் கிழவி போல் இருப்பதாக
சர்ச்சை கிளம்பியது பின் பாபாவில் அது உறுதியானது
என்றால் அது மிகையல்ல.இப்போது அவர் தனுசின்
மாமியராக நடிப்பது எந்த அளவுக்கு செட் ஆகும் என்று
மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.....

மனிஷா கிழவியா இல்ல மாமியாரா என்று பொறுத்திருந்து
பார்ப்போம்!!!.

********************************************

இது போல் நாட்டுக்கு தேவையில்லாத அட்டு செய்திகளை
உங்களுக்கு பிந்தி தருவது.......


உங்கள்

ஜெட்லி....


மேலும் உங்கள் பொது அறிவு வளர பின்னூட்டத்தை போட்டும்
ஒட்டு போட்டும் ஆதரவை தெரிவிக்குமாறு கேட்டு கொள்கிறோம்.

Saturday, January 23, 2010

புத்தக வாசனை - கானல் தெரு

"நட்புக்கும், காதலுக்கும் நடுவுல இருக்கிறது சின்னக் கோடுதான்"


"கவர்ச்சிக்கும், ஆபாசத்துக்கும் இடையில இருக்கிறது சின்ன இடைவெளி தான்"


இதெல்லாம் தமிழ் சினிமாவிலும், பிரபலங்களின் பேட்டிகளிலும் கேட்கக் கிடைக்கும் புளித்துப்போன வாக்கியங்கள், என நீங்கள் கூறுவது காதில் விழுகிறது. ஆனால், கவிதைக்கும் உரைநடைக்கும் இடைப்பட்ட கோட்டில் பயணிக்கும் எழுத்து எப்படி இருக்கும் என அறிய ஆசையா? உங்களுக்காகவே இதோ க.சீ. சிவக்குமார்.




இரண்டாயிரத்தின் இறுதியில் கல்கியில் வெளிவந்த குறுநாவல் கானல் தெரு. பொன்னியின் செல்வனை பத்மவாசனின் படங்களுடன் சேகரிப்பதில் மும்மரமாக இருந்த நான், கானல் தெருவைக்  கவனிக்காமலேயே கடந்து வந்து வந்துவிட்டேன். ஆனாலும் தொடராய் வந்த எதையும், விடாமல் சேர்த்து வைத்தால், அடுத்து வந்த பள்ளியிறுதிக் கோடை விடுமுறையில் கானல் தெருவில் அடியெடுத்து வைத்தேன், இன்று வரை வெளியே வர இயலவில்லை.

கிராமமும் நகரமும் அல்லாத ஓர் ஊரில், பள்ளியிறுதி வகுப்பில் படிக்கும் சிலரின் வாழ்வில் வரும் நட்பும், எதிர் பால் ஈர்ப்பும் அதை சுற்றிச் சுழலும் சம்பவங்களும் தான் கதை. கேட்பதற்கு புதிதாய் ஏதுமில்லாதது போல் தோன்றும் இந்த கதையை இன்றளவும் மறக்க முடியாத படி செய்தது, சிவகுமாரின் கவிதையொத்த நடையும், எழுத்தில் எப்போதும் விரவிக் கிடக்கும் நகைச்சுவைதான்.


உதாரணமாக சில வரிகள்,


"நூலகம், பன்னீராயிரம் புத்தகங்களும், அதற்குத் துணையாக நூலகரும் உறங்கிக்கொண்டிருந்தன"


"ஸ்கூல் மைதானத்தின் விளிம்புகளில் வேப்பங்கன்றுகள் நடப்பட்டன. மந்திரிகள் யாரும் மரம் நடும் வைபவத்தைத் துவக்கி வைக்கவில்லையாதலால் அவை மகிழ்வுடன் வளர்ந்தன"


"வருடம் தவறாமல் இலக்கிய மன்ற நிறைவு விழாவுக்கு மறுதினம் 'ஆன்யுவல் ஸ்போர்ட்ஸ் டே கொண்டாடப்பட்டது. இதை 'ஆண்டிறுதி உடற்றிறப் போட்டி' என தமிழ் நோட்டீஸ் அறிவித்தது. இதன் தொடர்ந்த வல்லின உச்சரிப்பு பற்களின் உறுதிக்கு பலமான பயிற்சி"


"வெளியூர் ஒற்றையர்களை அடித்து நொறுக்குவதற்குப் பள்ளிக்கூடத்திற்கு பக்கத்தில் காலி மனை ஒன்று இருக்கிறது. அந்தத் தொடக்கப் பள்ளியில் காலையில் குழந்தைகள் 'இந்தியர் அனைவரும் சகோதரர்' என உறுதி அளித்தனர்".

கதையின் சுருக்கத்தைச் சொல்லும் நான்கு வரிகள்,


" 'அனிதா-பார்த்திபன் காதல்',

சுவரில், கரியால் பன்னிரண்டு எழுத்துக்கள்,
ஒரு பெண் பள்ளி மாறுகிறாள்,
தமிழ் வலிமையான மொழி தான்"


என்னால் என்றும் மறக்க முடியாததாய் தோன்றும் இந்தப் புத்தகத்தில், மாணவர்களின் நண்பனாய் பழகும் உடற்பயிற்சி ஆசிரியர் ரவியும், காதல் கடிதங்களும் உதட்டோரம் பூக்கும் சிறு சிறு புன்னகைகளுடன், உங்கள் பள்ளிக்கால நினைவுகளை உயிர்ப்பிக்கலாம்.


கானல் தெரு
சந்தியா பதிப்பகம்
எண் 57, 53ஆவது தெரு, 9வது அவென்யூ
அசோக் நகர்,சென்னை - 83

விலை 50


பின்குறிப்பு:


வாசிப்பு என்பது என்னைப் பொறுத்தவரை பூ வாசனையைப் போல், மனம் விரும்பும் பண்டத்தின் ருசி போன்றதொரு உணர்வு தான். உணர்வை வார்த்தைகளாய் வெளிப்படுத்துவது ஏறக்குறைய இயலாத விஷயம், என்றாலும் முடிந்த அளவு முயற்சிக்கிறேன்.

