Saturday, June 12, 2010

ஓர் இரவு !! வியு பாயிண்ட் விமர்சனம்.

ஓர் இரவு !!

மணி காலையிலே 11.20. போர் அடிக்குது...ஓர் இரவு படம் நைட் ஷோ போற ஐடியா தான் வச்சிருக்கேன்.ஆனா ரொம்ப போர் அடிக்குது... துரோகம் நடந்தது என்ன? படத்தை கூட போறதுக்குள்ள ஸ்டார்ட் பண்ணிடுவாங்கன்னு நேரா ஓர் இரவு படம் பார்க்க அபிராமி மெகாமால்க்கு வண்டியை விரட்டினேன். பைக் பார்க்கிங் டோக்கன் கொடுத்தவுடன் பைக் நிறுத்தும் இடத்தில் பைக்கை திருப்பி நிறுத்த சொன்னான் செக்யூரிட்டி.மெகாமால் வாயிலில் சிலர் ஏதோ பேப்பரில் நிரப்பி கொண்டு இருந்தனர்.அதையும் தாண்டி உள்ளே வந்தவுடன் சாக்லேட் கொட்டி கொண்டிருந்த கடையில் சாப்பிட்டு கொண்டிருந்த ஒரு பெண் சூப்பர்ஆக இருந்தாள்.


மாடிப்படி ஏறி டிக்கெட் கவுன்டருக்கு செல்லும் வழியில் கிளீனர் தரையை துடைத்து கொண்டிருந்தான்.அங்கே இருக்கும் மேற்பார்வையாளர் வருபவர்களை வேறு வழியில் சென்று டிக்கெட் எடுக்க சொன்னார்.கொஞ்சம் சுற்றி போய் டிக்கெட் எடுத்தேன்.E - 8 தான் சீட் நம்பர்.படம் ஆரம்பிக்க இருபது நிமிடம் இருந்தது.அப்படியே இன்னொருக்கா போய் பராக்க பார்த்துட்டு வந்துடுவோம் என்று ஒரு ரவுண்ட் கிளம்பினேன்.
(பராக்க பார்த்தது பத்தி எல்லாம் சொன்னா ரொம்ப போர் அடிக்கும்ங்க...இந்த படத்தோட முதல் இருபது நிமிஷம் மாதிரி!!)


டிக்கெட் கிழித்து பாதி டிக்கெட்டை கையில் கொடுத்து ரெண்டாவது
கதவு வழியா போங்க என்றான் டிக்கெட் கிழிப்பவன். சத்தியமா
இவ்ளோ கேவலமா தியேட்டர் இருக்கும்னு நினைச்சு பார்க்கலாங்க..
ஏதோ ஒரு அட்டு தியேட்டருக்குள் நுழைந்த உணர்வு தான் வந்தது.
பால அபிராமி ... தொண்ணுறு ரூபாய் டிக்கெட்...சத்தியமா இனிமே
இங்கே எந்திரன் படம் டிக்கெட் கிடைச்சா கூட வந்து பார்க்க மாட்டேன்ங்க....ஏ.சி. மட்டும் தான் நல்லா இருந்தது.அப்புறம் சவுண்ட்
கூட நல்லா தான் இருந்தது
.(ஏன்டா..எத்தனை அட்டு தியேட்டர்ல
படம் பார்க்குற...அதுக்கு இது பரவாயில்லைனு சொல்றீங்களா...
ரைட்டு..!!)

சரி சரி...சத்தம் போடாதிங்க... படம் ஆரம்பிக்க போறாங்க...
மிஸ்டிரி டி.வி.யின் ஒரு நிகழ்ச்சியின் 99 வது எபிசொட் ஆரம்பிக்குது... "என்னப்பா டி.வி. சீரியல் போடுறாங்க...." என்று பின்னால் இருந்து குரல் வந்தது. டி.வி.யில் வரும் பெண் அமானுஷ்யங்கள் பற்றி பேச ஆரம்பித்து நகுலன் என்ற ஆவி ஆராய்ச்சியாளர் கொலை சம்பந்தமாக பேச ஆரம்பிக்கிறாள்.முதலில் கொஞ்சம் மெதுவாகத்தான் போச்சு.அப்புறம் நகுலனே நான் செத்த கதையை சொல்ல போறேன் என்றதும் படம்
கொஞ்சம் சூடு பிடிச்சுது....நகுலனின் வியு பாயிண்ட்இல் படம்
நகர்ந்தது வித்தியாசமாதான் இருந்தது.....


