Friday, June 12, 2009

மாசிலாமணி --- விமர்சனம்.

மாசிலாமணி
சன் டி.வி. நிறுவனம் இந்த படத்தை வெளியிட்டுள்ளது.திரு.மனோகர் அவர்கள் இயக்கியுள்ளார்.நகுல்,சுனைனா,சந்தானம், ஸ்ரீநாத், பவன், கருணாஸ்,m.s.பாஸ்கர்
போன்று பெரிய பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.படத்தின் மிக பெரிய பலம் பாடல்களும், சொல்லவே வேண்டாம் சன் டி.வி. விளம்பரங்களும் தான்.
****************************
மாசிலாமணியாக நகுல், ஏரியாவில் நடக்கும் எந்த பிரச்சனையையும் முன் நின்று தீர்த்து வைக்கிறார் பிளஸ் தன் கண்முன்னே அநியாயம் நடந்தால் தட்டி கேட்டு அடிக்கடி சிறைக்கு செல்லும் சிறை பறவையாக வருகிறார். சுனைனாவை கண்டதும் காதல் கொள்கிறார். ஒரு தடவை அடிதடியில் ஈடுபடும் போது சுனைனா பார்த்து விடுகிறார். நகுலை(மாசி) ரவுடி என்று நினைத்து சுனைனா நகுலை அவமான படுத்துகிறார். நண்பர்கள் ஐடியா படி சுனைனா வீட்டில் அவுளுக்கு தெரியாமல் பெற்றோரிடம் நல்லவன் மணியாக நடிக்கிறார் நகுல். பிறகு துள்ளாத மனமும் துள்ளும் போல் காட்சிகள் நகர்கின்றன. நான் அவன் இல்லை பாணியில் மாசி வேற மணி வேற என்று சுனைனவிடம் கதை விட்டு எப்படி கடைசியில் இணைகிறார் என்பதே கதை.


நகுல் படத்தின் நாயகன், இவருக்கெல்லாம் ஒபெநிங் வேற பயங்கரமா இருக்குங்க.நகுலுக்கு வாய்ஸ் செம கேவலமா இருக்கு, அவரு பேசறது தமிழ்ஆ அப்படின்னு சில சமயம் டவுட் வருது.அப்புறம் அவர் face expression பத்தி கண்டிப்பா சொல்லி ஆகணும் அவர் கோபப்படுகிறாரா இல்லை சிரிக்கிறாரா என்று கூட தெரியவில்லை.நான் காதலில் விழுந்தேன் படத்தை பார்த்திருந்தால் இந்த படத்தை கண்டிப்பா பார்த்திருக்கமாட்டேன்.டான்ஸ் சான்ஸ்ஏ இல்லை சூப்பர்.நாயகி சுனைனா சூப்பர் இருக்காங்க, இவங்களை பத்தி ஒரு குறை கூட
சொல்ல முடியாது(ஜொள்ளு). படத்துல சந்தானம் இருக்காரு அப்படின்னு பேரு தான் காமெடி ஒன்னும் அவ்வளவா எடுபடலை சாரி அவரை சரியா யூஸ் பண்ணவில்லை என்பதே சரி. இதுல வேற மொக்கை போடுருதுக்கு தனியா கருணாஸ் ,பாஸ்கர். முதல் பாதி மொக்கை ஆனதுக்கு காரணம் கருணாஸின் மொக்கை காமெடி.படத்தின் முதல் பாதி செம டார்ச்சர், மாட்டு வண்டியோட மெதுவா போகுது.

இன்டெர்வல்க்கு பிறகு படம் ஜெட் ஸ்பீட், டைம் போனதே தெரியவில்லை.
அப்புறம் இந்த லாஜிக்லாம் இங்க பாக்க கூடாது. நகுல் மாசி மற்றும் மணியாக வந்து சுனைனாவை ஏமாற்றுகிறார். அது எப்படின்னு கேளுங்க நம்ம இளைய தளபதி விஜய் கூட தோத்துருவார். திருநீர் வச்சி பேன்ட் போட்ட மணி, திருநீர் இல்லாம லுங்கி போட்ட மாசி.......என்னத்த சொல்றது. சுனைனவா மட்டும் லூஸ் ஆக்கல ,நம்மளையும்தான்.

படத்தை தூக்கி நிறுத்துவது இரண்டாம் பாதி தான்,சில காட்சிகள் உண்மையில் சுவரசியமாக உள்ளது. படத்தின் தரம் சுமாருக்கு கிழே தான் வருகிறது. இயக்குனர் முதல் பாதியில் சில இடங்களில் கத்தி போட்டால் சுமார் ரகத்திற்கு வர வாய்ப்பு இருக்கிறது.

ஜெட்லி பஞ்ச்:

நான் இப்பவும் சொல்றேன் மொக்கை படம் பாக்கறது என் தப்பு இல்ல படம் எடுத்தவன் தப்பு.

நீங்க பெற்ற தகவல் அனைத்து நண்பர்களையும் சென்று அடைய, முடிஞ்சா ஒட்டு போட்டு போங்க.

நன்றி:indiaglitz

உங்கள்

ஜெட்லி

23 comments:

யூர்கன் க்ருகியர்..... said...

மொக்கை படத்தை மெகா ஹிட் படமா ஆக்கும் வித்தை சன் டிவி க்கு கை வந்த கலை.

