Thursday, July 22, 2010

கனவு வேட்டையும் போஸ்டர் வேட்டையும்!!!

கனவு வேட்டை:

கனவு வேட்டை (INCEPTION) படத்திற்கு கடந்த வெள்ளியே போய்
இருக்க வேண்டியது கூர்க் செல்ல வேண்டிய காரணத்தால் இன்று
தான் பார்த்தேன். பைலட் தியேட்டரில் இன்று தான் கனவு வேட்டை கடைசி நாள் என்பதால் சுமார் நுப்பது பேர் இருந்ததே அதிசியம். அதுவும் தியேட்டர்க்காரன் படம் முழுவதும் ஏ.சி. போட்டது மிக பெரிய அதிசியம்.வேட்டை ஆரம்பம்டோய்.....!!


கனவு வேட்டை பற்றி ஒரு தமிழ் நாளிதழில் படித்த நினைவு...
கதாநாயகன் வேறு லியோநார்டா என்பதால் ஒரு எதிர்ப்பார்ப்பு
என்னுள் இருந்தது. படம் போட்டவுடனே அப்போ அப்போ கொஞ்சம்
சவுண்ட் கட் பண்ண ஆரம்பிச்சான் நம்ம ஆராதனா தியேட்டர்
மாதிரி. அதிலே எனக்கு கண்ணு சொக்க ஆரம்பிச்சுருச்சு... கண்
அசந்த நேரத்தில ரெண்டு மூணு கனவு வேற வந்திருச்சிங்க.
ஒரு வேளை இது தான் கனவு வேட்டையோ....??


படத்தில் நான் பார்த்த வரைக்கும் எனக்கு புரிஞ்சுது இது தாங்க..
நம்ம ஹீரோ ஒரு குழுவா அடுத்தவங்க கனவுக்குள் போய்
களவாடுராறு. சில சமயம் கனவுக்குள் போய் கனவுக்குள்ளயே
கனவுக்குள்ளும் போறாங்க. அதாவது நம்ம தமிழ் சினிமாலா
சில படத்தில் வருமே பிளாஷ்பேக் உள்ளயே பிளாஷ்பேக் அந்த
மாதிரி.... ஆனா இந்த கனவு வேட்டை வேற... ஆக மொத்தத்தில்
எனக்கும் ஒன்னுமே புரியலைன்னு சொல்ல முடியாது...ஏதோ
கொஞ்சம் புரிஞ்சுது...ஆனா புரியல....!! சரி ரைட் விடுவோம்..

***********************************

போஸ்டர் வேட்டை :


நானா தேடி போய் இப்படிப்பட்ட போஸ்டரை படம் பிடிக்கறது
இல்லைங்க...அப்படியே போகும் போதும் கண்ணில் பட்டா
எடுக்கறது உண்டு...நாம ரசிச்சதை மற்றவர்களும் ரசிக்கட்டுமே
என்ற ஒரே காரணம் தாங்க...

சின்ன தளபதி பரத்:எங்கள் அண்ணன் சின்ன தளபதி பிறந்தநாள் போஸ்டரை
பார்த்ததும் அசந்துட்டேன்.... இப்படியெல்லாம் கூட காமெடி
பண்ணுவாங்களானு ஒரே சிரிப்பு...ஏற்கனவே facebook , ஓர்குட்
என்று இந்த போட்டோவை அப்டேட் பண்ணாலும்... அதை
பார்க்கதவங்களுக்கு இங்கே...... சின்ன தளபதியை யாரும்
நக்கல் பண்ண கூடாது...சொல்லிப்புட்டேன் ஆமாம்....அவளின் உணர்ச்சிகள் :
இப்ப நம்ம தமிழ் சினிமாவுக்கு கொஞ்சம் கஷ்ட காலம்னு நினைக்கிறேன்.... அட்டு படத்துக்கு தான் இப்போ விளம்பரம் அதிகமா வருது... அவளின் உணர்ச்சிகள் போறதுக்கு முன்னாடி அந்தரங்கம் பற்றி கொஞ்சம் பேசுவோம்....


