Friday, December 31, 2010

கில்மானந்தாவின் புது வருட சிந்தனைகள்...!!

கில்மா ரிட்டன்ஸ்...!!


கில்மனந்தா வழங்கும் ஸ்பெஷல் புத்தாண்டு அருளுரைகள்...

"ராத்திரி நேரத்து பூஜையில்...டன்டக்கு டின்டக்கு...ரகசிய தரிசன ஆசையில்..ஹா ஹா அது ஆராதனை ...." என்ற பின்னணி இசையில் வந்து அமர்கிறார் கில்மானந்தா.

பக்த கோடிகளே.... உங்கள் எல்லாருக்கும் என் இனிய கில்மா புத்தாண்டு
வாழ்த்துக்கள்..போன வருஷம் போல் இந்த வருசமும் அனைவரும் கில்மாவாக இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன். பல பேர் போன வருஷம் பயங்கர வறட்சியா இருந்ததுனு சொன்னாங்க..யார் சொன்னது வறட்சியா இருந்ததுனு...நம்ம காஞ்சிபுரம் தேவநாதன் இயக்கி நடித்த பிட் படங்கள் போதாதானு கேட்குறேன்...இது தவிர நம்ம சகா நித்தியானந்தா ஒருத்தர் சிக்குனாரே...பாவம்ப்பா தேவநாதன்க்கு ஆவது பிட் படம் தான் வந்தது பாவம் நித்தியாக்கு கொண்டைல பேன் எடுக்குற வீடியோ முதற்கொண்டு எல்லாம் வந்ததே......இது வறட்சியான வருஷமா இல்லையானு நீங்களே முடிவு பண்ணிக்கிங்க பக்தர்களே....!!


"ஹோ..கில்மா ஜே ரவ..."சென்ற 2010 வருடம் போல் இந்த வருடமும்
அனைவரும் மப்பும் டப்பும் செழிக்க அடியேனின் வாழ்த்துக்கள்.....!!


********************************'
கில்மானந்தாவின் சிந்தனை துளிகள்...


# ஏதோ வித்யாபாலன்னு ஒரு பொண்ணு ஹிந்தி படத்திலே சில்க் ஸ்மிதா
வாழ்க்கை வரலாறு படத்துல நடிக்குதாமே....இதில் இருந்து என்ன தெரியுது...
நம்ம ஊரோட பெருமை நமக்கே தெரியலை...எவனோ ஹிந்திகாரன் சில்க்
பத்தி படம் எடுக்குறான்....என்னவோ போட மாதவா,..சில பல பிட் இருந்தா
சரி....!!

# ஆணவத்தில் ஆடுறவன்....சரக்கு அடிச்சுட்டு ஆடுறவன்....
ரெண்டுத்துல யாரு பெட்டர்னு நீங்களே முடிவு பண்ணிக்குங்க...!!

****************************************

கில்மாநந்தா அழைக்கிறார் வாரீர்! வாரீர்! வாரீர்!!

வாழ்க்கையில் ஏமாற்றத்தை தவிர்க்க எங்க கிட்ட வந்து ஏமாறுங்க....
அதாவது தீட்சை பெற உடனே அணுகவும்... தீட்சை பெற்ற பின்
வாழ்க்கையில் துன்பமோ, பண கஷ்டமோ வரவே வராது, யாருக்கு
என்று கேட்பவர்களுக்கு அனுமதி இல்லை. தீட்சை கூட்டம் நடைபெறும்
இடம் : கோவிந்தா மண்டபம்.

********************************************
கில்மானந்தாவின் டாஸ்மாக் பாடல்:
அட்டு சரக்கு அடித்த போது கில்மாவுக்கு வந்த பாட்டு....
((வானம் ரீமிக்ஸ்))உன்னை பார்த்த பத்து நிமிஷாம என்னை காணோம்...
போதை ஏறாம திரியிரேன் கண்டபடி நானும்...
சத்தியமா உனக்கு நான் வேணாம்
கண்டிப்பா எனக்கு நீ வேணும்
நான் பிளாட்பார்மில் விழுந்து கிடந்தா கூட
இல்லை டாஸ்மாக்கில் படுத்து கிடந்தால் கூட
தயவு செய்து ஒரிஜினல் சரக்கு மட்டும் எனக்கு கொடு...

எவன்டி உன்னை பாட்டில்ல அடைச்சான் அடைச்சான் அடைச்சான்...
கைல கிடைச்சா செத்தான் செத்தான் செத்தான்.....

**************************

கொஞ்சம் சினிமா....

# பொங்கலுக்கு நான் சிறுத்தை தான் போலாம்னு ப்ளான் பண்ணேன். ஆனா ட்ரைலர் பார்த்ததில் இருந்து அந்த எண்ணத்தை தள்ளி
வச்சிட்டேன். சிறுத்தை படத்தோட ட்ரைலர்க்கே சூப்பர் ஹிட்னு போட்டு
விளம்பரம் பண்றாங்க...ட்ரைலர்லே ஆந்திரா வாசம் அனல் பறக்குது... ரவிதேஜா போட்ட ஜ.. சாரி சட்டை கூட மாத்தாம படம் எடுத்து இருப்பாங்களோ.....??

# சத்யத்தில் மன்மத சொம்பு பார்க்கிறது முன்னாடி இளைஞன் படத்தோட
ட்ரைலர் சாரி மினி கதையே போட்டு காட்டனாங்க...இந்த மாதிரி உலக
மகா ட்ரைலர்ஆ நான் பார்த்ததில்லைடா சாமி.... ஏற்கனவே ஒரு மொக்கை
படத்தை பார்க்க போறாங்கனு தெரிஞ்சும் முன்னாடி ஒரு மகா மொக்கை
ட்ரைலர் போட்ட ஆப்பரேட்டர் வாழ்க...வளர்க...!!

**********************

கடைசியா நம்ம மக்கள் நாயகன் ராமராஜன் மேதை படத்தில் இருந்து நம்பிக்கை வரிகள்....

"எப்போதும் எல்லாருக்கும் நல்லதை செய்...
தப்பாம நன்மை வரும் நம்பிக்கை வை..."


**************************************
யாருக்கும் இடையுறு இல்லாமல் வாழ்வோம்....மகிழ்வோம்....

உங்கள்
ஜெட்லி...(சரவணா...)

Wednesday, December 22, 2010

ஈசன் - லேட்டான பார்வை!!

ஈசன் --- கடைசி பார்வை...!!

நிறைய பேரு மொக்கை, டப்பா மற்றும் சசிகுமார் கிட்ட இருந்து இப்படி
ஒரு படத்தை எதிர்ப்பார்க்கலனு சொன்னதுக்கு அப்புறம் நான் மட்டும் பெருசா என்னத்த எதிர்ப்பார்த்து தியேட்டர்க்கு போய்ட போறேன். சும்மா போனதுனாலே என்னவோ படம் ஓரளவுக்கு நல்லா தான் போச்சு...

பதிவுலகை பொருத்த வரைக்கும் நாம தனி தன்மையா தெரியறதுக்கு இல்ல ஒரு வித ஈகோனு கூட சொல்லலாம் அதாவது ஊரே மொக்கைனு சொல்லும் அதை சூப்பர்னு சொல்லணும்...ஊரே சூப்பர்னு சொல்லும் அதை நாம மொக்கைனு சொல்லணும்....ஆனா நான் அப்படி எதுவும் இங்க சொல்ல வரலை...இது வரைக்கும் மொக்கை படம்னு ஈசன் படத்தை பார்க்காதவங்க சும்மா எந்த வித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் பார்த்தால் கண்டிப்பா பிடிக்கும்...தாரளமா ஒரு தடவை பார்க்கலாம்...குறிப்பு : 'தியேட்டர்'ல ஓடுனா...


என்னடா இவன் ஈசன்க்கு சப்போட் பண்ணி பேசுறான்னு பீல் பண்ணாதீங்க....அப்படி எல்லாம் பேச மாட்டேன்...படத்துல எனக்கும் பிடிக்காத சில விசயங்கள் இருக்கு... முதல்ல படத்தோட நீளம்....அப்புறம் அழகப்பன்...அவுருக்கு தான் ரியாக்சனே சரியா வரலையே எப்படி சசி தேர்ந்து எடுத்தார்னு தெரியலை...பல இடங்களில் அவர் பண்ணவுது தான் காமெடியாக இருந்தது எனக்கு....பிளாஷ்பேக் காட்சி ரொம்ப நீளம்...அதே போல் அபிநயா உடனே மாடர்ன் ஆறது எல்லாம் மனதில் ஒட்டவில்லை...அதே போல் கிளைமாக்ஸ்ல மினிஸ்டரை சுட்ட சமுத்ரகனி மேல என்ன அக்சன் எடுத்தாங்கனு காட்டவே இல்லை?? ஒரு வேளை நம்ம இருபது வருஷம் தமிழ் சினிமாவில் வர்ற மாதிரி இவன் என்னை சுட்டான் அவன் அவனை சுட்டான்னு மக்கள் புரிஞ்சப்பாங்கனு விட்டுட்டாரோ சசி ??


சரி நல்ல விசயத்துக்கு வருவோம்...அப்படின்னு படத்துல பார்த்தா வெறும்
சங்கையா கேரக்டர்ல வரும் சமுத்ரகனி மட்டுமே...செமையா பண்ணி இருக்கார் மனுஷன்...அப்புறம் சொல்லணும்னா சில வசனங்கள் நல்ல இருந்தது...பாட்டு கொஞ்சம் ஓகே... படம் ரொம்ப மொக்கைனு சொல்ல முடியாது...


தியேட்டர் நொறுக்ஸ் :

# அடையார் கணபதிராமில் தான் இரவு காட்சி படம் பார்த்தேன்....படம்
விட்டுட்டு வெளியே வந்தா ஈசன் போஸ்டர்ஏ காணோம் எல்லாம் மன்மத
அம்பு போஸ்டர் ஆகி போச்சு...அதனால தான் சொன்னேன் பார்க்குறவங்க
இன்னிக்கு தியேட்டர்க்கு போனா தான் உண்டு....ஈசன் ஒரு வாரம் சாரி ஆறு
நாள் படமாகும்னு நான் நினைச்சு பார்க்கல...


உங்கள்...

ஜெட்லி...(சரவணா...)

Monday, December 20, 2010

2010 இன் டாப் 10 மொக்கை படங்கள்...!!

2010 இன் டாப் 10 மொக்கை படங்கள்...!!

போன வருஷம் சொன்னா மாதிரி தான் மொக்கை படம் பார்ப்பதால் பொறுமையும்,சகிப்பு தன்மையும் கண்டிப்பாக கண்டமேனிக்கு வளரும் அதனால் எல்லாரும் மொக்கை படம் பார்க்கணும். ஆனா இப்ப சில மாசமா என்னால மொக்கை படத்துக்கு போக முடியல. மாஸ்கோவின் காவேரி, துரோகி, வம்சம், ரத்த சரித்தரம்னு எந்த படத்துக்கும் போக முடியல....அதனால இது எல்லாம் லிஸ்ட்இல் வராது...


இன்னொரு முக்கியமான விசயம் இது நான் பார்த்த படங்களில் எனக்கு மொக்கையாக ப்பட்டது மட்டுமே வரிசை படுத்தி இருக்கிறேன். சில படங்கள் உங்களுக்கு பிடித்து இருக்கலாம் அதனால கோச்சிக்காதீங்க...!!

********************************
10. தில்லாலங்கடி...(உட்டாலக்கடி)

http://nee-kelen.blogspot.com/2010/07/blog-post_23.html
கிக் படத்தோட ரீமேக்னு சொன்னாங்க....ஆனா படத்துல தான் கிக்கே இல்லை...வடிவேல் காமெடி ஓகே...படம் ரொம்ப நீளம்...பாட்டு மொக்கை.


9.கோவா...(கோ கோ அவே)


http://nee-kelen.blogspot.com/2010/01/blog-post_29.html
முதல்ல நல்ல தான் போச்சு...போக போக பிரேம்ஜி பண்ற காமெடி எல்லாம்
எரிச்சல் ஆகி போச்சி... தீடிர்னு கப்பல் காட்டறாங்க ..ஸ்னேஹா வர்றாங்க.
அப்படியே போச்சி...


8.அய்யனார் (நார்..நார்...)


பாட்டு மட்டும் நல்லா இருந்தது...ரெண்டாவது பாதி தான் முடியல...அடுத்த
வருடம் ஆதியிடம் இருந்து நல்ல படங்களை எதிர்ப்பார்க்கிறேன்....


7.குட்டி.. (உடைஞ்ச சட்டி)


பல படத்தில் பார்த்த காட்சிகள்...தனுஸ்க்கு அந்த கேரக்டர் செட் ஆகலைனு
தான் சொல்லணும். கடைசி அரைமணி நேரம் செம பிளேட்.


6.துரோகம் நடந்தது என்ன...(ஒன்னுமே நடக்கலையே...)
http://nee-kelen.blogspot.com/2010/06/blog-post_15.html


ஏன்டா அட்டு படத்தை இந்த லிஸ்ட்ல சேர்த்தேன்னு நீங்க கேட்கலாம்...
இந்த வருஷம் வந்த பல படங்களை விட இது அதிக வசூல் ஆகி இருக்க
வாய்ப்பிருக்கு...ஏற்கனவே சொன்னது தான்...இந்த படத்தோட இயக்குனர்
தான் படம் பார்த்த அனைவருக்கும் துரோகம் பண்ணிட்டார்...சீனே இல்லை.


5.குரு சிஷ்யன்..(ஹி..ஹி...)
http://nee-kelen.blogspot.com/2010/05/blog-post_11.html


தமிழ்ல இந்த மாதிரி படங்கள் வர கூடாதுனு சொல்றதுக்கு இந்த படம் ஒரு
உதாரணம். சந்தானம் மட்டுமே ஷோ ஸ்டீலர்.சத்யராஜ் எல்லாம் கேரக்டர்
ஆர்டிஸ்ட் ஆக வேண்டிய நேரம் இது....!!