Counter Punch : காசை அள்ளி வீசி இந்த மாதிரி மொக்கை படத்துக்கு போயிட்டு வந்து..எவ்வளவுதான் அழுது புரண்டாலும் போன காசு போனதுதான் !

இப்பவும் சொல்றேன் ...நீங்க படத்துக்கும் போனது தப்புதான் :)

செந்தழல் ரவி said...

அனைவரும் தப்பித்தார்கள்...

விக்னேஷ்வரி said...

படம் வந்த அன்னிக்கே பார்த்திட்டு பதிவும் எழுதியாச்சா....
நகுல் மூஞ்சிய பார்த்துமா அந்த படத்துக்குப் போனீங்க. உங்களுக்கு ரொம்ப பெரிய மனசுங்க.

கானா பிரபா said...

;)

நையாண்டி நைனா said...

எங்களுக்காக இவ்ளோ கஷ்டபட்ட நீங்க தான் உண்மையிலே மாசு இலா மணி

தமிழ்நெஞ்சம் said...
This comment has been removed by a blog administrator.
சித்து said...

மச்சி நீ எங்கயோ போய்ட டா, எவ்வளவு பேர காப்பாத்துற. சூப்பர் போ.

ஜெட்லி said...

@யுர்கன்

கரெக்ட்ஆ சொன்னிங்க யுர்கன்.....
நான் இந்த படத்துக்கு போனது தப்பு தான் ஒத்துக்குறேன்.

ஜெட்லி said...

@ரவி

ஆனா நான் மாட்டிகிட்டேனே............

ஜெட்லி said...

@விக்னேஸ்வரி

என்ன பண்றதுங்க டைம் பாஸ் பண்ண வேண்டாமா?....

ஜெட்லி said...

@நையாண்டி நைனா

நன்றிகள் பல.

ஐயோ கொன்னுட்ட போ ......
எப்படிப்பா உன்னால மட்டும் இதெல்லாம் முடியுது.

ஜெட்லி said...

தங்கள் வருகைக்கு நன்றி கான பிரபா,....

ஜெட்லி said...

@சித்து

அதுக்காக தான் மச்சி நான் பல தியாகங்கள் செய்துட்டு வரேன்...

வால்பையன் said...

சன் டீவி படமெல்லாம் ஓசியா டிக்கெட் கொடுத்தாலும் போக மாட்டோம், நீங்க எப்படி போறிங்க!

கடைக்குட்டி said...

ஹ்ம்ம்ம்.. நகுல் மூஞ்சி அப்டித்தாங்க இருக்கு ...

கா . வி என்னும் அவருடைய காவியத்தப் பாத்ததுமே ம்டிவு பண்ணிட்டேன்.. அவர் படத்த இனிமே பாக்குறது இல்லன்னு...

நச்சுன்னு நாலு வரில சொல்றீங்க ..

சூப்பர் “சின்னக் கேபிளாரே...”

(கதை சொல்வதை தவிர்க்கலாமே...)

செந்தில் குமார் said...

ரொம்ப நல்லவருங்க நீங்க :-)

அப்படியே இதையும் பாருங்கள்....

http://suttippayan.blogspot.com/2009/06/blog-post.html

ஜெட்லி said...

@ வால்பையன்

ஐயோ நீங்க வேறங்க....
அறுபது ரூபாய் டிக்கெட்ங்க...
நாமம்...

ஜெட்லி said...

@கடைக்குட்டி

நல்ல முடிவு.....
கதை சொல்லாமல் விமர்சனம் எழுத ட்ரை பண்றேன் மச்சி....

ஜெட்லி said...

@செந்தில் குமார்

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....

Bala De BOSS said...

அணைத்து மொக்கைப் படங்களையும் முதல் நாளே பார்த்துவிட்டு, மக்களை ஆபத்திலிருந்து காப்பாற்றும், "தங்கத் தலைவரை", இன்று முதல் "தியாகச் செம்மல்" என்று அன்புடன் அழைப்போமாக.

ஜெட்லி said...

@ பாலா

மொக்கை படம் பாக்கறது என் தப்பு இல்ல மாமு....
இயக்குனரின் தப்பு.

ஜெட்லி said...

@ பாலா
பை தி வே பாலா உன் பட்டம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு....
இப்படியே உசுபேத்தி உசுபேத்தி உடம்பை ரணகளம்
ஆக்கிரிங்க..........

வந்தியத்தேவன் said...

ஆமாம் இந்தப் படத்தைப் பார்த்து கலாநிதி மாறன் கண்கலங்கினாராமே? என்ன கொடுமை கலாநிதி. சன் பிக்சர் தங்கள் விளம்பரத்தை நல்ல படங்களுக்கு கொடுத்தால் தமிழ்சினிமா கொஞ்சமாவது வாழும் இவர்கள் மொக்கைப் படத்தை எடுத்து மனிசரைப் பாடாய்படுத்துகிறார்கள். சன் ஏற்கனவே மெஹா சீரியலில் தமிழினத்தை அழிக்கின்றது( மெஹா சீரியல் ஸ்லோ பாய்சன் போன்றது)இது போதாது என்று இப்போ மொக்கை படங்களை தங்கள் பேனரில் எடுத்து தமிழ்சினிமாவையும் அழிக்கின்றது.

இப்படியான படங்களைப் பாராமல் தோற்கப்பண்ணுவதே இவர்களுக்கு கொடுக்கும் சவுக்கடி.