நன்றி
சங்கர்

Wednesday, January 20, 2010

பொங்கல் டாப் படம் எது???

பொங்கல் டாப் படம் எது???

பின்வரும் தரவரிசை என் மனதுக்கு பிடித்தவை மட்டுமே...

4. குட்டி:

இந்த படத்தை பார்த்துட்டு வந்து எனக்கு விமர்சனம்
எழுதுவே தோணல காரணம் படத்தில் ஒரு சீன் கூட எனக்கு
வீட்டுக்கு வந்தவுடன் நினைவுக்கு வரவில்லை.கடைசி அரை
மணி நேரம் எழுந்து வந்துவிடலாம் என்று நினைத்தேன்....
ஆனால் சகிப்பு தன்மை வளர முழு படத்தையும் கண்டேன்
என்பது குறிப்பிடத்தக்கது.



3. போர்க்களம்:




வித்தியாசமான ஷாட்ஸ்,கிஷோர் நடிப்பு
மற்றும் பிஜு மேனனின் அலட்டல் இல்லாத நடிப்பு இருந்தும்
படம் தொய்வு காரணமாக பிடிக்கவில்லை......


2. நாணயம்:

முதலில் கொஞ்சம் மெதுவாக ஸ்டார்ட் ஆனாலும்
நல்ல டைம் பாஸ் படம்....பிரசன்னா வழக்கம் போல் நன்றாகவே
பண்ணியிருந்தார்....கடைசியில் ஏகப்பட்ட ட்விஸ்ட்...

1. ஆயிரத்தில் ஒருவன்:

படத்தை பத்தி எவ்ளோ கேள்விகள்....
படத்தை பார்த்து நல்லா இருக்கு என்று சொன்னால் இன்னும்
பல கேள்விகள்....எப்பா...எப்பவுமே நல்லா இல்லைன்னு சொன்னா
தான் கேள்வி வரும் ஆனா ஆயிரத்தில் ஒருவனுக்கு viceversa
ஆகிவிட்டது.....


பல பேர் சொன்னது மாதிரியே படத்தில் லாஜிக் ஓட்டைகள்
அதிகமாகவே இருக்கின்றன....இரண்டாவது பாதியில் என்ன
சொல்ல வருகிறார்கள் என்று கேள்வியும் எழாமல் இல்லை...
ஆனால் நான் படம் பார்க்கும் போது அதையெல்லாம்
பார்க்கவில்லை...எனக்கு நல்ல டைம் பாஸ் ஆச்சு..அவ்ளோ தான்.


மீண்டும் நான் ஆயிரத்தில் ஒருவனை திங்களன்று இரண்டாவது முறையாக பார்த்தேன்.காரணம் முதல் பாதிக்காக கண்டிப்பாக ஒரு தடவை பார்க்க வேண்டும் என்று முதல் தடவை இடைவெளியில் முடிவு செய்து விட்டேன்..........

பின்பு subtitle வருது என்று யாரோ கிளப்பி விட்டதால், எனக்குள்
ஒரு பயம் என்ன கொடுமை இது!! தமிழ் படத்துக்கு subtitleலா
என்று கோபம்....ஆனால் அப்படி எதுவும் இல்லை......!!

இந்த தடவை பார்க்கும் போதும் முதல் பாதி சலிக்கவில்லை.
ஆனால் இரண்டாவது பாதியில் சில காட்சிகளை எடுத்து
இருந்தனர்.முக்கியமாக அந்த கிழவர் சொல்லும் வாக்கியம்
"தஞ்சை சென்றதும் இந்த அடியோனை நினையிங்கோ"
என்பாரே அது இல்லாதது வருத்தமே......இந்த தடவை பார்க்கும்
போதும் ரீமாவின் துரோகம் தாங்காமல் பார்த்திபன் அழுது
கொண்டே வரும் காட்சி நெகிழ வைத்தது....

நான் திரும்பவும் சொல்றேன் படத்தில் லாஜிக் ஓட்டை இருக்கு...
ஆனா இந்த களம் தமிழ் சினிமாவுக்கு புதுசு......
நான் உங்களை ஆயிரத்தில் ஒருவனையோ செல்வராகவனையோ
கொண்டாடுங்கள் என்று சொல்லவில்லை, புறக்கணிக்க வேண்டாம்
என்று தான் சொல்கிறேன்........

பின்னூட்டத்தில் ஏதோ பிரச்சனை
இருப்பதாக நண்பர்கள் கூறினார்கள்....
உங்கள் கருத்தை மெயில்க்கு அனுப்பவும்
jetliidli@gmail.com

இப்படிக்கு
தமிழ் சினிமா ரசிகன்.
(ஜெட்லி)

Friday, January 15, 2010

போர்க்களம் vs நாணயம் - விமர்சனம்

போர்க்களம் vs நாணயம்

இன்னைக்கு ப்ரீயா இருந்ததால் ரெண்டு படம் பார்க்கனும்னு
முடிவு பண்ணி முதலில் போர்க்களம் பார்ப்போம் என்று சங்கம்
நோக்கி வண்டி விரைந்தது.போர்க்களத்தை நான் கிஷோருக்காக
ஓரளவு எதிர்ப்பார்த்தேன்.ஆனா போர்க்களம் என்னை ரணகளம்
ஆக்கிவிட்டது...கிட்டதட்ட இருபது தடவை கொட்டாவி விட்டது
தான் மிச்சம்.





