Tuesday, January 12, 2010

புத்தகக்காட்சி நாள் 12 - (மன) நிறைவு - பதிவர்களின் காலண்டர் படங்களுடன்




 
சனிக்கிழமை பதிவர் சந்திப்பு முடிந்து, ஒன்பதரை மணிக்கு தான் கிளம்பினேன். நண்பர் ஒருவரை அவர் வீட்டில் விட்டுவிட்டு நான் வீடுவந்து சேர்ந்தபோது மணி பன்னிரண்டு. கொட்டும் பனியில் வண்டி ஓட்டிக்கொண்டு வந்ததால், காலையில் எழும்போதே தலைவலி தொடங்கி விட்டது. நிமிடத்துக்கு நிமிடம் அதிகமாகிக்கொண்டே போனாலும் நிச்சயம் புத்தகக் காட்சிக்கு சென்றே தீர வேண்டும் என்ற முடிவை எடுக்க வைத்தது, சுஜாதா புத்தகங்கள் குறித்து சொல்லியிருந்த ஜாக்கி அண்ணனின் பதிவு. ஒன்பது மணிக்கு படுக்கையிலிருந்து எழுந்து கணிணியில் அமர்ந்த நான், சந்திப்பு குறித்த பதிவை எழுதி முடித்து, எழும் போது மணி ஒன்று. குளியலை போட்டு, சாப்பிட்டுவிட்டு, ஒரு குட்டித் தூக்கத்துக்கு பின் கிளம்பிய போது மணி நான்கு.


நண்பர் குறும்பன் கடந்த வாரமே சந்திக்கலாம் என்று சொல்லியிருந்தார், தலைவலி மண்டையை பிளந்தாலும், சுஜாதாவும், மூன்றரை மணிக்கே வந்துவிட்ட குறும்பனும், மீண்டும் அழைக்க, நெற்றியில் அப்பிய மிளகுடன் கிளம்பினேன். ஐந்தே முக்காலுக்கு ஒருவழியாய் சென்று சேர்ந்தபோது, மிளகும் காய்ந்து போய் இருந்தது, தலைவலியும் விட்டிருந்தது. பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தி  ஹெல்மெட்டை கழற்றிய போது படகில் வந்திறங்கிய தீவிரவாதியைப் பார்ப்பது போல் சிலர்  பார்த்ததால், குடிக்கக் கொண்டு போயிருந்த வெந்நீரில் முகத்தைக் கழுவிக் கொண்டு உள்ளே சென்றேன்.

போகும் வழியில் கண்ணில் பட்டது (என்ன கொடுமை சார் இது)

  
ஏற்கனவே வாங்கி முடித்துவிட்ட குறும்பனுடன், மீண்டும் ஒரு உலா தொடங்கியது. நண்பர் ஒருவர் வாங்கித்தர சொல்லியிருந்த குழந்தைகளுக்கான கதைப் புத்தகங்களும், பிரபாவுக்கான சிந்தாமணியும் பட்டியலில் இருந்தது, குழந்தைகள் புத்தகங்கள் பழனியப்பாவிலும், பிரேமா பிரசுரத்திலும் கிடைத்தன, சிந்தாமணி வேட்டையில், பாரி நிலையத்தில் கொஞ்சம் ஒளி தெரிவது போல் இருந்தது, கடைசியில் கையிருப்பு இல்லை என்று, கைவிரித்து விட்டனர், அடுத்த வாரம் நேரே பதிப்பகத்தின் பாரிமுனை அலுவலகம் செல்ல உத்தேசம்.




