Tuesday, June 29, 2010

பயணக்குறிப்பு.... பார்த்ததும் படித்ததும்!!

கம்போட்ஸ்(கம்போடியா) - பயணகுறிப்பும் புனைப்பெயரும்....

ஸ்ரீபெரும்பத்தூர் - அதிகாலை பயணம்.


கடந்த மாதம் டிஸ்கவர் புக் பேலஸ் சென்ற போது என் கண்களில்
ப்பட்டது "கம்போடியா - இந்திய தொன்மங்களை நோக்கி" என்ற
பயணகுறிப்பு புத்தகம்.ஆசிரியர் கானா பிரபா. இவரும் ஒரு
வலைப்பதிவாளர் என்று எனக்கு புத்தகம் வாங்கி படித்தபின்
தான் தெரிந்தது. வலைப்பதிவில் எழுதிய பயண அனுபவங்கள்
தான் இந்த புத்தகம்.எனக்கு பயணகுறிப்பு புத்தகங்களை படிக்க மிகவும் பிடிக்கும் காரணம் நாம தான் போவல, போனவங்க அனுபவத்தையாவது படிப்போம் என்று தான். இந்த புத்தகத்தை வாங்க இன்னொரு காரணமும் இருக்கு...அது ஏன் ஏன் ஏன்....

**************************

நான் முதுகலை பட்டம் படித்து?? கொண்டிருந்த போது என் நண்பன் ஒருவன் முதல் வருடத்தில் எனக்கு ஏதாவது பட்ட பெயர் வைத்தே ஆக வேண்டும் என்று சேலத்தில் இருந்தே சபதம் செய்து வந்திருப்பான் போல... அவன் வைத்த அந்த பட்ட பெயர் தான் கம்போடியா...அது ரொம்ப நீளமா இருக்குனு கம்போட்ஸ் என்று சில நண்பர்கள் அழைக்க ஆரம்பித்தனர்.

ஏன் மாமே இந்த பெயர் வச்ச... என்று கேட்டதற்கு நான் கம்போடியாவில் இருப்பவர்கள் போல் இருக்கிறேன் என்றான்.கம்போடியாகாரங்க எல்லாம் உன்னை மாதிரி தான் இருப்பாங்க,கம்போடியா எங்கோ ஆப்ரிக்காவில் இருக்கிறது என்று இன்னொரு நண்பனிடம் சொன்னதாய் நினைவு. நண்பன் அறிவாளி அவன் சொன்ன சரியாதான் இருக்கும் என்று அப்போது நினைத்தேன்.ஆனா இந்த பட்டபெயர்க்கு மட்டும் பெயர் சூட்டு விழாவே
எடுக்காம ஊரெல்லாம் பரவுது.

***********************

எனக்கும் இந்த புத்தகத்தை படிக்கும் வரை கம்போடியா எந்த
பக்கம் இருக்குனு கூட தெரியாது. புத்தகத்தை படிக்க ஆரம்பித்த
பின் தான் தெரிந்தது அது தாய்லாந்து மற்றும் வியட்நாம் அருகில்
இருக்கிறது என்று. கம்போடியா நாட்டுக்காரங்களும் தாய்லாந்து
மக்கள் போலேவே முக அமைப்பு உடையவர்கள் தான் என்பதை
என் நண்பர்களுக்கு இங்கு உரக்க சொல்லி கொள்ள விரும்புகிறேன்.
எனக்கு பெயர் வைத்த நண்பர் இப்போது தன் பெயரை பாதி தான் போட்டு கொல்கிறார் "னேஷ்" என்று..... !!நண்பர் பெயரின் முதல் ரெண்டு எழுத்தை தனியாக எழுதினால் வேறு அர்த்தம் வரும் என்பதால் ப்ரீயா விட்டுவிடுவோம்!!


இந்த புத்தகத்தை படித்த போது எனக்கும் கானா பிரபா அண்ணனுடன்
கம்போடியா சென்றது போன்று அனுபவம் கிடைத்தது. பல விஷயங்களை சுவாரிசியமாக சொல்லி இருந்தார். அங்கோர்வாட்
சிற்பங்கள், டுக் டுக் வண்டி, பன்டே கெடே ஆலயம், பாற்கடல் கடைந்த தேவர்கள் சிலை என்று புத்தகம் படித்த என்னால் மறக்க முடியாது. கம்போடியா சுற்றுலா செல்பவர்களுக்கு ஏற்ற ஒரு புத்தகம் இந்த "கம்போடியா-இந்திய தொன்மங்களை தேடி".

>>>>>>>>>>>>>>>>>>

ஸ்ரீபெரும்பத்தூர் - அதிகாலை பயணம்.
மறுபடியும் ஒரு அதிகாலை பயணம் இந்த தடவை ஸ்ரீபெரும்பத்தூர்
போவோம் என்று நானும் நண்பனும் காலை 5.30 மணிக்கு கிளம்பினோம். இந்த தடவையும் கோவில் நோக்கி தான் பயணம். என்னடா இவன் ஆன்மிக பழமா இருப்பான் போல என்று நீங்கள் நினைச்சா அது உங்க தப்பு. நமக்கு தேவை பயணம் அது கோவில்னு சொன்ன வீட்டில் கிரீன் சிக்னல் கிடைக்கும் அவ்வளவுதான். அப்படியே ஊர் சுத்தின மாதிரியும் ஆச்சி சாமியையும் பார்த்த மாதிரி ஆச்சி.இதை தான் ஒரு குவாட்டரில் ரெண்டு கட்டின்னு சாரி ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்னு சொல்றோம்.

பூந்தமல்லி தாண்டியவுடன் அந்த காலையில் ரோட்டின் மீடியனில்
மாடுகள் கூட்டம். அது எப்போ கிழே இறங்கும் என்று யாருக்கும்
தெரியாது...விபத்து நடக்காமல் இருந்தால் சரி என்று வண்டியை
மாடுகளை கவனித்தே ஒட்டி சென்றான் நண்பன்.


ஒரு மூடிய கல்லூரியின் முன்னாடி பிரமாண்ட செட் ஒன்று
போடப்பட்டிருந்தது...அப்படியே ஒரு அரண்மனையை கவுத்தி
போட்ட மாதிரி இருந்தது...எந்த படத்துக்கு அப்படின்னு தெரியல...
பக்கத்தில் ஒரு நரகம் போன்ற போன்ற செட் போட்டிருந்தார்கள்...
ஸ்ரீபெரும்பத்தூர் அடைந்தவுடன் ராமானுஜர் கோவிலுக்கு சென்று
அப்படியே வணங்கி விட்டு கோவிலை ஒரு ரவுண்ட் அடித்தோம்.
மிக பழமையான கோவில்...எனக்கு ஒரே குறை தான் சாயங்காலம்
வந்தா இங்கே புளியோதரை சூடா கிடைக்கும்..காலையிலே வந்து
அந்த தாத்தா விக்க மாட்டாரு போல...!!
அடுத்தது என்ன பசிக்க ஆரம்பிச்சுடிச்சு அதனால அப்படியே
ஹோட்டல் தேடுனோம் எதுவும் கிடைக்கில...ஆனா என்
கண்ணுல இது தான் சிக்கிச்சி,,,, சிவ சிவா...

பாருங்க எப்படி வளந்து இருக்குனு,,..ஹலோ நான் விஞ்ஞானத்தை
சொன்னேன்ங்க... டிஜிட்டல்ல அட்டு பிட்டு படத்தை காமிக்கிற
அளவுக்கு நம்ம நாடு முன்னேற்றம் அடைஞ்சுருக்கு...எவ்ளோ
பெருமையான விஷயம் இது...!!(அடுத்த தடவை சாயங்காலம்
போகும் போது டிஜிட்டல்ல ட்ரை பண்ணி பார்க்கணும்)
இருங்காட்டுகோட்டையில் காலை உணவு முடித்தோம்...
கல்தோசை, ரெண்டு இட்லி தான்.. நன்றாக இருந்தது. சாப்பிட்டு முடித்த பின் அந்த கடையில் ஒரு போட்டி நடந்து கொண்டிருந்தது. அது அந்த சின்ன பையன் சுடும் நைஸ் தோசையை சேதம் செய்யாமல் திருப்ப வேண்டும் என்பதே. மாஸ்டர்க்கும் பையனுக்கும் பத்து ரூபாய் பந்தயம். பையன் நிறைய எண்ணெய் ஊற்றினான்...ஜெயித்து விடுவான் என்று நினைத்தேன்..ஆனால்
கோட்டை விட்டுவிட்டான்....!!செம்பரபாக்கம் ஏரியை ரொம்ப நாளாக பார்க்க வேண்டும் என்ற ஆசை, அது அன்று தான் நிறைவேறியது. ஆனா அதை அடையும் ரோட் தான் பயங்கரமா இருந்தது.ஏரியின் அழகை ரசித்தவாறு வண்டியில் சென்றோம். செம சீனாக இருந்தது.அங்கே சிலர் மீன் விற்று கொண்டும் சிலர் ஒரு சின்ன துடுப்பில் ஏரியில் மீன் பிடித்து கொண்டும் இருந்தனர். இயற்கை அழகை ரசித்தப்படியே வீடு வந்து சேர்ந்தோம்....

அடுத்ததா வல்லக்கோட்டை போற பிளான் போட்டிருக்கோம்...
போயிட்டு வந்து பதிவு போடுறேன்...!! இந்த பதிவுக்கு உங்கள்
ஆதரவை எதிர்ப்பார்க்கும்....


ஜெட்லி...(சரவணா...)

Friday, June 25, 2010

களவாணி பயபுள்ள....!!

களவாணி - விமர்சனம் மாதிரி,,,,சரி மாயாஜால் போய் ரொம்ப நாள் ஆச்சேனு களவாணி படம்
பார்க்க வண்டியை மாயாஜால் பக்கம் திருப்பினேன். பெட்ரோல்
போடுவோம் என்று கொட்டிவாக்கம் பங்கில் வண்டியை
நிறுத்தினேன். அங்கே பார்த்தா எனக்கு முன்னாடி நின்ன ஆளுக்கு
மூப்பது ரூபாயில் இருந்து பெட்ரோல் போட ஆரம்பித்து நூறில்
நிறுத்தி அந்த ஆளிடம் நூறு ரூபாய் வாங்கி கொண்டு, கையில்
இன்னைக்கு ஆட்டையை போட்டதை நோட் பண்ணான் பெட்ரோல்
பங்க் களவாணி. சொன்ன நம்ப மாட்டிங்க அவன் கை புல்லா
கிறுக்கல் தான்....!!


