Friday, June 26, 2009

நாடோடிகள்.....விமர்சனம்

நாடோடிகள்

நண்பனின் காதலுக்கு உதவ போய் தங்கள் வாழ்க்கையை
தொலைத்த மூன்று நண்பர்களின் கதை.பிறகு அந்த
நண்பன் தங்களுக்கு துரோகம் செய்ததை எண்ணி என்ன செய்றாங்க அப்படின்னு நீங்க தியேட்டர்ல பாருங்க.....
படத்தின் திரைக்கதை மிக அருமை. படம் ஓடும்
நேரம் அதிகம் என்றாலும் (2:45 minutes) போர் அடிக்காமல்
செல்கிறது.

சசிகுமார் நட்புக்காக உயிரையும் தரும் பாத்திரம்.
ஆள் இதில் கொஞ்சம் கலகலப்பாகவே திரிகிறார்.
காதல் செய்கிறார், டான்ஸ் ஆடுகிறார். தன் நண்பன்
துரோகம் செய்து விட்டான் என்று தெரிந்தவுடன்
தன் கண்களில் கோப அனலை கக்குகிறார். இந்த
மாதிரி நமக்கு ஒரு நண்பன் இல்லையே என்றும்
ஏங்கும் அளவுக்கு.அடுத்து பரணி கல்லூரி படத்தில் வந்த பையன், இவரின் காமெடி
சான்ஸ்ஏ இல்லை.இவருக்கு நடுவுல காது கேக்காம போய்டும்,
அப்போ கூட ஆள் பின்னுவார். கடைசியில் நண்பனை கொல்ல
துடிக்கும் அந்த காட்சிகளில் உண்மையிலே செம.


விஜய் செ-28 புகழ், தனக்கு கொடுத்த பாத்திரத்தை கச்சிதமாக
செய்திரிக்கிறார். இவரின் அப்பாவாக வரும் புதுமுகம்
நச்சென்று மனதில் நிற்கிறார்.பையனின் காதலுக்கு அவரே
தூது போகிறார்.விஜய்க்கு கால் போனவுடன் தன்னம்பிக்கையாக
அவர் கூறும் வசனங்கள் டச்சிங்.

படத்தின் முதல் பாதியே ஒரு படத்தை பார்த்த திருப்தி
கிடைத்து விடும். இடைவேளை முன்னால் வரும் சேஸ்
காட்சிகள் அருமை.தன் நண்பனின் லவ் ஜெயிக்க சசி
அண்ட் கோ பண்ணும் தியாகங்கள் நட்பின் அருமையை
நமக்கு உணர்த்துகிறது.படத்துக்கு ஒளிப்பதிவு மிக பெரிய
பிளஸ். அந்த விளம்பர பிரியர் வரும் காட்சிகளில் தியேட்டர்
அதிர்கிறது , சும்மா கலக்குறாரு. கஞ்சா கருப்பு தன்
பங்குக்கு சிரிக்க வைக்கிறார்.


படத்தில் நாயகிகளுக்கு அவ்வளவு வேலை இல்லை.
அந்த சிவா சம்போ பாடல் காட்சிக்கு விறுவிறுப்பு தருகிறது.
ஆகா மொத்தத்தில் படம் சூப்பர். கடைசியில் கொஞ்சம்
சுப்ரமணியபுரம் வாசம் அடித்தாலும் படம் நச்.
ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல சினிமா பார்த்த
திருப்தி கிடைத்தது.இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.ஜெட்லி டவுட்:

சசி அண்ணே தன் நண்பனின் காதலை எத்தனை பேர்
அடித்தாலும் தூரத்தினாலும் சேர்த்து வைக்கிறார்.
(நண்பனின் அம்மா M.P, நண்பனின் காதலியின் அப்பன்
பெரிய தொழிலதிபர்.)

ஆனா சசி அவர்கள் அடுத்த தெருவுல இருக்கிற தன்
காதலி அத்தை பெண்ணை விட்டு கொடுப்பது, கொஞ்சம்
இடிக்குது. (இருந்தாலும் சசி அண்ணே உங்க நேர்மை
எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு)

ஜெட்லி பஞ்ச்:

நாடோடிகள் படம் பார்த்த பின் நண்பனின் காதலை சேர்த்து
வைக்க பல நண்பர்கள் தயங்குவார்கள்.


நீங்கள் பெற்ற விவரம் அனைத்து மக்களையும் சென்று அடைய
ஒட்டு போடுங்கள்.


நன்றி:indiaglitz
உங்கள்
ஜெட்லி

Thursday, June 25, 2009

இது எங்க ஏரியா.......

இது எங்க ஏரியா.......


நம்ம சென்னை குறித்து பல்வேறு தகவல்களை
உங்களுடுன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.முதலில்
எங்க ஏரியா திருவான்மியூர் அமைந்து உள்ள தியேட்டர்கள்
குறித்து கூறுகிறேன்.


(திருவான்மியூர் சிக்னல்)

தியாகராஜா தியேட்டர்:

திருவான்மியுரின் பெரிய அடையாளம் இந்த தியேட்டர், பல
வருடங்கள் முன்னாடி கட்டப்பட்டது. ஆனால் DTS, A/C,
QUBE போன்று அனைத்து வசதிகளும் கொண்டுள்ள ஒரு
நடுத்தர மக்களுக்கு ஏற்ற தியேட்டர்.கிழே கட்டணம் 28
ரூபாய் பால்கனி 50 ரூபாய்.

முன்னணி மற்றும் எதிர்பார்ப்புகளுடன் வரும் படங்களுக்கு
கண்டிப்பாக முதல் மூன்று நாட்கள் பால்கனி கவுண்டரில்
டிக்கெட் தர மாட்டர்கள்.தியேட்டர் ஊழியர்களே ப்ளாக் டிக்கெட்
விற்ப்பார்கள்.அட்வான்ஸ் BOOKING என்றால் என்னவென்று
கேட்பார்கள். தயவு செய்து பேப்பர் பார்த்து விட்டு யாரும்
முன் பதிவுக்கு வருவதை தவிர்ப்பது நல்லது.


இங்கே முதல் நாள் முதல் படம் பார்ப்பது போருக்கு சென்று
திரும்புவது போல. ஒரு சின்ன கேட் வழியாக 400 பேரை
உள்ளே தள்ளுவார்கள்.நான் கடைசியாக அஜித்தின் பில்லா படம்
முதல் நாள் பார்க்க சென்றேன்.உள்ளே போகுபவர் போலீஸ் லத்தி அடியுடன் தான் படம் பார்க்க வேண்டும், ஏன் என்றால் அவளோ
தள்ளு முள்ளு.நான் படம் ஆரம்பித்து சில நிமிடங்கள் கழித்து சென்றதால் லத்தி அடியில் இருந்து தப்பி விட்டேன். இல்லன பழுத்து இருக்கும்.பார்க்கிங் வசதி கொஞ்சம் கம்மிதான்.

ஜெட்லியின் பரிந்துரை:

குடும்பத்துடன் செல்பவர்கள் கொஞ்சம் உஷாராக தான்
போக வேண்டும்.ஏன் என்றால் பக்கத்திலயே டாஸ்மாக்
கடை உள்ளது.

**********************
ஜெயந்தி தியேட்டர்:

இதுவும் பழமையான தியேட்டர் தான். இன்னும் பழமையாகவே
இருப்பது தான் கொடுமையான விஷயம்.ஏதோ தர்மத்துக்கு
நடத்துவது போல் இயங்கி கொண்டிரிக்கிறது. இந்த தியேட்டரில்
A/C,AIR,QUBE,DTS போன்று எதுவுமே இல்லை. பால்கனி டிக்கெட்
விலை 25 ரூபாய் தான், கிழே இருபது ரூபாய் தான்.

நான் இந்த தியேட்டரில் கடைசியாக ஜெயம்கொண்டான் படம்
பார்த்தேன்.பொதுவாக நான் ஜெயந்தி பக்கம் தலை வைத்து படுப்பது கூட இல்லை சூழ்நிலை காரணமாக சென்றோம், பால்கனி
மாட்டு கொட்டாய் போன்று இருந்தது.மின் விசிறி ஓடியும் காத்து
வரவில்லை, இருக்கை அருகே முழுவதும் பாக்கு தூப்பி கொடுமையாக இருந்தது.


படத்தின் போது சவுண்ட் ஸ்க்ரீன் அருகே இருந்து வருவதால்
ஒன்றும் தெளிவாக விழவில்லை,முக்கியமா ஸ்க்ரீன்
மஞ்சள் கலரில் தெரிந்தது. இங்கே படம் பார்த்தால் கண்
கெட்டுவிடும் அது மட்டும் தான் புரிந்தது. தியேட்டர் என்று
சொல்லமுடியாத ஒரு புரியாத புதிர் தான் ஜெயந்தி தியேட்டர்.


ஜெட்லியின் பரிந்துரை:

இங்கே படம் பார்த்தால் நல்ல படம் கூட உங்களுக்கு
பிடிக்கமால் போய் விடும்.நீங்கள் குளித்து விட்டு வர
வேண்டிய அவசியம் இல்லை தியேட்டரில் உள்ள
புழுக்கமே உங்களை வியர்வையால் குளிப்பாட்டி விடும்.

**********************


கணபதிராம்:

இந்த தியேட்டர் இப்போதைக்கு ஒரு அளவு பரவாயில்லை.
நல்ல விசாலமான பார்க்கிங், முன் பதிவு வசதி உண்டு.
நான் தற்போது பார்த்த சில படங்கள் இந்த தியேட்டரில்
இருந்து தான் பார்த்தேன்.பால்கனி டிக்கெட் அம்பது ரூபாய்
கிழே சரியாக தெரியவில்லை.

சீட் வசதி நன்றாக இருக்கிறது, ஆனால் பல சீட்கள் உடைக்க
பட்டிரிக்கின்றன. மொக்கை படம் பார்த்த ரசிகர்கள் வெறியில்
உடைத்திருக்கலாம் என தெரிகிறது.மிச்ச படி சவுண்ட்,A/C
எல்லாம் அருமையாக இருக்கும்.

ஜெட்லியின் பரிந்துரை:

கணபதிராம் காதலியுடன் படம் பார்ப்பதற்கு ஏற்ற தியேட்டர்.
ஏன் என்றால் நிறையே மொக்கை படங்கள் ரிலீஸ்
செய்கிறார்கள்.

போனஸ் செய்தி:

சில காலங்களுக்கு முன் ஷகீலா படங்களை மக்களுக்கு
அளித்த பெருமை கணபதிராம் தியேட்டர்க்கு இருக்கிறது.


உங்களுக்கு பிடித்து இருந்தால் ஓட்டையும் போட்டு போங்க.
வேற ஏதாவது தியேட்டர் பத்தி தெரியும்னா கமெண்ட் பண்ணுங்க......

உங்கள்
ஜெட்லி

Tuesday, June 23, 2009

பொடிமாஸ்.....

பொடிமாஸ்....


நல்ல ஜோக்

பெண் உதவியாளர்: "சார், உங்கள் மனைவி போன் செய்து இருக்கிறார்,உங்களை போனில் முத்தமிட வேண்டுமாம்."

மேனேஜர்:"வாங்கி வெச்சுக்க, அப்புறம் எனக்கு குடு".!!!!!

***************************
பொன்மொழிகள்:

படித்தது:

# மோசமானவர்கள்தான், மிகச்சிறந்த அறிவுரைகளை
அளிக்க முடியும்.

-பிலிப் பெய்லி.


# பெண்கள் நமக்கு சோதனையான காலத்தில் ஆறுதல்
அளிக்கிறார்கள்.பெண்களே இல்லாவிட்டால் ஆண்களுக்கு
ஆறுதலே தேவைப்படாது.

-டான் ஹெரால்ட்.

************************
அழகான காதல் படம்


(இதுக்கு பேர் தான் நண்பனின் காதலுக்கு உதவி செய்வதோ )

*************************

நான் எழுதியது:

நான் அவளை பார்த்தேன்
அவள் என்னை பார்த்தாள்
பூ போல் சிரித்தாள்
செல்லமாய் வெட்கப்பட்டாள்
என் உடம்பு சிலிர்த்தது
அவள் அருகில் சென்றேன்
பின்பு தான் புரிந்தது
அவள் ஹெட் போனில் யாருடுனோ பேசி கொண்டிரிக்கிறாள் என்று...........

***************************
டாஸ்மாக் பக்கங்கள்:

அவன் என்னை பாரில் பார்த்தான்
அவன் என்னை காரில் அழைத்து வந்தான்
அவன் என் மேலாடையை திறந்தான்
அவன் என்னை உதட்டில் வைத்தான்
கோபம் கொள்ளாதீர் , நான் ஒரு மது பாட்டில்.


*********************************

மாயாண்டி குடும்பத்தார் நமக்கு உணர்த்தும் பாடம்.

