Thursday, January 7, 2010

இதுவும் ஒரு காதல் கதை

முன்குறிப்பு:
இது சமீபத்தில் டிவியில் பார்த்த Fastrack கண்கண்ணாடி விளம்பரம் (You tube லிங்க் கிடைக்கவில்லை, கிடைத்தால் அப்புறம் சேர்க்கிறேன்)  பார்த்ததில் தோன்றிய யோசனை இது,

இது ஒரு மொக்கைக் கதை மட்டுமே இதற்குள் உள்குத்து, நுண்ணரசியல் எதுவும் இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்


இதுவும் ஒரு காதல் கதை



என்னாச்சு, என்ன சொன்னார், உன்னை பொண்ணு பார்க்க வந்தவர்?
வந்தாரு, பார்த்தாரு, போயிட்டாரு,
அவரோட பேசினியா?
ம், பேசினேன், அரைமணிநேரம்,
என்ன சொன்னார்?
அவரைப்பத்தி சொன்னாரு, என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது, என்னென்ன பழக்கம் உண்டு, எல்லாம் சொன்னாரு,
உன்னைப் பத்தி என்ன சொன்னார்?
ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொன்னாரு,
நீ என்ன சொன்னாய்?
நானும் பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டேன்,
என்னது, பிடிச்சிருக்குன்னு சொன்னியா?
ஆமாம்,
சொல்றதுக்கு முன்னாடி, என் முகம் உனக்கு ஞாபகம் வரலையா?
வந்தது, ஆனா, அதுக்கும் முன்னாடி, எங்க அப்பாவோட முகம் ஞாபகம் வந்தது, அதனால் தான்,
கொஞ்சம் கூட நினைவில்லையா, எத்தனை நாள், எத்தனை போன் கால், எத்தனை மெசேஜ், எவ்வளவு மணி நேரம் பேசியிருப்போம், எல்லாம் ஒரு அரை மணி நேரத்தில் முடிஞ்சு போச்சா?
புரியாம பேசாதே, நான் முதலில் இருந்தே சொல்லிக்கிட்டுருந்தேன், இது நடக்காதுன்னு, நீ தான் பேசிப் பேசி என் மனச மாத்தினாய்,
நீயும் தான் மனசை மாத்திக்கிட்ட, எத்தனை நாள் சொல்லியிருக்கே, "நான் இல்லாம உன்னால வாழவே முடியாதுன்னு",
உண்மை தான், ஆனா என் அப்பாவோட முகத்தைப் பார்த்தா, அவர்கிட்ட சொல்லி மனசை நோகடிக்கத் தோணலை,
நிஜமாதான் சொல்றியா? இது தான் உன் முடிவா?
ஆமாம், நல்ல யோசிச்சிட்டுத்தான் இந்த முடிவை எடுத்திருக்கேன்,
சரி, அப்புறம் உன் இஷ்டம், போறதுக்கு முன்னாடி ஒண்ணே ஒண்ணு குடுத்துட்டு போ,
என்ன வேணும் உனக்கு? என்னைத் தவிர எது வேணும்னாலும் கேளு,
கவலைப்படாதே, உன்னையெல்லாம் கேட்கமாட்டேன்,
அப்புறம்,
ஒவ்வொரு நாளும் குறைஞ்சது, ரெண்டு மணி நேரமாவது, போன்ல பேசியிருப்போம், ஏதோ என் கம்பெனி சியூஜில வாங்கின கனெக்க்ஷன்கிறதால பில்லு எகிறாம இருந்தது, ஏற்கனவே மூணு நம்பர் என் பேர்ல வாங்கிட்டேன், வேற கிடைக்காது, அதுனால அந்த சிம்கார்டை மட்டும் கழட்டிக் குடுத்துட்டு போ, அடுத்து வருபவளுக்குகொடுக்கணும்.



பின்குறிப்பு
இதைக் கவிதையாக எழுதவே எண்ணியிருந்தேன், சரியான வார்த்தைகள் என்னிடம் சிக்காததால், நீங்கள்  தப்பிவிட்டீர்கள், கவிஞர்கள் யாராவது  இதனை கவிதையாக்க முயற்சிக்கலாம் (இங்கோ அல்லது உங்கள் பதிவிலோ).