பெட்ரோல் ரொப்பி கொண்டு ஈ.சி.ஆரில் வண்டியை விரட்டினேன்,
சோளிங்கநல்லூர் கட்டிங் தாண்டியவுடன் அங்கே ஒரு களவாணி
கூட்டம் வர போற வண்டியை மறிச்சு ஆட்டையை போட்டுட்டு இருந்தாங்க.....அதாங்க டிராபிக் போலீஸ்... ஒரு வழியா மாயாஜால்
அடைஞ்சு அங்கே 120 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்து உள்ளே போய்
உட்கார்ந்தா எல்லாம் பழசு....இனிமே படம் மாயாஜால் படம் பார்க்க வந்தா ஸ்க்ரீன் 7 டு 10 இல் தான் போகணும் என்று முடிவெடுத்தேன்.


சற்குணம் இயக்கத்தில் ஓம்ப்ரகாஷ் ஒளிப்பதிவில் குமரன் இசையில்
வெளிவந்திருக்கும் படம் களவாணி. நம்ம பசங்க விமல் தான்
கதையின் நாயகன்.அவருக்கு அம்மாவாக சரண்யா அப்பாவாக
இளவரசு.புதுமுக நாயகி ஓவியா. கஞ்சாகருப்பு அப்புறம் வெண்ணிலா
படத்தில் பரோட்டா தின்பாரே அவர் என்று பெரிய கூட்டம் இருக்கிறது.


களவாணி டைட்டிலே சொல்லிடும் இது தான் கதையாக இருக்கும்
என்று. அது போல் தான் ஹீரோ சும்மா ஊர் சுற்றுகிறார். பக்கத்துக்கு
ஊருக்கும் இவுங்க ஊருக்கும் சண்டை. ஹீரோ பக்கத்துக்கு ஊரு
பொண்ணை லவ்வுகிறார் பின்னே என்ன நடக்காது என்பதே கதை
திரைக்கதை.


நான் கூட போஸ்டர் பார்த்தவுடன் திரும்பவும் கத்திய தூக்கிட்டு
ஹீரோ ஓட போறார் அப்படின்னு நினைச்சேன் ஆனா படம்
அப்படி இல்லை. விமல் நக்கல் கேரக்டர் பண்ணுவதில் கில்லாடியாக
தான் இருக்கிறார். அவர் சார் சிகரெட் கேட்டதும் முழு பாக்கெட்
தூக்கி போட்டுட்டு இல்லை என்று சொல்லி அவர் போனவுடன்
என் பணத்தை காலி பண்ணது பத்தாதா என்று சிகரெட் பாக்கெட்டை
மீண்டும் எடுப்பதில் இருந்தே ஆள் நக்கலை தொடங்கி விடுகிறார்.

ஓவியா..கதாநாயகி. நல்லா பண்ணியிருக்கு.ஆனா இந்த பொண்ணு
வர சீன் தான் கொஞ்சம் மொக்கையா இருக்கு. அதுவும் முதல்
சீன்லாம் ரொம்ப ஓவர்...ஏதோ மொட்டை உடைச்சு பார்த்தா
அவங்க 11 th பாஸ் ஆயிருமாம், அப்புறம் குளிச்ச பாவாடையோடு
ரோட் வரைக்கும் வரது எல்லாம் ரொம்ப குழந்தைதனம்.ஆனா
ரசிக்க முடியலை.


ஜோதிடம் மீது நம்பிக்கை வைத்து மகனுக்கு நேரம் சரியில்லை
அதனால் தான் இப்படி இருக்கான் என்று அளவுக்கு மீறி பாசம்
வைக்கும் அம்மாவாக சரண்யா. இவங்க வர்ற எல்லா காட்சியும்
நல்லா இருக்கு... குறிப்பா கடைசியில் விமல் கல்யாணம் பண்ணி
வீட்டுக்கு வரும் போது செம கலாட்டா பண்ணி இருப்பாங்க....


கண்டிக்கும் அப்பாவாக இளவரசு ஆனா பல சமயம் காமெடி
பீஸ் ஆகி விடுகிறார் மகனால். கஞ்சா கருப்பு பல இடங்களில்
சிரிக்க வைக்க முயற்சி செய்கிறார். ஆனால் சில இடங்களில்
கண்டிப்பாக சிரிப்பு வருகிறது. வெண்ணிலா பரோட்டாவை
இன்னும் யூஸ் பண்ணி இருக்கலாம் முதலில் படத்தில்
தோன்றுபவர் பின்பு இடைவெளி பின்பு தான் வருகிறார்.
இன்னொரு கேரக்டர் ஒருத்தர் வரார் கதாநாயகி அண்ணனாக
அவரை வில்லன்னு சொல்ல முடியாது அவரும் நல்லா பண்ணி இருக்கார்.


ரைட்...நாம மேட்டர்க்கு வருவோம்...படம் எப்படி...
முதல் பாதி கொஞ்சம் கலகலப்பா கொஞ்சம் போர்ஆ போச்சி...
ரெண்டாவது பாதியும் அதே மாதிரி தான் இதில் கலகலப்பு
கொஞ்சம் அதிகம் அவ்வளவு தான். பாட்டு எல்லாம் சின்னது
தான் உடனே முடிஞ்சுடுது.... படம் சூப்பர்னு சொல்ல முடியாது.
ஆனா ஓகே...டைம் பாஸ் ஆகலைனா கண்டிப்பா போலாம்.
மற்றபடி படத்தில் செண்டிமெண்ட், காட்டு கத்தல் என்று எதுவும்
இல்லை...!!

களவாணி - பார்க்கலாம்...!!


தியேட்டர் நொறுக்ஸ்:


# படம் ஆரம்பிக்கும் போது மொத்தம் என்னையும் சேர்த்து 12 பேர்
தான் இருந்தோம் அதிலும் தியேட்டர் ஊழியர்கள் நாலு பேர்
என்பது குறிப்பிடதக்கது. இருபது நிமிடம் கழித்து அது இருபது
பேர் எண்ணிக்கையானது. அதில் தியேட்டர் ஊழியர்கள் ஆறு பேர்.

# ஒரு காட்சியில் விமல் நாயகியை சைக்கிள்இல் முன்னாடி
வைத்து அழைத்து கொண்டு போவார்...அதை பார்த்த பின்
இருக்கை நண்பர்...
" என்னடா அந்த பொண்ணு குழந்தை மாதிரி இருக்கு..."

உடனே அவர் நண்பர்...
" விமல் இப்பவே அதுக்கு குழந்தை கொடுக்க ரெடியா இருக்காரு..
நீ வேற குழந்தையாம்"...# படத்தில் ஒரு சீன்ல கூட சீன் இல்லைங்க...ஏதோ ரெகார்ட்
டான்ஸ் காட்சி வரும். அதில் ஆடும் ரீட்டாவை பத்தி பெருமையாய்
பேசி கொள்வார்கள்...சரி குத்து பாட்டு ஒண்ணு வந்துடிச்சுனு
பார்த்தா....ரீட்டானு ஏதோ ஒரு கிழவியை கூட்டிட்டு வந்து
டான்ஸ் ஆட விட்டுடாங்க...கொடுமைடா சாமி...
(முமைத் கான் லாம் பாத்து எவ்ளோ நாள் ஆச்சு!!)

# படம் முடிந்ததும் வழக்கம் நம்ம ரேவதி ஹோட்டல் போய்
பரோட்டா சாப்பிட்டு கூடவே முட்டை லாபா ஒன்றையும்
டேஸ்ட் செய்தேன்....நீங்களும் மாயாஜால் போன ட்ரை
பண்ணி பாருங்க...

இந்த விமர்சனம் பல பேரை சென்று அடைய உங்கள் பொன்னான
வாக்கை போடுமாறு கேட்டுகொள்கிறேன்.

ஜெட்லி... (சரவணா...)

Wednesday, June 23, 2010

வேதம் - புதிது....!!

அனுஷ்காவின் வேதம்!!


வேதம் ஒகா அந்தமைனா மதுரமைனா அநுபூதி.. என்டுகன்டே
னா ஜீவிதம்லோ மொட்ட மொடடி சாரிக தெலுகு சித்ரம் சுசனு....!!

நண்பன் கிட்ட கிழே எழுதியுள்ளதை தெலுங்கில் எப்படி எழுதணும்னு கேட்டு கஷ்டப்பட்டு ட்ரை பண்ணேன்....தப்பா இருந்தா தெலுங்கு நண்பர்கள் மன்னிக்கவும்....!!

************************************

இதூ தெலுங்கிளு நேக்கு முதலு சித்ரம்!!

அகில உலக வரலாறில் முதல் முறையாக தியேட்டருக்கு சென்று முதல் தடவையா வாழ்க்கையில் ஒரு தெலுங்கு படம் பார்த்தேன். அதுவும் ஒரு நல்ல தெலுங்கு படம் பார்த்த திருப்தி கிடைத்தது. உனக்கு தெலுங்கு தெரியுமா?? அப்படின்னு நீங்க கேட்டா....சுத்தம்னு தான் சொல்லணும். ஆனா தெலுங்கில் என்ன படம் பண்றாங்க, யாரு டாப் ஹீரோ, என்ன ரீமேக் பண்றாங்க என்று ஓரளவுக்கு தெலுங்கு சினிமா அறிவு இருக்கிறது.ஆனா இந்த பாலகிருஷ்ணாவை பார்த்தால் தான் எனக்கு கொஞ்சம் பயம் அவரு தீடிர் தீடிர்னு கத்துவார் தொடையை தூக்கி சவால் விடுவார்....!
(எல்லா புகழும் ஜெமினி டி.வி.க்கே,,,)திங்கள்க்கிழமை நான் ராவண் ஹிந்தியில் பார்க்கிற பிளான் தான் வெள்ளிக்கிழமை ரெண்டு மணி வரைக்கும் இருந்தது...அப்புறம்
தான் உங்களுக்கு தெரியுமே...!! பேப்பரை பராக்கு பார்க்குற
நேரத்தில் என் கண்ணில் சிக்கியது வேதம் படத்தின் விளம்பரம்.
அனுஷ்காவோட படத்தை பார்த்ததும் அவர் என்னை தியேட்டருக்கு
அழைப்பது போல் இருந்தது. சரி ஏற்கனவே இது ஒரு நல்ல படம்
அப்படின்னு சொல்லி இருக்காங்க...அப்படின்னு கிளம்பி போய்ட்டேன்.

மொழியே தெரியலனாலும் படம் போர் அடிக்காம போகுது...
நல்ல படங்களை அதுவும் உணர்வுபூர்வமான படங்களை
ரசிக்க மொழி ஒரு தடையில்லை....!!அவங்க என்ன சொல்றாங்கனு
ஓரளவுக்கு யூகிக்க முடியுது. ஆனா தெலுங்கு தெரிஞ்சு இருந்தா
இந்த படம் கண்டிப்பா ஒரு விருந்து தான்.


இது தான் வேதம்.


