"டேய் என்கிட்டே பி.வி.ஆர் ரெண்டு பிரஸ் பாஸ் இருக்குடா வா படத்துக்கு போயிட்டு வருவோம்"னு நண்பன் கூப்பிட்டான்.அங்கே போய் பார்த்தா எல்லா படமும் புல். தீடிர்னு பார்த்தா knight and day பத்து ரூபாய் டிக்கெட் தான்டா இருந்தது வாங்கிட்டேன்.. பாஸ்க்கு நாளைக்கு வேற படத்துக்கு புக்
பண்ணிக்கலாம் என்றான்...புக் பண்ண படம் தான் ஆனந்துபுரத்து வீடு!!
"டேய் பத்து ரூவா.... கட்டை சீட்டுடா ரெண்டு மணி நேரம் உட்கார்ந்து பார்க்க முடியாது...தலை வேற வலிக்கும்டா" என்று அவனிடம் சொல்லியபடி ஸ்க்ரீன் ஏழில் நுழைந்தால் எல்லாத்துக்கும் ஒரே சீட்.... எனக்கு ஒரே ஆச்சரியம்... இதுவே மாயாஜால்னா முதல் ரோ என்றாலும் இருநூறு
ரூபாய் தான் டிக்கெட் ரேட்.
KNIGHT AND DAY :
சரி படத்துக்கு வருவோம்... ஹாலிவுட் ஹீரோக்களில் எனக்கு
பிடித்தவர்களில் டாம் க்ருஸும் ஒருவர். சும்மா ஆக்சன் காட்சிகளில்
பூந்து விளையாடுவார் மனிதர். இது கிட்டதட்ட ஒரு ஜேம்ஸ் பான்ட்
படம் மாதிரி தான். டாம் நிகருக்கு டாமே!! கதைன்னு பார்த்தா
சிங்கள் லைன் தான்...ஆனா திரைக்கதை செம வேகம்....
கமரூன் டியாஸ் ஆன்டிக்கு கிழடு தட்டி போச்சுன்னு தான் சொல்லணும்.... ஆனா இந்த படத்தில் காமெடி செய்வதில் பின்னி பெடல் எடுத்து இருக்கிறார். பிகினி காட்சியில் வரும் போது அவர் டாமை பார்த்து கேட்கும் கேள்விகளுக்கு பின்னர் கிளைமாக்ஸ்இல் டாம் அதே கேள்வியை கேட்கும் காட்சி கிச்சு கிச்சு ரகம்.
ஒரு பையன் சார்ஜ் தீராத பாட்டரியை கண்டு பிடிக்கிறான்...
அதை வில்லன் கும்பலிடம் விற்க ஒரு ஏஜென்ட் நினைக்கிறார்...
ஆனால் அதை டாம் கைப்பற்றி என்ன பண்ணுகிறார் என்பதே
கதை.படத்தில் லாஜிக் பார்த்தால் சுத்தம்....எப்படி ஹீரோ ட்ரெயின்யில் இருந்து தப்பிக்கிறார்,வில்லன் கோட்டையில் எப்படி உள்ளே வருகிறார் என்று எல்லாம் கேட்க கூடாது. ஆனால் படம் விறு விறு ரகம்.
தியேட்டர் நொறுக்ஸ்:
# போனது பத்து ரூபாய் டிக்கெட் அதிலும் ஒரு சிறு பையன் வந்து
" PLEASE SHIFT UR SEAT, MY FREIND SIITTING THERE" என்று பிலா உட
ஆரம்பித்தான். அவன் நண்பன் சீட் இடைவெளி தள்ளி உட்கார்ந்திருந்தான்... எப்படியும் பக்கத்தில் உட்கார முடியாது...
பக்கத்துக்கு சீட்காரர் அவனிடம் ஆங்கிலத்தில்..."அவன் அங்கே
உட்கார்ந்து இருக்கிறான்..எப்படியும் உங்களுக்குள் இடைவெளி
இருக்க போகிறது..எங்கே உட்கார்ந்தா என்ன??" என்று கேட்டார்..
அவன் " FIRST SHIFT UR SEAT.." என்று ஆர்டர் போட ஆரம்பித்தான்..
பக்கத்தில் உள்ள நண்பர் முடியாது என்றார்... அந்த பையன் அவன்
சீட்டில் போய் உட்கார்ந்தான்... பக்கத்தில் இருந்த நண்பரின் நண்பர்
"இங்கிலீஷ்ல பீட்டர் உட்டா சீட்டை விட்டுருவமோ...",,, என்றார்.
