Monday, January 4, 2010

போர்க்களம் - ஒரு பார்வை.

போர்க்களம் - ஒரு பார்வை.

இப்படி ஒரு படம் வர போகுதுனு பல பேருக்கு தெரிய வாய்ப்பு இல்லை. இதுல என்ன ஸ்பெஷல்னு கேட்டா? நம்ம பொல்லாதவன் கிஷோர் இதில் ஹீரோவாக வருகிறார். ட்ரைலர் கொஞ்சம் வித்தியாசமா இருக்கு கண்டிப்பா படத்தை பார்க்கணும்.புதுமுக இசையமைப்பாளர் ரோஹித் குல்கர்னி மியூசிக் பண்ணியிருக்கார்.பண்டி சரோஜ்குமார் என்ற புதுமுகம் இயக்கியுள்ளார்.


பண்டிசரோஜ்குமார் அவர்கள் இந்த படம் ஒரு புது முயற்சியாக
இருக்கும் என்கிறார்...தமிழக மக்கள் எப்போதும் புது முயற்சியை
வரவேற்ப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.கிஷோருக்கு பொல்லாதவன்
மற்றும் வெண்ணிலாக்கு பிறகு சொல்லி கொள்ளும் படி எதுவும்
அமையவில்லை....பொருத்து இருந்து பார்ப்போம் போர்க்களத்தில்
கிஷோரை......


பாடல்கள் அனைத்தையும் முத்துக்குமார் எழுதியுள்ளார்.
இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ஒரே தீம்மாக இருக்கிறது,
இருந்தாலும் கேக்க நன்றாக தான் இருக்கிறது.இந்த பட
பாடலை எனக்கு அறிமுகப்படுத்திய பெங்களூரை சேர்ந்த
நண்பர் ஹசனுக்கு நன்றி.....

படத்தில் ஐந்து பாடல்கள் இருக்கின்றன அனைத்துமே
ஆண்குரல் தான் பெண்குரல் பாடல் எதுவும் இல்லை
என்பதே ஒரு வித்தியாசமான விஷயம்.
# போர்க்களம் தீம் மியூசிக்

இந்த மியூசிக் ட்ரைலரில் வருமே அதே மியூசிக் தான் கேக்க
நன்றாக தான் இருக்கிறது.ஒரு ரிச்நெஸ் தெரிகிறது...


# அரண் திறன்

தீம் மியூசிக்கின் மெட்டுக்கு பாடல் இது.இதில் ஸ்பெஷல் கே.கேவின் வாய்ஸ் தான்.ஆள் சும்மா பின்னி எடுத்து இருக்கிறார்.
பாட்டை கேட்டாலே ஹீரோவின் கேரக்டர் பற்றி தெரிந்து
கொள்ளலாம்.கொஞ்சம் ஓவர் ஆக தான் இருக்கு இருந்தாலும்
படம் வந்தவுடன் தான் தெரியும்....

# இந்த பூமியில் :

ஷான் அவர்கள் பாடியுள்ள இந்த பாடல் நன்றாக தான் இருக்கு...
ஷானின் ஷார்ப்பான வாய்ஸ் இதில் ப்ளஸ்.....


# உன்னாலே: (இது தான் என் பேவரைட்).

நம்ம எஸ்.பி.பி.சரண் பாடியுள்ள இந்த பாடல் தேஞ்சு போன
சி.டி யில் குரல் கேட்டால் எப்படி இருக்கும் அந்த மாதிரி
வித்தியாசமா இருக்கும்.(கிண்டலுக்கு சொல்லல நல்லா இருக்கும்னு சொல்ல வந்தேன் ,எனக்கு அவங்க என்ன டெக்னாலஜி யூஸ் பண்ணாங்கன்னு தெரியாது).

# யாரோ இவன் யாரோ:

முதலில் வரும் trumphet மியூசிக்கை கேட்டலே உற்சாகம் பொங்கும்.
இதுவும் ஹீரோவை தூதி பாடும் பாடல் தான்.கார்த்திக்கின் குரல்
இந்த பாட்டுக்கு மேலும் பலம் சேர்க்கிறது.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@

ஒரு வாரம் முன்னாடி எழுதியது:

((என் எண்ணமெல்லாம் இது தான்... ஸ்ரீகாந்த் நடித்த ரசிக்கும்
சீமானே போல் ட்ரைலாரை இருநூறு நாட்கள் ஒட்டாமல்
படத்தை சீக்கரம் வெளியிட்டால் நன்றாக இருக்கும்....))


நேற்று பேப்பர்இல் பொங்கல் ரிலீஸ் என்று போட்டிருந்தார்கள்..
பார்ப்போம்...அங்காடி தெரு கூட பொங்கல் ரிலீஸ் என்று முதலில்
போட்டார்கள் அப்புறம் நேத்து பிப்ரவரி ரிலீஸ் என்று போட்டு விட்டார்கள்......


ஓட்டை குத்துங்க....பின்னூட்டம் போடுங்க !!

உங்கள்
ஜெட்லிசரண்.

10 comments:

தண்டோரா ...... said...

சித்திரம் பேசுதடி நன்றாக இருக்கும் என்று கணித்து முதல் நாள் பார்த்தேன்.அதேப் போல் போர்க்களமும் ...நிச்சயம் ஏமாற்றாது.நம்பி பார்க்கலாம்.

பின்னோக்கி said...

டிரெயிலர் மிரட்டுற மாதிரி இருந்துச்சு. பார்ப்போம்.

D.R.Ashok said...

எனக்கும் பட்சி நல்லாயிருக்கும்ன்னு தான் சொல்லுது... பாட்டெல்லாம் அழகா பிரிச்சு போட்டுயிருக்கியே.. ஜெட்லி என்னா ம்யூசிக் காலேஜா படிக்குது :)

Chitra said...

பட விமர்சனத்துக்கு முன் உள்ள preview விமர்சனம் சூப்பர், ஜெட்லி.

கடைக்குட்டி said...

என்ன இசை ஞானம் ராசா உனக்கு,, :-)

ட்ரைலர் நான் இன்னும் பாக்கல..பாத்துட்டு சொல்றேன்..

பிரியமுடன்...வசந்த் said...

ஒஹ்..

இனி இது போல் பார்க்கணும் அப்படின்னு தோணுற மாதிரி முன் விமர்சனமும் எழுதுங்க சரண்

hayyram said...

gud. continue

regards
ram

www.hayyram.blogspot.com

ஜெட்லி said...

@ தண்டோரா

முதல் நாளே பார்ப்பதாக முடிவு செய்துள்ளேன் பார்ப்போம்....

@பின்னோக்கி

நன்றி.....

@அசோக்

//ஜெட்லி என்னா ம்யூசிக் காலேஜா படிக்குது :)

//
காமெடி பண்ணாதிங்க அண்ணே...

@ சித்ரா

மிக்க நன்றி...@கடைக்குட்டி

நீ பிஸி மேன் பா ,..,@பிரியமுடன்...வசந்த்

செய்துடுவோம் நண்பா

புலவன் புலிகேசி said...

பாத்துடுவோம்...யார் யாரோ நடிக்கிறாங்க..இவரு நடிச்சா என்னா..??

Prasanna R said...

sarvam trailer kuda hollywood rangeula irundhadhu

padam sema mokkai

pudhu muyarchikku endrum nammae aadharavu undu :)