Friday, February 26, 2010

விண்ணைத்தாண்டி வருவாயா - விமர்சனம்.

விண்ணைத்தாண்டி வருமா??

**********************************************நான் இதுவரைக்கும் ஒரு பாட்டின் பாடகர் குரலுக்கு
இந்த மாதிரி கைத்தட்டு மக்கள் கொடுத்து இப்போது
தான் பார்க்கிறேன்.அந்த பாடல் மன்னிப்பாயா,ரகுமான்
பாடியது.
சிம்பு, நிறைய சொல்லலாம் இவரை பத்தி.ரொம்ப
அமைதியா, சவுண்ட் விடாம,பஞ்ச் பேசாம என்று
சொல்லி கொண்டே போகலாம்.முதலில் இவர்
த்ரிஷாவை இம்ப்ரெஸ் செய்ய பண்ணும் கலாட்டாக்கள்
நன்று.

த்ரிஷா, நல்லாவே திறமையை வெளிப்படுத்தி இருக்காங்க,
நடிப்பு திறமையை தான்!!அப்புறம் சிம்புவின் கூடவே
வரும் கேமராமேன் கேரக்டர் நல்லாவே கவுண்டர்
விடுறார்.அப்புறம் பழைய அர்ஜுன்,சத்யராஜ் படத்தில்
வில்லான வருவாரே அவர் இதிலும் வில்லனாக,,,,!

மனோஜ் அவர்களின் கேமரா கண்ணுக்கு குளுமை.
எனக்கு பொதுவா கௌதம் படங்களில் வந்த காதல்
சீன்களில் அவ்வளவு ஈடுபாடு இல்லை,காரணம்
நாயகனும் நாயகியும் எப்போதும் ஒரே விஷயத்தை
மட்டும் தான் பேசுவாங்க.எனக்கு அது கொஞ்சம் போர்
அடிக்கும் அவ்வளவு தான்."எப்போ நடந்ததுனு தெரியல..
BUT I AM IN LOVE WITH U" என்று வசனம் வந்தால் அது
கௌதம் படம் தான்.ஏன்னா அவர் பாதி தமிழ் பாதி
இங்கிலீஷ் பண்ணி வசனம் எழுதுவார்...

அப்புறம் கௌதம் அவர்களிடம் இன்னொரு பிடிக்காத
விஷயம் *த்தா.... என்று அவர் எல்லா படத்திலும்
திணிக்கிறார் அதுவும் இல்லாமல் அவரே டப்பிங்
பேசுகிறார்.சென்னையின் மொழியாகி போன *த்தா... என்பதை ரோட்டில் கேட்டு கேட்டு புளிச்சு போச்சு அதை தியேட்டரிலும் கேக்கணுமா??ஏ.ஆர்.ஆர் அவர்களின் பின்னணி இசையில் எனக்கு
பிடித்த இடம்...த்ரிஷா அண்ணனிடம் சிம்பு boxing
சண்டை போடும் காட்சி...அதாவது டப்பாங்குத்து
சவுண்ட் மாதிரி இருக்கும் ஆனா அதுவே கிளாஸ்ஆ
இருக்கும்!.....


படம் முதல் பாதி போர் அடிக்காம போது,ஆனா
ரெண்டாவது பாதி தான் கொஞ்சம் இல்ல ரொம்பவே
பொறுமையை சோதிச்சிட்டாங்க.சில இடங்களில்
இருவரும் தொடர்ந்து பேசுவது என்னால் தாங்க முடியவில்லை.ஆனா கடைசி ட்விஸ்ட் நல்லா இருந்தது..
பக்கா ஏ கிளாஸ் படம் அப்படின்னு சொல்லலாம்.
எனக்கு அவ்வளவா பிடிக்கலைங்க....!!

தியேட்டர் நொறுக்ஸ்:

# படத்தில் சிம்பு த்ரிஷாவை அடிக்கடி கட்டிபிடிப்பார்...

அதை பார்த்த பின் சீட்டுகாரர் "யோ என்னயா ஆனா
ஊனா கட்டி புடிச்சுக்கிறான்" என்று பீல் பண்ணினார்.
"லவ் பண்ணா கட்டி தான் புடிப்பாங்க வேற என்ன
பண்ணுவாங்க"னு கேட்கலாம் என்று நினைத்தேன்,,,
அதற்குள் பக்கத்துக்கு சீட்காரர் "சிம்பு கிஸ் அடி..ஹ்ம்"
என்று கத்தினார்..."என்னமோ கிரிக்கெட்ல சிக்ஸ் அடினு
சொல்ற மாதிரி இல்ல சொல்றார்" என்று நினைத்து கிஸ்
அடிக்கும் காட்சியை பார்த்தேன்....

# த்ரிஷா ஒரு காட்சியில்

"எனக்கு சினிமா புடிக்காது,ஏன்னா இருட்டு பிடிக்காது
எல்லாரும் கத்துவாங்க....." என்பார்...அதற்கு ஒரு
குரூப் "எங்களுக்கு இருட்டு தான் புடிக்கும்....%%&**"
என்று கத்தியது....

# படம் முடிய பத்து நிமிஷ முன்னாடி சிம்பு எடுத்த
படத்தை ரெண்டு பேரும் பார்ப்பார்கள்..அப்போது
அந்த படம் முடியும் போது "A FILM BY KARTHIK"
என்று கார்டு வரும்....இங்கே உடனே நம்ம தியேட்டர்
OPERATOR படம் முடிஞ்சு போச்சுனு லைட்ட போட்டாரு..
சில பேரு லைட்டை போட்டவுடன் மொக்கை தாங்காம
வெளியே போய்ட்டாங்க....அப்புறம் தான் படத்தில்
முக்கியமான ட்விஸ்ட்ஏ வந்தது!!ஜெட்லி பஞ்ச்:

விண்ணைத்தாண்டி வருவாயா : வரும் ஆனா வராது...!!


இந்த விமர்சனம் பல பேரை சென்று அடைய உங்கள்
ஒட்டு மற்றும் பின்னூட்டத்தை போடுங்கள்....


ஜெட்லி....

நன்றி : indiaglitz!

Thursday, February 25, 2010

சச்சின் - தொடர்பதிவு

சச்சின் - தொடர்பதிவு

நேற்று இரவு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூடி,  சங்கத்தை உடனடியாக கலைத்து விடுவதைப் பற்றி அவசர ஆலோசனை நடத்தியதாகவும்,  ஆனால் ஒருநாள் போட்டியில் முன்னூறு அடிப்பது கடவுளின் அடுத்த சாதனையாக இருக்கலாம் என்ற சாத்தியக்கூறு முன்வைக்கப் பட்டதால், முடிவைத் தள்ளிவைத்து விட்டதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தலைப்பை பார்த்து இதென்ன புதுசா ஒரு தொடர் பதிவுன்னு நினைக்க வேண்டாம். என்னைப் பொறுத்தவரை

கிரிக்கெட் = சச்சின்

போன வாரமே, வலையுலக வழக்கறிஞர் அண்ணன் மோகன் குமார் இந்தப் பதிவைத் தொடர அழைத்திருந்தார். பெரும்பாலான பதிவர்கள் அழைக்கப்பட்ட அரைமணிக்குள் பதிவிட்டுவிட, நானும் இன்று, நாளை என்று நாட்களை ஓட்டிவந்தேன். ஆனால் நேற்று கடவுள் அடித்த இருநூறைப் பார்த்த பின்புதான் வேகம் வந்து இதோ பதிவிடுகிறேன்.

இத்தொடர்பதிவின் விதிமுறைகள்

1. உண்மையை மட்டுமே சொல்லவேண்டும்.
2. தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் மட்டுமே குறிப்பிடவேண்டிய அவசியமில்லை
3. குறைந்தது இருவரையாவது தொடர்பதிவுக்கு அழைக்கவேண்டும். 