கிக்கி...பிக்கஈ..கிக்கி.. அப்படின்னு உள்ளே மூணு பொண்ணுங்க
படம் பார்க்க வந்தாங்க.அடுத்த முனையில் மூவரும் அமர்ந்தனர். வந்ததில் இருந்து ஒரே சிரிப்பு தான்.... irritating .... "ஏய் பேய் படம்டி..." உடனே சிரிப்பு சத்தம். நகுல் ஓட்டும் கார் டயர் பஞ்சர் ஆகிவிடும் போது சவுண்ட் கொஞ்சம் பலமாவே வந்தது...அதுக்கும் சிரிப்புதான்....


நகுல் பார்க்குற இடத்தை எல்லாம் நாமும் பார்க்குறோம்...
அந்த கோவர்தனை மீட் செய்யும் பாலம் மற்றும் அங்கிருந்து
அவர் பார்க்கும் இடங்கள் கொள்ளை அழகு...நகுல் குன்னூரில்
ஆவி இருப்பதாக நம்பப்படும் வீட்டை அடைந்ததும் நமக்குள்ளும்
பயம் தொத்தி கொள்கிறது. தீடிர்னு க்ரீச்..னு சவுண்ட் கேட்டது
நான் கொஞ்சம் டெர்ரர் ஆயிட்டேன்ங்க...பக்கத்தில் உட்கார்ந்த நபர்
கண்டுப்பிடிக்க கூடாதுன்னு நினைச்சு அப்படியே கால் மேல
கால் போட்டு பாவ்லா பண்ணினேன்.....


சரிங்க வியு பாயிண்ட் போதும்னு நினைக்கிறேன்....எழுதுனா
இன்னும் பத்து பாரா போகும் போல....ரைட் நாம நேரா மேட்டர்க்கு
வருவோம்....
இந்த படம் வழக்கமான தமிழ் படம் இல்லை.ஏதோ வியு பாயிண்ட்
படம்னு சொன்னாங்க...புது அனுபவமா தான் இருந்தது. முதலில்
கொஞ்சம் ஸ்க்ரீனில் க்ளேர்லாம் அடிச்சது கதவை திறந்து வச்சிட்டாங்களோ என்று கதவையெல்லாம் பார்த்தேன் மூடி தான் இருந்துது. படம் புல்லா இப்படி தான் இருக்குமோ என்று பயந்துட்டேன், நல்ல வேளை அப்படி இல்லை.


ஒண்ணும் மட்டும் சொல்ல முடியும் இது வழக்கமா வர்ற
சராசரி தமிழ் படம் இல்லை. அதே மாதிரி இது ஒரு படமா
இல்ல டாகுமெண்டரியானு கூட எனக்கு சரிவர தெரியலை
என்பது தான் உண்மை.மற்றபடி இது ஒரு பாராட்டப்பட
வேண்டிய முயற்சி தான்.படம் பார்க்கும் போது சில இடங்களில்
அலுப்பு தட்டுகிறது. சில வசனங்கள் வேற சரியா கேட்கலை..
முக்கியமா அந்த காதலி டி.வி. நிகழ்ச்சிக்கு பேட்டி கொடுக்கும்
சீனை சொல்லலாம்.


