Saturday, April 23, 2011

கோ - செகண்ட் ஷோ விமர்சனம்.

கோ - செகண்ட் ஷோ விமர்சனம்.


ரொம்ப நாள் ஆச்சு எங்க ஏரியா தியாகராஜா தியேட்டருக்கு படத்துக்கு போய்...போன பிறகு தான் யோசிச்சேன் ஏன் அந்த தியேட்டருக்கு போனம்னு...தியேட்டர்ல டிக்கெட் கிழிக்கிரவன்ல இருந்து எல்லாரும் புல் மப்பு....

சரி நாம கோ படத்தை பத்தி பார்ப்போம்...கண்டிப்பா இந்த படம் ஜீவாக்கு
நல்ல பெயரை வாங்கி தரும் . அப்படியே ஆள் மாறி இருக்கிறார். அப்புறம் அஜ்மல்
நல்லாவே பண்ணி இருக்கார்...அப்புறம் பியா நல்லாவே வெளிப்படுத்தி
இருக்காங்க, நடிப்பை கூட தான். பிரகாஷ் ராஜ் ஏதோ கெஸ்ட் ரோல் மாதிரி
வந்து போறார். கார்த்திகா சாரியில் நல்லா இருக்காங்க மத்தபடி பெருசா
சொல்றதுக்கு ஒண்ணும் புதுசா இல்ல.

பாட்டு எல்லாமே ஏற்கனவே ஹிட்...ஆனா வெண்பனியே பாட்டு வந்த
இடம் தான் நெருடல். அமளி துமளி லோகசன் எல்லாம் சூப்பர்.
படம் ரொம்பவே இன்ட்ரஸ்டிங்ஆ போச்சு அடுத்தது என்ன நடக்கும்
என்ன நடக்கும்னு. சில திருப்பங்கள் கணிக்க முடிஞ்சது சில திருப்பங்கள்
உண்மையிலே நல்லா இருந்தது.

கே.வி.ஆனந்த் நல்ல பொழுதுபோக்கு படத்தை கொடுத்து இருக்கார்.
சுபா, ரெண்டு பேருமே படத்திலும் நடிச்சு இருக்காங்க...சில பல மாதங்களுக்கு
முன் அடையார் டாப் சீல பரோட்டா சாப்பிடும் போது இவங்க மூணு பேருமே டீ சாப்பிட வந்தாங்க....!!

ஆகமொத்தம் இந்த லீவ்க்கு ஒரு நல்ல படம் வந்திருக்கு தாரளமா ரசிச்சு சிரிச்சுட்டு வரலாம்....!!ரீப்பீட் ஆடியன்ஸ் கிடைக்கிறது கொஞ்சம் கஷ்டம்னு நினைக்கிறேன்...


கோ - வெற்றி அரசன் !!

தியேட்டர் நொறுக்ஸ்:

# படத்தில் ஒரு காட்சியில் பியா அவர்கள் ஜீவாவிடம் எனக்கு ஒரு நைட்க்கு என்ன ரேட் தருவ என்ற பொது அறிவு கேள்விக்கு...படம் பார்த்து கொண்டிருந்த ரசிகர்கள்...
50 ..50 .. 50 னு கத்த ஆரம்பிச்சுட்டாங்க....

# வெண்பனியே பாட்டு இன்ட்ரஸ்டிங்ஆ சீன் போய்ட்டு இருக்கும் போது வரும் ...அதனால் தியேட்டரில் பெரிய சலசலப்பு ஏற்ப்பட்டது ...எல்லாருமே சலிச்சுக்கிட்டாங்க ....

சரி டைம் அதிகமா இல்ல...வானம் அப்போ பார்ப்போம்.......

ஜெட்லி...(சரவணா...)

Saturday, April 2, 2011

நஞ்சுபுரம் - ஒரு கோர பார்வை....!!


நஞ்சுபுரம் - ஒரு கோர பார்வை....!!




நஞ்சுபுரம் நான் ஏன் போனேன் அப்படின்னு பார்த்தீங்கனா படத்துக்கு போய் ரொம்ப நாள் ஆச்சே ஏதாவது படத்துக்கு போவோம்னு போனோம். உண்மையிலே செம படம். இது வரைக்கும் தமிழ் சினிமால இல்ல இந்தியா சினிமால இல்ல இல்ல உலக சினிமால கூட இப்படி ஒரு படம் வந்தது இல்ல..அப்படி என்ன படத்துல ஸ்பெஷல்னு கேட்குறீங்களா??
படத்தோட தயாரிப்பாளர் ப்ரீத்த.எஸ்(ஹீரோவின் மனைவி) அவங்களுக்கே OUR SINCERE
THANKS னு படம் ஆரம்பிக்கர முன்னாடி சொல்லிகீறாங்க...ரெண்டு மணி நேர
படத்துக்குள்ள தேங்க்ஸ் சொல்றதே பத்து நிமிஷம் ஓடுதுனா பாருங்க...அப்படியே
என் கூட பால்கனியில் படம் பார்த்த பதிமூணு பேருக்கும் தேங்க்ஸ் சொல்லிருந்தா
சந்தோசமா இருந்து இருக்கும்...!!


