Friday, June 5, 2009

ஓசியில் காலத்தை ஓட்டுவது எப்படி?

ஓசியில் காலத்தை ஓட்டுவது எப்படி?

(குறிப்பு: பின்வரும் ஐடியாக்களை நீங்கள் தவறாக பின்பற்றி உதை வாங்கினால் கம்பெனி பொறுபல்ல. ஐடியாக்கள் சிரிக்க ரசிக்க மட்டுமே, யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் மன்னித்து கொள்ளவும்)இப்போ இருக்குற recession டைம்ல இந்த பதிவு நம் அனைவருக்கும் உதவும் என்று நினைக்கிறேன். சில பேர் இத ஏற்கனவே பண்ணி கொண்டிருக்கலாம். இல்லாதவர்கள், இதை படிச்சு முயற்சி செய்ஞ்சு பாருங்க.

******************
முன்னுரை:
----------------

# "வருஷம் முழுவதும் உங்களுக்கு ட்ரீட் வேணும்னா நீங்கள் உங்கள் நண்பரை சரியாக தேர்ந்து எடுக்க வேண்டும்" என்கிறார் கில்மானந்தா.

விளக்கம்:
-------------

அதாவது தினமும் உங்கள் நண்பர்களில் ஒருவரது பிறந்தநாள் வருமாறு நீங்கள் உங்கள் நண்பர்களை தேர்ந்து எடுக்க வேண்டும். இப்படி தேர்ந்து எடுத்தால் வருஷம் 365 நாளும் நமக்கு ட்ரீட் தான்.

**************

முதல்ல காலையில் இருந்து ஆரம்பிப்போம்:

@ பொதுவா நாம் பேப்பர் வாங்க குறைந்தது இரண்டு ரூபாய் செலவழிக்க வேண்டும், ஒரு நாளைக்கு இரண்டு ரூபாய் என்றால் ஒரு ஆண்டுக்கு எவளோ வருது, அதை போய் காசு குடுத்து படிச்சிட்டு.....

டி கடைக்கு போறதெல்லாம் ஓல்ட் பேஷன் அங்க போனாலும், நீங்க நாலு ரூபாய்க்கு டி குடிக்கணும்.

ஐடியா நெ.1:
----------------

உங்க பக்கத்துக்கு வீட்ல எத்தனை மணிக்கு பேப்பர் போட பையன் வரான்னு நோட் பண்ணுங்க. உதாரணத்துக்கு இப்போ பையன் ஆறு மணிக்கு பேப்பர் போடுறன்னு வைங்க, உங்க பக்கத்துக்கு வீட்டுகாரர் எப்படியும் ஒரு அரை மணி நேரம் கழிச்சு தான் பேப்பர் எடுக்க வருவார். இந்த அரை மணி நேரத்துக்குள்ள நீங்க போய் அங்கேயே எங்கையாவது ஓரமா உக்காந்து பேப்பர் படிச்சு முடிச்சிடலாம். கொஞ்சம் கேவலமா தான் இருக்கும் வேற வழி இல்லை.

ஐடியா நெ.2:
----------------
# அப்புறம் ஓசியில் காபி குடிப்பதற்கு நீங்கள் வாக்கிங் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். வாக்கிங் போற வழியில் கண்டிப்பாக உங்களக்கு தெரிந்தவர்கள் வீடு இருக்குமாறு பார்த்து வைத்து கொள்ள வேண்டும். அவ்வழியே நீங்கள் வாக்கிங் போகும் போது,அவர்கள் வீட்டில் காபி வாசம் மூக்கை தூளைக்கும். அப்போது நீங்கள் பாட்டுக்கு நடு வீட்டில் போய் உட்கார்ந்து கதை பேச ஆரம்பித்து விடுங்கள். கண்டிப்பா உங்களக்கும் ஒரு கப் காபி உண்டு.

(குறிப்பு: ஒரு நாளைக்கு ஒரு வீட்டை தேர்ந்து எடுக்கவும்).

******************

@ உங்க நண்பன் லவ் பண்ண ஆரம்பிச்சா உங்களுக்கு கொண்டாட்டம் தான்.

