Saturday, May 14, 2011

அழகர்சாமியின் குதிரை....

அழகர்சாமியின் குதிரை....???


பாஸ்கர் சக்தியோட அழகர்சாமியின் குதிரை கதையை படிக்கும் போது அதை திரையில் பார்க்க அப்பவே ஆர்வம் இருந்தது...காரணம் சுசீந்திரன் இயக்குனர் என்பதே.. இந்த படத்தை நான் நேரத்தே பார்க்கவேண்டியது மிஸ் ஆகிடுச்சு. சரி இன்னைக்கு 12 மணி ஷோ மாயாஜால் போலாம்னு நண்பனோட அவசர அவசரமா அங்க போய் டிக்கெட் கேட்டா அந்த காட்சியை ரத்து செய்ஞ்சுட்டாங்க,காரணம் கேட்டதுக்கு ஒரு டிக்கெட் கூட யாரும்
வாங்கலையாம்...அதான் நாங்க ரெண்டு டிக்கெட் வாங்குரோமேனு கேட்டா... ரெண்டு பேருக்கு எல்லாம் படம் போட்ட கட்டுப்படியாகாதுனு புதுசா வசனம் எல்லாம் பேசினாரு. மாயாஜால் கூட திருத்தி போச்சேன்னு 1.40 ஷோ க்கு டிக்கெட் எடுத்தோம்....

சரி ஒரு வழியா அப்படி இப்படி டைம் பண்ணி உள்ளே போய் உட்கார்ந்த.....
படம் ஆரம்பிச்ச உடனே அப்புக்குட்டியை கட்டை அவுத்து விட்டு ஒரு அம்மா தண்ணி கொடுத்தாங்க...அப்பு குட்டி மூஞ்செல்லாம் ரத்தம் வேற. ஆஹா படத்தை இன்டர்வல்ல இருந்து போட்டுடாங்க போலன்னு வெளியே போய் சொன்ன பிறகு முதல்ல இருந்து படத்தை போட்டாங்க..


அழகர்சாமியின் குதிரை படத்துக்கு ஹீரோனு எல்லாம் யாரும் கிடையாது... கதையை நம்பி எடுத்து இருக்காங்க...கதையில் படித்ததை திரையில் பார்க்கும் போது ஒரு உற்சாகம் வருது...குறிப்பா குதிரை காணோம்னு போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்குற சீன்...அதே மாதிரி அந்த சின்ன பையன் காட்சிகள் எல்லாம் நல்லா இருந்தது. படம் ரெண்டு மணிநேரம் தான் ஓடுது. முதல் பாதியில் வரும் பாட்டு வேகத்தடைகள்....அப்புறம் முக்கியமா படத்தில விறுவிறுப்பு ரொம்ப கம்மி ...

போலீஸ்காரராக வருபவர், சூரி , மலையாள மாந்திரிகர், வாத்தியார், னு நிறைய
கேரக்டர். அவர்கள் அடிக்கும் டைமிங் காமெடிகள் நன்றாக இருந்தது.ஆனா
அழகர்சாமி படம் என்னமோ எனக்கு அவ்வளவா புடிக்கல.படம் ரெண்டு மணி நேரம் தான் ஓடினாலும் ஏதோ ரொம்ப நேரம் ஓடின மாதிரி ஒரு அலுப்பு...அதுவும் முதல் பாதி கொஞ்சம் இழுப்பு...படம் டைம்பாஸ் ஆச்சா இல்லையானு கேட்டா...ஆச்சுனு தான் சொல்லணும்... கதைலே படிச்சுது எல்லாமே இன்னும் மேம்படுத்தி அற்புதமா திரையில் காட்டி இருக்கிறார் இயக்குனர். ஆனா எனக்கு தான் அவ்வளவா ஒன்ற முடியல படத்தோட.

ரெண்டாவது பாதியில் அப்புகுட்டியின் பிளாஷ்பேக் யூகிக்க முடிந்ததே...அதை கொஞ்சம் சீக்கரம் முடிச்சு இருக்கலாம். சரண்யா மோகன் எல்லாம் ரெண்டு மூணு சீன் தான் வராங்க.அதே மாதிரி படம் சில டைம் ஏதோ நாடகம் பார்க்கிற மாதிரி இருந்தது...அழகர்சாமியின் குதிரை படத்தோட ப்ளஸ் பாஸ்கர் சக்தியின் வசனங்கள் மற்றும் கேமரா மேன் கைவண்ணமும் தான். வெண்ணிலா கபடி குழு படத்தை நான் ஒரே வாரத்தில் ரெண்டு தடவை தியேட்டரில் சென்று
பார்த்தேன்... ஆனா அழகர்சாமியின் குதிரையில் ஒரு தடவை பவனி வரலாம்....!!தியேட்டர் நொறுக்ஸ்:

# படத்தோட இன்டெர்வல்ல இருந்து படம் போட்டவுடன் நான் வெளியே சொல்ல போகும் போது மப்டியில் வந்த போலீஸ்காரர்..."எப்படி கண்டுபிடிச்சீங்கனு..." கேட்டார்... இல்ல சார் கதையை படிச்சு இருக்கேன்
அதனால ஒரு யுகம் தான்னு சொன்னேன்....