உண்மைய சொன்ன நம்புங்க நான் இன்னும் அந்தரங்கம் படத்தை
பார்க்கவில்லை.எங்க பக்கத்துக்கு வுட்டு பொக்கை வாய் தாத்தா "நான் எப்போ அந்தரங்கம் படம் போவேன்" னு கேட்டு, நான் பார்த்துட்டு வந்து அவர்க்கிட்ட சீன் இருக்கா இல்லையானு சொன்ன பிறகு தான் அவர் போவேன்னு ஒத்தகாலில் நிக்குறார்.... நான் என்ன பண்றது சொல்லுங்க... எனக்கு என்னமோ அந்த படம் நல்லா இருக்காதுனு தான் தோணுது..... என் நண்பன் ஒருவன் சிவப்பு விளக்கு பார்த்து நொந்து விட்டான்..காரணம் கேட்டதற்கு படத்தில் சிவப்பு விளக்கை கூட காட்டவில்லையாம்.....!!


சரி அவளின் உணர்ச்சிகள் படத்துக்கு வருவோம்... இந்த படம்
போஸ்டர் பார்த்தவுடன் அடுத்த அட்டு படம் ரெடி ஆயிடுச்சு
டோய் என்று மகிழ்ந்தாலும். இந்த மாதிரி அட்டு படங்கள்
மக்கள் காசை வீணடிக்கிறது. இந்த மாதிரி படத்தால் மக்கள்
காசை ஒரு சில கும்பல்கள் நாமம் போட்டு விடுகிறார்கள்
என்பதே உண்மை.

காதலர் கட்சி :கொஞ்ச நாள் முன்பு பெசன்ட் நகர் பீச்க்கு போகும் போது இந்த
போஸ்டர் கண்ணில்ப்பட்டது. சில வருடங்களுக்கு முன் இது
போல் ஒரு கட்சி இருப்பதை கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால்
இப்போது தான் அதன் தலைவரை பார்க்கிறேன். ஒரு தடவை
தேர்தலில் நின்றதாக கூட நினைவு...ஆனா எத்தனை ஓட்டு
வாங்கினார்னு தெரியலை...... ஆனா ஒண்ணு கடைசி வரி...
காதலர்களின் புரட்சி தலைவர் குமார்...ஹி ஹி...!!
யாராவது கள்ள காதல்னு ஒரு கட்சி ஆரம்பிச்சா நிறைய ஓட்டு
விழ வாய்ப்பிருக்கு...பேப்பர் திறந்தாலே அது தானே நியூஸ்.


இந்த இடுகை பல பேருக்கு சென்று அடைய உங்கள்
பொன்னான வாக்குகளை அளிக்குமாறு கேட்டுகொள்கிறேன்.


உங்கள்...

ஜெட்லி...(சரவணா...)

21 comments:

MANO said...

தல..

போஸ்டர் வேட்டை சூப்பர்.

மனோ

கே.ஆர்.பி.செந்தில் said...

காதலர் கட்சியில் நீங்க மெம்பர் ஆகிடீங்களா?

பின்னோக்கி said...

10 வருஷத்துக்கு முன்னாடி அரங்கநாதன் சப்வேயில இப்ப பரத்துக்கு இருந்த மாதிரி தான் விஜய்க்கும் போஸ்டர் ஒட்டியிருந்தாங்க. அத நாங்க ஓட்டுனோம். சோ.. எதுவும் நடக்கும்ங்க. எதுக்கு தேவையில்லாம கிண்டல் பண்ணிக்கிட்டு.. என்ன நான் சொல்றது ? சரிதானே ?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

தம்பி..

இந்தப் படம் எப்போ ரிலீஸ்..?

டம்பி மேவீ said...