நண்பர் சுகுமார் இந்த படத்தை முதல் நாளே பார்த்து
விட்டார்.நான் அவருக்கு ரொம்ப பெரிய மனசு என்று
கிண்டல் அடித்தேன்,கடந்த வாரம் தான் இந்த படத்தை
நான் பார்க்க நேர்ந்தது.ச்சே, எப்படி இந்த படத்தை மிஸ்
பண்ணோம் என்று எனக்கு தோன்றியது. உண்மையில்
படம் மிக அருமையாக இருந்தது.பொன்வண்ணன்,சீமான்
மிகவும் இயல்பாக நடித்து இருந்தனர்,அவர்களை போல்
நமக்கு அண்ணன்கள் இல்லையே என்று தோன்றுமளவுக்கு
தங்கள் நடிப்பு திறமையை வெளிப்படித்தி இருந்தனர்.
படத்தில் ஒரு குறை என்றால் அது தருண் கோபி
காதல் காட்சிகள் தான் மிக கேவலமாக இருந்தன.படத்தின்
போது சில காட்சிகளில் என்னை அறியமால் என் கண்ணில் கண்ணீர் தூளிகள் எட்டி பார்த்தன. ஆனா, இந்த படத்தில்
இருப்பது போல் அண்ணன்மார்கள் இப்போது யாருமில்லை
சிலரை தவற.ஒரு ஆபாசமில்லாத குடும்ப படம்,அன்பு
மட்டுமே நிலையானது என்பதை கூற வந்துள்ள படம்
மாயாண்டி குடும்பத்தார்.


பிடித்தது:

படத்தில் சீமான் பேசும் வசனம்:

"இந்த காலத்துல கள்ள காதல் கூட நாலு பேருக்கு
தெரிஞ்சு செஞ்சுராயிங்க ..ஆனா கூட பிறந்த பிறப்புக்கு
ஒருத்தர்க்கும் தெரியாம தானே உதவ வேண்டி இருக்கு."
**********************************************

நன்றி: தினத்தந்தி

ஹென்றி வில்லியம் ஆலிங்கம்.(Henry William Allingham )


மேல உள்ள ஹென்றி தாத்தாவுக்கு போன ஜூன் ஆறாம்
தேதி தன் 113 வயதை அடைந்தார் . உலகத்தில் வாழும்
அதிக வயதானவரில் இவரும் ஒருவர், இந்த தாத்தா.
இவர் இரண்டு உலக போரிலும் பங்கெடுத்து கொண்டவர்.
சரி என்னடா மேட்டர் அப்படின்னு கேக்குறிங்களா?....

இவரின் வாழ்வின் ரகசியம் குறித்து கேட்டதற்கு:

மது, புகை பிடிப்பது, பெண் இந்த மூன்று பழக்கங்களும்
தான் இந்த வயது வரை தன்னை வாழ வைப்பதாக
அவர் கூறியுள்ளார்.


டிஸ்கி:குடி குடியை கெடுக்கும்,புகை பழக்கும் உடலுக்கு
கேடு, ஒருத்தனுக்கு ஒருத்தி என்பதே சிறந்தது.

****************************

உங்கள்

ஜெட்லி

Sunday, June 21, 2009

முத்திரை -- திரை விமர்சனம்.

முத்திரை

முத்திரை படம் பார்ப்பது சொந்த செலவில் சூனியம் வைத்து
கொள்வதற்கு சமம், நான் தெரிந்தே வைத்து கொண்டேன்.
கார்த்திகை பாண்டியன் அவ்வளவு தூரம் சொல்லியும் நான்
முத்திரை போக வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது.
யுவனா இசை என்று கேட்கும் அளவுக்கு பாடல்கள் மிக
கேவலமாக இருக்கின்றன.மொத்தத்தில் படம் மொக்கையோ
மொக்கை. படத்தை பத்தி பேசி அதிக டைம் வேஸ்ட் பண்ண
வேண்டாம்.

முத்திரை படம் பார்த்த தியேட்டர்ல நடந்த சில சுவையான
விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.


# படத்தில் ஒரு காட்சியில் மஞ்சுரியின் அப்பா பேசும் வசனம்
"நான் இதுவரைக்கும் எதுக்காகவும் தலை குனிஞ்சது இல்ல,
இப்ப உன்னால......"


தியேட்டர்ல ஒரு ரசிகரின் குரல்:

"டேய் நாயே சாணி மிதிச்ச கிழே குனிய மாட்டியாட...."

# டேனியல் பாலாஜியை க்ளோஸ்-அப் ஷாட் காட்டும் போதெல்லாம்
ஒரு
ராசிகர்

"ஐயோ , க்ளோஸ்-அப் ஷாட் வேணாங்க. முடியுல"...

# எனக்கு முன் இருக்கையில் அமர்ந்து இருந்த நபர் ராக்கி சாவந்த்
மற்றும் லக்ஷ்மி ராய் பாட்டின் நடன காட்சியின் போது எட்டி
எட்டி பார்த்து ரசித்தார். கொஞ்ச விட்ட ஸ்க்ரீன் உள்ளையே
போய்டுவார் போல.
(எனக்கு என்ன வருத்தம்னா எனக்கு பாதி
ஸ்க்ரீன் தெரியவில்லை).

நான் என் முன் இருக்கையில் உள்ள நபரின் முகத்தை காண
ஆசைப்பட்டேன்.இடைவெளி வந்தது சரி முன்னால் சென்று
பார்ப்போம் என்று நினைத்தால் அந்த நபர் நன்றாக தூங்கி
குறட்டை விட்டு கொண்டிரிந்தார்.

போனஸ் செய்தி:

இடைவெளி முடிந்து படம் ஆரம்பித்தவுடன் வெளிய சென்ற
அந்த முன் இருக்கை நபர், திரும்பி உள்ளே வர வில்லை.
(தப்பிச்சிட்டார் , ரொம்ப விவரமானவர்)


# இந்த படத்துல்ல ஏதாவது புதுசா செய்யனும்னு,லக்ஷ்மி ராய்
இடுப்பில் தாலியோடு அலைகிறார்.
(கேக்கவே கேவலமா இல்லை)

# லக்ஷ்மி ராய் திரையில் தோன்றி அழும் காட்சி வந்தால்
இங்கு படம் பார்த்து கொண்டு இருக்கும் ரசிகர்கள்

"கவலைப்படாதே டோனி அடுத்த தொடர்ல பின்னிடுவார்"
என்று கத்துகிறார்கள்.

# நிதின் சத்யாவின் நடிப்பு திறமையை கண்டு ஒரு ரசிகர்
வெறி வந்து

"சத்யா உன்னை மட்டும் ரோட்ல பார்த்தேன் பின்னிடுவேன்"
என்று வெறியோடு கத்தினார்.

# டேனியல் பாலாஜி பாடல் காட்சிகளில் ஏதோ லக்ஷ்மி ராயை
கற்பழிப்பது போல் பார்த்து கொண்டே கையையும் காலையும்
ஆட்டுகிறார்.


# லாஜிக் இல்லாத படம் முத்திரை ஒரு சின்ன உதாரணம்
" ஒரு பிக் பாக்கெட் திருடன் திடிர்னு முதலமைச்சர்
கைபேசிக்கு கால் பண்ணுவாராம்...."

முத்திரை பார்த்ததில் நேத்து நித்திரையை தொலைத்த
அப்பாவி நான். நீங்கள் உஷாரா இருங்க மக்களே.......

ஜெட்லி பஞ்ச்:

மொக்கை படம் பாக்கறது என் தப்பு இல்ல படம் எடுத்தவன்
தப்பு.

மக்கள் அனைவரையும் காப்பாற்ற ஒட்டு போடுங்கள்.


நன்றி: indiaglitz
உங்கள்
ஜெட்லி

Saturday, June 20, 2009

காதல் செய்ய ஏற்ற இடம்?

காதல் செய்ய ஏற்ற இடம்?

***************************
நேத்து நைட் என் மனசாட்சி என்கிட்ட வந்து ஒரு கேள்வி கேட்டுச்சு...
"டேய் ஜெட்லி கண்ட கண்ட மொக்கை பதிவலாம் போடுறியே,
நாலு பேருக்கு நல்லது செய்யுற மாதிரி எப்ப பதிவு போட போற ...."
என்று கேட்டது.


"சரி காதலர்களுக்கு உதவியா இருக்குற மாதிரி ஒரு பதிவு போடுறேன்" அப்படின்னு சொன்னேன்.


தீடிர்னு அவன்(மனசாட்சி) சிரிக்க ஆரம்பிச்சு
"டேய் உனக்குதான் காதலும் பிடிக்காது, காதல் செய்ரவங்களையும்
பிடிக்காதே. நீ என்ன உதவி செய்ய போற".


அவனை(மனசாட்சி) விடுங்க, அதற்காக தான் இந்த பதிவு... ஸ்பெஷல் காதலர்கள் பதிவு.

***********************

# முதல்ல நீங்க இந்த குழந்தைகள் பூங்கா, வண்டலூர் ஜூ
போன்ற இடங்களுக்கு போவதை தயவு செய்து நிறுத்தி கொள்ளுங்கள்.

சின்ன பசங்களை கூட்டிட்டு பாம்பு, பறவையை
பாக்க வந்த நீங்க கண்டதையெல்லாம் பாக்க வைக்கிறிங்க.#அப்புறம் இந்த அண்ணா நகர் டவர் பூங்கா பக்கம் போக
முடியுல, அப்படி போனாலும் அந்த டவரை சுத்தி பாக்க
முடியுல. செவுரு புல்லா ஒரு காதல் வசனம் பிளஸ்
முகம் சுளிக்கும் வசனம். அந்த டவர் ஏறுறதுக்கு குள்ள
ஒரு பத்து காதல் ஜோடி வழியை மறைச்சி உட்காரிங்க.
நாங்கலாம் டவர் பாக்க வந்தோம் நீங்க என்னன்ன எங்களுக்கு
ஓசியில மலையாளம் படம் காட்றிங்க. அப்புறம் ஏன் mms
எல்லாம் வராது.


டேய் ஜெட்லி என்னடா லவ்வர்ஸ்க்கு ஹெல்ப் பண்றேன்
சொல்லி டிப்ஸ் கொடுப்பேன்னு பார்த்தா நீ எங்களையே
கலாய்க்கிரியா என்று நீங்கள் கூறுவது என் காதில் விழுகிறது.
இதோ வரேன் இருங்க அடுத்தது அதான்........(பின்வரும் சம்பவம் அனைத்தும் நான் பார்த்தவையே,
எனக்கு இது மாதிரி எதுவும் அமைந்ததில்லை, நான் ஒரு
பார்வையாளன் மட்டுமே)


சரி அப்போ காதலர்களுக்கு ஏத்த இடம் எது அப்படின்னு பார்த்தா


# தியேட்டர் தாங்க, யாருக்கும் எந்த வித பிரச்னையும் இல்ல.
ஆனா தயவு செய்து புது படம் மற்றும் கூட்டமான தியேட்டர்க்கு
எல்லாம் போகாதிங்க,ஏன்னா திருப்பியும் அது உண்மையாக படம்
பார்க்க வந்தவர்களுக்கு தொந்தரவு கொடுக்கும். மொக்கை படம்
போன கூட்டம் இருக்காது இருந்தாலும் உங்க காதல் வேலையை நீங்க சவுண்ட் இல்லாம பண்ணா நல்ல இருக்கும்.இப்படிதான்
பாருங்க நம்ம கேபிள்சங்கர் அண்ணே , ராகவன் படத்துக்கு போய் ரொம்ப பயந்துட்டார்.


(எனக்கும் இந்த மாதிரி ஒரு அனுபவம் இருக்கு இதை கிளிக்
செய்து படிக்கவும்)
,
# சென்னை பக்கத்தில் இருக்கும் மாயாஜால் யாரை நம்பி
கட்டிவச்சிருகாங்க நினைச்சிங்க, காதலர்களின் சொர்க்க பூமிங்க
அது.ஆனா காதலன் பர்ஸ் காலி ஆயிடும்.இங்கே போய் படம் பார்த்தா,ஹோ ஸாரி நீங்க படம் பாக்க மாட்டிங்க இல்ல.
இங்கே போய் உட்கார்ந்த யாருக்கும் எந்த வித தொந்தரவும்
இருக்காது.சில மொக்கை படம் ஒரு ஷோ மட்டும் ஓடும் அது
தான் நீங்க தேர்ந்து எடுக்க பட வேண்டிய படம். ரெண்டு பேர் இருந்தா கூட புல் ஏ.சி போட்டு படத்தை போடுவாங்க.

எப்படி நம்ம டிப்ஸ் யூஸ்புல்லா இருந்ததா?.....

இந்த விஷயத்தை அனைவரும் படிக்க, நீங்க ஒரு சின்ன
விஷயம் பண்ணுங்க.... ஒட்டு போட்டு போங்க.

உங்கள்
ஜெட்லி

Friday, June 19, 2009

பிஞ்சுல பழுத்த பசங்க.....

பிஞ்சுல பழுத்த பசங்க.....

(ஐயோ இப்பவே கண்ணே கட்டுதே......)


****************

(நான் அப்படியே சாப்பிடுவேன்.......)
*****************
(சும்மா பொம்மை மிட்டாய், நீங்க ஒன்னும் தப்பா நினைக்காதிங்க)

*********************
(இதெல்லாம் எனக்கு தூசு......)
******************
(சே.. ஒன்னும் சரியா தெரியலையே!.... )


***********************
உங்கள்
ஜெட்லி

Thursday, June 18, 2009

சாமியோவ் நல்ல இருக்கியா சாமியோவ்!....

சாமியோவ் நல்ல இருக்கியா சாமியோவ்!....

நீங்கள் என்றைகாவது நரிகுறவர்கள் வாழும் இடங்களுக்கு
போய் இருக்கிங்களா?


எங்கள் வீட்டின் பக்கத்தில் சுமார் இருநூறு நரிகுறவர்கள்
வசிக்கும் நகர் உள்ளது. சிறுவயதில் அவர்கள் இருப்பிடம்
தேடி நானும் நண்பர்களும் ஒரு தடவை சென்றோம்,
அவர்களிடம் இல்லாத பொருளே இருக்காது என்று கேள்விப்பட்டு,

விலையும் குறைவாக இருக்கும் என்று எண்ணி நாங்கள் அவர்கள் இருப்பிடத்தை நோக்கி போய் கொண்டிருந்தோம்.அவர்களிடம்
பந்து, கோலி அல்லது சின்ன மோட்டார்(பேர் நினைவில் இல்லை)
எதுவும் அவர்களிடம் கிடைக்கும்.எல்லாமே பழைய பொருள்தான்
சிலவை மட்டும் புதிதாக இருக்கும்.


