Tuesday, June 9, 2009

பொடிமாஸ்....

பொடிமாஸ்....

************


படித்தது

சைவ ஜோக்:

ஒருவன்:"கல்யாணமே பண்ணிக்காம இருக்கறதுல என்ன
சௌகரியம்?"

இன்னொருவன்:"படுக்குற கட்டில்ல இருந்து ரெண்டு

பக்கமும் கிழே இறங்கலாம்".

************************
பார்த்தது:

இப்போலாம் புது விதமான பேஷன் நம்மூர் நடிகர் நடிகைகளிடம் தொற்றி கொண்டுள்ளது. அதாவது இப்போது நடிகர் நடிகைகள் அவர்கள் பிறந்த நாளை எதாவது ஒரு அநாதை இல்லத்தில் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.


சரி அவுங்க கொண்டாடருது நல்ல விஷயம் தான். ஆனா அதை அடுத்த நாள் காலையில் பேப்பரில் படம் பிடித்து போடுவது கண்டிப்பா விளம்பரம்ன்னு தான் நினைக்க தோணுது. ஆனா நம்ம தல அஜித் தான் ரியல் ஹீரோ விளம்பரமே இல்லாம செய்வார். அவரை பார்த்தாவது இவர்கள் திருந்தட்டும்.

**********************************
பொன்மொழிகள்:

# 'தாராள மனசு' என்பது வாரி கொடுப்பதில் இல்லை.
தேவையை புரிந்து கொண்டு, சரியான நேரத்தில் கொடுப்பதில்
தான் இருக்கிறது.


-பருஎர்.

# கால் இல்லாத ஒருவன், மற்றவர்களுக்கு ஓட கற்று

கொடுப்பது போலத்தான் - விமர்சகரின் பணியும்.

- கேனிங் பெல்லோக்.

******************************
பிடித்தது:


இந்த வாரம் நமது வலைப்பதிவு நண்பர்கள் கார்த்திகை பாண்டியன் அனுபவமும், தலைவர் சுரேஷ்(பழனி) அவர்களின் சிறுகதையும், ப்ரியமுடன் வசந்தின் TOP 10 கனவுகளும் மிகவும் ரசிக்கும் படி இருந்தன.... நீங்களும்
அவர்களது பேரை கிளிக் செய்து படித்து ரசிக்கவும்......

**************************கடந்த சனிகிழமை பௌர்ணமி அன்று நான்,சித்து, நட்டு, யுவராஜ்,சுகுமார் அனைவரும் திருவண்ணாமலை கிரிவலம்
சென்று வந்தோம்.நான் அன்று தான் முதல் முறை
கிரிவலம் சென்றேன், அருமையாக இருந்தது.

சித்துவின் கார் ஓட்டும் திறமையை கண்டு நாங்கள்
அனைவரும் வி(ப)யந்தோம்(என்ன நட்டு, யுவராஜ் கரெக்ட் தானே!).அதுவும் அவர் ஷார்ப் கட் பண்ணும் போது எங்களுக்கு ஒரு கலக்கு கலக்கும் பாருங்க சான்சே இல்லை.சித்து அவர்கள் F-1 பந்தய ரேஸில் ஓட்டினால் நம் நாட்டுக்கு கோப்பை நிச்சயம், அடுத்த மைக்கல் ஷுமேக்கேர் ஆக வாழ்த்துக்கள் சித்து.

நண்பர் சுகுமாரை அன்று தான் முதன் முதலில் சந்தித்தேன்,
பழகுவதற்கு மிகவும் இனிமையானவர், நல்ல எண்ணங்களை உடையவர். முன்பெல்லாம் பத்து ரவுண்டு அடித்தாலும் சும்மா கில்லி மாதிரி நிப்பாராம்(பி.கு: ராயபுரம் மைதானத்தில் அவர் ரன்னிங் ரவுண்டு போவதை சொன்னேங்க).

நான் ஒரு பத்து நிமிஷம் சித்துவிற்கு ஓய்வு கொடுப்பதற்கு சிறிது நேரம் காரை டிரைவ் செய்தேன், அப்போது நண்பர் நட்டு அவர்கள் தன் தாத்தா கண்ணுக்கு தெரிவதாக கூறியதால் அதோடு நான் கார் ஓட்டுவதை நிறுத்தி கொண்டேன்.

