************************
நடைபயிற்சி செய்யவோ, அங்கு கூட்டமாக வரும் பெண்களை சைட் அடிக்கவோ,நண்பர்களை சந்திக்கவோ,சுண்டல் வாங்கி தின்னவோ, அல்லது ஏதாவது ஒரு வோவு க்கு சென்று இருப்போம். ஆனால் மதியம் நேரம் பன்னிரண்டு மணிக்கு போய் பார்த்து இருக்கிங்களா???
நான் பார்த்ததன் விளைவு தான் இந்த பதிவு. நீ ஏன்டா பன்னண்டு மணிக்கு உச்சி வெயில்ல பீச்சுக்கு போனேன்னு கேக்க கூடாது.ஏன்னா, நானும் ஒரு எழுத்தாளன்னு ஊருக்குள்ள ரெண்டு பேரு பேசிக்கிறாங்க.ஒன்னு கண்ணு அவிஞ்சு போன மூணாவது தெரு பாட்டி இன்னொன்னு தமிழ் தெரியாத எதிர் வீட்டு பார்ட்டி!.
பைக்கில் லைட் ஹவுஸ் அடைந்தவுடன் பச்சை பசேல் என்று
இருந்தது.சில பட்டாம்பூச்சிகள் என் மீது மோதியது.ஆனால் காந்தி
சிலை தாண்டிய பின் மரங்கள் அதிகமாக மரங்கள் இல்லை.
புல் கூட காய்ந்து இருந்தது, புல்லுக்கு தண்ணி அடிக்கும்
தானியங்கி கருவி நடைபாதையிலும் தண்ணி அடித்து வருவோர்
போவோர் மீதெல்லாம் தண்ணி அடித்தது.தண்ணி கஷ்டம் அப்படின்னு சொல்றாங்க ஆன இங்க தண்ணி வீணா போகுது!!.
சுற்றுலா பேருந்துகள் மற்றும் சில வேன்களை அதன்
டிரைவர்கள் மற்றும் கிளீனர்கள் துடைத்து கொண்டு இருந்தார்கள்.
பொது இடத்தில் வண்டி கழுவ கூடாது என்ற சட்டம் என்ன ஆனது
என்று அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்???.தள்ளு வண்டி கடைக்கு
சிறிது காலம் தடை போட்டு இருந்தார்கள் ஆனால் மீண்டும் கடைகள் முன்பை விட அதிகமாவே வந்து விட்டது.
பீச்சில் எந்நேரமும் அலைகளுக்கு மட்டும் தான் ஓய்வில்லை
என்று நினைத்து இருந்தேன், ஆனால் அங்கு காதலர்கள் செய்யும்
சில்மிஷங்களுக்கும் ஓய்வில்லை என்று இன்று தான் புரிந்து
கொண்டேன். சில ஜோடி குடையுடன் வெயிலை சமாளித்து கொண்டு
தங்கள் வேலையை தொடர்ந்தனர், சிலர் தங்கள் துப்பட்டாவை
உபயோகித்து தங்களை மறைத்து கொண்டனர்.
பீச்சில் முக்கிய பிரச்சனையே மொபெட் ஒட்டி வரும் பெண்கள்
தான், கண்டிப்பாக அவர்கள் பின்னால் ஒரு ஆண்மகன் உட்கார்ந்து இருந்தால் சொல்லவே வேண்டாம். அவர்கள் வண்டி ஒட்டி கொண்டே பண்ணும் சில்மிஷத்தை பார்த்தால் நைட் தூக்கம் வராது. எப்பா என்னம்மா வண்டி ஒட்டுதுங்க(உங்களுக்கு தெரியாதது ஒன்னும் இல்ல).
பீச்சில் நம்மை போன்று நடுத்தர வர்க்கத்தினருக்கு என்றே நீச்சல்
குளம், ஆனால் அதை ஒழுங்காக கிளீன் செய்வதே இல்லை.
நான் அந்த நீச்சல் குளத்துக்கு போய் ஒரு வருடம் மேல் ஆகிவிட்டது,
காரணம் நான் அங்கு கடைசியாக போன போது ஒருத்தன் சொன்ன
செய்தி தான் அது "தண்ணீரில் எலி இருக்குது" என்றான்.
என்னை போல் நீங்களும் என்றைக்காவது தனியாக மதிய நேர பீச்சுக்கு செல்லலாம், அதனால் சில குறிப்புகள்:
# உங்க வண்டியை உங்கள் கண் முன் நிறுத்தி வைத்தால் நல்லது.
# நீங்க பாட்டுக்கு கடலை பார்த்து போகும் போது குடை அழகிகள் மத்தியில் சிக்காமல் இருக்க வேண்டும்.
# கரை பக்கத்தில் சிறு படகு இருக்கிறது என்று ஏறி உட்கார்ந்து
விட வேண்டாம்... உள்ளே யாரவது இருந்தாலும் இருப்பார்கள்.
மேல உள்ள தகவல்கள் அனைவரையும் சேர ஒட்டு போடுங்கள்...
கமெண்ட் பண்ணாலும் சந்தோசம்...
உங்கள்
ஜெட்லி சரண்.
10 comments:
மிகவும் உணர்ந்து எழுதப்பட்ட பதிவு என்று நினைக்கிறேன் .இறுதியில் சொல்லி இருக்கும் கருத்துக்கள் ஒவ்வொன்றும் சிந்திக்க வைக்கும் ஒன்றுதான்
அன்பின் ஜெட்லி
கண்ணில் கண்டவற்றை கண்டபடியே எழுதியது நன்று. இறுதியில் அறிவுரை வேறு. வாழ்க வளமுடன். நட்புடன் சீனா
ஒட்டா? இல்லை ஓட்டா?
தொடர்ந்து பதிவெழுதி தமிழ் கூறும் நல்லுலகை காக்கவும் ஜெட்லி காக்கவும்
நன்றி...நன்றி.....
அசோக் அண்ணே ...ஏன் ??
Very true very true . . . I also see this type of peoples in POOMPUHAR
தண்ணியிலே எலியா!!!!! :O
குடும்பஸ்தனுக்கு மதியம் பீச்ல என்னய்யா வேலை?
@ramesh... pona varusham eluthunatha pathivu ppa ithu
@ "என் ராஜபாட்டை"- ராஜா ...rite
கடமை உணர்ச்சி புல்லரிக்க வைக்குது :)
நல்ல கவரேஜ்.
மீள் பதிவா இருந்தாலும் இன்னும் அந்த நிலை மாறலை என்றே நினைக்கிறேன்.
Post a Comment