நானும் என் நண்பர்களும் பந்து வாங்க சென்றோம் ஏன்
என்றால் அவர்களிடம் மட்டும் டென்னிஸ் பந்து ஐந்து
ரூபாய்க்கு கிடைக்கும். முதன்முதலில் எங்களை வரவேற்றது
ஒரு பழைய பேப்பர் கடை அவர் நம்ம தமிழ் ஆளு தான்,

நரிகுறவர்கள் தாங்கள் சேகரித்த அனைத்து பழைய
பொருள்களும் இவரிடம் தான் கடைசியில் வந்து சேரும்
என்று அவர் கடையை பார்த்தாலே தெரிந்துவிடும். ஆமாம்
மலை போல் அவரிடம் பொருள்கள் குவிந்து இருந்தன.என் இட கையின் பக்கம் ஒரு நரிக்குறவர் சமைத்து கொண்டு
இருந்தார், நான் சும்மா என்னடா செய்யறார் என்று பார்த்தேன்.
ஒரு பூனையின் தோலை உறித்து அதை அடுப்பில் போடுவதற்கு

மசாலா தடவி கொண்டு இருந்தார். பூனையை கூட சாப்பிடுவாங்களா?
என்று அன்று தான் எனக்கு தெரியும். எங்கள் பகுதியிலும் அடிக்கடி பூனை திருடு போகும் ரகசியம் எனக்கு பன்னிரண்டு வயதில் தான் புரிந்தது.


கொஞ்ச தூரம் போயிருப்போம் எனக்கு வேறு ஏதோ தேசத்தில்

இருப்பது போன்ற உணர்வு. அப்போ அப்போ வந்த வழியை திரும்பி
பார்த்து கொண்டே நடந்தேன், கூட வந்த நண்பர்கள் டென்னிஸ் பால்
இருக்கிறதா என்று விசாரித்து வந்தார்கள். இன்னொரு நரிக்குறவன்
தன் துப்பாக்கிக்கு ரவையை அடைத்து கொண்டு இருந்தான். ஒருவன் ஏதோ புரியாத மொழியில் கத்தி கொண்டே எங்களை கடந்து சென்றான்.


கண்டிப்பா அவர்கள் குளித்து பல நாள் ஆகிருக்கும், ஆண்கள்
பெண்கள் இருவருக்குமே தண்ணி என்றாலே அலர்ஜி போல,
ஆனால் சரக்கு தண்ணி ரெண்டு பேருக்குமே ஒத்துக்கும்.
எங்கள் ஏரியாகாரர்கள் குறவர்களை பற்றி கூறும் போது
அவர்கள் நம்மை விட பணக்காரர்கள், வங்கியில் லட்சம்
லட்சமா பணம் இருக்கும் ஆனா அவுங்க இப்படிதான்
இருப்பாங்க என்று கூறுவார்கள்.

நாங்க ஒரு குறவனிடம் டென்னிஸ் பால் இருக்கிறதா
என்று கேட்டோம் ஹ்ம் அவனிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.அடுத்து அடுத்து நகர்ந்து கொண்டே போனோம்.
சின்ன சின்ன பசங்க எல்லாம் குரங்கு கூட விளையாடி கிட்டு இருக்கிறத கொஞ்ச நேரம் பார்த்து ரசித்தோம்.

அதன் பின் ஒரு குறத்தியிடம் சென்று டென்னிஸ் பால்
இருக்கிறதா? என்று கேட்டோம்.அதற்கு அவள் என்கிட்டே
இந்த பால் தான் இருக்கு என்று தான் மாராப்பை காட்டினாள்.


என்ன கொடுமை சார் இது!இப்படியும் இருக்காங்களே என்று தலையில் அடித்து கொண்டு டென்னிஸ் பால் வாங்கமலயே
வீடு வந்து சேர்ந்தோம்.இன்று வரை அது ஒரு கசப்பான
அனுபவமாகவே என் வாழ்வில் இருந்து வருகிறது ....

உங்கள்

ஜெட்லி

Wednesday, June 17, 2009

நடிகர்களை கலாய்க்களாம் வாங்க......

காலாய்க்களாம் வாங்க......

வணக்கம்ங்க நானும் நடிகர்களை கலாய்க்காமா இருக்கலாம்னு
நினைச்சா, என்னால இருக்க முடியலங்க.அதனால நீங்களும்
சும்மா படிங்க ரசிங்க டென்ஷன் ஆகாதிங்க.

நீங்க எல்லாம் அந்த ரின் சோப்பு தூள் விளம்பரம் பார்த்து
இருப்பிங்கனு நினைக்கிறேன், ஆமாங்க அதேதான் ஒரு பையன்
கிரிக்கெட் விளையாடும் போது பந்து போய் ஒரு பெரியவர்
வீட்டில் விழும் உடனே அவர் அவனிடம்,

இனிமே நீ கிரிக்கெட் விளையடுவியா....
நீ என்ன சச்சினா....
இனிமே சிக்ஸ் அடிப்பியா என்றப்படி பிரம்பால் ஒரு கையை
நீட்ட சொல்வார்.

உடனே அந்த பையன் இரண்டு கையையும் நீட்டி நான் இன்னொரு
சிக்ஸ் அடிப்பேன் என்பான்.

அவனது தன்னம்பிக்கையை பார்த்து பெரியவர் பந்தை திருப்பி
கொடுத்து தோளில் தட்டி கொடுப்பார்.

இங்க தாங்க எனக்கு ஒரு விஷயம் நினைவுக்கு வந்துச்சு, அதாவது
இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் நம்ம நடிகர்கள் இருந்தா எப்படி
இருக்கும்னு நினைச்சு பார்த்தேன். நீங்களும் படிச்சு பாருங்க..........

************************

விஜய டி.ராஜேந்திரன்

பெரியவர்: ஏன்பா இனிமே உன்னை பேட்டி எடுத்த சும்மா டேபிள்ஐ
போட்டு தட்டுவியா? வாயிலேயே இனிமே மியூசிக் போடுவியா?
கையை நீட்டு......
டி.ஆர் அவர்கள் ரெண்டு கையையும் நீட்டி

டேய் உன்கிட்ட இருக்கு பிரம்பு
நீ அடிக்கற அடிலாம் தாங்கும்டா என் உடம்பு,
என் மனசு இரும்பு
அது எப்போதும் புடிக்காது துரும்பு,
பொங்கலுக்கு சாப்பிடலாம் கரும்பு
என் கூட நடிச்ச மும்தாஜ் கொஞ்சம் குறும்பு,
அடுத்த சூப்பர் ஸ்டார் சிம்பு
அதை நீ நம்பு......

u r suppressing appressing deppressing a tamilian ......
யோ நான் தமிழன்யா நான் தமிழன்யா......

பெரியவர்: ஆள விடு சாமி.............

****************************

அஜித்

பெரியவர்: இனிமே நீ பேஷன் ஷோல நடக்கற மாதிரி நடிப்பியா?
அப்புறம் என் பின்னாடி ஆறு கோடி பேர் இருக்காங்க அப்படின்னு
சொல்லுவியா?

அஜித்: அது ஒரு கருப்பு சரித்தரம். நான் நடக்கறதா வேணாமானு
முடிவு பண்றது நான் இல்ல THOSE DIRECTORS. அப்புறம் அநேகமா
இப்போ என் பின்னாடி ஏழு கோடி பேர் இருப்பாங்கன்னு நினைக்கிறேன்.

பெரியவர்: ஹ்ம்ம் நாய் வால நிமித்த முடியாது.........

********************

டாக்டர் விஜய்

பெரியவர்: இனிமே குருவி, வில்லு மாதிரி படத்துல்ல நடிப்பியா?
சும்மா theatre வெளிய நின்னுட்டு இருக்கிறவனை
புடிச்சி உன் படத்துக்கு உள்ள தள்ளி விடுவியா?
கையை நீட்டு...............

உடனே விஜய் பின்னாடி இருந்து பத்து கைகள் மேல இருக்கும் படத்தில் போல் வருகிறது......

விஜய்: இன்னும் அடுத்த பத்து படதில்ல அந்த மாதிரி தான் நடிப்பேன்.

பெரியவர் மயக்கமாகிறார்......
********************************
உங்களுக்கும் யாரைவது கலாய்க்கனும் அப்படின்னு ஐடியா இருந்தா கமெண்ட் பகுதியில் தட்டி விடுங்க......

நன்றி:indiaglitz
உங்கள்
ஜெட்லி

Tuesday, June 16, 2009

கந்தசாமி ---இப்படியும் இருக்குமோ!

கந்தசாமி --- ஒரு கற்பனை.

நன்றி:indiaglitz

(பின் வருபவை உங்கள் மனதை புண்ப்படுத்தி இருந்தால், விக்ரம் மற்றும் திரையுலக ரசிகர்கள் மன்னித்து கொள்ளவும்)

(அப்புறம் இந்த திரைக்கதையை படிச்சிட்டு, பல 'C'கள் வச்சிக்கிட்டு
என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருக்குறவங்க என்கிட்டே வாங்க, சும்மா ஒரு படம் எடுப்போம்)


காட்சி 1:
இடம்: தமிழக ஆந்திரா எல்லை சூளுர்பேட்டையில் உள்ள ஒரு கோழி பண்ணை.


வானத்தில் பயங்கர இடி, சுறாவளி காற்றுஅப்போது வானத்தில் இருந்து ஒரு பெரிய கோழி குதிக்கிறது. பின்னாடி BGMல கோ கோ கோழி அப்படின்னு DSP மியூசிக் போடுகிறார். DSP னா போலீஸ் இல்லங்க Devi Sri Prasad.க்ளோஸ் அப் ஷாட், அந்த பெரிய கோழி யாருன்னு பார்த்த நம்ம விக்ரம்.கோழி மாதிரியே தரையெல்லாம் தீனி தேடிட்டு அப்படியே கோழி பண்ணை உள்ள பூந்து அங்குள்ள அம்பது ஆயிரம் கோழிகளை திருடுகிறார்.
அப்போது கோழி பண்ணை தொழிலதிபர் அதை பார்த்து விடுகிறார், அப்புறம் என்ன ஒரு பைட். சும்மா கோழி மாதிரி பறந்து பறந்து கொத்துகிறார் விக்ரம்.அடுத்த நாள் சில பேப்பர்களை பார்த்தால் தலைப்பு செய்தியாக:

"இந்தியாவை கலக்கும் கோழி திருடன், இத்துடன் முப்பது லட்சம் கோழிகள் திருடப்பட்டுள்ளன"


"கோழி கறி கிலோ 500 ரூபாய், முட்டை விலை 25 ரூபாய்"


"இந்தியாவில் dinosaur போல உருவம் கொண்ட ராட்சஸ கோழியின்
அட்டகாசம்,சிறப்பு படங்கள் உள்ளே" வாங்கிவிட்டிர்களா! ......


காட்சி 2:

இடம் : வருமான வரி அலுவலகம்.
அங்கு மேல் நிலைய அதிகாரியாக விக்ரம் அவர் பெயர் தான்
கந்தசாமி. கந்தசாமி ஒரு நேர்மையான அதிகாரி. ஒரு பைசா கூட
லஞ்சம் வாங்க மாட்டார்.... ஆனா இப்போ அவருக்கு ஒரு
புது ப்ராஜெக்ட் அதாவது

"ஒரு வீட்டுல யாரும் ஒரு கால் கிலோ கோழிக்கு மேல் சாப்பிட கூடாது, மீறினார்கள் என்றால் அவர்கள் சிறையில் அடைக்கபடுவார்கள்".

சில நாட்கள் கழித்து, கோழி திருடனை பிடிக்க ஸ்பெஷல் ஆபிசர் ஆக கந்தசாமிக்கு பதவி உயர்வு கிடைக்கிறது. அப்போதான் விக்ரம் கோழி திருடன பிடிக்க கையில சுத்தி எடுக்கிறார். ரோட்டில் யாராவது கோழியை சைக்கிளில் கட்டி கொண்டு போனால் கூட அவனை சுத்தியால் ஒரே போடு போடுகிறார் விக்ரம். ஏன்னா கந்தசாமி ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஸ்ட்ரிக்ட் ஸ்ட்ரிக்ட்.


இவர் தேடுன தேடுல்ல கடத்தின கோழிகள் எல்லாம் மெக்சிகோ
நாட்டில் ஏற்றுமதி ஆகுதுன்னு தகவல் கிடைக்குது. ஒடனே
கந்தசாமி மெக்சிகோ போறார்.

**************** இடைவேளை *********

காட்சி 3:
இடம் : மெக்சிகோ முட்டு சந்து

அங்கே அவர் தங்குற ஹோட்டல் பக்குதுல இருக்குற மாட்டு தொளுவுத்துல மாடு கழுவும் வேலை செய்து கொண்டிரிக்கிறார் நாயகி ஸ்ரேயா.

(உபரி தகவல்: மெக்சிகோ மாட்டை கழுவும் போது இந்த மாதிரி மேக் அப் போட்ட தான் மாடு மிரலாமா இருக்குமாம்.)

