Saturday, May 14, 2011

அழகர்சாமியின் குதிரை....

அழகர்சாமியின் குதிரை....???


பாஸ்கர் சக்தியோட அழகர்சாமியின் குதிரை கதையை படிக்கும் போது அதை திரையில் பார்க்க அப்பவே ஆர்வம் இருந்தது...காரணம் சுசீந்திரன் இயக்குனர் என்பதே.. இந்த படத்தை நான் நேரத்தே பார்க்கவேண்டியது மிஸ் ஆகிடுச்சு. சரி இன்னைக்கு 12 மணி ஷோ மாயாஜால் போலாம்னு நண்பனோட அவசர அவசரமா அங்க போய் டிக்கெட் கேட்டா அந்த காட்சியை ரத்து செய்ஞ்சுட்டாங்க,காரணம் கேட்டதுக்கு ஒரு டிக்கெட் கூட யாரும்
வாங்கலையாம்...அதான் நாங்க ரெண்டு டிக்கெட் வாங்குரோமேனு கேட்டா... ரெண்டு பேருக்கு எல்லாம் படம் போட்ட கட்டுப்படியாகாதுனு புதுசா வசனம் எல்லாம் பேசினாரு. மாயாஜால் கூட திருத்தி போச்சேன்னு 1.40 ஷோ க்கு டிக்கெட் எடுத்தோம்....

சரி ஒரு வழியா அப்படி இப்படி டைம் பண்ணி உள்ளே போய் உட்கார்ந்த.....
படம் ஆரம்பிச்ச உடனே அப்புக்குட்டியை கட்டை அவுத்து விட்டு ஒரு அம்மா தண்ணி கொடுத்தாங்க...அப்பு குட்டி மூஞ்செல்லாம் ரத்தம் வேற. ஆஹா படத்தை இன்டர்வல்ல இருந்து போட்டுடாங்க போலன்னு வெளியே போய் சொன்ன பிறகு முதல்ல இருந்து படத்தை போட்டாங்க..


அழகர்சாமியின் குதிரை படத்துக்கு ஹீரோனு எல்லாம் யாரும் கிடையாது... கதையை நம்பி எடுத்து இருக்காங்க...கதையில் படித்ததை திரையில் பார்க்கும் போது ஒரு உற்சாகம் வருது...குறிப்பா குதிரை காணோம்னு போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்குற சீன்...அதே மாதிரி அந்த சின்ன பையன் காட்சிகள் எல்லாம் நல்லா இருந்தது. படம் ரெண்டு மணிநேரம் தான் ஓடுது. முதல் பாதியில் வரும் பாட்டு வேகத்தடைகள்....அப்புறம் முக்கியமா படத்தில விறுவிறுப்பு ரொம்ப கம்மி ...

போலீஸ்காரராக வருபவர், சூரி , மலையாள மாந்திரிகர், வாத்தியார், னு நிறைய
கேரக்டர். அவர்கள் அடிக்கும் டைமிங் காமெடிகள் நன்றாக இருந்தது.ஆனா
அழகர்சாமி படம் என்னமோ எனக்கு அவ்வளவா புடிக்கல.படம் ரெண்டு மணி நேரம் தான் ஓடினாலும் ஏதோ ரொம்ப நேரம் ஓடின மாதிரி ஒரு அலுப்பு...அதுவும் முதல் பாதி கொஞ்சம் இழுப்பு...படம் டைம்பாஸ் ஆச்சா இல்லையானு கேட்டா...ஆச்சுனு தான் சொல்லணும்... கதைலே படிச்சுது எல்லாமே இன்னும் மேம்படுத்தி அற்புதமா திரையில் காட்டி இருக்கிறார் இயக்குனர். ஆனா எனக்கு தான் அவ்வளவா ஒன்ற முடியல படத்தோட.

ரெண்டாவது பாதியில் அப்புகுட்டியின் பிளாஷ்பேக் யூகிக்க முடிந்ததே...அதை கொஞ்சம் சீக்கரம் முடிச்சு இருக்கலாம். சரண்யா மோகன் எல்லாம் ரெண்டு மூணு சீன் தான் வராங்க.அதே மாதிரி படம் சில டைம் ஏதோ நாடகம் பார்க்கிற மாதிரி இருந்தது...அழகர்சாமியின் குதிரை படத்தோட ப்ளஸ் பாஸ்கர் சக்தியின் வசனங்கள் மற்றும் கேமரா மேன் கைவண்ணமும் தான். வெண்ணிலா கபடி குழு படத்தை நான் ஒரே வாரத்தில் ரெண்டு தடவை தியேட்டரில் சென்று
பார்த்தேன்... ஆனா அழகர்சாமியின் குதிரையில் ஒரு தடவை பவனி வரலாம்....!!தியேட்டர் நொறுக்ஸ்:

# படத்தோட இன்டெர்வல்ல இருந்து படம் போட்டவுடன் நான் வெளியே சொல்ல போகும் போது மப்டியில் வந்த போலீஸ்காரர்..."எப்படி கண்டுபிடிச்சீங்கனு..." கேட்டார்... இல்ல சார் கதையை படிச்சு இருக்கேன்
அதனால ஒரு யுகம் தான்னு சொன்னேன்....