படத்தில் என்ன புதுசு என்றால் மேகிங் எனலாம் அப்புறம் கேமரா
ஷாட்ஸ், எடுத்த விதம் நன்று, ஆனால் போக போக அதுவே பல
கொட்டாவி வர காரணம் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தில் யாரு ஹீரோனே தெரியல ஆமா கிஷோரை விட
அவர் ஜீப்பை பல முறை பல கோணத்தில் காட்டுகிறார்கள்.
கதாநாயகி கிட்ட பெரிசா ஒன்னும் இல்லைன்னு சொல்ல
முடியாது,ரெண்டு விஷயம் இருக்கு.அதாவது வருகிறார்,
அழுகிறார் என்பதை சொன்னேன். சத்யன் தன் பங்கை
கச்சிதமாக செய்து இருக்கிறார்....



இன்டெர்வல் ப்ளாக்கில் ட்விஸ்ட் என்று மரண மொக்கை
போடுகிறார்கள்...ஏன்னா அந்த ட்விஸ்ட் படம் ஸ்டார்டிங்லே
அழகாய் தெரிந்து விடும்(நான் எழுதிய சபலம் கதை போல!).
அலுப்பூட்டும் படத்தில் நிறைய உள்ளன குறிப்பாய் ஜீப்
அல்லது காரை அடிக்கடி முன் பக்கம் காட்டுவது,அப்புறம்
சம்பத்தின் வீட்டை காட்டும் போது அந்த சிலையை காட்டி
நரி ஊளையிடவது என்று தலைவலி காட்சிகள் நிறைய....

ஜெட்லி டவுட்:

ஆமாம், அது ஏன் கதாநாயகியை வில்லன் கிட்ட இருந்து
காப்பாத்தும் போது குறிப்பா மார்க்கெட்டில் மழை வருது????


சரி படத்தை ஒரு சில வரிகளில் நம் நடிகர்கள் பேசிய டயலாக்
மாதிரி சொன்ன எப்படி இருக்குனு பார்ப்போம்....

பொல்லாதவன் தனுஷ்:

5,10 வில்லன் இருக்காங்கனு சொன்னங்க.ஏதோ புதுசா
எடுக்கரங்கினு சொன்னங்க....இங்க வந்தா எல்லோரும்
காமெடி பண்ணினு இருக்காங்க...மரியாதையா என்
75 ரூபாவை கொடுங்க...

வடிவேலு:

ஸ்ஸப்பா....படம் ஆரம்பிச்ச உடனே கண்ணை கட்டுதே...

மாதவன்:

படம் நல்லா இல்லைன்னு சொல்லல ...
ஆனா ஏதாவது நடந்துடுமோனு பயமா இருக்கு!!

கவுண்டமணி,செந்தில்.

கவுண்டமணி:டேய் தம்பி படத்தை பத்தி மக்கள் கிட்ட ஒரு
சவுண்ட்ல சொல்லுடா??

செந்தில்: ஊஊ... ஊஊ....

****************************************************************
நாணயம்:


நாணயம், ஒரு பேங்க் ராப்பரி படம்...ஓரளவுக்கு போர் அடிக்காம
போச்சு...சிபிராஜ் வழக்கம் போல் பாடி லாங்வெஜ் என்றால்
கிலோ என்ன விலை என்று கேட்டவாரே அவரின் அப்பாவின்
வாய்ஸ் மாடுலேசன்,லொள்ளு மூலம் தன்னை காப்பாற்றி
கொண்டார் என்றே சொல்லவேண்டும்.,

பிரசன்னா, தன் பங்கை பக்காவாக செய்து இருக்கிறார்.
ரம்யா அக்கா வராங்க உடனே ரெண்டு பேரும் லவ் ஆவுது.
அப்புறம் சிபி ரம்யாவை கடத்துகிறார்...ட்விஸ்ட் சொல்றன்னு
தப்பா நினைச்சுக்காதிங்க, நாம எத்தனை தமிழ் சினிமா பார்க்குறோம் ..கடைசியில் பார்த்த ரம்யாவும் சிபியின் ஆள்
என்று எதிர்ப்பார்த்த மாதிரியே நடக்கிறது.என்ன இதில் ட்விஸ்ட்
தெரிய வரும் போது ரம்யா நீச்சல் உடையில் வருவார்,பெரிதாக
எதுவும் தெரியவில்லை என்றாலும் (குறையை தான் சொல்றேன்)
ரம்யா தன் பங்கை சிறப்பாகவே செய்து இருக்கிறார்.

படத்தில் வேற ஒரு பெரிய ட்விஸ்ட்டும் இருக்குது அதை
சொல்ல மாட்டேன்.படத்துக்கு ஏன் நாணயம்னு பேர் வச்சாங்கனு
தெரியல யாருமே படத்தில் நாணயமா இல்லை பேசாம ட்விஸ்ட்
அப்படின்னு பேர் வச்சி இருக்கலாம்.மற்றபடி கடைசி ட்விஸ்ட்
நம்பும்படி இல்லை இவரா இப்படி என்று சிரிப்பு தான் வருகிறது.
எப்போதும் போல் கடைசி காட்சியில் போலீஸ் வருகிறது.
ரம்யாவை விட பிரசன்னா பி.ஏ வாக வரும் பெண் நன்றாகவே
இருக்கிறார்....

என்ன கொடுமை சரவணா இது (EKSI) கார்னர்:

சிபிராஜ்,அவளோ பெரிய டலேன்ட்னு சொல்றாங்க ஆனா
பாருங்க தூப்பாக்கியில் தோட்டா இல்லாமா ஒரு நாள்
புல்லா சுத்திட்டு இருந்துருக்காரு!!


ஜெட்லி பஞ்ச்:

போர்க்களம் - ரணகளம் ஆக்கிடுச்சு(என்னை சொன்னேன்!!).

நாணயம் - புதுசா வந்த அஞ்சு ருபாய் நாணயம் மாதிரி,சில
காட்சிகளில் அம்பது காசு மாதிரியும் தெரியும்!!!

இந்த விமர்சனம் பல பேரை சென்று அடைய ஒட்டு போடுங்கள்...
கண்டிப்பா பின்னூட்டமும் போடவும்...நீங்களும் படம் பார்த்து
இருந்த ஷேர் பண்ணிக்கிங்க.....