வரும் வழியில், மாம்பலத்தில் பார்த்த கூட்டத்திற்கு சிறிதும் குறைவில்லாதது போல் தோன்றியது உள்ளே இருந்த கடைசிநாள் கூட்டம். இத்தனை நாள் இல்லாத (அல்லது தெரியாத), புழுக்கமும் வெக்கையும் உள்ளே நிலவியது. ஜாக்கி அண்ணன் சொன்ன பாரதி பதிப்பகம் தேடிச் சென்று பார்த்தபோது, மூன்றே மூன்று புத்தகங்கள் தான் மிஞ்சி இருந்தன, கண் முன்னே 'காகித சங்கிலிகளின்' கடைசி பிரதியை ஒருவர் வாங்கி செல்ல, வேடிக்கை பார்த்திருந்தேன், உஸ்மான் சாலையில் உள்ள பாரதி பதிப்பக அலுவலகத்திற்கும் படையெடுக்க உத்தேசம்.

எங்கும் கூட்டம் எதிலும் கூட்டம்


இடம் பெயர்ந்த கடற்கரை வியாபாரம்


ஐந்து ரூபாய்க்கு அருமையான இஞ்சி டீ


ஜெட்லி கேட்ட ராஜீவ் புத்தகத்தை வாங்க கிழக்கில் நுழைந்தோம், புத்தகத்தை கையில் எடுத்து பார்த்துக்கொண்டிருந்தபோது, எதிரே கவிதா பதிப்பகம் கண்ணில் பட உள்ளே நுழைந்தேன், அப்போது "பதிவர் யாராவது அலுவலகம் வரவும்" என அறிவிப்பு வந்தது, அடடா, நம்மைத்  தான் கூப்பிடுகிறார்கள் போலிருக்கிறதே என்று வேகமாய் சென்று விசாரித்த போது, அவர்கள் சொன்னது "பாஸ்கர் என்பவர் அலுவலகம் வரவும்" என்று தெரிந்தது. கடைசி நாளில் இவ்வளவு பெரிய மொக்கை  வாங்கியதால், நான் மொக்கைப் பதிவர் தான் என்பது உறுதியாகிவிட, சந்தோஷத்தோடு கிழக்குக்கு திரும்பி வந்தால், குறும்பன் புத்தகத்தை வாங்கி விட்டிருந்தார். பணம் தர முயன்றபோது அன்புப்பரிசு என்று சொல்லி வாங்க மறுத்துவிட்டார். அப்போது அங்கு மோகன் குமார் போல் ஒருவரை பார்த்ததாக குறும்பன் சொல்ல அவரிடம் சென்று கேட்டு இன்னுமொரு மொக்கை வாங்கினேன்.

இரு மேதைகளும், இன்னுமிரு மொக்கை பதிவர்களும்



தொடங்கியவரிடம் தான் முடிக்க வேண்டும் என்ற தமிழ் பட்டிமன்ற மரபை உத்தேசித்து, தமிழினியில் கல்லா கட்டிக்கொண்டிருந்த அண்ணன் சிவராமனிடம் சென்று விடை பெற்றுக்கொண்டு  கிளம்பினோம். வேறு எந்த பதிவரும் கண்ணில்படவில்லை. வெளியில் வரும்போது, காட்சி அலுவலகம் கண்ணில் பட, மூளை குறுக்கே வேளை செய்தது. "தமிழ் பதிவர்கள் யாராவது இருந்தால் அலுவலகத்திற்கு வரவும், இங்கு இரண்டு பதிவர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்" என்று அறிவிப்பு ஒன்று செய்யலாம் என எண்ணி விசாரித்தபோது, புத்தகக் காட்சி கையேடு (ரூ 100) விற்பனை குறித்த அறிவிப்பில் மூழ்கி இருந்ததால் "பதினைஞ்சு நிமிஷத்திற்கு அறிவிப்பு ஏதும் செய முடியாது" என்றார்கள். இன்னும் ஒரு மொக்கை வாங்கிய திருப்தியில் வீட்டுக்கு கிளம்பினோம்.


