**********************************************
நான் இதுவரைக்கும் ஒரு பாட்டின் பாடகர் குரலுக்கு
இந்த மாதிரி கைத்தட்டு மக்கள் கொடுத்து இப்போது
தான் பார்க்கிறேன்.அந்த பாடல் மன்னிப்பாயா,ரகுமான்
பாடியது.
சிம்பு, நிறைய சொல்லலாம் இவரை பத்தி.ரொம்ப
அமைதியா, சவுண்ட் விடாம,பஞ்ச் பேசாம என்று
சொல்லி கொண்டே போகலாம்.முதலில் இவர்
த்ரிஷாவை இம்ப்ரெஸ் செய்ய பண்ணும் கலாட்டாக்கள்
நன்று.
த்ரிஷா, நல்லாவே திறமையை வெளிப்படுத்தி இருக்காங்க,
நடிப்பு திறமையை தான்!!அப்புறம் சிம்புவின் கூடவே
வரும் கேமராமேன் கேரக்டர் நல்லாவே கவுண்டர்
விடுறார்.அப்புறம் பழைய அர்ஜுன்,சத்யராஜ் படத்தில்
வில்லான வருவாரே அவர் இதிலும் வில்லனாக,,,,!
மனோஜ் அவர்களின் கேமரா கண்ணுக்கு குளுமை.
எனக்கு பொதுவா கௌதம் படங்களில் வந்த காதல்
சீன்களில் அவ்வளவு ஈடுபாடு இல்லை,காரணம்
நாயகனும் நாயகியும் எப்போதும் ஒரே விஷயத்தை
மட்டும் தான் பேசுவாங்க.எனக்கு அது கொஞ்சம் போர்
அடிக்கும் அவ்வளவு தான்."எப்போ நடந்ததுனு தெரியல..
BUT I AM IN LOVE WITH U" என்று வசனம் வந்தால் அது
கௌதம் படம் தான்.ஏன்னா அவர் பாதி தமிழ் பாதி
இங்கிலீஷ் பண்ணி வசனம் எழுதுவார்...
அப்புறம் கௌதம் அவர்களிடம் இன்னொரு பிடிக்காத
விஷயம் *த்தா.... என்று அவர் எல்லா படத்திலும்
திணிக்கிறார் அதுவும் இல்லாமல் அவரே டப்பிங்
பேசுகிறார்.சென்னையின் மொழியாகி போன *த்தா... என்பதை ரோட்டில் கேட்டு கேட்டு புளிச்சு போச்சு அதை தியேட்டரிலும் கேக்கணுமா??
ஏ.ஆர்.ஆர் அவர்களின் பின்னணி இசையில் எனக்கு
பிடித்த இடம்...த்ரிஷா அண்ணனிடம் சிம்பு boxing
சண்டை போடும் காட்சி...அதாவது டப்பாங்குத்து
சவுண்ட் மாதிரி இருக்கும் ஆனா அதுவே கிளாஸ்ஆ
இருக்கும்!.....
படம் முதல் பாதி போர் அடிக்காம போது,ஆனா
ரெண்டாவது பாதி தான் கொஞ்சம் இல்ல ரொம்பவே
பொறுமையை சோதிச்சிட்டாங்க.சில இடங்களில்
இருவரும் தொடர்ந்து பேசுவது என்னால் தாங்க முடியவில்லை.ஆனா கடைசி ட்விஸ்ட் நல்லா இருந்தது..
பக்கா ஏ கிளாஸ் படம் அப்படின்னு சொல்லலாம்.
எனக்கு அவ்வளவா பிடிக்கலைங்க....!!
தியேட்டர் நொறுக்ஸ்:
# படத்தில் சிம்பு த்ரிஷாவை அடிக்கடி கட்டிபிடிப்பார்...
அதை பார்த்த பின் சீட்டுகாரர் "யோ என்னயா ஆனா
ஊனா கட்டி புடிச்சுக்கிறான்" என்று பீல் பண்ணினார்.
"லவ் பண்ணா கட்டி தான் புடிப்பாங்க வேற என்ன
பண்ணுவாங்க"னு கேட்கலாம் என்று நினைத்தேன்,,,
அதற்குள் பக்கத்துக்கு சீட்காரர் "சிம்பு கிஸ் அடி..ஹ்ம்"
என்று கத்தினார்..."என்னமோ கிரிக்கெட்ல சிக்ஸ் அடினு
சொல்ற மாதிரி இல்ல சொல்றார்" என்று நினைத்து கிஸ்
அடிக்கும் காட்சியை பார்த்தேன்....