. மிக மிக மிக மிகப் பிடித்த கிரிக்கெட் வீரர்?       சச்சின்

1. பிடித்த கிரிக்கெட் வீரர்  
    கபில், டிராவிட், கில்க்ரிஸ்ட் (ஆடும் ஆட்டத்திற்காக  (ஆடியோ இல்லாமல்) மட்டும்)

2. பிடிக்காத கிரிக்கெட் வீரர்
     இங்கு முகிலனை வழிமொழிகிறேன், கவாஸ்கர்

3. பிடித்த வேகப்பந்துவீச்சாளர்
   மெக்ராத் (ஆறு அல்ல அறுபது பந்து போட்டாலும் அதே லைனில் போடுவதால்)  (ஆடும்     ஆட்டத்திற்காக  (ஆடியோ இல்லாமல்) மட்டும்), வாசிம் அக்ரம், கபில், மிட்செல் ஜான்சன் (அது கையா? உலக்கையா?) , கும்ப்ளே 

4. பிடிக்காத வேகப்பந்துவீச்சாளர்
   காலிஸ் (ஆள் மட்டும் வளர்ந்திருந்தாலும், 130 தாண்டி போடாததால்), ஸ்ட்வர்ட் பிராடு, நெக்ரா (சப்பாணி ஞாபகம் தான் வருகிறது)  அப்ரிடி,

5. பிடித்த சுழல்பந்துவீச்சாளர்
   சக்லைன்,  ஷேன் வார்னே, முரளி, வெட்டோரி,சச்சின்  

6. பிடிக்காத சுழல்பந்துவீச்சாளர்
   ஆஷ்லி ஜைல்ஸ்

7. பிடித்த வலதுக்கை துடுப்பாட்ட வீரர்
   சச்சின், டிராவிட் (200 கிமி வேகத்தில் போட்டாலும், பந்து பிட்சை தாண்டி போகாது), அசார் (அந்த ரிஸ்ட் ஒர்க்குக்காக)

8. பிடிக்காத வலதுக்கை துடுப்பாட்ட வீரர்
    தோனி (வடிவேலு போல குழி வெட்டி ஆடுவதால்), தில்ஷான், அக்மல் 

9. பிடித்த இடதுக்கை துடுப்பாட்டவீரர்
   கில்க்ரிஸ்ட், சங்ககாரா, லாயிட், 2004க்கு முந்தைய கங்குலி

10. பிடிக்காத இடதுக்கை துடுப்பாட்ட வீரர்
     கம்பீர்

11. பிடித்த களத்தடுப்பாளர்
    ஜடேஜா, ஜான்டி ரோட்ஸ், சச்சின் (தெ.ஆ முதல்  போட்டியில் கடைசி ஓவர் டைவ் போதாதா?)


12. பிடிக்காத களத்தடுப்பாளர்
     கங்குலி, சேவாக்

13. பிடித்த ஆல்ரவுண்டர்
     வெட்டோரி (அவர் அந்த அணிக்காக கீப்பிங் மட்டும் தான் இன்னும் செய்யவில்லை), கபில்தேவ், குளூஸ்னர்  

14. பிடித்த நடுவர்
   டேவிட் ஷெபெர்ட், சைமன் டோபல் 

15. பிடிக்காத நடுவர்
    ஜெயப் பிரகாஷ், ஹரிஹரன், (ஏதோ ஒரு) சாஸ்திரி 
 
16. பிடித்த நேர்முக வர்ணனையாளர்
    தல அடித்த சிக்சருக்கு "Its going, going, going, Gone "சொன்னவர்  (ரிச்சி பெனாட்?), ஹர்ஷா போக்ளே, மைக்கேல் ஹோல்டிங், என் எதிர் வீட்டு செல்லப்பா மாமா ((பதினைந்து வருடம் முன்) எங்கள் மொழிபெயர்ப்பாளர்)
   17. பிடிக்காத நேர்முக வர்ணனையாளர் குறிப்பாய் யாருமில்லை
     ரவி சாஸ்திரி (இவர் பாராட்டி பேசினால் தல அவுட் ஆகி விடுவார்), 

18. பிடித்த அணி
     இந்தியா (சச்சின் இருப்பதனால் மட்டும்), எந்த ஒரு அணியும் (ஆஸ்திரேலியா எதிராக விளையாடும் போது)

19. பிடிக்காத அணி
     தனியா சொல்லணுமா?

20. விரும்பி பார்க்கும் அணிகளுக்கிடையேயான போட்டி
      சச்சின் ஆடும் எந்த ஒரு போட்டியும்,

21. பிடிக்காத அணிகளுக்கிடையேயான போட்டி
     சச்சினுக்கு ஓய்வு கொடுத்து இந்தியா ஆடும் எந்த ஒரு போட்டியும்,

22. பிடித்த அணி தலைவர்
      கபில், அசார் (ஆயிரம் குறை சொன்னாலும், ஒற்றை ஆளை நம்பி இருந்த அணியை, பத்து வருடம் வழி நடத்தியதற்காக), வெட்டோரி, கடந்த பத்தாண்டுகளில் மேஇ தீவுகளுக்கு காப்டனாய் இருந்த அனைவரும், தோனி (மச்சக்காரன்), ரணதுங்கா (காப்டன் கூல்), குரோனியே  

23. பிடிக்காத அணித்தலைவர்
      பின் குறிப்பை பார்க்கவும்     

24. பிடித்த போட்டி வகை
    ஒருநாள் போட்டி (தலையின் சமீப சாதனை இதில் தானே) 

25. பிடித்த ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி
     சச்சின் – கங்குலி, கில்க்ரிஸ்ட் - ஹைடன் 


26. பிடிக்காத ஆரம்ப துடுப்பாட்ட  ஜோடி
      குறிப்பாய் யாருமில்லை

27. உங்கள் பார்வையில் சிறந்த டெஸ்ட் வீரர்
     சச்சின், டிராவிட்

28. சிறந்த கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளர்
    சச்சின், சச்சின், சச்சின், சச்சின்

இந்தப் பதிவைத் தொடர நான் அழைப்பவர்கள்

அண்ணன் பிரபா
இரும்புத்திரை அரவிந்த் (இதை அவர் படித்தால்)
கேபிள் சங்கர்
MANO (பிற்சேர்க்கை)

வேறு யாரும் விரும்பினால் கூறலாம், பட்டியலில் சேர்த்துக்கொள்கிறேன்
 

பின் குறிப்பு

எனக்கு ரிக்கி பாண்டிங்கை பிடிக்காது என்று சொல்வதை விட அவரை வெறுக்கிறேன் என்று தான் சொல்லவேண்டும். ஆனால் பிடிக்காத ஆட்டக்காரர்கள் பட்டியலில் அவரை சேர்க்கவும் மனம் வரவில்லை, ஏனென்றால் அவரை கிரிக்கெட் ஆட்டக்காரர் என்று சொல்லவே மனம் வரவில்லை.

முகிலனைப் போலவே எனக்கு ஆஸ்திரேலியா அணியைப் பிடிக்காது  ஏனென்றால் "Its not Cricket" என்ற தொடர் பயன்படுத்தப் பட்டு வந்த தொனியையும், அர்த்தத்தையும் மாற்றியதில் முதலிடம் அவர்களுக்குத்தான். அதையும் மீறி சில பச்சை தொப்பிக்காரர்கள்  பட்டியலில் இருப்பதற்கு அவர்கள் ஆட்டத்திறமையும் அவர்கள்  எப்போதாவது காட்டிவந்த நேர்மையும் மட்டுமே காரணம்.


படங்கள்  அனைத்தும் நான் பன்னிரண்டு ஆண்டுகளாய் பாதுகாத்து வரும் பிலிப்ஸ் விளம்பர புத்தகம் ஒன்றில் எடுக்கப் பட்டது


நன்றி
சங்கர்

Wednesday, February 24, 2010

முன்தினம் பார்த்தேனே

முன்தினம் பார்த்தேனே....-ஒரு பார்வை.

செவன்த் சேனல் மாணிக்கம் தயாரிப்பில்,கௌதம் மேனன்
சிஷ்யர் மகிழ் திருமேனி இயக்கத்தில்,தமன் இசையமைப்பில்,
புதுமுகங்கள் சஞ்சய்,ஏக்தா இன்னும் ரெண்டு நடிகை(பேர் எழுத கொஞ்சம் கஷ்டமா இருக்கு...) நடித்திருக்கும் படம் முன்தினம் பார்த்தேனே....கூடிய விரைவில் வெளிவரபோகும் படத்தின்பாடல்கள் பற்றி ஒரு பார்வை....

தமன் அடுத்து கமல் நடித்து கே.ஸ்.ரவிக்குமார் இயக்கம் யாவரும் கேளிர் படத்துக்கு இவர் தான் இசையமைக்க போகிறாராம்.ஈரம்,சிந்தனை செய் படத்தின் மூலம் தன்முத்திரையை பதித்ததமனின் இசையில் மற்றொரு படம்.இவர் இசையமைத்தமாஸ்கோவின் காவேரி படத்தின்பாட்டும் நன்றாக இருக்கும்,இன்னும் படம் தான் ரீலீஸ் ஆகிற மாதிரி தெரியலை.


