Wednesday, July 7, 2010

கில்மானந்தாவின் அஜால் குஜால் சிந்தனைகள்

ஆனி 23 சிறப்பு கில்மா சிந்தனைகள்:


ஹோ...கில்மா ஜே ரவ....

பக்த கோடிகளே...நமது குரு கில்மானந்தா, டி.வி.யில் அனன்யா வரும் சென்னை சில்க்ஸ் விளம்பரத்தை பார்த்ததில் இருந்து தனது பெயரை அனன்யாதாசன் என்று மாற்றி கொள்ள சிந்தித்து வருகிறார் என்பதை இங்கே பெருமையுடன் தெரிவித்து கொள்கிறோம் !! இந்த தீவிர சிந்தனையிலும் அவர் நமக்கு அளித்த அருளுரைகள், தெளிவுரைகள் எல்லாம் உங்கள் பார்வைக்கு......

கில்மானந்தாவின் பிட்மொழிகள் அல்லது ரீமிக்ஸ் பொன்மொழிகள்
அல்லது சிந்தனைகள்னு கூட வைத்து கொள்ளலாம் :

# டாஸ்மாக் முன்னாடி பித்த வாந்தி எடுத்தாலும்
உலகம் உன்னை குடிச்சிட்டு வாந்தி எடுக்கறான்னு தான் சொல்லும்!!!

# நயன்தாரா, த்ரிஷானு சொன்னா உதடுகள் ஒட்டாது
பாவனா, முமைத் கான்னு சொன்னா தான் உதடுகள் ஓட்டும்!!

# ஹாப்(half) அடிச்சவன் மட்டையாகாதான் வேணும்...
அதுக்கு அப்புறமும் ஆம்லேட் சாப்பிடுறவன் ஆப்பாயில் போட்டே
ஆகணும்...!!என்பதே உலக நியதி....

*******************கில்மானந்தாவின் வாழ்க்கை தத்துவங்கள்:

# தலையிலே வழுக்கை விழுந்தா கவலைப்படுறோம்
அதுவே இளநீரில் வழுக்கை விழுந்தா சந்தோஷப்படுறோம்....!!

# நைஸ் தோசைக்கும் கல்தோசைக்கும் ஒரே கிண்ணம் மாவுதான்...
ஆனா அதை நாலு சுத்து எக்ஸ்ட்ரா சுத்துனதான் நமக்கு எக்ஸ்ட்ரா
காசு கிடைக்கும்...!!

# நம்ம வாழ்க்கையே ஒரு கட்டிங் தான்... தலையிலே முடி அதிகமான சலூனுக்கு போய் கட்டிங் பண்ண போறோம். டெய்லர் கிட்ட நாம வாங்குன துணியை கொடுத்தா அவர் கட்டிங் பண்ணி தைக்கிறார்,ரோட்ல போகும் போது போலீஸ்க்காரன் புடிச்சா அவருக்கு ஒரு கட்டிங் கொடுக்கணும்....
அப்படியே நைட் கடுப்பா இருந்தா டாஸ்மாக்கில் போய் கட்டிங்
சாப்பிட்டு வரலாம். கட்டிங்கை கேவலமா நினைக்க கூடாது, கட்டிங் போடுவதால் நாட்டில் சமுதாய ஒற்றுமை வளர்வதாக ஒரு ஆய்வு கூறுகிறது என்பது குறிப்பிட தக்கது.

*****************

கில்மானந்தாவின் குவாட்டர் கட்டிங் அடித்த பின் தந்த தெளிவுரை உங்கள் பார்வைக்கு:

மீண்டும் அதே கிரி படம் தான்.... பாடல் வேறு...

" டேய் கையை வச்சிக்கிட்டு சும்மா இருடா..."
" டேய்.... டேய்.... டேய் கையை வச்சிக்கினு சும்மா இருடா..."

இந்த பாட்டில் பல பேர் டபுள் மீனிங் இருக்குனு சொல்கிறார்கள் அது சரிதான் பக்தர்களே.... நம் வாழ்க்கைக்கு தேவையான, பொக்கிஷமான டபுள் மீனிங் மட்டுமே இருக்கு.....

"டேய் கையை வச்சிக்கிட்டு சும்மா இருடா..."