மொத்தம் அஞ்சு கிளை கதைங்க...அந்த அஞ்சு கதையயும் கடைசியில் ஒரே இடத்தில் சந்திக்க வைக்கிறார் இயக்குனர் க்ரிஷ்.அல்லு அர்ஜுன், மனோஜ், சரண்யா மற்றும் கிழவர், அனுஷ்கா,அப்புறம் மனோஜ் பாஜ்பய். உண்மையிலே செம திரைக்கதை.மொழி தெரியாமலேயே போர் அடிக்காம போகுதுங்க.
படத்தில் எந்த ஒரு ஹீரோயிசம் இல்லை, அனல் பறக்கும் சண்டை காட்சிகள் இல்லை என்பதை கவனிக்க வேண்டும்.

அல்லு அர்ஜுன் ஆந்திராவில் ஸ்டார் வால்யு உள்ளவர், அவர் இந்த படத்தில் அதுவும் இந்த கதாப்பாத்திரத்தில் நடிப்பது நல்ல விஷயம். அதுவே நம்ம ஆளுங்க செய்வாங்களானு கேட்டா கஷ்டம் தான்... நேத்து வந்தவங்க கூட கையை காட்டி பஞ்ச் பேசி மக்களை டிஞ்சர் போட வைக்கவே விரும்புகிறார்கள். இந்த படத்தை பார்த்தாவது திருந்துவாங்களா
நம்ம ஊரு தளபதிகள்...?மனோஜ், நம்ம மோகன்பாபு பையன்.இவரு நடிச்ச டப்பிங் படம் என்னை தெரியுமா?? என்ற படத்தை சாந்தியில் பார்த்து இருக்கிறேன். பார்க்க போன காரணம் சிம்பு பாடிய பாடலும் ரியா சென்னும் தான் என்றாலும் படம் பார்த்த பின் தான் தெரிந்தது ஏன் டைட்டில் என்னை தெரியுமானு வச்சி இருக்காங்கனு.... என்னை தெரியுமா இதுவரைக்கும் நான் நடிச்ச படம் எதுவுமே ஒடனதில்லைனு தமிழ் ரசிகர்களுக்கு அடையாளம் சொல்ல வந்த படம் தான் அது என்று. ஆனால் இந்த படத்தில் நன்றாவே நடித்து நல்ல கேரக்டர் பண்ணி இருக்கிறார். கூட வர நம்ம லேகா வாஷிங்டன் கொள்ளை அழகு!!
அனுஷ்கா...ஐயோ என்ன சொல்றதுனே தெரியலைங்க.அனுஷ்கா விபச்சாரியாக செம சீன் காட்டி இருக்காங்க அதாவது சீனா நடிச்சு இருக்காங்கனு சொல்றேன். அனுஷ்கா செம ரோல்...!! அனுஷ்கா ரசிகர்கள் கண்டிப்பா பார்க்கவேண்டிய படமிது. மிஸ் பண்ணிடாதிங்க மக்களே!!


நம்ம ஊரு சரண்யா பொன்வண்ணன் வழக்கம் போல் பிள்ளைக்கு
ஏங்கும் அம்மாவாக நடித்து இருக்கிறார். அப்புறம் இந்த மனோஜ்
பாஜ்பய்யை ஏன் இன்னும் நம்ம தமிழ் சினிமாகாரங்க இவரை யூஸ்
பண்ணலனு தெரியல. நல்ல நடிகர் அவரை தமிழ் சினிமா யூஸ் வேண்டும்.

வேதம் படத்தில் மூணு சீன்ல கண்ணு கலங்கிடுச்சுங்க...
குறிப்பா அல்லு அர்ஜுன் பணத்தை திருடி அதை வைக்கும் போது
நடக்கும் காட்சிகள், கடைசியில் இருவரும் இறக்கும் காட்சி, அதுக்கு அப்புறம் மொழியே தெரியாம பீல் பண்றியே ஜெட்லினு சொல்லிட்டு அதுக்கு ஒருக்கா நானே பீல் பண்ணிக்கிட்டேன்... என்பதை இங்கு தெரிவித்து கொள்கிறேன் யுவர் ஆனர்!!


இந்த படத்தை தமிழ் வசனத்தில் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. ரீமேக் எல்லாம் பண்ண வேண்டாம்.டப்பிங் பண்ணி ரீலீஸ் பண்ணாலே போதும். இங்கே ரீமேக் பண்ண இன்னும் ரெண்டு மூணு வருஷம் ஆகும். அதுக்குள்ள இதில் உள்ள சீனைஎல்லாம் குட்டி படம் போல் பல படத்தில் வந்து விடும் அபாயம் இருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.ஏன்டா...தமிழ் படத்தை மொக்கைனு சொல்லிட்டு தெலுங்கு
படத்தை பாராட்டுரியேனு நீயெல்லாம் தமிழனா நீங்க கேட்டா...
ஐயோ நான் தமிழன்ங்கோ...நான் தமிழன்...அய்யோயோ நான்
தமிழன்ங்கோ...!!வேதம் - அந்தமைனா சித்ரம்!!


இந்த விமர்சனம் மாதிரி பிடித்து இருந்தால் ஓட்டு போட்டு உங்கள்
ஆதரவை தெரிவிக்கவும்...!! நன்றி...

ஜெட்லி...(சரவணா...)

Friday, June 18, 2010

ராவணன் - சைடு பார்வை.

ராவணன்....


ரெண்டு நாள் முன்னாடி ஆன்லைன்ல உட்கார்ந்து எந்த தியேட்டர்
புக் பண்ணலாம்னு பார்த்தப்போ நமக்கு சாந்தி தாங்க மாட்டிச்சு.
அறுபது ரூபாய் டிக்கெட்டை 150 க்கும் எண்பது ரூபாய் டிக்கெட்டை
இருநூறுக்கும் விற்று கொண்டிருந்தார்கள்.

ராவணன் படத்தில் என்ன இருக்கு??

ராவணன் படம் ராமாயண கதை தான் அப்படின்னு உங்க எல்லோருக்கும் தெரிஞ்சு இருக்கும். எனக்கும் ராமாயணம் கதை தெரியும் ஆனா இது அந்த காண்டம் இது இந்த காண்டம்னு எல்லாம் தெரியாது....அதனால நான் இங்க ராமயணத்தை பத்தி பேச போறது இல்லை...!!

நாம இங்க சென்னையில் காஞ்சி கருவாட இருக்கோம் ஆனா படத்தில் லோகேசன் ஒண்ணும் ஒண்ணும் செம...கடைசியில் அந்த பாலம் காட்சி செம.அப்புறம் அந்த தூம்பி மூலம் அனைவரையும் காட்டுவது...எல்லாம் செம...சந்தோஷ் சிவனும் மணிகண்டனும் நம்மை வேறு உலகுக்கு அழைத்து போக முயற்சித்தாலும் ஆனா கதை ஓட்டம் போக விட மாட்டேன் என்கிறது என்பது தான் உண்மை.விக்ரம், சூப்பர்ஆ பண்ணி இருக்காரு...ஆனா சில சமயம் இவரு
செய்யும் சேஷ்டைகள் வேறு மாதிரி எண்ண வைக்கிறது.
ப்ரிதிவ்ராஜ், ஓகே...கம்பீரமா இருக்கிறார். பிரபு, சில காட்சிகளில்
சிரிப்பு மூட்டுகிறார். கார்த்திக், இவர் தான் அனுமார் கேரக்டர்னு
சொல்லி மரத்துக்கு மரம் தாவி காட்டுகிறார்...வேற ஒண்ணும்
செய்யல்லை....ப்ரியாமணிக்கு பருத்திவீரன்க்கு பிறகு மீண்டும்
கேங் ரேப் அமைஞ்சுருக்கு... ரஞ்சிதாக்கு இருந்த வசன காட்சிகளை கட் செய்து விட்டார்கள் என்று புரிகிறது.முன்னா, சமாதானம்
செய்ய போகும் காட்சியில் மிளிர்கிறார்..அப்புறம் ஒண்ணு நான் மணி ரத்னம் எதிர்ப்பாளன் அல்ல
என்பதை சொல்லி கொள்ள விரும்புகிறேன். ராவணன் படத்தில்
மணி மற்றும் விக்ரம் இன்னும் பல பேரின் உழைப்பு தெரிந்தாலும்
படம் பார்க்கும் போது எந்த ஒரு பீலிங்க்ஸும் எனக்கு வரவில்லை,
சில காட்சிகள் தவிர. அதாவது படத்தில் ஒரு உயிரோட்டம், சுவாரசியம், அடுத்தது என்ன நடக்கும் அப்படின்னு ஒரு எதிர்ப்பார்ப்பு
இல்லாமலே படம் போகிறது என்பது என் பீலிங்க்ஸ்.இங்க நான்
ஒண்ணும் சொல்லி கொள்ள விரும்பிகிறேன்...

"ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு பீலிங்க்ஸ்"....

மணி ரத்னம் மேல எனக்கு ரொம்ப கோபம்ங்க....அட அது ஒண்ணும் இல்லைங்க. ஐஸ்வர்யா கண்ணு பத்தி நான் என்ன சொல்றது...
ஆனா கொஞ்சம் கெழடு தட்டிடுச்சுனு தான் சொல்லணும்.எனக்கு ஒரு கேள்வி மட்டும் தான் " எந்த இந்தியா குடும்ப பெண்ணாவது மூன்றாம் மனிதர்(ஜான் விஜய்) வீட்டுக்கு வரும் போது லோவில் டிரஸ் போட்டு மார்பை காட்டி கொண்டி இருப்பாளா??..." எதுக்கு இந்த மாதிரி ஒரு காட்சி வைக்கணும்.....(ஏன்ப்பா சீன் இல்லைனாலும் கேள்வி கேக்குற.. இருந்தாலும் கேள்வி கேக்குற...அப்படின்னு நினைக்கிறிங்களா...ரைட் ப்ரீயா விடுங்க...!!)படத்தில் எனக்கு சரியா சில வசனங்கள் புரியலை...ஆனா சுஹாசினி
வசனம் ஒண்ணும் அவ்வளவோ சொல்றது ஒண்ணும் இல்லை.
முதல் பாதி ஒரு எதிர்ப்பார்ப்பில் வேகமா போன மாதிரி இருந்தது...
ரெண்டாவது பாதியும் அப்படியே இருந்தது...ஆனா படம் ஓடுன
டைம் ரெண்டு மணி நேரம் பத்து நிமிடம் என்றாலும் படம்
அலுப்பை கொடுக்கிறது என்பது தான் உண்மை.தமிழில் பார்த்துட்டு ஹிந்தியில் பார்க்கணும்னு நினைச்சேன்...இப்போ அந்த எண்ணத்தை கை விட்டுடேன்....

இது உலக படம் இல்ல மணி படம், உன்னை மாதிரி மசாலா படம் பாக்குறவனுக்கு என்ன தெரியும் அப்படினு சொல்றவங்களுக்கு ஒரு பெரிய கும்பிடு!!!