பதிவர்  கொண்டாட்ட மயக்கத்தில், முந்தைய பதிவில் எழுத மறந்து போன, இந்த வருட புத்தகக் காட்சிக்கான, கடைசி புத்தகப்பட்டியல்

நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம் - கி ரா - அன்னம் -  Rs 700
வேட்டி - கி ரா - அன்னம் -  Rs 60
அந்தமான் நாயக்கர் - கி ரா - அன்னம் -  Rs 50
காந்தளூர் வசந்த குமரன் கதை - சுஜாதா - பாரதி - Rs 120 
கொலையுதிர் காலம் - சுஜாதா - பாரதி - Rs  120 
பூக்குட்டி - சுஜாதா - பாரதி - Rs  15
அப்பா அன்புள்ள அப்பா - சுஜாதா - பாரதி - Rs  12 
மனைவி கிடைத்தாள் - சுஜாதா - பாரதி - Rs  18 
நைலான் கயிறு - சுஜாதா - விசா - Rs  41 
ராயர் காபி கிளப் - இரா முருகன் - கிழக்கு - Rs  65
என்னை எழுதிய தேவதைக்கு - குகன் - நாகரத்னா - Rs  55
நீளும் றெக்கை - வேல ராமமூர்த்தி - நடைபாதை - Rs  10

சென்னைக்கு குடிபெயர்ந்த இந்த ஒன்பது வருடங்களில், கடந்த ஆறு வருடமாக புத்தகக்காட்சிக்கு சென்று வருகிறேன். என்றாலும் கடந்த இரண்டு வருடங்களாகத்தான் வாங்கும் பழக்கம் அதிகரித்திருக்கிறது. வழக்கமாய் இரண்டு நாட்கள் செல்லும் நான், இந்த முறை தான் ஒன்பது நாட்கள் சென்றேன். புத்தகம் வாங்குவதை விடவும், பதிவர்களை சந்திப்பதே, இந்த விஜயங்களின் முக்கிய நோக்கமாய் இருந்தது. பதிவர்களாய் சந்தித்து, நண்பர்களாய் விடைபெற்ற ஒவ்வொரு மாலையும் மறக்க முடியாதது.

"வைபவங்கள் அனைத்தும் களைப்பில் தான் முடிவடைகின்றன". ஒவ்வொரு தீபாவளியும், பொங்கலும் முடிவுக்கு வரும்போது எனக்குள் தோன்றுவது கசீ சிவகுமாரின் 'கானல் தெரு'வில் வரும் இந்த வரிதான். இந்த மனக்களைப்பும், வெறுமையும் குறைந்தது இரண்டு நாட்களாவது நீடிக்கும். சமீபகாலமாய், கொண்டாட்டங்கள் குறைந்து போன, இந்த ஒரு நாள் பண்டிகைகள் உண்டாக்கும் தாக்கமே இரு நாள் நீடிக்குமென்றால், பன்னிரண்டு நாட்கள் பெரும் கொண்டாட்டங்களுடன் கழிந்த, இந்தத் திருவிழா ஏற்படுத்தப்போகும் தாக்கம் என்னவாயிருக்கும் என்று நினைக்கவும் முடியவில்லை.

 இடைக்கால நிவாரணம்





கீற்று அரங்கில் வாங்கிய, பாரதி காலண்டர் வழியே எடுத்த, சில படங்கள் இதோ

பலா பட்டறை சங்கர்



தண்டோரா 
















கேபிள் சங்கர்













DR அசோக் 














புத்தகக் காட்சி குறித்த பிற பதிவுகள்


 
நன்றி
சங்கர்

29 comments:

வெற்றி said...

//இரு மேதைகளும், இன்னுமிரு மொக்கை பதிவர்களும் //

அந்த மேதைகள் நீங்கன்னு கான்பார்மா தெரியுது..ஆனா சாப்ளினும் ஐன்ஸ்டீனும் எப்போ பதிவு எழுதுனாங்கன்னு தான் தெரியல..

butterfly Surya said...

