எப்படியா, இவ்ளோ பெரிய கூட்டத்தை மெய்ச்சி படம் எடுக்குறாங்கன்னு
இயக்குனர் ராஜா மேல் எனக்கு பொறாமை உண்டு. படத்துக்கு மிக
பெரிய ப்ளஸ் ஸ்டார் கேஸ்ட் தான். அப்புறம் என்ன.... கிக் திரைக்கதை
தான்.
கணபதிராம் தியேட்டர் முழுவதுமே கல்லூரி பசங்க தான்...அது
என்னமோ தெரியல சன் டி.வி படம்னாலே கூட்டம் வந்திருது.
கிக் படத்தை நான் தெலுங்கில் பார்க்கலைங்க...ஆனா இலியானா
வர்ற சீன் மற்றும் பாட்டை எல்லாம் பார்த்து இருக்கேங்க...
அந்த முதல் சீன்ல இலியானாவா தமன்னாவானு போட்டி வச்சா
இலியானாக்கு தான் முதல் இடம்...ஆனா தமன்னாவை பார்த்தும்
பெருமூச்சு விட்டது தியேட்டர் கூட்டம்.
ரவி...இளம் புயலாம்... ஏன் இப்படி அடைமொழி வச்சிக்கிட்டு இருக்கார்னு தெரியில. ரீமேக் நாயகன்னு கூட வைக்கலாம் காரணம்
சில பல காட்சிகளில் டான்ஸ்களில் ரவி தேஜாவை பார்த்த மாதிரி
தான் இருந்தது. ரவி என்ன கேரக்டர்னு தமன்னாவையும் குழப்பி
நம்மையும் குழம்ப வைக்கிறார்.
தமன்னா இந்த படத்தில் தாராள கொள்கையை கடைப்பிடித்திருக்கிறார்..
வழக்கமா தமிழ் தெலுங்கு கன்னட படங்களில் வரும் கதாநாயகி
வேடம் தான். தன் வேலையை சரியாக செய்து இருக்கிறார். கடைசியில்
காணாமலும் போய் விடுகிறார்.
வடிவேலு பல இடங்களில் சிரிக்க வைக்கிறார்...தூக்கில் தொங்கி தன்
மகன் ஊஞ்சல் ஆடும் போதும், தமன்னாவுடன் அயன் அன்பே அன்பே
பாட்டிலும், போலீஸ் ஆக வரும் மன்சூர் அலிகான் பாம்ப் சீனும்
காமெடி சரவெடி. சந்தானம் பற்றி சொல்லவே வேணாம். இடைவெளிக்கு
அப்புறம் வந்தாலும் அவர் வரும் சீன் எல்லாமே காமெடி அதகளம்
தான். ஜான் விஜய், மயில் சாமி கூட்டணியும் ஜோர்..!!
ரவியின் அப்பாவாக பிரபு... இப்படி ஒரு அப்பா நமக்கு கிடைக்க மாட்டாரா
என்று கேட்கும் அளவுக்கு பையனுடன் சேர்ந்து கூத்து அடிக்கிறார்...
பிரபுவும் ரவியும் போலீஸ் ஸ்டேஷன்இல் அடிக்கும் கூத்து நல்ல
ரகளை.அம்மாவாக சுஹாசினி...சும்மா வந்து போறாங்க... அப்புறம் இன்னொருத்தர் ஷாம், பெரிய கேரக்டர் ஆ ஊனு சொன்னாங்க...
இதை தான் நம்ம சரண்ராஜ் ஜென்டில்மேன் படத்திலே செய்தாலும்
ஷாம் செய்வது ஏதோ ஓகே தான்....!!
கேம் ஸ்டார்ட்ஸ் நௌ !!
GAME STARTS NOW இந்த வாக்கியத்தை படத்தில் இடைவெளிக்கு அப்புறம் எல்லாரும் பயன்ப்படுத்துவாங்க....அதையே நாமும்
யூஸ் பண்ணுவோம்....
