முதல்ல எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்,நம்ம
விஷால் அப்படி என்ன புரட்சி பண்ணிட்டார்னு அவர்
பேருக்கு முன்னாடி புரட்சி தளபதினு போட்டிருக்கார்??
யாராவது தெரிஞ்சா சொல்லுங்கப்பா.........
விஷாலுக்கு சின்ன வயசில் இருந்து எதா இருந்தாலும்
பெஸ்ட் தான் வேணும் அதனால கல்யாணத்துக்கு
மூணு பெண்ணை செலக்ட் பண்றாரு, கடைசியில் யாரை
கைப்பிடிக்கிறார் என்பது தான் கதை.இவ்ளோ பெஸ்ட்
தேடுராரே ஏன் படத்தில் விஷால் அவருக்கு ஒரு
நல்ல வேலை தேடலைன்னு எல்லாம் கேக்க கூடாது.
நான் பச்சீன கி அசீனா படம் ஹிந்தியில் பார்க்கவில்லை,
அதனால் அந்த படத்தின் தழுவலா என்று எனக்கு
தெரியாது
முதல்ல படத்தில் சந்தானம் பத்தி சொல்லி ஆகணும்.
செம அதகளம் பண்ணியிருக்காரு அதுவும் கல்யாண
மண்டபத்தில் அடிக்கும் லூட்டி செம....அவர் மயில்சாமியை
பார்த்து "நிக்காத விரலுக்கு எதுக்குடா நக பாலிஷ்" என்று
டபுள் மீனிங் என்றாலும் நல்ல உதாரணம்.விஷால்
தனுஸ்ரீயை மடக்கிவிட்டதாக சந்தானத்திடம் வந்து
"அவ என் கைய பிடிச்சிக்கிட்டு ப்ளீஸ்ன்னு சொன்னாடா.."
என்பர் அதற்கு சந்தானம் "நீ அவ மேல எங்கே கையை
வெச்ச" என்று கவுண்டர் கொடுப்பார் செம...
இனிமே தமிழ்ப்படத்தில் யாரும் நான் மதுரைகாரன்னு
சொல்ல மாட்டாங்க அந்தளவு சந்தனம் கலாய்ச்சீரிக்கிறார்.
அடுத்தது நீத்து சந்திரா, படத்தில் இவங்க 1500 கோடிக்கு
சொந்தக்காரி ஆனாலும் பாவம் ரொம்ப மினி டிரஸ்இல்
தான் வராங்க.அருமையா அவங்க திறமையை வெளிப்படுத்தி
இருக்காங்க.ரெண்டாவது பாதியில் வரும் பாட்டு போர்
என்றாலும் நீத்துகாக பார்க்கலாம்.நீத்துவின் சேவை
தமிழ்நாட்டுக்கு தேவை என்பதில் எந்த ஐயமும் இல்லை.
பிரகாஷ்ராஜ் கொஞ்ச நேரமே வந்தாலும் நிறைவாக
செய்து இருக்கிறார்.மௌலி சார் நோ சான்ஸ் அவரும்
தன் பங்குக்கு கிச்சுகிச்சு மூட்டுகிறார்.மயில்சாமி தன்
வழக்கமான நடிப்பில் சிரிக்க வைக்கிறார்.அவர் கூறும்
ஒரு உதாரணம் "கட்டிங் கட்டிங் சேர்ந்தா தான் குவாட்டர்
அது மாதிரி மனசும் மனசும் சேர்ந்தா தான் மேட்டர்".
தனுஸ்ரீ தத்தா கெழடு தட்டு போச்சின்னு சொல்லணும்,
பின்னே ஹிந்தி,தெலுங்குனு மார்க்கெட் இழந்த நடிகையை
நடிக்க வச்சா என்ன பண்றது.சாரா, அவரின் முகம்
சட்டென்று நியாபகம் வர மாட்டிக்குது.இருந்தாலும்
நீத்து சந்திரா போல வருமா...(பேசாம மன்றம் ஒன்னு
திறக்கலாமா??)
யுவன் இசை நன்று அதுவும் விஷால் ஒரு ஒரு பெண்ணாக
கரெக்ட் பண்ணும் போது நெற்றிக்கண் மியூசிக் செம.
அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு பத்தி சொல்லவே
தேவை இல்லை.அரவிந்த் கடைசியில் டாக்டர் ஆகவும்
வருகிறார்.சிநேகா ஒரு சீன் மட்டும் வந்து செல்கிறார்.