நன்றி: INDIAGLITZ

உங்கள்
ஜெட்லி சரண்.

Thursday, January 14, 2010

ஆயிரத்தில் ஒருவன் - விமர்சனம்

ஆயிரத்தில் ஒருவன் - விமர்சனம்

ஆயிரத்தில் ஒருவனை காலையில் எட்டு மணி ஸ்பெஷல் ஷோவில் ஆல்பர்ட் தியேட்டரில் பார்த்தேன்.சில மாதங்கள் ஆகவே பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட படம்.காலையில் சாப்பிட்ட ரத்னா கபே பொங்கலும் சரி படத்தின் முதல் பாதியும் சரி தாறுமாறாக இருந்தது.கண்டிப்பா ஆயிரத்தில் ஒருவன் தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான படம் என்று அடித்து கூறலாம்.





சோழர்களின் வம்சத்தை தேடி போகும் பயணம் தான் கதை. கார்த்தியின் அறிமுக காட்சியில் கையில் பீர் பாட்டிலுடன் அவர் அடிக்கும் ரவுசுக்கு அளவே இல்லை.அதே போல் காட்டுவாசிகள் தாக்கும் காட்சியில் அவர் போய் சண்டைபோடும் போது கிரேன் மனோகர் கார்த்தி மேல் விழுந்து காப்பற்றும் காட்சியில் கார்த்தி பார்வையாலேயே கலக்கி இருக்கிறார்.படத்தின் முதல் பாதியில் கார்த்தி தான் ராஜா...சும்மா மனிதர் வுடுக்கட்டி பூந்து விளையாடுகிறார்.கார்த்தியை பற்றி சொல்லி கொண்டே போகலாம்.கார்த்தியின் உழைப்பு படத்தில் நன்றாகவே தெரிகிறது.


ரீமாவை தவிர இந்த கதையில் அவரின் கதாப்பாத்திரத்தை யாராலும் ஈடுகட்டமுடியாது என்று நிருபித்துள்ளார்.காட்டுவாசிகளை பயப்படாமல் சுடும் காட்சி ஆகட்டும்.கார்த்தியை மிரட்டும் காட்சியில் ஆகட்டும், பார்த்திபனோடு டான்ஸ் ஆடும் காட்சியில் ஆகட்டும்...இன்னும் நெறைய இருக்கு.இந்த படத்தில் ரீமா அவர்கள் அளவுக்கு அதிகமாகவே திறமை காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.. ரீமா ராக்ஸ்.

முதல் காட்சியில் ஒருத்தரை காட்டுவாங்க...நான் உட்ப்பட சில
பேர் இவர் தான் பார்த்திபன் என்று நினைத்தோம்.பின்பு தான்
இடைவேளைக்கு பின் பார்த்திபன் தர்பார் ஆரம்பம்.அவரின்
அறிமுக காட்சி சூப்பர்,பின்பு ரீமாவோடு டான்ஸ் காட்சி
கொஞ்சம் அலுப்பு தட்டுகிறது.ரீமா செய்த துரோகத்தை நினைத்து
பார்த்திபன் அழுது கொண்டே நடக்கும் காட்சி,உண்மையிலேயே
நெகிழ வைத்தது...பார்த்திபனும் கார்த்தியும் ஒன்றாக ஆடும்
காட்சி செம குத்து.

ஆண்ட்ரியாவை பற்றி சொல்ல ஒன்றும் பெரிதாக இல்லை,
அவுங்க வர பார்ட்டை சொன்னேங்க...அந்த மாலை நேர மயக்கம்
பாட்டு கூட வந்த மாதிரி நினைவில் இல்லை.அழகம் பெருமாள் தன் பங்கை கச்சிதமாக செய்துள்ளார்.

ஒளிப்பதிவு எல்லாம் சான்ஸ்ஏ இல்லை.ஒரு சில காட்சிகளில் கிராபிக்ஸ் சரி இல்லையென்றாலும் அதை பெரிதாக எடுத்து கொள்ள தேவையில்லை. பாடல்கள் ஏற்கனவே ஹிட் பின்னணி இசையும் ஓகே.


செல்வராகவன், உண்மையிலே இவரு வித்தியாசமான பிலிம் மேகர்.
படத்தின் முதலிலேயே கற்பனை கதையென்று கூறிவிடுகிறார்.
படத்தை பார்க்கும் போது இதெல்லாம் நாம் இங்கிலீஷ் படத்தில்
பார்த்த மாதிரி இருந்தாலும் எனக்கு பிரெஷ் ஆகவே இருந்தது.
படம் பார்க்கும் போது அனைவரின் உழைப்பும் நன்றாகவே
தெரிகிறது.

படத்தின் முதல் பாதி ஜெட் வேகம் இரண்டாம் பாதி கொஞ்சம்
விறுவிறுப்பு கம்மி.இரண்டாம் பாதியில் ஆங்காங்கே படம் சில இடங்களில் தொய்வு காண்கிறது என்பது மட்டும் உண்மை. லாஜிக் மீறல்கள் இருந்தாலும் குறிப்பாக ரீமா தங்கள் பகைக்காக அதிரடி படையை சோழர்களுடன் மோத விடுவது இடிக்கிறது.என்ன இருந்தாலும் தமிழ் படத்தில் இது போன்ற ஒரு
வித்தியாசமான முயற்சி, ஊக்குவியுங்கள்....தயவு செய்து படத்தை தியேட்டரில் பாருங்கள்..


தியேட்டர் நொறுக்க்ஸ்:


# இரண்டாம் பாதியில் வரும் தூயதமிழை கேட்ட பின் சீட்டு
நண்பர் "என்ன மொழி பேசுகிறார்கள்" என்று அவர் நண்பனிடம்
கேட்டதை நினைத்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.