என்ன கதை...


நஞ்சுபுரம்னு ஒரு ஊர்.... அங்க பண்ணையார் பையனா ராகவ் படத்தின் இசை அமைப்பாளரும் இவரே... மோனிக்கா தாழ்ந்த ஜாதி பெண்... அப்புறம் என்ன லவ்.... மேட்டர்னு படம் போகுது...மோனிக்கா குளிக்கிறத ராகவ் எட்டி பார்த்துட்டு சாரி ரசிச்சு பார்த்துட்டு இருக்கும் போது ஒரு நல்ல பாம்பு மோனிகாவை மட்டும் எதுக்கோ சேஸ் பண்ணுது அங்க வந்து ராகவ் பாம்பை மிதிச்சி ஹீரோயிசம் பண்றனு பாம்பை தப்பிக்க விட்டுறார்.... அடிச்ச பாம்பு பழி வாங்க வரும்னு நாப்பது நாள் ராகவை ஒரு பரண் போட்டு ஏத்தி விட்டுறாங்க....அப்புறம் என்னாச்சுனு நீங்க எங்கே வேணும்னாலும் பார்த்துக்குங்க... பார்ப்பீங்க..??


இந்த படத்தோட சில காட்சிகள் டி.வி.யில் பார்த்தப்ப இந்த படத்துக்கு போகனுமானு
யோசிச்சேன்....ஒளிப்பதிவு எல்லாம் ஒரு மாதிரி இருந்தது...ஏதோ தனியா ஒட்டி வச்ச
மாதிரி...ஆர்.ஆர்ல ராகவ் கொஞ்சம் வித்தியாசமா பண்ணி இருந்தாலும் காட்சிக்கும்
இடத்துக்கும் ஒத்து வரல...ஒரு பாட்டு நல்லா இருந்தது அவர் அந்த பரண் மேல ஏறும்
போது வரும் பாட்டு...



படத்தோட சில வசனங்கள் ரொம்ப கேவலமா இருந்தது...சில காட்சிகளும் கூட...நாம
தின்க் பண்றது ஸ்க்ரீன்ல வரும்...ராகவ் நடிகரா நல்லா பண்ணி இருக்கார்..கடைசியில்
பாம்பை பார்த்து பயப்படும் காட்சிகள் எல்லாம் சூப்பர்.அப்புறம் அந்த பாம்பு கடி
வைத்தியர் சொல்லும் ராஜா கதை எல்லாம் கொஞ்சம் இண்டரஸ்ட்ஆ இருந்தது...
படம் பார்க்கும் போது நிறைய கேள்வி வந்துக்கிட்டே இருக்கு...அதுக்கெல்லாம் இடம்
கொடுக்காம இன்னும் சுவாரசியமா பண்ணி இருந்தா நல்லா இருந்து இருக்கலாம்...



படத்துல பாம்பை காட்டறேன்னு சொல்லி என்னை மாதிரி சின்ன பசங்களை ஏமாத்தி
புட்டாங்க மக்கா... நானும் பரிசல்ல ஏறும் போது அப்ப பாம்பு இப்ப பாம்பு கூட்டம் வரும்னு பார்த்தா ஒரு புண்ணாக்கும் வரல...போஸ்டர்ல பண்ண கிராபிக்ஸ் வேலையே படத்திலும் பண்ணிருந்தா தான் என்ன......


நஞ்சுபுரம் - நஞ்சபுரம்.



தியேட்டர் நொறுக்ஸ் :

# கணபதிராம் தியேட்டர்ல தான் இந்த படத்தை பார்த்தேன்....பால்கனியில் ஒரு பதிமூணு பேர் இருந்து இருப்போம் ...கிழே ஓரளவுக்கு கூட்டம் இருந்தது...

# படத்தில ஒரு மியூசிக் அப்போ அப்போ பாம்பு போது வரும் ஏதோ சமோசா...சமோசானு பயங்கரமா...அந்த மியூசிக் இன்டர்வல் விடும் போது போட்டப்ப தான் லைட்டா கண்ணு கட்டனது முழிப்பு தட்டிச்சு !!

# கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து இருந்தா FAMILY AUDIENCE கேள்வி மேல கேள்வியா கேட்டுட்டு இருந்தாங்க...

பாம்பு கடிக்க வரும்னு சொல்ற நாப்பது நாள் வேற ஊருக்கு போக வேண்டியது தானே..??

ஏன் அவங்க வீட்டாண்ட பரண் கட்ட வேண்டியது தானே எதுக்கு காட்டு பக்கத்தில் கட்டுறாங்க..??னு

சரமாரி கேள்வி...


# படம் முடிச்சுட்டு வரும் போது ..." ஒரு வாரம் சீரியல்க்கு எடுத்ததை மொத்தமா படமா ரீலீஸ் பண்ணிட்டாங்க" னு பொலம்பிட்டு போனார்....



மேலும் பல பேருக்கு இந்த விழிப்புணர்வு சென்று அடைய உங்கள் பொன்னான வாக்கை அளிக்குமாறு

தாறு மாறாக கேட்டு கொள்கிறேன்....


உங்கள்

ஜெட்லி...(சரவணா...)