4. அசல்...(மெய்யாலுமே மொக்கை...)
http://nee-kelen.blogspot.com/2010/02/blog-post_08.html


இந்த படத்தில் எனக்கு பிடிச்ச ஒரே விஷயம் படம் ஓடுற டைம் தான்.....
என்ன தான் மொக்கை போட்டாலும் உன்னை ரெண்டு ஹவர்ல வீட்டுக்கு
அனுப்பிருவோம்னு சொன்ன அவங்க டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சு
இருந்தது...அதனால தான் அசலுக்கு நாலாவது இடம்...


3.வ...குவாட்டர் கட்டிங்...(மப்பு இல்ல...)

தியேட்டர்க்கு வானு கூப்பிட்டு செம மொக்கை போட்டாங்க..அதுவும் ஜான்
விஜய் கேரக்டர் கொஞ்சம் ஓவர் ஆகி போச்சு... சில சில காமெடிகள் ஓகே..
தீபாவளியை இந்த படம் கெடுத்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.


2.மாத்தியோசி...(யோசிக்கவில்லையே...)
http://nee-kelen.blogspot.com/2010/03/blog-post_12.html
எங்கே யோசிச்சாங்கனு இயக்குனர் கிட்ட தான் கேட்கணும்....


2. ராவணன்...(பத்து தலை தலைவலி..)
http://nee-kelen.blogspot.com/2010/06/blog-post_18.html


இந்த படம் பார்த்துட்டு இருக்கும் போது எனக்கு ஒன்னுமே புரியலை...
இனிமே மணிரத்தினம் படம் பார்க்க போறதுக்கு முன்னாடி ஒரு வாரம்
ஸ்பெஷல் கிளாஸ் அட்டென்ட் பண்ணனும் போல....அது சரி அவர் எங்க நமக்கு படம் எடுக்குறார், அவர் பணம் எடுக்க தானே படம் எடுக்குறார்.


2.வெளுத்துக்கட்டு...(ஹ்ம்,,,கட்டணும்)
http://nee-kelen.blogspot.com/2010/07/blog-post_02.html


எஸ்.ஏ.சி. அவர்கள் வாழ்க்கையில் நடந்த கதைன்னு சொல்லிட்டு பத்து படத்தோட கதையை போட்டு படத்தை முடிச்சுட்டாங்க. ஏதோ படம் பார்க்க வந்த ஆட்டோ டிரைவர்களால் எனக்கு டைம் பாஸ் ஆச்சு....


1.வாடா...(வந்துட்டேன்..)
http://nee-kelen.blogspot.com/2010/04/blog-post_14.html


வாடா காவியத்தை பார்க்க ரெண்டு கண் பத்தாது...மேலும் விவேக் காமெடி
செம சிரிப்பு??... வாடாவை பத்தி ஏற்கனவே பல தடவை அலசிவிட்டதால்
விட்டு விடுவோம்....


1.தம்பிக்கு இந்த ஊரு...(வெளியே சொல்லிடாதே)
http://nee-kelen.blogspot.com/2010/03/blog-post_09.html


இந்த படத்தை சொல்றதுக்கு வார்த்தையே இல்லை...மொக்கைனு சொன்னா
அதுக்கு மொக்கைக்கே கேவலம் ஆயிடும்...!!நான் ராஜலீலை படத்துக்கு
போனும்னு தான் போனேன்...என் கெரகம் இந்த மகா காவியத்தை
பார்க்கனும்னு தலைவிதி...வேற என்ன சொல்றது..

1.சுறா...(காஞ்சி போன எறா)


நான் முதல் பாதியிலே வெளியே எந்திருச்சு வந்துருலாம்னு தான் யோசிச்சேன்...ஆனா முதல் ஷோ போனதால் வெளியே அடுத்த ஷோக்கு காத்திருக்கும் ரசிகர்களுக்கு என்ன பதில் சொல்றதுனு தெரியாம அப்படியே உட்கார்ந்து இந்த மரண காவியத்தை ரசித்தேன்.....


வரும் வருடங்களில் மேலும் பல மொக்கை படங்களை பார்க்க அளவுக்கு
அதிகமா பொறுமையும், சகிப்பு தன்மையும் கண்டமேனிக்கு வளர ஆண்டவனை வேண்டுகிறேன்....!!


இந்த வருஷத்தில் எனக்கு பிடிச்ச படங்கள்னு பார்த்தா... ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, மைனா, அங்காடி தெரு, மதராசப்பட்டினம்,இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்,பாஸ், ........


நீங்களும் பின்னூட்டத்தில்(கமெண்ட்இல்) நீங்கள் இந்த வருடம் பார்த்து வெறுத்த மொக்கை படங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...அப்படியே உங்கள் வோட்டையும் போட்டுருங்க....


உங்கள்
ஜெட்லி...(சரவணா...)

Tuesday, December 14, 2010

அய்யனார் - மொக்கையா சக்கையா??

அய்யனார்....


நிறைய பேரு நீங்க ஏன் கல்யாணத்துக்கு அப்புறம் முதல் படமா நகரம்
பார்த்தீங்கன்னு கேலியும் கிண்டலுமா கேட்டு, காத்திருந்து நல்ல படம்
வரும் போது போய் இருக்கலாம்னு சொன்னாங்க. நல்ல படம் எப்ப
வர்றது நான் எப்போ போய் படம் பார்க்குறதுனு சொல்லிட்டு இந்த வாரம்
அய்யனார் போய்ட்டேன் ஸ்வர்ண சக்தி அபிராமியில் செம கூட்டம்
வாஷ்ரூமில் மட்டும்னு சொல்ல வந்தேன் யுவர் ஆனர்...கொஞ்சம் சின்னது
தான் அப்புறம் கொஞ்ச நேரத்தில் அதுவும் காலி ஆயிடுச்சு தியேட்டர் மாதிரி !!

அய்யனார் படத்துக்கு போறதுக்கு முக்கிய காரணம் தமன்....பாடல்களில் மட்டும் அல்லாமல் பின்னணி இசையிலும் தமன் கல் உடைத்து இருக்கிறார். அப்புறம் ஆதி ஈரத்துக்கு அப்புறம் வர்ற படம் எப்படி பண்ணி இருக்கிறார் என்று பார்க்கலாம்னு போனேன். அவர் உடம்புக்கு சண்டை காட்சி எல்லாம் ஓகே தான் ஆனா கொஞ்சம் ஓவர்டோஸ் மாதிரி இருந்தது.


சந்தானம், முதல் பாதியில் மட்டுமே வந்தார் வர்ற சீன்லாம் நல்ல தான் இருந்தது...ஆனா ரெண்டாவது பாதியில் ஆளே காணோம்...நாயகிக்கு ஒண்ணும் பெருசா வேளை இல்லை...ஏதோ ரெண்டு பாட்டுக்கு உதவி பண்ணி இருக்காங்க.முக்கிய கேரக்டர் ஆதியின் தம்பியாக வரும் விஷ்ணுப்ரியன் நினைத்தாலே இனிக்கும் படத்தில் வருவார். நல்லாவே பண்ணி இருந்தார். ஆனா ஏன் அவருக்கு ஆதி மேல இவளோ காண்டுனு தெரியலை.

ஆதி, படம் ஆரம்பத்தில் இருந்து ஊதாரி, குடிகாரனா காட்டிட்டு தீடிர்னு வாலிபால் காமிச்சிட்டு கோச்னு சொல்றாங்க...அப்புறம் தீடிர்னு மத்திய அரசு வேலை கிடைச்சுடுச்சுனு சொல்றாங்க.... அப்புறம் குடும்பமா சேர்ந்து பாட்டு பாடுறாங்க...படத்தை பார்த்துட்டு இருந்தப்போ நான் கொஞ்சம் குழம்பிட்டேன் எது ப்ளாஷ்பேக்னு தெரியலை....அப்போ அரைமணி நேரம் கழிச்சு படம் பார்க்கவந்த நாலு பேருக்கும் என்ன புரிஞ்சுருக்கும்னு யோசிச்சிட்டு இருக்கேன்....

இந்த படம் கமர்சியல் படமா இல்லை சஸ்பென்ஸ் படமா என்பதை இயக்குனர் தான் சொல்லவேண்டும். முதல் பாதி சூப்பர்ஆ போச்சு ஆனா இன்டெர்வல் டைம்ல படத்தோட மொத்த கதை, திரைக்கதை எல்லாத்தையும் யூகிக்க முடிஞ்சதும் அதுவே திரையில் வர்றதும் கொடுமையான விஷயம். மாவட்டம்னு ஒருத்தர் வந்து சிக்னல் கிடைக்கலன்னு நடு ரோட்ல வந்து பேசுறது ரொம்ப ஓவர்....சுந்தர புருஷன் படத்தில் இருந்து மாப்பிள்ளையாக வருபவர் இதிலும் மாப்பிள்ளையாகவே வருகிறார் என்பது லிம்கா புத்தகத்தில் இடம் பெற வேண்டிய சாதனையாகும்.


இந்த படம் ரொம்ப மொக்கை இல்ல ஆனா மொக்கை தான்.

அய்யனார் - வெறும் தேங்காய் நார்.

இந்த விமர்சனம் மாதிரி பல பேரை சென்று அடைய உங்கள் வாக்கினை போடுங்கள்...

நன்றி...

ஜெட்லி...(சரவணா...)

Friday, December 10, 2010

பேஸ்புக், விருதகிரி, க்ளிக்ஸ்.......

பேஸ்புக், விருதகிரி, க்ளிக்ஸ்.......


படத்துக்கு போறது கொஞ்சம் குறைஞ்சு போச்சு...முன்னெல்லாம் மொக்கை
படம்னாலும் தெரிஞ்சே போவேன்...ஆனா இப்ப அப்படி போக முடியறது இல்லை.போன வாரம் ரத்த சரித்தரம் , சிக்கு புக்குனு வந்தாலும் போக தோணல...விருதகிரி வேற ரீலீஸ் ஆகுது, பாருங்க கேப்டன் படத்தை கூட பார்க்க முடியல.... ஆனா ட்ரைலர் செம டரியல்....நாம கூடிய விரைவில் நாட்டுக்கு தேவை இல்லாத பல விசயங்களை பற்றி விவாதிப்போம்....இப்போதைக்கு நான் பேஸ்புக்கில் அப்போ அப்போ அப்டேட் பண்றேன்...


பேஸ்புக் அப்டேட்ஸ்....


"நான் எதையும் தேடி போவதில்லை வருவதை ஏற்று கொள்கிறேன்..."
நடிகர் பிரபுதேவா பேட்டி!!

அட தினத்தந்தியில் ஹெட்லைன் படிச்சவுடன் நானும் நயன்தாரா, ஹன்சிகா
பத்தி தான் சொல்றாரோனு தப்பா நினைச்சிட்டேன்ப்பா....அவர் பட வாய்ப்பை
தான் சொல்றாருனு புல்லா படிச்ச அப்புறம் தான் தெரிஞ்சது...!!


*****************************************


டி.வி.நொறுக்ஸ்....

ட்ரைலரில் விஜயகாந்த் "பன்ச்" வசனம்...

"டேய் நான் விருதகிரிடா.... பஞ்சபூதத்தோட மொத்தம் உருவம்டா...."

"பார்த்தாலே தெரியுது..."

அருகில் ட்ரைலர் பார்த்து கொண்டிருந்த நண்பன் சொன்னது...

****************************************

செய்தி : டென்னிஸ் உலகின் சூப்பர் ஸ்டார் பீட் சாம்ப்ராஸ் வென்ற அனைத்து கோப்பைகளும் திருடு போயின.....தன் டென்னிஸ் வரலாறே திருடி போய் விட்டதாக சாம்ப்ராஸ் அதிருப்தி...!!

என் கருத்து :
இதுக்கு தான் நான் எந்த போட்டியிலும் கலந்துகிறது இல்ல....**************************************

எத்தனை மொக்கை படத்தில் இருந்து பல பேரை காப்பாத்தி இருக்கேன்....

சமூக சேவர் பட்டம் எனக்கும் கிடைக்குமா???

அப்படியே திருவான்மியூர் பக்கம் 60 லட்சத்தில் வீடு ஒதுக்குவாங்களா??*********************************வளரும் நடிகர்களுக்கு இணையாக இவங்களும் போட்டி போடுராங்களேப்பா......
பை தி வே இந்த படத்தை நான் பார்க்கலைன்னு சொல்லி கொள்ள விரும்புகிறேன்...
**************************************


யாத்தே யாத்தே யாத்தே என்னச்சோ....யாத்தே யாத்தே யாத்தே எதச்சோ....

செம பாட்டு....

ஆமா யாத்தே னா என்ன அர்த்தம்??*************************

மழை செம காட்டு காட்டுது.....!!

வீட்டுக்குள்ள இல்லனா தெருக்குள்ள மழை தண்ணி வரலைனா கூட,,,,கண்டிப்பா இந்த வருஷம் நிவாரண தொகை கிடைக்கும்னுஎனக்கு நம்பிக்கை இருக்கு....

தேர்தல் வருதுடோய்....!!


*****************************

சமீபத்தில் மூணார் சென்று வந்தேன்....அங்கே க்ளிக் செய்த சில படங்கள்
உங்கள் பார்வைக்கு....

இதுவரை மலையாள அட்டு படங்களை மட்டும் பார்த்தவன்...

இப்போது மலையாள பேப்பர் படிக்கும் அரிய காட்சி....!!
********************************
மீண்டும் சந்திப்போம்.....
ஜெட்லி...(சரவணா...)

Monday, November 22, 2010

நகரம் என்பக்கம்.....

நகரம் என்பக்கம்.....


ஒரு மாசமா பதிவு எழுதல..கடைசியா எழுதினது நம்ம சூப்பர் பாக்கு தல சுந்தர் நடிச்ச அகில உலக அதிரடி மெகா ஹிட் ஆன படம் வாடா பத்தி தான். அப்புறம் கல்யாண பிஸி...கடைசி நேரத்தில் நிறைய பேருக்கு தெரிவிக்க முடியல...ஒரு வழியாக 18 ஆம் தேதி திருமணம் முடிந்தது...நேரில் வந்து வாழ்த்திய பதிவுலக அண்ணன்களுக்கு நன்றி..கல்லூரி நண்பர்களுக்கு நன்றி...ஆர்குட் தமிழ் குடும்பம் குழுமம் மற்றும் நேரில் வந்து வாழ்த்திய ஜெயந்தி மேடத்துக்கு நன்றி....போன் மற்றும் மெயில் மூலம் வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள் பல.


