"அஹோ கேளும் பிள்ளாய், இந்த பதிவை படிக்கும் மானுடரே", ஒண்ணுமில்லீங்க, புத்தகக்காட்சியில் வாங்கிட்டு வந்த விக்கிரமாதித்தன் கதையை கொஞ்சம் புரட்டிப் பார்த்தேன் அதுதான். நேத்து நம்ம ஜெட்லியும் வரேன்னு சொல்லியிருந்தாரு. அவரு ரெண்டுமணிக்கு சந்தையில இருப்பேன்னு சொன்னதால், நான் ரெண்டுமணிக்கு தான் வீட்ட விட்டே கிளம்பினேன் . முதல் நாள் மாதிரி ஊர்சுற்றி போகாம, அரைமணி நேரத்துல போய் சேர்ந்தேன். ஜெட்லி ஏற்கனவே அங்கு காத்திருந்தார். அவரது ரிப்போர்ட் இதோ (ஒரு துணைப்பதிவு)
புத்தக கண்காட்சியில் கொள்ளை கும்பல்....
நான் திங்கள்க்கிழமை போகலாம் என்று இருந்தேன் ஆனால் அந்த பக்கம் வேலை இருந்ததால் அப்படியே ஒரு எட்டு பார்த்துவிட்டு ரொம்ப நாளாக
வாங்க வேண்டும் என்று எண்ணிய புத்தகத்தை மட்டும் முதலில் வாங்கி விடுவோம் என்று 1.50 க்கு உள்ளே நுழைந்தேன்.
முதலிலே அதிர்ச்சி காத்து இருந்தது பைக் பார்க்கிங் டோக்கன் 15 ரூபாய் என்று கண்ணுக்கு கையுக்கும் அகப்படாத
நான் கொள்ளை கும்பல் என்று கூறியது பார்க்கிங் டோக்கனைபற்றி தான்..
நண்பர் சங்கர் சிறிது நேரம் கழித்து தான் கண்காட்சிக்கு வந்திருந்தார்
அப்போது நான் அவரிடம் 15 ரூபாய் பார்க்கிங் கட்டணம்அதிகம் என்றேன்.
அதற்கு அவர் 10 ரூபாய் தான் என்றார்.நாங்கள் இதை பற்றி கண்காட்சி அலுவலகத்தில் விசாரித்தோம் அவர்கள் அதை பற்றியெல்லாம் எங்களுக்கு தெரியாது என்றார்கள்.
நண்பர் சங்கர் சிறிது நேரம் கழித்து தான் கண்காட்சிக்கு வந்திருந்தார்
அப்போது நான் அவரிடம் 15 ரூபாய் பார்க்கிங் கட்டணம்அதிகம் என்றேன்.
அதற்கு அவர் 10 ரூபாய் தான் என்றார்.நாங்கள் இதை பற்றி கண்காட்சி அலுவலகத்தில் விசாரித்தோம் அவர்கள் அதை பற்றியெல்லாம் எங்களுக்கு தெரியாது என்றார்கள்.
பின்பு நான் வெளியே போகும் போது டோக்கன் கேட்ட பையனிடம்
எவ்ளோ என்று கேட்டேன் பத்து ரூபாய் என்றான் அப்போ ஏன்
வரும்போது 15 வாங்குனிங்க என்று கேட்டேன்...அவன் "நாங்களா..
பத்து ரூபாய் தான் வாங்குறோம்" என்றான் வாயில் பாக்குடன்.
பின்பு இன்னொருவனை கை நீட்டினான் அவன்"காண்ட்ராக்ட் ரேட்
அதிகம்" என்றான்.சண்டை போடாத குறையாக திரும்ப ஐந்து
ரூபாயை வாங்கிவந்தேன்.....
நாட்டுல என்ன நடக்குதுன்னு புரியல... குடிக்கறவன் கிட்ட இருந்தும்
எக்ஸ்ட்ரா துட்டு வாங்குறாங்க...புக் படிக்கிறவன்கிட்ட இருந்தும்
எக்ஸ்ட்ரா துட்டு வாங்குறாங்க...
எக்ஸ்ட்ரா துட்டு வாங்குறாங்க...புக் படிக்கிறவன்கிட்ட இருந்தும்
எக்ஸ்ட்ரா துட்டு வாங்குறாங்க...
ஒரே சந்தோசம் நான் நீண்ட நாட்களாக வாங்க
புத்தகங்களை வாங்கிவிட்டேன்...அப்புறம் பொன்.வாசுதேவன்
மற்றும் தண்டோரா அண்ணனை சந்தித்தோம்...