நாம தியேட்டரில் என்ன நடந்ததுனு பார்ப்போம்.....


தியேட்டர் நொறுக்ஸ்:


# சத்யம் தியேட்டரில் பொதுமக்களுக்கு முதல் மூணு நாளைக்கு டிக்கெட் ஓபன் பண்ணவே இல்லை..பல்க் புக்கிங் அப்படின்னு கம்பெனிக்கும் F.M. க்கும் கொடுத்து அவங்க ஒரு அட்டு கேள்வியே கேட்டு, பல எஸ்.எம்.எஸ் மூலம் சம்பாதித்து.... டிக்கெட் கொடுக்குறாங்க....இதுக்கும் பிளாக் டிக்கெட்க்கும் என்ன வித்தியாசம்??சத்யம் மட்டும் இல்ல பல தியேட்டர்கள் இதை தான் செய்கிறார்கள்.... யார் இதை கேட்கிறது??

# ரஞ்சிதா லைட்ஆ தலை காட்டினாலே தியேட்டரில் செம சவுண்ட்..
நல்ல வேளை வசனம் எதுவும் பேசவில்லை....

# படம் திருநெல்வேலி பாஷை என்பதால்..லே லே,,என்று வரும்..
ஒரு காட்சியில் இவனை எங்கே சுடுறதுலே என்று கேட்பார்...
இங்கே நம்ம ஆளு "அவனை #$#$#$ சுடுலே....." என்றவுடன்
தியேட்டரில் அதிர்வலை கிளம்பியது....

# இன்டெர்வேல் அப்போ..பல பேர்...படம் புரியல....என்று பேசி கொண்டிருந்தனர்.... ஒருவர் 150 ரூபாய் தண்டம் என்று
புலம்பியப்படி சென்றார்....

# படத்தில் கடைசி காட்சியில் தியேட்டரில் செம ரெஸ்பான்ஸ்...
அட நீங்க வேற...கடைசி கட்ட காட்சியில் ஐஸ்வர்யாவின் தரிசனத்துக்கு தான் அந்த கத்தல்... ரெண்டு பேர் கடைசி சீன் சூப்பர் என்று பேசிகொண்டே வந்தனர்....

# பார்க்கிங்கில் வண்டி எடுக்கும் போது ஒருவரிடம் படம்
எப்படி என்று கேட்டதற்கு...நானுறு ரூபாய் சார்...ஒரே புல்
வாங்கிட்டு வீட்ல தூங்கிருப்பேன்... என்றார்.

# சரி..நடுவயது நபரிடம் படம் எப்படி இருக்குனு கேட்போம் என்று
சும்மா கேட்டேன்....அவரு சொன்ன பதில்ல எனக்கு குபுக்னு சிரிப்பு
வந்திருச்சு..... "உசுரே போகுதே...."னு சொன்னார். சத்தியமா அந்த மனுஷன் இவ்ளோ பீல் பண்ணி இருப்பாருனு நான் நினைச்சு பார்க்கலாங்க...

இந்த விமர்சனம் மாதிரி பல பேரை சென்று அடைய பண்ண
வேண்டியதை பண்ணுங்க.....

ஜெட்லி....(சரவணா....)

Tuesday, June 15, 2010

துரோகம் நடந்தது என்ன?? - நேரடி ரிப்போர்ட்.

துரோகம் நடந்தது என்ன?? - அட்டு விமர்சனம்ரெண்டு மூணு நாளா மனசு கேக்கலைங்க.....அது என்னன்னா
ராஜலீலை படம் பார்க்காமலேயே மூணு நாலு பதிவு ஒட்டிடோம்..
ஆனா அந்த மாதிரி துரோகம் நடந்தது என்ன படத்துக்கு பண்ண
கூடாது அதனால உடனடியா அதை பார்த்து மக்களுக்கு கொண்டு
சேர்க்கணும் அப்படின்னு எங்க பக்கத்துக்கு வுட்டு ஆயா கண்டிசன்
போட்டுடாங்க....அதை மீற முடியாம ஆயா சொல்லை தட்டமால் நேற்று அந்த மாபெரும் காவியத்தை பார்த்துட்டேன்.


நான் அந்த கடவுள் இருக்குறதை ஒத்துக்கிறேன்ங்க...
காரணம்..மூணு மணி ஷோக்கு சிம்போனி தியேட்டருக்கு
போய்க்கிட்டு இருக்கும் போது தீடிர்னு மணி 2.45 க்கு வண்டி
பஞ்சர் ஆயிடுச்சு....அய்யோயோ மக்களுக்கு இந்த படத்தை
பார்த்து யாரு சொல்றது...இப்படி ஆயிடுச்சேனு ரொம்ப
வருத்தப்பட்டேன்.அடிச்சு புடிச்சு பஞ்சர் கடையை தேடி பஞ்சர்
ஓட்டிட்டு தியேட்டருக்கு வந்தா படம் 3.15 க்கு தான் போட்டாங்க. ஆனா படத்தை பார்த்த பிறகு தான் பஞ்சர் மேட்டர் நினைவு வந்தது...அந்த கடவுள் தான் நான் படம் பார்க்க கூடாது என்று
ஆணி ரூபத்தில் வந்து என் டயரில் குத்தினார் என்று.....!!

துரோகம் நடக்காதது என்ன...??

எனக்கு அட்டு படத்தை விமர்சனம் பண்றது ஒண்ணும் புதுசில்லை..
ஏற்கனவே வேலுபிரபாகரனின் காதல் கதையை விமர்சனம் பண்ணி
இருக்கேன்.சரி துரோகம் என்ன கதைனு பார்ப்போம்....

சுரேஷ்னு ஒரு பையனை ஹாஸ்பிட்டலில் படுக்க வைத்து இவனுக்கு என்ன ஆச்சு என்று கதை சொல்கிறார் ஒருவர்... அதாவது சுரேஷ் முதலில் வீட்டு வேலைக்காரியிடம் சில்மிஷம் பண்ணுகிறார்...அப்புறம் வெளியே ரம்யா ஸ்ரீ என்ற கிழவியிடம் மசாஜ் பண்ணுகிறார்...அப்புறம் போலீஸ் மனைவி மீது ஆசை படுகிறார்....அப்புறம் திரும்பவும் ஒரு ரவுண்ட்...மீண்டும் வேலைக்காரி ஆனால் அவள் போலீஸ் அதிகாரியாம்....மீண்டும் கிழ ரம்யாஸ்ரீ ஒரு பாட்டு...அப்புறம் போலீஸ் மனைவியை கடத்தி...போலீஸ் கணவன் வந்து மீட்கிறான்....இது தான் படத்தோட கதை திரைக்கதை எடிட்டிங் எல்லாம்.....

ஏன்டா அட்டு படத்தை பார்த்துட்டு இப்படி கதை சொல்றியேனு
யாராவது நினைச்சா அது ரொம்ப தப்பு....இந்த கதையை ஸ்க்ரீனில்
சொன்ன அந்த ஒருவர் யார் தெரியுமா?? டெல்லி கணேஷ்.... அவரே இந்த அட்டு கதையை சொல்லும்போது நான் என்ன பண்ண முடியும்.


யாரு உண்மையா துரோகம் பண்ணா??

படத்தில் யாரும் யாருக்கும் துரோகம் பண்ண மாதிரி தெரியலை. என்னை கேட்டா இந்த படத்தோட டைரக்டர் தான் படம் பார்த்த 200 மக்களுக்கு துரோகம் பண்ணிட்டார். படத்தில் உருப்படியா ஒரு சீன் கூட இல்லங்க,நல்ல சீனையும் சேர்த்துதான் சொல்றேன்.இந்த படத்தை பார்த்தா ஒரு படத்தை எப்படி எடுக்க கூடாது என்று கற்று கொள்ளலாம்.அதுவும் இது அட்டு படம் அதை கூட ஒழுங்கா எடுக்கவில்லை.படத்தில் ஒரு மண்ணும் இல்லைனு யாரும் சொல்லகூடாதுனு டைரக்டர் அப்ப அப்ப பில்டிங் கட்டற இடத்தில்
இருக்கும் மண்ணை காட்டுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது!!


சுவாதி மற்றும் லீனா இருவரும் ஓரளவு வெளிபடியுள்ளனர், நடிப்பை அல்ல. போலீஸ் ஆக வரும் ஆள் அட்டு படத்துக்கு தகுந்த ஆள் இல்லை.இதுவே நம்ம 'வெற்றி' கணேசாக இருந்தால் பூந்து விளையாடி இருப்பார். படத்தின் இசை நான் சிறு வயதில் பார்த்தா மலையாள பிட்டு படங்களை நினைவுப்படுத்தின....சரிங்க இதுக்கு அப்புறம் தியேட்டரில் நடந்தது என்னனு பார்ப்போம்.....


இந்த படத்தை பார்த்துட்டு நம்ம வெண்ணிற ஆடை மூர்த்தி வெளியே வரும் போது டைரக்டர் கிட்ட பேசியிருந்தார்னா...

"டேய்...த்த்ஹம்ப்பி....இந்த படத்தை சென்சர் போர்டு பார்த்துட்டு
A சர்டிபிகேட் கொடுத்தாங்களா...இல்ல நீங்க கேட்டு வாங்குனீகலான்னு எனக்கு தெரிஞ்சக்கானும்..படத்தில் ஒண்ணும் பெருசா காட்டலையே... ப்ப்ப்பூஉ... இதுக்கு தான் ஊருக்கு ஒதுக்கு புறமா இருக்குற கொட்டாய்க்கு போனும்ங்கறது...."துரோகம் நடந்தது என்ன?? - ஒன்னுமே நடக்கலையே....


தியேட்டர் நொறுக்ஸ்:

# வூட்லண்ட்ஸ் சிம்போனியில் ஆங்கில டப்பிங் படத்துக்கு கூட
இவ்ளோ கூட்டம் வர வாய்ப்பில்லை...ஆனா இந்த படத்துக்கு
அமோக ஆதரவு..இளமும் கிழமும் படையெடுத்து அரங்கை
நிரப்பி இருந்தார்கள்.(படம் சண்டே ஹவுஸ்புல்லாம்...!!)

# இன்டெர்வல் டைமில் ஒருவர் தன் நண்பரிடம்

"மச்சான் ஒழுங்கா அறுபது ரூபாய்க்கு இன்னொரு குவட்டாரு
சாப்பிட்டிருக்கலாம் டா ..."

வேறு ஒரு நபர் புலம்பியபடி "ச்சே காதல் கதை படம் அளவுக்கு
கூட இல்லையே" என்று வருத்ததுடன் கதவை நோக்கி போனார்.