# பக்கத்தில் இருந்த நண்பர் அவர் நண்பரிடம் "என்னயா இது
எப்படி ஹீரோ தப்பிசார்னு காமிக்கவே இல்லைனு" அப்போ
அப்போ வருத்த பட்டார்.
******************************
ஆனந்துபுரத்து வீடு:
இந்த படத்தை பார்க்க எனக்கு பல தடங்கல்கள் வந்தது...முதல் நாள்
நைட் ஷோ போறது தான் முதல் பிளான்...ஆனா கணபதிராம்
தியேட்டர்ல நைட் ஷோ போடல... அப்புறம் பி.வி.ஆர்.ல புக்
பண்ணி படத்துக்கு போகும் போதும் பல தடங்கல்கள். செம ட்ராபிக்
படத்துக்கு பத்து நிமிஷம் லேட்ஆக தான் போனேன்...போகும் போது
முதல் பாட்டு ஓடி கொண்டி இருந்தது.
படத்தை பற்றி இருவிதமா கருத்துக்கள் வந்ததால் நாமே பார்த்து
முடிவு பண்ணி விடுவோம் என்று தான் போனேன். இந்த படத்தை பரப்பரப்பான திகில் படம்னு அவங்க விளம்பரம் செய்ஞ்சது முதல் தப்பு. சத்தியமா படத்தில் திகில் இல்லை என்பதே உண்மை...
இது ஒரு காமெடி படம் என்று சொன்னால் கூட நம்பலாம்..!!
என்ன கதை:
நந்தா கடன் தொல்லையால் ஊரில் இருக்கும் தன் அப்பா வீட்டுக்கு
வருகிறார். அப்பா அம்மா நந்தா சிறு வயதா இருக்கும் போதே கார்
விபத்தில் இருந்து விடுகிறார்கள். பையன் ஊருக்கு வந்தவுடன் ஆவியாய் வந்து பாசத்தை கொட்டுகிறார்கள்.....ஆனா ஒண்ணு
இந்த மாதிரி ஆவி மட்டும் எல்லார் வீட்டிலும் இருந்தா வேலைகாரங்க சம்பளம் மிச்சம்......!!
படத்தில் ஒரு இடத்தில் கூட திகிலோ பயமோ வரவில்லை
என்பது தான் உண்மை. சரி படம் மொக்கையா என்று கேட்டால்
அப்படி சொல்லி விட முடியாது. இது நமக்கு ஒரு வித்தியசமான
படமாக இருந்தாலும் அதை எடுத்த விதத்தில் சலிப்பு தான்
வருகிறது. எனக்கு ஒரே வருத்தம் தான் நந்தா நண்பரின் மனைவி பண பெட்டியை எடுத்து வரும்போதே ஆவி அந்த பெட்டியை
திறந்து காட்டி இருந்தால்...படம் பார்த்த அனைவருக்கும் அரை
மணி நேரம் மிச்சம் ஆகி இருக்கும்...!! அதை விட்டுட்டு திகில்னு சொல்லி சில காட்சிகள், நந்தா ஆவியை போக சொல்லுவது, வில்லன்
சேசிங்...என்று வைத்து நம் உயிரை வாங்குகிறது அந்த ஆவி...!!
சாயா சிங்....பத்தி சொல்ல ஒண்ணும் பெருசா இல்லை... ஆனா
அந்த சின்ன பையன் உண்மையில் கவர்கிறான். அப்புறம் வில்லனா
வர்ற அந்த ஆள் மோகன்ராம் குரல்னு நினைக்கிறேன்... வழக்கமா
கடந்த ஆறுபது வருஷமா வர்ற தமிழ் சினிமா வில்லன் தான்.
கடைசி நொடியில் எப்படியோ திருந்தி விடுகிறார். அப்புறம் நந்தாவின்
நண்பராக வரும் சீரியல் நடிகர் செம மொக்கை.... காமெடி பீஸ்....
அவர் மனைவியும் அவரும் கொஞ்சும் காட்சிகள் செம காமெடி...!!
நாகா,மர்மதேசம்,இந்திரா சௌந்தராஜன் என்று நம்பி போனவர்களுக்கு இந்த படம் ஒரு பெரிய இடி தான்.... எனக்கு தெரிஞ்சு என் கூட படம் பார்த்தவர்கள் பல காட்சியில் சிரித்து கொண்டு தான் பார்த்தனர். நானும் என் நண்பனும் சிரிச்சு ரசிச்சு பார்த்தோம்.... உங்களுக்கு பொழுதே போகலைனா இந்த
படத்துக்கு போலாம்....ஆனா திகில் படம்னு நீங்க நினைச்சு போன
நானோ இயக்குனரோ பொறுப்பல்ல !!