பகிர்விற்கு நன்றி.
என்னுடைய பதிவு இங்கே.

http://mynandavanam.blogspot.com/search/label/Book%20Fair

Priya said...

ம்ம்... நண்பர்களுடன் ஜாலியா என்ஜாய் பண்ணியிருக்கீங்க‌!
காலண்டர் போட்டோஸ் நைஸ்!

Chitra said...

பதிவர் காலேண்டர் சூப்பர் ஐடியா. புத்தக கண்காட்சி, பதிவரின் சந்திப்புகள் - தொகுப்பு ....... பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்றது போல உற்சாகமூட்டும் பதிவு.

Paleo God said...

மிக்க நன்றி சங்கர்..:))

//வெற்றி said...
January 12, 2010 2:03 AM
//இரு மேதைகளும், இன்னுமிரு மொக்கை பதிவர்களும் //

அந்த மேதைகள் நீங்கன்னு கான்பார்மா தெரியுது..ஆனா சாப்ளினும் ஐன்ஸ்டீனும் எப்போ பதிவு எழுதுனாங்கன்னு தான் தெரியல../

::::))))))))))))

cheena (சீனா) said...

ம்ம்ம் நல்லாருக்கு இடுகை - ஒரு நாள் கண்காட்சி விஜயத்தப் பற்றிய இடுகை

நல்வாழ்த்துகள் சங்கர்

புலவன் புலிகேசி said...

தல நீங்க ஏன் ஒளிப்பதிவாளரா மாறக் கூடாது. நம்ம ஜாக்கி அண்ணன கேட்டுப் பாருங்களேன்.

சங்கர் said...

@வெற்றி

ஐன்ஸ்டைனை அப்படியெல்லாம் சொல்லக் கூடாது, சுஜாதா கோபப்படுவார்

சங்கர் said...

@butterfly Surya

தூக்க கலக்கத்தில் உங்க பதிவு லிங்க் விட்டுப்போச்சு, மன்னிச்சுக்குங்க தலைவரே

சங்கர் said...

@Priya

ஆமாங்க்கா, பதிவர் சந்திப்புக்கு ப்ரியான்னு ஒரு வாசகி வந்தாங்க, நீங்கன்னு நினைச்சு, எப்போ ஊருக்கு வந்தீங்கன்னு கேட்டு பல்பு வாங்கினேன் :))

பின்னோக்கி said...

காகிதச்சங்கிலிகள் கிடைக்காததின் மர்மம் விலகியது.

மனைவி கிடைத்தாள் - எனக்கு கிடைக்கவில்லை. புத்தகத்த சொன்னேங்க.

என்னங்க ? யாருங்க ? ஏங்க ? மொக்கை பதிவர்ன்னு யாராவது எதாவது சொல்லிட்டாங்களா ? நிறைய பதிவுகள்ல இந்த வார்த்தைய படிச்சுட்டேன். நாயகன் கமல் மாதிரி கேட்க விட்டுட்டீங்க.

கிங்-பிஷ்சர் கேலண்டர் மாதிரி உங்க கேலண்டர் படங்கள் சூப்பர் :)

மிளகு அரைச்சு போட்டா தலைவலி போய்டுமா ?. மிளகுத்தூள் தண்ணியில கரைச்சு போட்டா ஒ.கே ?

அப்பா, அன்புள்ள அப்பா - படிச்சுட்டேன். அதுல முதல் கட்டுரை படிக்க பொறுமையில்லை.

கா.வ.கு.கதை - பாரதி பதிப்பகத்துல தான் கம்மியான விலை பார்த்தீங்களா ?

தகவல் சுரங்கம் இந்த பதிவு.

செ.சரவணக்குமார் said...

புத்தகக் காட்சி பற்றி ஒவ்வொரு நாளும் பதிவிட்டு அந்த நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி நண்பா.

சங்கர் said...

@பலா பட்டறை

::::)))))))))))))))))

சங்கர் said...