கல்யாணத்துக்கு அப்புறம் நாம பார்க்கிற மொத படம் எங்க தலைவர் சூப்பர்
பாக்கு தல சுந்தர்.சி படமா தான் இருக்கணும்னு..அவ கிட்ட சொன்னப்ப...
நீங்க மட்டும் போயிட்டு வாங்கனு சொல்லிட்டா...மொத தடவை படத்துக்கு போறோம்னு அப்புறம் நகரம் பாத்துட்டு என் வாழ்க்கை நரகம் ஆயிட கூடாதேனு சொல்லி நானே என்னை தேத்திக்கிட்டு மைனா போலாம்னு யோசிச்சேன்..ஏற்கனவே ரெண்டு தடவை பார்த்ததால் போகவில்லை....மந்திர புன்னகை ரெட்ஹில்ஸ் சைட் ஓடுற மாதிரி தெரியலை.அப்புறம் வடிவேல் ஜோக் இருக்கும், சுந்தர்.சி டைரக்ட் பண்ணி இருக்கிறார், தமன் மியூசிக் போட்டு இருக்கிறார்... என்று சொல்லி நகரம் படத்துக்கு கூட்டிட்டு போனேன்...(அனுயா பற்றி எதுவும் சொல்லவில்லை...!!)ரெட்ஹில்ஸ் லட்சமி தியேட்டர்க்கு தான் போனோம்....செம கூட்டம்....
நான் சொல்றது தியேட்டர் வெளியே இருக்கிற கடைங்கள்ல என்பதை நோட் பண்ணிக்குங்க....70 ரூபாய் டிக்கெட்..கொஞ்சம் அதிகம் தான்...தியேட்டர்
வெளியே கேவலமா இருந்தது ஆனா உள்ளே சூப்பர்ஆ இருந்தது...என்ன
ஏ.சி மட்டும் தான் போடல....எங்களையும் சேர்த்து மொத்தம் ஒரு பத்து
பேர் பால்கனியில் இருந்து இருப்போம்...நகரம்....நரகமா??


அதே திருந்தி வாழ நினைக்கிற ரவுடி தலைநகரம் கதை தான்னாலும்...
படம் போர் அடிக்காம தான் போச்சு...வடிவேல் சில இடங்களில் சிரிக்க
வைக்கிறார். குறிப்பா அந்த பம்ப் செட் காமெடி....ஆனா அவரு இன்னும்
வின்னர், தலைநகரம் ஸ்டைல் தான் பொல்லொவ் பண்றார்....மாத்துங்க
ஜி....இல்லனா விவேக் மாதிரி மரண பிளேடு ஆக வாய்ப்பு இருக்கு....அனுயா...சரி வேணாம்...வேற டாபிக் பேசுவோம்..தமன் மியூசிக் ஓகே...
அந்த திக்கி திக்கி பாட்டை ரேடியோவில் கேட்டவுடன் கண்டுபிடித்து விட்டேன் அது தமன் மியூசிக் என்று....படம் மொக்கை இல்லாம டைம் பாஸ் ஆச்சு நாங்க தியேட்டர்குள்ள இருந்த வரைக்கும்....ஆமா வேலைகள் காரணமாக , மற்றும் படத்தின் நீளம் காரணமாக கிளம்பி விட்டோம்.நல்ல வேளை படத்தை பார்த்துட்டு வீட்டுக்காரம்மா எதுவும் பீல் பண்ணலை... அடுத்தது எந்திரனுக்கு பிறகு உலகம் முழுவதும் அதிக பரபரப்பை ஏற்ப்படுத்த போகும் ராமராஜனின் மேதை படத்துக்கும் கண்டிப்பா கூட்டிட்டு போறேன்னு சொன்னேன்.... எதிர் ரியாக்சன் பற்றி சொல்ல விரும்பவில்லை....:))

இப்போதைக்கு நான் அப்பீட்டு ஆகிக்கிறேன்...தியேட்டர் நொறுக்ஸ்ஆ?? அட
நீங்க வேற பத்து பேரு தான் இருந்தாங்க அப்படி ஒரு சைலன்ட்....அப்பறம்
எங்கே இருந்து எழுதறது....இன்னும் கொஞ்ச நாள் லீவ் எடுத்துக்கிறேன்...
படம் பார்த்தா கண்டிப்பா அதை பத்தி பதிவு போடுவேன். வேற பொது அறிவு
செய்திகள் எல்லாம் வேற அப்டேட் பண்ணனும்....பார்ப்போம்...மீண்டும்
சந்திப்போம்...


அதுவரைக்கும் நம்ம பவர் ஸ்டார் சீனிவாசன் படத்தோட ஸ்டில்லை
பார்த்து ரசிங்க...
உங்கள்

ஜெட்லி... (சரவணா...)

Monday, October 18, 2010

வாடா - ஒலக பட விமர்சனம்!!

வாடா....வந்துரிச்சுடோய்....!!


அன்பான சுந்தர்.சி ரசிகர்களே வெள்ளிக்கிழமை நீங்க வாடா படம் பார்க்க
போய் இருந்தா பெட்டி வந்திருக்காது....சனிக்கிழமை தான் பெட்டி வந்ததுனு
சொன்னாங்க, என்னது சவபெட்டியா??னு எல்லாம் கேட்க கூடாது.நான்
சொல்லிட்டு இருக்கிறது வாடா படத்தோட பெட்டி பத்தி. நம்ம சூப்பர் பாக்கு தல சுந்தர்.சி. அவர்களை பற்றி ஊரில் அவர் இத்தனை படத்தில் நடிச்சு என்னத்த 'கலட்டிடாறுனு கேட்கருவங்களுக்கு என்கிட்ட சில பதில் இருக்கு....
அதாவது இந்த படத்தில் கலெக்டர்ஆ வந்து கண்ணாடியை அடிக்கடி
கலட்டுராறு,,, ஒரு சீன்ல நாயகியோட பான்ட்டை கூட கலட்டுராறுனா
பாருங்க...


அகில கெரக சுந்தர்.சி நாறபணி மன்றம் சார்பில் இந்த பதிவை வெளியிடுவிதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.


நான் சனிக்கிழமை நைட் ஷோ ஜெயந்தி தியேட்டர்ல படம் பார்த்ததுக்கு ஒரு பெரிய காரணம் இருக்கு ஏன்னா சென்னை சிட்டியில் அங்கே தான் டிக்கெட் விலை கம்மி. எப்படியும் படம் டம்மினு உலகத்துக்கே தெரியும் அதை ஏன் அதிக காசு கொடுத்து பார்த்துக்கிட்டுனு அங்கேயே இந்த மகா காவியத்தை பார்த்துட்டேன்.இந்த ஊரே ஏன் உலகமே நீ ஏன்ப்பா வாடா படத்தை பார்க்க துடிக்கிற அப்படின்னு கேட்டாங்க....அதுக்கு ஒரே பதில் நானும் பார்க்கலைனா யாரு இந்த உலகத்துக்கு எடுத்து சொல்றது.... எல்லாம் கெரகம்....


வாடா என்ன கதை??


சரி நாம படத்தோட கதைக்கு வருவோம்....என்னது அப்படி ஒண்ணு இருக்கா??னு நீங்க மெரசல் ஆகாதீங்க...ஆனா இருக்கு படு பயங்கரமான கதை...விஜய் நடிச்ச மதுர படம் பார்த்து இருக்கீங்களா?? அந்த மாதிரி இருக்கும்...என்ன இந்த படத்துல கொஞ்சம் நேரம் ரிஷிகேஷ் ஊரை காட்டுறாங்க....முதல் காட்சியில் இருந்து அப்படியே அனல் பறக்குது காரணம் தியேட்டர்ல சுத்தமா காத்து வரல என்பது மட்டுமே என்று இங்கே சொல்லி கொள்ள விரும்புகிறேன் யுவர் ஆனர்.

விவேக் பத்தி என்னத்த சொல்றது போங்க.சுருளிராஜன் கெட்டப் போட்டுட்டு
காமெடி அப்படின்னு ஏதோ பண்ணிட்டு இருந்தார். ஒரு காட்சியில் மட்டுமே
சிரிப்பு வந்தது. நல்ல வேளை இந்த கொடுமையெல்லாம் பார்க்க சுருளிராஜன்
இல்ல. சுருளிராஜனோட கஞ்சன் காமெடி எப்போதுமே என் ஆள் டைம் பேவரைட்.இமான் பத்தி ஏற்கனவே சொன்னது தான் அவர் பாட்டே ரீமிக்ஸ் மாதிரி தான் இருக்கும் இதுல தனியா ரீமிக்ஸ்னு சொல்லி ஆட்களை கொல்லுகிறார்.

ஷெர்லின் நம்ம மசாலா பட நாயகியாக வந்து மூஞ்சில ரியாக்சன் தவிர வேற எல்லாத்தையும் நல்லாவே காட்டுறாங்க என்பது குறிப்பிடத்தக்கது. அப்புறம் அந்த சீரியல் நடிகர் அதாங்க நேபாளி படத்தில் கூட போலீஸ்க்காரர வருவாரே அவர் வந்து அப்போ அப்போ சாவல் விட்டுட்டு போறார்.


FACE TO FACE


படத்தோட உயிர்நாடி காட்சியே அந்த பைக் மேல நின்னு சுந்தர்.சி சுட் பண்றது தான் ஏன்னா அந்த காட்சி தான் இன்டெர்வல் ப்ளாக்...பல பேரு தியேட்டரை விட்டு தப்பிச்சு உயிர் பிழைக்க அந்த காட்சி ரொம்ப உதவிச்சு. ஆனா பாருங்க அப்பமும் நான் போகலை....நம்ம தல பரமசிவன் படத்தில பைக்ல கிழே நின்னு சுட்டார் ஆனா எங்க சூப்பர் பாக்கு தல பைக் மேல நின்னு சுட்டு அரிசி கடத்துரவனை பிடிக்கிறேன்னு சொல்லி மூணு லாரியோட டீஸல் டாங்கை சுட்டு அந்த அரிசியை யாருக்கும்
கிடைக்காத படி செய்ஞ்சுடுறார்.


கலெக்டர்னு சொன்னவுடனே அப்படியே பக்கவா முடி வெட்டிட்டு இருப்பார்னு மட்டும் நீங்க நினைக்காதீங்க...ஒரே ஒரு கண்ணாடி மட்டும் தான் மாட்டி இருப்பார் என்ன தலையில சூப்பர் பாக்கு பிளீச் மட்டும் இருக்காது அவ்வளவுதான். படத்தில் எனக்கு ரொம்ப பிடிச்ச வசன காட்சி ஒன்னு இருக்கு... கலெக்டர் நண்பரிடம் போய் நாயகி...


நாயகி : எங்கையா உங்க கலெக்டர்...நான் அவர் வருவார்னு எவளோ நேரம்
வெயிட் பண்ணிட்டு இருக்கேன்...


நண்பன் : நீங்க எதுக்கு வெயிட் பண்றீங்க...நீங்க யாரு??


நாயகி : ஐட்டம்...


நண்பன் : ஹலோ என்ன சொல்றீங்க...


நாயகி : இல்ல நான் கலெக்டர்ஆ லவ் பண்றேன்னு சொன்னேன்...


இந்த மாதிரி வசனமெல்லாம் வாடா உலக படத்தில் மட்டுமே வருகிறது...
இதற்க்காகவே நீங்க இந்த படத்துக்கு போகணும்.அது மட்டுமில்ல வாடா
படம் பார்ப்பதனால் மனவலிமை, பொறுமை , தைரியம் என எல்லாமே
கண்டமேனிக்கு வளரும். வாடா பட பெயருக்கு வரிவிலக்கு கொடுத்தாங்களா
இல்லையானு நமக்கு தெரியாது...ஆனா வாடா படம் பார்க்க போறவங்களுக்கு அரசு நிவாரண நிதியில் இருந்து ஏதோ ஒரு அமௌன்ட் கொடுத்தால் தேவலை!!

வாடா - காஞ்சி போன பேடா....


பாருங்கள் வாடா படத்தை அடையுங்கள் சமாதி நிலையை..!!
ஹே கில்மா கி ரவா...!!


வாடா படத்தை நம்ம கவுண்டர் பார்த்தார்னா என்ன சொல்லி இருப்பார்....


" அடேய் சூப்பர் பாக்கு மண்டையா உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா...அது ஏன்டா எப்பவுமே கழுத்துல ஒரு துண்டை சுத்திட்டு வர்ற..?? ஹா..எனக்கு புரிஞ்சு போச்சி..கோவில்ல உண்டக்கட்டி தருவாங்க அதை வாங்கி துண்டுல கட்டிக்கிட்டு ஒரு வாரம் திங்கலாம்னு தானே....நல்லா காட்ட்ரிங்கப்பா டகால்டி..."தியேட்டர் நொறுக்ஸ்..


# படத்தோட முதல் இருபது நிமிஷம் பார்த்துட்டு நான் ரமணா, கஜினி ரேன்ஜ்க்கு பீல் பண்ணிட்டு இருந்தேன் ஆனா பக்கத்தில் இருந்த நண்பர் "அநேகமா இது தான் சுந்தர்க்கு கடைசி படமா இருக்கும்"னு சொல்லி நம்மை போன்ற ரசிகர்களை ஆப் பண்ண நினைக்கிறார்கள்...நாம கவலை பட வேணாம் வரிசயா நமக்கு தலைவலி கொடுக்க ஸாரி குதுகலம் கொடுக்க சுந்தர் படங்கள் வந்து கொண்டே இருக்குது....