ஐடியா நெ.3:
---------------

# மச்சான் உன் ஆளு இன்னிக்கு inoxல படத்துக்கு போறதா தகவல்
வந்துருக்கு அப்படின்னு பிட்டு போட்டு நீங்க போக விரும்புற படத்துக்கு நண்பனின் தூட்டுலியே போய் குளிர் காயலாம்.


# "மச்சான் உன் ஆளுக்கு இன்னிக்கு பிறந்த நாள் எங்கடா ட்ரீட்?" என்று ஒரு நாள் செலவை உங்கள் நண்பரை தலையில் கட்டலாம்.

# நண்பனின் காதலி அவனை பார்க்கும் போதோ இல்லை பார்த்து சிரிக்கும் போதோ, நீங்கள் உங்கள் நண்பனை உசுபேத்தி உசுபேத்தி நல்ல நல்ல ஹோட்டல்லா போய் சாப்பிட்டு நண்பனின் தூட்டில் மொய் எழுதுலாம்.

எச்சரிக்கை நெ.1:
--------------------
ஆனா ஒரு முக்கியமான விஷயம் இங்கதான் நீங்க அலெர்ட்ஆ இருக்கணும். அந்த லவ் ஒன் சைடு லவ்வாக இருக்கும்வரைதான் நீங்க வாங்கி சாப்பிட முடியும். அதை மனசுல வச்சுக்குங்க. நண்பனின் லவ் சக்சஸ் ஆச்சுன்னா அவ்வளோதான் உங்களை கண்டுக்க மாட்டான்.

*********************

@ சரி அடுத்த கட்டத்துக்கு வருவோம், சாப்பாடு வேணும்னா
கூச்ச படாம எதாவது ஒரு கல்யாண மண்டபத்தில் பூந்து விடுங்கள்.


ஐடியா நெ.4:
---------------

கொஞ்ச நேரம் சீட்ல உக்காந்து அப்படியே லைட்ஆ பராக்கு பாருங்க,
எதுக்குன்னா சாப்பாடு பந்தி ஆரம்பிச்சிடாங்களான்னு ஒரு பார்வை
பாத்து வச்சுக்குங்க. எப்படியும் சில பேர் முதல் பந்தியில முந்துவாங்க அதுக்கு முன்னாடி நீங்க முந்திக்கணும், இல்லன அவளோ தான் ,முதல் பந்தி முடியுற வரைக்கும் யார் பின்னாடியாவது நின்னு சீட் புடிக்கணும்
.

எச்சரிக்கை நெ.2:
---------------------

பந்தியில உக்காந்த பிறகு நீங்க அரக்க பறக்க உள்ள தள்ளாதிங்க.
பொறுமையா சாப்டனும், யாராவது எதாவது வேணுமானு கேட்டாங்கனா, நாசுக்கா மறுத்துடுங்க இல்லை நீங்க எனக்கு இது வேணும் அது வேணும்ன்னு கேட்டிங்க உங்கள நோட் பண்ணி வச்சிருவாங்க, அது ரிஸ்க்.

எச்சரிக்கை நெ.3:

---------------------

சாப்பிட்டு முடிச்ச உடனே கையை கழிவிட்டு வீடு வந்து சேருங்க அதை விட்டுட்டு ஐஸ் சாப்பிடுறேன், பீடா போடுறேன்னு நீங்க சம்பவ இடத்துல இருந்திங்கனா, அப்புறம் அங்க உங்களுக்கு விழுற அடி உங்கள் வாழ்நாளில் நீங்க மறக்க முடியாத சம்பவம் ஆயிடும்.

(பி.கு: சாப்பிடுவதுக்கு மட்டும் தான் இந்த யுக்தியை நீங்கள் கையாள
வேண்டும், மற்றபடி செருப்பு திருடுவதற்கு நீங்கள் முயற்சி செய்து
மாட்டி கொண்டிர்கள் என்றால் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல.)