# சரண்யா மோகன் அப்பு குட்டி கிட்ட குதிரையோட வந்துடுங்க அப்ப நம்ம கல்யாணம்னு சொன்னவுடன் பின் சீட்டில் இருந்தவர்..."நாளையில் இருந்து நானும் குதிரை வழக்க போறேன்னு" அவர் நண்பரிடம் உற்சாகமா சொன்னார்....


# அப்புக்குட்டி பொண்ணு பார்க்க கிளம்பும் முன் தொப்பையை மூச்சு நிறுத்தி எல்லாம் பார்ப்பார்...இதை கண்ட ஒருத்தர்.... "அதுவே பேமிலி பேக்...ஏதோ சிக்ஸ் பேக் வச்சி இருக்கிற மாதிரி மூச்செல்லாம் புடிக்கிறார்..."னு கலாய்த்தார்...
# படம் போடுறதுக்கு முன்னாடி வழக்கம் போல நம்ம ரேவதி ஹோட்டல் போய் பரோட்டா சாப்பிட்டு அப்படியே ஒரு முட்டை லாபாவும் உள்ளே தள்ளியாச்சு...!!


ஜெட்லி...(சரவணா...)


Tuesday, May 10, 2011

பாஸ்ட் பைவ் - (FAST FIVE)

பாஸ்ட் பைவ் - (FAST FIVE)சில மாதங்களாகவே ஆங்கில டப்பிங் படங்களை அதிகமா மிஸ் பண்ணேன். அதுவும் பைலட் தியேட்டரை ரொம்பவே மிஸ் பண்ணேன். அப்படி பீல் பண்ற அளவுக்கு பைலட் தியேட்டர் என்ன பெரிய அப்பாடக்கர் தியேட்டர்ரா?? நீங்க கேட்கலாம். என்னை மாதிரி ஆங்கில டப்பிங் படம் பார்ப்பவர்களுக்கு பைலட் தியேட்டர் ஒரு வரபிரசாதம் தான். கண்டிப்பா எல்லாம் ஆங்கில டப்பிங் படங்களும் ரீலீஸ் ஆகும் அதிகபட்ச விலையே அம்பது ரூபாய் தான். ஏ.சி.யம் ஓரளவுக்கு இருக்கும். ஆனா பைலட்க்கு குடும்பத்தோட
போறதுக்கு ஏத்த தியேட்டர் இல்லை...!!

சரி நாம வேகம் அஞ்சுக்கு போவோம்.சரியா பத்து ஆண்டுகள் ஆச்சு fast and furious படத்தோட முதல் பாகம் வந்து . நான் டி.வி.டி.யில் தான் பார்த்தேன். அந்த பாகத்தில் வின் டீசல் விடவும் என்னை அதிகமா கவர்ந்தவர் பால் வாக்கர் தான். அசால்ட்டா நடிப்பார். அதே மாதிரி பால் வாக்கர் நடித்த eight below என்ற படத்துக்கும் நான் ரசிகன். eight below படத்தை மோட்சத்தில் பார்த்ததாக நினைவு.

இந்த படம் fast and furious படத்தோட அஞ்சாம் பாகமா நினைச்சா அது உங்க தப்பு. வேணும்னா மூணாம் பாகம்னு சொல்லலாம். நடுவில் ஜப்பான் படம் கூட fast and furious என்ற தலைப்பில் வந்தது அது பத்தி எனக்கு எதுவும் தெரியல. இந்த படத்தில் வின் டீசல், பால் வாக்கர், ராக்னு செம கூட்டணி.படம் கிட்ட தட்ட ரெண்டு ஹவர் ஓடுது. இந்த தடவை கதை ரியோவில் நடக்குது ரியோவில் இருக்குற ஒரு பெரிய டான் கிட்ட இருந்து கொள்ளை அடிக்க ப்ளான் போடுறாங்க....

ராக் போலீஸ் ஆக வருகிறார் கொஞ்ச சீன் வந்தாலும் இவர் வர்ற சீன்ல தான் தியேட்டர்ல செம கைத்தட்டு. இவருக்கும் வின் டீசல் க்கும் நடக்கும் சண்டை காட்சி செம. பால் வாக்கர் வழக்கம் போல் நல்லாவே பண்ணி இருக்கிறார். பாகம் ரெண்டில் வந்த நீக்ரோ நடிகர் இதிலும் வருவார். கிட்ட தட்ட OCEANS படம் மாதிரி இருந்தாலும் இதில் அக்சன் காட்சிகள் செம. கடைசியில் அவர்கள் லாக்கரை லவட்டிட்டு போகும் காட்சி சூப்பர் .