# த்ரிஷா ஒரு காட்சியில்
"எனக்கு சினிமா புடிக்காது,ஏன்னா இருட்டு பிடிக்காது
எல்லாரும் கத்துவாங்க....." என்பார்...அதற்கு ஒரு
குரூப் "எங்களுக்கு இருட்டு தான் புடிக்கும்....%%&**"
என்று கத்தியது....
# படம் முடிய பத்து நிமிஷ முன்னாடி சிம்பு எடுத்த
படத்தை ரெண்டு பேரும் பார்ப்பார்கள்..அப்போது
அந்த படம் முடியும் போது "A FILM BY KARTHIK"
என்று கார்டு வரும்....இங்கே உடனே நம்ம தியேட்டர்
OPERATOR படம் முடிஞ்சு போச்சுனு லைட்ட போட்டாரு..
சில பேரு லைட்டை போட்டவுடன் மொக்கை தாங்காம
வெளியே போய்ட்டாங்க....அப்புறம் தான் படத்தில்
முக்கியமான ட்விஸ்ட்ஏ வந்தது!!
ஜெட்லி பஞ்ச்:
விண்ணைத்தாண்டி வருவாயா : வரும் ஆனா வராது...!!
இந்த விமர்சனம் பல பேரை சென்று அடைய உங்கள்
ஒட்டு மற்றும் பின்னூட்டத்தை போடுங்கள்....
ஜெட்லி....
நன்றி : indiaglitz!
62 comments:
”A FILM BY KARTHICK" மேட்டர் :-) அம்புட்டு நல்லவங்களாய்யா அவங்க..!
"A FILM BY KARTHIK"
டைரக்டர மாத்திட்டாங்களோ
//சிம்பு, நிறைய சொல்லலாம் இவரை பத்தி.ரொம்ப
அமைதியா, சவுண்ட் விடாம,பஞ்ச் பேசாம என்று
சொல்லி கொண்டே போகலாம்.//
அப்ப படத்த பாக்கனும் போல
முதல் எதிர்மறை விமர்சனம்... படத்தை பார்த்தால் தான் தெரியும் .
// பக்கா ஏ கிளாஸ் படம் அப்படின்னு சொல்லலாம்.
எனக்கு அவ்வளவா பிடிக்கலைங்க....!! //
நம்ம மக்கள்கிட்ட, மணி ரத்னம் படத்தையோ, கௌதம் மேனன் படத்தையோ நல்லா இல்லன்னு யாராவது சொன்னா.., அவங்களுக்கு ரசனை இல்லன்னு சொல்லுவாங்க. இல்லேன்னா படத்தை நல்லா பாருன்னு சொல்லுவாங்க. அப்டியும் ஒத்துக்காட்டி அவங்கள தனி லிஸ்ட்ல வச்சுருவாங்க.
பிடிக்கலன்னு சொல்ல ஜெட்லி க்கு ரொம்ப தைரியம்தான்.
சிம்புவோட விரல் வித்தையும் பன்ச் டயலாக்கும் இல்லைங்குறதே படத்துக்கு பெரிய ப்ளஸ் தாங்க.
THANKS FOR VISIT MY PAGE....
MANO
அட... அப்டிங்களாண்ணா... :)
/வரும் ஆனா வராது...!!/
என்னது?????
@ROMEO
எதிர்மறை விமர்சனமா??
எனக்கு சுமாராதான் இருக்குன்னு சொன்னேன்,....
கண்டிப்பா பார்த்துட்டு சொல்லுங்க....
@vels
//பிடிக்கலன்னு சொல்ல ஜெட்லி க்கு ரொம்ப தைரியம்தான்.
//
நீங்க சொல்றது கரெக்ட்தான்...
ஒவ்வொரு ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு பீலிங்க்ஸ்
என்பதில் தான் எனக்கு உடன்பாடு அதிகம்.......
அதை விட்டுட்டு அடுத்தவன் ரசனை பத்தி பேச யாருக்கும்
உரிமை இல்லை....
படம் பார்த்துட்டு சொல்றேன் தல
wanna c this film
அருமையான படம் என்பதை உங்க விமர்சனம் சொல்லுதே!!
விமர்சனம் ரொம்ப சூப்பர். படம் பாக்கணும் போல...
கலக்கல் விமர்சனம் தல.