************************************************

# இன்றே இன்றே : பாடலாசிரியர்- ப்ரியன்.

ரஞ்சித் வாய்ஸ்இல் ஒரு நல்ல காதல் பாட்டு...
அநேகமா இந்த பாட்டு ஹீரோவுக்கு காதல் பூக்கும்
போது வர பாட்டா இருக்கும் என்று நினைக்கிறேன்.
ஈரம் படத்தின் மழையே பாட்டை கேட்ட மாதிரி பீலிங்...

#பேசும் பூவே : பாடலாசிரியர்:விவேகா

கிருஷ் வாய்ஸ் தான் இந்த பாட்டில் ஸ்பெஷல்...
முதலில் மெதுவாக ஆரம்பிக்கும் பாட்டு சில
நொடிகளில் ஜெட் வேகத்தில் பறக்கிறது....
கிருஷ் அடிச்சு தூள் கிளப்பி இருக்கிறார்....

# மனதின் அடியில் : பாடலாசிரியர்:ப்ரியன்


பிரியதர்ஷனி குரலில்..குரலா ஆமாம் அவங்க
பாடுற சவுண்ட் கேக்கவே இல்லை...மியூசிக் பீட்
மட்டும் தான் கேக்குது...பார்ப்போம் போக போக
பிடிக்குதா என்று....

# மாயா : நரேஷ் ஐய்யர் பாடலாசிரியர்:ரோஹிணி

மாயா....மாயா என்று நரேஷின் குரலில் மெலடி
போகிறது....இந்த பாட்டும் எனக்கு பிடிக்கவில்லை...


# கனவென... : ஹரி சரண்,சுசித்ரா பாடலாசிரியர்:ரோஹிணி

சின்ன பாட்டு...ஹரி சரணின் குரலில் நன்றாக இருக்கிறது.
நடுவுல சுசித்ரா அக்கா இங்கிலீஷ்ல ஏதோ ஜிங்க்லஸ்
பாடுறாங்க....சத்தியமா ஒரு வார்த்தை கூட எனக்கு
புரியலை.... ஆ.அஅ ...ஹோ ஹோ என்று தமன் குரல்
வருகிறது.பல பாட்டில் கேட்டு இருந்தாலும் அலுக்க
வில்லை....


# முன்தினம் பார்த்தேன்...தமன் பாடலாசிரியர்: ப்ரியன்

ஜாஸ் ஸ்டைலில் வந்திருக்கும் பாடல்...ஜாஸ் மியூசிக்கும்
தமனின் குரலும் காதுகளை ஈர்க்கின்றன....கேட்க வேண்டிய பாடல்....

************************************************

தமன் சிந்தனை செய்மூலம் கவனிக்கப்படவில்லை
என்றாலும் ஈரம் மூலம் கவனிக்கப்பட்டார்(எனக்கு
சிந்தனை செய் பாடல்கள் பிடிக்கும்!!) .பொதுவா
அவரோட எல்லா பாடல்களிலும் அவரோட குரல்
ஆஆஆஆ... என்று வருகிறது.நல்லா இருந்தாலும் போக
போக சலிச்சுடும்.அப்புறம் இப்போ முன்தினம் பார்த்தேனே படத்தின் பாடல்கள் முன்னாடி வந்த ஈரம் பாடல்களையும் நினைவுப்படுத்தியது.வருங்காலத்தில் தமன் வித்தியாசமான இசைகளை நம் செவிக்கு விருந்தாக்கினால் நலம்!


முன்தினம் பார்த்தேனே பாடல்களை பற்றி கோவா ஜெய்
ஸ்டைல்லா சொல்லனும்னா

"நீங்க believeஒ notஒ நாலு பாட்டு chance no ...,my ears
are குளிரிங்...."


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
நன்றி:INDIAGLITZ!!

இந்த படத்தின் பாடல்களை கேட்டு இருந்தால்
பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளவும்....

ஜெட்லி....

Monday, February 22, 2010

ஆசிரியர் பதவி....!!

ஆசிரியர் பதவி....!!வணக்கம்ங்க....என்னையும் நம்பி சீனா ஐயா அவர்கள்
என்னை வலைச்சரத்தின் ஆசிரியராக நியமித்து உள்ளார்.
இதில் இருந்தே உங்களுக்கு தெரிஞ்சுருக்கும் அவருக்கு
தைரியமும்,தன்னம்பிக்கையும் ஜாஸ்தினு.


சீனா ஐயா என்னை கூப்பிட்ட போது, நான் ரெண்டு
நாள் குப்புற படுத்து யோசிச்சேன்!!நம்மளையும்
நம்புராரே என்று.சரி,இப்போ நானும் ஆசிரியர் ஆகிட்டேன்....


வலைச்சரத்தில் ஜெட்லி


என்ற இந்த லிங்க்ஐ சொடுக்கி...அங்கேயும் வாங்க.....


நம்ம "ப்ளாக்"ளையும் கண்டிப்பா இந்த வாரம் ரெண்டுபோஸ்ட் இருக்கும்...முடிந்த வரை விண்ணை தாண்டிவருவாயா விமர்சனத்தை வழக்கம் போல் வெள்ளிக்கிழமையே போட முயற்சிப்பேன்....


உங்கள் ஆதரவை எதிர்ப்பார்க்கும்....

ஜெட்லி.....

Friday, February 19, 2010

ராஜலீலையும் தேவலீலையும்!!

ராஜலீலை-நமக்கு கற்று தரும் பாடம் என்ன??

நம்ம நாட்டுல குண்டு வெடிக்குது,காலேஜ்ல பசங்க
சண்டை போடுறாங்க,பெட்ரோல்,காஸ் விலை ஏத்த
போறாங்க,விலைவாசி உயர்வு,பல கோடி ஊழல்,
தனி மாநில பிரச்சனைகள்னு பல சாதாரண விஷயங்கள்
இருந்தாலும்.இப்போது நான் கையில் எடுத்திருக்கும்
இந்த சப்ஜெக்ட்ஐ யாருமே தொட தயங்குவார்கள்.
ஆம் அது தான் நம் நாட்டு மக்களுக்கு தேவையான
அதிமுக்கிய விஷயமான "ராஜலீலை-வெற்றியின்
ரகசியம்
"(இன்னைக்கு 50 வது நாள்!!)
நாலைந்து நாட்களாக என்ன பதிவு போடுவது என்று
யோசித்து திணறி போய் விட்டேன்,காரணம் நாம
போடுற பதிவு நாலு பேருக்காவது நல்லதாக அமைய
வேண்டும் என்று வழக்கம் போல் நினைத்தேன்.அது
போல் இந்த பதிவு மக்களின் சிந்தனையை தூண்டி
விடுவதாக அமைந்ததில் எனக்கு பேரின்பம்.

ராஜலீலை, சத்தியமா நான் இந்த படத்தை பார்க்கலாங்க....
படத்தில் பெருசா ஒன்னும் இல்லைன்னு பார்த்தவங்க
சில பேரு சொன்னாங்க அதான் போல!! நான் எப்பவுமே
பாக்காத படத்தை பற்றி தப்பாக பேசுவதில்லை.ஆனால்
ராஜலீலை பற்றி பேச காரணம் அவர்களின் விளம்பரம்.


ஒரு பேய் படத்தை ஏதோ தபு நடித்த அட்டு படம்
போல் விளம்பரம் செய்து காசு பண்றாங்க.இதை
நம்பி போறவன் காசு வேஸ்ட்தான்.இந்த விஷயம்
பல பேருக்கு தெரிஞ்சாலும் சில பேர் சபலப்பட்டு
இந்த மாதிரி படத்துக்கு போய்டுறாங்க.


ராஜலீலை-இளசுகளின் இன்ப எல்லை....

இந்த மாதிரி விளம்பரம் போட்டு என்னை மாதிரி
சிறுவர்களின் மனதை சலனப்படுத்துகிறார்கள்.
அடுத்த மாசம் வேற பரீட்சை வருது இந்த மாதிரி
நேரத்தில் இப்படியான விளம்பரத்தை போட்டு
எங்கள் மனதில் நஞ்சை விதைக்கிறார்கள்.

எங்கே போகும் இந்த பாதை??

ஒரு அட்டு படத்துக்கு இது போல் விளம்பரம் அளித்து
ஓட வைப்பதால் வரலாறு கொஞ்சம் தப்பா ஆயிடும்.
இது குறித்து நான் ஏற்கனவே யார் விதைத்த விதை?
என்ற இடுகையில் விலாவரியாக எழுதியுள்ளேன்.
"இந்த வருடத்தில் தமிழ் சினிமாவின் முதல்
வெற்றி" என்று ஹிந்தி டப்பிங் படத்துக்கு விளம்பரம்
செய்வதை யார் கேட்பார்கள்.....

