Friday, December 31, 2010

கில்மானந்தாவின் புது வருட சிந்தனைகள்...!!

கில்மா ரிட்டன்ஸ்...!!


கில்மனந்தா வழங்கும் ஸ்பெஷல் புத்தாண்டு அருளுரைகள்...

"ராத்திரி நேரத்து பூஜையில்...டன்டக்கு டின்டக்கு...ரகசிய தரிசன ஆசையில்..ஹா ஹா அது ஆராதனை ...." என்ற பின்னணி இசையில் வந்து அமர்கிறார் கில்மானந்தா.

பக்த கோடிகளே.... உங்கள் எல்லாருக்கும் என் இனிய கில்மா புத்தாண்டு
வாழ்த்துக்கள்..போன வருஷம் போல் இந்த வருசமும் அனைவரும் கில்மாவாக இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன். பல பேர் போன வருஷம் பயங்கர வறட்சியா இருந்ததுனு சொன்னாங்க..யார் சொன்னது வறட்சியா இருந்ததுனு...நம்ம காஞ்சிபுரம் தேவநாதன் இயக்கி நடித்த பிட் படங்கள் போதாதானு கேட்குறேன்...இது தவிர நம்ம சகா நித்தியானந்தா ஒருத்தர் சிக்குனாரே...பாவம்ப்பா தேவநாதன்க்கு ஆவது பிட் படம் தான் வந்தது பாவம் நித்தியாக்கு கொண்டைல பேன் எடுக்குற வீடியோ முதற்கொண்டு எல்லாம் வந்ததே......இது வறட்சியான வருஷமா இல்லையானு நீங்களே முடிவு பண்ணிக்கிங்க பக்தர்களே....!!


"ஹோ..கில்மா ஜே ரவ..."சென்ற 2010 வருடம் போல் இந்த வருடமும்
அனைவரும் மப்பும் டப்பும் செழிக்க அடியேனின் வாழ்த்துக்கள்.....!!


********************************'
கில்மானந்தாவின் சிந்தனை துளிகள்...


# ஏதோ வித்யாபாலன்னு ஒரு பொண்ணு ஹிந்தி படத்திலே சில்க் ஸ்மிதா
வாழ்க்கை வரலாறு படத்துல நடிக்குதாமே....இதில் இருந்து என்ன தெரியுது...
நம்ம ஊரோட பெருமை நமக்கே தெரியலை...எவனோ ஹிந்திகாரன் சில்க்
பத்தி படம் எடுக்குறான்....என்னவோ போட மாதவா,..சில பல பிட் இருந்தா
சரி....!!

# ஆணவத்தில் ஆடுறவன்....சரக்கு அடிச்சுட்டு ஆடுறவன்....
ரெண்டுத்துல யாரு பெட்டர்னு நீங்களே முடிவு பண்ணிக்குங்க...!!

****************************************

கில்மாநந்தா அழைக்கிறார் வாரீர்! வாரீர்! வாரீர்!!

வாழ்க்கையில் ஏமாற்றத்தை தவிர்க்க எங்க கிட்ட வந்து ஏமாறுங்க....
அதாவது தீட்சை பெற உடனே அணுகவும்... தீட்சை பெற்ற பின்
வாழ்க்கையில் துன்பமோ, பண கஷ்டமோ வரவே வராது, யாருக்கு
என்று கேட்பவர்களுக்கு அனுமதி இல்லை. தீட்சை கூட்டம் நடைபெறும்
இடம் : கோவிந்தா மண்டபம்.

********************************************
கில்மானந்தாவின் டாஸ்மாக் பாடல்:
அட்டு சரக்கு அடித்த போது கில்மாவுக்கு வந்த பாட்டு....
((வானம் ரீமிக்ஸ்))



உன்னை பார்த்த பத்து நிமிஷாம என்னை காணோம்...
போதை ஏறாம திரியிரேன் கண்டபடி நானும்...
சத்தியமா உனக்கு நான் வேணாம்
கண்டிப்பா எனக்கு நீ வேணும்
நான் பிளாட்பார்மில் விழுந்து கிடந்தா கூட
இல்லை டாஸ்மாக்கில் படுத்து கிடந்தால் கூட
தயவு செய்து ஒரிஜினல் சரக்கு மட்டும் எனக்கு கொடு...