அதவாது ரீமாசென் அர்ஜுனிடம் "டேய் நீ வச்சி இருக்கிற நம்பிக்கையை மட்டும் நம்பு... வேற யார் என்ன சொன்னாலும் சும்மா இரு" னு சொல்றாங்க அது தான் இந்த பாட்டின் முதல் வரி அர்த்தம்...மற்றபடி வேறு ஒன்றும் இல்லை.....வேணும்னா இன்னொரு அர்த்தம் கூட சொல்லலாம்... அது இசையமைப்பாளர் இமானை பார்த்து சொல்லுவதாக கூட இருக்கலாம்....
" டேய் கையை வச்சிக்கிட்டு சும்மா இருடா....ஏன் ரீமிக்ஸ்னு
போட்டு மக்களை கொல்ற" அப்படின்னு வேணும்னா இன்னொரு அர்த்தம் இருக்கவும் வாய்ப்பு இருக்கு.....!!


****************************

கில்மா பன்ச்:

" தத்தியா இருந்தா நீ பட்டர்....
உஷாரா இருந்தா நீ பெட்டர்...!!"

****************************விளம்பரம் :


கில்மானந்தாவின் அஜால் குஜால் அருளுரை, தெளிவுரை, விளக்கவுரை மற்றும் மூட்ஸ் உறை தற்போது டி.வி.டி.யிலும் கிடைக்கிறது...விலை வெறும் ஆயிரம் ரூபாய் தான்.!!


(பி.கு) நல்ல வெளிச்சத்தில் எடுத்த ரெண்டு புத்தம் புதிய பிட் இணைக்கப்பட்டுள்ளது.

இல்லை எங்களுக்கு பிட் படம் மட்டும் போதும் என்பவர்கள் 999 ரூபாய் டி.டி. அனுப்பினால் போதும்.... !!கில்மானந்தாவுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது...
நீ கேளேன் ப்ளாக் மட்டுமே தலைமை அலுவலகம் என்பதை
தெரிவித்து கொள்கிறோம்...நீங்க பாட்டுக்கு கில்மானு கடை
பேர் போட்டிருக்குனு போனால் நாங்கள் பொறுப்பல்ல...!!

********************

எனக்கும் கில்மானந்தாவுக்கும் நடந்த சிறு உரையாடல்...

கில்மா : சிஷ்யா, இன்னும் நீ பௌர்ணமி நாகம் பார்க்கவில்லையா??

ஜெட்லி : இல்லை சாமி...அது தெலுங்கு படம் டப்பிங்..அதான் போகல.....

கில்மா : அடேய்... அதில் நம்ம முமைத்கான் நடித்துள்ளார்டா....

ஜெட்லி : அதுக்காக எல்லாம் போக முடியாது சாமி...

கில்மா : டேய் சொன்ன கேளு,எனக்கு ஒரு உதவி மட்டும் செய்.. முமைத்கான் இந்த படத்தில் பாம்பாக வருகிறாராம்....பாம்பு சட்டையை உரிக்குதா இல்லையானு மட்டும் பார்த்துட்டு வந்து சொல்லுப்பா.....!

********************************

அனைவரும் வருக...!!


கில்மானந்தாவின் தலைமையில் மஹாயாகம் நடக்க இருக்கிறது...
நாட்டு மக்களுக்காக நடக்கும் இந்த யாகத்தில் கலந்து
தீட்சை பெற அனைவரையும் கனத்த பர்சுடன் அழைக்கிறோம்...


தீட்சை வேண்டுபவர்கள் கனமான பர்சுடன் வரவேண்டும் இல்லையேல் கிரவுண்ட் உள்ளே அனுமதி கிடையாது!!

இத்தருணத்தில் மீண்டும் அனைவரும் ஒரு முறை கில்மா
மந்திரத்தை சொல்லுங்கள்...

ஹோ...கில்மா ஜே ரவ.... (ரவ பிடிக்கலைனா இட்லி,
பொங்கல் கூட சொல்லலாம்...)இந்த வாழ்க்கை தத்துவங்கள், சிந்தனைகளை படித்து பல
பேர் பயனடைய உங்கள் பொன்னான வாக்கினை போடுமாறு
கேட்டு கொள்கிறோம்...


இப்படிக்கு தலைமை சிஷ்யன்

ஜெட்லி...(சரவணா...)25 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

sari mumaithkaan sattaiya irichchaangalaa illiyaa

'ழ'கரம் said...

சப்ஜெக்ட் அடல்ட்ஸ் ஒன்லியா இருந்தாலும் அதப் பதிவிட நீங்க எடுத்துகிட்ட உழைப்பு அபாரம். போட்டோ எடுத்து , பஞ்ச் தேடி......!!வாழ்த்துக்க்கள் மேலும் வளர

வானம்பாடிகள் said...

:)). முடியல சாமி. பக்த கேடிகளை கில்மாதான் கரை சேர்க்கணும்.

மோகன் குமார் said...

