Thursday, February 25, 2010

சச்சின் - தொடர்பதிவு

சச்சின் - தொடர்பதிவு

நேற்று இரவு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூடி,  சங்கத்தை உடனடியாக கலைத்து விடுவதைப் பற்றி அவசர ஆலோசனை நடத்தியதாகவும்,  ஆனால் ஒருநாள் போட்டியில் முன்னூறு அடிப்பது கடவுளின் அடுத்த சாதனையாக இருக்கலாம் என்ற சாத்தியக்கூறு முன்வைக்கப் பட்டதால், முடிவைத் தள்ளிவைத்து விட்டதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தலைப்பை பார்த்து இதென்ன புதுசா ஒரு தொடர் பதிவுன்னு நினைக்க வேண்டாம். என்னைப் பொறுத்தவரை

கிரிக்கெட் = சச்சின்

போன வாரமே, வலையுலக வழக்கறிஞர் அண்ணன் மோகன் குமார் இந்தப் பதிவைத் தொடர அழைத்திருந்தார். பெரும்பாலான பதிவர்கள் அழைக்கப்பட்ட அரைமணிக்குள் பதிவிட்டுவிட, நானும் இன்று, நாளை என்று நாட்களை ஓட்டிவந்தேன். ஆனால் நேற்று கடவுள் அடித்த இருநூறைப் பார்த்த பின்புதான் வேகம் வந்து இதோ பதிவிடுகிறேன்.

இத்தொடர்பதிவின் விதிமுறைகள்

1. உண்மையை மட்டுமே சொல்லவேண்டும்.
2. தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் மட்டுமே குறிப்பிடவேண்டிய அவசியமில்லை
3. குறைந்தது இருவரையாவது தொடர்பதிவுக்கு அழைக்கவேண்டும். 

. மிக மிக மிக மிகப் பிடித்த கிரிக்கெட் வீரர்?       சச்சின்

1. பிடித்த கிரிக்கெட் வீரர்  
    கபில், டிராவிட், கில்க்ரிஸ்ட் (ஆடும் ஆட்டத்திற்காக  (ஆடியோ இல்லாமல்) மட்டும்)

2. பிடிக்காத கிரிக்கெட் வீரர்
     இங்கு முகிலனை வழிமொழிகிறேன், கவாஸ்கர்

3. பிடித்த வேகப்பந்துவீச்சாளர்
   மெக்ராத் (ஆறு அல்ல அறுபது பந்து போட்டாலும் அதே லைனில் போடுவதால்)  (ஆடும்     ஆட்டத்திற்காக  (ஆடியோ இல்லாமல்) மட்டும்), வாசிம் அக்ரம், கபில், மிட்செல் ஜான்சன் (அது கையா? உலக்கையா?) , கும்ப்ளே 

4. பிடிக்காத வேகப்பந்துவீச்சாளர்
   காலிஸ் (ஆள் மட்டும் வளர்ந்திருந்தாலும், 130 தாண்டி போடாததால்), ஸ்ட்வர்ட் பிராடு, நெக்ரா (சப்பாணி ஞாபகம் தான் வருகிறது)  அப்ரிடி,

5. பிடித்த சுழல்பந்துவீச்சாளர்
   சக்லைன்,  ஷேன் வார்னே, முரளி, வெட்டோரி,சச்சின்  

6. பிடிக்காத சுழல்பந்துவீச்சாளர்
   ஆஷ்லி ஜைல்ஸ்

7. பிடித்த வலதுக்கை துடுப்பாட்ட வீரர்
   சச்சின், டிராவிட் (200 கிமி வேகத்தில் போட்டாலும், பந்து பிட்சை தாண்டி போகாது), அசார் (அந்த ரிஸ்ட் ஒர்க்குக்காக)

8. பிடிக்காத வலதுக்கை துடுப்பாட்ட வீரர்
    தோனி (வடிவேலு போல குழி வெட்டி ஆடுவதால்), தில்ஷான், அக்மல் 

9. பிடித்த இடதுக்கை துடுப்பாட்டவீரர்
   கில்க்ரிஸ்ட், சங்ககாரா, லாயிட், 2004க்கு முந்தைய கங்குலி

10. பிடிக்காத இடதுக்கை துடுப்பாட்ட வீரர்
     கம்பீர்

11. பிடித்த களத்தடுப்பாளர்
    ஜடேஜா, ஜான்டி ரோட்ஸ், சச்சின் (தெ.ஆ முதல்  போட்டியில் கடைசி ஓவர் டைவ் போதாதா?)