விறுவிறுப்பா...அனல் பறக்கும் சண்டை காட்சிகள்.. இந்த விடுமுறையை கழிக்க கண்டிப்பா இந்த படத்துக்கு போங்க . என்டர்டைன்மன்ட் கியாரண்டி...!!

தியேட்டர் நொறுக்ஸ் :

# நான் போனது திங்கள்க்கிழமை என்பதால் ஓரளவுக்கு தான் கூட்டம் இருந்தது. இன்டர்வல் அப்ப ஒருத்தரை பார்த்தப்போ எங்கையோ பார்த்த மாதிரி இருந்ததுனு பார்த்தா நம்ம வடிவேலு புகழ் சிங்கமுத்து பையன்.

# சிக்காத சிறுத்தைகள் அப்படின்னு வேற ஒரு டைட்டில் இந்த படத்துக்கு...
ரூம் போட்டு யோசிப்பாங்களோ....!!

# ராக் அறிமுக காட்சியில் தியேட்டர்ல செம விசில் பறந்தது....

# படம் முடிஞ்சவுடன் நேர பர்மா பஜார் பக்கம் போய் அத்தோ சாப்பிட போயாச்சு....


ஜெட்லி...(சரவணா...)

Monday, May 9, 2011

இதுதான்டா எங்க பவரு ....!!

இதுதான்டா எங்க பவரு ....!!


வெளியீடு : பவர் ஸ்டார் அகில கெரகம் ரசிகர் மன்றம்.


வெற்றி வெற்றி...லத்திகா வெற்றிகரமாக அம்பதாவது நாள் ஓடி அதையும் தாண்டி எப்படியாவது காசு கொடுத்து நூறு நாள் கூட வெற்றிகரமாக கண்டிப்பா ஓடும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு... நம்ம பவரு ஸ்டார்க்கு கிடைத்த வெற்றி தமிழனுக்கு கிடைத்த வெற்றி.... இந்த படத்தை பார்த்து நொந்து நூடுல்ஸ் ஆன அனைத்து பவர் ரசிகர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்வதில் பெருமை அடைகிறோம்.....

ஆனந்த தொல்லை....

அடுத்து நமக்கு தொல்லை கொடுக்க மன்னிக்கவும் தூக்கத்தை கெடுக்க வரபோகும் படம் தான் ஆனந்த தொல்லை நம்ம பவர் நடித்தது....நம்ம அண்ணன் பவர் ஸ்டார்க்கு ஏத்த மாதிரி நாயகி, முன்னால் அழகி இந்நாள் கிழவி வாணி விஸ்வநாத் நடித்து இருக்கிறார். கூடவே கவர்ச்சி அணுகுண்டு பாபிலோனா கூட பவர் கூத்தாட்டம் போட்டுள்ளார். இந்த படத்தை அனைவரும் பார்த்து தங்கள் வாழ்நாள் பாக்கியத்தை கிட்ட வேண்டும்
என்று எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறேன்.


மன்னவன்:


ரஜினி மூன்று முகம், சூர்யாக்கு காக்க காக்க,விஜய்க்கு போக்கிரி மாதிரி நம்ம தல பவருக்கு மன்னவன்.இந்த படமும் கூடிய விரைவில் வெளி வந்து மக்களை மகிழ்விக்க வேண்டும்...!!


.
ஜெட்லி...(சரவணா...)
Saturday, May 7, 2011

ஒரு வெயிற்பொழுதில்.....

ஒரு வெயிற்பொழுதில்.....சரியா போன வருஷம் மே மாசத்தில் எழுதின பதிவு இது....இப்போ சும்மா ஒரு டெஸ்ட்க்கு மீள் பதிவா போடுறேன்......இப்போ வேலை செய்யுற இடத்திலே இன்டர்நெட் வந்தாச்சு... அதனால் அப்போ அப்போ பதிவு போட வாய்ப்பு இருக்கு....பார்ப்போம்... பேஸ்புக்ல எப்போதும் இருப்பேன்...!!

************************
நம்மில் பலர் மெரீனா பீச்சுக்கு ஆதவன் தன் சூட்டை தணித்த பின் காற்று வாங்கவோ, காதலியை சந்திக்கவோ, குழந்தைகளுடன் விளையாடவோ,
நடைபயிற்சி செய்யவோ, அங்கு கூட்டமாக வரும் பெண்களை சைட் அடிக்கவோ,நண்பர்களை சந்திக்கவோ,சுண்டல் வாங்கி தின்னவோ, அல்லது ஏதாவது ஒரு வோவு க்கு சென்று இருப்போம். ஆனால் மதியம் நேரம் பன்னிரண்டு மணிக்கு போய் பார்த்து இருக்கிங்களா???