ஆனந்துபுரத்து வீடு : பழைய வீடு தான்,பாக்கறவங்க பாக்கலாம் !!
தியேட்டர் நொறுக்ஸ்:
# லோக்கல் தியேட்டர் போன தான் சீட் மேலே காலை போடுற
பிரச்சனைனு பார்த்தா இங்கயும் அதே பிரச்சனை... பின்னாடி இருந்த ஆன்டியிடம் காலை கொஞ்சம் மடக்கி வைங்க என்ற
பின்பு தான் நிம்மதி....!!
# சரி பின்னாடி இருந்து தான் தொந்தரவு வருது பார்த்தா....
முன்னாடி இருக்கிறவன் வேற படம் ஓட்டுறான்...என்னத்த
சொல்றது....
# நந்தாவின் நண்பராக வரும் சீரியல் நடிகர் தன் மனைவியை
கொஞ்சும் காட்சியில் தியேட்டரில் ஒரே கலகலப்பு....காரணம்
செம கேவலமா இருக்கும்....அவரின் மனைவி " I LOVE U
FOR THIS" என்று டிபன் கொண்டு வர போகும் கணவனிடம்
சொல்லும் போது தியேட்டரில் "ஐயோ" என்று செம சவுண்ட்....
இந்த விமர்சனம் பல பேருக்கு சென்று அடைய உங்கள்
பொன்னான வாக்குகளை அளிக்குமாறு கேட்டுகொள்கிறேன்.
உங்கள்...
ஜெட்லி...(சரவணா...)
23 comments:
ஜெட் லீ நண்பரே,
அனதபுரத்து வீடு பற்றி பலவிதமான ரிபோர்ட் வந்துக்கொண்டு இருந்தது. இப்போதுதான் சரியான தகவல்.
நன்றி.
வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்.
அனுஷ்காவும், ஆபாச போஸ்டரும்
ஜெட் லீ நண்பரே,
டான் படம் பார்த்துவிட்டீர்களா?
இந்த போஸ்டரை பார்த்தீங்களா?
வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்.
அனுஷ்காவும், ஆபாச போஸ்டரும்
தல சிவப்பு விளக்கு படம் விமர்சனம் எப்போ?
KNIGHT AND DAY , ஆனந்துபுரத்து வீடு ....இந்த இரண்டு படமும் தாம்பரம் பக்கம் இன்னும் வரல ..வந்த பார்த்துவிடுவோம்...
நான் ட்ரைலர் பார்க்கும் பொழுதே முடிவு பண்ணிட்டேன் ஆனந்துபுரத்து வீடு இப்படி மொக்கையா தான் இருக்கும்ன்னு
வைகுண்ட ஏகாதசிக்கு ஒரே காட்சியில் 2 படம் மாதிரி எந்தப் படம் போனாலும் ஸ்கிரீன மட்ட்ட்ட்ட்ட்டும் பார்க்காம அக்கம் பக்கம் பார்த்து படம் ஓட்றாய்ங்கன்னா என்னா அர்த்தம்னேன்:))
தியேட்டர் நொருக்ஸ் சூப்பர்.
மனோ
இரண்டு விமர்சனம்..காரம் குறைவுதான் தல..
முதல் படம் இன்னும் பார்க்கலை. So நோ கமெண்ட்ஸ்.. ரெண்டாவது படம் கமெண்ட் பண்ற அளவுக்கு ஒண்ணும் இல்லை. ஷங்கர் பாவம். (எஸ் பிக்சர்ஸ் இனி படம் தயாரிக்க போறதிலைன்னு ஒரு வதந்தி.. உண்மையா? அவர்கள் தயரித்த கடைசி 5 படங்களும் வியாபார ரீதியாக நஷ்டம்தானே? அறை எண் 305ல் கடவுள், கல்லூரி, ஈரம், ரெட்டைசுழி, ஆனந்தபுரத்துவீடு என எல்லாமே ஷங்கருக்கு பணவருத்தம் கொடுத்தாலும்... ஈரம், கல்லூரி மாதிரியான படங்களை தயாரித்ததற்கு ஷங்கர் பெருமைபட்டுக்கொள்ளலாம். எஸ் பிக்சர்ஸின் உண்மையான வெற்றி காதலும், இம்சை அரசனும் தான். ஈரம் விமர்சனரீதியாக வெற்றி. ஆனால் வியாபார ரீதியாக தோல்விதான். இனி எஸ் பிக்சர்ஸிடமிருந்து கமர்ஷியல் கலப்படமற்ற படைப்புகளை எதிர்பார்க்க முடியுமா?