12. பிடிக்காத களத்தடுப்பாளர்
     கங்குலி, சேவாக்

13. பிடித்த ஆல்ரவுண்டர்
     வெட்டோரி (அவர் அந்த அணிக்காக கீப்பிங் மட்டும் தான் இன்னும் செய்யவில்லை), கபில்தேவ், குளூஸ்னர்  

14. பிடித்த நடுவர்
   டேவிட் ஷெபெர்ட், சைமன் டோபல் 

15. பிடிக்காத நடுவர்
    ஜெயப் பிரகாஷ், ஹரிஹரன், (ஏதோ ஒரு) சாஸ்திரி 
 
16. பிடித்த நேர்முக வர்ணனையாளர்
    தல அடித்த சிக்சருக்கு "Its going, going, going, Gone "சொன்னவர்  (ரிச்சி பெனாட்?), ஹர்ஷா போக்ளே, மைக்கேல் ஹோல்டிங், என் எதிர் வீட்டு செல்லப்பா மாமா ((பதினைந்து வருடம் முன்) எங்கள் மொழிபெயர்ப்பாளர்)
   17. பிடிக்காத நேர்முக வர்ணனையாளர் குறிப்பாய் யாருமில்லை
     ரவி சாஸ்திரி (இவர் பாராட்டி பேசினால் தல அவுட் ஆகி விடுவார்), 

18. பிடித்த அணி
     இந்தியா (சச்சின் இருப்பதனால் மட்டும்), எந்த ஒரு அணியும் (ஆஸ்திரேலியா எதிராக விளையாடும் போது)

19. பிடிக்காத அணி
     தனியா சொல்லணுமா?

20. விரும்பி பார்க்கும் அணிகளுக்கிடையேயான போட்டி
      சச்சின் ஆடும் எந்த ஒரு போட்டியும்,

21. பிடிக்காத அணிகளுக்கிடையேயான போட்டி
     சச்சினுக்கு ஓய்வு கொடுத்து இந்தியா ஆடும் எந்த ஒரு போட்டியும்,

22. பிடித்த அணி தலைவர்
      கபில், அசார் (ஆயிரம் குறை சொன்னாலும், ஒற்றை ஆளை நம்பி இருந்த அணியை, பத்து வருடம் வழி நடத்தியதற்காக), வெட்டோரி, கடந்த பத்தாண்டுகளில் மேஇ தீவுகளுக்கு காப்டனாய் இருந்த அனைவரும், தோனி (மச்சக்காரன்), ரணதுங்கா (காப்டன் கூல்), குரோனியே  

23. பிடிக்காத அணித்தலைவர்
      பின் குறிப்பை பார்க்கவும்     

24. பிடித்த போட்டி வகை
    ஒருநாள் போட்டி (தலையின் சமீப சாதனை இதில் தானே) 

25. பிடித்த ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி
     சச்சின் – கங்குலி, கில்க்ரிஸ்ட் - ஹைடன் 


26. பிடிக்காத ஆரம்ப துடுப்பாட்ட  ஜோடி
      குறிப்பாய் யாருமில்லை

27. உங்கள் பார்வையில் சிறந்த டெஸ்ட் வீரர்
     சச்சின், டிராவிட்

28. சிறந்த கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளர்
    சச்சின், சச்சின், சச்சின், சச்சின்

இந்தப் பதிவைத் தொடர நான் அழைப்பவர்கள்

அண்ணன் பிரபா
இரும்புத்திரை அரவிந்த் (இதை அவர் படித்தால்)
கேபிள் சங்கர்
MANO (பிற்சேர்க்கை)

வேறு யாரும் விரும்பினால் கூறலாம், பட்டியலில் சேர்த்துக்கொள்கிறேன்
 

பின் குறிப்பு

எனக்கு ரிக்கி பாண்டிங்கை பிடிக்காது என்று சொல்வதை விட அவரை வெறுக்கிறேன் என்று தான் சொல்லவேண்டும். ஆனால் பிடிக்காத ஆட்டக்காரர்கள் பட்டியலில் அவரை சேர்க்கவும் மனம் வரவில்லை, ஏனென்றால் அவரை கிரிக்கெட் ஆட்டக்காரர் என்று சொல்லவே மனம் வரவில்லை.

முகிலனைப் போலவே எனக்கு ஆஸ்திரேலியா அணியைப் பிடிக்காது  ஏனென்றால் "Its not Cricket" என்ற தொடர் பயன்படுத்தப் பட்டு வந்த தொனியையும், அர்த்தத்தையும் மாற்றியதில் முதலிடம் அவர்களுக்குத்தான். அதையும் மீறி சில பச்சை தொப்பிக்காரர்கள்  பட்டியலில் இருப்பதற்கு அவர்கள் ஆட்டத்திறமையும் அவர்கள்  எப்போதாவது காட்டிவந்த நேர்மையும் மட்டுமே காரணம்.