# இன்டெர்வல் அப்போ சில பேரு விட்டா போதும்னு எஸ்கேப் ஆகிட்டாங்க..
சில பேரு அடிச்ச சரக்கில் மட்டை ஆகி இருந்தாங்க....


# படத்துக்கு ஓரளவுக்கு கூட்டம் இருந்தது...என் கலேரியில் ஒரு பதினைந்து பேர் இருந்தோம்...ஆனா இன்டர்வல்க்கு பிறகு அது ஆறாகி போச்சி...இந்த படத்தை நான் இன்டர்வல்க்கு பிறகும் நான் ஏன் பார்த்தேன்னா... படத்தில் ஒரு சஸ்பென்ஸ் இருந்தது...அதுவும் மொக்கையா தான் இருந்தது ஆனா இந்த இமான் பையன் இருக்கானே ரீமிக்ஸ் பண்றேன்னு சொல்லி "என்னடி ராக்கமா" பாட்டை கொலை பண்ணி காதை செவடாக்கிட்டாறுப்பா...அப்போ எஸ்கேப் ஆகி வந்தவன் தான்....


# என் வாழ்நாளில் நான் பார்த்த மொக்கை படத்துக்கு இந்த படத்துக்கு
மட்டும் தான் யாருமே கத்தலை....அதனால நொறுக்ஸ் அவ்வளவா தேரல...


இந்த விழிப்புணர்வு பல பேரை சென்று அடைய உங்கள் வாக்கு முக்கியம் நண்பர்களே....!!


ஜெட்லி...(சரவணா...)

Tuesday, October 12, 2010

எந்திரன்.... கலீஜா....

எந்திரன், கலீஜா மற்றும் வாடா....


கம்ப்யூட்டர் கொஞ்ச நாளா வேலை செய்யலை ...நான் எந்திரன் படத்துக்கு
விமர்சனம் எழுத கூடாதுனு யாரோ செய்ஞ்ச வெளிகிரக சதினு நினைக்கிறேன். இதை கண்டிச்சு கூடிய விரைவில் நாமா ஏதாவது ஒரு முட்டு சந்தில் நின்னு ஒரு போராட்டம் நடத்துவோம்..நீங்களும் வருவீங்கனு நம்புறேன்...எந்திரன் :


எந்திரன் படத்துக்கு எங்க ஏரியா தியேட்டரில் டிக்கெட் ரேட் 150,300,500 னு சொன்னாங்க...அதனால கொஞ்சம் ஒதுங்கி தான் இருந்தேன். அப்புறம் ஆல்பர்ட் தியேட்டரில் கவுன்டர் ரேட் விலையில் டிக்கெட் கிடைத்தது.எனக்கு படம் ஓகே. ஆனா ரெண்டாவது தடவை அபிராமியில் டிக்கெட் கிடைச்சும் நான் போகல...காரணம் ரெண்டாவது பாதி. சுவாரிசியம் இல்லாத ரெண்டாவது பாதியை ஷங்கரிடம் இருந்து நான் எதிர்ப்பார்க்கல...


ஆனா ரஜினி இந்த மாதிரி science fiction படத்தில் எந்த ஒரு ஹீரோ பில்ட்
அப் இல்லாமல் நடித்தது பெரிய விஷயம். ஐஸ்வர்யா ராய் அந்த சாரியில்
கொள்ளை அழகு...ரெண்டாவது தடவை பார்க்க வந்த என் நண்பன்
அந்த காட்சியை மட்டும் விழித்து கொண்டு பார்த்தான். அப்புறம் வில்லன்
டோனி, என்ன ஒரு பில்ட் அப் இவருக்கு....ஆனா புஸ் ஆக்கிட்டாங்க...
படத்தோட நீளமும் கொஞ்சம் ஜாஸ்தி தான்...!!எந்திரனாக வரும் ரஜினியின் வசனங்கள் நச்... மே மே...கத்துவாரே
உண்மையிலே செம...சந்தானத்தை மொக்கை பண்ணிட்டாங்க..
கடைசி கிராபிக்ஸ் காட்சிகள் பத்தி சொல்றதுக்கு ஒண்ணும் இல்லை...


அப்புறம் இன்னொரு விஷயம் கவனிச்சிங்களா....மொதல்ல சன் டி.வி.யில்
ட்ரைலர் போடும் போது சூப்பர் ஸ்டார் ரஜினி பேர் தான் முதல்ல வரும்...
ஆனா இப்போ ரெண்டு நாளா சன் பிக்சர்ஸ் கலாநிதி பேர் தான் முதலில்
வருகிறது.... என்னனு தெரியல....??


kaleja :


எந்திரன் படம் வந்தாலும் வந்தது வேற எந்த தமிழ் படமும் ரீலீஸ் ஆகல...
சரி இன்னொரு science fiction படத்தோட விளம்பரம் பார்த்தேன்..அது உலக
படமும் கூட தான்...

ஆனா எனக்கு ஆலந்தூர் எஸ்.கே. தியேட்டர் எங்கே இருக்குனு சரியா தெரியல..அதனால அந்த ப்ளானை ட்ராப் பண்ணிட்டு நேரா நம்ம மகேஷ் பாபு நடிச்ச கலீஜா படத்தை பார்க்க காசினோ போய்ட்டேன்...படம் சுமார், இல்லை மொக்கைனும் தெரிஞ்சு தான் போனேன். ஏன் விஜய் இப்படி கெட்டு போனார்னு மகேஷ் பாபு படத்தை பார்த்தவுடன் தான் தெரிஞ்சுது. என்னா பில்ட் அப்... இருந்தாலும் ஓகே ஓரளவுக்கு டைம் பாஸ் ஆச்சு...ஆனா படத்தோட நீளம் ரொம்ப ஜாஸ்தி...வர வர படத்தோட நீளம் என்னை ரொம்ப யோசிக்க வைக்குது...மகேஷ் பாபு அப்போ அப்போ ஒரு கிழிஞ்ச துணியை கழுத்தை சுத்திக்கிட்டு
வர்றார்...இந்த மாதிரி ஸ்டைலை எங்க சூப்பர் பாக்கு தல சுந்தர்.சி அவர்கள்
குரு சிஷ்யன் படத்திலே செய்ஞ்சிட்டார். லாஜிக் அப்படின்னு நீங்க பார்த்தீங்கனா சுத்தமா இல்லைன்னு தான் சொல்லணும்..சரி கலீஜா அப்போ கலீஜ்ஆ??னு நீங்க கேட்டா அப்படின்னு சொல்ல முடியாது... காரணம் அனுஷ்கா... நல்லா வெளிப்படுத்தி இருக்காங்க திறமையை தான் சொல்றேன். பிரகாஷ் ராஜ் வழக்கமான வில்லனா வர்றார்... படம் எப்போ முடியும் எப்போ கிளம்பலாம்னு காத்துகிட்டு இருந்தேன்... ஏற்கனவே அனுஷ்கா நடித்த வேதம் படத்தை பார்த்து இருக்கிறேன்... இப்போது சிம்பு அதை வானமாக நடித்து கொண்டிருக்கிறார். எங்க ஏரியா ஜெயந்தி தியேட்டரில் வேதம் தெலுங்கு படத்தை போட்டிருந்தார்கள்...கிழே விளம்பரத்தை பாருங்க...நான் ரெண்டாவது தடவை இந்த படத்தை பார்க்க முடியாதது ரொம்ப வருத்தமா இருந்தது....ஏரியா புல்லா தெரிஞ்சவங்க தான் இருக்காங்க...இந்த நாடு என்னை பத்தி என்ன நினைக்கும்...என்க்கிட்ட சொல்லாம வீட்டு பக்கத்தில் இருக்கிற கல்லூரி மாணவர் ஒருத்தர் தொப்பி எல்லாம் போட்டு போய் படத்துக்கு போயிட்டு வந்தார். பயங்கர கூட்டமாம்....முக்கா வாசி பேர் சீன் இல்லாமல் பாதியிலே போய்ட்டாங்களாம்... ஆனா அவன் ரோவில் பக்கத்தில் உட்கார்ந்த இருந்த ஒரு பொக்கை தாத்தா மட்டும் கடைசி வரைக்கும் பார்த்தாராம்...முதல்ல இந்த மாதிரி ஒரு நல்ல படத்துக்கு
இப்படி விளம்பரம் போடுறதை தடை செய்யணும்.... அப்புறம் எத்தனை பேரு பிட் போடுவாங்கன்னு ஆசையா வந்து இருப்பாங்க...ச்சே.....


பிட் படம் பார்க்குறவங்க மனுசு பிட் படம் பார்க்குரவனுக்கு தான்
புரியும்னு சொல்வாங்க......உங்களுக்கும் புரிஞ்சு இருக்கும்னு நினைக்கிறேன்....வாடா....!! <--GET READY FOLKS -->


அதோ இதோ என்று நம்மை வாட வைத்த வாடா படம் மீண்டும் வருகிறது....
வரும் 15 ரெடி ஆகுங்க....முதல் காட்சி போவோம்...வீட்ல சொல்லிட்டு வந்துருங்க... நமது அண்ணன் சூப்பர் பாக்கு தல நடிக்கும் வாடா படத்தை வாடாமல் வதங்காமல் பார்க்க இப்போதே படை எடுங்கள்....
வாடா படத்தை ஏற்கனவே நாம முன்னோட்டம் கொடுத்து இருக்கோம்...
கிழே கிளிக் பண்ணி படிச்சு பார்த்துட்டு தெளிவா இருங்க...


வாடா - உலக சினிமாவுக்கு ஒரு சவால்!!வாடா படம் ஏற்கனவே ரீலீஸ் தள்ளி போனதில் இருந்து அமெரிக்கா நாட்டு
அதிபர் ஒபாமா தினமும் நைட் ஆனா மிஸ்ட் கால் கொடுத்து படம் எப்போ ரீலீஸ் ஆகும்னு கேட்டு ஒரே தொல்லை கொடுக்கிறார். ஒரு வேளை இந்த தடவையும் ரீலீஸ் தள்ளி போனா நாம வாடா படம் மீட்பு குழுனு ஒண்ணு ஆரம்பிச்சு அதற்கான வேலையில் இறங்குவோம் நண்பர்களே....

வாடா வாடா னா வர மாட்டான்டா...
போட போட னா போக மாட்டான்டா...
அவன் தான்டா எம தர்மன்....
( பாடல் இடம் பெற்ற படம் கோல்மால்...)நல்லதை நாலு பேருக்கு தெரிவிக்க நீங்க ஆசைப்பட்டா உங்க வாக்கை
போடுங்க....
ஜெட்லி...(சரவணா...)

Monday, September 20, 2010

வாங்க பொங்குவோம்...!!

வாங்க பொங்குவோம்...!!

என் அன்பான வலையுலக நண்பர்களே, புதுசா வலையுலகில் வந்த சில நண்பர்களுக்கு இந்த பதிவு ஒரு உதவியா இருக்க வாய்ப்பிருக்கு....
சில மாதங்களாக ப்ளாக் படித்து வரும் என் நண்பன் பல பேர்
பொங்குவதை பார்த்து நீ எப்ப மச்சி பொங்க போறேன்னு கேட்டான்.
அதனால நாமும் பொங்குவோம் என்று முடிவெடுத்து...இதோ உங்கள்
பார்வைக்கு ...

ஹாசினி பேசும் படம்...

தெரியதனாமா ஹாசினி விமர்சனம் பண்ற பேசும் படத்தை ஜெயா டி.வி.யில்
முடியும் போது பார்த்து விட்டேன்...எப்பா நம்மளை விட படத்தை இப்படி
கிழி கிழினு கிழிகிறாங்க....நான் பார்த்தது பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின்
விமர்சனத்தை. இப்படியெல்லாம் கூட விமர்சனம் பண்ணலாமானு என்னை
யோசிக்க வச்சிட்டிங்கா மக்கா....அதனால தான் விமர்சனத்துக்கே விமர்சனம்.


உதாரணம் : படத்தில் ஆர்யா நயன்தாராவை சூப்பர் பிகர்னு சொல்றது
உலக மகா தப்பாம்... தனிப்பட்ட முறையில் சொல்ற மாதிரி இருக்குதாம்...
இனிமே இப்படி யாரும் படம் எடுக்க கூடாதாம்..இயக்குனரும் வசனகர்த்தாவும் திருந்தனுமாம்...அது மட்டும் இல்லாம படம் பார்க்கிற நாமும் திருந்தனுமாம்!! இதில என்ன காமெடினா இவங்க தான் பூனைக்கு மணி கட்டுரங்கலாம் அதை அவங்களே சொல்லிக்கிறாங்க.... நல்லா கட்ராங்கையா மணி...!!

இதோ அந்த வீடியோ...இதுக்கு மேலையும் பொங்கலைனா எப்படி... இவங்க நியாய தராசுனு சொல்லி அடிக்கிற கூத்து இருக்கே செம காமெடி...நம்ம வெகு ஜன மக்கள் ரசித்த அனைத்தையும் மொக்கை என்று கூறுவதை என்னவென்று சொல்வது.
சுஹாசினி ராவணன் படத்தின் வசனகர்த்தா என்று நினைக்கிறேன்...
அந்த படத்தை பார்த்து வெளியே வந்தவர்களின் துக்கத்தையும் பாஸ்
படத்தை பார்த்து வெளியே வந்தவர்களின் சந்தோசத்தையும் பார்த்த
காரணத்தால் நானும் பொங்க உரிமை இருக்கு என்று இங்கே சொல்லி
கொள்ள விரும்புகிறேன் யுவர் ஆனர்....


படம் பார்த்து ரசிச்சவங்க எல்லாம் முட்டாள் நான் தான் அறிவாளினு
சுஹாசினி மேடம் சொல்ற மாதிரி இருக்குது. அப்புறம் இந்தம்மா வசனம்
பேசிக்கிட்டே இருக்காங்க அதையெல்லாம் கம்மி பண்ணனும்னு சொல்லி
இருக்காங்க... எனக்கு ஒரு கேள்வி கேட்கணும் போல இருக்கு அது
இது தான் "எப்படி உங்க படத்தில் வசனம் காதுல விழாம இருந்ததே
அது மாதிரியா.."னு கேட்கணும். நல்ல வேளை சந்தானத்தை மட்டும்
விட்டு வச்சாங்க....ஓர்குட் நண்பர் குமரன் கிட்ட இதை பத்தி நான்
சாட்டில் கேட்ட போது அவர் "ஒரு வேளை உதயநிதி ஸ்டாலின் படம்
என்பதால் இப்படி சொல்றாங்க போல" என்றார்... இருக்கலாம் யாருக்கு
தெரியும்.