பேக் டு சங்கர்
முதலில் பரிசல் ஸ்டாலுக்கு போனோம், அங்க நம்ம அகநாழிகை வாசு சார் இருந்தாரு, நம்ம தண்டோரா அண்ணனும் வந்து சேர்ந்தார். வாசு சார், பா ராஜாராமின் "கருவேல நிழல்" தொகுப்பை அன்பளித்தார். ஒரு சின்ன பதிவர் சந்திப்பை நடத்திவிட்டு ஒரு போட்டோ கூட எடுக்காம விடைபெற்றோம். ஜெட்லி நேரமாகுதுன்னு சொல்லி வீட்டுக்கு கிளம்பினார். நான் கடை கடையா சுத்த ஆரம்பிச்சேன்.
காலச்சுவடு ஸ்டாலுக்கு போனா, ஒரு அதிர்ச்சி, முதல் நாள் நான் 450 ரூபாய்க்கு வாங்கியிருந்த "கு.பெ.ஆ" 290 ரூபாய்க்கும், 575 ரூபாய்க்கு வாங்கின "சுரா சிறுகதைகள்" 450 ரூபாய்க்கும் போட்டிருந்தாங்க, ஒண்ணு வாங்கினா இன்னொன்னு அன்பளிப்பாம். கேட்டா பழைய பதிப்புன்னு சொன்னங்க. 'அடடா, வட போச்சே'ன்னு நினைச்சிக்கிட்டே, மீனாட்சி புத்தக நிலையதுக்குள்ள கால் எடுத்து வச்சேன், அப்பிடியே உள்ள போயிடுச்சு, பாத்தா அரையடி ஆழத்துக்கு பள்ளம்.
அப்புறம் ஒரு மூணு மணிநேரம் சுத்தி வந்து வாங்கின புத்தகங்கள்,
விக்ரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன் - பிரேமா பிரசுரம் - Rs 85
நடந்தது நடந்தபடியே - தேவன் - அல்லயன்ஸ் - Rs 55
பள்ளிகொண்டபுரம் - நீல பத்மநாபன் - மணிவாசகர் - Rs 65 (காலச்சுவடு - Rs 225 )
புதுமைபித்தன் கட்டுரைகள் - மணிவாசகர் - Rs 40
வேள்வித்தீ - எம்வி வெங்கட்ராம் - மணிவாசகர் - Rs 20
நித்யகன்னி - எம்வி வெங்கட்ராம் - காலச்சுவடு - Rs 100
புலிநகக் கொன்றை - பிஎ கிருஷ்ணன் - காலச்சுவடு - Rs 145
உள்ளேயிருந்து சில குரல்கள் - கோபி கிருஷ்ணன் - வம்சி - Rs 60
கிருஷ்ணப் பருந்து - ஆ மாதவன் - தமிழினி (யுனைடெட் ரைட்டர்ஸ்) - Rs 65
சில நேரங்களில் சில மனிதர்கள் - ஜெயகாந்தன் - மீனாட்சி புத்தக நிலையம் - Rs 140
அம்மா வந்தாள் - தி.ஜா - ஐந்திணை - Rs 90
என் பெயர் ராம சேஷன் - ஆதவன் - உயிர்மை - Rs 120
துப்பறியும் சாம்பு - தேவன் - உயிர்மை - Rs 300
ஸ்ரீ ரங்கத்து கதைகள் - உயிர்மை - Rs 200
மறைவாய் சொன்ன கதைகள் - கி.ரா & கழனியூரன் - உயிர்மை - Rs 230
சுஜாதா நினைவுப் புனைவு 2009 - சுஜாதா நினைவு விஞ்ஞானகதை போட்டி தொகுப்பு - ஆழி - Rs 45
இதுக்கு மேல நடக்க முடியாதுங்கிற நிலைமை வந்ததுக்கபுறம் (ஆறரை மணிக்கு) வீட்டுக்கு கிளம்பினேன். வருபோது ஒழுங்கா வந்திட்டேனே, அது தப்பாசேன்னு நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதையை இரண்டு தடவை வலம் வந்து வீடு வந்து சேர்ந்தேன்.
