Monday, June 1, 2009

தோரணை என்ற அதிரடி ஏவுகணை.


நேற்று நண்பர்களுடன் தோரணை படத்துக்கு போனேன் அண்ணே, நம்ப ஜெட்லி அண்ணாச்சி ஏற்கனவே தெளிவா சொல்லிபுட்டாரு "வேண்டாம் வலிக்குது, அழுதுடுவேன்னு" ஆனாலும் நம்ம பய சைதன்யா ரொம்ப பாசமா Advance Booking பண்ணிட்டேன் மாப்ள வா போகலாம்னு சொல்லிட்டான். என்ன பண்றது பாசத்துக்கு கட்டு பட்டவிங்க நாம அதனால சொந்த செலவுல சூனியம் வச்சுக்க கெளம்பிட்டோம்., எப்ப?? 06:45 படத்துக்கு 07:15 மணிக்கு தான் போனோம். பொம்பள பிள்ளைங்க கூட வேகமா கெலம்பிடுக ஆனா நம்ப பயலுக சும்மா "அவிங்களால எவ்வளவு முடியுமோ அவ்வளவு லேட்டா வந்தானுங்க". அதனால எங்களுக்கு Opening Scene-laye அண்ணன் விஷால் ராமாவதாரம் தான், எதோ கொஞ்சம் காமெடி என்ற பேர்ல படம் நகர்ந்தது. இருந்தாலும் அந்த பொண்ணு ஆர்த்திய இந்த அளவுக்கு அசிங்கப் படுத்த கூடாது.

சந்தானம் "பரவை" முனியம்மா நகைச்சுவை காட்சி தாங்க முடியலடா சாமி. விஷால் கொஞ்சமா குறுந் தாடியுடன் வருகிறார் அது அவர் ஸ்டைல் என்று நினைத்து விட்டார் போல, ஏங்க உங்க யூனிட்ல மானிடர் மற்றும் கண்ணாடி இல்லையா?? சகிக்கவே இல்லை. நமக்கு எது வருமோ அத செய்ய வேண்டியது தான ஏன் இப்படி?? படத்தின் Costume Designer-kku ஏதும் பாக்கியா?? உங்கள இந்தளவுக்கு அசிங்கப் படுத்தி இருக்காரு?? மஞ்ச கலர் சிங்குச்சா பச்ச கலர் சிங்குச்சா என்று உங்கள வச்சி காமெடி பண்ணி இருக்காரு, ஒரு வேலை நீங்க இந்த படத்துல காமெடி ட்ரை பண்ண போறேன்னு சொன்னதை தப்பா புரிஞ்சிக்கிட்டாரோ??

அடுத்தது நம்ம பிரகாஷ் ராஜ் அண்ணாச்சி, உங்க கிட்ட ரெண்டு மூணு கேள்வி கேக்கணும், முதல்ல மணி ரத்னம் ஸ்டைல்ல "ஏன் இப்படி??" அடுத்தது விவேக் ஸ்டைல்ல "எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்". சும்மா படம் முழுவது ஒரு கருப்பு சட்டைய போட்டுட்டு கருப்பு கார்ல போய் காச்சு மூச்சுன்னு கத்துனா பெரிய தாதாவா? எனக்கு முந்தன நாள் பார்த்த சுள்ளான் படம் தான் ஞாபகம் வந்தது. சார் வேண்டாம் போதும் விட்டுடுங்க நீங்க ஒரு Range-kku போய்ட்டீங்க உங்களுக்கு இது வேண்டாம், இதை செய்ய நிறைய பேர் இருக்காங்க.

எல்லோரையும் போல் நானும் கிஷோர்-டம் நிறைய எதிர்பார்த்தேன் ஆனால் அவர் "Better Luck Next Time" என்று கூறி விட்டார். எம்.எஸ். பாஸ்கர் நல்ல கெட்-அப் மற்றும் டைமிங் காமெடி சூப்பர். ஆமா ஏன் படம் நெடுக அனைவரும் சும்மா தோரணை தோரனைனு கத்திக்கிட்டே இருந்தாங்க?? ஒரு வேலை அவனுங்களே படத்தோட பெயர் மறக்க கூடதுனோ??

அடுத்தது பாடல்கள், மணி ஷர்மா அண்ணாச்சி மற்றும் பாடலாசிரியர்கள் அண்ணாச்சிகள் அனைவருக்கும் - படத்தில் உள்ள எல்லா பாட்டுமே "துப்பட்டா துப்பட்டா உன் கன்னத்துல அப்பட்டா அப்பட்டா....." இதை விட இரு படி சுமாராக தான் இருக்கிறது அணைத்து பாடல்களும். ஒரு பாட்டின் ஒரு வார்த்தை கூட எனக்கு நினைவு வரவில்லை.

இவ்வளவு சொல்லியபின் கூட படத்தின் நாயகி ஸ்ரேயா சரண் பற்றி கூறவில்லை என்றால் நீங்கள் எனக்கு ஓட்டு போடாமலே போய்விடுவீங்கள் அதனால் அவருக்கு ஒரு தனி பத்தியே போடுறேன். என்னை பொறுத்த வரையில் படத்தின் ஒரே ஆறுதல் இவர் தான், படக் காட்சிகளில் அல்ல பாடல் காட்சிகளில் தான். இதை உணர்ந்து தான் இயக்குனர் கிளைமாக்ஸ் நேரத்தில் கூட ஒரு பாட்டு வைத்து விட்டார். பாடல் காட்சிகளில் ஒலி இல்லாமல் ஒளி மட்டும் இருந்தால் ரொம்ப ஆறுதலாக இருக்கும். தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு திறமையும் 'காட்டி இருக்கிறார்'. வாங்கிய கூலிக்கு ஒழுங்காக வேலை செய்திருப்பது இவர் ஒருவரே.