@வெடிகுண்டு வெங்கட்
//டான் படம் பார்த்துவிட்டீர்களா?
இந்த போஸ்டரை பார்த்தீங்களா?
//
டான் படம் எல்லாம் பார்க்குற மாதிரி இல்ல....
அனுஷ்கா ஸ்டில் நல்லா இருக்கு....
// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
தல சிவப்பு விளக்கு படம் விமர்சனம் எப்போ?
//
சிவப்பு பச்சை விளக்கு எல்லாம் போற மாதிரி இல்ல....அந்தரங்கம் படம் வேணும்னா ட்ரை பண்றேன் அண்ணே ....
@ டம்பி மேவீ
rite...
@ வானம்பாடிகள்
என்ன ஐயா பண்றது..... கண் முன்னாடி நடக்கிறதை
எப்படி பார்க்காம இருக்க முடியும்.... நானும் எவ்வளவோ
ட்ரை பண்றேன்..... எதுக்குன்னு கேட்க்காதிங்க!!
@ MANO
நன்றி....
@ கே.ஆர்.பி.செந்தில் said...
இரண்டு விமர்சனம்..காரம் குறைவுதான் தல..
காரம் கம்மியா இருந்தாதான் நல்லது அண்ணே....
@ கவிதை காதலன்
தெரியில....பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்...
ஆனால் தரமான படங்கள் கொடுத்த நிறுவனம் என்ற
பெயர் இருக்கிறது....ஷங்கர் தயாரிப்பில் தொடர்வார்
என்று நினைக்கிறேன்....
விமர்சனம் நல்லாயிருக்கு. அனந்தபுரத்து வீடு குழந்தைகள் விரும்புவார்கள் என நினைக்கிறேன்.
ஜெட்லி.. விமர்சனம் நல்லா இருக்கு.. ஆனதபுரம் நெறைய பில்டப் இருந்ததே..அந்த அளவுக்கு படம் இல்லை போல :(
தம்பி டாம் க்ரூஸ் படம் பாக்கலாமா.. இல்ல சாய்ஸ்ல விட்ரலாமா??
ஒரே வார்த்தை ல் சொல்லு.. இங்க டிக்கட் 200 ரூபாய்...
அதான் கேக்குறேன்
தம்பி டாம் க்ரூஸ் படம் பாக்கலாமா.. இல்ல சாய்ஸ்ல விட்ரலாமா??
ஒரே வார்த்தை ல் சொல்லு.. இங்க டிக்கட் 200 ரூபாய்...
அதான் கேக்குறேன்
//sivakasi maappillai said...
தம்பி டாம் க்ரூஸ் படம் பாக்கலாமா.. இல்ல சாய்ஸ்ல விட்ரலாமா??
ஒரே வார்த்தை ல் சொல்லு.. இங்க டிக்கட் 200 ரூபாய்...
அதான் கேக்குறேன்
//
200 ரூவா தான் யோசிக்க வைக்குது....
ஆனா நல்ல டைம் பாஸ் படம்!!
அப்புறம் உங்க இஷ்டம் அண்ணே...
//200 ரூவா தான் யோசிக்க வைக்குது....
ஆனா நல்ல டைம் பாஸ் படம்!!
அப்புறம் உங்க இஷ்டம் அண்ணே...///
தம்பி
ஒரு வார்த்தை ல பதில் கேட்டா சிறு குறிப்பு எழுதியிருக்க...
கரெக்டா சொல்லு... போலாமா... வேணாமா...
@sivakasi maappillai
போலாம்
சரி பாத்துட்டு சொல்றேன்
உங்கள பத்தி என்னோட வலைப்பூவில் எழுதி இருக்கேன். படித்துவிட்டு உங்கள் கருத்துகளை சொல்லுங்க.
http://thegoodstranger.blogspot.com/2010/07/blog-post_14.html
உங்கள பத்தி என்னோட வலைப்பூவில் எழுதி இருக்கேன். படித்துவிட்டு உங்கள் கருத்துகளை சொல்லுங்க.
http://thegoodstranger.blogspot.com/2010/07/blog-post_14.html
Post a Comment