படம் மொத்தம் 2.45 மணி நேரம் ஓடுது.முதல் பாதி
சந்தானம் காமெடி மற்றும் விஷாலின் காதல் என்று
டைம்பாஸ் ஆகிறது.ரெண்டாவது பாதியில் பாட்டுக்கள்
தடைகளாக இருக்கின்றன.மற்றபடி எதிர்ப்பாராத
திருப்பங்கள் எல்லாமே சூப்பர்.அப்புறம் விஷால் படத்தில்
லாஜிக் பார்க்ககூடாதுன்னு நான் படம் பார்க்க முன்னமே
முடிவு பண்ணிட்டேன்.இல்ல நான் விஷால் கிட்ட இருந்து
உலக சினிமா அல்லது யதார்த்த சினிமா எதிர்ப்பார்ப்பேன்
என்றால் தீ.வி.பி.யை தவிர்ப்பது நலம்.
விஷால் பைட் சீன் எல்லாம் கொஞ்சம் ஓவர்.மற்றபடி
இந்த படத்திலும் பெண்களுக்கு எதிராக வசனம் பேசி
நம்மிடம் கைத்தட்டு வாங்குகிறார்.கிளைமாக்ஸ் செம
நாடகம்.தீராத விளையாட்டு பிள்ளை முதல் பாதியில்
ஒரே சிரிப்பு தான் ரெண்டாவது பாதியில் சில இடங்களில்
தேக்கம்.
ஜெட்லி பன்ச்:
தீராத விளையாட்டு பிள்ளை : விளையாட்டு பிள்ளைதான் entertainer !!
இந்த விமர்சனம் அனைவரையும் சென்று அடைய
ஒட்டு மற்றும் பின்னூட்டம் போட்டால் நலம்.
உங்கள்
ஜெட்லி
நன்றி: indiaglitz
36 comments:
good one. Oru thadava paakalaamnu ninaikiraen....
//மனசும் மனசும் சேர்ந்தா தான் மேட்டர்//
try பண்ணிட்டுயிருக்கேன்... நேத்துதான் 1 4 3 சொல்லியிருக்கேன்.. நாளைக்கு தான் ரிஸல்ட் தெரியும்.
அட நம்புப்பா நாங்களும் ‘தீராத விளையாட்டு பிள்ளை’தான் :)
//முதல்ல எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்,நம்ம
விஷால் அப்படி என்ன புரட்சி பண்ணிட்டார்னு அவர்
பேருக்கு முன்னாடி புரட்சி தளபதினு போட்டிருக்கார்??
யாராவது தெரிஞ்சா சொல்லுங்கப்பா.........//
நச்.. கமெண்ட்.. தமிழ்ப்படம் பார்த்துமா இவனுங்க திருந்தலை?
மெதுவாக பார்க்கலாம் என்றிருக்கிறேன்..
liked ur review brother .. good Entertainer
ஓ.. படம் உண்மையாலுமே ஹிட்டா ? நான் இந்த படம் சன் டிவி ஹிட்னு நினைச்சேன்.
தம்பி.. உங்கள நம்பி பாக்கப் போறேன்.. கவுத்திர மாட்டீங்களே..:-))
ஜெட்லி நானும் உங்கள நம்பிதான் களத்துல எறங்கலாம்னு இருக்கேன்..வந்து வச்சிக்கிறேன்...
\\ கார்த்திகைப் பாண்டியன் said...
தம்பி.. உங்கள நம்பி பாக்கப் போறேன்.. கவுத்திர மாட்டீங்களே..:-))\\
இவ்வளவு லேட்டா அண்ணா
நல்ல விமர்சனம் அண்ணே..
அப்புறம் விஷால் படத்தில்
லாஜிக் பார்க்ககூடாதுன்னு நான் படம் பார்க்க முன்னமே
முடிவு பண்ணிட்டேன்.இல்ல நான் விஷால் கிட்ட இருந்து
உலக சினிமா அல்லது யதார்த்த சினிமா எதிர்ப்பார்ப்பேன்
என்றால் தீ.வி.பி.யை தவிர்ப்பது நலம்.
...........நச்னு விமர்சனம் இருக்கு. உங்களுக்கு புரட்சி விமர்சகர்னு பட்டம் தரோம். இது எப்படி இருக்கு?
@ sarvan
சந்தானம் காமெடிக்காக கண்டிப்பா ஒரு தடவை
பார்க்கலாம்.....
@ D.R.Ashok
இருங்க... வீட்ல சொல்றேன்....