நன்றி
சங்கர்

32 comments:

வெற்றி said...

கவிதையா எழுதலாம்..ஆனா விழுற அடிய யாரு சமாளிக்குறது..
அட போங்கப்பா இந்த விளையாட்டுக்கு நான் வரல..

வெற்றி said...

:) :)கடைசியா வர்ற ட்விஸ்ட் நல்லா இருந்துச்சு..

Starjan (ஸ்டார்ஜன்) said...

சங்கர் அருமையான கதை ; கடைசியில் திருப்பம் , ரொம்ப நல்லாருக்குது .

கவிதையாக எழுத முயற்ச்சிக்கிறேன் .

நன்றி சங்கர்

Chitra said...

இந்த "காவிய" காதலுக்கு கவிதை எழுத முடியலையா? போங்கப்பா...

நசரேயன் said...

கவிதை .. கவிதை

சுசி said...

அடப்பாவி.. (சாரி இந்த திருப்பத்த முடிவில நான் எதிர்பார்க்கல.. )

உங்க (சொந்த)கதை நல்லாருக்கு சங்கர்.

சுசி said...

உங்க கதையே கவிதை மாதிரி இருக்கு.. இதில நான் எதுக்கு கவிதையா எழுதணும்??
ஆவ்வ்வ்..

திருவாரூர் சரவணா said...

ரொம்ப நல்லா இருக்கு இப்படியே மெயின்டெயின் பண்ணுங்க. நாட்டு நடப்பு ரொம்ப நல்லா இருக்குதே. அதானே...காதுல புகை வர்ற அளவுக்கு பேசலாம். பர்சுல புகை வந்தா பசங்களால தாங்க முடியுமா என்ன?

சங்கர் said...

//வெற்றி said...
கவிதையா எழுதலாம்..ஆனா விழுற அடிய யாரு சமாளிக்குறது..
அட போங்கப்பா இந்த விளையாட்டுக்கு நான் வரல..//

நீ எழுது, நான் பாத்துக்குறேன்

சங்கர் said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
சங்கர் அருமையான கதை ; கடைசியில் திருப்பம் , ரொம்ப நல்லாருக்குது .
கவிதையாக எழுத முயற்ச்சிக்கிறேன் .//

ரொம்ப நன்றிங்க

சங்கர் said...

//Chitra said...
இந்த "காவிய" காதலுக்கு கவிதை எழுத முடியலையா? போங்கப்பா...//

இப்படி ஏதாவது எழுதிப் பழகினால்தான், பின்னாடி காவியமெல்லாம் எழுத முடியும்

சங்கர் said...

//நசரேயன் said...
கவிதை .. கவிதை//

ரெண்டு கவிதை எழுதப்போறீங்களா?

சங்கர் said...

//சுசி said...
உங்க (சொந்த)கதை நல்லாருக்கு சங்கர்.//

யக்கா, அதுதான் தெளிவா முன்குறிப்பு, லேபிள் எல்லாம் போட்டிருக்கேனே, அப்புறமும் இப்படி சொன்னா எப்படி

சங்கர் said...

//சுசி said...
உங்க கதையே கவிதை மாதிரி இருக்கு.. இதில நான் எதுக்கு கவிதையா எழுதணும்??
ஆவ்வ்வ்..//

இப்படி சொல்லியே எஸ்கேப் ஆயிடுவீங்களே

சங்கர் said...

//சரண் said...
ரொம்ப நல்லா இருக்கு இப்படியே மெயின்டெயின் பண்ணுங்க. நாட்டு நடப்பு ரொம்ப நல்லா இருக்குதே. அதானே...காதுல புகை வர்ற அளவுக்கு பேசலாம். பர்சுல புகை வந்தா பசங்களால தாங்க முடியுமா என்ன?//

அதானே, சரியா சொன்னீங்க

பிரபாகர் said...

இந்த கதையே கவிதை மாதிரிதான் இருக்கு. நல்லாருக்கு சங்கர்.