கூடிய விரைவில் இது குறித்து ச.ம.கட்சியுடன்
பேச்சுவார்த்தை நடத்தி மக்களுக்கு விழிப்புணர்வு
ஏற்படுத்த எங்கள் தெருமுனையில் கூட்டம்
போடலாம் என்று இருக்கிறோம்.இதுல ஒரு
பிரச்சனை என்னனா, எங்கள் தெருமுனையில்
வடை சுடும் ஆயா எங்களுக்கு இடம் கொடுக்க
மறுக்கிறார்.இந்த ஆயாவிடம் ஒரு அரைமணி
நேரம் அனுமதி வாங்கி தர அரசுக்கு கூடிய
விரைவில் மனு அளிக்க உள்ளோம்.


இந்த படத்தை பார்த்து அடுத்ததாக "தேவலீலை"னு
பேர் போட்டு அடுத்த படத்தை ஆரம்பிச்சாச்சு.....
ஸ்டில் எல்லாம் படுபயங்கரமா?? இருக்கு.சாம்பிள்
கிழே.....ஒரு நிமிஷம்.. போன் கால் வருது....

ஜெட்லி: சொல்லு மாமே...

ராஜேஷ்: எப்படிடா இருக்கே...இன்னைக்கு என்ன படம்
பார்த்தே??

ஜெட்லி : இன்னைக்கு எதுவும் படம் வரலடா...

ராஜேஷ் : ரசிக்கும் சீமானே விமர்சனம் போடலையா??

ஜெட்லி : டேய்...என்ன கலாய்க்கிரியா??

ராஜேஷ் :என்னமோ மொக்கை படமே பார்க்காத மாதிரி
கேக்குற!!!

ஜெட்லி : சரி உடு...என்ன படம் புதுசா டவுன்லோட் பண்ணே??

ராஜேஷ் : புது படம் பிரிண்ட் சரியில்லைடா அதனால
பண்ணலா...ஏதோ ராஜலீலைனு ஒரு படம்
டவுன்லோட் பண்ணிருக்கேன்.

ஜெட்லி : சூப்பர்டா...ரைட் பண்ணி வை.அந்த பக்கம்
வரும் போது வாங்கிகிறேன்...bye டா...!!

ரைட்...எங்கே விட்டேன்...ஹ்ம்.இந்த மாதிரி படங்களை
முதலில் தடை செய்யனும்ங்க...நம்ம தமிழ் படத்தில்
A சான்றிதழ் வாங்கி இருந்ததுனா விளம்பரத்தில் ரொம்ப
சின்னதா போடுவாங்க...ஆனா ராஜலீலை மாதிரி
படத்தில் A தான் ரொம்ப பெருசா போடுவாங்க...


சரிங்க...நாம சொல்லி அவங்க இந்த மாதிரி
விளம்பரம் போடுறதை நிறுத்த போறதில்லை.
என்ன கொடுமைன்னு பார்த்திங்கனா இந்த
அம்பது நாள் விளம்பரத்தில் மூணே மூணு
தபு ஸ்டில் மட்டும் தான் வந்திருக்கு....
அட்லீஸ்ட் அதையாவது டெய்லியும் வேற
வேற ஸ்டில் போட்டால் நல்லா இருக்கும்!!


எந்த வித கொள்கையும் இல்லாமல் நாட்டு மக்கள்
நலனுக்காக சிந்தித்து கொண்டிருக்கும்....ஜெட்லி.....


இந்த இடுகை பற்றி உங்கள் கமெண்ட்(பின்னூட்டம்)
மற்றும் ஓட்டை போடுமாறு கேட்டுகொள்கிறோம்.

Monday, February 15, 2010

JOY OF FEEDING

ஜாய் ஆப் பீடிங் (JOY OF FEEDING)நீங்க திருவான்மியூர், நாவலூர் சைட் போகும் போது
எப்போதாவது உங்கள் கண்ணில் ஒரு பெரியவர் வெள்ளை
உடையுடன் அடைக்கலம் இல்லாத நாய்களுக்கு உணவு
அளித்து கொண்டிரப்பதை பார்த்து இருக்கலாம்.அந்த
நாய்கள் சாப்பிட்டு முடிக்கும் வரை அருகில் இருந்து
பின்னர் தண்ணீர்,பால் கொடுத்து தினம்தோறும் தவறாமல்
செய்கிறார்.இந்த லிஸ்ட்இல் பூனைகளும் அடக்கம்.

கடந்த பதினைந்து வருடங்களாக அடைக்கலம் இல்லாத
நாய்களுக்கு உணவு உபசரித்து வருகிறார் இந்த 72 வயதான
தேவிதாஸ்.முதலில் திருவள்ளுவர் நகரில் வசித்தவர் பின்பு
வாடகை காரணமாக தற்போது கேளம்பாக்கத்தில் வசித்து
வருகிறார்.முன்பு ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தவர்
இப்போது அதை விட்டுவிட்டார்.

ஆங்கிலத்தில் புலமை வாய்ந்தவர், சிலருக்கு ஆங்கில
வகுப்பு கூட எடுத்து இருக்கிறார்.நாலைந்து ஆங்கில
சுயமுன்னேற்ற புத்தகத்தை எழுதி இருக்கிறார்.பப்ளிஷ்
பண்ண வசதி இல்லாததால் அதை நகல் எடுத்து பலருக்கு
விற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவருக்கு
நியூமராலஜியும் தெரியும் என்பது கூடுதல் தகவல்.

"எனக்கு என்னமோ தெரியல இவங்களுக்கு சாப்பாடு
வச்சா தான் மனசுக்கு சந்தோசமா இருக்கு,என் பிசினஸ்
நல்லா இருந்த போது இவர்களுக்கு பிரியாணி வாங்கி
கொடுப்பேன்....ஆனால் இப்போ ஒரு அம்மா டெய்லியும்
கறி சோறு கொடுத்து உடுறாங்க...அப்படியே போகுது"
என்றார் அவர்.

சில பேர் அவர் உணவு உபசரிக்கும் காட்சியை
கண்டவுடன் மூஞ்சியை சுளிச்சிக்கிட்டு ஏதோ தீட்டு
போல் பத்து அடி தள்ளி நடப்பார்கள் என்றும் தனக்கு
பிறகு இந்த வாயில்லா ஜீவன்களை யார் கவனிக்க
போகிறார்கள் என்ற ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்.

இது போன்று கிட்டத்தட்ட ஐம்பது நாய்கள் மற்றும்
பூனைகளுக்கு தினம்தோறும் உணவு பரிமாற
கேளம்பாக்கத்தில் இருந்து திருவான்மியூர் வந்து
செல்கிறார்.கண்டிப்பாக இதையெல்லாம் செய்ய
பொறுமை அவசியம்.அவர் இந்த வாயில்லா
ஜீவன்களுக்கு செய்து வரும் சேவையை வாழ்த்துவோம்.


************************************************
பைரவ சாமியின் வாகனமாக கருதப்படும் (நாட்டு)நாயை
நம் மக்கள் அவ்வளவாக சீண்டுவதில்லை.சென்னையை
பொருத்தவரை அடைக்கலம் இல்லாத நாய்களை ப்ளூ கிராஸ்
போன்ற அமைப்புகள் எவ்வளவு முயற்சி எடுத்தாலும்
கட்டுப்படுத்த முடியவில்லை என்றே சொல்லவேண்டும்.

நம்மில் பல பேருக்கு இது போன்ற நாய்கள் மேல்
பயமில்லாமல் இல்லை.முக்கியமா இரு சக்கர
வாகனங்களில் செல்பவர்களை சில நாய்கள் துரத்தி
வந்து கடிக்க பாயும்.என் நண்பனை கடித்திருக்கிறது
கண்டிப்பாக அவன் அந்த நாயை மறந்திருக்க மாட்டான்.
நானும் பல சமயம் காலை தூக்கி வண்டி ஒட்டி இருக்கேன்.


இது போன்று ஒரு சில விஷயங்கள் இருந்தாலும் பல ஏரியாக்களில் இந்த நாய்கள் தான் காவல் காக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. அடைக்கலம் இல்லாத நாய்களுக்கு செக்யூரிட்டி மற்றும் வாட்ச்மேன்கள் தான் ஆதரவாளர்கள் என்றே கூற வேண்டும்.