யப்பா.. எவ்ளோ சிந்தனை துளிகள்!! எத்தனை நாள் யோசிச்சு எழுதுனீங்க சாமி?

Chitra said...

கில்மானந்தாவுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது...
நீ கேளேன் ப்ளாக் மட்டுமே தலைமை அலுவலகம் என்பதை
தெரிவித்து கொள்கிறோம்...நீங்க பாட்டுக்கு கில்மானு கடை
பேர் போட்டிருக்குனு போனால் நாங்கள் பொறுப்பல்ல...!!


..... அட, அட.... பிசினஸ் பிக் அப் ஆக இப்படியெல்லாம் பேரா? நான் அந்த கில்மா கடையை பற்றி சொன்னேன்.

Cable Sankar said...

rightu.. oru mudivodathaan irukke polarukkee/

kalyani said...

kalakkunga...... kalakkunga......
kalakkikkitte irunga....Enjoy panninde irukkom.

அக்பர் said...

சும்மா கலந்து கட்டி(ங்) அடிச்சிருக்கிங்க.

ர‌கு said...

விள‌ம்ப‌ர‌ப்ப‌ட‌ இய‌க்குன‌ராக‌ற‌துக்கு முய‌ற்சி ப‌ண்ணுவோமா ஜெட்லி ;))

யோ வொய்ஸ் (யோகா) said...

சுவாமிஜியிடம் சிஷ்யனாக சேர இருக்கிறேன், ஆமாம் சுவாமிஜியின் பக்தைகளில் எந்தெந்த நடிகைகைள் இருக்கிறார் என சொல்ல முடியுமா?

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

சுவாமி

வீடியோ எப்ப ரிலீஸ் பண்(றா)றீங்க? :)

Jey said...

படிச்சி முடிக்கிறதுக்குள்ள காதுல, மூக்குல ஒரே ரத்தம், ஆஸ்பிடல் செலவுக்கு ஒரு 1500ரூ அனுப்பி வைங்க.

Jey said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
sari mumaithkaan sattaiya irichchaangalaa illiyaa//

ரொம்ப நல்லவன் கேக்கிற கேள்வியாப்பா இது???..

கே.ஆர்.பி.செந்தில் said...

பிரமாதம்..

தனுசுராசி said...

கில்மாவை ட்விட்டர் கணக்கு ஒண்ணு ஆரம்பிக்க சொல்லுங்க... அவருடைய அறிவுரைகளை நாங்க குறும்பதிவுகளாக பெற்றுக் கொள்கிறோம்.

ஜில்தண்ணி - யோகேஷ் said...

சுவாமி கில்மானந்தா வாழ்க வாழ்க :)

செம கலாட்டா தான்

ஜெட்லி... said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)


பௌர்ணமி நாகம் போற ஐடியா இல்லைணே....


@'ழ'கரம்

ரொம்ப நன்றி அண்ணே...

ஜெட்லி... said...

@வானம்பாடிகள்

கரை சேர்த்துடுவார்...


@மோகன் குமார்

//எத்தனை நாள் யோசிச்சு எழுதுனீங்க சாமி?
//

எத்தனை நாள் யோசிச்சு எழுதுனீங்க சாமி?

ஜெட்லி... said...

@Chitra

கில்மா.... ஏதோ ஒரு மொழியில் நல்ல அர்த்தம் கொண்ட பெயர் போல.....


@Cable Sankar

அப்படி எல்லாம் எதுவும் இல்லைணே...

ஜெட்லி... said...

@kalyani

@அக்பர்


நன்றி...@ர‌கு

பண்ணலாம் ரகு...

ஜெட்லி... said...

@யோ வொய்ஸ் (யோகா)

அதெல்லாம் நக்கீரனில் வரும் போது தெரிய வரும்....


@【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║

இப்பதான் பேரம் பேசிட்டு இருக்கோம்...
கூடிய விரைவில் டி.வி.யில் வரும்..!!

ஜெட்லி... said...

@Jey


ஹலோ...நான் டி.டி. அனுப்ப சொன்னா...நீங்க
என்கிட்டே இருந்தேவா...நன்றி@கே.ஆர்.பி.செந்தில்


நன்றி

ஜெட்லி... said...

@தனுசுராசி

இதோ போட ஆரம்பிச்சுருவோம்...


@ஜில்தண்ணி - யோகேஷ்

நன்றி

சிபி.செந்தில்குமார் said...

காமெடி அருமயா கை கூடி வருது

R.Gopi said...

யோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...........

இது பெரிய அளவு கலக்கல் சரக்குடா சாமி..........