கடைசி கட்ட காட்சிகளில் பரப்பரப்பு நம்மையும் தொத்தி கொள்கிறது..அதற்கு ஏற்ற மாதிரி தேவையான இடங்களில் பின்னணி இசையில் வெங்கட் பிரபு சங்கர் கலக்கி இருக்கிறார்.சதீஷ், இவர் தான் படத்தின் நாயகனும் ஒளிப்பதிவாளரும் கூட.இவர் குரலா தான் இது...மிர்ச்சி சிவா வாய்ஸ் modulation மாதிரி இருந்தது. மூவர் கூட்டணி தான் இயக்குனர்கள் (ஹரிஷ் நாராயண் , ஹரி ஷங்கர், கிருஷ்ண சேகர்).ஆவியை காட்டாமலே ஒரு
த்ரில்லிங் கொடுத்து இருக்காங்க....எனக்கு என்னமோ ஒரு முழு படத்தை பார்த்த திருப்தி கிடைக்கல..
காரணம் பல வருடமா தமிழ் சினிமா பார்த்து கேட்டு போய்ட்டேன்..
ஒரு க்நாட் இருந்தா அதை கடைசியில் அவிழ்ப்பது தான் நான்
பார்த்து கொண்டிருக்கும் சினிமா. கிளைமாக்ஸ்ல அவங்களே சொல்லிடுறாங்க அமானுஷ்ய எல்லையை தாண்டினால் விளைவு வேறு மாதிரியா இருக்கும்னு....இருந்தாலும் அந்த வீட்டில் அப்படி என்ன இருக்கிறது?? முதல்ல போன மூணு பேரு சாக காரணம் என்ன?? (அந்த ஆவியை வரவழைத்தது தவிர) . ஏன் கோவர்தன் அந்த வீட்டை பார்த்து மிரள்றார்...ஏன் ரெண்டு தடவையும் வேறு வேறு சாவி கொடுக்கிறார்??...இந்த கேள்விகளை நான் கேட்கணும்னு கேட்கல....ஏதோ தோணிச்சு....எனக்கு ஏற்பட்ட சந்தேகம் குழந்தை தனமாகவும் இருக்கலாம்....!!(ஏன்னா எனக்கு குழந்தை மனசு).


மாற்று சினிமாவை எதிர்ப்பார்க்கும் ஒருவனுக்கு 'ஓர் இரவு' படம் நிச்சயமாய் ஒரு விருந்து தான்.ஆனால் இது ஒரு சராசரி ரசிகனை திருப்திப்படுத்துமா என்று கேட்டால் கஷ்டம் தான். அதே போல் படம் ஓடுவது ஒரு மணி நேரம் அம்பது நிமிடங்கள் தான் என்றாலும் ஒரு நீண்ட பயணத்தை கொடுக்கிறது....
ரெண்டாவது பாதியில் அவர் அந்த மாடிப்படி ரூமில் இருக்கும்
காட்சிகள்...அந்த ஸ்மைலி பந்தை மேல போட்டவுடன் திரும்ப வராதது எல்லாம் செம...!! பவுடர் அடிச்சு பேயை காட்டி முகம் சுளிக்க வைக்கும் படம் எடுப்பவர்கள் பார்த்து திருந்தினால் சரி.. இதே குழுவினரிடம் இருந்து இது போன்று மேலும் பல நல்ல முயற்சிகளை எதிர்ப்பார்க்கிறேன்.....!!
இந்த விமர்சனம் மாதிரி உங்களுக்கு பிடித்து இருந்தால்
உங்கள் பொன்னான வாக்குகளை அள்ளி வழங்குமாறு கேட்டுகொள்கிறேன்.

நன்றி
ஜெட்லி...(சரவணா...)


23 comments:

ஜில்தண்ணி said...

ஒரு ரசிகனின் பார்வையில் எழுதுயிருக்கீங்க,நல்லா இருக்கு
பாராட்டுக்கள்

நம் சக பதிவர் ஹரிஷ் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துவோம்

ஜில்தண்ணி said...

//எனக்கு என்னமோ ஒரு முழு படத்தை பார்த்த திருப்தி கிடைக்கல..
காரணம் பல வருடமா தமிழ் சினிமா பார்த்து கேட்டு போய்ட்டேன்..//

உண்மைதான்

நம்ம பதிவு பக்கம் வாங்க

www.jillthanni.blogspot.com
ஒரு விளம்பரம் தான்

Porkodi (பொற்கொடி) said...

:) thanks for the review mr.jet!!

அநன்யா மஹாதேவன் said...

//ஒரு ரசிகனின் பார்வையில் எழுதுயிருக்கீங்க,நல்லா இருக்கு
பாராட்டுக்கள்.நம் சக பதிவர் ஹரிஷ் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துவோம்// அதே அதே.. வெற்றியடைய வாழ்த்துக்கள். விமர்சனத்துக்கு நன்றி!

சரவணகுமரன் said...

//பக்கத்தில் உட்கார்ந்த நபர்
கண்டுப்பிடிக்க கூடாதுன்னு நினைச்சு அப்படியே கால் மேல
கால் போட்டு பாவ்லா பண்ணினேன்.....//

:-))

நாஞ்சில் பிரதாப் said...

தியேட்டருக்குப்போன உங்க வியு பாய்ண்ட் நல்லாருந்தது...
அப்ப படம் பாலக்கலாம்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யோவ் டிக்கெட் எல்லாம் புக் பண்ணிட்டேன். பாக்கலாமா?