பல ஏரியாக்களில் சிலர் அடைக்கலம் இல்லாத நாய்களுக்கு உணவு உபசரித்து வருகின்றனர். பாவம் அதுவும் வாயில்லா ஜீவன் தானே...
முடிந்தால் நீங்கள் வேலை செய்யும் இடம் அருகிலோ,வீட்டு அருகிலோ, டீ கடையோ, பாஸ்ட் பூட் கடையோ என்று எங்கையாவது இது போன்ற நாய்களை பார்த்தால் ஒரு மூன்று ரூபாய் பிஸ்கட் பாக்கெட் வாங்கி போடுங்கள். அதன் பின்பு நீங்கள் எப்போது அதை பார்த்தாலும் அது வாலாட்டி அதன் அன்பை தெரிவிக்கும் போது நம் மனம் மகிழும், அது தான்..... ஜாய் ஆப் பீடிங்!!


உங்களுக்கும் இது போன்று அனுபவங்கள் இருந்தால்
கமெண்ட்இல் பகிர்ந்து கொள்ளவும்.....ஜெட்லி.......

Friday, February 12, 2010

தீராத விளையாட்டு பிள்ளை - விமர்சனம்

தீராத விளையாட்டு பிள்ளை!!


முதல்ல எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்,நம்ம
விஷால் அப்படி என்ன புரட்சி பண்ணிட்டார்னு அவர்
பேருக்கு முன்னாடி புரட்சி தளபதினு போட்டிருக்கார்??
யாராவது தெரிஞ்சா சொல்லுங்கப்பா.........


விஷாலுக்கு சின்ன வயசில் இருந்து எதா இருந்தாலும்
பெஸ்ட் தான் வேணும் அதனால கல்யாணத்துக்கு
மூணு பெண்ணை செலக்ட் பண்றாரு, கடைசியில் யாரை
கைப்பிடிக்கிறார் என்பது தான் கதை.இவ்ளோ பெஸ்ட்
தேடுராரே ஏன் படத்தில் விஷால் அவருக்கு ஒரு
நல்ல வேலை தேடலைன்னு எல்லாம் கேக்க கூடாது.

நான் பச்சீன கி அசீனா படம் ஹிந்தியில் பார்க்கவில்லை,
அதனால் அந்த படத்தின் தழுவலா என்று எனக்கு
தெரியாது

முதல்ல படத்தில் சந்தானம் பத்தி சொல்லி ஆகணும்.
செம அதகளம் பண்ணியிருக்காரு அதுவும் கல்யாண
மண்டபத்தில் அடிக்கும் லூட்டி செம....அவர் மயில்சாமியை
பார்த்து "நிக்காத விரலுக்கு எதுக்குடா நக பாலிஷ்" என்று
டபுள் மீனிங் என்றாலும் நல்ல உதாரணம்.விஷால்
தனுஸ்ரீயை மடக்கிவிட்டதாக சந்தானத்திடம் வந்து
"அவ என் கைய பிடிச்சிக்கிட்டு ப்ளீஸ்ன்னு சொன்னாடா.."
என்பர் அதற்கு சந்தானம் "நீ அவ மேல எங்கே கையை
வெச்ச" என்று கவுண்டர் கொடுப்பார் செம...
இனிமே தமிழ்ப்படத்தில் யாரும் நான் மதுரைகாரன்னு
சொல்ல மாட்டாங்க அந்தளவு சந்தனம் கலாய்ச்சீரிக்கிறார்.அடுத்தது நீத்து சந்திரா, படத்தில் இவங்க 1500 கோடிக்கு
சொந்தக்காரி ஆனாலும் பாவம் ரொம்ப மினி டிரஸ்இல்
தான் வராங்க.அருமையா அவங்க திறமையை வெளிப்படுத்தி
இருக்காங்க.ரெண்டாவது பாதியில் வரும் பாட்டு போர்
என்றாலும் நீத்துகாக பார்க்கலாம்.நீத்துவின் சேவை
தமிழ்நாட்டுக்கு தேவை என்பதில் எந்த ஐயமும் இல்லை.


பிரகாஷ்ராஜ் கொஞ்ச நேரமே வந்தாலும் நிறைவாக
செய்து இருக்கிறார்.மௌலி சார் நோ சான்ஸ் அவரும்
தன் பங்குக்கு கிச்சுகிச்சு மூட்டுகிறார்.மயில்சாமி தன்
வழக்கமான நடிப்பில் சிரிக்க வைக்கிறார்.அவர் கூறும்
ஒரு உதாரணம் "கட்டிங் கட்டிங் சேர்ந்தா தான் குவாட்டர்
அது மாதிரி மனசும் மனசும் சேர்ந்தா தான் மேட்டர்".


தனுஸ்ரீ தத்தா கெழடு தட்டு போச்சின்னு சொல்லணும்,
பின்னே ஹிந்தி,தெலுங்குனு மார்க்கெட் இழந்த நடிகையை
நடிக்க வச்சா என்ன பண்றது.சாரா, அவரின் முகம்
சட்டென்று நியாபகம் வர மாட்டிக்குது.இருந்தாலும்
நீத்து சந்திரா போல வருமா...(பேசாம மன்றம் ஒன்னு
திறக்கலாமா??)யுவன் இசை நன்று அதுவும் விஷால் ஒரு ஒரு பெண்ணாக
கரெக்ட் பண்ணும் போது நெற்றிக்கண் மியூசிக் செம.
அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு பத்தி சொல்லவே
தேவை இல்லை.அரவிந்த் கடைசியில் டாக்டர் ஆகவும்
வருகிறார்.சிநேகா ஒரு சீன் மட்டும் வந்து செல்கிறார்.


படம் மொத்தம் 2.45 மணி நேரம் ஓடுது.முதல் பாதி
சந்தானம் காமெடி மற்றும் விஷாலின் காதல் என்று
டைம்பாஸ் ஆகிறது.ரெண்டாவது பாதியில் பாட்டுக்கள்
தடைகளாக இருக்கின்றன.மற்றபடி எதிர்ப்பாராத
திருப்பங்கள் எல்லாமே சூப்பர்.அப்புறம் விஷால் படத்தில்
லாஜிக் பார்க்ககூடாதுன்னு நான் படம் பார்க்க முன்னமே
முடிவு பண்ணிட்டேன்.இல்ல நான் விஷால் கிட்ட இருந்து
உலக சினிமா அல்லது யதார்த்த சினிமா எதிர்ப்பார்ப்பேன்
என்றால் தீ.வி.பி.யை தவிர்ப்பது நலம்.

விஷால் பைட் சீன் எல்லாம் கொஞ்சம் ஓவர்.மற்றபடி
இந்த படத்திலும் பெண்களுக்கு எதிராக வசனம் பேசி
நம்மிடம் கைத்தட்டு வாங்குகிறார்.கிளைமாக்ஸ் செம
நாடகம்.தீராத விளையாட்டு பிள்ளை முதல் பாதியில்
ஒரே சிரிப்பு தான் ரெண்டாவது பாதியில் சில இடங்களில்
தேக்கம்.

ஜெட்லி பன்ச்:

தீராத விளையாட்டு பிள்ளை : விளையாட்டு பிள்ளைதான் entertainer !!

இந்த விமர்சனம் அனைவரையும் சென்று அடைய
ஒட்டு மற்றும் பின்னூட்டம் போட்டால் நலம்.

உங்கள்
ஜெட்லி

நன்றி: indiaglitz

Wednesday, February 10, 2010

முத்தமும் சடகோபன் ரமேஷும்.....

முத்தமும் சடகோபன் ரமேஷும்.....

(முன்னுரை: எங்க ப்ளாக்கில் இது வரைக்கும் சீரியஸ்
ஆன விஷயம் டிஸ்கஸ் பண்ணது இல்லன்னு ஒரு
குற்றச்சாட்டு இருந்தது.இந்த இடுகைக்கு பிறகு அது
இருக்காது என்று நினைக்கிறேன்.இது எங்களின்
இருநூறாவது பதிவு ஆனதில் பேரின்பம்....!!)
'பிரபல' கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் "பட்டாப்பட்டி"
என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆகுராருங்க.
யாரா??அதாங்க ஜெயம் ரவி நடிச்ச சந்தோஷ் சுப்ரமணியன்
படத்தில எந்தவித முகபாவனையும் இல்லாமல் தேமே
என்று திரையில் தோன்றுவாரே அவரே தான்.