படங்கள்  அனைத்தும் நான் பன்னிரண்டு ஆண்டுகளாய் பாதுகாத்து வரும் பிலிப்ஸ் விளம்பர புத்தகம் ஒன்றில் எடுக்கப் பட்டது


நன்றி
சங்கர்

42 comments:

MANO said...

shall i join...?

mano

D.R.Ashok said...

தொடர் பதிவு எழுதுய்யான்னா... தலபுராணம் (சே) சச்சின் புராணம் பாடிவெச்சியிருக்க... :))

SUREஷ் (பழனியிலிருந்து) said...

எங்கள் கல்லூரிக் காலங்களில் ஒரு செண்டிமெண்ட் உண்டு, ரவிசாஸ்திரி வர்ண்ணை செய்ய எங்கு போனாலும் எவ்வளவு நன்றாக ஆடினாலும் இந்தியா தோற்றுவிடும்.

பிற்காலம் சரித்திரம்...,

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

SUREஷ் (பழனியிலிருந்து) said...
எங்கள் கல்லூரிக் காலங்களில் ஒரு செண்டிமெண்ட் உண்டு, ரவிசாஸ்திரி வர்ண்ணை செய்ய எங்கு போனாலும் எவ்வளவு நன்றாக ஆடினாலும் இந்தியா தோற்றுவிடும்.

பிற்காலம் சரித்திரம்...//

இப்ப அருன்லால் கண கச்சிதமா செய்யறார் சார்..:))
------

சங்கர் ஏன் சச்சின் ரிடயர் ஆனதுக்கு அப்புறம் எழுதி இருக்கலாமே ::))

சி. கருணாகரசு said...

எல்லாம் சரிதான்.... சச்சின் இல்லாத இந்திய அணியை பிடிக்காது என்று சொல்லுவது சரியா? ( கேள்வி எண் 18ம்.... 21 ம்)

முகிலன் said...

கும்ப்ளேயை வேகப்பந்து வீச்சாளர் பட்டியலில் சேர்த்தது,

வெட்டோரிக்கு - கீப்பிங் மட்டும் தான் செய்யவில்லை என்ற கமெண்ட்

செல்லப்பா மாமா

இவற்றை ரசித்தேன்..

ரவி சாஸ்திரிக்கு கரு நாக்கு - “India is well set" அப்பிடின்னு சொல்லி முடிச்சதும் அடுத்த விக்கெட் விழும்.

ர‌கு said...

"2011 ந‌ம்ம‌ கையில‌" - ச‌ச்சினே துணை!

ஏன் ச‌ங்க‌ர், ஸ்டீவ் வாஹ் பிடிக்காதா?

சுசி said...

:)))

யோ வொய்ஸ் (யோகா) said...

எனது பல ரசனைகள் உங்களோடு ஒத்து போகிறது

ஸ்ரீராம். said...

இந்த கமெண்ட்ரி குழப்பத்தில் நமது வர்ணனையாளர்கள் எதிர் அணி பெயரைச் சொல்லி, உதாரணமாக ஆஸ்திரேலியா badly need a wicket....என்பார்கள்...இது வேற...சொன்ன உடனே விக்கெட் விழும்...!

shabi said...

அசார் (ஆயிரம் குறை சொன்னாலும், ஒற்றை ஆளை நம்பி இருந்த அணியை, பத்து வருடம் வழி நடத்தியதற்காக),/////இவரைப் பற்றி intha thodar எழுthiய யாரும் குறிப்பிடவில்லை... ஒரு sotthai team வச்சு கேப்டனாக irundhadhu ஒரு saadhanai....

shabi said...

ரவி சாஸ்திரி (இவர் பாராட்டி பேசினால் தல அவுட் ஆகி விடுவார்),////யாரைப் பற்றி comment பண்ணாலும் அவங்க அவுட்....

shabi said...

அசார் (அந்த ரிஸ்ட் ஒர்க்குக்காக)...///IDHAP பற்றியும் யாரும் குறிப்பிடவில்லை.....

முகிலன் said...

எனக்கும் அசாரின் லேட்-லேட்-லேட் கட் (கிட்டத்தட்ட கீப்பரின் கையிலிருந்து அடிப்பார்) மிகவும் பிடிக்கும்..

ஆன் சைடில் பார்த்துக் கொண்டே ஒரு ஃப்ளிக்கில் பந்து ஆஃப்சைடில் போகும்படி அடிப்பார் - கேமரா கூட ஏமாந்து போகும்.