கந்தசாமி தினமும் ரெண்டு சோம்பு பால் குடிக்கும் பழக்கம் உள்ளவர், அதனால் பக்கத்திலே இருக்கும் மாட்டு தொழுவத்தில்
பால் வாங்க சொம்புடன் செல்கிறார். அங்கே ஸ்ரேயாவை பார்த்த
உடன் ****************** ஒரு பாட்டு.

excuse me mr.கந்தசாமி KFC போலாம் கம் வித் மீ.
leg இல்ல wing பீஸ் வாங்கி கொடு........
....................................
.....................

சரக்கு இல்லைன்னு சொல்றார் மொக்கைசாமி
சரக்கு பத்தலைன்னு சொல்றான் இந்த கந்தசாமி.
சைடுடிஷ் இல்லாம சரக்கு சாப்பிடமாட்டான் இந்த சாமி.


**************************

காட்சி 4:
இடம் : ஊட்டி


இங்கதான் படத்துல்ல பயங்கரமான TURNING பாயிண்ட். கந்தசாமி
அப்பா தெலுங்கு நடிகர் கிருஷ்ணா ஊட்டி கொண்டை ஊசி வளைவு
இடத்தில் கையில் ஒரு பெட்டியுடன் நிற்கிறார்.

(உ.த: பாவம் கிருஷ்ணா, வீட்ல சும்மா உட்கார்ந்து இருந்தவர
கூட்டிட்டு வந்து, நீங்க தான் படத்துக்கே TURNING பாயிண்ட்
அப்படின்னு சொல்லி ஊட்டில இருக்குற எல்லா கொண்டை
ஊசி வளைவிலும் நிக்க வச்சிடாங்க).


அப்போதான் ஒரு பொம்பளை வந்து கிருஷ்ணா கிட்ட அந்த பெட்டியை வாங்க வாரங்க. அந்த பொம்பளை யாருன்னு பார்த்த
அதுவும் விக்ரம் தான். கிருஷ்ணவோட ஒன்னு விட்ட கீப் தான்
அந்த பொம்பளை விக்ரம்
(ஜெட்லி நீ எங்கயோ போய்ட்ட).

கிளைமாக்ஸ்:

(படத்துல்ல நிறைய விக்ரம் நடிச்சு இருக்காங்க, அதாவது விக்ரம்
பல தோற்றத்தில் வாராரு,நான் கிளைமாக்ஸ் எழுதுன அதுக்கு ரெண்டு போஸ்ட் ஆகும் அதனால மக்கள் நலன் கருதி சிம்பிள் கிளைமாக்ஸ்).

சுபம்.

புடிச்சிருந்தா கண்டிப்பா ஒட்டு போட்டு போங்க.....

உங்கள்
ஜெட்லி

Monday, June 15, 2009

வெந்தது வேகாதது, சிந்தியது சிதறியது........வணக்கமுங்க இப்ப பாருங்க அல்லாரும் அவியல், குவியல், கதம்பம், பொடிமாஸ், ஆம்லெட், பிரியாணி, சுக்கா அப்படின்னு பல பெயரில ரொம்ப நல்லா எழுதுறாங்க. சரி இன்னும் எத்தனை நாளுக்கு தான் நாம சும்மா உப்புமா பதிவு போட்டு ஒப்பேத்துறது??? அதனால நாமளும் ஏதாவது ஒரு சூப்பர் ஐட்டம் போடலாம்னு (ஐயோ நீங்க நெனைக்கறது இல்ல) ஒரு முடிவுக்கு வந்தேன். முதல்ல ஒரு நல்ல பெயர் வைக்கனும்னு ரொம்ப யோசிச்சு பாத்தேன் ஒன்னும் சிக்கல சரி "உப்புமா" அப்படின்னு வச்சா பொருத்தமாவும் இருக்கும்னு நெனச்சேன் அப்புறம் பயந்து யாரும் வரலைனா??? அதான் இந்த தலைப்பு.
பொதுவா இந்த மாதிரி பதிவுகள்ல ஒரு A சோக்கு சொல்லனுமாம்ல, நாம ரொம்ப வெகுளி பய பாருங்க!!!!!!!!!!! இந்த கருமம் ஒன்னும் தெரியாது அதனால நம்ம கல்கண்டு புத்தகத்துல வந்த ஒரு சோக்க போடுறேன் ரசிங்க. அதாவது அரசப்பா அப்படின்னு ஒருத்தர் எழுதி இருக்காரு, "த்ரிஷா போட்ட புதிய பாதை!". அதாவது, 'சர்வம்' படத்தில் தொப்புள் தெரிய நடித்த த்ரிஷா, முத்தக்காட்சியிலும் நடித்துள்ளார். இங்க தான் சிரிப்பு வருது பாருங்க "தமிழில் நடிக்கும் கதாநாயகிகளுள் த்ரிஷா மட்டுமே தொப்புள் தெரியாமல் இதுவரை நடித்தார்........." இதுக்கு மேல எதோ அருக்குராறு வேண்டாம். ஒரு வேலை இவரு சில வருஷம் உள்ள இருந்துட்டு வந்தாரோ?? இல்லைனா த்ரிஷா பதிலா வேற யாரையோ சொல்றாரோ?? ஒன்னும் புரியலையே. இந்த கதாநாயகர்கள் வாயாலேயே சண்ட போடுற மாதிரி இந்த பொண்ண விட அதோடைய தொப்புள் தான அதிகமா நடிச்சது??

சர்வம்னு சொன்னதும் தான் எனக்கு ஞாபகம் வருது, இந்த ஆங்கில அகராதியில் புது புது வார்த்தைகள் சேர்க்குற மாதிரி தமிழ்ல புதுசா வார்த்தைகள் வருதோ?? இந்த படத்துல வர்ற சிறகுகள் அப்படிங்கற பாட்டை நான் கேட்டேன் அதில் ஒரு நாலு வார்த்தை ஒன்னும் பிரியல உங்களுக்கு பிரிஞ்ச சொல்லுங்க இல்லேன்னா பாடுன அண்ணன் ஜாவேத் அலி கிட்ட கேட்டு சொல்லுங்க, அந்த வார்த்தைகள் "நிலுவே, அழுகே, உழுகம், கணுவும்"

அப்புறம் ஒரு கவிதை எழுதனுமாம்ள, என்னை ஒரு கவிதா எழுத சொன்னீங்கனா "ஒரு கவிதை" அப்படின்னு தான் எழுத தெரியும், எனக்கு கவிதை ஒழுங்கா படிக்க கூட தெரியாதுபா அதனால கல்கண்டு புத்தகத்துல வந்த ஒரு வரி ரொம்ப நல்லா இருந்தது அதை எழுதறேன் "சிந்தனைகள்" அப்படின்ற தலைப்புல வந்த "குழந்தையைத் தூக்கிக் கொண்டிருந்தாலோ கை வலிக்கிறது இறக்கி விட்டாலோ இதயம் வலிக்கிறது" ரொம்ப நல்லா இருந்தது.

நம்ப நண்பர் சுகுமர்னு ஒருத்தர் இருக்காருங்க அவருடைய உறவினர் ஒருவர் ஒரு சாதனை பண்ணதா அவரே சொல்றாரு, அதாவது சென்னையில் இருந்து மதுரை செல்கிற வைகை அதிவிரைவு ரயில் தான் ரொம்ப வேகமான ரயில்னு சொல்றாங்க, சுமார் 500km தூரத்தை 8 மணி நேரத்தில் கடந்துடுது ஆனா இந்த குறிபிட்ட ஆளு இங்க இருந்து மதுர தாண்டி இருக்குற விருதுநகர்க்கே 7 மணி நேரத்தில் போய் சேர்ந்துட்டாராம், இப்ப இருக்குற நெரிசலில் தாம்பரம் தாண்டவே ஒண்ணரை மணி நேரம் ஆகுது அப்புறம் எப்படி?? ஒரு வேலை இதைத் தான் சொல்லுவாங்களோ கேக்குறவன் கேனப்பயலா இருந்தா K.R.விஜயா.................... சரி வேண்டாம் விடுங்க.

நண்பர் ஜெட்லி அரசியல் ரொம்ப பேசக் கூடாதுன்னு சொல்லி இருக்காரு அதனால ஒரே ஒரு மேட்டர் மட்டும் சொல்றேன், இந்த மார்க்சிஸ்ட் கட்சி காரங்கள புரிஞ்சிக்கவே முடியலையே, கேரளாவுல ஒரு ஊழல் விசாரனயாம் அதை எதிர்த்து இங்க ஆர்பாட்டம் பண்றாங்க, முல்லை பெரியார் பிரச்சனை பற்றி இவர்கள் ஏதாவது பேசவாவது.........???? மடியில் கணம் இல்லேன்னா பயம் எதுக்கு?? சரி அதை விடுங்க, இவர்கள் இந்தியர்களா அல்லது சீனாகாரனுங்களா? சும்மா சீனாவை ஆதரித்தே பேசுறாங்க?? இலங்கை விவகாரம் உட்பட.

இந்த வாரம் என்னை மிகவும் வருத்திய செய்தி இரண்டு, ஒன்று ஒரு சிறுமியை மூன்று காமுக நாய்கள் (இருவர் போலீஸ் மகன்களாம்) கற்பழித்தது, மறு நாள் அந்த நாய்களை பொது மக்கள் தர்ம அடி கொடுத்து மிக்க மகிழ்ச்சி. அடுத்தது பணத்துக்காக மூன்று சிறுவர்கள் கடத்தி கொலை செய்யப் பட்டது, எப்படி இப்படி வெறி பிடித்து அலைகிறார்கள்?? இவர்கள் சாகடிப்பது ஒரு சிறுவனை அல்ல ஒரு குடும்பத்தை, எவ்வளவு வேதனை படுவர் அந்த பெற்றோர்?? ஏன் இந்த @#$%^&*()! இவர்கள் வலி புரிய மாட்டேங்குது?? "தண்டனைகள் கடுமையாக்கப் பட்டால் தான் குற்றங்கள் குறையும்".

கடந்த வாரம் ரயில் பயணத்தில் ஒரு சங்கடமான சம்பவம், அதாவது ரயில் வாசலில் நானும் இன்னொரு பயணியும் அமர்ந்து பயணம் செஞ்சோம் எங்களுக்கு பின்னாடி ஒரு அம்மாவும் அவுங்க சின்ன பையனும் நின்னுட்டுவந்தாங்க. அப்ப நான் வச்சிருந்த பிஸ்கட் எடுத்து சாப்பிட்டேன். எனக்கு அந்த சிறுவனுக்கும் என் அருகில் இருக்கும் நபருக்கும் குடுக்காம சாப்பிட விருப்பம் இல்ல ஆனால் தினம் தினம் பிஸ்கட் கொள்ளை என்று செய்திகள் வரும்பொழுது நான் கொடுத்தால் அவர்கள் என்ன நினைப்பார்கள்?? ஒரே பசி வேற.

உறவினர் கல்யாணத்துக்கு போனேனுங்க, சும்மா பந்தாவா டிரஸ் பண்ணிட்டு ஜம்முனு உள்ளே போனேன். போன உடனே ஒரு நண்பர் சொல்றாரு "Your Fly is open" அட ஆமா நிஜமா தான் சொல்றாரு, நானும் என்னனவோ பண்றேன் ஹ்ம்ம் சரி ஆகல. அப்புறம் சட்டைய எடுத்து வெளிய விட்டு ஒரு ஓரமா ஒக்காந்து ஒப்பேத்திட்டு வந்தேன். இந்த மாதிரி நீங்க எங்கயாவது சிக்கி (I mean உங்க Zip) இருக்கீங்களா??சரி எப்படி இருந்தது இந்த பதிவு?? தலைப்பு மாதிரியே இருந்ததா இல்ல பரவா இல்லையா?? உங்க கருத்துக்களை எதிர்பார்கிறேன்.

நன்றி
சித்து

Friday, June 12, 2009

மாசிலாமணி --- விமர்சனம்.

மாசிலாமணி
சன் டி.வி. நிறுவனம் இந்த படத்தை வெளியிட்டுள்ளது.திரு.மனோகர் அவர்கள் இயக்கியுள்ளார்.நகுல்,சுனைனா,சந்தானம், ஸ்ரீநாத், பவன், கருணாஸ்,m.s.பாஸ்கர்
போன்று பெரிய பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.படத்தின் மிக பெரிய பலம் பாடல்களும், சொல்லவே வேண்டாம் சன் டி.வி. விளம்பரங்களும் தான்.
****************************
மாசிலாமணியாக நகுல், ஏரியாவில் நடக்கும் எந்த பிரச்சனையையும் முன் நின்று தீர்த்து வைக்கிறார் பிளஸ் தன் கண்முன்னே அநியாயம் நடந்தால் தட்டி கேட்டு அடிக்கடி சிறைக்கு செல்லும் சிறை பறவையாக வருகிறார். சுனைனாவை கண்டதும் காதல் கொள்கிறார். ஒரு தடவை அடிதடியில் ஈடுபடும் போது சுனைனா பார்த்து விடுகிறார். நகுலை(மாசி) ரவுடி என்று நினைத்து சுனைனா நகுலை அவமான படுத்துகிறார். நண்பர்கள் ஐடியா படி சுனைனா வீட்டில் அவுளுக்கு தெரியாமல் பெற்றோரிடம் நல்லவன் மணியாக நடிக்கிறார் நகுல். பிறகு துள்ளாத மனமும் துள்ளும் போல் காட்சிகள் நகர்கின்றன. நான் அவன் இல்லை பாணியில் மாசி வேற மணி வேற என்று சுனைனவிடம் கதை விட்டு எப்படி கடைசியில் இணைகிறார் என்பதே கதை.