நாள் 3 (01-01-2010)
நண்பன் பிரவீனோட, நாலரை மணிக்கு, நங்கநல்லூரிலிருந்து கிளம்பினேன் ('ந'னாவுக்கு, 'நா'னாவுக்கு, 'ந'னா. கவித, கவித). நாலு கவுண்டர் இருந்தாலும் ஒண்ணுலதான் டிக்கெட் குடுத்தாங்க. அலைமோதின கூட்டத்தில் வாங்கிக்கொண்டு உள்ளே நுழைந்தோம். நண்பன் கணினி சம்பந்தப்பட்ட புத்தகங்கள் வாங்கணும்னு சொன்னதால், அவனுக்கு வழி சொல்லி அனுப்பிவிட்டு நேரே உயிர்மை ஸ்டால் சென்றேன். அங்கே பதிவர்கள் ஜ்யோவ்ராம் சுந்தரையும், பைத்தியக்காரனையும் பார்த்தேன்.
அவர்கள் இருவரும் தீவிரமான இலக்கிய விவாதத்தில் ஈடுபடத் தொடங்கியதால் நடையைக் கட்டினேன். காணமல் போன நண்பனை தேடிச்சென்றபோது, மனுஷ்யபுத்திரன் ஓரிடத்தில் பார்த்தேன்.
நண்பனை பார்த்துவிட்டு திரும்பி வந்து உயிர்மை சந்தா கட்டிகொண்டிருந்த போது, சாரு வந்தார். ஜ்யோவ்ராம் சுந்தர் தான் வாங்கிய புத்தகங்களில் சாருவிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டார். நானும் ஒரு ஜெயமோகன் புத்தகம் வாங்கி அவரிடம் கையெழுத்து வாங்கலாமென்று நினைத்தேன் அப்புறம் அவர் அதை கிழித்துப்போட்டு விட்டால் என்ன செய்வது என்று நினைத்து, வெறுமனே கை குலுக்கினேன். "இதற்கு 750 ரூபாய் கேட்க மாட்டீர்களே" என்று உறுதி படுத்திக்கொண்டு ஒரு புகைப்படம் எடுத்தேன்.
நண்பன் வேண்டிய புத்தகம் வாங்கிக்கொண்டு வர கிளம்பினோம். நான் என்ன வாங்கினேன் என்று கேட்கிறீர்களா, (கேட்கவிட்டாலும் சொல்லுவேன்). தமிழினி, அன்னை புத்தகாலயம், அம்ருதா, விகடன் ஆகிய ஸ்டால்களில் விலைப்பட்டியல் வாங்கினேன். இன்னும் மூன்று முறையாவது செல்ல எண்ணியிருப்பதால், இன்று லீவ் விட்டுவிட்டேன்.
பின்குறிப்பு :
கோணங்கியின் "மதினிமார் கதை" புத்தகம் கிடைக்கவில்லை. எந்த பதிப்பக வெளியீடு என்று யாராவது சொன்னால் சந்தோஷம்.
அரங்குகளின் அகரவரிசை பட்டியல் கண்காட்சி அலுவலகத்தில் கிடைக்கிறது. வாங்கி பயன்பெறவும்.
இந்தவார குமுதத்தின் 'ஓ பக்கங்களை' கொடுத்தால் 30 % தள்ளுபடி தருகிறார் ஞாநி.
நான் சனிக்கிழமையும் செல்லலாம் என்றிருக்கிறேன், இணைந்துகொள்ள விரும்புவோர் தொடர்பு கொள்ளலாம்.9884088078
நன்றி
சங்கர்
25 comments:
திருவிழா களைகட்டுது போல இருக்கே..
வர(முடிய)லேன்னாலும் உங்க பதிவு மூலமா நாங்களும் கலந்துக்குவோம்ல :)
அசத்துங்க.
2007 கண்காட்சியில நான் சில புத்தகங்கள் வாங்கினேன். அதுக்கு காரணம், நடந்து போனா பத்து நிமிடத்தில் அரங்கத்தை அடைந்து விடும் தூரத்தில்தான் குடியிருந்தது. இந்த ஆண்டு திருவாரூரில் மாட்டிக்கொண்டதால் கஷ்டம்தான். இந்த மாதிரி பதிவுகளைப் படிக்கும்போது கொஞ்சம் திருப்தி.
கண்காட்சியில் பதிவர் சந்திப்புதான் அதிகம் நிகழுது. சூப்பர். நம்ம பதிவுலயும் அதே..
http://mynandavanam.blogspot.com/search/label/Book%20Fair
நீங்க வாங்கற புத்தகங்களை படிச்சு முடிக்கறதுக்குள்ளே 2011 புத்தக கண்காட்சி வந்துடும் போலருக்கே
மொத்தமாவே நான் 10 புத்தகங்களைதான் வாங்கியிருக்கேன்
http://kurumbugal.blogspot.com/2010/01/2010.html
super..