நீங்க சொன்ன கருத்துல எனக்கு உடன்பாடு கிடையாது.அதை இங்கேயே சொல்லியிருக்கலாம்.இங்க சொன்னா எனக்கு எப்படி ஒரு பதிவு தேறும்.அதனால நான் உங்களுக்கு பக்கத்து வினை எழுதியிருக்கேன்.நீங்க படிச்சி பின்னூட்டம் போட்டு இதை சரியா எடுத்துக்கிட்டு எனக்கு ஓட்டு போடணும்.சரியா அப்ப தான் நீங்க என்னை தப்பா எடுக்கலை என்று முடிவு செய்வேன்.ஜெட்லி டைப் அடிக்கும் போதே எனக்கு சிரிப்பு வருதே.
hey movie is really superb man..sorry 4 english..gowtham fever starts :)
சுமாரா இருக்குன்னு சொல்றீங்க..
எனக்கு இந்த த்ரிஷாவைப் பிடிக்கவே பிடிக்காது.. அதுனல சாய்ஸ்ல விட்டுடலாமான்னு யோசிச்சிட்டு இருக்கேன்.
ஆனா பாருங்க எங்க ஊர்ல என்னிக்காவடு ஒரு நாள் தான் தமிழ்ப்படம் கொண்டு வருவாய்ங்க. இந்தப் படத்தைக் கொண்டுவந்தா பாக்கப் போயிருவேன்..இல்லைன்னா திருட்டு டிவிடில பாக்க மாட்டேன்..
விமர்சனத்திற்கு நன்றி...
அப்புடின்னா கண்டிப்பா படம் எனக்குப் புடிக்கும்...நாளைக்குப் போறேன்...என்ன டெம்ப்ளேட் நம்மள மாதிரியே இருக்கு...சேம் ஸ்வீட் கொடுங்க ஜெட்லி...
சேம் பிஞ்ச் தான் எங்களுக்குத் தெரியும் :)
எனக்குப் படம் சுத்தமாப் புடிக்கலீங்க! அதுனாலே உங்க விமர்சனத்தின் பெரும்பகுதியோட ஒத்துப்போறேன். :-)
@ ♠ ராஜு
@ பேநா மூடி
படத்தில் சிம்பு இயக்குனராக வருவார்...
அவர் படம் முடியும் போது போடுவார்கள்....
@அத்திரி
பாருங்க அண்ணே....
@ romeo
கண்டிப்பா பார்த்துட்டு சொல்லுங்க ரோமியோ....
@ விக்னேஷ்வரி
அது சரி தான்
@ D.R.Ashok
நான் உங்களுக்கு அண்ணனா....
என்ன கொடுமை சார் இது....
@ gulf-tamilan
பஞ்ச் சொன்ன எடுத்துக்கணும்...
ஆராய கூடாது....
@ கவிதை காதலன்
பார்த்துட்டு சொல்லுங்க பாஸ்
@ யோ வொய்ஸ் (யோகா)
பார்க்கலாம்...பாரு யோ...
@ அண்ணாமலையான்
ரைட்டுக்கு நன்றி
@ Starjan ( ஸ்டார்ஜன்
அண்ணே வேற யாருக்காவது போடுற
பின்னூட்டத்தை இங்கே தப்பா பேஸ்ட் பண்ணிட்டிங்களா??
@ அக்பர்
நன்றி
@ இரும்புத்திரை
நீ நடத்துப்பா....
@ வெற்றி
அப்படியா....sounds great man...
@ முகிலன்
நீங்க தான் பாஸ் கரெக்ட்...
எதிலாவது பார்த்துட்டு சொல்லுங்க பாஸ்
விமர்சனம் சூப்பர் தல ...
விமர்சனம் சூப்பர் தல ...
@ பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி
நன்றி...
@ புலவன் புலிகேசி
புடிக்கும்...நம்ம ஏரியா பக்கம் வாங்க
ஸ்வீட் கடையே வாங்குவோம்...
@ சேட்டைக்காரன்
வாயா வாயா..... :))
@ ஸ்ரீ.கிருஷ்ணா
நன்றி கிருஷ்ணா
எனக்கு நித்திரை சரியா வரமாட்டேங்கிது என்று நண்பர்ர் ஒருவரிடம் கூறியதற்கு உடனடியாக விண்ணை தாண்டி வருவாயாவிற்கு போகச்சொல்கிறார் , உண்மையில் அதற்கான சந்தர்ப்பம் உண்டா ?