#"ஒழுங்கா தமிழில் பேசு" என்று தூயதமிழை கேட்ட சில பேர்
கமெண்ட் செய்தனர்.

# பார்த்திபனை நியுடாக ஆண்ட்ரியா பார்ப்பது போன்று காட்சி
இருக்கும் அப்போது பார்த்தியின் வசனம் செம கிளாப்,செம கத்து
"என்னை லிங்க தரிசனம் செய்து விட்டாள்".
(இது மட்டும் நம்ம
ஆளுங்களுக்கு நல்லா புரியுது!!)


# படம் முடிந்தவுடன் வெளியே வரும் போது கருப்பு கலர் காரில்
கார்த்தி இருப்பதாக கூறினார்கள்...காரின் கருப்பு கண்ணாடி வழியாக
பார்க்க ஒரே கூட்டம்.என் அருகில் உள்ளவன் ரீமா காரின் உள்ளே இருப்பதாக கூறினான்.சரி படத்திலே ரொம்ப தெறமை காட்டி இருக்காங்களே சும்மா பாப்போம் என்று முன்னாடி இருந்தவனை "உள்ளே யாரு இருக்காங்க" என்று கேட்டதற்கு தீவிரமாக கண்ணாடி மேல் மூஞ்சை வைத்து பார்த்து கொண்டே இருந்தான்.நானும் விடா முயற்சியுடன் கொஞ்சம் நகரு நானும் பார்க்கிறேன் என்றேன்.ஹ்ம் அவன் நகர்ற மாதிரி தெரியில......எனக்கு என்ன டவுட்னா கார் உள்ளே யாரும் இருந்தாங்களா இல்லை அவன் சும்மா பார்த்தானா என்பது தான்.(ரொம்ப முக்கியம்!).


ஜெட்லி பஞ்ச்:

ஆயிரத்தில் ஒருவன் - முதல் பாதி மின்னல் இரண்டாவது பாதியில்
சில இடங்களில் இன்னல்.


இந்த விமர்சனம் பல பேரை சென்று அடைய உங்கள் ஓட்டை
குத்துங்கள்.....பின்னூட்டம் போட்டால் நன்று....

உங்கள்
ஜெட்லி சரண்.

Tuesday, January 12, 2010

புத்தகக்காட்சி நாள் 12 - (மன) நிறைவு - பதிவர்களின் காலண்டர் படங்களுடன்




 
சனிக்கிழமை பதிவர் சந்திப்பு முடிந்து, ஒன்பதரை மணிக்கு தான் கிளம்பினேன். நண்பர் ஒருவரை அவர் வீட்டில் விட்டுவிட்டு நான் வீடுவந்து சேர்ந்தபோது மணி பன்னிரண்டு. கொட்டும் பனியில் வண்டி ஓட்டிக்கொண்டு வந்ததால், காலையில் எழும்போதே தலைவலி தொடங்கி விட்டது. நிமிடத்துக்கு நிமிடம் அதிகமாகிக்கொண்டே போனாலும் நிச்சயம் புத்தகக் காட்சிக்கு சென்றே தீர வேண்டும் என்ற முடிவை எடுக்க வைத்தது, சுஜாதா புத்தகங்கள் குறித்து சொல்லியிருந்த ஜாக்கி அண்ணனின் பதிவு. ஒன்பது மணிக்கு படுக்கையிலிருந்து எழுந்து கணிணியில் அமர்ந்த நான், சந்திப்பு குறித்த பதிவை எழுதி முடித்து, எழும் போது மணி ஒன்று. குளியலை போட்டு, சாப்பிட்டுவிட்டு, ஒரு குட்டித் தூக்கத்துக்கு பின் கிளம்பிய போது மணி நான்கு.


நண்பர் குறும்பன் கடந்த வாரமே சந்திக்கலாம் என்று சொல்லியிருந்தார், தலைவலி மண்டையை பிளந்தாலும், சுஜாதாவும், மூன்றரை மணிக்கே வந்துவிட்ட குறும்பனும், மீண்டும் அழைக்க, நெற்றியில் அப்பிய மிளகுடன் கிளம்பினேன். ஐந்தே முக்காலுக்கு ஒருவழியாய் சென்று சேர்ந்தபோது, மிளகும் காய்ந்து போய் இருந்தது, தலைவலியும் விட்டிருந்தது. பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தி  ஹெல்மெட்டை கழற்றிய போது படகில் வந்திறங்கிய தீவிரவாதியைப் பார்ப்பது போல் சிலர்  பார்த்ததால், குடிக்கக் கொண்டு போயிருந்த வெந்நீரில் முகத்தைக் கழுவிக் கொண்டு உள்ளே சென்றேன்.

போகும் வழியில் கண்ணில் பட்டது (என்ன கொடுமை சார் இது)

  
ஏற்கனவே வாங்கி முடித்துவிட்ட குறும்பனுடன், மீண்டும் ஒரு உலா தொடங்கியது. நண்பர் ஒருவர் வாங்கித்தர சொல்லியிருந்த குழந்தைகளுக்கான கதைப் புத்தகங்களும், பிரபாவுக்கான சிந்தாமணியும் பட்டியலில் இருந்தது, குழந்தைகள் புத்தகங்கள் பழனியப்பாவிலும், பிரேமா பிரசுரத்திலும் கிடைத்தன, சிந்தாமணி வேட்டையில், பாரி நிலையத்தில் கொஞ்சம் ஒளி தெரிவது போல் இருந்தது, கடைசியில் கையிருப்பு இல்லை என்று, கைவிரித்து விட்டனர், அடுத்த வாரம் நேரே பதிப்பகத்தின் பாரிமுனை அலுவலகம் செல்ல உத்தேசம்.