பட்டாப்பட்டி படத்தில் ஒரு காட்சியில் கதாநாயகி கூட
உதட்டு முத்தம் ஒன்னு இருக்குதாம்.முதல்ல ரமேஷ்
ஒத்துக்கலையாம் ஆனாலும் டைரக்டர் கதையின்?அவசியத்தை
வலியுறுத்தி கேட்டுகிட்டதால நம்ம ரமேஷ் பெரிய மனசு
பண்ணி கிஸ் அடிக்க சம்மதிச்சிருக்காரு.ரொம்ப வெட்கப்பட்டு
நடிச்சதாலா 12 கிஸ்....ஸாரி டேக் வரை வாங்கினாராம்!!
இதுல என்ன கொடுமைன்னு பார்த்திங்கனா கிஸ்
அடிச்ச மறுநாளே ரமேஷுக்கு ஜூரம் வந்துருச்சாம்......அதை பற்றி விரிவான சீரியஸ்ஆன கட்டுரை தான் இது.
இந்த கட்டுரைக்கு அதிகப்பட்சம் ஏதாவது அங்கீகாரம்
ரத்தான பல்கலைகழகத்தில் இருந்து டாக்டர் பட்டம்
கொடுத்தால் சந்தோஷப்படுவேன்....

நமக்கு முத்தம் கொடுத்து முன் அனுபவம் இல்லாதுதால.
நம்ம ரமேஷ்க்கு உதவ சில நடிகர்களை கேட்போம்.....
இந்த அதி முக்கியமான விஷயத்தை பற்றி நம் நடிகர்கள்
என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்....

*********************************

முதலில் முத்த(மூத்த) நடிகர் கமல்:

என்னது 12 டேக் எடுத்தாரா?...முதலில் அவரை வந்து
என் முத்த பயிற்சி பட்டறையில் சேர சொல்லுங்கள்.
உங்களுக்கு ஒன்னு தெரியுமா முத்தம் கொடுப்பதனால்
தீவிரவாதம் குறையுது....அதனால எல்லோரும் முத்தம்
கொடுக்கணும் என்பதை வலியுறுத்துவோம்.....!!


எஸ்.ஜே.சூரியா:

என்னத்த சொல்ல சொல்றிங்க சடகோபன் ரமேஷ்
கிரிக்கெட் விளையாடமா படத்தில நடிக்கிறாரே,,,
DO U WANT TO ME TELL ABOUT THAT....

கிரிக்கெட்ளையும் சிக்ஸ் அடிக்காம படத்திலும்
ஒழுங்கா கிஸ் அடிக்காம இருக்குறாரே..
DO U WANT TO ME TELL ABOUT THAT....

பட்டாப்பட்டினு படம் பேரு வச்சிட்டு
கார்கோ பான்டில் ஸ்டில் கொடுக்குராரே....
DO U WANT TO ME TELL ABOUT THAT....

ஆ..எது எப்புடியோ முதல்ல அந்த நடிகையை
நம்ம படத்துக்கு புக் பண்ணனும்....ஆ!!


விஜயகாந்த்:

கிஸ்... ஆங்கிலம்,உருது,ஹிந்தி,ஸ்பானிஷில் எனக்கு
பிடிக்காத ஒரே வார்த்தை.
தமிழ்நாட்டுல ஒரு வருஷத்துக்கு 150 படம் ரீலீஸ்
ஆகுது...அதுல 50 படத்துல கிஸ் சீன் இருக்கு,
மிச்ச 100 படத்துல 20 படத்திலே பிட் சீனே இருக்கு ஆங்....
அந்த பிட் சீனை இன்டெர்வல்க்கு முன்னாடி பத்து
தியேட்டர்ல போடுறாங்க..இன்டெர்வல்க்கு அப்புறம்
மூணு தியேட்டர்ல போடுறாங்க..ஆங்...

(தியேட்டர் பேர் சொன்ன நல்லாயிருக்கும்!!)


சரத்குமார்:

12 டேக் வாங்கி கிஸ் அடிச்சதால தயாரிப்பாளருக்கு
பல அடி பிலிம் வீணாகி போச்சு...இதை கண்டித்து
விரைவில் எங்கள் கட்சி ஆர்ப்பாட்டத்தில் குதிக்கும்.
பிரதமரிடம் இது குறித்து புகார் அளிக்கப்படும்.

டி.ஆர்:

டேய் நான் கனவுல கூட நடிகையை கட்டி பிடிச்சு
நடிச்சதில்ல,,,,என்கிட்டே வந்து கருத்து கேக்குறிங்க....

வல்லவன்ல சிம்பு நயனுக்கு கொடுத்தான் முத்தம்
கலங்கியது என் சித்தம்
கொதித்தது என் ரத்தம்
ஜெட்லிக்கு பிடிச்சிருக்கு பித்தம்

(தயவு செய்து நீங்க போடதிங்க சத்தம்...!! என்று
எஸ்ஸானோம்)


சிம்பு :

எனக்கு (உதட்டை)கடிக்க தெரியாதுங்க...
சொன்ன நம்புங்க.... ஸ்டார்ட் கேமரானு சொன்னதான்
கடிப்பேன்...யோ எனக்கு கடிக்க தெரியாதுயா!!

(ஆமாம் சிம்பு வல்லவன்ல உங்க performance
சுத்த மோசம்....எத்தனை இங்கிலீஷ் படம்
பார்த்து இருப்போம் நாங்க....)

நன்றி: ஜோடி நெ.1.


நாட்டாமை விஜயகுமாரின் தீர்ப்பு:

அட இது ஒன்னும் பெரிய விஷயம் இல்ல ரமேஷ்கண்ணு!!
இனிமே டெய்லி காலையிலே இட்லி சாப்பிடும் போது
கொஞ்சம் கெட்டி சட்னி வச்சு சாப்பிடு எல்லாம் சரி ஆயிடும்...!!
இது தான் என்ற தீர்ப்பு.....பசுபதி உடுற வண்டியை....!!

உங்களுக்கு பிடிச்சு இருந்தா ஓட்டும் கமெண்ட்டும் போடுங்க.

இது போல் நாட்டுக்கும் வீட்டுக்கும் தேவையான
கருத்துக்களை உங்களுக்கு தருவது....

ஜெட்லி....

Monday, February 8, 2010

அசல் - தல புராணம்!!

அசல் வீச்சு!!


என்னுரை :

வெள்ளிக்கிழமை கொஞ்சம் வேலை இருந்ததால் அசல்
விமர்சனம் போடமுடியவில்லை.சரி வந்து பார்ப்பவர்கள்
ஏமாறாமல் இருக்க அசல் பத்தி படிக்க ஒரு போஸ்ட் போட்டேன்..
அதை ரசிச்சாலும்,பல பேர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள்...
அதனால் அதுவே இனிமே கடைசியாக இருக்கும்.தொடர்ந்து
உங்கள் ஆதரவு கண்டிப்பாக தேவை......உங்களுக்கு புடிச்சு
இருந்தா கண்டிப்பா தமிழிஷ்இல் ஒட்டு அல்லது கமெண்ட்
போடுங்க.கமெண்ட் ஒரு பூஸ்ட் மாதிரி,அப்பத்தான் இன்னும்
பல சூர மொக்கை படங்களை பார்க்க தெம்பு கொடுக்கும்
என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்.இனிமே அசல்:

அசல் படத்தில் எனக்கு பிடிச்சதே அவங்க டீலிங் தான்,
அதாவது தியேட்டருக்கு வந்தா ரெண்டு மணிநேரத்தில்
வெளியே அனுப்பிடுவோம் என்ற அந்த டீலிங்
பிடிச்சு இருந்தது.இருந்தாலும் பாட்டு மற்றும் அஜித்
நடப்பதை கொஞ்சம் கட் செய்து இன்னும் இருபது நிமிஷம்
முன்னாடியே விட்டுருந்த ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பேன்.அஜித் கிட்ட எனக்கு பிடிச்சதே அவரின் வெளிப்படையான
பேச்சு தான்.முந்தாநேத்து கூட முதலமைச்சர் பாராட்டு
விழாவில் அவர் "நடிகர்களை மிரட்டி விழாவுக்கு
அழைக்கிறார்கள்..." என்று தைரியமாக பேசினார்.
அது தான் அஜித்.ஆனால் அசலில் பேசாமல் நடித்தாலும்
அவ்வளவு ஈர்ப்பு இல்லை.பஞ்ச் இல்லாதது ஒரு பெரிய
சந்தோசம்.