நகுல் படத்தின் நாயகன், இவருக்கெல்லாம் ஒபெநிங் வேற பயங்கரமா இருக்குங்க.நகுலுக்கு வாய்ஸ் செம கேவலமா இருக்கு, அவரு பேசறது தமிழ்ஆ அப்படின்னு சில சமயம் டவுட் வருது.அப்புறம் அவர் face expression பத்தி கண்டிப்பா சொல்லி ஆகணும் அவர் கோபப்படுகிறாரா இல்லை சிரிக்கிறாரா என்று கூட தெரியவில்லை.நான் காதலில் விழுந்தேன் படத்தை பார்த்திருந்தால் இந்த படத்தை கண்டிப்பா பார்த்திருக்கமாட்டேன்.டான்ஸ் சான்ஸ்ஏ இல்லை சூப்பர்.நாயகி சுனைனா சூப்பர் இருக்காங்க, இவங்களை பத்தி ஒரு குறை கூட
சொல்ல முடியாது(ஜொள்ளு). படத்துல சந்தானம் இருக்காரு அப்படின்னு பேரு தான் காமெடி ஒன்னும் அவ்வளவா எடுபடலை சாரி அவரை சரியா யூஸ் பண்ணவில்லை என்பதே சரி. இதுல வேற மொக்கை போடுருதுக்கு தனியா கருணாஸ் ,பாஸ்கர். முதல் பாதி மொக்கை ஆனதுக்கு காரணம் கருணாஸின் மொக்கை காமெடி.படத்தின் முதல் பாதி செம டார்ச்சர், மாட்டு வண்டியோட மெதுவா போகுது.

இன்டெர்வல்க்கு பிறகு படம் ஜெட் ஸ்பீட், டைம் போனதே தெரியவில்லை.
அப்புறம் இந்த லாஜிக்லாம் இங்க பாக்க கூடாது. நகுல் மாசி மற்றும் மணியாக வந்து சுனைனாவை ஏமாற்றுகிறார். அது எப்படின்னு கேளுங்க நம்ம இளைய தளபதி விஜய் கூட தோத்துருவார். திருநீர் வச்சி பேன்ட் போட்ட மணி, திருநீர் இல்லாம லுங்கி போட்ட மாசி.......என்னத்த சொல்றது. சுனைனவா மட்டும் லூஸ் ஆக்கல ,நம்மளையும்தான்.

படத்தை தூக்கி நிறுத்துவது இரண்டாம் பாதி தான்,சில காட்சிகள் உண்மையில் சுவரசியமாக உள்ளது. படத்தின் தரம் சுமாருக்கு கிழே தான் வருகிறது. இயக்குனர் முதல் பாதியில் சில இடங்களில் கத்தி போட்டால் சுமார் ரகத்திற்கு வர வாய்ப்பு இருக்கிறது.

ஜெட்லி பஞ்ச்:

நான் இப்பவும் சொல்றேன் மொக்கை படம் பாக்கறது என் தப்பு இல்ல படம் எடுத்தவன் தப்பு.

நீங்க பெற்ற தகவல் அனைத்து நண்பர்களையும் சென்று அடைய, முடிஞ்சா ஒட்டு போட்டு போங்க.

நன்றி:indiaglitz

உங்கள்

ஜெட்லி

Thursday, June 11, 2009

கிளுகிளுப்பா ஒரு காதல் கதை.....

கிளுகிளுப்பா ஒரு காதல் கதை.....
(கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும்.)


டேய் யார பார்த்தாலும் எங்க அண்ணன் மாதிரி இருக்குடா" என்று குமாரின் கையை பிடித்து கூறினாள் ஹேமா.


"உங்க அண்ணன் இந்த நேரம் அவர் ஆபீஸ்ல பிஸியா வேலை பார்த்துட்டு இருப்பார்,அவர் இந்த டைம்ல பீச்சுக்கு வந்து என்ன பண்ண போறார்" என்று தன் காதலிக்கு தெம்பு ஊட்டினான் குமார்.


இவர்கள் இருவரும் காதலிக்க ஆரம்பித்து இன்றுடன் ஆறு மாதங்கள் ஆகிறது. இன்னைக்கு தான் எப்படியோ அவளை தாஜா செய்து பீச்சுக்கு கூட்டி வந்திரிக்கிறான், எப்படியாவது அவளை முத்தமிட வேண்டும் என்று கடந்த ஒரு வாரமாக கணக்கு பண்ணி கொண்டிரிக்கிறான். குமாரின் நண்பன் பாலு வேறு ஏற்கனவே காதலியுடன் எப்படி கிளுகிளுப்பா இருக்கிறது என்று சில ஐடியாக்களை அள்ளி தந்துள்ளான்.


ரெண்டு பேரும் ஒளி இல்லாத இடத்தில தஞ்சம் அடைந்தனர்.குமாரின் இதயம் லப்டப் லப்டப் என்று வேகமாக அடித்து கொண்டது, எங்கே அவள் கோபித்து கொள்வாளோ என்று மிகவும் யோசித்தான்.


"நான் உன்கிட்ட ஒன்னு கேப்பேன் தப்ப நினைக்கமாட்டியே?" என்று ஹேமா கேட்டாள்.


என்ன இவளும் அத தான் எதிர் பாக்குறாளா என்று மனதில் நினைத்து கொண்டே உற்சாகமாய் " சொல்லு என்ன செய்யணும்" என்று தோளில் கையை போட்டான்.


அவள் அவன் கையை தட்டி விட்டு "இல்லப்பா, மூடு சரியில்லை" என்றாள்.


"ஏன் என்ன ஆச்சு"? என்று கேட்டவாரே ஒரு உம்மா கொடுக்க ட்ரை பண்ணினான் குமார்.

"சீ சும்மா இரு இதுக்கு தான் நீ இருட்டுக்கு கூட்டிட்டு வந்தியா!" என்று அதட்டினாள் ஹேமா.

சிறிது நேர மௌனத்துக்கு பிறகு.....

"எனக்கு மொதல்ல ஒன்னு வாங்கி கொடு" என்றாள்.

"என்ன" என்று தன் கிளுகிளுப்பு நிறைவேறாத ஆசையில் கேட்டான்.

"என் அண்ணனுக்கு, பையன் பிறந்து ரெண்டு மாசம் ஆவுது இல்ல, அவன் கூட நான் விளையாடுறதுக்கு ஒரு கிலுகிலுப்பு வாங்கி தாயேன்" என்று கேட்டாள்......


டிஸ்கி: ஆக மொத்தம் ஹேமாவுக்கு கிலுகிலுப்பு கிடைச்சிருச்சி. நம்ம கதையின் நாயகனுக்கு?.... சாரிங்க நான் டைட்டில்ல இந்த கிலுகிலுப்பு தான் போடணும்னு நினைச்சேன். ஆனா சும்மா ஒரு கிளுகிளுப்புக்குதான் இதை போட்டேன். நீங்க முடிஞ்சா ஓட்டையும் போடுங்க.....(இது பேர் தான் கிலுகிலுப்பு)

உங்கள்

ஜெட்லி

Tuesday, June 9, 2009

முன்னெச்சரிக்கை உடைய நபரா நீங்கள்?

நீங்கள் முன்னெச்சரிக்கை உடைய நபரா நீங்கள்?

இந்த மாதிரி முன்னெச்சரிக்கை பத்தி நீங்க என்ன நினைக்கிறிங்க......


# சில பேர் வீட்டை விட்டு வெளிய செல்லும் போது கதவை பூட்டி விட்டு, சிறிது தூரம் சென்ற உடன் திரும்பி வந்து கதவை ஒழுங்கா பூட்டியாச்சா என்று கதவு உடையும் அளவுக்கு தொங்கி பார்ப்பார்கள். இது ஒரு போபியா தான். ஆனா நல்ல விஷயம் தான் ஒரு வாட்டிக்கு பத்து வாட்டி கூட செக் பண்றது தப்பு இல்லை.

#சில பேர் பைக் சைடு லாக் பண்ணிட்டு அத ஒரு மூணு வாட்டி ஒடிச்சு பாப்பாங்க,அவங்க ஓடிக்கிற ஓடியிலியே லாக் ஸ்க்ரு கொஞ்சம் கொஞ்சமா கழண்டு லூஸ் ஆகிடும். அப்புறம் அதுவே பைக் திருடுபவனுக்கு பாதி வேலையை நாமே குறைத்த
மாதிரி ஆகிடும்.

#சில பேர் ஹோட்டல் உள்ளே செல்லும் போது, சாப்பிடும் போது அடிக்கடி பர்சையோ இல்ல பாக்கெட்யோ தொட்டு பார்த்து கொண்டே சாப்பிடுவார்கள். இதுவும் ஒரு விதமான முன்
எச்சரிக்கை தான். ஒரு வேலை காசை வீட்லயே வச்சிட்டு வந்து நல்ல சாப்பிட்டு ஹோட்டல்ல டேபிள் கிளீன் பண்ணாம தப்பிச்சிக்கலாம்.

மேலே கூறியவை சாதரணமாக நாம் பின்பற்றுபவை, கிழே வாங்க
உங்களுக்கு சில ஐடியாலாம் தரேன்.

******************

முன்னெச்சரிக்கையாக இருப்பது எப்படி.....

உங்களுக்கு சில ஐடியாக்கள்

நீங்க கிழே உள்ள படத்தை பாருங்க நம்ம ஆளு காரை எப்படி
பாதுகாப்பா பூட்டு போட்டு வச்சிரிக்காரு.....

சரி இதெல்லாம் விடுங்க ஜுஜுபி மேட்டர்.... ஆனா கிழே உள்ள படத்தை பாருங்க...

(பி.கு:கொஞ்சம் ஓவர்ஆ இல்ல....அந்த பத்து ரூபாய் செருப்புக்கு நூறு ரூபாய் பூட்டு.இந்த செருப்பை இப்படி பூட்டி வச்சவரு உண்மையலே பயங்கர முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆளா இருப்பார் போல.)


(கண்டிப்பா இதெல்லாம் நான் எடுத்த படம் இல்லங்க...
எவனோ கல்யாண வீட்ல செருப்பை பறிகொடுத்தவன்
போட்டோ எடுத்து போட்டுருகான்னு நினைக்கிறேன்.)
உங்கள்
ஜெட்லி


பொடிமாஸ்....

பொடிமாஸ்....

************


படித்தது

சைவ ஜோக்:

ஒருவன்:"கல்யாணமே பண்ணிக்காம இருக்கறதுல என்ன
சௌகரியம்?"

இன்னொருவன்:"படுக்குற கட்டில்ல இருந்து ரெண்டு

பக்கமும் கிழே இறங்கலாம்".

************************
பார்த்தது:

இப்போலாம் புது விதமான பேஷன் நம்மூர் நடிகர் நடிகைகளிடம் தொற்றி கொண்டுள்ளது. அதாவது இப்போது நடிகர் நடிகைகள் அவர்கள் பிறந்த நாளை எதாவது ஒரு அநாதை இல்லத்தில் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.


சரி அவுங்க கொண்டாடருது நல்ல விஷயம் தான். ஆனா அதை அடுத்த நாள் காலையில் பேப்பரில் படம் பிடித்து போடுவது கண்டிப்பா விளம்பரம்ன்னு தான் நினைக்க தோணுது. ஆனா நம்ம தல அஜித் தான் ரியல் ஹீரோ விளம்பரமே இல்லாம செய்வார். அவரை பார்த்தாவது இவர்கள் திருந்தட்டும்.

**********************************
பொன்மொழிகள்:

# 'தாராள மனசு' என்பது வாரி கொடுப்பதில் இல்லை.
தேவையை புரிந்து கொண்டு, சரியான நேரத்தில் கொடுப்பதில்
தான் இருக்கிறது.


-பருஎர்.

# கால் இல்லாத ஒருவன், மற்றவர்களுக்கு ஓட கற்று

கொடுப்பது போலத்தான் - விமர்சகரின் பணியும்.

- கேனிங் பெல்லோக்.

******************************
பிடித்தது:


இந்த வாரம் நமது வலைப்பதிவு நண்பர்கள் கார்த்திகை பாண்டியன் அனுபவமும், தலைவர் சுரேஷ்(பழனி) அவர்களின் சிறுகதையும், ப்ரியமுடன் வசந்தின் TOP 10 கனவுகளும் மிகவும் ரசிக்கும் படி இருந்தன.... நீங்களும்
அவர்களது பேரை கிளிக் செய்து படித்து ரசிக்கவும்......

**************************கடந்த சனிகிழமை பௌர்ணமி அன்று நான்,சித்து, நட்டு, யுவராஜ்,சுகுமார் அனைவரும் திருவண்ணாமலை கிரிவலம்
சென்று வந்தோம்.நான் அன்று தான் முதல் முறை
கிரிவலம் சென்றேன், அருமையாக இருந்தது.

சித்துவின் கார் ஓட்டும் திறமையை கண்டு நாங்கள்
அனைவரும் வி(ப)யந்தோம்(என்ன நட்டு, யுவராஜ் கரெக்ட் தானே!).அதுவும் அவர் ஷார்ப் கட் பண்ணும் போது எங்களுக்கு ஒரு கலக்கு கலக்கும் பாருங்க சான்சே இல்லை.சித்து அவர்கள் F-1 பந்தய ரேஸில் ஓட்டினால் நம் நாட்டுக்கு கோப்பை நிச்சயம், அடுத்த மைக்கல் ஷுமேக்கேர் ஆக வாழ்த்துக்கள் சித்து.