பாஸ் படம் ஒரு டைம் பாஸ் படம் நோ லாஜிக் அப்படின்னு சின்ன
குழந்தைய கேட்டா கூட சொல்லிடும் ஆனா அது சுகாசினி மேடத்துக்கு
தெரியாம போச்சு..ஏதோ சீரியஸ்ஆன படத்துக்கு சொல்ற மாதிரி செம
காமெடி பண்ணி இருக்காங்க சுஹாசினி மேடம்.ஒரு வேளை பாஸ் படம் ராவணன்வோட நல்ல ஒடரதுனால வயிதெரிச்சல்ஆ இருக்குமோ??
மொதல்ல இவங்க உலக படம் எடுக்கறதை நிறுத்திட்டு நல்ல தமிழ் படம்
எடுத்தா என்னை மாதிரி பாமரனுக்கு வசதியா இருக்கும் அதாவது படத்தை புரிஞ்சிக்கறதுக்கு வசதியா இருக்கும்னு சொல்ல வந்தேன். எனக்கு
இதுவரைக்கும் ராவணன் படத்தில் விக்ரம் கேரக்டர் சத்தியமா புரியலைங்க...


அப்புறம் இன்னொரு காமெடி வேற சொல்லிகிறாங்க...அந்த மாமா
மாமா உன் பொண்ண கொடு மாமா பாட்டில் ஏன் மாமா வந்தார்?னு
அறிவுபூர்வமா ஒரு கேள்வி கேட்டு இருக்காங்க...மாமா பாட்டில் மாமா
வராமா ஆயாவா வருவாங்க... என்ன கொடுமை கேள்வி இது..,,,


ஆக மொத்தத்தில் எனக்கு டி.வியை உடைக்கணும் போல் இருந்தது...
ஆனா உடைக்கல ஏன்னா அது கலைஞர் கொடுத்த டி.வி.இல்ல...


இன்னும் நிறைய விஷயத்துக்கு பொங்கணும் நண்பர்களே...

* ஜெனீலியா அவர்கள் டி.வி பேக் விளம்பரத்தில் ஒரு ஜட்டி போட்டு
கிஸ் அடிக்கும் போது அவர் பேக் மூலம் ரூம் கேமராவை மறைக்கிறார்...
இந்த விளம்பரத்தால் நம்ம சமூகம் சீரழிந்து போகும்...இந்த மாதிரி எல்லாரும் பண்ணா scandal videos என்பதே இல்லாம போய் விடும் வாய்ப்பு இருக்கிறது...
அதனால் எல்லாரும் பொங்குங்க...!!


http://www.youtube.com/watch?v=uQTLpeQ28XQ

* முந்தாநேத்து மெஸ்இல் சாப்பிடும் போதும் இட்லிக்கு கெட்டி சட்னி
இல்லன்னு சொல்லிட்டான்...அதனால கெட்டி சட்னி தராத அந்த பையனுக்கு
எதிரா கண்டிப்பா பொங்கியே ஆகணும்..


*எந்திரன் படத்துக்கு என்னை மாதிரி சாதாரண ஆளுங்களுக்கு சத்யம்,
எஸ்கேப், அபிராமி போன்ற தியேட்டர்களில் முதல் நாள் டிக்கெட்
கிடைக்குமா...?? கண்டிப்பா கிடைக்காது அனைத்து பண்பலை
அலைவரிசையும் மொத்தமா டிக்கெட் வாங்கி ஒரு ஈத்து போன
கேள்வியை கேட்டு அது மூலமா ஒரு அமௌன்ட் சம்பாதிச்சு
டிக்கெட்டை கொடுப்பாங்க.... ஹ்ம்...நான் அதே தியாகராஜாவில்
டிக்கெட் எடுத்து போலீஸ் கிட்ட அடியும் வாங்கி தான் படத்துக்கு
போகணும்னு போல..... இதுக்காக யாராவது பொங்குங்க மக்கா...

இது மாதிரி பொங்கரதுக்கு உங்களுக்கு டிப்ஸ் தர நான் ரெடி...
சும்மா ஜாலியா பொங்குங்க...


ஜெட்லி...(சரவணா)

Saturday, September 18, 2010

வந்தே மாதரம் - - எதிர் வீட்டு பார்வை!!

வந்தே மாதரம்....!!போன வாரம் ரீலீஸ் ஆகுதுன்னு சொன்னாங்க...நானும் அபிராமி 7 ஸ்டார்
தியேட்டரில் புக் பண்ணினேன். அப்புறமா படம் வரலைன்னு வியாழக்கிழமை அன்னிக்கே தியேட்டரில் இருந்து போன் பண்ணினார்கள். பாஸ் படத்தை
தியாகராஜாவில் பார்க்க இருப்பதால் டிக்கெட்டை கான்சல் செய்ய சொன்னேன்.புதன்க்கிழமை வரை அக்கௌன்ட்டில் காசு வராததால் மீண்டும் அபிராமிக்கு போன் பண்ணின அப்புறமா தான் டிக்கெட்டை கான்சல் பண்றாங்க....


இந்த படத்துக்கெல்லாம் ஏன்டா புக் பண்ணிட்டு போறேன்னு ரெண்டு நண்பர்கள் கலாய்ச்சுது தான் மிச்சம்....ஹ்ம்..அவங்களுக்கு என்ன தெரியும் நான் சின்ன பையன் ஏதோ மசாஜ் சீட்க்கு ஆசைப்பட்டு மீதி எந்த படம் வந்தாலும் அந்த சீட் கிடைக்கறது இல்லன்னு புக் பண்ணிட்டேன். பைனலா இன்னைக்கு நம்ம ஓர்குட் நண்பர் அசோக் சொல்ற மாதிரி அடையார் ஐநாக்ஸ் என்று நம்பப்படுகிற கணபதிராமில் படத்தை இரவு காட்சி பார்த்துட்டேன்....


என்ன கதை??

நம்ம நாட்டு நதிகளை இணைக்க போகிற நிகழ்ச்சியில் நம் நாட்டு
தலைவர்களை தீவிரவாதிகள் கொள்ள திட்டம் போடுறாங்க...அதை
எப்படி மம்மூட்டியும் அர்ஜுனும் சேர்ந்து முறியடிச்சு, கெடா வச்சு
சூப் குடிச்சாங்க என்பதே மீதி திரைக்கதை கதை எடிட்டிங் எல்லாம்.
காலம் காலமா நாம விஜயகாந்த் படத்தில் பார்த்துட்டு வர்ற கதை
தான் இது.... என்ன விஜய்காந்த்க்கு பதில் இதில் ரெண்டு ஹீரோக்கள்...
அவ்வளவே....
படம் ஆரம்பிச்ச உடனே சிநேகா பாட்டு...மம்மூட்டி கொஞ்சம் நேரம்
மொப்பம் பிடித்தவுடன் அடுத்தது தீவிரவாதியை பிடிக்க நம்ம ஊர்ல
இருக்கிற அனைத்து மாவட்டத்துக்கும் போறாங்க...அப்புறமா சிநேகா
ஆளையே காணோம்...இன்டெர்வல் அப்புறம் ஒரு சீன் அதாவது ஒரு
காட்சி மட்டும் வருவாங்க அப்புறமா கொஞ்ச நேரம் கழிச்சு ரெண்டு
சீன் வருவாங்க...

ஹென்றி அவர்களின் கதை திரைக்கதை ரொம்ப பழசு...ஆனா புதுசா
ஒரு விஷயம் அவர் ட்ரை பண்ணி இருக்கிறார். ஆனா எனக்கு என்னமோ
அது மொக்கையா தான் இருந்தது. படத்தில் உருப்படியா இருந்தது ரெண்டு
ஐட்டம்ங்க அதாவது ரெண்டு ஐட்டம் பாட்டுனு சொன்னேன்ங்க. ஆனா
அதிலும் அவ்வளவா தெளிவில்லை. அந்த ஐட்டம் பாட்டு ஏன் வருது எதுக்கு வருதுன்னு ஹென்றிக்கே வெளிச்சம். இந்த ஐட்டம் பாட்டின் வரிகள் கண்டிப்பாக பள்ளி பிள்ளைகளின் பாட புத்தகத்தில் இடம் பெற வேண்டும்...
இதோ அந்த பாட்டின் முதல் வரி...

1 2 3 4 5 6 7 உன் ஆசைக்கு நான் என்றைக்கும் 24x7 ......

இமானின் பின்னணி இசை பயங்கரம்..
ஒரே மியூசிக் தான் படம் முடியுற வரைக்கும்...EVERYBODY HANDSUP என்று
பின்னணியில் வரும்..படத்தில் யாரும் கை தூக்கல..தியேட்டர்ல தான்
என்னை மாதிரி நிறைய பேர் கொட்டாவி மேல கொட்டாவி விட்டு கையை தூக்கிட்டு இருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது!! ]ஹென்றி படம்னு நம்பி போனேன்...ஹம்..போனதுக்கு அர்ஜுன் சண்டை
ஓகே.இருந்தாலும் மரத்துக்கு மரம் தாவி அடிக்கறது எல்லாம் ஓவர் சார்.
அநேகமா குருவிக்கு அப்புறமா நம்ம அர்ஜுனும் ரியாஸ் கானும் தான்
ஒரு பில்டிங் இருந்து இன்னொரு பில்டிங்க்கு பறந்து போய் இருப்பாங்கனு
நினைக்கிறேன். அப்புறம் பெலிக்கான் பறவை மூலம் தீவிரவாதிகள்
விஷயத்தை பகிர்வது என்று நம்மை பூ கடையிலே உட்கார வைத்து
விடுகிறார்கள்.

தியேட்டர் நொறுக்ஸ்:


# படத்துக்கு போனதால் கிடைத்த ஒரே சந்தோசம் எந்திரன் ட்ரைலரை
ரெண்டு தடவை பார்த்தது தான்.

எந்திரன் ட்ரைலர் போட்டு முடித்ததும் ஒருவர்...

"இதுக்கே அம்பது ரூபாய் சரியா போச்சு..." என்று கத்தினார்.

# படம் போட்டு இருபது நிமிஷத்தில் படம் நிறுத்தி ஒரே இருட்டா போச்சு...
பக்கத்தில் இருந்தவர்..

"வந்திருக்கிறதே கொஞ்ச பேரு...அவங்களையும் கிளப்பி விட்ருவாங்க போல..."
என்று நக்கல் அடித்தார்.


# இந்த படத்துக்கு இன்டர்வல் வாசகம் REFRESH YOUR MIND ...

ஒருவர் " தூங்கிட்டு இருக்கறவங்களை மூஞ்சை கழிவிட்டு வர சொல்றாங்க போல.." என்றபடி நடந்து சென்றார்.

குடும்பத்துடன் வந்த ஒருவர் " பத்து வருஷம் முன்னாடி ரீலீஸ் பண்ண
வேண்டிய படத்தை இப்போ விட்ட்ருகானுங்க..." என்று திட்டி கொண்டே
பாப்கார்ன் வாங்க சென்றார்.

# இன்டர்வல் அப்ப நான் பால்கனி ஜன்னல் பக்கத்தில் நின்னுட்டு
வெளியே சும்மா வேடிக்கை பார்த்துட்டு இருந்தேன்... அப்போ ரெண்டு
மூணு பேர் பைக் எடுத்துட்டு கிளம்பினாங்க என்பது வேறு விஷயம்...
ஒரு ஆள் என் பக்கத்தில் வந்து ஜன்னல் வழியே எட்டி எட்டி
அவசரமாக பார்த்தார்...நான் பயந்துட்டேன் எங்கே ஜன்னல் வழியா
குதிச்சு எஸ்கேப் ஆக போறாரோனு....நல்ல வேளை அப்படி ஒரு
சம்பவம் நடக்கலை...


# சிநேகா வரும்போதும், அர்ஜுன் பைட்டின் போதும் கொஞ்சம் சவுண்ட்
வந்தது...மற்றபடி பின் டிராப் சைலன்ஸ் தான்.

# கடைசியில் இரண்டு ஹீரோக்களும் தீவிரவாதியை பொரட்டி எடுத்த
பின் மாறி மாறி வசனம் பேச ஆரம்பிச்சுடுவாங்க...இதை பார்த்த நம்
பின்சீட்காரர் அவர் நண்பரிடம்...

" பேசியே திருத்திடிவாங்கோலோ..." என்று பயத்தை வெளிப்படித்தினார்...
நல்ல வேளை அப்படி எதுவும் நடக்கலை...


இந்த விழிப்புணர்வு மேலும் பல பேரை சென்று அடைய உங்க வாக்கு
முக்கியம்...நாலு பேருக்கு நல்லது செய்யுங்க...என்னை மாதிரி...!!


உங்கள்

ஜெட்லி...(சரவணா...)

Friday, September 17, 2010

நல்லா கேட்காரங்கயா டீடெயிலு.....!!

ஓசி இப்போ இல்லை ஈசி....!!

நாமும் எத்தனை நாள் தான் பழைய செல் நம்பர் வச்சிக்கிட்டே அலையறது
புதுசா செல் நம்பர் மாத்தலாம்னு பார்த்தா துபாயில் இருந்து எப்போதாவது
சென்னை வரும் நண்பன் "நீ மட்டும் தான்டா நம்ம குரூப்ல இன்னும் நம்பர் மாத்தாம இருக்க...உன் செல் நம்பர் என் மனசில் அப்படியே இருக்குனு..." பிட் போட்டவுடன் நானும் நம்பர் மாத்தும் எண்ணத்தை கைவிட்டுவிடுவேன்...