எவன்டி உன்னை பாட்டில்ல அடைச்சான் அடைச்சான் அடைச்சான்...
கைல கிடைச்சா செத்தான் செத்தான் செத்தான்.....

**************************

கொஞ்சம் சினிமா....

# பொங்கலுக்கு நான் சிறுத்தை தான் போலாம்னு ப்ளான் பண்ணேன். ஆனா ட்ரைலர் பார்த்ததில் இருந்து அந்த எண்ணத்தை தள்ளி
வச்சிட்டேன். சிறுத்தை படத்தோட ட்ரைலர்க்கே சூப்பர் ஹிட்னு போட்டு
விளம்பரம் பண்றாங்க...ட்ரைலர்லே ஆந்திரா வாசம் அனல் பறக்குது... ரவிதேஜா போட்ட ஜ.. சாரி சட்டை கூட மாத்தாம படம் எடுத்து இருப்பாங்களோ.....??

# சத்யத்தில் மன்மத சொம்பு பார்க்கிறது முன்னாடி இளைஞன் படத்தோட
ட்ரைலர் சாரி மினி கதையே போட்டு காட்டனாங்க...இந்த மாதிரி உலக
மகா ட்ரைலர்ஆ நான் பார்த்ததில்லைடா சாமி.... ஏற்கனவே ஒரு மொக்கை
படத்தை பார்க்க போறாங்கனு தெரிஞ்சும் முன்னாடி ஒரு மகா மொக்கை
ட்ரைலர் போட்ட ஆப்பரேட்டர் வாழ்க...வளர்க...!!

**********************

கடைசியா நம்ம மக்கள் நாயகன் ராமராஜன் மேதை படத்தில் இருந்து நம்பிக்கை வரிகள்....

"எப்போதும் எல்லாருக்கும் நல்லதை செய்...
தப்பாம நன்மை வரும் நம்பிக்கை வை..."


**************************************
யாருக்கும் இடையுறு இல்லாமல் வாழ்வோம்....மகிழ்வோம்....

உங்கள்
ஜெட்லி...(சரவணா...)

Wednesday, December 22, 2010

ஈசன் - லேட்டான பார்வை!!

ஈசன் --- கடைசி பார்வை...!!





நிறைய பேரு மொக்கை, டப்பா மற்றும் சசிகுமார் கிட்ட இருந்து இப்படி
ஒரு படத்தை எதிர்ப்பார்க்கலனு சொன்னதுக்கு அப்புறம் நான் மட்டும் பெருசா என்னத்த எதிர்ப்பார்த்து தியேட்டர்க்கு போய்ட போறேன். சும்மா போனதுனாலே என்னவோ படம் ஓரளவுக்கு நல்லா தான் போச்சு...

பதிவுலகை பொருத்த வரைக்கும் நாம தனி தன்மையா தெரியறதுக்கு இல்ல ஒரு வித ஈகோனு கூட சொல்லலாம் அதாவது ஊரே மொக்கைனு சொல்லும் அதை சூப்பர்னு சொல்லணும்...ஊரே சூப்பர்னு சொல்லும் அதை நாம மொக்கைனு சொல்லணும்....ஆனா நான் அப்படி எதுவும் இங்க சொல்ல வரலை...இது வரைக்கும் மொக்கை படம்னு ஈசன் படத்தை பார்க்காதவங்க சும்மா எந்த வித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் பார்த்தால் கண்டிப்பா பிடிக்கும்...தாரளமா ஒரு தடவை பார்க்கலாம்...குறிப்பு : 'தியேட்டர்'ல ஓடுனா...