கதையெல்லாம் உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.
ஆனா யூகி சேதுவிடம் இருந்து இப்படி ஒரு சுவாரசியம்
இல்லாத திரைக்கதையை எதிர்ப்பார்க்கவில்லை.யூகி சேது
ஒரு மாற்று சினிமாவுக்கு முயற்சி செய்திருப்பார் என்று
நினைத்தால்,இல்லை நான் ஒரு சினிமா encyclopedia மட்டும்
தான் என்று அசல் படத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

இன்னும் தல கார் சேசிங் சீனை விடல.நாங்க இதெல்லாம்
need for speed, burn out இலே பார்த்துடோம்னு யாராவது
சொல்லுங்க.டேய் ஜெட்லி ஏன்டா செத்த பாம்பை
போட்டு அடிக்கிறனு நீங்க நினைக்கிறது புரியுது.அசல்
முதல் பாதியில் போர் அடிக்காம போகுது ஆனா
ரெண்டாவது பாதியில்??
ஆஆவ்...அது ஒன்னு இல்லங்க கொட்டாவி!!அது பாட்டுக்கு
கணக்கு வழக்கு இல்லாம வந்துட்டே இருக்கு.யூகிசேது
காமெடி?? காமெடிதானே அது முடியலை சார்.அதுவும்
பிரான்ஸ்இல் யூகிக்கும் சுரேஷ்க்கும் நடக்கும் காட்சிகள்
செம மொக்கை.

பிரபு, அருமையான குணசித்திர நடிகராக பல படங்களில்
தன்னை வெளிப்படுத்தியவர், ஆனா அசலில் அசந்துட்டார்
போல.இன்டெர்வல்க்கு பிறகு பிரான்ஸ் வந்தவுடன் எங்கே
போனார் என்று தெரியவில்லை கடைசியில் கிளைமாக்ஸ்இல்
வருகிறார்...வந்தது மட்டும் இல்லாமல் பழையகால வசனத்தை
பேசி மேலும் மொக்கை போடுகிறார்.
(ஒரு வேளை பிரான்ஸ்ஸை சுத்தி பார்க்க போய் இருப்பாரோ??)


பாவனா கிட்ட சொல்றதுக்கு முக்கியமா ரெண்டு விஷயம்
இருக்கு. அட நீங்க தப்பா நினைக்காதிங்க நான் பாவனாவின்
தேத்து பல்லும் அவர் சிரிப்பையும் சொன்னேன்.
சமீரா ரெட்டி, பயங்கரமா வெளிப்படுத்தி இருக்காங்கனு
சொல்ல முடியாது ஆனா ஓரளவுக்கு வெளிப்படுத்தி
இருக்காங்க,நடிப்பை தான்.

மொத்தத்தில் சரண்,பரத்வாஜ்,யூகிசேது மூவரும் சேர்ந்து
அஜித்தை ஏமாற்றி விட்டார்கள்.அஜித் அவர்கள் ஒரு
ஸ்மைல் செஞ்சு இருந்தாக்கூட மனசுக்கு ஆறுதலா
இருந்துருக்கும் ஆனா அதுவும் இல்லை....

படத்தின் உச்சக்கட்ட காமெடியாக வருவது கிளைமாக்ஸ்.
இந்த கிளைமாக்ஸ் சீனை நான் ஏற்க்கனவே ஏதோ
விஜயகாந்த் படத்தில் பார்த்ததாக நினைவு.அதுவும்
கடைசியில் சுரேஷ் திருந்துவது செம....மொக்கை.

தியேட்டர் நொறுக்ஸ்:

# படம் ஆரம்பித்தவுடன் வந்த ஒரு ஜோடி முன்னாடி,கார்னர்
சீட் காலியாக இருப்பதெல்லாம் விட்டுவிட்டு என் பக்கத்தில்
உட்கார்ந்து படம் பார்த்தது....என்ன கொடுமை இது! எனக்கு
எந்த படத்தை பார்க்கறதுன்னு கொழம்பி போய்ட்டேன்.

அசல் vs பரோட்டா - ஒரு பார்வை

# என்னடா டைட்டில் வீச்சுன்னு போட்டு ஒன்னுமே
சொல்லலைனு நினைக்காதிங்க...எப்பவும் மாயாஜால்
போன வழக்கமா சாப்பிடுற ரேவதி ஹோட்டல்க்கு
போன மாஸ்டர் இருக்குற மாவுக்கு எல்லாம்
பரோட்டா போட்டுட்டார்.அப்புறம் எங்கே வீச்சு
சாப்பிடுறது அதனால ரெண்டு பரோட்டா மட்டும்
சாப்பிட்டேன்,சும்மா சொல்ல கூடாது அவுங்க கொடுத்த
குருமா அசல் படத்தை விட நல்லாயிருந்தது என்பது
குறிப்பிடத்தக்கது.


ஜெட்லி பஞ்ச்:

அசல் - மனதில் ஒட்டாத ஹைடக் நாடகம்.


உங்கள்
ஜெட்லி....

நன்றி : indiaglitz

Friday, February 5, 2010

அசல் - டொட்டொடய்ங்!!!

அசல் - டொட்டொடய்ங்!!!
அஜித்தின் 49வது படம் அசல்,பரத்வாஜ்ஜின் இசை எப்படி
என்று உங்களுக்கு தெரியாதது அல்ல.அஜித்தின் கெட்அப்
சூப்பர்.அசல், சரண் எடுத்த வாந்தியா,பூந்தியா இல்ல பேதியா
என்று கடைசியில் சொல்கிறேன்.ஆனாலும் இந்த அஜித் ரசிகர்கள் கொஞ்சம் ஓவர்ஆக தான்
என்னை திட்டுறாங்க.....என்னமோ அவர் நடிச்ச பல தோல்வி
படங்கள் நல்ல படம் மாதிரியும் ஏதோ நான் தான் ஓவர்ஆக
சொல்வதாகவும் பீல் பண்றாங்க.பரமசிவனை முதல் நாள்
பார்த்த வலி எனக்கு தானே தெரியும்.

ஒரு வேளை அசல் ஆழ்வார் போல் இருக்குமோ என்று
நீங்கள் நினைத்தால்...ச்சே ச்சே யூகி சேது ஓரளவுக்கு
ஏதாவது நல்ல கதை பண்ணியிருப்பாரு என்று மனதை
தேத்தி கொள்ளலாம்.

அசல் படம் முன்பதிவு அப்போ கொஞ்சம் அசால்ட்டா
இருந்துட்டேன்....கணபதிராம் தியேட்டர் அதுக்குள்ள
புல் ஆயிடுச்சு... மாயாஜால் போலாம்னு பார்த்தா அவன்
200 ரூபாய் டிக்கெட்னு சொல்றான்.சட்டுன்னு மனசுல
கந்தசாமி முதல் நாள் மாயாஜாலில் பார்த்த பிளாஷ்பேக்
வேற வந்துச்சு.....சகுனம் சரியில்ல என்று அதையும்
லூஸ்ல விட்டுட்டேன்.


பார்த்தியா இது தான் அஜித் மாஸ் முதல் நாள் முதல்
ஷோ டிக்கெட் உனக்கு கிடைக்கல என்று சரியா தப்பா
எடை போடதிங்க....அஜித் படம்னு இல்ல மற்ற படங்களும்
டிக்கெட் கிடைக்காததுக்கு காரணம் பண்பலை (F.M)
அலைவரிசைகள் பண்ணும் ரவுசு தான்.ஆனா ஊனா படம்
ரீலீஸ் ஆகும் போது முதல் நாள் முதல் ஷோ டிக்கெட்
தரோம்னு சொல்லி பயங்கர கஷ்டமான அறிவு பூர்வமான
கேள்வி கேக்குறாங்க.....சாம்பிள்

அஜித் நடிச்சிருக்கும் புது படத்தின் பெயர் என்ன?

A. அசல்

B. வட்டி.


அப்புறம் எப்படி என்னை மாதிரி ரசிகர்களுக்கு டிக்கெட்
கிடைக்கும்......?.இந்த கேள்வி கேட்டு டிக்கெட் கொடுப்பது
கிட்டதட்ட கருப்பு மார்க்கெட்டில் டிக்கெட் விப்பது போல
தான்....பண்பலை அலைவரிசைகளுக்கு பெருத்த லாபம்.
பேசாம நானும் இனிமே இது போன்று அறிவுப்பூர்வமான
கேள்விக்கு பதில் அனுப்பலாம்னு இருக்கேன்.....


மற்றபடி போன வருஷம் ஏகன் படம் பார்த்த சாந்தி
தியேட்டர் காண்டீனில் பாப்கார்னில் சோளம் இல்லை,
அவன் கொடுத்த குளிர்பானத்தில் குளிர் இல்லை.
அய்யோயோ பார்க்க மறந்துட்டனே! பாத்ரூமில் தண்ணி
வந்ததா என்று பார்க்கலையே,யாராவது அசல் பார்க்க
அந்த தியேட்டருக்கு போனால் பார்த்து தண்ணி வருதா
இல்லையா என்று சொல்லவும்!!