நண்பர் சுகுமாரை அன்று தான் முதன் முதலில் சந்தித்தேன்,
பழகுவதற்கு மிகவும் இனிமையானவர், நல்ல எண்ணங்களை உடையவர். முன்பெல்லாம் பத்து ரவுண்டு அடித்தாலும் சும்மா கில்லி மாதிரி நிப்பாராம்(பி.கு: ராயபுரம் மைதானத்தில் அவர் ரன்னிங் ரவுண்டு போவதை சொன்னேங்க).

நான் ஒரு பத்து நிமிஷம் சித்துவிற்கு ஓய்வு கொடுப்பதற்கு சிறிது நேரம் காரை டிரைவ் செய்தேன், அப்போது நண்பர் நட்டு அவர்கள் தன் தாத்தா கண்ணுக்கு தெரிவதாக கூறியதால் அதோடு நான் கார் ஓட்டுவதை நிறுத்தி கொண்டேன்.

**********************************
பார்த்தது :


சமீபத்தில் டி.வி.யில் நான் மிகவும் ரசித்து பார்த்த விளம்பரம் ஹிந்தி நடிகர் ஹ்ரிதிக் ரோஷன் அவர்கள் நடித்த ரிலையன்ஸ்
நெட்வொர்க் விளம்பரம். அந்த விளம்பரம் என் மனதை மிகவும்
கவர்ந்தது. அதில் ஷூட்டிங் இடைவெளி நேரத்தில் தன் பழைய
நண்பர்களுக்கு போன் செய்து மகிழ்வார். எனக்கு அந்த விளம்பரத்தை பார்த்த உடன், ஒரு படத்தை பார்த்த திருப்தி கிடைத்தது. அந்த விளம்பரத்தை இயக்கிய இயக்குனருக்கு மனம் கனிந்த பாராட்டுகள்.

***************************

பிறந்த நாள் வாழ்த்துக்கள் JOHNNY DEPP.

இன்று ஜூன் 9 ஆம் தேதி ஜானி டேப் (johnny depp) அவர்கள் 46 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஜாக் ஸ்பரொவ் (jack sparrow) கதாபாத்திரம் மூலம் pirates of carribean படத்தில் நம் அனைவரது உள்ளதையும் கவர்ந்தவர்.இவர் மூன்று முறை ஆஸ்கார் விருதுக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார் ஆனால் இதுவரை அவருக்கு
கிடைக்கவில்லை.

இவர் ஆரம்ப காலத்தில் telemarketing வேலை செய்து கொண்டிரிந்தார்.பின் நடிகர் நிக்கோலஸ் கேஜ் மூலம் படங்களில் அறிமுகம் ஆனார். ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே இவர் பல முறை போதை பொருள் வழக்கில் கைது ஆகிரிக்கிறார். ஒரு முறை பத்திரிகையாளரை தாக்கியதற்கும் கைதானார். ஆனா இதெல்லாம் அங்க சகஜம்,மேலும் இவர் நல்ல படங்களில் நடித்து புகழ் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.இவருக்கு 46 வயது என்று என்னால் நம்ப முடியவில்லை......

*******************


மேலும் என் பழைய பொடிமாஸ் படிக்க இங்கே அமுக்கவும் பொடிமாஸ் 4 , பொடிமாஸ் 3 , பொடிமாஸ் 2 , பொடிமாஸ் 1 .

************

உங்கள்

ஜெட்லி


Monday, June 8, 2009

குடி அடுத்தவன் குடியையும் கெடுக்கும்...............

குடி அடுத்தவன் குடியையும் கெடுக்கும்.

---------------------------------------------------

அன்றைக்கு செவ்வாய்கிழமை, வழக்கம் போல் நான் குளித்து முடித்து என் கைப்பேசி விற்கும் கடையை திறக்க போனேன். எங்கள் வளாகத்தில் மொத்தம் மூன்று கடைகள் உள்ளன. நான் தான் எங்கள் மூணு பேரில் முதலில் கடையை திறப்பேன், மீதி இரண்டு கடைகாரர்களும் என்னை விட ஒரு மணி நேரம் கழித்து தான் கடை திறக்க வருவார்கள். அதில் கடைசி கடைகாரர் ஊருக்கு போய்விட்டதால் அவர் அடுத்த வாரம் தான் கடை திறப்பார் என்று தெரிகிறது.


நான் கடைக்கு வந்த சமயம் அவரின் கடையின் முன்னாடி ஒரு நான்கு பேர் நின்று கொண்டிருந்தனர், கிழே ஒருவன் படுத்து கொண்டிருந்தான். காலையிலே போதை என்று நினைத்து நான் என் கடையை திறந்து, கண்ணாடிகளை துடைத்து கொண்டிருந்தேன். அப்போது வளாகத்தின் வாட்ச்மன் கடையின் வெளியே நின்று கொண்டிருந்தார்.அந்த கூட்டத்தை பார்த்த படி யாரோ ஒருவரிடம் பேசி கொண்டிருந்தார்.


நான் அவரிடம் சென்று "என்ன அண்ணே காலையிலே போதைல படுத்துட்டான் போல" என்றேன்.
உடனே அவர் புன்னகையுடன் "ஆள் காலி தம்பி".

"என்னணே சொல்றிங்க, என்ன ஆச்சு எதுவும் ஆக்சிடென்ட்ஆ?" பதட்டத்துடன் கேட்டேன்.

"யார்னே தெரியுல பா, குடிச்சி நாக்கு வறண்டு செத்து போய்ட்டான் அதிகமா குடிச்ச இப்படிதான் ஆவும்"என்று எனக்கு பாடம் எடுத்தார்.

எனக்கு அப்பதான் தெரியும் இப்படி கூட சாவங்களா என்று, ஒரு உயிரற்ற உடல் கடை முன் இருக்கு. கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்று விடலாமா என்று யோசித்தேன். எனக்கு என்னவோ போல் இருந்தது எல்லோரும் பொருள்காட்சியை பார்ப்பது போல் அந்த உடலை பார்த்து சென்றனர். எனக்கும் என்ன செய்ரதன்னு தெரியல. கொஞ்சம் நேரம் கழித்து போலீஸ் வந்தார்கள். வாட்ச்மனிடம் விசாரித்தார்கள் அப்புறம் அவரிடம் கையெழுத்து வாங்கினார்கள்.

அடுத்து போலீஸ் என்னை தேடி வந்தார்கள். என்னிடம் ஒரு பேப்பர் நீட்டி கையெழுத்து போட சொன்னார்கள்.

நான் முழித்துகொண்டே "ஏன் சார் நான் கையெழுத்து போடணும்?" என்று கேட்டேன் .

உடனே எஸ்.ஐ "அது ஒண்ணும் இல்ல தம்பி, சும்மா ஒரு சாட்சி கையெழுத்துதான்" என்றார்.

நான் திரும்பவும் யோசித்தேன்,

"உங்களுக்கு ஒண்ணும் பிரச்னை வராது தம்பி, சும்மா போர்மளிட்டி
தான்" என்று கூறினார்.

என் அடி மனசில் ஒரு பட்சி சொல்லிச்சி ஆஹா இன்னும் என்ன என்ன கேக்க போறாங்களோ என்று.அடுத்து எஸ்.ஐ தொடந்தார் "தம்பி ஆம்புலன்ஸ் சொல்லிருக்கோம், கொஞ்சம் பார்த்து பண்ணுங்க"

நான் ஒன்றும் புரியாமல் தலையை அசைத்தேன்.

சுமார் ஒரு மணி நேரம் கழித்து அந்த உடலை அரசு ஆம்புலன்ஸ் வாங்கி கொண்டு போனது.நான் நிம்மதி பெருமூச்சு விட்டேன்.

திரும்பவும் அந்த எஸ்.ஐ வந்தார் "தம்பி எல்லாம் சரி பண்ணியாச்சு, ஆம்புலன்ஸ் காசு குடுப்பா" என்றார்.

நான் உடனே ஒரு அம்பது ரூபாய் எடுத்து கொடுத்தேன்.

அதற்கு அவர் "என்ன தம்பி இது அம்பது ரூபாய் தரிங்க, உங்க பக்கத்துக்கு கடைகாரர் ஐநூறு
ரூபாய் கொடுத்தாரு, பார்த்து கொடுங்க" என்றார்.

"சார் இப்போ என் நிலைமை சரி இல்லை சார் , இதான் சார் என்னால முடியும்" என்றேன்.

என் மனதில் உள்ளது என்ன என்றால், அவன் அடிபட்டு செத்து இருந்தால் காசு கொடுப்பதில் தவறில்லை, குடிச்சு செத்தவனுக்கு நான் ஏன் காசு தர வேண்டும்.

"சரி மூன்னுறு குடு" என்றார்

"அம்பதுக்கு மேல முடியாது சார்" என்றேன் காட்டமாக.

அதற்குள் ஒரு கஸ்டமர் ரிச்சார்ஜ் செய்ய வந்தார்.கொஞ்ச நேரம்
எஸ்.ஐ பார்த்தார், நான் பணம் தருவதாக அவருக்கு தெரியவில்லை,


உடனே அவர் "அப்போ நீ கோர்ட்ல வந்து சாட்சி சொல்ல வேண்டி வரும், சாட்சி கையெழுத்து போட்டிரிக்கிங்க இல்ல... கூப்பிடும் போது வாங்க" என்று கோபத்தில் சென்று விட்டார்.


இன்று:

நான் இப்போ இந்த கதையை எங்க இருந்து எழுதிட்டு இருக்கேன் தெரியுமா? புழல் ஜெயிலில் இருந்து. ஆமாங்க நான் மேல சொன்ன விஷயம் ஒரு மாசம் முன்னால நடந்தது.

முந்தா நேத்து அந்த எஸ்.ஐ கடைக்கு திரும்பி வந்தார். யாரோ போட்டியில் நான் விற்கும் கைப்பேசிகள் போலி என்று கூறி பொய் கம்ப்ளைன்ட் மூலம் என்னை வசமாக சதி செய்து மாட்டிவிட்டார்கள்.இதற்கு என் கடையில் இருக்கும்
ஊழியரும் துணை, அசைக்க முடியாத சாட்சியாக வைத்து என்னை களி தின்ன வைத்து விட்டனர். அதில் அந்த எஸ்.ஐக்கும் பெரிய பங்கு உண்டு. என்ன பண்றது எல்லாம் விதி, அன்னிக்கு மட்டும் அந்த குடிகாரன் குடிக்காம இருந்தா நான் இப்போ இங்க இருக்க மாட்டேன். அதாங்க சொன்னேன் குடி அடுத்தவன் குடியையும் கெடுக்கும்.

முற்றும்.இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டதுஉங்கள்ஜெட்லி

Friday, June 5, 2009

குளிர்100 டிகிரி --- விமர்சனம்

குளிர்100 டிகிரி


குளிர்100 டிகிரி, அனிதா உதீப் இந்த படத்தை தயாரித்து இயக்கி இருக்கிறார்.
குத்து பாட்டு,கவர்ச்சி, காட்டு கத்தல் இல்லாமல் வந்திருக்கும் இன்னொரு படம்.படத்தில் பெரிய ஸ்டார் வேல்யு என்று சொல்லி கொள்ளும் அளவுக்கு யாரும் இல்லை.இது போன்ற படங்களை நாம் வரவேற்க வேண்டும். படத்தின் பெரிய பிளஸ் ஒளிப்பதிவு தான், விஜய் அவர்கள் அருமையாக ஒளிப்பதிவு செய்து ஏற்காடை நம் கண் முன்னால் கொண்டு வந்து காட்டி விட்டார். அடுத்த பிளஸ் bob சசி இசையில் ஏற்கனவே மனசெல்லாம் பாடல் சூப்பர் ஹிட். அந்த ஒரு பாட்டு தான் படத்துக்கு மிக பெரிய விளம்பரம்.சஞ்சீவ் தான் படத்தின் நாயகன் ரொம்ப அலட்டிகொள்ளாமல், இயல்பாக நடித்து உள்ளார்.சஞ்சீவின் அப்பாவும் அம்மாவும் சண்டையால் பிரிந்து வாழ்பவர்கள், அப்பா தாதா ஆதித்யா மேனன். அப்பாவின் ரௌடிதனம் பிள்ளைக்கு வாராமல் இருக்க சஞ்சீவை ஏர்காடு பள்ளியில் சேர்த்து விடுகிறார் அம்மா. பிறகு அங்கு எப்போதும் போல் மூணு பசங்கள் பள்ளியை ஆட்டி படைக்கிறார்கள். அந்த பள்ளியில் நடக்கும் நட்பு, காதல்,மோதல் மற்றும் ரவுடிதனம் செய்யாமல் அவர்களோடு சண்டை போடாமல் அம்மாவின் ஆசையை நிறைவேற்றினாரா?.........என்பதே கதை.படத்தின் நாயகன் சஞ்சீவ் தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்,அவரின் பார்வையே அவருக்கு மிக பெரிய பிளஸ். தன் அம்மாவிடம் அன்பிலும், நண்பனிடம் நட்பிலும் மிக ஆழகாய் நடிப்பை வெளிபடுத்தியுள்ளார். நண்பனாக வரும் பப்லு ஆளும் வெயிட் தான், நம்மை சிரிக்கவும் வைக்கிறார், நட்புக்காக உயிரையும் குடுக்கிறார். இவரை போல் நமக்கு ஒரு நண்பன் கிடைக்க மாட்டானா என்று நினைக்க வைக்கிறார்.அது என்ன வர வர எல்லா படத்தலையும் கதாநாயகியை மெண்டல் மாதிரி காற்றங்கனு தெரியுல. ஏதோ முள்ளங்கிக்கு டிரஸ் போட்ட மாதிரி கதாநாயகி வருது போகுது அவ்வளவுதான்.படத்தின் இரண்டாம் பாதியில் கதாநாயகி எங்கே போனார் என்று தெரியவில்லை.பணம் பாக்கி தரள போல, கதாநாயகி என்ன ஆனாங்குன்னு நீங்க கேக்க கூடாது.