ஆனா இந்த தடவை அப்படி ப்ரீயா விடறதா இல்லை காரணம் எங்க வீட்டு
பக்கத்தில் இருக்கும் பையன் ஒருவன் அடையாரில் ஒரு கடையில் ப்ரீ
சிம் கார்டும் கூடவே நூப்பது ரூபாய் டாக் டைமும் தருகிறார்கள்,உங்க லைசன்ஸ் ஜெராக்ஸ் ரெண்டு போட்டோ போதும்னு சொன்னான்...
அதுவும் இல்லாம நாங்கெல்லாம் வாரம் வாரம் ஒண்ணு வாங்கி
டாக் டைம் பேசிட்டு தூக்கி போட்டிருவோம் என்று எக்ஸ்ட்ரா ஐடியா
வேறு கொடுத்தான். ரைட் நமக்கு தூக்கி போடுற ஐடியா இல்லனாலும்
சும்மா தானே தரான் நாமும் ட்ரை பண்ணுவோம் என்று நப்பாசையில்
லைசன்ஸ் ஜெராக்ஸ் எடுத்து கிளம்பினேன்.

அந்த கடையிலே போய் குறிப்பிட்ட நிறுவனத்தின் கார்டு கேட்டேன்...
உங்க லைசன்ஸ் ஜெராக்ஸ் கொடுங்க என்று வாங்கினான் கடைக்கார
பையன். "ஒரிஜினல் லைசன்ஸ் கொடுங்க" என்று கேட்டான். கொடுத்தென்.
"ஜெராக்ஸ்ல உங்க மூஞ்சு கொஞ்சம் கருப்பா விழுந்துருக்கு சரியா
தெரியலை..." என்று இழுத்தான். "நான் என்ன அஜித்குமார் கலரா..
இருக்கறது தானே விழும்" என்று மனசுக்குள் நினைத்து கொண்டேன்.
"போட்டோல இருக்கறது நீங்க தானா??" என்று ஒரு கேள்வி கேட்டான்...
"நான்தான்ப்பா.." என்றேன் ஒரு வித எரிச்சலில். "நீங்க பக்கத்து பில்டிங்ல போய் ஜெராக்ஸ் எடுங்க தெளிவா விழும்.."என்றான். "அப்படியா என்
போட்டோவை கொடுங்க..." என்று வாங்கி கொண்டு கிளம்ப ரெடி
ஆனேன்..இனிமே ஒ.சி.ல தரான்னு மட்டும் எங்கையும் போய்ற
கூடாதுனு ஒரு முடிவு எடுத்தேன். அப்போ என் பக்கத்தில் ஒரு
நாப்பது ப்ளஸ் வழுக்கை ஆசாமியும் லைசன்ஸ் ஜெராக்ஸ் எடுத்து
வந்திருந்தார். அந்த போட்டோவை பார்த்த பையன் "போட்டோவில்
யாருங்க... போட்டோல 'முடி'லாம் இருக்கு...." என்று அந்த மனிதரிடம்
பேச்சுவார்த்தை தொடங்கியது.....


இதை தான் சொல்வாங்க அப்பாவி கிட்ட ஆயிரம் கேள்வி கேப்பாங்க...
ஆனா தீவிரவாதி பக்காவா வந்து வாங்கிட்டு போவான் அவனை விட்ருவாங்க...


கண்டிஷன் அப்ளை.....(CONDITION APPLY )


பேப்பர், புக்னு எதை திறந்தாலும் கலர் கலரா விளம்பரம்...ஒரு போன்
வாங்கினா ரெண்டு போன் ப்ரீ, ஒரு சட்டை வாங்கினா நாலு சட்டை
ப்ரீ, போன வாரம் கல்லூரி பசங்களுக்கு இனிது இனிது படத்துக்கு ஒரு
டிக்கெட் எடுத்தா இன்னொரு டிக்கெட் ப்ரீ...அப்படின்னு ஏகப்பட்ட
ப்ரீ....சில இலவச விளம்பரங்கள் உண்மையானத இருக்கலாம்...
(எ.கா) நம்ம இனிது இனிது படத்துக்கு ஒண்ணு வாங்கினா இன்னொரு
டிக்கெட் ப்ரீ வேணும்னா கண்டிப்பா கொடுத்து இருப்பாங்க...ஏன்னா படம்
அப்படி... ஆனா எல்லா விளம்பரங்களும் உண்மையா இருக்கறது
இல்லை என்பது தான் உண்மை.


வேவ்டேல்னு ஒரு செல் கடை...இப்போ கை மாறி நிறைய இடத்தில்
மூடிட்டாங்க என்பது வேறு விஷயம். ஆனால் அவர்கள் ரெண்டு வருடம்
முன்பு வரை செம பீக்கில் இருந்தார்கள் என்பது மட்டும் உண்மை. அதுக்கு
காரணம் விளம்பரம் மட்டுமே. நான் போன வருஷம் செல் வாங்க ஆறு
மாசமா தேடும் போது அவர்களின் ஒரு விளம்பரம் பார்த்து அடையாரில்
உள்ள கடையில் சென்று விசாரித்தேன். அந்த விளம்பரம் என்னன்னா
"செல் போன் வாங்கினா மூணு நாள் டூர் இலவசம்" என்பதே.

கடைக்கு போய் முதலில் ஒரு சோனி செல் பற்றி விசாரித்தேன்...
நான் வாங்க ரெடியாக இருந்தேன். சரி ஆபர் என்னனு கேட்டேன்..
அதற்கு கடைக்காரன் இந்த செல்க்கு ஒன்னுமில்லைன்னு சொன்னான்.
சரி விலை அதிகமான செல்போன் கேட்டேன். அதற்கு என்ன ஆபர் என்று கேட்டேன்...அவன் இதுக்கும் இல்லை என்றான்... உடனே நான் " சரி அப்ப
அரை பக்கம் விளம்பரம் போட்டு டூர் விளம்பரம் போட்டு இருக்கீங்களே..
எதுக்கு தான் அதை தருவீங்க" னு கேட்டேன்...."அந்த ஆபர் செல்
இப்போதைக்கு ஸ்டாக் இல்லை" என்றான்.சரி என்ன மாடல் செல்னு
கேட்டேன் அதற்கு அவன் ஒரு ஈத்து போன செல் மாடலை கூறினான்.
அப்படியே நன்றி சொல்லி திரும்பி வந்து விட்டேன்.கண்டிஷன்
அப்ளைனாலே அங்கே ஏதோ ஒரு தந்திரம் இருக்கும் என்பது
மட்டும் உண்மை.


மேரி பிரவுன் :

பொதுவாக எனக்கு இந்த பிசா, பர்கர் ஐட்டம் மேல அவ்வளவு விருப்பம்
இல்லனாலும்...எப்பயாவது சாப்பிடுவது உண்டு...ஆனா ஆபர் இருக்குதா
இல்லையான்னு எல்லாம் பார்த்துட்டு போறதில்லை...சமீபத்தில் நீலாங்கரை
மேரி ப்ரௌனில் நானும் நண்பரும் லைட்ஆ சாப்பிட சென்றோம்...ஹாட்
டச் பர்கர் தான் எங்களது விருப்பம் அதே போல் ஆளுக்கு சிக்கன் தொடை
கறியும் ஆர்டர் செய்தோம்..... அப்போது தான் அவர்களுது விளம்பரம் கண்ணில்ப்பட்டது..அது 350 மேல் சாப்பிட்டால் 54 ரூபாய் மதிப்புள்ள ஹோர்லிக்ஸ் பூட்ள்ஸ்(FOODLES) இலவசம் என்று.....

கஸ்டமர் இஸ் கிங்?? எங்கே??

நாங்க கணக்கு பண்ணி எல்லாம் சாப்பிடல...அப்புறம் ஒரு சிக்கன்
பாப் ஆர்டர் பண்ணோம்....அதெல்லாம் நான் சின்ன வயசில் சாப்பிட்டது
அழகா சின்ன சின்ன உருண்டையாக நன்றாக இருக்கும்..ஆனால் இவர்கள் கொண்டு வந்ததோ போண்டா சைஸ்சில்...ஒரு ஒரு பாப்க்கும் ஒற்றுமை
கூட இல்லை...பில் வந்தது 354 ரூபாய் நண்பன் பே பண்ணி விட்டு வந்தான்..வெளியே கிளம்ப தயாரான போது நண்பனிடம் ஆபரை சுட்டி காட்டினேன்... அவனும் போய் கவுன்டரில் கேட்டான் அதற்கு அவர்களின்
பதில் நாங்கள் சாப்பிட்டது 338 தான்..மீதி வரியாம்...அதனால் உங்களுக்கு
கொடுக்க முடியாது என்று காரணம் சொன்னார்கள்...!!

ஒரு தடவை ஈஞ்சம்பாக்கம் MARRY BROWN இல் சாப்பிட்ட போது
அவர்கள் 220 சாப்பிட்டதுக்கே எதோ ஒரு இங்கிலீஷ் படத்தின்
மொக்கை டிவிடியை கொடுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எனக்கு FOODLES ஒ.சி.யில் கிடைக்கலன்னு கூட வருத்தம் இல்லங்க...
அந்த FRANCHISE MANAGER எப்படி இப்படி ஒரு தெளிவான பதிலை
சொல்வார்னு நான் எதிரிப்பார்க்கல....ஒன்னாவது படிக்கறவனுக்கு
கூட தெரியும் 338 க்கு சாப்பிட்டவன் 350 க்கு சாப்பிட முடியாதா??
அன்னைக்கே நான் முடிவு பண்ணேன் இனிமே MARRY பிரவுன்
பக்கம் கூட பெட், பாய் விரிச்சி படுக்க கூடாதுனு.... அந்த மேனேஜர் கிட்ட
ஒரு கேள்வி தான் கேட்க ஆசைப்படுறேன்... அன்னைக்கு எங்களுக்கு
தர வேண்டிய FOODLES செய்ஞ்சு சாப்பிட்டாங்களா சார்....??..


ஒரு நிமிஷம் இருங்க போன் வருது....

ராஜா : என்ன தம்பி என்ன பண்றீங்க??

ஜெட்லி : சும்மா தான் மச்சி..சிஸ்டம் முன்னாடி இருக்கேன்...

ராஜா : என்ன ப்ளாகா...?

ஜெட்லி : கண்டிப்பா...

ராஜா : சரி நாளைக்கு என் பர்த்டே ட்ரீட்...வந்துடு... பசங்க எல்லாம் வராங்க..

ஜெட்லி : கண்டிப்பா...நீயே அதிசியமா ட்ரீட் வைக்கிற...எங்கேடா??

ராஜா : அடையார் marry brown மச்சி...

ஜெட்லி : ஹ்ம்ம்...நான் marry brown போறது இல்லன்னு முடிவு பண்ணினேன்...நீ கம்பல் பண்றதாலே வரேன்டா...!!

மனதுக்குள்...

சிக்கிட்டான்டா ஒரு அடிமை....!!


உங்களுக்கும் எதுவும் இந்த மாதிரி ஒ.சி.யில் கிடைக்க இருந்தது
கிடைக்காம போய் இருந்தா தாராளமா ஷேர் பண்ணுங்க....
அட...நாம எதாவது பண்ணுவோம் பாஸ்...

ஜெட்லி...(சரவணா...)

Monday, September 13, 2010

பாஸ் , துரோகி மற்றும் ரெசிடென்ட் ஈவில் 4 !!

பாஸ் , துரோகி மற்றும் ரெசிடென்ட் ஈவில் 4 !!


பாஸ் படத்தை வெள்ளிக்கிழமை நைட் ஷோவே பார்த்தாச்சு...ஆனா
அதை பத்தி எழுத நேரம் கிடைக்கல.... சந்தானம் மீண்டும் கலக்கி
இருக்கிறார். இந்நேரம் எல்லாரும் பார்த்து இருப்பீங்கனு நினைக்கிறேன்...
படம் செம டைம்பாஸ்...ஆர்யா கண்ணாடி மாட்டும் சீனே செம...
நயன்தாரா ஏன் இப்படி ஆகிட்டாங்கனு தெரியல...கொஞ்சம் கிழடு
தட்டிடுச்சுனு தான் சொல்லணும்....

சந்தானம் அண்ட் சுவாமிநாதன் அரியர் எக்ஸாம் காமெடி செம....
ஆர்யா அண்ணனாக வருபவர் பஞ்சு அருணச்சலம் அவர்களின் மகனாம்,
நல்லாவே பண்ணி இருக்கிறார். அதே போல் பால் பாண்டி பாத்திரம்
கூட இன்ட்ரஸ்டிங்....கடைசியில் ஜீவா வருவது லக லக காமெடி....!!
பாட்டு பத்தி சொல்லவே வேண்டாம்...அய்லா என்ற ஒரு பாட்டு தவிர
மீதி எல்லாமே சூப்பர்...


தியேட்டர் நொறுக்ஸ்:

மைனா படத்தின் ட்ரைலர் போட்டார்கள்.... கொஞ்சம் டரியலாக தான்
எனக்கு இருந்தது... கடைசியில் ஒரு வசனம் வரும்..அது...

"லவ் பண்ண லைப் அழகா ஆயிடும்..." என்று வரும்னு நினைக்கிறேன்...

ஆனா பின்னாடி இருந்த நம்ம ஆளு... லவ் பண்ண லைப் நாசமா போய்டும்
என்று கத்தினார்....ஹ்ம்..அவருக்கு என்ன பிரச்சனையோ...!!

துரோகி பார்க்காத கதை....!!


அப்புறம் நேத்து நைட் செம மழை....சரி ஜெயந்தி தியேட்டர்ல துரோகி
பார்க்கலாம்னு ஒரு ஆர்வத்துல போனேன்...செம கூட்டம்...கூட்டம்
எல்லாம் தியேட்டரில் வேலை செய்பவர்களின் கூட்டம் தான், மழையால்
படம் ரத்தானால் சீக்கரம் வீட்டுக்கு போலாம்னு வெளியே காத்துகிட்டு
இருந்தாங்க....பால்கனி டிக்கெட் வாங்க ஒரு ஆள் கூட இல்லை....
கிழே டிக்கெட் வாங்க ஒரு பத்து பேரு இருந்தாங்க அவங்களும் பாஸ்
படத்துக்கு டிக்கெட் கிடைக்காம வந்தவங்க தான்...எனக்கு என்னமோ
அவங்க படம் ஆரம்பிக்கிற மாதிரி தெரியல என்பதால் திரும்பவும்
வீட்டுக்கு வந்து விட்டேன்.....