# என் பக்கத்துக்கு இருக்கை நபருக்கு அடிக்கடி செல் அடித்து
கொண்டு இருந்தது....அவரும் சீன் வரும் சீன் வரும் என்று செல்லை
மியுட் பண்ணார் ஆனால் கடைசி வரை எதுவும் வராததால் கடுப்பாகி எழுந்து போய் போன் பேச போனார்.

# இன்டெர்வல் வரையே மொக்கை தாங்காமல் பல தலைகள்
கவிழ்ந்தன....

# ஒரு ஒரு காட்சியும் பத்து நிமிட நீளம்...மியூசிக் டைரக்டர் அவர்கிட்ட இருக்குற எல்லா வாத்தியத்திலும் அந்த பத்து நிமிஷத்தில் பேக்கிரௌண்ட் மியூசிக் போட்டு விடுவார்.... ஸ்ஸப்பா.... அந்த பையனையும் பொண்ணையும் கிட்டதட்ட எந்த ரியாக்சணும் இல்லாம பத்து தடவை மாத்தி மாத்தி காட்டுவார்கள்... அப்போது பின்னாடி இருந்த ஆள்....
" டேய் போதும்டா....இல்லனா நான் ஸ்க்ரீன் உள்ள வந்து
அடிப்பேன்....!!"
என்றவுடன் ஏரியா கொஞ்சம் கலகலப்பு ஆனது.


# படத்தில் ஒரே சந்தோசம் தியேட்டரில் ஏ.சி. போட்டது தான்..
நான் காதல் கதை படத்தை இங்கு தான் பார்த்தேன் அப்போ
ஏ.சி. போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த அட்டு படம் விமர்சனத்தை பல பேருக்கு சென்று விழிப்புணர்வு அடைய....நீங்க என்ன செய்ய முடியுமோ செய்யுங்க.....


ஜெட்லி.... (சரவணா....)

Saturday, June 12, 2010

ஓர் இரவு !! வியு பாயிண்ட் விமர்சனம்.

ஓர் இரவு !!

மணி காலையிலே 11.20. போர் அடிக்குது...ஓர் இரவு படம் நைட் ஷோ போற ஐடியா தான் வச்சிருக்கேன்.ஆனா ரொம்ப போர் அடிக்குது... துரோகம் நடந்தது என்ன? படத்தை கூட போறதுக்குள்ள ஸ்டார்ட் பண்ணிடுவாங்கன்னு நேரா ஓர் இரவு படம் பார்க்க அபிராமி மெகாமால்க்கு வண்டியை விரட்டினேன். பைக் பார்க்கிங் டோக்கன் கொடுத்தவுடன் பைக் நிறுத்தும் இடத்தில் பைக்கை திருப்பி நிறுத்த சொன்னான் செக்யூரிட்டி.மெகாமால் வாயிலில் சிலர் ஏதோ பேப்பரில் நிரப்பி கொண்டு இருந்தனர்.அதையும் தாண்டி உள்ளே வந்தவுடன் சாக்லேட் கொட்டி கொண்டிருந்த கடையில் சாப்பிட்டு கொண்டிருந்த ஒரு பெண் சூப்பர்ஆக இருந்தாள்.


மாடிப்படி ஏறி டிக்கெட் கவுன்டருக்கு செல்லும் வழியில் கிளீனர் தரையை துடைத்து கொண்டிருந்தான்.அங்கே இருக்கும் மேற்பார்வையாளர் வருபவர்களை வேறு வழியில் சென்று டிக்கெட் எடுக்க சொன்னார்.கொஞ்சம் சுற்றி போய் டிக்கெட் எடுத்தேன்.E - 8 தான் சீட் நம்பர்.படம் ஆரம்பிக்க இருபது நிமிடம் இருந்தது.அப்படியே இன்னொருக்கா போய் பராக்க பார்த்துட்டு வந்துடுவோம் என்று ஒரு ரவுண்ட் கிளம்பினேன்.
(பராக்க பார்த்தது பத்தி எல்லாம் சொன்னா ரொம்ப போர் அடிக்கும்ங்க...இந்த படத்தோட முதல் இருபது நிமிஷம் மாதிரி!!)


டிக்கெட் கிழித்து பாதி டிக்கெட்டை கையில் கொடுத்து ரெண்டாவது
கதவு வழியா போங்க என்றான் டிக்கெட் கிழிப்பவன். சத்தியமா
இவ்ளோ கேவலமா தியேட்டர் இருக்கும்னு நினைச்சு பார்க்கலாங்க..
ஏதோ ஒரு அட்டு தியேட்டருக்குள் நுழைந்த உணர்வு தான் வந்தது.
பால அபிராமி ... தொண்ணுறு ரூபாய் டிக்கெட்...சத்தியமா இனிமே
இங்கே எந்திரன் படம் டிக்கெட் கிடைச்சா கூட வந்து பார்க்க மாட்டேன்ங்க....ஏ.சி. மட்டும் தான் நல்லா இருந்தது.அப்புறம் சவுண்ட்
கூட நல்லா தான் இருந்தது
.(ஏன்டா..எத்தனை அட்டு தியேட்டர்ல
படம் பார்க்குற...அதுக்கு இது பரவாயில்லைனு சொல்றீங்களா...
ரைட்டு..!!)

சரி சரி...சத்தம் போடாதிங்க... படம் ஆரம்பிக்க போறாங்க...
மிஸ்டிரி டி.வி.யின் ஒரு நிகழ்ச்சியின் 99 வது எபிசொட் ஆரம்பிக்குது... "என்னப்பா டி.வி. சீரியல் போடுறாங்க...." என்று பின்னால் இருந்து குரல் வந்தது. டி.வி.யில் வரும் பெண் அமானுஷ்யங்கள் பற்றி பேச ஆரம்பித்து நகுலன் என்ற ஆவி ஆராய்ச்சியாளர் கொலை சம்பந்தமாக பேச ஆரம்பிக்கிறாள்.முதலில் கொஞ்சம் மெதுவாகத்தான் போச்சு.அப்புறம் நகுலனே நான் செத்த கதையை சொல்ல போறேன் என்றதும் படம்
கொஞ்சம் சூடு பிடிச்சுது....நகுலனின் வியு பாயிண்ட்இல் படம்
நகர்ந்தது வித்தியாசமாதான் இருந்தது.....


கிக்கி...பிக்கஈ..கிக்கி.. அப்படின்னு உள்ளே மூணு பொண்ணுங்க
படம் பார்க்க வந்தாங்க.அடுத்த முனையில் மூவரும் அமர்ந்தனர். வந்ததில் இருந்து ஒரே சிரிப்பு தான்.... irritating .... "ஏய் பேய் படம்டி..." உடனே சிரிப்பு சத்தம். நகுல் ஓட்டும் கார் டயர் பஞ்சர் ஆகிவிடும் போது சவுண்ட் கொஞ்சம் பலமாவே வந்தது...அதுக்கும் சிரிப்புதான்....


நகுல் பார்க்குற இடத்தை எல்லாம் நாமும் பார்க்குறோம்...
அந்த கோவர்தனை மீட் செய்யும் பாலம் மற்றும் அங்கிருந்து
அவர் பார்க்கும் இடங்கள் கொள்ளை அழகு...நகுல் குன்னூரில்
ஆவி இருப்பதாக நம்பப்படும் வீட்டை அடைந்ததும் நமக்குள்ளும்
பயம் தொத்தி கொள்கிறது. தீடிர்னு க்ரீச்..னு சவுண்ட் கேட்டது
நான் கொஞ்சம் டெர்ரர் ஆயிட்டேன்ங்க...பக்கத்தில் உட்கார்ந்த நபர்
கண்டுப்பிடிக்க கூடாதுன்னு நினைச்சு அப்படியே கால் மேல
கால் போட்டு பாவ்லா பண்ணினேன்.....


சரிங்க வியு பாயிண்ட் போதும்னு நினைக்கிறேன்....எழுதுனா
இன்னும் பத்து பாரா போகும் போல....ரைட் நாம நேரா மேட்டர்க்கு
வருவோம்....
இந்த படம் வழக்கமான தமிழ் படம் இல்லை.ஏதோ வியு பாயிண்ட்
படம்னு சொன்னாங்க...புது அனுபவமா தான் இருந்தது. முதலில்
கொஞ்சம் ஸ்க்ரீனில் க்ளேர்லாம் அடிச்சது கதவை திறந்து வச்சிட்டாங்களோ என்று கதவையெல்லாம் பார்த்தேன் மூடி தான் இருந்துது. படம் புல்லா இப்படி தான் இருக்குமோ என்று பயந்துட்டேன், நல்ல வேளை அப்படி இல்லை.


ஒண்ணும் மட்டும் சொல்ல முடியும் இது வழக்கமா வர்ற
சராசரி தமிழ் படம் இல்லை. அதே மாதிரி இது ஒரு படமா
இல்ல டாகுமெண்டரியானு கூட எனக்கு சரிவர தெரியலை
என்பது தான் உண்மை.மற்றபடி இது ஒரு பாராட்டப்பட
வேண்டிய முயற்சி தான்.படம் பார்க்கும் போது சில இடங்களில்
அலுப்பு தட்டுகிறது. சில வசனங்கள் வேற சரியா கேட்கலை..
முக்கியமா அந்த காதலி டி.வி. நிகழ்ச்சிக்கு பேட்டி கொடுக்கும்
சீனை சொல்லலாம்.


கடைசி கட்ட காட்சிகளில் பரப்பரப்பு நம்மையும் தொத்தி கொள்கிறது..அதற்கு ஏற்ற மாதிரி தேவையான இடங்களில் பின்னணி இசையில் வெங்கட் பிரபு சங்கர் கலக்கி இருக்கிறார்.சதீஷ், இவர் தான் படத்தின் நாயகனும் ஒளிப்பதிவாளரும் கூட.இவர் குரலா தான் இது...மிர்ச்சி சிவா வாய்ஸ் modulation மாதிரி இருந்தது. மூவர் கூட்டணி தான் இயக்குனர்கள் (ஹரிஷ் நாராயண் , ஹரி ஷங்கர், கிருஷ்ண சேகர்).ஆவியை காட்டாமலே ஒரு
த்ரில்லிங் கொடுத்து இருக்காங்க....எனக்கு என்னமோ ஒரு முழு படத்தை பார்த்த திருப்தி கிடைக்கல..
காரணம் பல வருடமா தமிழ் சினிமா பார்த்து கேட்டு போய்ட்டேன்..
ஒரு க்நாட் இருந்தா அதை கடைசியில் அவிழ்ப்பது தான் நான்
பார்த்து கொண்டிருக்கும் சினிமா. கிளைமாக்ஸ்ல அவங்களே சொல்லிடுறாங்க அமானுஷ்ய எல்லையை தாண்டினால் விளைவு வேறு மாதிரியா இருக்கும்னு....இருந்தாலும் அந்த வீட்டில் அப்படி என்ன இருக்கிறது?? முதல்ல போன மூணு பேரு சாக காரணம் என்ன?? (அந்த ஆவியை வரவழைத்தது தவிர) . ஏன் கோவர்தன் அந்த வீட்டை பார்த்து மிரள்றார்...ஏன் ரெண்டு தடவையும் வேறு வேறு சாவி கொடுக்கிறார்??...இந்த கேள்விகளை நான் கேட்கணும்னு கேட்கல....ஏதோ தோணிச்சு....எனக்கு ஏற்பட்ட சந்தேகம் குழந்தை தனமாகவும் இருக்கலாம்....!!(ஏன்னா எனக்கு குழந்தை மனசு).