வரும் வழியில், மாம்பலத்தில் பார்த்த கூட்டத்திற்கு சிறிதும் குறைவில்லாதது போல் தோன்றியது உள்ளே இருந்த கடைசிநாள் கூட்டம். இத்தனை நாள் இல்லாத (அல்லது தெரியாத), புழுக்கமும் வெக்கையும் உள்ளே நிலவியது. ஜாக்கி அண்ணன் சொன்ன பாரதி பதிப்பகம் தேடிச் சென்று பார்த்தபோது, மூன்றே மூன்று புத்தகங்கள் தான் மிஞ்சி இருந்தன, கண் முன்னே 'காகித சங்கிலிகளின்' கடைசி பிரதியை ஒருவர் வாங்கி செல்ல, வேடிக்கை பார்த்திருந்தேன், உஸ்மான் சாலையில் உள்ள பாரதி பதிப்பக அலுவலகத்திற்கும் படையெடுக்க உத்தேசம்.

எங்கும் கூட்டம் எதிலும் கூட்டம்


இடம் பெயர்ந்த கடற்கரை வியாபாரம்


ஐந்து ரூபாய்க்கு அருமையான இஞ்சி டீ


ஜெட்லி கேட்ட ராஜீவ் புத்தகத்தை வாங்க கிழக்கில் நுழைந்தோம், புத்தகத்தை கையில் எடுத்து பார்த்துக்கொண்டிருந்தபோது, எதிரே கவிதா பதிப்பகம் கண்ணில் பட உள்ளே நுழைந்தேன், அப்போது "பதிவர் யாராவது அலுவலகம் வரவும்" என அறிவிப்பு வந்தது, அடடா, நம்மைத்  தான் கூப்பிடுகிறார்கள் போலிருக்கிறதே என்று வேகமாய் சென்று விசாரித்த போது, அவர்கள் சொன்னது "பாஸ்கர் என்பவர் அலுவலகம் வரவும்" என்று தெரிந்தது. கடைசி நாளில் இவ்வளவு பெரிய மொக்கை  வாங்கியதால், நான் மொக்கைப் பதிவர் தான் என்பது உறுதியாகிவிட, சந்தோஷத்தோடு கிழக்குக்கு திரும்பி வந்தால், குறும்பன் புத்தகத்தை வாங்கி விட்டிருந்தார். பணம் தர முயன்றபோது அன்புப்பரிசு என்று சொல்லி வாங்க மறுத்துவிட்டார். அப்போது அங்கு மோகன் குமார் போல் ஒருவரை பார்த்ததாக குறும்பன் சொல்ல அவரிடம் சென்று கேட்டு இன்னுமொரு மொக்கை வாங்கினேன்.

இரு மேதைகளும், இன்னுமிரு மொக்கை பதிவர்களும்



தொடங்கியவரிடம் தான் முடிக்க வேண்டும் என்ற தமிழ் பட்டிமன்ற மரபை உத்தேசித்து, தமிழினியில் கல்லா கட்டிக்கொண்டிருந்த அண்ணன் சிவராமனிடம் சென்று விடை பெற்றுக்கொண்டு  கிளம்பினோம். வேறு எந்த பதிவரும் கண்ணில்படவில்லை. வெளியில் வரும்போது, காட்சி அலுவலகம் கண்ணில் பட, மூளை குறுக்கே வேளை செய்தது. "தமிழ் பதிவர்கள் யாராவது இருந்தால் அலுவலகத்திற்கு வரவும், இங்கு இரண்டு பதிவர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்" என்று அறிவிப்பு ஒன்று செய்யலாம் என எண்ணி விசாரித்தபோது, புத்தகக் காட்சி கையேடு (ரூ 100) விற்பனை குறித்த அறிவிப்பில் மூழ்கி இருந்ததால் "பதினைஞ்சு நிமிஷத்திற்கு அறிவிப்பு ஏதும் செய முடியாது" என்றார்கள். இன்னும் ஒரு மொக்கை வாங்கிய திருப்தியில் வீட்டுக்கு கிளம்பினோம்.


பதிவர்  கொண்டாட்ட மயக்கத்தில், முந்தைய பதிவில் எழுத மறந்து போன, இந்த வருட புத்தகக் காட்சிக்கான, கடைசி புத்தகப்பட்டியல்

நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம் - கி ரா - அன்னம் -  Rs 700
வேட்டி - கி ரா - அன்னம் -  Rs 60
அந்தமான் நாயக்கர் - கி ரா - அன்னம் -  Rs 50
காந்தளூர் வசந்த குமரன் கதை - சுஜாதா - பாரதி - Rs 120 
கொலையுதிர் காலம் - சுஜாதா - பாரதி - Rs  120 
பூக்குட்டி - சுஜாதா - பாரதி - Rs  15
அப்பா அன்புள்ள அப்பா - சுஜாதா - பாரதி - Rs  12 
மனைவி கிடைத்தாள் - சுஜாதா - பாரதி - Rs  18 
நைலான் கயிறு - சுஜாதா - விசா - Rs  41 
ராயர் காபி கிளப் - இரா முருகன் - கிழக்கு - Rs  65
என்னை எழுதிய தேவதைக்கு - குகன் - நாகரத்னா - Rs  55
நீளும் றெக்கை - வேல ராமமூர்த்தி - நடைபாதை - Rs  10

சென்னைக்கு குடிபெயர்ந்த இந்த ஒன்பது வருடங்களில், கடந்த ஆறு வருடமாக புத்தகக்காட்சிக்கு சென்று வருகிறேன். என்றாலும் கடந்த இரண்டு வருடங்களாகத்தான் வாங்கும் பழக்கம் அதிகரித்திருக்கிறது. வழக்கமாய் இரண்டு நாட்கள் செல்லும் நான், இந்த முறை தான் ஒன்பது நாட்கள் சென்றேன். புத்தகம் வாங்குவதை விடவும், பதிவர்களை சந்திப்பதே, இந்த விஜயங்களின் முக்கிய நோக்கமாய் இருந்தது. பதிவர்களாய் சந்தித்து, நண்பர்களாய் விடைபெற்ற ஒவ்வொரு மாலையும் மறக்க முடியாதது.