***********

ஜெட்லி பஞ்ச்:

# நம்ம இங்கிலீஷ்காரன் ட்ரீட்ன்னு ஒரு வார்த்தை கண்டுபிடிச்சது தான் அவன் செஞ்ச ஒரே நல்ல விஷயம். இதை நம்ம ஆளுங்க
கரெக்ட்ஆ பாலோ பண்ண ஆரம்பிச்சிடாங்க. "மச்சான் என்னிக்கு ட்ரீட்?" இந்த ஒரு வார்த்தையை வெச்சு சில காலம் ஓட்டலாம். ஆனா நம்மகிட்டயே ட்ரீட் கேட்டாங்கனா அப்பத்தான் நாம நட்பை கட் பண்ண வேண்டிய நேரம். இல்லன நாம ஒரு பெரிய அமௌன்ட் செலவு செய்ய நேரிடும்.

உங்கள்

ஜெட்லி.

16 comments:

பிரியமுடன்.........வசந்த் said...

செம்ம ரகளைங்ண்ணா

tommy said...

கம்பெனி இன்றைய கால கட்டதிர்க்கு ஏற்றாற்போல் இடுகை இட்டுரிகுது ...
நல்ல முயற்சி ... இதை போன்ற வாழ்க்கைக்கு உபயோகமான செய்திகளை எதிர்பார்த்து கொண்டுஇருக்கும் வருத்த படாத வாலிபர் சங்கம் .....
இப்படிக்கு வருத்த படாத வாலிபர் சங்க உர்ருபினர் ...

வால்பையன் said...

உங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

செருப்பு திருடும் போது அடி பலமோ!

தமிழர்ஸ் - Tamilers said...

நீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.

இவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்

இவ்வார தமிழர் பட்டையை எப்படி இணைப்பது என்ற விவரங்களுக்கு

இந்த சுட்டியை சொடுக்குங்கள்

தமிழர்ஸ் பிளாக்

தமிழர்ஸ் - Tamilers said...

நீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.

இவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்

இவ்வார தமிழர் பட்டையை எப்படி இணைப்பது என்ற விவரங்களுக்கு

இந்த சுட்டியை சொடுக்குங்கள்

தமிழர்ஸ் பிளாக்

நையாண்டி நைனா said...

மச்சி... சூப்பரா எழுதி இருக்கே மச்சி....
இதை கொண்டாட ஒரு ட்ரீட் வையேன்.

கடைக்குட்டி said...

செம... :-)

SUREஷ் (பழனியிலிருந்து) said...

ஓ.கே..,

ஓ.கே..,

ஜெட்லி said...

தங்கள் பாராட்டுக்கு நன்றி வசந்த்....

ஜெட்லி said...

என்ன வால்பையன் இப்படி நம்மள கேவலமா நினைச்சிட்டிங்க
நாங்கெல்லாம் ஷூ மட்டும் தான் எடுப்போம்.

ஜெட்லி said...

நையாண்டி நைனா, ஆங்கிலத்தில எனக்கு புடிக்காத ஒரே வார்த்தை ட்ரீட்.

ஜெட்லி said...

நன்றி கடைக்குட்டி மற்றும் சுரேஷ் தலைவரே....

cheena (சீனா) said...

எப்பா இவ்ளோ ஐடியா அள்ளி வுடுறீயே - பெரிய ஆளுப்பா நீ -பொழச்சுக்குவே

Cable Sankar said...

jetli நீயேன் என்னை அழைத்து விருந்தோம்பல் செய்யக்கூடாது..? கேபிள் சங்கர்

புதிய மனிதா said...

thala asatthal........

என்னது நானு யாரா? said...

ட்ரிட்! ட்ரீட்ன்னு நாயா பேயா அலைஞ்சா, அப்புறம் நம்பள பாத்தாலே துண்ட கானோம், துனியை காணோம்னு ஓடிட மாட்டாங்களா? அதுக்கு என்ன ஐடியா? அதுவும் சொல்லி போடுங்க!

------------------------------------


நண்பர்களே! பக்கவிளைவுகள் இல்லா மருத்துவம், இயற்கை மருத்துவத்தை பற்றி எழுதி கொண்டிருக்கின்றேன்.

என் வலைபக்கம் http://uravukaaran.blogspot.com

நீங்கள் படித்து பயன் அடைய பல தகவல்கள் இருக்கின்றன. ஆங்கில மருத்துவ கொடும்பிடியில் இருந்து விடுதலை அடைவோம்! வாருங்கள் நண்பர்களே!
----------------------------------