மாற்று சினிமாவை எதிர்ப்பார்க்கும் ஒருவனுக்கு 'ஓர் இரவு' படம் நிச்சயமாய் ஒரு விருந்து தான்.ஆனால் இது ஒரு சராசரி ரசிகனை திருப்திப்படுத்துமா என்று கேட்டால் கஷ்டம் தான். அதே போல் படம் ஓடுவது ஒரு மணி நேரம் அம்பது நிமிடங்கள் தான் என்றாலும் ஒரு நீண்ட பயணத்தை கொடுக்கிறது....
ரெண்டாவது பாதியில் அவர் அந்த மாடிப்படி ரூமில் இருக்கும்
காட்சிகள்...அந்த ஸ்மைலி பந்தை மேல போட்டவுடன் திரும்ப வராதது எல்லாம் செம...!! பவுடர் அடிச்சு பேயை காட்டி முகம் சுளிக்க வைக்கும் படம் எடுப்பவர்கள் பார்த்து திருந்தினால் சரி.. இதே குழுவினரிடம் இருந்து இது போன்று மேலும் பல நல்ல முயற்சிகளை எதிர்ப்பார்க்கிறேன்.....!!
இந்த விமர்சனம் மாதிரி உங்களுக்கு பிடித்து இருந்தால்
உங்கள் பொன்னான வாக்குகளை அள்ளி வழங்குமாறு கேட்டுகொள்கிறேன்.

நன்றி
ஜெட்லி...(சரவணா...)


Friday, June 11, 2010

தி கராத்தே கிட் (தி குங்க்பூ கிட்)!!

ஜாக்கியின் புதிய முகம்!!

"ஒடுங்க ஒடுங்க அது நம்மள தாக்க வருது....."

" தாக்குங்க...தாக்குங்க...அவங்களை விடாதிங்க ..."

இது மாதிரி வசனம் இல்லாமல் வந்திருக்கும் படம் தான்
தி கராத்தே கிட். பெயர் போடும் போதே ஜேடன் ஸ்மித்
பெயர் தான் முதலில் போடுவார்கள் பின் தான் ஜாக்கி சான்
பெயர் வரும். ஜாக்கி கிட்ட தட்ட இதில் ஒரு குணசித்திர
ரோல் மாதிரி தான் வருகிறார். ஒரே ஒரே சண்டை தான்
ஜாக்கிக்கு அதுவும் சின்ன பசங்களுடன்... நன்றாக கொஞ்சம்
வித்தியாசமாக தான் இருந்தது....!!ஜாக்கிசான் மாஸ்ஸை இன்று பைலட் தியேட்டரில் கண்டேன்.
நல்ல கூட்டம், படம் ஹவுஸ்புல். ஜாக்கி அவர்களின் அறிமுக
காட்சிக்கு விசில் மேல் விசில் பறந்து காதை கிழித்தது.....
நாம இதுவரைக்கும் ஜாக்கியை ஒரு சிஷ்யனாக பார்த்து இருக்கிறோம் fearless hyena, drunken master 1 and 2, young master இப்படி பல படம் சொல்லலாம்.... ஆனா இப்போ அவரு குருவா என்ன பண்ண போறார் என்பதில் ஜாக்கி ரசிகர்களுக்கு ஏக எதிர்ப்பார்ப்பு என்றே சொல்லவேண்டும்.


"நினைத்துபார்க்காத சவால்!

எதிர்ப்பார்க்காத குரு!"

இந்த இருவரியே படத்தின் கதையை சொல்லி விடும். ஆமாம்
ஜேடன் மற்றும் அவரது அம்மாவும் சீனா வருகிறார்கள். அங்கே
ஜேடன் உடன் சீனா பையன் ஒருவன் மோதுகிறான். ஜாக்கி
ஒரு தடவை ஜேடனை அவர்களிடம் இருந்து காப்பாற்றுகிறார்.
பின் ஒரு சாவல் அப்புறம் குருவாகிறார் ஜாக்கி...


சின்ன பசங்கள் சண்டை தானே என்று சாதரணமாக சொல்லிட
முடியாது. ஜேடன் முதலில் செம அடி வாங்குவார், பார்க்கவே
பாவமாக இருக்கும். அதே போல் அடிகொடுக்கும் சீனா பையனும்
செம பாடி லாங்வேஜ். இவங்க ரெண்டு பேர் சண்டைக்கும் காரணம்
ஒரு பெண். படத்தில் போர் அடிக்கும் காட்சினா அது ஜேடனும்
அந்த பொண்ணும் வர்ற காட்சிகள் தான். புள்ளைங்க பன்னண்டு
வயசிலயே லிப் கிஸ் அடிக்குதுங்க....!!


ஒரு காட்சியில்....
ஜாக்கி அவர்கள் குங்க்பூவை சண்டையை நிறுத்த தான் பயன்ப்படுத்த வேண்டும் என்று ஜேடனிடம் சொல்வார்.


உடனே ஜேடன் "அப்போ சண்டையே போட கூடாதுனா..?"


"பேச்சை குறைக்கணும்" என்று ஜாக்கி சொல்லும் சீனுக்கு செம
ரெஸ்பான்ஸ்....

அதே போல்...

"வாழ்க்கை சில சமயம் நம்மளை அடைச்சு வைச்சுடும்....
அதிலுருந்து வெளியில் வர்றதும் வராததும் நம்ம கைல தான்
இருக்கு..." என்று ஜாக்கி ஊருகி பேசும் காட்சி செம....

தமிழ் டப்பிங் பேசுகிறவர்கள் மற்றும் வசனம் எழுதுபவர்களை
கண்டிப்பாக பாராட்ட வேண்டும். அவர்களது பெயரை திரையில்
போட்டு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பது என் கருத்து.
இந்த படத்தில் வாழ்க்கைக்கு தேவையான பல விஷயங்களை
பட்டும் படாமலும் சொல்லி இருக்காங்க....அதே போல் ஜாக்கி
ஜேடனுக்கு அவனது ஜாக்கெட் மூலமாகவே குங்க்பூ கற்று தரும்
காட்சி சூப்பர்.

படம் கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரம் ஒடிச்சு...டைம் பாஸ் ஆனதே தெரியவில்லை. கடைசி குங்க்பூ டோர்னமென்ட் சீன் பார்க்கும் போது எனக்கு ஏனோ வெண்ணிலா கபடி குழு நினைவு வந்து போனது..... ஜாக்கிக்கு வித்தியாசமான ரோல் தான். என்ன அவர் அந்த எதிர் குங்க்பூ மாஸ்டர் கிட்ட ஒரு சண்டை போட்டிருக்கலாம் என்பது என் போன்ற ஜாக்கி ரசிகர்களின்
எதிர்ப்பார்ப்பு. படத்தை குடும்பத்துடன் ரசிக்கலாம்...

தியேட்டர் நொறுக்ஸ்:

# இன்டெர்வல்க்கு முன் ஜாக்கி ஜேடனுக்கு குங்க்பூ சொல்லிதர
அவன் போட்டு வரும் ஜாக்கெட்டை கழட்டி, கிழே போட்டு, மாட்ட
சொல்வார் இதை பல முறை செய்ய சொல்வார்...

இன்டெர்வெலில் நம்ம ஆளுங்க அவுங்க நண்பர்களை கலாய்க்க
"மச்சான் ஜாக்கெட்டை கழட்டு..."
"டேய் ஜாக்கெட்டை கழட்டு..." என்று ரவுசு விட ஆரம்பித்தனர்
.

# ஜாக்கி ஒரு உருக்கமான காட்சியில் தன் மனைவி பிள்ளைகள்
இறந்து விட்டார்கள் என்றும் அது இதே ஜூன் 8 இல் என்பார்....

கிழே இருந்து நம்மாளு " இன்னைக்கு ஜூன் 11 தல..." என்றவுடன்..

பக்கத்துக்கு இருக்கும் நண்பர் "அகராதி புடிச்ச பயபுள்ள...அவரே
பீல் பண்ணிட்டு இருக்காரு...இவன் வேற..."

# படம் முடித்து மயிலாப்பூர் தாண்டி மந்தைவெளி முழுவதும் செம
டிராபிக் சரி அப்படியே சாய்பாபா கோவில் வழியா அடையார் போய்டுலாம்னு போனேன்..... மேரிஸ் ரோட்டில் இருக்கும் ஒன்வேயில் தெரியாமல் போய்ட்டேன்..காரணம் அது ஒன் வே மாதிரியே இருக்காது...தீடிரென்று டீக்கடையில் இருந்த நபர் ரைட்
எடு ரைட் எடு என்றார்....பார்த்தால் கடைசியில் போலீஸ் வண்டி...
"அந்த நபருக்கு என் நன்றியை இங்கு தெரிவித்து கொள்கிறேன்.."!


# என்ன கொடுமை சார் இது...!! போஸ்டர் அடிச்சு ஓட்டு
கேட்குறாங்களே....நாமும் ட்ரை பண்ணுவோமா....இந்த விமர்சனத்துக்கு?? உங்கள் ஆதரவை அள்ளி தருமாறு
கேட்டு கொள்கிறேன்.....

நன்றி

ஜெட்லி...(சரவணா...)


Tuesday, June 8, 2010

காயத்ரியுடன் இரு அனுபவம்!!

காயத்ரியுடன் இரு அனுபவம்!!


ரெண்டு வாரம் முன்னாடி தாங்க தலைவர் சுஜாதா எழுதின கதை தொகுப்பு காயத்ரியை வாங்கி படிச்சேன்.மொத்தம் அஞ்சு கதை இருந்தது.முதல் கதை காயத்ரி கொஞ்சம் பெரிய கதைதான் என்றாலும் செம விறுவிறுப்பு. அதுவும் சுஜாதா அவர்கள் கதை சொல்லும் விதம் செம. இந்த கதை தினமணி கதிரில் 1976ல் தொடர்கதையாக வந்தது என்று தெரிந்துகொண்டேன்.அதன் பின் காயத்ரி 1977ல் படமாகவும் காட்சி தந்திருக்கிறாள். சுப்பர்ஸ்டார் ரஜினி தான் நடித்திருக்கிறார் ஹீரோவாக அல்ல வில்லனாக...!!