என்னடா இவன் ஈசன்க்கு சப்போட் பண்ணி பேசுறான்னு பீல் பண்ணாதீங்க....அப்படி எல்லாம் பேச மாட்டேன்...படத்துல எனக்கும் பிடிக்காத சில விசயங்கள் இருக்கு... முதல்ல படத்தோட நீளம்....அப்புறம் அழகப்பன்...அவுருக்கு தான் ரியாக்சனே சரியா வரலையே எப்படி சசி தேர்ந்து எடுத்தார்னு தெரியலை...பல இடங்களில் அவர் பண்ணவுது தான் காமெடியாக இருந்தது எனக்கு....பிளாஷ்பேக் காட்சி ரொம்ப நீளம்...அதே போல் அபிநயா உடனே மாடர்ன் ஆறது எல்லாம் மனதில் ஒட்டவில்லை...அதே போல் கிளைமாக்ஸ்ல மினிஸ்டரை சுட்ட சமுத்ரகனி மேல என்ன அக்சன் எடுத்தாங்கனு காட்டவே இல்லை?? ஒரு வேளை நம்ம இருபது வருஷம் தமிழ் சினிமாவில் வர்ற மாதிரி இவன் என்னை சுட்டான் அவன் அவனை சுட்டான்னு மக்கள் புரிஞ்சப்பாங்கனு விட்டுட்டாரோ சசி ??


சரி நல்ல விசயத்துக்கு வருவோம்...அப்படின்னு படத்துல பார்த்தா வெறும்
சங்கையா கேரக்டர்ல வரும் சமுத்ரகனி மட்டுமே...செமையா பண்ணி இருக்கார் மனுஷன்...அப்புறம் சொல்லணும்னா சில வசனங்கள் நல்ல இருந்தது...பாட்டு கொஞ்சம் ஓகே... படம் ரொம்ப மொக்கைனு சொல்ல முடியாது...


தியேட்டர் நொறுக்ஸ் :

# அடையார் கணபதிராமில் தான் இரவு காட்சி படம் பார்த்தேன்....படம்
விட்டுட்டு வெளியே வந்தா ஈசன் போஸ்டர்ஏ காணோம் எல்லாம் மன்மத
அம்பு போஸ்டர் ஆகி போச்சு...அதனால தான் சொன்னேன் பார்க்குறவங்க
இன்னிக்கு தியேட்டர்க்கு போனா தான் உண்டு....ஈசன் ஒரு வாரம் சாரி ஆறு
நாள் படமாகும்னு நான் நினைச்சு பார்க்கல...


உங்கள்...

ஜெட்லி...(சரவணா...)

Monday, December 20, 2010

2010 இன் டாப் 10 மொக்கை படங்கள்...!!

2010 இன் டாப் 10 மொக்கை படங்கள்...!!

போன வருஷம் சொன்னா மாதிரி தான் மொக்கை படம் பார்ப்பதால் பொறுமையும்,சகிப்பு தன்மையும் கண்டிப்பாக கண்டமேனிக்கு வளரும் அதனால் எல்லாரும் மொக்கை படம் பார்க்கணும். ஆனா இப்ப சில மாசமா என்னால மொக்கை படத்துக்கு போக முடியல. மாஸ்கோவின் காவேரி, துரோகி, வம்சம், ரத்த சரித்தரம்னு எந்த படத்துக்கும் போக முடியல....அதனால இது எல்லாம் லிஸ்ட்இல் வராது...


இன்னொரு முக்கியமான விசயம் இது நான் பார்த்த படங்களில் எனக்கு மொக்கையாக ப்பட்டது மட்டுமே வரிசை படுத்தி இருக்கிறேன். சில படங்கள் உங்களுக்கு பிடித்து இருக்கலாம் அதனால கோச்சிக்காதீங்க...!!

********************************
10. தில்லாலங்கடி...(உட்டாலக்கடி)

http://nee-kelen.blogspot.com/2010/07/blog-post_23.html
கிக் படத்தோட ரீமேக்னு சொன்னாங்க....ஆனா படத்துல தான் கிக்கே இல்லை...வடிவேல் காமெடி ஓகே...படம் ரொம்ப நீளம்...பாட்டு மொக்கை.