"வைபவங்கள் அனைத்தும் களைப்பில் தான் முடிவடைகின்றன". ஒவ்வொரு தீபாவளியும், பொங்கலும் முடிவுக்கு வரும்போது எனக்குள் தோன்றுவது கசீ சிவகுமாரின் 'கானல் தெரு'வில் வரும் இந்த வரிதான். இந்த மனக்களைப்பும், வெறுமையும் குறைந்தது இரண்டு நாட்களாவது நீடிக்கும். சமீபகாலமாய், கொண்டாட்டங்கள் குறைந்து போன, இந்த ஒரு நாள் பண்டிகைகள் உண்டாக்கும் தாக்கமே இரு நாள் நீடிக்குமென்றால், பன்னிரண்டு நாட்கள் பெரும் கொண்டாட்டங்களுடன் கழிந்த, இந்தத் திருவிழா ஏற்படுத்தப்போகும் தாக்கம் என்னவாயிருக்கும் என்று நினைக்கவும் முடியவில்லை.

 இடைக்கால நிவாரணம்





கீற்று அரங்கில் வாங்கிய, பாரதி காலண்டர் வழியே எடுத்த, சில படங்கள் இதோ

பலா பட்டறை சங்கர்



தண்டோரா 
















கேபிள் சங்கர்













DR அசோக் 














புத்தகக் காட்சி குறித்த பிற பதிவுகள்


 
நன்றி
சங்கர்

Monday, January 11, 2010

முன்னாள் அஜித் ரசிகனின் டைரியிலிருந்து!!

முன்னாள் அஜித் ரசிகனின் டைரியிலிருந்து!!


முதல் நாள் வேட்டைக்காரன் படத்துக்கு விமர்சனம் போட்டவுடன்
என் நண்பர்களிடம் வந்த குறுஞ்செய்தி மற்றும் அழைப்புகள் ஒன்றை
மட்டும் தான் தெரிவித்தன அது "அசல் வரட்டும்" என்ற செய்தி.
நான் இன்னும் அஜித் ரசிகனாகவே பார்க்கப்படுகிறேன் என்று
தோன்றியது.ஆமாம்,நான் அஜித் ரசிகனாக இருந்தேன் அது ராஜா
என்ற படம் வரும் வரைக்கும் என்பது தான் உண்மை.நான் அஜித் ரசிகர் மன்றங்களில் பெரிய பதவியில் இருந்தேன்.......
ஏன்?.... ஏன்?....இப்போ ஏன் இல்ல..??(என்னா பில்ட் அப்!!)

கில்மானந்தாவின் பொன்மொழி:

ஒருவன் வாழ்வில் உச்சக்கட்ட கலாய்த்தளை சந்தித்து
இருந்தால்,அவன் கண்டிப்பாக அஜித் ரசிகனாக இருந்திருக்க
வேண்டும்....(தத்துவம் நெ.6000)


நெகடிவ்...... அதாங்க பிளாஷ்பேக்.

முதல் முதலில் நான் குழந்தையாக இருக்கும் போது அஜித்தை
ரசிக்க ஆரம்பித்தது 1997 இல் காதல் மன்னன் என்ற படத்திலிருந்து தான்.(ஏங்க நாற்பது அம்பது வயசுகாரங்க நாங்க யூத்னு சொல்லும்
போது நான் குழந்தைனு சொன்ன நம்ப மாட்டிங்களா....).அதற்கு
அடுத்து 1998 இல் உன்னை தேடி படத்திலும் அவரின் ஸ்மார்ட்நெஸ்
கவர்ந்தது.நானும் எங்க அண்ணனும் ஒற்றுமையா இருந்தது அஜித்
விஷயத்தில் மட்டும் தான்.நானும் எங்க அண்ணனும் தொடரும்
என்ற மொக்கை படம் என்று தெரியமாலயே அதை பார்க்க ஒரு மணிநேரம் பயணம் செய்து கோயம்பேடு ரோஹிணியில் பார்த்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்புறம் 1999 இல் வாலி வந்தது.வாலி படத்தை வெளியான
ஒரு வாரத்தில் தேவியில் ரெண்டு முறையும் ப்ராத்தனாவில்
ஒரு தடவையும் பார்த்தேன்..இந்த கால கட்டம் தான் நான்
அஜித்தின் தீவிர விசிறியான நேரம் என்று வரலாறு சொல்கிறது.
1999 இல் அமர்க்களம் ஷூட்டிங் பெசன்ட் நகரில் நடந்தது,நான்
தினம்தோறும் பள்ளி முடித்த பின் ஷூட்டிங் பார்க்க சென்று
விடுவேன்.ஷூட்டிங்இல் அஜித்தின் கோப முகத்தையும் கண்டேன்
இருந்தாலும் நான் அந்த படத்தில் நடித்ததால் அதை பெரிதாக
எடுத்து கொள்ளவில்லை.எந்த சீனில் வருகிறேன் என்று நீங்கள்
கேட்டால் படத்தின் கிளைமாக்ஸ்இல் கும்பல் கும்பலாக ஓடும்
ஒரு காட்சியில் மங்கலாக என் மஞ்ச கலர் டி.ஷர்ட் தெரியும்!!