இவ்வளவு இருந்தும் அவரை நான் சொல்லாததற்குக் காரணம் மேட்ச்-ஃபிக்ஸிங்.

இத்தனை நாளும் நடந்தது நாடகமா? இதற்கா கைத்தட்டி, விசிலடித்து கண்ணீர் விட்டோம் என்று நினைத்துப் பார்க்கும் போது அசாரின் மீதிருந்த அத்தனை நல்ல எண்ணங்களும் அடித்துக் கொண்டு போய்விட்டது.

அஹோரி said...

அருமை.

Chitra said...

:-) Good ones!

Tech Shankar said...

Hi. I love Your post. I love Sachin the Master.
Have a look @ here too.

Anjali Tendulkar Rare Photos

புலவன் புலிகேசி said...

/தோனி (வடிவேலு போல குழி வெட்டி ஆடுவதால்)//

நாங்க அவுரு டயர் ஓட்டுவதாய் சொல்வோம்..

பேநா மூடி said...

கிட்ட தட்ட நான் டைப் பண்ணியது போலவே இருக்கிறது..,

/தோனி (வடிவேலு போல குழி வெட்டி ஆடுவதால்)//

விவசாயி வந்திட்டார் இது எங்க கமெண்ட்

விக்னேஷ்வரி said...

ப்ரெசண்ட் சார். எனக்கும், கிரிக்கெட்டுக்கும் அவ்வளவு தூரம். :)

சங்கர் said...

@ MANO

நிச்சயம் தொடருங்கள்

சங்கர் said...

@ D.R.Ashok

இப்படி கேட்பீங்கன்னு தெரிஞ்சிதான் பெரிய எழுத்துல போட்டு வச்சிருக்கேன்

கிரிக்கெட் = சச்சின்

சங்கர் said...

@ SUREஷ் (பழனியிலிருந்து)

ஆமாம் தல, ஆனா சச்சினுக்கு கொஞ்சம் ஸ்பெசல்

சங்கர் said...

@【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║

உங்க தல மேல போட ஏற்கனவே ஒரு கல்லு வெயிட்டிங், இன்னொண்ணும் சேர்த்துக்குறேன் :)

சங்கர் said...

//சி. கருணாகரசு said...
எல்லாம் சரிதான்.... சச்சின் இல்லாத இந்திய அணியை பிடிக்காது என்று சொல்லுவது சரியா? ( கேள்வி எண் 18ம்.... 21 ம்)//

அதென்னவோ அப்படிதான் தோன்றுகிறது, இன்று சச்சின் இல்லாமல் இந்தியா ஆடும் ஆட்டங்களில், அது யுவராஜ் 136 அடித்ததாக இருந்தாலும் சரி, சேவாக் 160 அடித்ததாக இருந்தாலும் சரி, நான் அதிகபட்சம் செய்யும் செயல், முதல் பாதி முடிவிலும் ஆட்ட முடிவிலும் ஒரு முறை ஸ்கோர் பார்ப்பது தான், சச்சினின் ஓய்வுக்குப் பின் (அவராக விரும்பி கேட்கும் வரை) கிரிக்கெட் பார்ப்பேனா என்பதே சந்தேகமாகத் தான் உள்ளது

சங்கர் said...

//முகிலன் said...
ரவி சாஸ்திரிக்கு கரு நாக்கு - “India is well set" அப்பிடின்னு சொல்லி முடிச்சதும் அடுத்த விக்கெட் விழும்.//


அதே தான், "Sachin is in Prime for today" என்று சொன்ன உடன் அவுட் ஆகிவிடுவார்

சங்கர் said...

//ர‌கு said...
ஏன் ச‌ங்க‌ர், ஸ்டீவ் வாஹ் பிடிக்காதா?
//

பொதுவாகவே ஆஸ்திரேலிய அணியினரிடம் இல்லாத Sportsmanship காரணமாக இவரையும் பிடிக்காது (ஹன்சி குரோனியே தடுத்த ராபின் சிங்கின் ரன் அவுட் ஞாபகம் இருக்கிறதா?)

சங்கர் said...

@ சுசி

:)))))))

@ யோ வொய்ஸ் (யோகா)

நன்றி யோகா

சங்கர் said...

// shabi said...
இவரைப் பற்றி intha thodar எழுthiய யாரும் குறிப்பிடவில்லை... ஒரு sotthai team வச்சு கேப்டனாக irundhadhu ஒரு saadhanai....//

கும்ப்ளே உடன் ராஜுவும், சவுகானும் ஸ்பின் Trioவாம், ஆம்ரே, காம்ப்ளி மிடில் ஆர்டர், வெங்கடேஷ் பிரசாத் பாஸ்ட் பவுலர் :))))

என்ன கொடுமை சார் இது

சங்கர் said...

