Friday, December 10, 2010

பேஸ்புக், விருதகிரி, க்ளிக்ஸ்.......

பேஸ்புக், விருதகிரி, க்ளிக்ஸ்.......


படத்துக்கு போறது கொஞ்சம் குறைஞ்சு போச்சு...முன்னெல்லாம் மொக்கை
படம்னாலும் தெரிஞ்சே போவேன்...ஆனா இப்ப அப்படி போக முடியறது இல்லை.போன வாரம் ரத்த சரித்தரம் , சிக்கு புக்குனு வந்தாலும் போக தோணல...விருதகிரி வேற ரீலீஸ் ஆகுது, பாருங்க கேப்டன் படத்தை கூட பார்க்க முடியல.... ஆனா ட்ரைலர் செம டரியல்....நாம கூடிய விரைவில் நாட்டுக்கு தேவை இல்லாத பல விசயங்களை பற்றி விவாதிப்போம்....இப்போதைக்கு நான் பேஸ்புக்கில் அப்போ அப்போ அப்டேட் பண்றேன்...


பேஸ்புக் அப்டேட்ஸ்....


"நான் எதையும் தேடி போவதில்லை வருவதை ஏற்று கொள்கிறேன்..."
நடிகர் பிரபுதேவா பேட்டி!!

அட தினத்தந்தியில் ஹெட்லைன் படிச்சவுடன் நானும் நயன்தாரா, ஹன்சிகா
பத்தி தான் சொல்றாரோனு தப்பா நினைச்சிட்டேன்ப்பா....அவர் பட வாய்ப்பை
தான் சொல்றாருனு புல்லா படிச்ச அப்புறம் தான் தெரிஞ்சது...!!


*****************************************


டி.வி.நொறுக்ஸ்....

ட்ரைலரில் விஜயகாந்த் "பன்ச்" வசனம்...

"டேய் நான் விருதகிரிடா.... பஞ்சபூதத்தோட மொத்தம் உருவம்டா...."

"பார்த்தாலே தெரியுது..."

அருகில் ட்ரைலர் பார்த்து கொண்டிருந்த நண்பன் சொன்னது...

****************************************

செய்தி : டென்னிஸ் உலகின் சூப்பர் ஸ்டார் பீட் சாம்ப்ராஸ் வென்ற அனைத்து கோப்பைகளும் திருடு போயின.....தன் டென்னிஸ் வரலாறே திருடி போய் விட்டதாக சாம்ப்ராஸ் அதிருப்தி...!!

என் கருத்து :
இதுக்கு தான் நான் எந்த போட்டியிலும் கலந்துகிறது இல்ல....**************************************

எத்தனை மொக்கை படத்தில் இருந்து பல பேரை காப்பாத்தி இருக்கேன்....

சமூக சேவர் பட்டம் எனக்கும் கிடைக்குமா???

அப்படியே திருவான்மியூர் பக்கம் 60 லட்சத்தில் வீடு ஒதுக்குவாங்களா??*********************************வளரும் நடிகர்களுக்கு இணையாக இவங்களும் போட்டி போடுராங்களேப்பா......
பை தி வே இந்த படத்தை நான் பார்க்கலைன்னு சொல்லி கொள்ள விரும்புகிறேன்...
**************************************


யாத்தே யாத்தே யாத்தே என்னச்சோ....யாத்தே யாத்தே யாத்தே எதச்சோ....

செம பாட்டு....

ஆமா யாத்தே னா என்ன அர்த்தம்??*************************

மழை செம காட்டு காட்டுது.....!!

வீட்டுக்குள்ள இல்லனா தெருக்குள்ள மழை தண்ணி வரலைனா கூட,,,,கண்டிப்பா இந்த வருஷம் நிவாரண தொகை கிடைக்கும்னுஎனக்கு நம்பிக்கை இருக்கு....

தேர்தல் வருதுடோய்....!!


*****************************

சமீபத்தில் மூணார் சென்று வந்தேன்....அங்கே க்ளிக் செய்த சில படங்கள்
உங்கள் பார்வைக்கு....

இதுவரை மலையாள அட்டு படங்களை மட்டும் பார்த்தவன்...

இப்போது மலையாள பேப்பர் படிக்கும் அரிய காட்சி....!!
********************************
மீண்டும் சந்திப்போம்.....
ஜெட்லி...(சரவணா...)

23 comments:

Porkodi (பொற்கொடி) said...

