பொங்கல் டாப் படம் எது???
பின்வரும் தரவரிசை என் மனதுக்கு பிடித்தவை மட்டுமே...
4. குட்டி:
இந்த படத்தை பார்த்துட்டு வந்து எனக்கு விமர்சனம்
எழுதுவே தோணல காரணம் படத்தில் ஒரு சீன் கூட எனக்கு
வீட்டுக்கு வந்தவுடன் நினைவுக்கு வரவில்லை.கடைசி அரை
மணி நேரம் எழுந்து வந்துவிடலாம் என்று நினைத்தேன்....
ஆனால் சகிப்பு தன்மை வளர முழு படத்தையும் கண்டேன்
என்பது குறிப்பிடத்தக்கது.
3. போர்க்களம்:
வித்தியாசமான ஷாட்ஸ்,கிஷோர் நடிப்பு
மற்றும் பிஜு மேனனின் அலட்டல் இல்லாத நடிப்பு இருந்தும்
படம் தொய்வு காரணமாக பிடிக்கவில்லை......
2. நாணயம்:
முதலில் கொஞ்சம் மெதுவாக ஸ்டார்ட் ஆனாலும்
நல்ல டைம் பாஸ் படம்....பிரசன்னா வழக்கம் போல் நன்றாகவே
பண்ணியிருந்தார்....கடைசியில் ஏகப்பட்ட ட்விஸ்ட்...
1. ஆயிரத்தில் ஒருவன்:
படத்தை பத்தி எவ்ளோ கேள்விகள்....
படத்தை பார்த்து நல்லா இருக்கு என்று சொன்னால் இன்னும்
பல கேள்விகள்....எப்பா...எப்பவுமே நல்லா இல்லைன்னு சொன்னா
தான் கேள்வி வரும் ஆனா ஆயிரத்தில் ஒருவனுக்கு viceversa
ஆகிவிட்டது.....
பல பேர் சொன்னது மாதிரியே படத்தில் லாஜிக் ஓட்டைகள்
அதிகமாகவே இருக்கின்றன....இரண்டாவது பாதியில் என்ன
சொல்ல வருகிறார்கள் என்று கேள்வியும் எழாமல் இல்லை...
ஆனால் நான் படம் பார்க்கும் போது அதையெல்லாம்
பார்க்கவில்லை...எனக்கு நல்ல டைம் பாஸ் ஆச்சு..அவ்ளோ தான்.
மீண்டும் நான் ஆயிரத்தில் ஒருவனை திங்களன்று இரண்டாவது முறையாக பார்த்தேன்.காரணம் முதல் பாதிக்காக கண்டிப்பாக ஒரு தடவை பார்க்க வேண்டும் என்று முதல் தடவை இடைவெளியில் முடிவு செய்து விட்டேன்..........
பின்பு subtitle வருது என்று யாரோ கிளப்பி விட்டதால், எனக்குள்
ஒரு பயம் என்ன கொடுமை இது!! தமிழ் படத்துக்கு subtitleலா
என்று கோபம்....ஆனால் அப்படி எதுவும் இல்லை......!!
இந்த தடவை பார்க்கும் போதும் முதல் பாதி சலிக்கவில்லை.
ஆனால் இரண்டாவது பாதியில் சில காட்சிகளை எடுத்து
இருந்தனர்.முக்கியமாக அந்த கிழவர் சொல்லும் வாக்கியம்
"தஞ்சை சென்றதும் இந்த அடியோனை நினையிங்கோ"
என்பாரே அது இல்லாதது வருத்தமே......இந்த தடவை பார்க்கும்
போதும் ரீமாவின் துரோகம் தாங்காமல் பார்த்திபன் அழுது
கொண்டே வரும் காட்சி நெகிழ வைத்தது....
நான் திரும்பவும் சொல்றேன் படத்தில் லாஜிக் ஓட்டை இருக்கு...
ஆனா இந்த களம் தமிழ் சினிமாவுக்கு புதுசு......
நான் உங்களை ஆயிரத்தில் ஒருவனையோ செல்வராகவனையோ
கொண்டாடுங்கள் என்று சொல்லவில்லை, புறக்கணிக்க வேண்டாம்
என்று தான் சொல்கிறேன்........
பின்னூட்டத்தில் ஏதோ பிரச்சனை
இருப்பதாக நண்பர்கள் கூறினார்கள்....
உங்கள் கருத்தை மெயில்க்கு அனுப்பவும்
jetliidli@gmail.com
இப்படிக்கு
தமிழ் சினிமா ரசிகன்.
(ஜெட்லி)
Wednesday, January 20, 2010
Subscribe to:
Post Comments (Atom)
32 comments:
அப்புடிப்போடு அருவாள..!
இதில் நான் பார்த்தது ஆ.ஒ. மட்டுமே..அது சிறந்த படம் என்பதில் மறுப்பேதும் இல்லை..
//ஒருத்தர் வேறு ஒருவரின் ப்ளாக் பின்னூட்டத்தில் "30
கோடிக்கு ஆயிரத்தில் ஒருவன் எடுத்ததற்கு நாலு படம்
நாடோடிகள் மாதிரி எடுத்து விடலாம்" என்று போட்டிருந்தார்.
எவ்ளோ அசால்ட்டா சொல்லிட்டாரு...படம் எடுப்பது என்றால்
அவர் என்ன நினைத்து கொண்டிருக்கார் என்று தெரியவில்லை...//
படம் எடுக்கிறது ஏதோ டிஜிட்டல் கேமரால போட்டோ எடுக்கிறதுன்னு நெனைசிட்டார் போல..