9.கோவா...(கோ கோ அவே)


http://nee-kelen.blogspot.com/2010/01/blog-post_29.html
முதல்ல நல்ல தான் போச்சு...போக போக பிரேம்ஜி பண்ற காமெடி எல்லாம்
எரிச்சல் ஆகி போச்சி... தீடிர்னு கப்பல் காட்டறாங்க ..ஸ்னேஹா வர்றாங்க.
அப்படியே போச்சி...


8.அய்யனார் (நார்..நார்...)


பாட்டு மட்டும் நல்லா இருந்தது...ரெண்டாவது பாதி தான் முடியல...அடுத்த
வருடம் ஆதியிடம் இருந்து நல்ல படங்களை எதிர்ப்பார்க்கிறேன்....


7.குட்டி.. (உடைஞ்ச சட்டி)


பல படத்தில் பார்த்த காட்சிகள்...தனுஸ்க்கு அந்த கேரக்டர் செட் ஆகலைனு
தான் சொல்லணும். கடைசி அரைமணி நேரம் செம பிளேட்.


6.துரோகம் நடந்தது என்ன...(ஒன்னுமே நடக்கலையே...)
http://nee-kelen.blogspot.com/2010/06/blog-post_15.html


ஏன்டா அட்டு படத்தை இந்த லிஸ்ட்ல சேர்த்தேன்னு நீங்க கேட்கலாம்...
இந்த வருஷம் வந்த பல படங்களை விட இது அதிக வசூல் ஆகி இருக்க
வாய்ப்பிருக்கு...ஏற்கனவே சொன்னது தான்...இந்த படத்தோட இயக்குனர்
தான் படம் பார்த்த அனைவருக்கும் துரோகம் பண்ணிட்டார்...சீனே இல்லை.


5.குரு சிஷ்யன்..(ஹி..ஹி...)
http://nee-kelen.blogspot.com/2010/05/blog-post_11.html


தமிழ்ல இந்த மாதிரி படங்கள் வர கூடாதுனு சொல்றதுக்கு இந்த படம் ஒரு
உதாரணம். சந்தானம் மட்டுமே ஷோ ஸ்டீலர்.சத்யராஜ் எல்லாம் கேரக்டர்
ஆர்டிஸ்ட் ஆக வேண்டிய நேரம் இது....!!


4. அசல்...(மெய்யாலுமே மொக்கை...)
http://nee-kelen.blogspot.com/2010/02/blog-post_08.html


இந்த படத்தில் எனக்கு பிடிச்ச ஒரே விஷயம் படம் ஓடுற டைம் தான்.....
என்ன தான் மொக்கை போட்டாலும் உன்னை ரெண்டு ஹவர்ல வீட்டுக்கு
அனுப்பிருவோம்னு சொன்ன அவங்க டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சு
இருந்தது...அதனால தான் அசலுக்கு நாலாவது இடம்...


3.வ...குவாட்டர் கட்டிங்...(மப்பு இல்ல...)

தியேட்டர்க்கு வானு கூப்பிட்டு செம மொக்கை போட்டாங்க..அதுவும் ஜான்
விஜய் கேரக்டர் கொஞ்சம் ஓவர் ஆகி போச்சு... சில சில காமெடிகள் ஓகே..
தீபாவளியை இந்த படம் கெடுத்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.


2.மாத்தியோசி...(யோசிக்கவில்லையே...)
http://nee-kelen.blogspot.com/2010/03/blog-post_12.html
எங்கே யோசிச்சாங்கனு இயக்குனர் கிட்ட தான் கேட்கணும்....


2. ராவணன்...(பத்து தலை தலைவலி..)
http://nee-kelen.blogspot.com/2010/06/blog-post_18.html


இந்த படம் பார்த்துட்டு இருக்கும் போது எனக்கு ஒன்னுமே புரியலை...
இனிமே மணிரத்தினம் படம் பார்க்க போறதுக்கு முன்னாடி ஒரு வாரம்
ஸ்பெஷல் கிளாஸ் அட்டென்ட் பண்ணனும் போல....அது சரி அவர் எங்க நமக்கு படம் எடுக்குறார், அவர் பணம் எடுக்க தானே படம் எடுக்குறார்.