முதல் முதலா இப்பதான் படம் பார்க்காம முதல் நாள்
படத்தின் தொடர்பாக இடுகை போடுகிறேன்.
டிக்கெட் எடுக்க தீவிர முயற்சி எடுக்கவில்லை என்று
வைத்து கொள்ளலாம், கொஞ்சம் வேலை பளு என்று
கூட சொல்லலாம்.ஆனால் தயவு செய்து அஜித் படத்தின்
மேல் நம்பிக்கை காரணமாக நான் போகவில்லை என்று நினைக்க வேண்டாம்.ஏன்னா நான் வேட்டைக்காரனே முதல் நாள் பார்த்தேன் என்பது உங்களுக்கு தெரியாதது அல்ல.....


நான் இந்த இடுகையில் அஜித்தை பத்தி தனிமனித தாக்குதல்
நடத்தவில்லை....என் வருத்தம் எல்லாம் உங்களுக்கு நடுநிலையாவோ சைட்நிலையாவோ அசல் பற்றி கருத்து தெரிவிக்கமுடியவில்லையே என்பது தான்!! நண்பர் ஒருவர்
அபிராமி தியேட்டரில் இன்னைக்கு நைட் ஷோ டிக்கெட் வைத்திருக்கிறார்...ஆனா நான் எதா இருந்தாலும் ரிசல்ட் வச்சி போலாம்னு இருக்கேன்.நீங்க பார்த்திங்கனா சொல்லுங்க..... :).

உங்கள் ஆதரவை ஒட்டு மற்றும் பின்னூட்டம் போட்டு
தெரிவிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.....

உங்கள்


ஜெட்லி....

Monday, February 1, 2010

இது எங்க ஏரியா...பர்மா பஜார்.(பார்ட்-4)

இது எங்க ஏரியா...பர்மா பஜார்.(பார்ட்-4)

வடசென்னையின் ஆரம்பம் தான் பர்மா பஜார் இருக்கும் ராஜாஜி சாலை.பர்மா பஜார் அருகில் தான் உயர்நீதிமன்றம், பூக்கடை,பீச் ஸ்டேஷன்,குறளகம் போன்ற பிரபல இடங்கள் இருக்கின்றன.பர்மாவில் இருந்து பிழைக்க வந்தவர்களுக்கு அரசு ஒதுக்கி கொடுத்த இடமே பர்மா பஜார் என்று அழைக்கப்படுகிறது.
இந்த பஜாரில் கிடைக்காத பொருளே இருக்காது என்று
சென்னைவாசிகளுக்கு நன்றாகவே தெரிந்த ஒன்று.
பர்மா பஜாரை போலிகளின் கூடாரம் என்று கூட கூறலாம்.
கஸ்டமரை மதிப்பது என்றால் என்ன?? என்று கேட்பவர்கள்
நிறைய பேர் அங்கு கடை வைத்துள்ளனர் என்பது
குறிப்பிடத்தக்கது.


நான் இப்போது பஜாரில் எதுவும் வாங்குவதில்லை காரணம்
எல்லாமே இன்டெர்நெட் வந்தவுடன் தேவையானதை
தரவிறக்கம் செய்து கொள்கிறேன்.ஆனால் அங்கு புதிதாக
செல்பவர்களுக்கு சில ஐடியாக்கள் மட்டும் சொல்கிறேன்.


# நீங்கள் அந்த ரோட்டில் நடந்து சென்றாலே ஒருவரோ
அல்லது அதற்கு மேற்ப்பட்ட குழுவோ உங்களை சுற்றி
கொள்ளும்,அவர்கள் வேறு யாரும் அல்ல இடை தரகர்கள்.
அவர்களிடம் நீங்கள் பேச்சு கொடுத்தால் உங்கள் பர்ஸ் பழுத்துவிடும்.


# அவர்கள் உங்களை வந்து கேக்கும் போது நீங்கள்
"எனக்கு தெரிஞ்சா கடை இருக்கு" என்று சொல்லி
அல்லது அவர்களை சட்டை செய்யாமல் கடையை
நோக்கி சென்றால் நல்லது.# முதலில் அவர்கள் தமிழ் படம் வேணுமா என்பார்கள்,
அடுத்து பலனா படம் வேணுமா என்று கேட்பார்கள் என்பது
குறிப்பிடதக்குது......

#உங்களுக்கு தேவை ஆனதை நீங்களே கடையை பார்த்து
பேரம் பேசி வாங்குவது உத்தமம்.

# நான் சிறு வயதில் ஜாக்கிசான் நடித்த அனைத்து சி.டி.களும்
இங்கு வாங்கியுள்ளேன்...பாதி சி.டி. நின்னு நின்னு ஓடும்...
நீங்கள் ஜாக்கி நடிச்ச miracle படம் பார்த்து இருக்கிங்களா??
சூப்பர் மசாலா படம்
...


கல்யாண பிரியாணி:


சில மாதங்களுக்கு முன் நண்பனின் பரிசீலனையின் பேரில்
இந்த ஹோட்டல்க்கு சென்றோம்.அப்போது மதியம் மணி 1,
செம கூட்டம்...பிறகு, போன வாரம் போகும் போது கொஞ்சம்
முன்னாடியே சென்றோம் கூட்டம் அப்போது தான் கூட
ஆரம்பித்தது.
முதலிலே டோக்கன் வாங்க வேண்டும்.பின்பு வாழை
இலையில் கேசரி மற்றும் வெங்காயத்தை,கத்திரிக்காய்
கொஸ்து வைப்பார்கள்.கல்யாண பிரியாணி கொஞ்சம்
வித்தியாசமா இருக்கும் அதாவது மசாலா பொருள்கள் அவ்வளவாக கடிப்படாது.அரைத்து போட்டு விடுவார்கள் போல.....
மற்றபடி சுவை ஆஹா ஓகோனு சொல்ல முடியாது..!!

அத்தோ ப்ரை: (atho noodles)வடசென்னைவாசிகளுக்கு பழக்கமான ஒரு சாலைஓர
உணவு(road side food) தான் இந்த அத்தோ நூடுல்ஸ் கடை.
பீச் ஸ்டேஷன்க்கு எதிராக உள்ளே ஒரு சாலை போகும்
அந்த சாலையில் ஒரு ஏழு கடை அல்லது அதற்கு மேலும்
இருக்கலாம்.

இங்கு ரெண்டு வகையான அதாவது வெஜ் மற்றும் நான்-வெஜ்
நூடுல்ஸ் கிடைக்கும்.வெஜ் உணவை அத்தோ என்று மட்டும்
சொல்லுவார்கள்...அதாவது வேகவைத்த நூடுல்ஸ் உடன்
பச்சை வெங்காயம் மற்றும் இதர பொருட்கள் சேர்த்து
கொடுப்பார்கள்.நான்-வெஜ் என்பது கொத்து பரோட்டா போல்,
அதாவது தோசை கல்லில் முட்டை கோஸ் போட்டு பின்பு
முட்டை சேர்த்து அதனுடன் கொஞ்சம் சிக்கன் குழம்பு
சேர்ப்பார்கள் பின்பு அந்த நூடுல்ஸ்ஸை அதனோடு சேர்த்து
கொத்துவார்கள்.இதற்கு பேர் அத்தோ ப்ரை.இதற்கு ஊத்திக்கொள்ள பக்கத்தில் ஒரு அண்டாவில் வாழைத்தண்டு சூப் வைத்து இருப்பார்கள் நமக்கு தேவை ஆனதை எடுத்து நம் அத்தோ ப்ளேட்இல் ஊற்றி கொண்டு சாப்பிட வேண்டியது தான்.மேலும் அங்கு பேஜா என்று ஒரு ஐட்டம் இருக்கும்,அது பார்ப்பதற்கு நம்மூர் தட்டை போல்
இருக்கும்...அதை நொறுக்கி போட்டு வாழைத்தண்டு சூப்பை ஊற்றி சாப்பிட்டால்.....உண்மையில் செம.....

அந்த பக்கம் போகும் போது கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க.....

இது குறித்து ஒரு சிறிய வீடியோ காட்சி.....
நன்றி NDTV-HINDU....
மேலும் பல இடங்கள் இருந்தாலும் அதை வேறு ஒரு நேரத்தில்
உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.....
உங்களுக்கு இந்த இடுகை பிடித்து இருந்தால் ஒட்டு போடவும்
ஏதாவது சந்தேகம் இருந்தாலும் இல்லை என்றாலும்
பின்னூட்டம் போட மறவாதீர்.......உங்கள்

ஜெட்லி.....