நான் திரும்பவும் சொல்றேன் இது மசாலா படம் இல்லை இது வேற.லாஜிக் பாக்காம இருந்த படம் சூப்பர் அப்படின்னு சொல்லலாம்.என்னடா ஸ்கூல் காட்றாங்க ஒரு வாத்தியார் இல்ல, ஸ்கூல் பெல் அடிக்களா அப்படின்னு நீங்க கேள்வி கேட்டிங்க அதுக்கு நான் ஒண்ணும் பண்ண முடியாது. படிச்சா அந்த மாதிரி ஸ்கூல்ல படிக்கணும் அப்படின்னு நமக்கே ஆசை வரும், ஏன் என்றால் படிகிறத தவிர வேற எல்லாம் பண்றாங்க. படத்தின் திரைக்கதையில் சில சொதப்பல்கள் இல்லாமல் இல்லை.

உங்களுக்கு ரொம்ப போர் அடிக்குதா, அப்படினா இந்த படத்துக்கு போங்க நல்ல பொழுதுபோக்கான படம். ரெண்டு மணி நேரம் தான் படம் ஓடும், நம்மை உள்ளே உட்கார வைத்து பிளேடு போட மாட்டார்கள். ஆனால் அந்த மூணு வில்லன்களாக வரும் பையன்களின் தமிழ்ஐ கேட்டால் ஐயோ வெரி சாரி. அதே போல் கதாநாயகி சில இடங்களில் ரசிக்க வைக்கிறார் பல இடங்களில் கொட்டாவி வர வைக்கிறார். படத்தின் பாடல்கள் அனைத்துமே மேற்கித்தியே இசை ஆதலால் C சென்டர் ரசிகர்களை கவரவில்லை. ஆனா இந்த படம் போன வாரம் நான் தோரணை படம் பார்த்ததற்கு எவ்வளவோ மேல் என்று நான் நினைக்கிறேன். நான் முதலில் கூறியது போல் ஏன் இந்த மாதிரி படங்களை வரவேற்க வேண்டும்? ஏன் என்றால் அப்பத்தான் சர்வம்,தோரணை போன்ற படங்கள் வருவது குறையும்,இல்லன இந்த வருஷம் இன்னும் பத்து படங்கள் தோரணை மாதிரி வந்தாலும் வரும்.

படத்தின் கிளைமாக்ஸ் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது, தன் நண்பனை கொன்றவர்களை பழி வாங்கியதோடு படம் முடிந்தது என்று நினைத்தால், தீடிர்னு ஒரு திருப்பம் அதை திரையில் பாருங்க..கடைசியாக சஞ்சீவ் பேசும் வசனம் சூப்பர்.குளிர்100 டிகிரி படத்தை மொக்கைன்னு சொல்ல முடியாது, சுமார் தாரளமாக சொல்லலாம்.ஏன்டா சுமாரான படத்துக்கே இந்த பில்ட் அப்ஆனு நீங்க கேக்கலாம், போன வாரம் தோரணை பார்த்து வெந்தவன்ங்க நான்.

இப்படிக்கு

ஜெட்லி.ஓசியில் காலத்தை ஓட்டுவது எப்படி?

ஓசியில் காலத்தை ஓட்டுவது எப்படி?

(குறிப்பு: பின்வரும் ஐடியாக்களை நீங்கள் தவறாக பின்பற்றி உதை வாங்கினால் கம்பெனி பொறுபல்ல. ஐடியாக்கள் சிரிக்க ரசிக்க மட்டுமே, யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் மன்னித்து கொள்ளவும்)இப்போ இருக்குற recession டைம்ல இந்த பதிவு நம் அனைவருக்கும் உதவும் என்று நினைக்கிறேன். சில பேர் இத ஏற்கனவே பண்ணி கொண்டிருக்கலாம். இல்லாதவர்கள், இதை படிச்சு முயற்சி செய்ஞ்சு பாருங்க.

******************
முன்னுரை:
----------------

# "வருஷம் முழுவதும் உங்களுக்கு ட்ரீட் வேணும்னா நீங்கள் உங்கள் நண்பரை சரியாக தேர்ந்து எடுக்க வேண்டும்" என்கிறார் கில்மானந்தா.

விளக்கம்:
-------------

அதாவது தினமும் உங்கள் நண்பர்களில் ஒருவரது பிறந்தநாள் வருமாறு நீங்கள் உங்கள் நண்பர்களை தேர்ந்து எடுக்க வேண்டும். இப்படி தேர்ந்து எடுத்தால் வருஷம் 365 நாளும் நமக்கு ட்ரீட் தான்.

**************

முதல்ல காலையில் இருந்து ஆரம்பிப்போம்:

@ பொதுவா நாம் பேப்பர் வாங்க குறைந்தது இரண்டு ரூபாய் செலவழிக்க வேண்டும், ஒரு நாளைக்கு இரண்டு ரூபாய் என்றால் ஒரு ஆண்டுக்கு எவளோ வருது, அதை போய் காசு குடுத்து படிச்சிட்டு.....

டி கடைக்கு போறதெல்லாம் ஓல்ட் பேஷன் அங்க போனாலும், நீங்க நாலு ரூபாய்க்கு டி குடிக்கணும்.

ஐடியா நெ.1:
----------------

உங்க பக்கத்துக்கு வீட்ல எத்தனை மணிக்கு பேப்பர் போட பையன் வரான்னு நோட் பண்ணுங்க. உதாரணத்துக்கு இப்போ பையன் ஆறு மணிக்கு பேப்பர் போடுறன்னு வைங்க, உங்க பக்கத்துக்கு வீட்டுகாரர் எப்படியும் ஒரு அரை மணி நேரம் கழிச்சு தான் பேப்பர் எடுக்க வருவார். இந்த அரை மணி நேரத்துக்குள்ள நீங்க போய் அங்கேயே எங்கையாவது ஓரமா உக்காந்து பேப்பர் படிச்சு முடிச்சிடலாம். கொஞ்சம் கேவலமா தான் இருக்கும் வேற வழி இல்லை.

ஐடியா நெ.2:
----------------
# அப்புறம் ஓசியில் காபி குடிப்பதற்கு நீங்கள் வாக்கிங் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். வாக்கிங் போற வழியில் கண்டிப்பாக உங்களக்கு தெரிந்தவர்கள் வீடு இருக்குமாறு பார்த்து வைத்து கொள்ள வேண்டும். அவ்வழியே நீங்கள் வாக்கிங் போகும் போது,அவர்கள் வீட்டில் காபி வாசம் மூக்கை தூளைக்கும். அப்போது நீங்கள் பாட்டுக்கு நடு வீட்டில் போய் உட்கார்ந்து கதை பேச ஆரம்பித்து விடுங்கள். கண்டிப்பா உங்களக்கும் ஒரு கப் காபி உண்டு.

(குறிப்பு: ஒரு நாளைக்கு ஒரு வீட்டை தேர்ந்து எடுக்கவும்).

******************

@ உங்க நண்பன் லவ் பண்ண ஆரம்பிச்சா உங்களுக்கு கொண்டாட்டம் தான்.

ஐடியா நெ.3:
---------------

# மச்சான் உன் ஆளு இன்னிக்கு inoxல படத்துக்கு போறதா தகவல்
வந்துருக்கு அப்படின்னு பிட்டு போட்டு நீங்க போக விரும்புற படத்துக்கு நண்பனின் தூட்டுலியே போய் குளிர் காயலாம்.


# "மச்சான் உன் ஆளுக்கு இன்னிக்கு பிறந்த நாள் எங்கடா ட்ரீட்?" என்று ஒரு நாள் செலவை உங்கள் நண்பரை தலையில் கட்டலாம்.

# நண்பனின் காதலி அவனை பார்க்கும் போதோ இல்லை பார்த்து சிரிக்கும் போதோ, நீங்கள் உங்கள் நண்பனை உசுபேத்தி உசுபேத்தி நல்ல நல்ல ஹோட்டல்லா போய் சாப்பிட்டு நண்பனின் தூட்டில் மொய் எழுதுலாம்.

எச்சரிக்கை நெ.1:
--------------------
ஆனா ஒரு முக்கியமான விஷயம் இங்கதான் நீங்க அலெர்ட்ஆ இருக்கணும். அந்த லவ் ஒன் சைடு லவ்வாக இருக்கும்வரைதான் நீங்க வாங்கி சாப்பிட முடியும். அதை மனசுல வச்சுக்குங்க. நண்பனின் லவ் சக்சஸ் ஆச்சுன்னா அவ்வளோதான் உங்களை கண்டுக்க மாட்டான்.

*********************

@ சரி அடுத்த கட்டத்துக்கு வருவோம், சாப்பாடு வேணும்னா
கூச்ச படாம எதாவது ஒரு கல்யாண மண்டபத்தில் பூந்து விடுங்கள்.


ஐடியா நெ.4:
---------------

கொஞ்ச நேரம் சீட்ல உக்காந்து அப்படியே லைட்ஆ பராக்கு பாருங்க,
எதுக்குன்னா சாப்பாடு பந்தி ஆரம்பிச்சிடாங்களான்னு ஒரு பார்வை
பாத்து வச்சுக்குங்க. எப்படியும் சில பேர் முதல் பந்தியில முந்துவாங்க அதுக்கு முன்னாடி நீங்க முந்திக்கணும், இல்லன அவளோ தான் ,முதல் பந்தி முடியுற வரைக்கும் யார் பின்னாடியாவது நின்னு சீட் புடிக்கணும்
.

எச்சரிக்கை நெ.2:
---------------------

பந்தியில உக்காந்த பிறகு நீங்க அரக்க பறக்க உள்ள தள்ளாதிங்க.
பொறுமையா சாப்டனும், யாராவது எதாவது வேணுமானு கேட்டாங்கனா, நாசுக்கா மறுத்துடுங்க இல்லை நீங்க எனக்கு இது வேணும் அது வேணும்ன்னு கேட்டிங்க உங்கள நோட் பண்ணி வச்சிருவாங்க, அது ரிஸ்க்.

எச்சரிக்கை நெ.3:

---------------------

சாப்பிட்டு முடிச்ச உடனே கையை கழிவிட்டு வீடு வந்து சேருங்க அதை விட்டுட்டு ஐஸ் சாப்பிடுறேன், பீடா போடுறேன்னு நீங்க சம்பவ இடத்துல இருந்திங்கனா, அப்புறம் அங்க உங்களுக்கு விழுற அடி உங்கள் வாழ்நாளில் நீங்க மறக்க முடியாத சம்பவம் ஆயிடும்.

(பி.கு: சாப்பிடுவதுக்கு மட்டும் தான் இந்த யுக்தியை நீங்கள் கையாள
வேண்டும், மற்றபடி செருப்பு திருடுவதற்கு நீங்கள் முயற்சி செய்து
மாட்டி கொண்டிர்கள் என்றால் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல.)

***********

ஜெட்லி பஞ்ச்:

# நம்ம இங்கிலீஷ்காரன் ட்ரீட்ன்னு ஒரு வார்த்தை கண்டுபிடிச்சது தான் அவன் செஞ்ச ஒரே நல்ல விஷயம். இதை நம்ம ஆளுங்க
கரெக்ட்ஆ பாலோ பண்ண ஆரம்பிச்சிடாங்க. "மச்சான் என்னிக்கு ட்ரீட்?" இந்த ஒரு வார்த்தையை வெச்சு சில காலம் ஓட்டலாம். ஆனா நம்மகிட்டயே ட்ரீட் கேட்டாங்கனா அப்பத்தான் நாம நட்பை கட் பண்ண வேண்டிய நேரம். இல்லன நாம ஒரு பெரிய அமௌன்ட் செலவு செய்ய நேரிடும்.

உங்கள்

ஜெட்லி.

Tuesday, June 2, 2009

ஆஸ்திரேலியாவில் தொடரும் இந்திய மாணவர்களின் மீதான தாக்குதல்.


நன்றி : நண்பர் திரு.மெல்பர்ன் பாலச்சந்தர்.

"ஆஸ்திரேலியாவில் படித்து வரும் நம் இந்திய மாணவர்களின் மீதான வன்முறை வெறியாட்டம் மிகவும் வருந்தம் அளிக்கிறது" - மன்மோகன் சிங்க்.

இந்த மாதிரி ஒரு பேட்டியை நானோ அல்லது மற்றொரு பதிவுலக நண்பரோ கூறியிருந்தால் அது ஏற்கத் தக்கது, ஆனால் ஒரு நாட்டின் பிரதமர் கூறுவது உங்களுக்கு ஏற்புடையதாக இருக்கிறதா?? பிரதமர் Diplomacy Maintain பண்றாருனு நீங்க சொல்லலாம், உண்மை தான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் இது முதல் தாக்குதலா?? இந்த மாதிரி சில மாதங்களுக்குள் எத்தனை முறை நடந்துள்ளது?? அது சரி தொடர்ந்து தீவிரவாத தாக்குதல் நடந்த பொழுதும், மும்பை தாக்குதல் பொழுதும் கூட கீறல் விழுந்த ரெகார்ட் போல "இதை வண்மையாக கண்டிக்கிறேன், இனியும் இது போன்ற ஒரு தாக்குதலை இந்தியா பொறுமையாக ஏற்றுக் கொள்ளாது!!!!". விளைவு இன்று திரு.கசாப் சொல்றான் "நான் எந்த கொலையும் பண்ணல நீங்க பொய் சொல்றீங்க".