குட்டி படம் பேமிலியோட போய் பார்க்குற மாதிரி ஜோக்கா இருக்குன்னு சொன்னாங்களே ?.
மத்தபடி உங்க லிஸ்ட்டும் பாக்ஸ் ஆபிஸ் ரிசல்ட்டும் ஒத்துப்போகும்னு நினைக்கிறேன்.
குட்டி படம் நல்ல இருக்குற மாதிரியே எல்லாரும் பதிவு எழுதி இருந்தாங்க..., உண்மையா எழுதுனதுக்கு ரொம்ப நன்றி...
இப்படிக்கு தியேட்டரில் அழுதவன்...
ஜெட்லி...Dont worry.. படம் சூப்பர் ஹிட்.. ஹவுஸ்புல்.. கேபிள்ல மூக்கல குத்தனம்ன்னு எப்படி முன்னாலே கணிச்சு சொல்லியிருக்கேன் பாருங்க
@ ♠ ராஜு ♠
எல்லாம் உங்க தயவு தான் பாஸ்....
@வெற்றி
//படம் எடுக்கிறது ஏதோ டிஜிட்டல் கேமரால போட்டோ எடுக்கிறதுன்னு நெனைசிட்டார் போல.. //
சரியாய் சொன்னாய் வெற்றி...
அதுல கூட எல்லோர் ஆளும் எடுத்திட முடியாது நண்பா!!
@ பின்னோக்கி
//குட்டி படம் பேமிலியோட போய் பார்க்குற மாதிரி ஜோக்கா இருக்குன்னு சொன்னாங்களே ?. //
போய் பாருங்க பாஸ்...செம ஜோக் தான்...
@பேநா மூடி
உங்களுக்கும் அதே ப்ளட் தானா??
@ அசோக்
அண்ணே... ஏன் இந்த வன்முறை.... ??
உங்களுக்கும் அவருக்கும் ஏதாவது முன் விரோதம் இருக்கா??
//உங்களுக்கும் அவருக்கும் ஏதாவது முன் விரோதம் இருக்கா?? //
ஆமா ஏன்னா அவரு என் நண்பர் :))
//ஆமா ஏன்னா அவரு என் நண்பர் :)) //
ஓகே ஓகே..அப்போ நண்பர்னா மூக்குல
குத்துவீங்களா??
//மெயில்லில் வந்தது.....
//
அன்பருக்கு வணக்கம்.
உங்கள் வலைப்பூவில் பின்னூட்டம் இட முடியாததால் இந்த தனிமடல்.
உலக சினிமா பார்த்து ஊரே கெட்டு போய் கிடக்கும்போது தமிழ் சினிமா ரசிகன்னு சொல்லி தரவரிசை படுத்தியிருப்பது அருமை. தமிழனுக்கு பெருமை.
வாழ்த்துக்கள்.
அன்பன்
(துபாய்) ராஜா.
நல்ல வேளை நான் குட்டி பார்க்கல..:-)))
//ஓகே ஓகே..அப்போ நண்பர்னா மூக்குல
குத்துவீங்களா??//
குத்துனேனா??? இல்லையே..
நண்பர்கள் முதுகல தான் குத்த கூடாது... மூக்கல குத்தலாமே.. ஜாலியா
I planned this weekend to watch Kutty. Thanks for saving me.
சேம் ப்ளட் - ஆ.ஒ வ சொன்னேன்.
//ன்பு subtitle வருது என்று யாரோ கிளப்பி விட்டதால், எனக்குள்
ஒரு பயம் என்ன கொடுமை இது!! தமிழ் படத்துக்கு subtitleலா
என்று கோபம்....ஆனால் அப்படி எதுவும் இல்லை......!!//
சோழர்களின் சதி
:)
:-)))))
:))
/*....
ஆனா இந்த களம் தமிழ் சினிமாவுக்கு புதுசு......
நான் உங்களை ஆயிரத்தில் ஒருவனையோ செல்வராகவனையோ
கொண்டாடுங்கள் என்று சொல்லவில்லை, புறக்கணிக்க வேண்டாம்
என்று தான் சொல்கிறேன்........
...*/
ரிப்பீட்டு... தவறுகளை சுட்டி காட்ட வேண்டிய விதத்தில் சுட்டி காட்ட வேண்டும்.. அதை விடுத்து "நீயெல்லாம் ஏன்யா படம் எடுக்கிற..?" என்ற பாணியில் வரும் விமர்சனங்கள் கடுப்பை ஏற்படுத்துகின்றன...
@ கார்த்திகைப் பாண்டியன்
நீங்க தப்பிச்சிடிங்க அண்ணே....
@ vinodp
nandri...
@ முகிலன்
ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு
பீலிங்க்ஸ் பாஸ்....
@ SUREஷ் (பழனியிலிருந்து)
ஹா... ஹா
@ Cable Sankar ,@பலா பட்டறை,@ Anbu
நன்றி...
@Thinks Why Not
நன்றி நண்பா...
பொங்கல் படங்களின் எது டாப் விமர்சனம்ன்னு அடுத்து எழுதுங்க பாஸ் .
@ ||| Romeo |||
ஏன்...உங்களுக்கு இப்படி ஒரு ஆசை...
நம்மளை வம்புல மாட்டி உடுரிங்கலே......
enna mayithukku intha padatha support pannanum nu neenga sollunga punniyama pogum...enna mayithukku intha padatha support pannanum nu neenga sollunga punniyama pogum...
Post a Comment