Cable Sankar said...

ரைட்டு.. :)

Software Engineer said...

வணக்கம்,
அற்புதமான பதிவு!
அன்பு பதிவர்களே/நண்பர்களே,
என்னுடைய முதல் பதிவு இங்கே போட்டு இருக்கிறேன். தயவு செய்து பாருங்கள், பிடித்தால் ஓட்டு போடுங்கள்!
http://kaniporikanavugal.blogspot.com/

Software Engineer said...

ஓட்டு போட்டுட்டேன்

ஜெட்லி said...

@ அனைவருக்கும்


நன்றி.....


@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

இதென்ன கேள்வி.....பார்த்துட்டு சொல்லுப்பா...

ராசராசசோழன் said...

இன்னுமா அபிராமி தியேட்டர் அப்படி இருக்கு...

G.D.Aswin said...

arumai arumai....
theatre norukal missing???

Dr.Dravid said...

படத்தை பார்த்தேன் புது முயற்சி அனைவரும் பார்க்க வேண்டிய படம்  தவறாமல் பாருங்கள் 

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

சரவணா அருமையான விமர்சனம். அப்போ படம் ஓக்கேன்னு சொல்லுங்க.. ரைட்டு அப்ப பாத்திடவேண்டியதுதான்.

வவ்வால் said...

Jetli,
paarattiye theeranumno,kurai sollanumno ezhuthamal neutrala review panringa ,nice!

Ponnungale "kekke pikkenu" sirikiranga neenga ennadana nadungittatha solringa unmaila kuzhanthai manasu than boss!

White dress pombala pey (note, i'm not telling gals are ghost,penniyam ushar) illatha padamlam oru pey padama enna kodumai ! Oru kick irukkathe :(

T.V.ராதாகிருஷ்ணன் said...

விமர்சனம் அருமை

பின்னோக்கி said...

ToI ல ஒண்ணரை மார்க் தான் குடுத்திருக்காங்க (இங்கிலீஷ் இல்லைன்னா, ஹிந்தி படத்துக்கு 3, 4ன்னு குடுப்பாங்க). வித்தியாசமான படத்திற்க்கு வித்தியாசமா விமர்சனம் எழுதி இருக்கீங்க. பாட்டு ஒண்ணும் இல்லையா படத்துல. அதப் பத்தி ஒண்ணும் சொல்லலையே ?.

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

படம் பார்க்கும் ஆர்வத்தை அதிகரித்துவிட்டது உங்களின் விமர்சனம் . பகிர்வுக்கு நன்றி

ப்ரியமுடன்...வசந்த் said...

தியேட்டர் நொறுக்ஸ் எங்கே?

ஓ அதைத்தான் வாசகர் பார்வையில் முதல் எழுதி விட்டீர்களோ?

ஹரீஷ் நாராயணன் நம்ம ஆளு பிளாக்கர் மச்சி...

ஜெட்லி said...

@வவ்வால்

அந்த சீனுக்கு அவங்களும் டெர்ரர் ஆனாங்க அண்ணே....
நன்றி

ஜெட்லி said...

@ பின்னோக்கி

TOI விமர்சனம் படித்தேன்...அவர்கள் கேட்டிருந்த கேள்விகளும்
சரிதான்.... பாட்டு எதுவும் படத்தில் இல்லை...கடைசியில் பெயர்
போடும் போது மட்டும் பாட்டு வரும்....

Chitra said...

ஒண்ணும் மட்டும் சொல்ல முடியும் இது வழக்கமா வர்ற
சராசரி தமிழ் படம் இல்லை. அதே மாதிரி இது ஒரு படமா
இல்ல டாகுமெண்டரியானு கூட எனக்கு சரிவர தெரியலை
என்பது தான் உண்மை.மற்றபடி இது ஒரு பாராட்டப்பட
வேண்டிய முயற்சி தான்.படம் பார்க்கும் போது சில இடங்களில்
அலுப்பு தட்டுகிறது. சில வசனங்கள் வேற சரியா கேட்கலை..
முக்கியமா அந்த காதலி டி.வி. நிகழ்ச்சிக்கு பேட்டி கொடுக்கும்
சீனை சொல்லலாம்.

...... இதுல எந்த விஷயத்தை பாராட்டுறீங்க?
ha,ha,ha,ha,ha....