சரி அவரை விடுங்க நல்ல மனுஷன் பாவம் என்ன பண்ணுவாரு, ஆஸ்திரேலியாவில் மொத்தம் 93,000 சொச்சம் இந்தியா மாணவர்கள் படிக்கின்றனர் அதில் மெல்பர்ன் நகரில் மட்டும் கிட்டத்தட்ட 38,000 பேர். ஒரு ஆண்டுக்கு இவர்களால் அந்த நாட்டுக்கு வரும் வருமானம் 4 Billion Dollars (ஆத்தாடி!!). வருமானம் மொத்தத்தையும் வாங்கி ஜோபிகுள்ள உட்டுகறாங்க ஆனா நம்மள புடிக்காதாம். அதை அந்த அரசாங்கமும் கண்டு கொள்ளாது. இந்த சம்பவம் (Shravan Attack) நடந்து பத்து நாட்களுக்கு விஷயம் அந்த அரசாங்கத்தால் மூடி மறைக்கப் பட்டுள்ளது, மெல்பர்னில் வசிக்கும் என் நண்பர் பாலசந்தர் அவர்களுக்கே இந்த செய்தி TimesofIndia செய்தி வந்த பிறகு தான் தெரியுமாம். நேற்று கூட ஹைதராபாதை சேர்ந்த ஒரு நபர் தாக்க பட்டுள்ளார்.

கிரிக்கெட்டில் கூட அவர்கள் எவ்வளவு மூர்க்கமாக தரம்கெட்ட விமர்சனங்கள் கூறுவர் என்பதை நீங்கள் நன்று அறிவீர். பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் முன்பே இப்படி நடப்பவர்கள் ஆளில்லா இடங்களில் என்னவெல்லாம் செய்வர்??

நாம் செய்ய வேண்டியது என்ன??

அரசாங்கம் : நமது அரசாங்கம் ஒரு அறிவிப்பை வெளியிட வேண்டும் "ஆஸ்திரேலியாவில் இந்தியர்களுக்கு அவ்வளவு பாதுகாப்பு இல்லை, அதனால் அங்கு படிக்கவும் சுற்றுலா செல்லவும் உகந்த சூழல் வரும் வரை யாரும் அங்கு செல்ல வேண்டாம்" இது அந்த அரசாங்கத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கும் , இப்படி ஒரு எச்சரிக்கை வந்தால் அங்கு பெரும் வருமான இழப்பு ஏற்படும். மற்ற நாடுகள் முன் இது ஒரு அவமானமாகும்.

காமன்வெல்த் அமைப்பு மூலமாக நம் அதிருப்தியை வெளிப்படுத்தலாம். Diplomatic Tension குடுக்கலாம்.

கிரிக்கெட் : முதலில் IPL இல் உள்ள ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆட்டக்காரர்களை வெளியேற்றி விடலாம், ஆனால் இதை லலித் மோடி கண்டிப்பா செய்ய மாட்டாரு. அவருக்கு நாட்டை விட பணம் தான் பெருசு. நீங்கள் கூறலாம் விளையாட்டு நட்பை வளர்க்கும் அதனால் இது சரியான வழி இல்லை என்று. நான் கேட்கிறேன், எப்பொழுதாவது இந்தியா பாகிஸ்தான் மோதும் பொழுது நீங்கள் பாகிஸ்தான் ஜெயிக்க வேண்டும் என்று விரும்பியதுண்டா?? இல்லை மற்ற நாடுகளை கூட எடுத்துக்கோங்க. சரி அப்படியே வச்சுக்கலாம், ஏன் பாகிஸ்தான் போய் விளையாடல?? போக வேண்டியது தான?? ஏன் இப்ப தென் ஆப்ரிக்கா போனீங்க?? உங்க உயிரு தான் உயிரா?? அப்பா மதவங்களுது என்ன .........??

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியர்கள் : குறைந்தது ஒரு மாததுக்காவது இந்த Tension இருக்கும் அது வரைக்கும் எங்கு சென்றாலும் ஒரு ஐந்து பேர் குழுவாக செல்லவும், தற்காப்புக்காக Pepper Spray எப்பொழுதும் வைத்துக் கொள்ளுங்கள். பார், கிளப் போன்ற இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும். "Don't be Offensive, be Defensive" இது தான் நீங்கள் கடைப் பிடிக்க வேண்டிய யுக்தி. நாம் ஒன்னும் அவர்களுக்கு எந்த வகையிலும் சளைத்தவர்களில்லை. அவர்களுக்கு தான் நம் தயவு தேவை நமக்கு இல்லை.

பொறுத்தார் பூமி ஆழ்வார்.

இதைப்பற்றி அதிக பதிவுகள் வராதது எனக்கு ஆச்சிர்யமாக இருக்கிறது!!!!!

கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை சொடுக்கி அவர்களின் வெறியை அறிந்துகொள்ளவும்.
http://www.news.com.au/heraldsun/comments/0,22023,25565946-2862,00.html


நன்றி
சித்து.

Monday, June 1, 2009

தோரணை என்ற அதிரடி ஏவுகணை.


நேற்று நண்பர்களுடன் தோரணை படத்துக்கு போனேன் அண்ணே, நம்ப ஜெட்லி அண்ணாச்சி ஏற்கனவே தெளிவா சொல்லிபுட்டாரு "வேண்டாம் வலிக்குது, அழுதுடுவேன்னு" ஆனாலும் நம்ம பய சைதன்யா ரொம்ப பாசமா Advance Booking பண்ணிட்டேன் மாப்ள வா போகலாம்னு சொல்லிட்டான். என்ன பண்றது பாசத்துக்கு கட்டு பட்டவிங்க நாம அதனால சொந்த செலவுல சூனியம் வச்சுக்க கெளம்பிட்டோம்., எப்ப?? 06:45 படத்துக்கு 07:15 மணிக்கு தான் போனோம். பொம்பள பிள்ளைங்க கூட வேகமா கெலம்பிடுக ஆனா நம்ப பயலுக சும்மா "அவிங்களால எவ்வளவு முடியுமோ அவ்வளவு லேட்டா வந்தானுங்க". அதனால எங்களுக்கு Opening Scene-laye அண்ணன் விஷால் ராமாவதாரம் தான், எதோ கொஞ்சம் காமெடி என்ற பேர்ல படம் நகர்ந்தது. இருந்தாலும் அந்த பொண்ணு ஆர்த்திய இந்த அளவுக்கு அசிங்கப் படுத்த கூடாது.

சந்தானம் "பரவை" முனியம்மா நகைச்சுவை காட்சி தாங்க முடியலடா சாமி. விஷால் கொஞ்சமா குறுந் தாடியுடன் வருகிறார் அது அவர் ஸ்டைல் என்று நினைத்து விட்டார் போல, ஏங்க உங்க யூனிட்ல மானிடர் மற்றும் கண்ணாடி இல்லையா?? சகிக்கவே இல்லை. நமக்கு எது வருமோ அத செய்ய வேண்டியது தான ஏன் இப்படி?? படத்தின் Costume Designer-kku ஏதும் பாக்கியா?? உங்கள இந்தளவுக்கு அசிங்கப் படுத்தி இருக்காரு?? மஞ்ச கலர் சிங்குச்சா பச்ச கலர் சிங்குச்சா என்று உங்கள வச்சி காமெடி பண்ணி இருக்காரு, ஒரு வேலை நீங்க இந்த படத்துல காமெடி ட்ரை பண்ண போறேன்னு சொன்னதை தப்பா புரிஞ்சிக்கிட்டாரோ??

அடுத்தது நம்ம பிரகாஷ் ராஜ் அண்ணாச்சி, உங்க கிட்ட ரெண்டு மூணு கேள்வி கேக்கணும், முதல்ல மணி ரத்னம் ஸ்டைல்ல "ஏன் இப்படி??" அடுத்தது விவேக் ஸ்டைல்ல "எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்". சும்மா படம் முழுவது ஒரு கருப்பு சட்டைய போட்டுட்டு கருப்பு கார்ல போய் காச்சு மூச்சுன்னு கத்துனா பெரிய தாதாவா? எனக்கு முந்தன நாள் பார்த்த சுள்ளான் படம் தான் ஞாபகம் வந்தது. சார் வேண்டாம் போதும் விட்டுடுங்க நீங்க ஒரு Range-kku போய்ட்டீங்க உங்களுக்கு இது வேண்டாம், இதை செய்ய நிறைய பேர் இருக்காங்க.

எல்லோரையும் போல் நானும் கிஷோர்-டம் நிறைய எதிர்பார்த்தேன் ஆனால் அவர் "Better Luck Next Time" என்று கூறி விட்டார். எம்.எஸ். பாஸ்கர் நல்ல கெட்-அப் மற்றும் டைமிங் காமெடி சூப்பர். ஆமா ஏன் படம் நெடுக அனைவரும் சும்மா தோரணை தோரனைனு கத்திக்கிட்டே இருந்தாங்க?? ஒரு வேலை அவனுங்களே படத்தோட பெயர் மறக்க கூடதுனோ??

அடுத்தது பாடல்கள், மணி ஷர்மா அண்ணாச்சி மற்றும் பாடலாசிரியர்கள் அண்ணாச்சிகள் அனைவருக்கும் - படத்தில் உள்ள எல்லா பாட்டுமே "துப்பட்டா துப்பட்டா உன் கன்னத்துல அப்பட்டா அப்பட்டா....." இதை விட இரு படி சுமாராக தான் இருக்கிறது அணைத்து பாடல்களும். ஒரு பாட்டின் ஒரு வார்த்தை கூட எனக்கு நினைவு வரவில்லை.

இவ்வளவு சொல்லியபின் கூட படத்தின் நாயகி ஸ்ரேயா சரண் பற்றி கூறவில்லை என்றால் நீங்கள் எனக்கு ஓட்டு போடாமலே போய்விடுவீங்கள் அதனால் அவருக்கு ஒரு தனி பத்தியே போடுறேன். என்னை பொறுத்த வரையில் படத்தின் ஒரே ஆறுதல் இவர் தான், படக் காட்சிகளில் அல்ல பாடல் காட்சிகளில் தான். இதை உணர்ந்து தான் இயக்குனர் கிளைமாக்ஸ் நேரத்தில் கூட ஒரு பாட்டு வைத்து விட்டார். பாடல் காட்சிகளில் ஒலி இல்லாமல் ஒளி மட்டும் இருந்தால் ரொம்ப ஆறுதலாக இருக்கும். தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு திறமையும் 'காட்டி இருக்கிறார்'. வாங்கிய கூலிக்கு ஒழுங்காக வேலை செய்திருப்பது இவர் ஒருவரே.

படத்தில் குறிப்பிட்டு கலாய்க்க வேண்டியது ஸ்டண்ட் மாஸ்டர் stun சிவா. ஒரே எத்து தான் அம்புட்டு பயலும் வானத்துல பறக்குரானுங்க, சும்மா விஷால் மட்டும் வடிவேல் மாதிரி "எம்புட்டு அடிச்சாலும் தாங்குறாரு". இதுக்கு ஒன்னு பண்ணிருக்கலாம், அவரு அப்படியே வந்து நம்மையும் ஒரு எத்து விட்ருக்கலாம் அப்படியே நிம்மதியா திரை அரங்கை விட்டு வெளிய போய் விழுந்திருக்கலாம்.

இப் படத்தின் தயாரிப்பாளர்கள் விக்ரம் கிருஷ்ணா மற்றும் ஸ்ரேயா ரெட்டி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள், உங்கள் தம்பியை வைத்து நீங்கள் அழகு!!!!!!!! பார்க்கலாம் அதற்காக ஒரு படம் கூட எடுக்கலாம் உங்களிடம் பணம் இருக்கிறது. ஆனால் இதையே ஒரு Handycam வைத்து நீங்கள் எடுத்து குடும்பமாக நீங்கள் பார்த்திருந்தால் எங்கள் பணமும் உங்கள் பணமும் மிச்சம் ஆகி இருக்கும்.

இயக்குனர் சபா ஐயப்பனை அந்த ஐயப்பன் தான் காப்பாத்த வேண்டும். விஷால் அண்ணே உங்க வீட்டு முகவரிய குடுங்க நான் ஒரு சில நல்ல படங்களின் DVD அனுப்பி வைக்கிறேன் பார்த்து விட்டு ஒரு நல்ல முடிவுக்கு வாங்க.

இப்ப எனக்கு நீங்க கேக்குற ஒரு கேள்விக்கு பதில் சொல்றேன், "இவ்வளவு நொட்டி சொல்றியே பிறகு எதுக்கு இப்படி ஒரு தலைப்பு வச்ச??", நானு நேத்து ராத்திரி பூரா எப்படி எப்படியோ படுத்து யோசிச்சி பாத்தேங்க எல்லா பேரலையும் மத்த பதிவர்கள் இந்த படத்த கலாய்ச்சுட்டாங்க அதான் ஒரு வித்தியாசமா இருக்கட்டுமேனு வச்சேன்.

சரி இப்ப உங்களுக்கு ஒரு கேள்வி, இந்த விமர்சனம் தோரணை படம் மாதிரி ரொம்ப மொக்கையா இல்லாம ஏதோ பரவா இல்லாம இருந்தா ஒரு ஓட்டையும் போட்டுட்டு ஒரு பின்னூட்டமும் போடுங்க.

நன்றி
சித்து.