:))) ஏன் மொக்கப்படம் பார்க்க முடியறதில்ல?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உங்களோட ரெண்டாவது போட்டோ சூப்பர் மாமூ

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சூப்பர் பாக்கு தலையனின் அடுத்த படம் ரிலீஸ் எப்போ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யாத்தே யாத்தே செம குத்து பாட்டு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//கேப்டன் படத்தை கூட பார்க்க முடியல.... ஆனா ட்ரைலர் செம டரியல்....நாம கூடிய விரைவில் நாட்டுக்கு தேவை இல்லாத பல விசயங்களை பற்றி விவாதிப்போம்....///


படம் கண்டிப்பா ஹிட். வெள்ளிவிழாவில் சந்திக்கலாம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//எத்தனை மொக்கை படத்தில் இருந்து பல பேரை காப்பாத்தி இருக்கேன்....

சமூக சேவர் பட்டம் எனக்கும் கிடைக்குமா???

அப்படியே திருவான்மியூர் பக்கம் 60 லட்சத்தில் வீடு ஒதுக்குவாங்களா??////

கண்டிப்பா. ஆனா சினிமா காரங்க ஏதாச்சும் கேஸ் போட்டுடாம..

Porkodi (பொற்கொடி) said...

ஆஹா ஜெட்லிக்கு எப்ப கல்யாணம் ஆச்சு?? ஃபேஸ்புக் போய் தான் 'கண்டுபிடிச்சேன்'! அப்ப ஜோடியா மொக்கைப்படம் பாக்கலாமே!!! வாழ்த்துக்கள், சம்சார சாகரத்தை பத்தி 2 மொக்கை போடறது?

ஜெட்லி... said...

@Porkodi (பொற்கொடி)

//சம்சார சாகரத்தை பத்தி 2 மொக்கை போடறது?
//

கொஞ்ச நாள் ஆகட்டும்...ஏன் இப்பவே...

ஜெட்லி... said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சூப்பர் பாக்கு தலையனின் அடுத்த படம் ரிலீஸ் எப்போ?

//


சத்தியமா தெரியலை ரமேஷ்....

Chitra said...

வாழ்க வளமுடன்! அடிக்கடி எழுதுங்க, மக்கா!

கடைக்குட்டி said...

ena bossss...

kalyaanam aana moka padamlaam paaka maateengla??

tholiladhibar effect tharingale boss...

கடைக்குட்டி said...

ena bossss...

kalyaanam aana moka padamlaam paaka maateengla??

tholiladhibar effect tharingale boss...

கடைக்குட்டி said...
This comment has been removed by the author.
மதுரை பாண்டி said...

ungal sevai indha naatukku thevai... naalu perukku nalladhunu naalu mokkai padam partha thape illa...

Mohan said...

யாத்தென்கிறது Just ஆச்சர்யத்தை வெளிப்படுத்தும் வார்த்தை.அவ்வளவுதான்.

விக்கி உலகம் said...

கேப்டன் -

என்னைப்பற்றி பேசுவோர் அனைவரும் விரைவில் டரியாலாகபோகிறீர்கள்.

ஆட்சிய புடிசிடுவோம்ல ஆங்!

philosophy prabhakaran said...

// யாத்தே //

வைரமுத்துவின் அக்ருவாச்சி காவியத்தில் ஆங்காங்கே படித்த ஞாபகம்...

ஜெட்லி... said...

@kadaikkutty....


kalyaanam aana moka padamlaam paaka maateengla??நான் ரெடி தான் ஆனா இதுல சில சிக்கல்கள் இருக்கு...
உனக்கு கல்யாணம் ஆகும் போது புரியும்....

சிநேகிதன் அக்பர் said...

படங்கள் சூப்பர். நான் மூணார் படத்த சொன்னேன்.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அட்ரா சக்க.. மீண்டும் கலக்கல். மூணார் படங்கள் ரொம்ப நல்லாருக்கு..

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

அசத்தல் நண்பரே ஒவ்வொரு செய்திகளின் தொகுப்பும் . புகைப்படங்கள் மிகவும் அழகாக எடுக்கப்பட்டு இருக்கிறது பகிர்வுக்கு நன்றி

சத்ரியன் said...

மூணாருக்கு போய், அந்த பேப்பர்ல “என்ன படத்தைப்” பார்த்தீங்கன்னு சொல்லாம, மலையாள பேப்பர் படிச்சேன்னு சொன்னா நாங்க நம்பிடனுமா?

ashok said...

என்ன ஜெட்லி நம்ம ஊரு பக்கம் வீரபாண்டியன் பட்டணம், ஆலந்தலை, மணப்பாடு மாதிரியான கடற்கரை கிராமங்கள்ல ரொம்ப சாதாரணமான வார்த்தையாச்சே யாத்தே... யாத்தே னா ஆத்தி-னு சொல்லுவாங்க ல அது தான்... (உம்:-அடி ஆத்தி)