மதினிமார் கதை - முதல் பதிப்பு 1987யில் வெளிவந்தது.. என்ன பதிப்பகம் என்று பார்த்து விட்டு தங்களுக்கு மினஞ்சல் அனுப்புகிறேன் நண்பா...
@சுசி
சந்தர்ப்பம் கிடைத்தால் கண்காட்சி நடக்கும் நேரம் ஊருக்கு வாங்க
@சரண்
அச்சச்சோ, அடுத்த வருடமாவது பார்க்கலாம்
புது வீடு குடிபோயிருக்கீங்க, வாழ்த்துக்கள்
@butterfly Surya
நேத்தே உங்க பதிவ படிச்சிட்டேன், பின்னூட்டம் போட முடியல, இன்னொரு தடவை போலாமா, போன் பண்ணுங்க,
@குறும்பன்
2009 மார்ச் அப்புறம் புத்தகமே வாங்கவில்லை, அதுதான் இப்படி, இது ஆறு மாசம் தாங்கும்ன்னு நினைக்கிறேன்
//செந்தழல் ரவி said...
super..//
வாங்கண்ணே
//கார்த்திகைப் பாண்டியன் said...
மதினிமார் கதை - முதல் பதிப்பு 1987யில் வெளிவந்தது.. என்ன பதிப்பகம் என்று பார்த்து விட்டு தங்களுக்கு மினஞ்சல் அனுப்புகிறேன் நண்பா...//
நன்றிண்ணா,
என் மின்முகவரி, sanrv1f at gmail dot com
//நானும் ஒரு ஜெயமோகன் புத்தகம் வாங்கி அவரிடம் கையெழுத்து வாங்கலாமென்று நினைத்தேன் அப்புறம் அவர் அதை கிழித்துப்போட்டு விட்டால் என்ன செய்வது என்று நினைத்து, வெறுமனே கை குலுக்கினேன்.//
பாத்துங்க அடியாள் எல்லாம் வச்சிருக்காரு...
என்னது பெரிய பதிவா ? நீங்க வேற.. இந்த மேட்டர் எல்லாம் போர் அடிக்காது. பெரிய பதிவாவே எழுதுங்க. அடுத்தது படிக்க ரெடியா இருக்கேன்.
வலையுலகப்படைப்பாளிகள்-- தினமணி கட்டுரை
http://kaveriganesh.blogspot.com/2009/12/blog-post_31.html
ஆஹா... சனிக்கிழமை படங்களுக்காக வெயிட்டிங்கு... :(((((((((((((...
புத்தகப்புழுவ நான் பாத்ததில்ல..உங்கள ஒரு வாட்டி வந்து பாக்கலாமா? :)
புத்தக புழுவா? சங்கர் ஒரு புத்தக டைனோசர்:)
சரியான பு.புங்க நீங்க..
கிக்கி..
வாழ்த்துக்கள் 20-10 சிறக்க... :-)
//புத்தக புழுவா? சங்கர் ஒரு புத்தக டைனோசர்:) //
ஏது? இந்த ஜீன்ஸ் படத்துல காமிப்பாங்களே அந்த டைனோசரா :))
நான் ஒரு அடியாள் வாங்கினேன்!
//புலவன் புலிகேசி said...
பாத்துங்க அடியாள் எல்லாம் வச்சிருக்காரு...//
அவருகிட்டேயும் ஆட்டோகிராப் வாங்குவோம்
//பின்னோக்கி said...
என்னது பெரிய பதிவா ? நீங்க வேற.. இந்த மேட்டர் எல்லாம் போர் அடிக்காது. பெரிய பதிவாவே எழுதுங்க. அடுத்தது படிக்க ரெடியா இருக்கேன்.//
வந்துக்கிட்டே இருக்கு - நாள் 4
//கலகலப்ரியா said...
:(((((((((((((...//
அது தான் படமெல்லாம் போட்டு எழுதுறேனே, அப்புறம் என்ன அழுகாச்சி :)))
//வெற்றி said...
புத்தகப்புழுவ நான் பாத்ததில்ல..உங்கள ஒரு வாட்டி வந்து பாக்கலாமா? :)//
வா வா நேர்ல வச்சிருக்கேன்
Post a Comment