**********************************
பார்த்தது :


சமீபத்தில் டி.வி.யில் நான் மிகவும் ரசித்து பார்த்த விளம்பரம் ஹிந்தி நடிகர் ஹ்ரிதிக் ரோஷன் அவர்கள் நடித்த ரிலையன்ஸ்
நெட்வொர்க் விளம்பரம். அந்த விளம்பரம் என் மனதை மிகவும்
கவர்ந்தது. அதில் ஷூட்டிங் இடைவெளி நேரத்தில் தன் பழைய
நண்பர்களுக்கு போன் செய்து மகிழ்வார். எனக்கு அந்த விளம்பரத்தை பார்த்த உடன், ஒரு படத்தை பார்த்த திருப்தி கிடைத்தது. அந்த விளம்பரத்தை இயக்கிய இயக்குனருக்கு மனம் கனிந்த பாராட்டுகள்.

***************************

பிறந்த நாள் வாழ்த்துக்கள் JOHNNY DEPP.

இன்று ஜூன் 9 ஆம் தேதி ஜானி டேப் (johnny depp) அவர்கள் 46 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஜாக் ஸ்பரொவ் (jack sparrow) கதாபாத்திரம் மூலம் pirates of carribean படத்தில் நம் அனைவரது உள்ளதையும் கவர்ந்தவர்.இவர் மூன்று முறை ஆஸ்கார் விருதுக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார் ஆனால் இதுவரை அவருக்கு
கிடைக்கவில்லை.

இவர் ஆரம்ப காலத்தில் telemarketing வேலை செய்து கொண்டிரிந்தார்.பின் நடிகர் நிக்கோலஸ் கேஜ் மூலம் படங்களில் அறிமுகம் ஆனார். ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே இவர் பல முறை போதை பொருள் வழக்கில் கைது ஆகிரிக்கிறார். ஒரு முறை பத்திரிகையாளரை தாக்கியதற்கும் கைதானார். ஆனா இதெல்லாம் அங்க சகஜம்,மேலும் இவர் நல்ல படங்களில் நடித்து புகழ் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.இவருக்கு 46 வயது என்று என்னால் நம்ப முடியவில்லை......

*******************


மேலும் என் பழைய பொடிமாஸ் படிக்க இங்கே அமுக்கவும் பொடிமாஸ் 4 , பொடிமாஸ் 3 , பொடிமாஸ் 2 , பொடிமாஸ் 1 .

************

உங்கள்

ஜெட்லி


14 comments:

அப்பாவி தமிழன் said...

thala thala thaan voted in tamilish

சித்து said...

நண்பா நீ இருந்தாலும் என்ன இந்தளவுக்கு புகழக் கூடாது.

நையாண்டி நைனா said...

பொடிமாஸ் மாதிரி இல்லை...
மூக்கு பொடி மாதிரி இருக்கு...

கடைக்குட்டி said...

நல்லா இருக்கு...

அந்த ரிலையன்ஸ் விளம்பரம் எனக்கும் புடிச்சது ..:-)

சித்து அடுத்த ட்ரைவ்க்கு கூப்பிடுங்க...

யோவ் சைவ ஜோக்கா அது ???

ஜெட்லி said...

அப்பாவி தமிழன் கண்டிப்பா தல தான் கிரேட்....

ஜெட்லி said...

நையாண்டி என்ன சொல்ல வரிங்க...
பொடிமாஸ் நல்ல இல்லையா????

ஜெட்லி said...

கண்டிப்பா சித்து உன்னை அடுத்த டிரைவ்க்கு கூப்பிடுவான்...
வீட்ல சொல்லிட்டு வந்துடு.....

ஜெட்லி said...

கடைக்குட்டி இதெல்லாம் A ஜோக்னா,
என்கிட்ட கைவசம் இருக்குற ஜோக்ஸ்
கேட்ட டென்ஷன் ஆயிடுவ....

சென்ஷி said...

:-))

நல்லாயிருக்குங்க்ணா

ஜெட்லி said...

நன்றி சென்ஷி...

பிரியமுடன்.........வசந்த் said...

நம்ம பக்கமும் வந்ததுக்கு நன்றிங்க

கோவி.கண்ணன் said...

பொடிமாஸ் தகவல்கள் சிறப்பாக இருக்கு !

சித்து said...

கண்டிப்பாக வாங்க கடைக்குட்டி சும்மா ஜாலியா போய் வரலாம்.

SUREஷ் (பழனியிலிருந்து) said...

நன்றி தல இன்னிக்குத்தான் பார்த்தேன்..,