நான் எழுதபோவது விமர்சனம் அல்ல...காயத்ரியுடன் என் அனுபவம் மட்டுமே.அதாவது புத்தகம் மற்றும் படங்கள் எனக்கு தந்த ஆச்சரியங்களும் ஏமாற்றங்களும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் அவ்வளவே.

காயத்ரி கதை:

சுஜாதாக்கு காயத்ரி கதையில் அவருக்கே ஒரு ரோல் இருக்கும்.
அவரின் மூலமாகத்தான் கதையை நகர்த்துவார்.அதாவது மூர்
மார்க்கெட் சென்று அங்கு பழைய புத்தகத்தை வாங்கும் போது
தான் காயத்ரி எழுதிய சில குறிப்புகள் அடங்கிய நோட் புத்தகம்
கிடைக்கும்.பின்பு காயத்ரியின் கதையை அவள் எழுதிய அந்த
புத்தகத்தின் எழுத்துக்கள் மூலம் கதையை நகர்த்துவார்.
காயத்ரிக்கு ராஜரத்னம் என்பவருடன் திருமணம் ஆனதில்
இருந்து அங்கு நடக்கும் சில சம்பவங்கள் ராஜரத்னம் அவர்களின்
அக்கா,மற்றும் சமையல் அய்யரின் வினோத நடவடிக்கைகள்
குறித்து சுவாரசியத்துடன் கதை செல்லும்.

காயத்ரி வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத சூழலில் தன்னை யாராவது காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் "அவசரம் அவசியம்" என்று ஒரு நோட் புத்தகத்தில் தன் அனுபவத்தை எழுதுகிறாள்.பழைய பேப்பர்க்காரன் வரும் நேரம் பார்த்து தான் எழுதிய புத்தகத்தை நடுவில் வைத்து பழைய பேப்பர் கடையில் சேர்ந்து அது நம் எழுத்தாளரிடம் கிடைக்கிறது...அதன் பின் எழுத்தாளர் தன் நண்பன் வக்கீல் கணேஷ் மற்றும் அவரது உதவியாளர் வஸந்த் மூலம் எப்படி காயத்ரியை காப்பாற்றுகிறான் என்பதே சுஜாதா எழுதிய கதை.


சரி ராஜரத்னம் வீட்டில் என்னதான் நடந்தது நீங்க கேட்டா...
காயத்ரி குளிக்கும் போது யாரோ அவளை வாட்ச் பண்ற மாதிரி
ஒரு பீலிங் அதே போல் ரத்னத்துடன் படுக்கையிலும் அதே
பீலிங். அது தவிர சரசு அக்காவின் டார்ச்சர் வேறு.இதை கணேஷ்
தான் கண்டுபிடிக்கிறார் அதாவது scandal எடுத்து வெளிநபர்களுக்கு
அதை விற்று பணம் பண்ணுவதே ராஜரத்னம் குழுவுக்கு தொழில்.
இந்த கதையில் வழக்கம் போல் வஸந்தின் சொல்லுக்கு குறைவில்லை.

காயத்ரி படம்:


கதையை படித்த பின் எனக்கு படத்தை பார்க்க ஆவல் தூண்டியது.
இந்த மாதிரி ஒரு கதையை எப்படி படம் எடுத்திருப்பார்கள் என்று
ஒரு ஆவல் வந்தது. அதுவும் ரஜினிகாந்த் வேற நடித்து இருக்கிறார்
ஒரு வேலை அவர்தான் கணேஷோ என்று நினைத்தாவரே சி.டி.யை
போட்டேன்.

முதல் பெயர் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் என்று வந்தது பின்பு
தான் ரஜினி பெயர் அப்புறம் ஸ்ரீதேவி பெயர். ஜெய்சங்கர் தான்
கணேஷ்ஆக வருகிறார்.ரத்னமாக ரஜினி. காயத்ரியாக ஸ்ரீதேவி.
இந்த படம் 1977 இல் A சான்றிதழுடன் வெளிவந்துள்ளது. இளையராஜா
இசையமைத்து இருக்கிறார். நீண்ட நாட்கள் கழித்து இப்போது தான்
ஒரு கருப்பு வெள்ளை படத்தை பார்க்கிறேன்.

காயத்ரி கதையில் மட்டும் கஷ்டங்கள் நிறைய அனுபவிக்கவில்லை
படம் எடுக்கப்பட்ட விதத்திலும் அனுபவத்திருக்கிறாள் போலும்.
பல மாற்றங்கள் உடன் படம் வந்திருக்கிறது. அந்த டைமில் இந்த
படம் ஒடிச்சானு எனக்கு தெரியாது... ஆனா இப்போ பார்க்கறதுக்கு
ஏதோ ஒரு நாடகம் பார்ப்பது போல் தான் இருந்தது. அதுவும் இல்லாமல் புத்தகத்தில் காயத்ரியின் கேரக்டர் நன்றாக தெரியும்
ஆனால் படத்தில் அப்படியெல்லாம் இல்லை முதல் சீனே பெண்
பார்த்து கல்யாணம் ஆகிவிடும்.

மெட்டி ஒலியில் அப்பாவாக வரும் டெல்லி குமார் இதில் ஸ்ரீதேவியின் அப்பாவாக வருகிறார். அதே குரல் அதே கனீர்!! புத்தகத்தை படிக்கும் போது இருந்த ஒரு பரபரப்பு படம் பார்க்கும் போது இல்லை என்றே சொல்ல வேண்டும். அதே போல் கணேஷ் கேரக்டர் ஜெய்ஷங்கர்க்கு சுத்தமாக செட் ஆகவில்லை. சுஜாதாவின் பல நாவல் படித்தவன் என்கிற முறையில் கணேஷ் எப்படி இருக்கணும் எனக்கு ஒரு ஐடியா இருக்கு ஆனா ஜெய்சங்கருக்கு பாடி லாங்குவெஜ் எதுவுமே சரியா இல்லை.


அப்புறம் கதையில் வந்த வஸந்த் கேரக்டரை படத்தில் காணவில்லை
வஸந்தின் சேட்டையையும் சேர்த்து அந்த எழுத்தாளர் பாத்திரத்தில்
வரும் வெண்ணிற ஆடை மூர்த்தியே செய்து விடுகிறார்.
படத்துக்கும் கதைக்கும் பல மாற்றங்கள் செய்து இருக்கிறார் திரைக்கதை ஆசிரியர் பஞ்சு அருணாச்சலம். பட்டாபிராமன் அவர்கள்
படத்தை இயக்கியுள்ளார்.


கதையை படித்த பின் படம் பார்த்த எனக்கு காயத்ரி படம் ஒரு
ஏமாற்றம் தான். ஒரு வேளை அந்த காலத்தில் படம் எடுத்ததால்
அப்படி ஒரு பீலிங்ஆ என்று தெரியவில்லை. இல்லை ஏற்கனவே
இது தான் கதை என்று தெரிந்த பின் வந்த பீலிங்ஆ என்று
தெரியவில்லை.


அடுத்தது சுஜாதாவின் ப்ரியா கதையை படிக்கலாம்னு இருக்கேன். படத்தை ஏற்கனவே பார்த்து இருந்தாலும் கதையை படிச்சுட்டு இன்னொரு தடவை படத்தை பார்க்கணும். சுஜாதா அவர்களின் கொலையுதிர் காலம் நாவலை படமாக எடுத்தால் நன்றாக இருக்கும். நல்ல த்ரில்லிங் கதை. என்னது அதையும் ஏன் படம் எடுத்து கெடுக்கணுமா...?? அதுவும் சரி தான்.

இது சும்மா....
இப்போது யாராவது கணேஷ் வஸந்தை வைத்து படம் எடுத்தால் எந்த நடிகர் சரியா இருப்பாங்க...??னு நீங்க நினைக்கிறிங்க.

எனக்கு என்னவோ கணேஷாக அஜித்தும் நம்ம ரேடியோ மிர்ச்சியில் காலையில் வருவாரே அஜய் அவர் வஸந்த் கேரக்டர்க்கு செட்
ஆவாங்கனு தோணுது...!!


ஜெட்லி...(சரவணா...)

Friday, June 4, 2010

முக்கிய அ(பி)ட்டு செய்திகள்

பொது அறிவு செய்திகள்

முக்கிய அ(பி)ட்டு செய்திகள்:"நடிகர் விஜய், அரசியலில் குதிப்பது தவிர்க்க முடியாதது"

- தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி.


மேலும் அவர் " நடிகர்களை நம்பி படம் எடுக்காமல் கதாபாத்திரத்தை
நம்பி படம் எடுப்பது என்னுடைய வழக்கம்"

இது குறித்து எண்ணூர் டாஸ்மாக்கின் வெளியே வாந்தி எடுத்து
கொண்டிருந்தவரிடம் வாய் கழுவாமலே அவரின் கருத்தை கேட்டதற்கு .....

"என்னது நடிகர்களை நம்பி படம் பண்ண மாட்டாரா....
நல்ல வழக்கம் இந்த மாதிரி எல்லாம் டைரக்டரும் நினைச்சா விஜய்க்கு படம் கிடைக்காதே!!அரசியலில் குதிப்பது தவிர்க்க முடியாதா... அப்போ படத்தில் பில்டிங் பில்டிங்ஆ குதிக்கிறத தவிர்க்கலாம் இல்ல!!"

வ்வாஅ...வ்வாஅ....


*******************************


கிரிகெட்டை விட நடிப்பது கஷ்டம் - சடகோபன் ரமேஷ்.


ஏதோ ஒரு டாக்கீஸ் சார்பில் யுவராஜ் இயக்கம் பட்டாபட்டி
படத்தில் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் ஹீரோவா நடிக்கிறார்.
இப்படத்தின் பாடல் வெளியிட்டு விழாவில் சடகோபன் ரமேஷ்
அவர்கள் "சில ஹீரோக்களை பார்த்து, எவ்வளவு ஜாலியாக
இருக்கிறார்கள் என்று நினைத்தது உண்டு. நடிக்க வந்த பிறகுதான்,
நடிப்புக்காக எவ்வளவு கஷ்டப்பட வேண்டும் என்று புரிந்தது.
கிரிக்கெட் விளையாடுவதை விட நடிப்பது ரொம்ப கஷ்டம்
என்றும் புரிந்து கொண்டேன்" என்றார்...