# சரண்யா மோகன் அப்பு குட்டி கிட்ட குதிரையோட வந்துடுங்க அப்ப நம்ம கல்யாணம்னு சொன்னவுடன் பின் சீட்டில் இருந்தவர்..."நாளையில் இருந்து நானும் குதிரை வழக்க போறேன்னு" அவர் நண்பரிடம் உற்சாகமா சொன்னார்....


# அப்புக்குட்டி பொண்ணு பார்க்க கிளம்பும் முன் தொப்பையை மூச்சு நிறுத்தி எல்லாம் பார்ப்பார்...இதை கண்ட ஒருத்தர்.... "அதுவே பேமிலி பேக்...ஏதோ சிக்ஸ் பேக் வச்சி இருக்கிற மாதிரி மூச்செல்லாம் புடிக்கிறார்..."னு கலாய்த்தார்...
# படம் போடுறதுக்கு முன்னாடி வழக்கம் போல நம்ம ரேவதி ஹோட்டல் போய் பரோட்டா சாப்பிட்டு அப்படியே ஒரு முட்டை லாபாவும் உள்ளே தள்ளியாச்சு...!!


ஜெட்லி...(சரவணா...)


12 comments:

♥ RomeO ♥ said...

படம் இன்னும் பார்க்கவில்லை .. பார்க்கணும்

பெம்மு குட்டி said...

யதார்த்தம் என்ற பெயரில் வரும் இதைப்போன்ற படங்களை நான் பார்க்க விரும்புவதே இல்லை. ஓவரா கத்தி கத்தி பேசுவாங்க & Unrealistic கா இருக்கும்.

அதுவும் டிரைலர்ல, கதாநாயகி கைய நீட்டுவதையும் கதாநாயகன் அவள் கையை தயங்கி தயங்கி தொடுவதையும் பார்க்கும்பொழுது எழுத்தாளர் மாமல்லன் பஸ்ஸில் சொன்னதுதான் நினைவுக்கு வந்தது. 'கையை தொட்டதுக்கே பிட்ஸ் வந்த மாதிரி ஆயிடுதாங்க, First Night ட காண்பிக்கனும்னா எப்படி காண்பிப்பாங்க? (வார்த்தைகள் மாறியிருக்கலாம், கருத்து ஒன்றுதான்)

இலவசமாய் காண்பித்தாலும் பார்க்கிற மாதிரி எண்ணம் இல்லை. :-)))))

பெம்மு குட்டி said...

//இலவசமாய் காண்பித்தாலும் பார்க்கிற மாதிரி எண்ணம் இல்லை. :-)))))//

இது படத்தை பற்றிய கருத்து என்பதை எச்சரிக்கையுடன் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். :-))))

பரோட்டா & முட்டை லாபாவுக்காக Like செய்கிறேன்.

ஜெட்லி... said...

//இது படத்தை பற்றிய கருத்து என்பதை எச்சரிக்கையுடன் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். :-)))) //

RITE....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

parkkanum

மதுரை சரவணன் said...

கதையை அதன் தன்மையிலிருந்து மாறாமல் அப்படியே கிராமத்து மனத்துடன் கொடுத்துஇருப்பது பாராட்டுக்குரியது. பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

ஜெட்லி... said...

ஆமாம் ஆமாம்....ஆனா கதை தான் எந்த கால கட்டத்தில் நடக்குத்னு தெரியல...
உதாரணம் அந்த பரோட்டா சாப்பிட்டு காசு கணக்கு பண்ணும் காட்சி....

ஸ்ரீகாந்த் said...

அடடா பெம்மு குட்டி சொல்லிடர்பா ......போய்யா நீயும் ஒன் பதிலும்....கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனைக்கு நீ தான்யா சரியான உதாரணம்

Jagannath said...

ஆமாம் ஆமாம்....ஆனா கதை தான் எந்த கால கட்டத்தில் நடக்குத்னு தெரியல...
உதாரணம் அந்த பரோட்டா சாப்பிட்டு காசு கணக்கு பண்ணும் காட்சி....//

1982. அலைகள் ஓய்வதில்லை, எம்.ஜி.ஆர் சுவரோவியங்கள், ஒரு ரூபாய், இரு ரூபாய் நோட்டுகள் ஆகியவை காட்டப் படுகிறதே.

சமுத்ரா said...

good one

Softy said...

Do Visit

http://www.verysadhu.blogspot.com/

Softy said...

Do Visit

http://verysadhu.blogspot.com