அண்ணே ...கனவு வேட்டை படம் ஓடும் தியேட்டரை கண்டுபிக்கவே நான் இன்னும் வேட்டை அடித்து இருக்கேன் ண்ணே.....

சத்யம் போன இங்கிலீஷ் ல தான் ஓடுது ...வேற எந்த தியேட்டர் ல இந்த ஓடுது ??? நாளைக்கு திருவான்மியூர் அடையாறு பக்கம் தான் சுத்திகிட்டு இருப்பேன் ...பார்த்து சொல்லுங்க

VISA said...

//யாராவது கள்ள காதல்னு ஒரு கட்சி ஆரம்பிச்சா நிறைய ஓட்டு
விழ வாய்ப்பிருக்கு...பேப்பர் திறந்தாலே அது தானே நியூஸ்.
//

:)

Chitra said...

யாராவது கள்ள காதல்னு ஒரு கட்சி ஆரம்பிச்சா நிறைய ஓட்டு
விழ வாய்ப்பிருக்கு...பேப்பர் திறந்தாலே அது தானே நியூஸ்.


...... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா..... மிரட்டல் வரிகள். அரசியலில் காமெடி பண்ணுவாங்க என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். நீங்கள் சொல்றதை பார்த்தால், காமெடியே அரசியல் பண்ணும் நாள் சீக்கிரம் வந்துடும் போல.

டம்பி மேவீ said...

http://mayvee.blogspot.com/2010/07/blog-post_22.html


konjam vanthu parunga nne

Rajasurian said...

@டம்பி மேவீ
same pinch

தமிழ் உதயம் said...

நாலு போஸ்டர். நாலு மெசேஜ்.

ஜெட்லி... said...

நன்றி மனோ...// கே.ஆர்.பி.செந்தில் said...

காதலர் கட்சியில் நீங்க மெம்பர் ஆகிடீங்கள??//


அட நீங்க வேற....ஏதோ காமெடினு நினைக்கிறேன்...

ஜெட்லி... said...

@பின்னோக்கி


பரத்க்கு இப்பமே அடி பலமா உழுது...
அதனால் வர்றது கொஞ்சம் கஷ்டம் தான்...//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

தம்பி..

இந்தப் படம் எப்போ ரிலீஸ்..? //


ஏன் அந்தரங்கம் மாதிரி முத நாளே போறதுக்கா..
உங்களுக்கு தெரியதாதா எனக்கு தெரிய போகுது அண்ணே...

ஜெட்லி... said...

@டம்பி மேவீ


எனக்கு தெரிஞ்சு தமிழில் தூக்கி விடுவார்கள் என்று
தான் நினைக்கிறேன்.... கணபதிராம் சைட் வந்தா வாங்க...

ஜெட்லி... said...

nandri VISA


@Chitra


:))

ஜெட்லி... said...

@தமிழ் உதயம்

நன்றி சார்

ஜெட்லி... said...

@Balaji saravana


ஹலோ இதெல்லாம் கம்பெனி ரகசியம்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//உண்மைய சொன்ன நம்புங்க நான் இன்னும் அந்தரங்கம் படத்தை
பார்க்கவில்லை//

nampitten saththiyamaa

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//உண்மைய சொன்ன நம்புங்க நான் இன்னும் அந்தரங்கம் படத்தை
பார்க்கவில்லை//

nampitten saththiyamaa

வழிப்போக்கன் said...

//யாராவது கள்ள காதல்னு ஒரு கட்சி ஆரம்பிச்சா நிறைய ஓட்டு
விழ வாய்ப்பிருக்கு...பேப்பர் திறந்தாலே அது தானே நியூஸ்.//

ha ha

Sathya said...

super blog my daily dose of humour is your blog and reviews are also super

thanks continue

cute said...

mokka review...padam puriyalaenna vittarlam atha vititu review panraennu kelambira vendithu....atha samalika vera padam poster,review nu
parkuravana muttak aakurathu....unaku vera velaiyae illaya theechati,dapsa thalaya