படத்தில் எனக்கு பிடிக்காத விஷயம் என்னன்னா....படத்தோட
ஓடுற நேரம்..மூணு மணி நேரம் படமெல்லாம் ரொம்ப ஓவர்
சாமி... நடுவுல நிறைய மொக்கை சீன் வேற வருது....
அதுவும் இண்டர்வல் டைமில் ரவி மாஸ்க் போட்டு கொண்டு
அசால்ட் ஆறுமுகம் ரேஞ்சில் கொள்ளை அடிப்பது எல்லாம்
ரொம்பவே ஓவர்...!!
இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேன்.... நான் அதிமேதாவி,
என்னை யாரும் ஏமாத்த முடியாது, பூ சுத்த முடியாது அப்படின்னு
நினைக்கிறவங்க இந்த படத்தை தவிர்ப்பது நலம். ஏன்னா காதில்
கூடை கூடையாக பூ, காய் , மரம் என்று சுற்றுவார்கள்.ஆனா இதில் வரும் அந்த குழந்தை சம்பந்தப்பட்ட காட்சிகள் எல்லாம் நாம் காலம் காலமாக தமிழ் சினிமாவில் பார்த்து வரும் ராபின்ஹூட் படங்களை தான் நினைவுப்படுத்தி சலிப்பையும் தருகிறது.
மற்றபடி ஒரு பொழுதுபோக்கு, டைம் பாஸ் படம் தான் இந்த தில்லாலங்கடி. சில பல காட்சிகள் போர் அடிக்கிறது. முக்கியமா படத்திற்கு யுவனின் பாடல்கள் பெரும் பின்னடைவு. பாட்டு வந்தாலே கடுப்பா இருக்கு. இந்த படத்தில் ரவிக்கு எதை பண்ணினாலும் கிக் வேணும் என்பார்... நமக்கும் கிக் வேணும்னா ஒரு ரவுண்ட் மட்டும் அடிக்கலாம். சும்மா ஒரு வாட்டி பார்க்கலாம்...அடுத்த ரவுண்ட் அடிச்சா மட்டை தான்.....!!
தில்லாலங்கடி - கிக் கொஞ்சம் கம்மி தான்!!
தியேட்டர் நொறுக்ஸ் :
# ஒரு காட்சியில் ரவி தமன்னாவிடம் "கருமம் புடிச்ச லவ்"
என்று சொல்வார்...
இங்கே நம்ம ஆட்கள் செம கைத்தட்டு... ஒருத்தர்
"சூப்பர் மாமே..." என்றார்.
# படத்தின் நடுவில் ரவி மற்றும் வடிவேலுவை அனிமேஷன்இல்
காட்டுவார்கள்...அதற்கு பின்சீட்காரர்...
" இதுக்கு நான் வீட்லயே..சுட்டி டி.வி. பார்த்து இருப்பேன்"
என்று ஆதங்கத்தை வெளிப்படித்தினார்.
# இண்டர்வல் அப்பவே பல பேர் "என்ன ரவி.... கடைசியில்
போலீஸ்ஆ வருவார்...அதானே நடக்கும்" என்று பேசிகொண்டே
கலைந்தனர்.
# கடைசியில் படம் முடிந்து பேர் போடும் போது... கட் சீனில்
இளைய தளபதி விஜயை கிளாப் அடித்து படம் ஆரம்பித்த
காட்சியை காட்டினார்கள்....தியேட்டரில் செம விசில்...!!
இந்த விமர்சனம் பல பேரை சென்று அடைய ஒட்டு போடவும்....
நன்றி
ஜெட்லி...(சரவணா...)
23 comments:
தில்லாலங்கடி - வுட்டாலங்கடியா?
thala kick 10 thadava paththiruppen. now im on the way to DEVI complext to see thillalankadi...
Night than anna parkanum..
ரொம்ப நல்லவரு ரமேஷே,
//now im on the way to DEVI complext to see thillalankadi..//
பார்த்து போங்க. மதியமே தேவி தியேட்டர்ல காங்கிரெஸ்காரங்க போராட்டம் எல்லாம் பண்ணங்க. படத்துல சானியா-சோனியா என்றெல்லாம் வசனம் வந்து அவங்க தலைவியை கிண்டல் பண்ற மாதிரி இருப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம் எல்லாம் பண்ணி அந்த படத்துக்கு இலவச விளம்பரம் பண்ணங்க.