2.வெளுத்துக்கட்டு...(ஹ்ம்,,,கட்டணும்)
http://nee-kelen.blogspot.com/2010/07/blog-post_02.html


எஸ்.ஏ.சி. அவர்கள் வாழ்க்கையில் நடந்த கதைன்னு சொல்லிட்டு பத்து படத்தோட கதையை போட்டு படத்தை முடிச்சுட்டாங்க. ஏதோ படம் பார்க்க வந்த ஆட்டோ டிரைவர்களால் எனக்கு டைம் பாஸ் ஆச்சு....


1.வாடா...(வந்துட்டேன்..)
http://nee-kelen.blogspot.com/2010/04/blog-post_14.html


வாடா காவியத்தை பார்க்க ரெண்டு கண் பத்தாது...மேலும் விவேக் காமெடி
செம சிரிப்பு??... வாடாவை பத்தி ஏற்கனவே பல தடவை அலசிவிட்டதால்
விட்டு விடுவோம்....


1.தம்பிக்கு இந்த ஊரு...(வெளியே சொல்லிடாதே)
http://nee-kelen.blogspot.com/2010/03/blog-post_09.html


இந்த படத்தை சொல்றதுக்கு வார்த்தையே இல்லை...மொக்கைனு சொன்னா
அதுக்கு மொக்கைக்கே கேவலம் ஆயிடும்...!!நான் ராஜலீலை படத்துக்கு
போனும்னு தான் போனேன்...என் கெரகம் இந்த மகா காவியத்தை
பார்க்கனும்னு தலைவிதி...வேற என்ன சொல்றது..

1.சுறா...(காஞ்சி போன எறா)


நான் முதல் பாதியிலே வெளியே எந்திருச்சு வந்துருலாம்னு தான் யோசிச்சேன்...ஆனா முதல் ஷோ போனதால் வெளியே அடுத்த ஷோக்கு காத்திருக்கும் ரசிகர்களுக்கு என்ன பதில் சொல்றதுனு தெரியாம அப்படியே உட்கார்ந்து இந்த மரண காவியத்தை ரசித்தேன்.....


வரும் வருடங்களில் மேலும் பல மொக்கை படங்களை பார்க்க அளவுக்கு
அதிகமா பொறுமையும், சகிப்பு தன்மையும் கண்டமேனிக்கு வளர ஆண்டவனை வேண்டுகிறேன்....!!


இந்த வருஷத்தில் எனக்கு பிடிச்ச படங்கள்னு பார்த்தா... ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, மைனா, அங்காடி தெரு, மதராசப்பட்டினம்,இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்,பாஸ், ........


நீங்களும் பின்னூட்டத்தில்(கமெண்ட்இல்) நீங்கள் இந்த வருடம் பார்த்து வெறுத்த மொக்கை படங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...அப்படியே உங்கள் வோட்டையும் போட்டுருங்க....


உங்கள்
ஜெட்லி...(சரவணா...)

Tuesday, December 14, 2010

அய்யனார் - மொக்கையா சக்கையா??

அய்யனார்....






நிறைய பேரு நீங்க ஏன் கல்யாணத்துக்கு அப்புறம் முதல் படமா நகரம்
பார்த்தீங்கன்னு கேலியும் கிண்டலுமா கேட்டு, காத்திருந்து நல்ல படம்
வரும் போது போய் இருக்கலாம்னு சொன்னாங்க. நல்ல படம் எப்ப
வர்றது நான் எப்போ போய் படம் பார்க்குறதுனு சொல்லிட்டு இந்த வாரம்
அய்யனார் போய்ட்டேன் ஸ்வர்ண சக்தி அபிராமியில் செம கூட்டம்
வாஷ்ரூமில் மட்டும்னு சொல்ல வந்தேன் யுவர் ஆனர்...கொஞ்சம் சின்னது
தான் அப்புறம் கொஞ்ச நேரத்தில் அதுவும் காலி ஆயிடுச்சு தியேட்டர் மாதிரி !!