பக்கா ஏ கிளாஸ் படம் அப்படின்னு சொல்லலாம்.
எனக்கு அவ்வளவா பிடிக்கலைங்க....!
..........பக்கா ஏ கிளாஸ் விமர்சனம அப்படின்னு சொல்லலாம். எங்களுக்கு பிடிச்சிருக்கு.
அருமையான விமர்சனம் நண்பரே . பகிர்வுக்கு நன்றி !
விமர்சனம் படித்தேன்...எப்போ 'கிடைக்குதோ' அப்போதான் பார்க்கணும்...!
நல்ல தமிழ் வசனங்கள் வேண்டுமெனில் ஆ.ஒ பார்ககவும். விண்ணைத்தாண்டி வர்றது கஷ்டம்தானோ?
இன்னிக்கு படம் பார்க்கணும்னு இருந்தேன். நேற்று இரவு செகண்ட் ஷோ பார்த்துட்டு ஒரு மணிக்கு கோயம்புத்தூர்லேர்ந்து வீரகேரளம் சரவணன் ‘வி.தா.வ” பார்த்துட்டு தியேட்டர்ல 100 பேர் தற்கொலை னு எஸ்.எம்.எஸ். அனுப்பினான். அதனால படம் பார்க்கணுமா வேணாமானு நெனைச்சேன். உங்க விமர்சனம் கொஞ்ச நம்பிக்கையை தருது. எதுக்கும் இன்னிக்கு படம் பார்த்துடுறேன்.
திருவட்டாறு சிந்துகுமார்
இன்னிக்கு படம் பார்க்கணும்னு இருந்தேன். நேற்று இரவு செகண்ட் ஷோ பார்த்துட்டு ஒரு மணிக்கு கோயம்புத்தூர்லேர்ந்து வீரகேரளம் சரவணன் ‘வி.தா.வ” பார்த்துட்டு தியேட்டர்ல 100 பேர் தற்கொலை னு எஸ்.எம்.எஸ். அனுப்பினான். அதனால படம் பார்க்கணுமா வேணாமானு நெனைச்சேன். உங்க விமர்சனம் கொஞ்ச நம்பிக்கையை தருது. எதுக்கும் இன்னிக்கு படம் பார்த்துடுறேன்.
திருவட்டாறு சிந்துகுமார்
kumudamsindhu@gmail.com
hi jetli have u notice..?
padathula LONDON-nu sollitu NEWYORK kamipanga!!!!
gauthum menon namaku theriyathu nu ninaichitar pole iruku!!!
@ எப்பூடி
ஓரளவுக்கு கரெக்ட்ஆ தான் சொல்லி இருக்காரு
உங்க நண்பர்....
@ Chitra
மிக்க நன்றி....
ஆனா நான் பக்கா லோ கிளாஸ்!!
@ ♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫
நன்றி....
@ ஸ்ரீராம்
எது டைம்ஆ டிக்கெட்ஆ???
ஹோ...நீங்க என்ன சொல்றிங்கன்னு
புரியுது...வேணாம் சார்...அப்புறம் உங்க இஷ்டம்
@மயில்ராவணன்
இன்னும் ரெண்டு நாள் கழிச்சு தான் தெரியும்...
@ Thiruvattar Sindhukumar
பாஸ் பார்த்துட்டு சொல்லுங்க...
//hasan said...
hi jetli have u notice..?
padathula LONDON-nu sollitu NEWYORK kamipanga!!!!
//
பார்த்தேன்...யாரு இதெல்லாம் கேக்குறது...
இப்படி ஒவ்வொரு பதிவரும் முதல் நாளே, விமர்சுச்சிட்டா நாங்க எப்படிங்க படத்துக்கு போவோம். கலைஞர் டிவில தீபாவளிக்கு பார்த்துகிறோம்.
சிம்பு நடிச்ச படம்லாம் வேணாம் ஜெட்லி, நமக்கு ரஹ்மான் பாட்டு போதும்:)
@ தமிழ் உதயம்
@ ரகு
அது சரி தான்....
ஐயா செட்லி அவர்களே,
நீங்கள் சொன்ன A Class அப்படிங்குற தரத்துக்கு என்னயா அர்த்தம்.
சென்சார் அர்த்தம் வேற. நீங்க என்ன அர்த்தத்துல சொல்ல வாறீங்க......
Good reiew
thanks for sharingk Shangkar
Post a Comment