@ கவிதை காதலன்
அதெல்லாம் திருந்த மாட்டாங்க சார்....
@வெற்றி
பாரு பாரு ஒன்னும் அவசரம் இல்ல...
@ venkatesan
thanks bro...
@ venkatesan
thanks bro...
@ பின்னோக்கி
ஹிட்டா இல்லையானு நீங்க தான் முடிவு
பண்ணனும்....டைம்பாஸ் படம்...
@ கார்த்திகைப் பாண்டியன்
நான் முதல் பாதி ரசிச்சு சிரிச்சேன்...
ரெண்டாவது பாதியில் கொஞ்சம் மெதுவா
போச்சு......
பார்த்துட்டு சொல்லுங்க??
@ புலவன் புலிகேசி
ஆஹா இதென்ன புது கதையா இருக்கு.....
நான் தான் பலி ஆடா....
பார்த்துட்டு சொல்லுங்க தல....
ஒவ்வொரு மனுசனக்கும் ஒவ்வொரு பீலிங்க்ஸ்
அதை மறக்காதிங்க.....
@ Anbu
நன்றி தம்பி
@ chitra
//உங்களுக்கு புரட்சி விமர்சகர்னு பட்டம் தரோம். இது எப்படி இருக்கு?
//
ஏன் நான் நல்லா இருக்கறது உங்களுக்கு பிடிக்கலையா??
vishal padam madhan eh nalla iruku nu sonnalum na theatre ku lam poi paarka maaten..Vera vela illa ivan oru itthu pona paiyan.. ivanukulam 100rs waste panna mudiyadhu..jetli yean neenga Anandha vikatan la varamadhri marks kodukka koodathu..?
//உங்களுக்கு புரட்சி விமர்சகர்னு பட்டம் தரோம். இது எப்படி இருக்கு?
//
ரிப்பீட்ட்ட்ட்ட்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்...
//ஏன் நான் நல்லா இருக்கறது உங்களுக்கு பிடிக்கலையா?? //
சமூகத்திற்காக எவ்வளவோ பண்றீங்க.. உங்க கடமை உணர்ச்சிக்காக இதுகூட பண்ணாட்டி எப்படி.... :))
@ Dinesh
mark poda naan periya aal illa nanbaa....
t.v.p. oru time pass padam...
bore adicha kandippa parkka polam.
send ur mail id...
@ யோ வொய்ஸ் (யோகா
nandri...
@ துபாய் ராஜா
//சமூகத்திற்காக எவ்வளவோ பண்றீங்க.. உங்க கடமை உணர்ச்சிக்காக இதுகூட பண்ணாட்டி எப்படி.... :))
//
ஏன் உங்களுக்கு இந்த கொலைவெறி
முதல்ல எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்,நம்ம
விஷால் அப்படி என்ன புரட்சி பண்ணிட்டார்னு அவர்
பேருக்கு முன்னாடி புரட்சி தளபதினு போட்டிருக்கார்??
யாராவது தெரிஞ்சா சொல்லுங்கப்பா......//
இளைய தளபதியா வர்றதுக்கு முயற்சி பண்ணி படம் குடுக்கிறாரே அதனால போட்டுருப்பாங்க ஜெட்லி:))
@ ஷங்கர்..
ஹோ..அது தானா மேட்டர்...
படத்த பாக்கலாம் அப்டிங்குறீங்க.... ஆனாலும் விஷால் படத்த போயி பாக்கணுமா-னு யோசிக்கிறேன்... பாப்போம்... :) :)
அய்யய்யோ, விஷால் படமா! நான் வரலப்பா சாமீய்ய்ய்ய்ய்ய்ய்!
சந்தானம் காமெடி சீன்லாம் நான் டிவிலேயே பாத்துக்கறேன் ஜெட்லி...
@ kanagu
உங்க எண்ணம் அதுன்னா நான் ஒன்னும் சொல்றதுக்கு
இல்ல பாஸ்......
@ரகு
சந்தானம் காமெடி really rocks...
எப்படியோ பார்த்த சரி...
intha padamavathu avarukku hit ana sari!!
பொண்ணுகளுக்கு எதிரா டயலாக் பேசுறதுல எதுக்கு கைதட்டனும்??
நம்ம
விஷால் அப்படி //என்ன புரட்சி பண்ணிட்டார்னு அவர்
பேருக்கு முன்னாடி புரட்சி தளபதினு போட்டிருக்கார்??//
இவனெல்லாம் நடிக்க வந்ததே புரட்சிதானே
Post a Comment