இது குறித்து நம் சிறப்பு நிருபர் "சடகோபன் ரமேஷ் கிரிக்கெட்டே
பயங்கரமா விளையாடுவாருனு சொன்னா அதை விட மிகை
வேறு எதுவும் இல்லை. அப்போ கிரிக்கெட் ஈஸினா நடிப்பு
எப்படி இருக்கும்னு நினைச்சு பார்க்கவே முடியல. ஏற்கனவே
சந்தோஷ் சுப்ரமணியன் படத்தில் எப்படி ப்ரேம் உள்ள
வந்தார்னு ரமேஷ்க்கே மிக பெரிய ஆச்சரியமாம் அந்த
அளவுக்கு அவர் ரியாக்சன் கொடுத்து இருப்பார், அப்போ
பட்டாபட்டி படம் பார்க்கறவங்களுக்கு கிழிஞ்சுடும்னு ஊருக்குள்ள
பேசிக்கிறாங்க..." மணலி முட்டு சந்தில் இருந்து முனியம்மா.


***************************

"இனிமேல் தனியாக நடித்து எந்த நடிகரும் ஜெயிக்க முடியாது,

பல கதாநாயகர்கள் சேர்ந்து நடித்தால் படம் ஓடும்"

- சுப்ரீம் பிளேடு ஸாரி ஸ்டார் சரத்குமார்.

இது குறித்து நான் கேபிள் அண்ணனிடம் கருத்து கேட்டதற்கு
அவர் சாட்டிங்இல் அனுப்பிய பதிலில் குபீர் சிரிப்பு வந்தது...

" நல்ல முடிவு, அவருக்கு"

நான் இது குறித்து வேறு எதுவும் சொல்ல விரும்பலை.....

**********************************
பழைய (அ)பிட்டு செய்தி:

"ரீமாவுக்கு முத்தம் கொடுக்க முப்பது டேக் எடுத்தார் புதுமுகம்."


சொஸைட்டி என்கிற ஹிந்தி படத்தில் புதுமுகத்துடன் ஜோடி
சேர்கிறார் ரீமா சென். படத்தில் ஒரு காட்சியில் புதுமுகம்
ரீமாவின் கன்னத்தில் வசனம் பேசிகொண்டே முத்தம் கொடுக்க
வேண்டுமாம். ஆனா பாருங்க அவர் வசனம் ஒழுங்கா பேசுனா
முத்தம் சரியா கொடுக்கலை, முத்தம் சரியா கொடுத்தா வசனம்
தப்பா பேசி ஆக மொத்தம் முப்பது தடவை கிஸ் ஸாரி டேக்
எடுத்து இருக்கிறார்.

இது குறித்து மெரினா பீச்சில் ஜோடிகளை வெறித்து பார்த்து
கொண்டிருந்தவரிடம் கேட்டதற்கு..."கொடுத்து வச்சவன் சார்!! அவனுக்கு எங்கையோ மச்சம் இருக்கு." என்றபடியே தன் வேலையை தொடர்ந்தார்.

*********************************************
எனக்கா மணி உனக்கா...கடந்த வாரம் ஜு.விகடன் மற்றும் குமுதம் ரிபோர்ட்டர் ரெண்டிலும்
நடுபக்க படம் ஒரே ஸ்டில்ஆக வந்த ப்ரியாமணி படம் மேலே .
இது ஒரு சரித்திர நிகழ்வு என எதிர் வுட்டு பொக்கை தாத்தா
சொன்னார்.இன்னைக்கு இப்படி ஒரு படம் ரீலீஸ் ஆகுது...இது ஒரு தெலுங்கு
படம் டப்பிங். துரோணா என்ற படத்தின் தமிழாக்கம் தான் இது.
ஆனா இவங்க ப்ரியாமணி கவர்ச்சி ஸ்டில் வச்சி கிட்டத்தட்ட
ராஜலீலை ரேன்ஜில் விளம்பரம் செய்கிறார்கள்.

இந்த படம் குறித்து கிட்ட தட்ட ஒரு வருடம் முன்பே நான்
போட்ட ச(த)ரித்தர பதிவை படிக்க தவற வேண்டாம்...
கிளிக் செய்யவும்....
உனக்கா மணி எனக்காஇது போன்று நாட்டுக்கும் வீட்டுக்கும் தேவையில்லாத அட்டு
மற்றும் பிட்டு செய்திகளை தொடர்ந்து வழங்கிட உங்கள் ஆதரவை
எதிர்ப்பார்க்கும்.....ஜெட்லி.... (சரவணா....)


Tuesday, June 1, 2010

விசிலடிக்கலாம் வாங்க....

விசில் = பிகில்

நீங்க எப்போ கடைசியா விசில் அடிச்சீங்க,,,,?? நேத்து போன படத்துக்கா இல்ல ரோட்ல போற பொண்ணை பார்த்தா... நான் கடைசியா விசில் அடிச்சது குருசிஷ்யன் படத்தில் சந்தானம் அறிமுக காட்சிக்கு. தியேட்டரில் இருந்த நூப்பது பேரில் என் ஒரு விசில் சத்தம் மட்டுமே முதலில் கேட்டது அதன் பின் ரெண்டு மூணு பேர் விசில் அடித்தனர்.


விசில் பத்தி சாதாரணமா எடை போட்டுட கூடாது. சில வருடங்கள் முன் அமெரிக்கா பள்ளியில் மாணவர்கள் வாயில் விசில் கருவி வைத்து விசில் அடித்து கின்னஸ் சாதனை புரிந்து உள்ளனர். பின்னர் இந்த சாதனையை நாப்பது ஆயிரம் பேர் ஒன்று சேர்ந்து விசில் அடித்து முறியடித்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. பசங்க அடிச்ச விசில் வீடியோ உங்கள் பார்வைக்கு....

http://www.youtube.com/watch?v=g09H_6vHmzsநமது உற்சாகத்தையும் பாராட்டையும் வெளிப்படுத்த விசில் அடிப்பது வழக்கமாகி விட்டது. விசில் அடிப்பது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்று விசில் அடிப்பவர்கள் சொன்னாலும், தியேட்டரில் நமது நண்பர்கள் அல்லது பின் சீட்டுக்காரர் விசில் அடிக்கும் போதும் நமக்கும் நம் அபிமான நடிகரோ நடிகையோ தோன்றும் போது விசில் அடிக்க ஆவல் தூண்டி இருட்டில் வாயில் விரல் வைத்து ஊதினால் காத்து தான் வரும். அதை நண்பர்கள் பார்த்துவிட்டு கலாய்க்க ஆரம்பித்து விடுவார்கள். பல நண்பர்கள்
வாயில் விரல் வைத்து விசில் அடிக்க வராததால் தியேட்டருக்கு
விசில் கருவி கொண்டு வந்து அடிப்பதையும் பார்த்து இருக்கிறோம்.

விசில் அடிப்பது எப்படி:

விசில் அடிப்பது எப்படினா....நாக்கை மடித்து கொண்டு உங்கள் கட்டை விரல் கூட எந்த விரல் காம்பியும் சேர்த்து கொள்ளலாம்.பழக முதலில் ஆள்க்காட்டி விரல் தான் பெஸ்ட்....ரெண்டு விரலையும் இணைத்து நாக்கின் அடியில் வைத்து மனம் தளராமல் ஊதி கொண்டிருந்தால்..... சில வாரங்களில் நீங்களும் விசில் அடிக்கலாம்....அப்படி விசில் அடித்துவிட்டால் லம்பாக ஒரு அமௌன்ட் அனுப்பவும்....பயிற்சி கட்டணம்...!!

நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போதும் என் நண்பன் வாயில்
விரல் வைத்து விசில் அடிப்பான். அவன் விசில் அடிக்க கத்து கொடுத்த டிப்ஸ் தான் இப்போது நான் விசில் அடிக்க காரணம். ஒரே நாளில் விசில் அடிக்க முடியாது முயற்சி செய்து கொண்டிருந்தால் தான் சவுண்ட் வரும் என்பான். முதல் மூணு நாளில் காத்து மட்டுமே வந்தது பின்பு சைக்கிளில் பள்ளிக்கு போகும் போதும் வரும் போதும் விசில் அடித்து பழகுவதே
முதல் வேலையானது. ஒரு வாரத்தில் விசில் அடிக்க கத்து கொண்டு நண்பனிடம் விசில் அடித்து காட்டி பின்பு அவன் பல்வேறு விரல்களையும் கொண்டு விசில் அடிக்கலாம் என்று பாடம் நடத்தினான்.

ஸ்கூல் டூர் மற்றும் இதர நிகழ்ச்சிகளில் விசில் அடித்து பல பேரின் கவனத்தின் பெற்றேன். ஆனால் அந்த கவனம் நல்ல அடையாளம் அல்ல என்று அப்போதே தெரிந்தது, இருந்தாலும் அதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் விசில் பறந்து கொண்டு தான் இருந்தது. ஒன்பதாவது படிக்கும் போது தான் எங்கள் தெருவில் உள்ள பாய் ஒருத்தர் ஒரு நபரை அழைக்க வாயில் விரல் வைக்காமலே நாக்கை மடித்து விசில் அடித்தது என் காதை கிழித்தது. எப்படி விசில் அடிக்கிறார் இப்படி மனுஷன் அதுவும்
கை வைக்காமல் என்று நானும் பல மாதங்கள் முயற்சி செய்தும்
சவுண்ட் அவ்வளவாக வரவில்லை.....விசில் நம் அன்றாட வாழ்க்கையில் இன்றியமைததாக ஆகிவிட்டது. காலையில் பால் குக்கர் விசில் அடிக்கும் அப்புறம் பிரஷர் குக்கர் விசில் அடிக்கும் இப்படி விசில் நம் வாழ்வில் ஒரு அங்கம் ஆகி விட்டது. சாப்பிட்டு வேலைக்கு போனால் நம் வண்டியை நிறுத்த டிராபிக் போலீஸ்காரர் அடிப்பதும் விசில்தான்.பள்ளியில் விளையாட்டிலும் விசிலுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. அப்படியே போர் அடிச்சு படத்துக்கு போன அங்கே போனாலும்
விசில் தான்.சாவு மேளத்துக்கு வூடு கட்டுபவர்களுக்கு பேரும் உற்சாகம் தருவதும் இந்த விசில் தான்.எனக்கு விசில் பாட்டு என்றாலே சந்திரபாபுவின் 'புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை' என்ற பாட்டு தான் நினைவுக்கு வரும். இனிமையான கருத்துள்ள பாட்டு. ப்ரீயா இருக்கும் நேரத்தில் விசில் அடித்தே ஒரு பாட்டை பாடினால் சுகமே தனி. விசிலை நம் சென்னையில் பிகில் என்றும் அழைப்பார்கள். 'ஓரம் போ' படத்தில் லால் பெயர் கூட பிகில் தான்....விசில்னு ஒரு படம் கூட வந்திருக்கு ஆனா தியேட்டரை விட்டு சீக்கரம் போயிருச்சு...ரைட் நான் பிகில் அடிச்சுட்டு அப்படியே எஸ் ஆயிக்கிறேன்...!!


உங்களுக்கும் இது போல் விசில் அனுபவங்கள் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்....

ஜெட்லி...(சரவணா...)