சரி திங்கள் என்ன படம் போலாம்னு யோசிச்சு யோசிச்சு...துரோகி போலாம்னு தான் பார்த்தேன் ஆனா ஏற்கனவே துரோகம் நடந்தது என்ன?? படம் பார்த்தே பஞ்சர் ஆகி போனதுனாலே ப்ரீயா விட்டுடேன்....

ரெசிடண்ட் ஈவில்....!!


அப்படியே நம்ம பைலட் தியேட்டர் பக்கம் போன ரெசிடண்ட் ஈவில் படம்
ஸ்டில் பார்த்தேன்...அப்படியே வண்டியே நிறுத்திட்டு டிக்கெட் எடுத்து
உள்ளே போய்ட்டேன்...மூணாம் பாகம் ரெண்டு வருஷம் முன்னாடி பார்த்ததாக நினைவு... ரெண்டாம் பாகம் சுத்தமா மறந்து போச்சு....இருந்தாலும் படம் செம ஸ்பீட்... மில்லா ஜோவிச் தான் நாயகி...சும்மா பறந்து பறந்து அடிக்கறாங்க...இதில் பத்து பேராக முதல் காட்சியில் வருகிறார்...ஏன் வர்றாங்க எப்படி வர்றாங்கனு எனக்கு புரியலை... இந்த பார்ட் ஜப்பான் டோக்யோவில் ஆரம்பம் ஆகிறது...முந்தைய பார்ட்டில் வந்த ஒரு பெண் இதிலும் வருகிறார் அவருக்கு பழசெல்லாம் மறந்து விடுகிறது....


இருவரும் சிறு விமானத்தில் மீண்டும் அமெரிக்காவை ஒரு ரவுண்ட் அடிக்கிறார்கள்..அங்கு ஒரு ஐந்து பேர் உயிருடன் இருக்கிறார்கள்,...அவர்களை காப்பாற்ற என்ன செய்தார்கள் என்பதே மீதி படம்... தமிழ் டப்பிங் என்பதால் நான் 3-D யில் பார்க்க வில்லை... அதில் எனக்கு விருப்பமும் இல்லை... எனக்கு ஒரு சந்தேகம் அது ஏன் இந்த படத்துக்கு தமிழில் பெயர் வைக்கவில்லை?? ஒரு வேளை வரி விலக்கு எல்லாம் இப்போது இல்லையா.... இல்லனா நம்ம ஆளுங்க ரத்த காட்டேரி...இல்ல ருத்ர காட்டேரினு ஏதாவது பேர் வச்சி இருப்பாங்களே......


இந்த படத்தில் ஒரு தயாரிப்பாளர் வருவார் செம காமெடி வசனம்...எல்லாமே
டைமிங் காமெடி ஆனால் அவர் நல்லவர் அல்ல... மறதி பெண் அவள் அண்ணனை பார்த்ததும் அவள் அண்ணன் உருகுவான்...உடனே நம்ம தயாரிப்பாளர்...


"என்ன பாசமலர் ரீமிக்ஸ்ஆ...மொதல்ல இங்கே இருந்து தப்பிப்போம்..."


என்று காமெடி வசனத்துக்கு பலத்த கைத்தட்டு....அதே போல் மில்லாவின்
சண்டை காட்சிகளுக்கும் விசில் பறந்தது.... அந்த மாபெரும் பேய் ஒன்றை
அந்த பெண் வீழ்த்தும் போதும் தியேட்டரில் செம விசில்....


அநேகமா பார்ட் 5 , 6 கூட வரும் வாய்ப்பு இருக்கு... எத்தனை பார்ட் வந்தாலும் அதை நாம போய் பார்க்கிறோம்.... நான் ரெசிடண்ட் ஈவில் 4 கேமை நான் எனது play station இல் விளையாடி இருக்கிறேன் அது வேறு மாதிரியான கதை...படத்தில் வருவது வேறு கதை.... கேம் விளையாடுவது செம த்ரில்லிங்ஆக இருக்கும்.....!!


இந்த பதிவு பிடிச்சு இருந்தா உங்கள் பொன்னான வாக்கினை போடவும்....


ஜெட்லி...(சரவணா...)


Monday, September 6, 2010

சிந்து சமவெளி - ஏதோ ஒரு பார்வை.

சந்துல சிந்து....!!


சரியா சொல்லனும்னா எனக்கு இந்த படத்தை பார்க்குற ஐடியா நேத்து
நைட் ஒன்பது மணி வரைக்கும் இல்லை. இந்த படத்துக்கு நான்
போனதுக்கு ஒரே காரணம் ஆற்காடு வீராசாமி அவர்கள் மட்டுமே.
மழை வேற...பலே பாண்டியா போலாம்னு தான் எனக்கு வெள்ளிக்கிழமை
ப்ளான்...ஆனா படத்தை பத்தி மாறுதாறு ரிப்போர்ட் வந்ததனால் அப்படியே
விட்டுடேன்...முன்னாடி எல்லாம் முதல் ஆள போய் படத்தை பார்த்து
மொக்கையா இருந்தா கூட அவ்வளவா பீல் பண்ணதில்லை...ஆனா இப்போ
முதல் நாள் நைட் ஷோ போலாம்னு ப்ளான் போட்டா மதியமே படம்
மொக்கைனு சொல்லி ஆப் பண்ணிடறாங்க நண்பர்கள்.... இப்படியே விட்டா
படமே பார்க்க முடியாதுனு முடிவு பண்ணிட்டு சிந்து சமவெளி கிளம்பிட்டேன்.வெள்ளிக்கிழமையில் இருந்தே எங்க ஏரியா ஜெயந்தி தியேட்டரில்
இந்த படத்துக்கு ஓரளவுக்கு கூட்டம் இருந்து கொண்டே தான் இருந்தது.
ஆனா இந்த மழையிலும் ஜெயந்தியில் நல்ல கூட்டம். எல்லாம் 'A ' சான்றிதழ்
மகிமை. ஏன் நூப்பது ருபாய் கொடுத்து கட்டை சீட்டில் உட்கார்ந்து கொசு
கடி, மூட்டை பூச்சி கடி வாங்கனும்னு நேரா வண்டியை ஈஞ்சம்பாக்கம்
ஆராதனாவில் நிறுத்தினேன். செம கூட்டம் அநேகமா நான் தான் உள்ள
என்டர் ஆன இருபதாவது ஆளாக இருப்பேன்!! அப்புறம் படம் ஆரம்பிச்ச
கொஞ்ச நேரத்தில் ஒரு பத்து பேர் சேர்ந்து இருப்பாங்க...அதில் ரெண்டு
ஜோடி. ஒதுங்க வந்திருப்பாங்கனு நினைக்கிறேன்...மழைக்கு பயந்துனு
சொன்னேன்ங்க....

அதே கைகள்...ஹில்ஸ் ஹேவ் கண்கள் படத்தின் விளம்பர படம்....


நம்ம சிந்து சமவெளி விளம்பர படம்... பொண்ணு மட்டும் வேற..கை அதே தான்....
சுறா படத்தில் முதல் காட்சியில் எப்படி விஜய் கடலில் இருந்து வருவரோ
அதே போல் இதிலும் நாயகன் ஹரிஷ் கடலில் இருந்து வருகிறார்.
படத்தோட நாயகி அனாகா அழகா இருக்காங்க.... எனக்கு அப்போ அப்போ
டவுட் வந்திருச்சு... ஏன்னா வரிசையா எல்லா மிருகத்தையும் காட்டுவாங்க..
ஒரே வேளை டிஸ்கவரி சேனல் எதையும் போட்டுடாங்கலோனு. இங்க
தான் சாமியோட நுண் மற்றும் பன் அரசியலை பத்தி நீங்க கண்டிப்பா
தெரிஞ்சே ஆகணும்.... ஒரு காட்சியில் நாயகனும் நாயகியும் படத்தில்
தியேட்டரில் பார்க்கிற படம் சாமியின் முந்திய படம் மிருகம்.


அதோ அந்த ஓரமா ஒரு ஈ பறக்குது தெரியுதா....??
இந்நேரம் உங்களுக்கு படத்தோட கதை திரைக்கதை எல்லாம் தெரிஞ்சு
இருக்கும்னு நினைக்கிறேன்.நான் இதுக்கு முன்னாடி சாமி எடுத்த ரெண்டு படத்தையும் பார்த்ததில்லை.படம் ரீலீஸ் ஆகும் போதே நண்பன் சொன்னான்
சாமி படம் டெர்ரர்ஆ இருக்கும்...ஆன சீனே இருக்காதுனு....அது உண்மை தான்.இது விழிப்புணர்வு படம்னு சொன்னாங்க, அது உண்மைங்க முதல் பாதி தூக்கம் தள்ளுனாலும் இன்டெர்வல் டைமில் இருந்து இயக்குனர் சாமி நம்மை எழுப்பி உட்கார வச்சிடுறாரு.(என் முன்னாடி ரோவில் இருந்த ஆசாமி கடைசி வரை கண் முழிக்கவில்லை...). மற்றபடி படம் எப்ப முடியும் எப்ப எஸ் ஆகலாம்னு காத்துகிட்டு இருந்தேன்.


எனக்கு சாமி மேல ரொம்ப கோபம்ங்க....முக்கியமான சீனில் எல்லாம்
அந்த வீட்டை ரெண்டு ரவுண்ட் அடிச்சு காட்டி எங்களை மாதிரி விடலை
பசங்களை ஏமாத்திடாரு. கஞ்சா கருப்பு காமெடி பண்றேன்னு சொல்லி
செம மொக்கை போட்டாரு. ரொம்ப பாராட்டப்பட விஷயம்னா அது
ஆராதானா தியேட்டரில் இருந்த புல் ஏ.சி.தாங்க. அப்புறம் இது வரைக்கும்
என் வாழ்க்கை வரலாறுல ஆராதானாவில் படத்தை அப்போ அப்போ
நிறுத்தாம பார்த்த ஒரே படம் இது தாங்க.


தியேட்டர் நொறுக்ஸ் :


# டிக்கெட் எடுக்க போகும் போதே நண்பர்கள் குழுவில் கேட்ட டயலாக்...

"என்ன படம் மச்சான்??"

" சிந்து சமவெளி டா.."

"என்னது...??"

"சிந்து நடிச்ச படம்டா..."


# நாயகனின் அப்பா வேறு ஊருக்கு படிக்க செல்லும் மகனிடம்

" ஆச்சியை(நாயகியை) நான் பார்த்துக்கிறேன்..."

இங்கே நம்ம ஆள்...

"நீ தானே பார்க்க போற..."


# படத்தில் இன்டெர்வல் அப்புறம் தான் கொஞ்சம் ஏடாகூடமா கதை
போகும்....அந்த டைமில் வந்திருந்த ரெண்டு ஜோடிகளும் ஒண்ணு
ஒண்ணா கிளம்பி போய்ட்டாங்க..என் டவுட் என்னனா படத்தோட
கதை போக்கு பிடிக்காம போனாங்களா...?? இல்லை அவங்க வந்த
வேலை முடிஞ்சவுடனே கிளம்பிட்டாங்களா??னு தான்.....சரி அதெல்லாம்
நமக்கு எதுக்கு...!!


இது விமர்சனமா இல்லையானு நீங்களே முடிவு பண்ணி...
உங்கள் வாக்கை போட்டு பல பேரை படிக்க செய்யுங்க...

நன்றி

ஜெட்லி...(சரவணா...)

Friday, August 27, 2010

ஜெட்லி வழங்கும் பொது அறிவு செய்திகள்!!

பொது அறிவு செய்திகள் :


ரொம்ப நாள் ஆச்சுங்க பொது அறிவு செய்தி போட்டு....நிறைய நண்பர்கள்
ஏன் போடல ஏன் போடலனு ஈ மெயில் மற்றும் போனில் கேட்கலனாலும்..
இப்போ ஏதோ கிராம அதிகாரி தேர்வு ஒண்ணு வருதாமே,அதனால நானா
குப்புற படுத்த சிந்திச்சு நாம போடுற பொது அறிவு செய்திகள் ஆறு பேருக்கு
உதவும் என்ற நோக்கத்திலே, என்னால் முடிஞ்ச நல்ல செய்திகளை அள்ளி
தெளிச்சி இருக்கேன்....!! சூஸ் தி பெஸ்ட் அன்சர்....


************************************

முக்கிய அ(பி)ட்டு செய்திகள் :


சவுகரியமான கதாநாயகனுடன் " முத்த காட்சியில் நடிப்பேன் "

நடிகை ரம்யா நம்பீசன் பேட்டி...


நம்ம நாட்டுக்கு ஏன் உலகத்துக்கே தேவையான முக்கியமான கேள்வியை
ரம்யா நம்பீசனிடம் கேட்ட நண்பர்க்கு ஆயிரம் நன்றிகள். அந்த கேள்வி
"முத்த காட்சியில் நடிப்பீங்களா??" அதற்கு ரம்யா அவர்கள் தனக்கு
சவுகர்யமான நடிகர் கூட நடிப்பேன் என்று கூறியிள்ளார்.

சவுகர்யம்னா எப்படினு எனக்கு தெரியல...தெரிஞ்சவங்க சொல்லுங்க...
ஆனா ஒண்ணு ஆட்ட நாயகன் படத்துக்காக மட்டும் தான் முத்த காட்சி போன்ற பேட்டி எல்லாம் வருது.... இது அப்ப அப்ப வரது தான்...
சும்மா ஒரு பப்ளிசிட்டி... ஆட்டநாயகன் ட்ரைலர் டரியலாக இருக்கிறது
என்பது மட்டும் உண்மை....!

*****************************************

டாக்டர் சீனிவாசன் பற்றி சிறு குறிப்பு வரைக....

ஏற்கனவே நான் சொன்னது தான்...அநேகமா சாம் அண்டர்சன், ஜே.கே,ரீத்தீஸ் வரிசையில் தலைவர் இடம் பிடிக்க நிறைய வாய்ப்பு இருக்கு. இன்னும்
இவர் நடிச்ச படத்தை பார்க்கலை. மண்டபம் படத்தில் நடித்து இருக்கிறாராம்.
அது போக வாரம் மூணு நாள் தினதந்தியில் ஆனந்த தொல்லை என்ற படத்தின்
டெர்ரர்ஆன ஸ்டில் போட்டு நமக்கு தொல்லை கொடுக்கிறார்கள்.