படத்தில் குறிப்பிட்டு கலாய்க்க வேண்டியது ஸ்டண்ட் மாஸ்டர் stun சிவா. ஒரே எத்து தான் அம்புட்டு பயலும் வானத்துல பறக்குரானுங்க, சும்மா விஷால் மட்டும் வடிவேல் மாதிரி "எம்புட்டு அடிச்சாலும் தாங்குறாரு". இதுக்கு ஒன்னு பண்ணிருக்கலாம், அவரு அப்படியே வந்து நம்மையும் ஒரு எத்து விட்ருக்கலாம் அப்படியே நிம்மதியா திரை அரங்கை விட்டு வெளிய போய் விழுந்திருக்கலாம்.

இப் படத்தின் தயாரிப்பாளர்கள் விக்ரம் கிருஷ்ணா மற்றும் ஸ்ரேயா ரெட்டி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள், உங்கள் தம்பியை வைத்து நீங்கள் அழகு!!!!!!!! பார்க்கலாம் அதற்காக ஒரு படம் கூட எடுக்கலாம் உங்களிடம் பணம் இருக்கிறது. ஆனால் இதையே ஒரு Handycam வைத்து நீங்கள் எடுத்து குடும்பமாக நீங்கள் பார்த்திருந்தால் எங்கள் பணமும் உங்கள் பணமும் மிச்சம் ஆகி இருக்கும்.

இயக்குனர் சபா ஐயப்பனை அந்த ஐயப்பன் தான் காப்பாத்த வேண்டும். விஷால் அண்ணே உங்க வீட்டு முகவரிய குடுங்க நான் ஒரு சில நல்ல படங்களின் DVD அனுப்பி வைக்கிறேன் பார்த்து விட்டு ஒரு நல்ல முடிவுக்கு வாங்க.

இப்ப எனக்கு நீங்க கேக்குற ஒரு கேள்விக்கு பதில் சொல்றேன், "இவ்வளவு நொட்டி சொல்றியே பிறகு எதுக்கு இப்படி ஒரு தலைப்பு வச்ச??", நானு நேத்து ராத்திரி பூரா எப்படி எப்படியோ படுத்து யோசிச்சி பாத்தேங்க எல்லா பேரலையும் மத்த பதிவர்கள் இந்த படத்த கலாய்ச்சுட்டாங்க அதான் ஒரு வித்தியாசமா இருக்கட்டுமேனு வச்சேன்.

சரி இப்ப உங்களுக்கு ஒரு கேள்வி, இந்த விமர்சனம் தோரணை படம் மாதிரி ரொம்ப மொக்கையா இல்லாம ஏதோ பரவா இல்லாம இருந்தா ஒரு ஓட்டையும் போட்டுட்டு ஒரு பின்னூட்டமும் போடுங்க.

நன்றி
சித்து.

10 comments:

லோகு said...

அது ஒரு படம்னு ரெண்டு பேரும் மாத்தி மாத்தி பாத்துட்டு தனி தனியா விமர்சனம் வேற.. உங்களுக்கு ஓவரா தெரியல ??

நையாண்டி நைனா said...

நல்லா எழுதி இருக்கே மாப்ளே... இப்படியே பிக்கப் பண்ணி டாப் கியரை போட்டு தூக்கு

சித்து said...

வருகைக்கு நன்றி நையாண்டி நைனா. தொடர்ந்து தூக்குவோம் வாங்க.

சித்து said...

ஹா ஹா ஹா, இல்ல லோகு நான் பொதுவா புது படங்களுக்கு விமர்சனம் எழுவது இல்லை, நண்பர் ஜெட்லி அந்த பணியை செவ்வன செய்து வருகிறார். ஆனால் இந்த படம் பார்த்து ரொம்ப நொந்து போனேன் அதான் தனியா நானும் ஒரு பதிவு போட்டுட்டேன்.

SUREஷ் (பழனியிலிருந்து) said...

நல்லா எழுதறீங்க தல..,

வாழ்த்துக்கள்.

சித்து said...

நன்றி சுரேஷ்.

கடைக்குட்டி said...

அட என்னங்க.. எங்க உசுரக் காப்பாத்துறதுக்காக மாத்தி மாத்தி பதிவு போடுறீங்க..

நீங்க ரொம்ப நல்லவாஆஆஅங்க... :-)

Suresh said...

நேத்து இந்த கண்ராவி படத்தை என் மனைவி கூட்டிட்டு போய் பார்த்தேன் அச்சோ சாமி தாங்கல

உங்க பாலோவர் ஜெட்லி

Basheer said...

தோரணை விஷால் இன் சாதனை

கவிதை காதலன் said...

இந்த மாதிரி மொக்கை படம் எடுக்க உட்கார்ந்து யோசிப்பானுங்க்களோ?