//முகிலன் said...
இவ்வளவு இருந்தும் அவரை நான் சொல்லாததற்குக் காரணம் மேட்ச்-ஃபிக்ஸிங்.//

அது, யானை தானே தலையில் வாரிப் போட்டுக்கொண்ட மண் :-(

ஆரம்பகால அசார் ஆடுகளத்தில் நிற்பதை பார்க்கவே அட்டகாசமாய் இருக்கும்

சங்கர் said...

@ அஹோரி

@ Chitra

@ Tech Shankar


நன்றி

சங்கர் said...

//புலவன் புலிகேசி said...
நாங்க அவுரு டயர் ஓட்டுவதாய் சொல்வோம்..//

இன்னும் பஞ்சர் ஆகாததால் தப்பிசிக்கிட்டுருக்காரு :))

சங்கர் said...

//பேநா மூடி said...
விவசாயி வந்திட்டார் இது எங்க கமெண்ட்//

ரன் அறுவடை ஆகும்வரை சரிதான் :)

சங்கர் said...

//விக்னேஷ்வரி said...
ப்ரெசண்ட் சார். எனக்கும், கிரிக்கெட்டுக்கும் அவ்வளவு தூரம். :)//

உங்களுக்கு ஆப்சென்ட் போட்டுடுறேன் :)

இரும்புத்திரை said...

தல என்னை மன்னிச்சிருங்க..இந்த தொடர்பதிவு எழுதுறவங்க ப்ளாக்ல போய் பார்த்துட்டு பெயர் இல்லாமல் ஏமாற்றம் தாங்க முடியாமல் இனி எந்த தொடர்பதிவும் படிக்க கூடாது என்று முடிவு செய்து படிக்காமல் விட்ட முதல் பதிவே உங்களுடைய பதிவு தான்.அதுல என் பெயர் இருக்கு.எனக்கு மட்டும் இப்படி தான் நடக்கும்.அது என்ன நான் படிச்சா நான் என்ன பெரிய லாடு லபக்கு தாஸா.எழுதுடா வெண்ண என்று அன்பாக சொன்னால் எழுதிட்டு போறேன்.முன் தினம் பார்த்தேனே,விண்ணைத் தாண்டி வருவாயா இரண்டும் படித்தேன்.சச்சின் சண்டையால் அப்படி பெயரை பார்த்ததும் ஒரு பயம்.அதனால் தான் அதை படிக்கவில்லை.அதனால என்னை மன்னிச்சிருங்க தல.நான் ஒரு வெட்டிப்பய.எனக்கு நீங்க இப்படி ஒரு பில்டப் குடுத்தா படிக்கிறவங்க என்னை பத்தி என்ன நினைப்பாங்க.கண்டிப்பா எழுதுவேன் தல.தப்பு பண்ணிட்டேன் மன்னிச்சிருங்க.

சங்கர் said...

//இரும்புத்திரை said...
சச்சின் சண்டையால் அப்படி பெயரை பார்த்ததும் ஒரு பயம்//

அரவிந்துக்கு சண்டைனா பயமா? இதென்ன புதுக்கதை?

buvanesh said...

அன்புள்ள சங்கர்,
முடிந்தால் என் பதிவை பார்வையிடவும்,

http://buvaneshk.blogspot.com/2010/02/blog-post_26.html

buvanesh.

buvanesh said...

அன்புள்ள சங்கர்,
தங்கள் ஆலோசனைக்கு நன்றி. தமிழிஷ்,தமிழ்மணம் என்றால் என்ன? அதில் இணைவது எதற்காக?எப்படி? தயவு செய்து விளக்கவும்.மேலும், என் ப்ளாக் இல் followers லிங்க் experimental mode இல் உள்ளது.அதை சேர்க்க முடியவில்லை.தயவு செய்து உதவவும்.

மோகன் குமார் said...

அருமை. குறிப்பாய் சச்சினின் பல rare படங்கள் பார்த்து மிக மகிழ்ச்சி

Rajasadaraj said...

Fine work

சந்தோஷ் தமிழன் said...

boss, ellame arumai ponga.. sachin na sachin dhan.. matha blogs um pathen.. nenga oru nakkal pidicha aaalu polarukku

வரதராஜலு .பூ said...

தல தல-தான்னு நச்சுன்னு சொல்லியிருக்கிங்க. நல்லாயிருக்கு