@cheena (சீனா)

நன்றி ஐயா

மணிஜி said...

முன்னேறிட்டீங்கப்பா...

சங்கர் said...

@புலவன் புலிகேசி

கேபிள் அண்ணனோட படத்துக்கு ஒரு துண்டு போட்டிருக்கேன் :))

சங்கர் said...

@செ.சரவணக்குமார்

நன்றிக்கு நன்றி

சங்கர் said...

@தண்டோரா ......

நன்றி தலைவரே

Raghu said...

//இன்னுமொரு மொக்கை வாங்கினேன்//
ச‌ங்க‌ர், என‌க்கு ஒரு ட‌வுட்டு, இந்த‌ வருஷ‌ம் நீங்க‌ அதிக‌ம் வாங்கின‌து புத்த‌க‌மா, மொக்கையா?

//புழுக்கமும் வெக்கையும் உள்ளே நிலவியது//
தி.ந‌க‌ர் போற‌ப்போகூட‌ இப்ப‌டி நான் ஃபீல் ப‌ண்ண‌தே இல்ல‌, ஆனா அன்னைக்கு நொந்து 'Maggi' (நான் ர‌ம்யா கிருஷ்ண‌னை சொல்ல‌ல‌) ஆயிட்டேன்:(

//நம்மைத் தான் கூப்பிடுகிறார்கள் போலிருக்கிறதே என்று வேகமாய் சென்று விசாரித்த போது//
க‌ன்ஃப‌ர்ம், க‌ண்டிப்பா இது ப்ளாகோமேனியாதான்!

கலையரசன் said...

வித்தியாசமான போட்டோ முயற்சி..
அந்த ச.தே. புக்கு வாங்கலையா??

சங்கர் said...

@கலையரசன்

"ச.தே." என்னங்க அது?

சங்கர் said...

//குறும்ப‌ன் said...
ச‌ங்க‌ர், என‌க்கு ஒரு ட‌வுட்டு, இந்த‌ வருஷ‌ம் நீங்க‌ அதிக‌ம் வாங்கின‌து புத்த‌க‌மா, மொக்கையா? //

எண்ணிப் பார்த்து சொல்றேன்

சுசி said...

//பதிவர்களாய் சந்தித்து, நண்பர்களாய் விடைபெற்ற ஒவ்வொரு மாலையும் மறக்க முடியாதது.//
:)))

எல்லா நாளும் போனீங்களா??
பொறாமை.. பொறாமை..
எனக்குன்னு சொன்னேன் :))

சங்கர் said...

எல்லாம் உங்களை மாதிரி நண்பர்களுக்காகத்தான் :))

அடுத்த ஜனவரிக்கு, ஒரு பிளைட் டிக்கெட், இப்பவே புக் பண்ணிக்குங்க

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

இனிய தமிழர் திருநாள் நல்வாழ்துக்கள்

குப்பன்.யாஹூ said...

NICE POST, I APPRECIATE YOUR INTEREST IN BLOGS.

மரா said...

ஆகா.......யாரோ சொன்னாங்க சங்கர் திறமைசாலின்னு! சரிதான். போட்டோ போட்டு நம்மளையும் ஆட்டத்துல சேத்துக்கிட்டதுக்கு டேங்ஸ்...நடத்துங்க...

வேலன். said...

சென்னையிலேயே நான் குடியில்லாதது வருத்தமாக இருக்கு...உங்கள் பதிவு வருத்தத்தை இன்னும் அதிகமாக மாற்றிவிட்டது...
பதிவு அருமை..
வாழ்க வளமுடன்,
வேலன்.

ஸ்ரீராம். said...

"வேறு எந்த பதிவரும் கண்ணில்படவில்லை"

அட நீங்கதானா அது?
எதிர்லயே நின்னிருந்தேனே...பார்க்கலை?

பொங்கல் வாழ்த்துக்கள்...