பிரபாகர்.

பிரபாகர் said...

ரொம்ப ஆசப்பட்டா அண்ணன் கவிதையா முயற்சிக்கிறேன்.

பிரபாகர்.

சங்கர் said...

@பிரபாகர்

அதுதான் கவிஞர்கள் யாரவதுன்னு போட்டுட்டேனே, நீங்க எழுதலேன்னா எப்படி

Paleo God said...

என்னுடைய தூண்டில் முள்
எப்போதும் உன்னை குத்தாது
காதல் சொல்லிய அது எப்போதும்
காமம் கேட்க்காது

உன் சுயம்வரத்தில்
மாலைகள் மட்டுமே
பங்கேற்க வேண்டும்
மறந்தவைகள் அல்ல

அடியே
என் செவ்வக இதயத்தை
திருப்பிக் கொடுத்துவிடு
அது தோழிகளுக்கானதல்ல..


is it ok bro:)))))))
i will post after ur approval:))

Romeoboy said...

\\சரியான வார்த்தைகள் என்னிடம் சிக்காததால், நீங்கள் தப்பிவிட்டீர்கள், //

இப்ப மட்டும் என்னவா??

நல்ல வேலை முதலே இது மொக்கை பதிவுன்னு சொல்லிடிங்க அதனால் சீரியசா படிக்கல.

சங்கர் said...

//பலா பட்டறை said...
என்னுடைய தூண்டில் முள்
எப்போதும் உன்னை குத்தாது
காதல் சொல்லிய அது எப்போதும்
காமம் கேட்க்காது

உன் சுயம்வரத்தில்
மாலைகள் மட்டுமே
பங்கேற்க வேண்டும்
மறந்தவைகள் அல்ல

அடியே
என் செவ்வக இதயத்தை
திருப்பிக் கொடுத்துவிடு
அது தோழிகளுக்கானதல்ல.. //


என்டர் கவிதை எதிர்பார்த்தேன் நிஜக்கவிதையே வருது, ஒண்ணும் புரியல

சங்கர் said...

கவிதை நல்லாவே புரியுது

சங்கர் said...

//Romeoboy said...
இப்ப மட்டும் என்னவா??

நல்ல வேலை முதலே இது மொக்கை பதிவுன்னு சொல்லிடிங்க அதனால் சீரியசா படிக்கல. //

படிச்சதுக்கு அப்புறம் எதுவும் சீரியஸ் ஆகிவிடவில்லையே

Paleo God said...

கவிஞர்கள் யாராவது இதனை கவிதையாக்க முயற்சிக்கலாம் (இங்கோ அல்லது உங்கள் பதிவிலோ).//

என்டர் கவிதை எதிர்பார்த்தேன் நிஜக்கவிதையே வருது, ஒண்ணும் புரியல//

கரெக்ட்டா சொல்லனமில்ல:))

கடைக்குட்டி said...

கழுத.. கழுத..

ச்சே..

கவித கவித.. :-)

ஸ்ரீராம். said...

காதலே ஒரு கவிதைதானே ... எனவே எப்படி எழுதினாலும் அது கவிதைதான்.

சங்கர் said...

//பலா பட்டறை said...
கரெக்ட்டா சொல்லனமில்ல:)) //

நீங்க கரெக்ட்டா கவிதை எழுதிட்டீங்களே, அதுவே போதும் :))

சங்கர் said...

//கடைக்குட்டி said...
கழுத.. கழுத..//

ரெண்டு புடிச்சு அனுப்புறேன்

சங்கர் said...

//ஸ்ரீராம். said...
காதலே ஒரு கவிதைதானே ... எனவே எப்படி எழுதினாலும் அது கவிதைதான்.//

எப்புடி இப்புடி, முடியல :))))

புலவன் புலிகேசி said...

இப்ப்டித்தான் நடந்துகிட்டிருக்கு இப்பல்லாம்..

Muthu said...

ரொம்ப நல்லா இருக்கு

vasu balaji said...

இந்த மட்டுக்குதான் இருக்கு யதார்த்தம். இது மொக்கையில்லை.வாழ்வியல்:)