மேலும் லத்திகா என்ற படத்தில் போலீஸ் வேடத்தில் கலக்குகிறார் மனிதர்.
அவர் கொடுத்திருக்கும் ரொமன்ஸ் ஸ்டில் ஒன்றே போதும் என்று
நினைக்கிறேன். என்னாமா சொட்டுது பாருங்க....காதல் ரசம்...

(DISCLAIMER : லைட்டான இதயம் இருப்பவர்கள் மற்றும் குழந்தைகளுடன் தயவு செய்து கிழே இருக்கும் படங்களை பார்க்க வேண்டாம்...!அப்புறம் இன்னொரு விஷயம் சீனிவாசன் ஸ்டில் எடுக்க இதுவரைக்கும் அவரே கூட கூகிள்லே தேடி இருப்பாரானு தெரியலை....ஆனா அவர் படத்தை முதல்முறையாக கூகிள்இல் தேடின பெருமை என்னையே சேரும்....!!)


இவர் நல்லவர் என்பதற்கு இந்த ஒரு ஸ்டில் போதும்...!!


சீனிவாசன் அவர்களுக்கு ரசிகர் மன்றம் திறக்கலாம் என்ற எண்ணம் உள்ளது..
ஆனா நான் தான் நிரந்தர பொது செயலாளர்.... வேற யார் வேணும்னாலும் என்ன பதவி வேணுமோ எடுத்துக்கலாம்...!!

*************************************

விளம்பர இடைவேளை:

வெல்கம் டூ சுடுக்காட்டு சிட்டி...!!


வணக்கம் நேயர்களே....உங்களுக்கு ஒரு புண்ணான வாய்ப்பு...இது வரைக்கும் உங்களுக்கு சொந்த வீடு இல்லையே என்று கவலை இருந்திருக்கும்...
இனிமே அந்த கவலை இல்லை...கோவளம் தாண்டி சுடுக்காட்டில் புதிதாக
அம்பது ப்ளாட் போட பட்டுள்ளது... ஒரு சதுர அடி இருநூறு ருபாய் தான்.
இந்த சனிக்கிழமை வந்து நடுகாட்டில் இருக்கும் சுடுக்காட்டை ஜாலிஆக
குடும்பத்துடன் சுற்றி பார்த்து அப்படியே ஓசி சோறும் தின்னுட்டு.....
அப்பவே நீங்க புக் பண்ணா ரெஜிஸ்டர் இலவசமாக பண்ணி தரப்படும்.
ஒரு வேளை நீங்க புக் பண்ணலைனா ஆறு அடி இலவசம் சுடுக்காட்டில்!!

சீக்கரம் வாங்க...உங்களுக்கு சொந்தமான மனையை வாங்குங்க...!!


***************************

தொடரும் அட்டு செய்திகள்...


தூத்துகுடியில் சமத்துவ மக்கள் கட்சியின் முப்பெரும் விழா!!

சரத்குமார் அறிக்கை.

"பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் மலர
செய்ய இந்த முப்பெரும் விழாவில் சூளுரை ஏற்று புது வரலாறு
படைத்திட, புது விடியலை உருவாக்கிட புயலென புறப்பட்டு வருக..."


என்னது காந்தி செத்துட்டாரா??

இப்பவே கண்ணை கட்டுதே......அடேய் சோடா ஒன்னு கொடுப்பா...

சரத்குமார் சார் இந்த வசனம் சூப்பர்ஆ இருக்கு....எந்த படத்தில் வருது...??

******************************

கொல கொலயா முந்திரிக்கா நூறாவது நாளாம்.....********************

ரைட்ங்க...நான் கிளம்புறேன்....இந்த பொது அறிவு செய்தி பல பேரை
சென்று அடைய உங்கள் வாக்கை போடுங்க.....நாலு பேரு கிராம
அதிகாரி ஆனா நமக்கு தானே மகிழ்ச்சி...!!

நன்றி


ஜெட்லி...(சரவணா...)

நன்றி indiaglitz , chennaionline படங்களுக்கு....

Monday, August 23, 2010

எஸ்கேப் மாமே எஸ்கேப்.....!!

எஸ்கேப் சினிமாஸ்இல் ஒரு அனுபவம்.....
ராயபேட்டா மணிகூண்டு அருகே புதிதாக மலர்ந்து இருக்கும் எக்ஸ்பிரஸ்
அவின்யு மாலில் இன்று தான் சத்யம் சினிமாஸ்இன் அடுத்த மல்டிப்ளெக்ஸ்
பொது மக்களுக்கு திறந்து விட்டார்கள். சும்மானாச்சும் திங்கள்கிழமை
சத்தியத்தில் ஏதாவது படம் போலாம் என்று அவர்களின் வலையை
மேய்ந்த போது எஸ்கேப் என் கண்ணில்ப்பட்டது. உடனே எனக்கும்
நண்பனுக்கும் நான் மகான் அல்ல டிக்கெட் புக் பண்ணிட்டேன்.நான்
போன ஸ்க்ரீன் பேரு plush ஆம்... சத்தியமா தமிழ்ல எனக்கு என்ன
அர்த்தம்னு தெரியாதுங்கோ.....!!


அது என்ன தியேட்டர் பேரு எஸ்கேப்...?? ஒரு வேளை நாம போற படம்
மொக்கை படமா இருந்தா பாதியிலே எஸ்கேப் ஆக எதுவும் பதுங்கு
குழி வச்சி இருப்பாங்களோனு எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது.....
இன்று காலையில் வேறு ஒரு நண்பனிடம் எஸ்கேப் போகிறேன் என்று
சொன்னதற்கு அவனும் அதே கருத்தை தான் சொன்னான்.அதவாது
படம் புடிக்கலைனா பாதியிலேயே எஸ்கேப் ஆயிடலாம் போல என்றான்.

எஸ்கேப் போன கதை....

நான் மகான் இல்ல கண்டிப்பா ரெண்டாவது தடவை பார்க்கணும்னு முதல்
தடவை இன்டெர்வல்லே முடிவு பண்ணிட்டேன். அதுவும் புதுசா அன்னைக்கு
தொறக்க போற தியேட்டரில் பார்க்க போவது டபுள் சந்தோசமாக இருந்தது.
சரி அப்படியே நம்ம ஆஸ்தான வூட்லாண்ட்ஸ் தியேட்டர்ல என்ன படம்
போட்டு இருக்காங்கனு எட்டி பார்த்துட்டு போனேன்....தேவலீலை என்ற
பிட்டு படமும் மூன்று ஆவிகளின் அட்டகாசம் என்ற அட்டு படமும்
போட்டு இருந்தார்கள். அப்படியே அதை தாண்டி போய்கிட்டு இருக்கும்
போது என் கண்ணில் ஒரு போஸ்டர் பட்டது....சானகானுக்கு கூட நம்ம ஊரில் பிறந்த நாள் கொண்டாட,போஸ்டர் ஒட்ட ஆட்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது அப்படியே வானத்தில் ஒரு ஒளி வட்டம் தெரிஞ்சுது...அப்போ தான் நினைச்சேன் கூடிய விரைவில் இந்தியா கண்டிப்பா வல்லரசு ஆயிரும்னு.....!!


எக்ஸ்பிரஸ் அவின்யு....இப்போ தான் முதல் முதலா எக்ஸ்பிரஸ் அவின்யு போறேன்...நண்பர் சித்து
சொன்னது போல் எக்ஸ்பிரஸ் அவின்யு எக்ஸ்பென்சிவ் அவின்யு தான்.
பூட் மால் எங்கும் மக்கள் கூட்டம் அலை மோதுது. பானி பூரி ப்ளேட் நாப்பது
என்றாலும் வாங்க ஆட்கள் இருக்கிறார்கள். அப்போ தான் பொய் சொல்ல போறோம் படத்தில் கார்த்திக் தம்பியாய் வருவாரே ஒரு மொட்டை அவரை பார்த்தேன்.அவரும் யாராவது என்னை பார்ப்பாங்களா என்று பார்த்து கொண்டே போனார்.சரி அவர் ஆசையை ஏன் கெடுப்போம் என்று அவரை பார்த்து சிரித்து வைத்தேன் அவரும் ஒரு ஸ்மைல் செய்ஞ்சிட்டு போனார். ஏதோ நம்மால் முடிந்த ஒரு சேவை.அதுக்கு அப்புறம் நேரா எஸ்கேப் உள்ளே பூந்தாச்சு.... உள்கட்டமைப்பு எல்லாம் பக்கா.... லைப்ரரி இருக்கு...வீடியோ பார்க்க டி.வி இருக்கு...செமையா

இருந்தது.முதல் நாள் என்பதால் யாரையும் செக் பண்ணி அனுப்பவில்லையா?? இல்லை ஆட்கள் பற்றாகுறையா என்று தெரியவில்லை. இங்கயும் ரெஸ்ட் ரூம் சான்ஸ்ஏ இல்லை.... இங்கே அருகில் இருக்கும் ஒரு பிளாஸ்டிக் பட்டையை தட்டினால் நீண்ட குழாவில் தண்ணி வருகிறது. வழக்கம் போல் சுத்தத்தில் அடிச்சிக்க முடியாது. முதல் நாள் என்பதால் இன்னும் சில பல வேலைகள் பாக்கி இருக்கிறது... அதே போல் வேலை செய்யாத லட்டின்களை கழட்டி ரிப்பேர் செய்து கொண்டு இருந்தனர்.
அப்புறம் இன்னொரு முக்கியமான நான் அதிசியத்து பார்த்த விஷயம்..
அது எஸ்கேப் சினிமாஸ்இல் உள்ள ப்ரொஜெக்டர்...எல்லாமே தியேட்டர்
வெளியே அந்தரத்தில் இருக்குங்க... படம் பாட்டுக்கு ஓடிட்டு இருக்கு....
வருங்காலத்தில் ஆபரேட்டர் என்று ஒருத்தர் இருக்க மாட்டார் போல...
நான் போட்டோ எடுத்துட்டு இருக்கும் போது ஒரு பான்ட் போட்ட அக்கா
சாரி மேடம் வந்து போட்டோ எல்லாம் எடுக்க கூடாதுனு சொல்லிட்டு
போனாங்க...அதனால இதுக்கு மேல நோ போடோஸ்...


சரி இனிமே தியேட்டர் உள்ளே போவோம்....நான் போன ஸ்க்ரீன் பெயர்
plush ....இது தான் அங்கே இருப்பதிலே பெரிய ஸ்க்ரீன் என்று சொன்னார்கள்.
முதல் முறையா எனக்கு வந்த டிக்கெட் confirmation எஸ்.எம்.எஸ் மூலம்
உள்ளே சென்றது இப்போது தான். உள்ளே போனதும் அசந்துட்டேன்...
நன்றாகவே இருந்தது. ஓர சீட்கள் அனைத்தும் கபூல்(ஜோடி) சீட்தான்.
நல்லா தெளிவா தான் வடிவமைச்சு இருக்காங்க....பத்து ரூபாய் சீட்கள்
அனைத்தும் காலியாக தான் இருந்தது.


சீட்கள் நல்லா அகலமா சோபா போல இருந்தது. புஷ் பேக் வசதி இல்லாதது
குறையே. அப்புறம் சீட் நம்பர் பிளாஸ்டிக் ப்ளேட்கள் விழுந்து கிடந்தன.
என் சீட் மட்டும் தான் அப்படி இருக்குனு நினைச்சேன் படம் ஆரம்பிச்ச
நாலா புறமும் இருந்து அந்த தகர டப்பா சவுண்ட் கேட்டது. முதல் ஷோ
வந்தவங்களே அடிச்சு உடைச்சுட்டாங்கலோ என்று சந்தேகம் வந்தாலும்
அது தானாக கழுண்டு விழுகிறது என்று போக போக தெரிந்தது....!!


இன்னைக்கு தான் முதல் நாள் என்பதனால் அப்படி இருக்கலாம்...போக
போக நல்லா இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனா சவுண்ட் எல்லாம்
தாறு மாறு...சும்மா அதுருது... யுவனின் பின்னணி இசையை இந்த தடவை
மிகவும் ரசித்தேன்...அதே போல் மதி கேமராவையும்.... முதல் நாள்
சவுண்டில் விட்டு போன வசனங்களை தெள்ள தெளிவாக கேட்டேன்...


அப்புறம் ஒரு சின்ன பாப்கார்ன் விலை வெறும் அறுபத்தி அஞ்சு ரூபாய்
தான். ஒரு வெஜ் புப்ஸ் விலை வெறும் நாப்பது அஞ்சு ரூபாய் தான்.
பானி புரி, பேல் புரி போன்ற சாட் ஆயிட்டங்கள் கூட வெறும் அறுபது
ரூபாய்க்கு கிடைக்கிறது. நான் இந்த விலை பட்டியலை பார்த்ததே
சாப்பிட்டது மாதிரி இருந்ததால் அந்த பெரிய கியூவில் நிற்காமல் அப்படியே
திரும்பி விட்டேன்,இன்டெர்வெல் முடிந்து சரியாக படமும் ஆரம்பித்தார்கள்.


அப்புறம் நான் பார்க்கிங் எவ்வளவு ஆகும்னு ஒரு கணக்கு போட்டேன்...
ஏதோ பரவாயில்லை மூப்பது ரூபாய் தான் வந்தது. ஆனா ஒரு படத்துக்கு
மூப்பது ரூபாய் பார்க்கிங் கொஞ்சம் அதிகம் தான். மொத்தம் மூணு பேஸ்மென்ட் பார்க்கிங் இருக்கு....எனக்கு எந்த பேஸ்மென்ட்டில் வண்டி விட்டேன் என்றே மறந்து அதை எடுக்க ஒரு கால் மணி நேரம் ஆச்சு என்பது குறிப்பிடதக்கது.பைக் பார்க்கிங் ஏரியா ஒரே தண்ணியாய் இருந்தது....!!இந்த இடுகை பல பேருக்கு உதவியா இருக்கும்னு நினைக்கிறேன்....
இப்போதைக்கு மீ எஸ்கேப்...

ஜெட்லி...(சரவணா...)