2000 இல் முகவரி ஓகே ரகம்,அதன் பின் வந்த உன்னை கொடு என்னை தருவேன் என்ற தலைவலி படம்.பின் கைகொடுத்தது 2001 இல் தீனா, இந்த படத்தில் இருந்து தல அவர்கள் அதிரடி படத்தை தேர்ந்து எடுத்தார்.
உச்சக்கட்டமாக சிடிசன் படம் வெளிவரும் முன்பு அந்த சோக சம்பவம் நடந்தது.ஆமாம் அது அஜித்துக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிப்போம் என்று நான் சிறு வயதில் இருந்து பழகிய தியேட்டர் ஊழியர்கள் கூறினார்கள். போர்டு வைக்கணும் அது இது என்று பணத்தை கறந்து விட்டார்கள். எனக்கு ஒரு பதவி வேற கொடுத்தாங்க அது துணை செயலாளர் பதவி.எங்க அண்ணனுக்கு பொருளாளர் பதவி கொடுத்தாங்க.ரசிகர் மன்றத்தில் இருந்த பத்து பேருக்கும் ஆளுக்கு ஒரு பதவி கொடுத்தாங்க!!(ஒரு ரசிகர் மன்றம் ஆரம்பிக்க குறைந்தது 25 பேர் இருக்க வேண்டும்...ஆன எங்க தலைவர் அவரே பலர் பேரை போட்டு நிரப்பி விட்டார்).சிடிசன் படம் வெளிவந்தது படத்தை பற்றி உங்களுக்கு தெரியாதது அல்ல.ரசிகர் மன்றத்தில் இருந்த பத்து பேரில் அஞ்சு பேரை ஆளை காணோம் என்பது சிடிசன் செய்த சாதனையில் ஒன்று....

சிடிசன் படத்துக்கு போர்டு வச்சோம்...2002 இல் வெளியான ரெட்
படமும் பயங்கர எதிர்ப்பார்ப்பு.எங்கள் மன்றத்தில் பல பேரை
காணாததால் மன்ற தலைவர் அவர்கள் போர்டு வைக்க எவனும்
சிக்க மாட்டான் என்று பேனர் கட்டுவோம் என்று முடிவு செய்தார்.
படம் ரிலீஸ் அன்று பேனரை பார்த்தால் இருபது ஆட்களின் பெயர்
பேனரில் இருந்தது!!

அது ஒரு கருப்பு சரித்தரம்:

2002 இல் வெளியான ராஜா என்ற மகா காவியத்தை நான்
முதல் ஷோ பார்க்கவில்லை.பக்கத்துக்கு தியேட்டரில் தான்
படம் ரிலீஸ்,இருந்தாலும் நம்பிக்கை இல்லை.ராஜா படத்தின்
முதல் நாள் மேட்னி ஷோவே ஈ ஆடுவதாக விஜய் ரசிகர்கள்
கிண்டல் செய்ய ஆரம்பித்து விட்டனர்.சரி அப்படி என்ன தான்
படத்தில் இருக்கு என்று தலையில் தூண்டு போடாத குறையாக
காவியத்தை பார்த்து வந்தேன்.ரசிகர் மன்றத்தில் கடைசியாக
இருந்த தலைவரும் வேறு ஊருக்கு போய் விட்டதால் ரசிகர்
மன்றத்தை அதோடு மூட்டை கட்டியாச்சு.பின்பு அஜித் பேட்டி
எல்லாம் காமெடி ஆன டைம் அது.நான் அஜித் ரசிகன் என்ற
மாயவலையில் இருந்து விடுபட்டு கொண்டிருந்தேன்.

2003 மற்றும் 2004 இல் ஆஞ்சநேயா, ஜனா,போன்ற படங்களை அடுத்தடுத்து பார்த்து நொந்து நூடுல்ஸ் ஆகி போனேன்.அந்த சமயம் அஜித் ரசிகர்களுக்கு ஒரு கருப்பு சரித்தரம் என்றே சொல்லலாம்.ரோட்ல போறவன் கூட கூப்பிட்டு வச்சு கலாய்ப்பாங்க.இந்த காலகட்டத்தில் அஜித் கார் ரேஸ்களில்
கவனம் செலுத்தியதால் அதோடு நானும் அஜித் ரசிகன் என்ற போர்வையிலிருந்து முழுதும் வெளியே வந்துவிட்டேன்.ஆனாலும் ஊருக்குள்ள நான் அஜித் ரசிகன் இல்லை என்று சொன்னாலும் யாரும் நம்பவில்லை.

2005 இல் கூட படிக்கும் நண்பன் ஆசைபட்டான் என்று பரமசிவன்
என்ற படத்தை அவனோடு போய் முதல் நாள் பார்த்தேன்.
பரமசிவன் மாதிரி படத்தை பார்க்கிற கொடுமையை என் எதிரிக்கும் கிடைக்க கூடாது என்று நினைத்தேன். அதன் பின் வெளியான திருப்பதி,ஆழ்வார் போன்ற படங்களை நான் இன்று வரை பார்த்தது இல்லை.இப்பொழுது பில்லா மற்றும் ஏகன் படங்களை முதல் நாள் பார்த்தேன்......

இன்று:

நேற்று காலையில் அசல் பாட்டுக்களை என் கைப்பேசியில்
கேட்டேன்...பின்பு போர்க்களம்,பையா,கோவா போன்ற படங்களுக்கு
மாற்றிவிட்டேன். அசல் பாடல்களில் சில பாடல்கள் கேட்கும்
போது ஏதோ டி.வி.சீரியல் பாட்டு மாதிரி இருப்பதை உணர
முடிகிறது.சரண் வேறு படத்தை நாடகம் மாதிரி எடுப்பார்...
பார்ப்போம்!!பரத்வாஜ் அவர்கள் யுவன் மாதிரி ட்ரை பண்றேன்னு
சொல்லி முட்டியை உடைச்சிக்கிட்டார் என்றே சொல்ல வேண்டும்.

அஜித் அவர்கள் அல்டிமேட் ஸ்டார் பட்டதை இனிமே பயன்படுத்த மாட்டேன் என்று அவர் கூறிய கருத்தை இப்போது நடித்து கொண்டிருக்கும் புரட்சி,சின்ன,மினி தளபதிகள் கேட்டு திருந்தினால் நன்றாக இருக்கும்.......

உங்களுக்கும் இது போல் அனுபவங்கள் இருந்தால் பகிர்ந்து
கொள்ளவும்.....ஒட்டு குத்திட்டு போங்க....

நன்றி :
indiaglitz.ajithfan.blogspot.com.


நன்றி
ஜெட்லி சரண்.