நான் பார்த்ததன் விளைவு தான் இந்த பதிவு. நீ ஏன்டா பன்னண்டு மணிக்கு உச்சி வெயில்ல பீச்சுக்கு போனேன்னு கேக்க கூடாது.ஏன்னா, நானும் ஒரு எழுத்தாளன்னு ஊருக்குள்ள ரெண்டு பேரு பேசிக்கிறாங்க.ஒன்னு கண்ணு அவிஞ்சு போன மூணாவது தெரு பாட்டி இன்னொன்னு தமிழ் தெரியாத எதிர் வீட்டு பார்ட்டி!.


பைக்கில் லைட் ஹவுஸ் அடைந்தவுடன் பச்சை பசேல் என்று
இருந்தது.சில பட்டாம்பூச்சிகள் என் மீது மோதியது.ஆனால் காந்தி
சிலை தாண்டிய பின் மரங்கள் அதிகமாக மரங்கள் இல்லை.
புல் கூட காய்ந்து இருந்தது, புல்லுக்கு தண்ணி அடிக்கும்
தானியங்கி கருவி நடைபாதையிலும் தண்ணி அடித்து வருவோர்
போவோர் மீதெல்லாம் தண்ணி அடித்தது.தண்ணி கஷ்டம் அப்படின்னு சொல்றாங்க ஆன இங்க தண்ணி வீணா போகுது!!.

சுற்றுலா பேருந்துகள் மற்றும் சில வேன்களை அதன்
டிரைவர்கள் மற்றும் கிளீனர்கள் துடைத்து கொண்டு இருந்தார்கள்.
பொது இடத்தில் வண்டி கழுவ கூடாது என்ற சட்டம் என்ன ஆனது
என்று அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்???.தள்ளு வண்டி கடைக்கு
சிறிது காலம் தடை போட்டு இருந்தார்கள் ஆனால் மீண்டும் கடைகள் முன்பை விட அதிகமாவே வந்து விட்டது.


பீச்சில் எந்நேரமும் அலைகளுக்கு மட்டும் தான் ஓய்வில்லை
என்று நினைத்து இருந்தேன், ஆனால் அங்கு காதலர்கள் செய்யும்
சில்மிஷங்களுக்கும் ஓய்வில்லை என்று இன்று தான் புரிந்து
கொண்டேன். சில ஜோடி குடையுடன் வெயிலை சமாளித்து கொண்டு
தங்கள் வேலையை தொடர்ந்தனர், சிலர் தங்கள் துப்பட்டாவை
உபயோகித்து தங்களை மறைத்து கொண்டனர்.


பீச்சில் முக்கிய பிரச்சனையே மொபெட் ஒட்டி வரும் பெண்கள்
தான், கண்டிப்பாக அவர்கள் பின்னால் ஒரு ஆண்மகன் உட்கார்ந்து இருந்தால் சொல்லவே வேண்டாம். அவர்கள் வண்டி ஒட்டி கொண்டே பண்ணும் சில்மிஷத்தை பார்த்தால் நைட் தூக்கம் வராது. எப்பா என்னம்மா வண்டி ஒட்டுதுங்க(உங்களுக்கு தெரியாதது ஒன்னும் இல்ல).

பீச்சில் நம்மை போன்று நடுத்தர வர்க்கத்தினருக்கு என்றே நீச்சல்
குளம், ஆனால் அதை ஒழுங்காக கிளீன் செய்வதே இல்லை.
நான் அந்த நீச்சல் குளத்துக்கு போய் ஒரு வருடம் மேல் ஆகிவிட்டது,
காரணம் நான் அங்கு கடைசியாக போன போது ஒருத்தன் சொன்ன
செய்தி தான் அது "தண்ணீரில் எலி இருக்குது" என்றான்.
என்னை போல் நீங்களும் என்றைக்காவது தனியாக மதிய நேர பீச்சுக்கு செல்லலாம், அதனால் சில குறிப்புகள்:

# உங்க வண்டியை உங்கள் கண் முன் நிறுத்தி வைத்தால் நல்லது.

# நீங்க பாட்டுக்கு கடலை பார்த்து போகும் போது குடை அழகிகள் மத்தியில் சிக்காமல் இருக்க வேண்டும்.

# கரை பக்கத்தில் சிறு படகு இருக்கிறது என்று ஏறி உட்கார்ந்து
விட வேண்டாம்... உள்ளே யாரவது இருந்தாலும் இருப்பார்கள்.


மேல உள்ள தகவல்கள் அனைவரையும் சேர ஒட்டு போடுங்கள்...
கமெண்ட் பண்ணாலும் சந்தோசம்...

உங்கள்
ஜெட்லி சரண்.