அய்யனார் படத்துக்கு போறதுக்கு முக்கிய காரணம் தமன்....பாடல்களில் மட்டும் அல்லாமல் பின்னணி இசையிலும் தமன் கல் உடைத்து இருக்கிறார். அப்புறம் ஆதி ஈரத்துக்கு அப்புறம் வர்ற படம் எப்படி பண்ணி இருக்கிறார் என்று பார்க்கலாம்னு போனேன். அவர் உடம்புக்கு சண்டை காட்சி எல்லாம் ஓகே தான் ஆனா கொஞ்சம் ஓவர்டோஸ் மாதிரி இருந்தது.


சந்தானம், முதல் பாதியில் மட்டுமே வந்தார் வர்ற சீன்லாம் நல்ல தான் இருந்தது...ஆனா ரெண்டாவது பாதியில் ஆளே காணோம்...நாயகிக்கு ஒண்ணும் பெருசா வேளை இல்லை...ஏதோ ரெண்டு பாட்டுக்கு உதவி பண்ணி இருக்காங்க.முக்கிய கேரக்டர் ஆதியின் தம்பியாக வரும் விஷ்ணுப்ரியன் நினைத்தாலே இனிக்கும் படத்தில் வருவார். நல்லாவே பண்ணி இருந்தார். ஆனா ஏன் அவருக்கு ஆதி மேல இவளோ காண்டுனு தெரியலை.

ஆதி, படம் ஆரம்பத்தில் இருந்து ஊதாரி, குடிகாரனா காட்டிட்டு தீடிர்னு வாலிபால் காமிச்சிட்டு கோச்னு சொல்றாங்க...அப்புறம் தீடிர்னு மத்திய அரசு வேலை கிடைச்சுடுச்சுனு சொல்றாங்க.... அப்புறம் குடும்பமா சேர்ந்து பாட்டு பாடுறாங்க...படத்தை பார்த்துட்டு இருந்தப்போ நான் கொஞ்சம் குழம்பிட்டேன் எது ப்ளாஷ்பேக்னு தெரியலை....அப்போ அரைமணி நேரம் கழிச்சு படம் பார்க்கவந்த நாலு பேருக்கும் என்ன புரிஞ்சுருக்கும்னு யோசிச்சிட்டு இருக்கேன்....

இந்த படம் கமர்சியல் படமா இல்லை சஸ்பென்ஸ் படமா என்பதை இயக்குனர் தான் சொல்லவேண்டும். முதல் பாதி சூப்பர்ஆ போச்சு ஆனா இன்டெர்வல் டைம்ல படத்தோட மொத்த கதை, திரைக்கதை எல்லாத்தையும் யூகிக்க முடிஞ்சதும் அதுவே திரையில் வர்றதும் கொடுமையான விஷயம். மாவட்டம்னு ஒருத்தர் வந்து சிக்னல் கிடைக்கலன்னு நடு ரோட்ல வந்து பேசுறது ரொம்ப ஓவர்....சுந்தர புருஷன் படத்தில் இருந்து மாப்பிள்ளையாக வருபவர் இதிலும் மாப்பிள்ளையாகவே வருகிறார் என்பது லிம்கா புத்தகத்தில் இடம் பெற வேண்டிய சாதனையாகும்.


இந்த படம் ரொம்ப மொக்கை இல்ல ஆனா மொக்கை தான்.

அய்யனார் - வெறும் தேங்காய் நார்.

இந்த விமர்சனம் மாதிரி பல பேரை சென்று அடைய உங்கள் வாக்கினை போடுங்கள்...

நன்றி...

ஜெட்லி...(சரவணா...)

Friday, December 10, 2010

பேஸ்புக், விருதகிரி, க்ளிக்ஸ்.......

பேஸ்புக், விருதகிரி, க்ளிக்ஸ்.......