Sariyana maavu na athu "jayam ravi" thaan.
Free ah paarkka kooda yosippen.umakku ethaiyam thaankum idayam!
athu eppadi jetli padam vantha sila mani nerathila paarthuttu ,vimarsanam poda mudiyuthu, mudiyala avvv...
அதெப்புடி வெள்ளிக்கிழமை தவறாம சினிமா பார்க்கறீங்க. லீவா?:))
தில்லாலங்கடி_ ஒரு ரவுண்டு வருமா?..
அதெப்படி? உங்க பின் சீட்டு காரங்க மட்டும் எப்ப பாத்தாலும்
நல்லா கமென்ட் அடிச்சுகிட்டே இருக்காங்க. ;-)
# படத்தின் நடுவில் ரவி மற்றும் வடிவேலுவை அனிமேஷன்இல்
காட்டுவார்கள்...அதற்கு பின்சீட்காரர்...
" இதுக்கு நான் வீட்லயே..சுட்டி டி.வி. பார்த்து இருப்பேன்"
என்று ஆதங்கத்தை வெளிப்படித்தினார்.
...... ha,ha,ha,ha,ha.... அவர் அவர் புலம்பல் அவர்க்கு....
மொக்க படம்னு சொல்றீங்க..
//King Viswa said...
தில்லாலங்கடி - வுட்டாலங்கடியா?
//
அப்படிதான் ஆகி போச்சு....
// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
thala kick 10 thadava paththiruppen. now im on the way to DEVI complext to see thillalankadi...
//
பார்த்துட்டு சொல்லுங்க அண்ணே...
//Anbu said...
Night than anna parkanum..
//
hmm... parthutu sollunga...
@வவ்வால்
//vimarsanam poda mudiyuthu, mudiyala avvv...
//
எனக்கும் போர் அடிச்சு போச்சு கொஞ்ச நாள் லீவ் விடலாம்னு
இருக்கேன்....
//வானம்பாடிகள் said...
அதெப்புடி வெள்ளிக்கிழமை தவறாம சினிமா பார்க்கறீங்க. லீவா?:))
//
லீவ்லாம் இல்லை ஐயா....
படம் பார்க்க மட்டும் அன்னைக்கு ப்ரீ பண்ணிப்பேன்...
// Starjan ( ஸ்டார்ஜன் ) said...
தில்லாலங்கடி_ ஒரு ரவுண்டு வருமா?..
//
வர்ற மாதிரி தெரியலை அண்ணே...
// வழிப்போக்கன் said...
அதெப்படி? உங்க பின் சீட்டு காரங்க மட்டும் எப்ப பாத்தாலும்
நல்லா கமென்ட் அடிச்சுகிட்டே இருக்காங்க. ;-)
//
இந்த மாதிரி படத்துக்கு போங்க...கண்டிப்பா
கமெண்ட் வரும்....அப்புறம் வரலைனா வந்து
கேளுங்க....
@ Chitra
அது சரி தான்
// காவேரி கணேஷ் said...
மொக்க படம்னு சொல்றீங்க..
//
ஹ்ம்ம்.... சரிதான்...அண்ணே...
ஆனா காமெடி நல்லா இருக்கு...
எனக்கு படம் ஓகே தான். ஆனா ரவி தேஜா மாதிரி வருமா. இந்த படத்துக்கு சூர்யா இல்லை விஜய் தான் சரியான சாய்ஸ்.
அது மாதிரி இலியானா கூட compare பண்ணும்போது தமன்னா படு மொக்கை. சோனியா அகர்வால் மாதிரி மூஞ்சில அப்படி ஒரு சோகம்.
நம்ம மேல கை வைக்க முடியுமா விஸ்வா
மொக்கையா ?
அப்போ நம்பி போக வேணாமா..
படம் நல்லாயில்லையா பாஸ்.
தில்லாலங்கடி...
லாலங்கடி...
லங்கடி...
கடி..!
Right?
Post a Comment