படத்துக்கு போறது கொஞ்சம் குறைஞ்சு போச்சு...முன்னெல்லாம் மொக்கை
படம்னாலும் தெரிஞ்சே போவேன்...ஆனா இப்ப அப்படி போக முடியறது இல்லை.போன வாரம் ரத்த சரித்தரம் , சிக்கு புக்குனு வந்தாலும் போக தோணல...விருதகிரி வேற ரீலீஸ் ஆகுது, பாருங்க கேப்டன் படத்தை கூட பார்க்க முடியல.... ஆனா ட்ரைலர் செம டரியல்....நாம கூடிய விரைவில் நாட்டுக்கு தேவை இல்லாத பல விசயங்களை பற்றி விவாதிப்போம்....



இப்போதைக்கு நான் பேஸ்புக்கில் அப்போ அப்போ அப்டேட் பண்றேன்...


பேஸ்புக் அப்டேட்ஸ்....


"நான் எதையும் தேடி போவதில்லை வருவதை ஏற்று கொள்கிறேன்..."
நடிகர் பிரபுதேவா பேட்டி!!

அட தினத்தந்தியில் ஹெட்லைன் படிச்சவுடன் நானும் நயன்தாரா, ஹன்சிகா
பத்தி தான் சொல்றாரோனு தப்பா நினைச்சிட்டேன்ப்பா....அவர் பட வாய்ப்பை
தான் சொல்றாருனு புல்லா படிச்ச அப்புறம் தான் தெரிஞ்சது...!!


*****************************************


டி.வி.நொறுக்ஸ்....

ட்ரைலரில் விஜயகாந்த் "பன்ச்" வசனம்...

"டேய் நான் விருதகிரிடா.... பஞ்சபூதத்தோட மொத்தம் உருவம்டா...."

"பார்த்தாலே தெரியுது..."

அருகில் ட்ரைலர் பார்த்து கொண்டிருந்த நண்பன் சொன்னது...

****************************************

செய்தி : டென்னிஸ் உலகின் சூப்பர் ஸ்டார் பீட் சாம்ப்ராஸ் வென்ற அனைத்து கோப்பைகளும் திருடு போயின.....தன் டென்னிஸ் வரலாறே திருடி போய் விட்டதாக சாம்ப்ராஸ் அதிருப்தி...!!

என் கருத்து :
இதுக்கு தான் நான் எந்த போட்டியிலும் கலந்துகிறது இல்ல....



**************************************

எத்தனை மொக்கை படத்தில் இருந்து பல பேரை காப்பாத்தி இருக்கேன்....

சமூக சேவர் பட்டம் எனக்கும் கிடைக்குமா???

அப்படியே திருவான்மியூர் பக்கம் 60 லட்சத்தில் வீடு ஒதுக்குவாங்களா??



*********************************



வளரும் நடிகர்களுக்கு இணையாக இவங்களும் போட்டி போடுராங்களேப்பா......
பை தி வே இந்த படத்தை நான் பார்க்கலைன்னு சொல்லி கொள்ள விரும்புகிறேன்...




**************************************


யாத்தே யாத்தே யாத்தே என்னச்சோ....யாத்தே யாத்தே யாத்தே எதச்சோ....

செம பாட்டு....

ஆமா யாத்தே னா என்ன அர்த்தம்??



*************************

மழை செம காட்டு காட்டுது.....!!

வீட்டுக்குள்ள இல்லனா தெருக்குள்ள மழை தண்ணி வரலைனா கூட,,,,கண்டிப்பா இந்த வருஷம் நிவாரண தொகை கிடைக்கும்னுஎனக்கு நம்பிக்கை இருக்கு....

தேர்தல் வருதுடோய்....!!


*****************************

சமீபத்தில் மூணார் சென்று வந்தேன்....அங்கே க்ளிக் செய்த சில படங்கள்
உங்கள் பார்வைக்கு....

இதுவரை மலையாள அட்டு படங்களை மட்டும் பார்த்தவன்...

இப்போது மலையாள பேப்பர் படிக்கும் அரிய காட்சி....!!








********************************
மீண்டும் சந்திப்போம்.....
ஜெட்லி...(சரவணா...)