Friday, July 2, 2010

வெளுத்து கட்டு - எதிர் வீட்டு பார்வை.

வெளுத்து கட்டணும்டா அவன....
இந்த படத்தின் விளம்பரத்தை பார்த்து சத்தியமா நான் வெளுத்து கட்டு படத்துக்கு போகலங்க...ஏதோ எங்க ஏரியா தியேட்டரில் படம்
போகுதுன்னு போனேன்.... அங்க தான் நான் புரட்சி இயக்குனர்
சந்திரசேகரின் மாஸை பார்த்தேன்.... கிழே படத்தை பாருங்கள்....ச்சே ச்சே...தப்பா கணக்கு போட்டுடாதிங்க.... கிட்ட தட்ட மூணு
ரோ புல் ஆச்சி. தியேட்டர் காரங்க வெளியே பேனர் வைக்காதது
தான் கூட்டம் வராததுக்கு காரணம்னு தப்பா நினைச்சு அவசரம் அவசரமா 11.30 மணிக்கு பேனர் ரெடி பண்ணிட்டு இருந்தாங்க.... பாவம் என்ன பேனர் வச்சி என்ன ஆக போகுது... குவாட்டரும் பிரியாணியும் தரேன்னு சொன்னா கூட யாரும் வர்ற மாதிரி தெரியலை....!!


படத்தோட கதை, காட்சி, திரைக்கதை, என்று எந்த ஒரு தமிழ்
சினிமாவிலும் இது வரை வந்ததில்லை....ஆனா பல தமிழ்
சினிமாவில் வந்ததை சுட்டு போட்டு ஆறி போன தோசையை
கொடுத்து இருக்கிறார்கள். முக்கியமா பருத்திவீரன் படத்தை
சந்திரசேகர் நிறைய தடவை பார்த்து இருப்பார் போல...
முதல் பாதி முழுவதும் பருத்தி வீரன் பாதிப்பு தான்....!
இதையும் மீறி தியேட்டரில் உட்கார்ந்து படம் பார்க்க ஒரே
காரணம் ஏ.சி. மட்டுமே....!!

************************


முன்னாடி எல்லாம் நான் விமர்சனம் எழுதும் போது மொக்கை
படத்தை பார்த்தா ஒரு பன்ச் எழுதறது உண்டு....அது இது தான்
ஏகன் படத்தில் அஜித் சொல்லும் பன்சை நான் மாற்றி எழுதுவேன்...

"மொக்கை படம் பார்க்கறது என் தப்பு இல்லை....
அது படம் எடுத்தவன் தப்பு...."னு


ஆனா என் ஆர்குட் நண்பன் மதன் திரும்பவும் ஒரு பன்ச் வச்சார்
அது...

"மொக்கை படம் பார்க்கறது உன் தப்பில்ல...ஆனா மொக்கை
படம்னு தெரிஞ்சு போற பாரு அது தான் உன் தப்பு" னு

அந்த தப்பு தான் இப்ப திரும்பவும் நடந்திருக்கு!!

************************


முதல்ல தமிழ் சினிமாவில் ரெண்டு விஷயம் தடை பண்ணனும்...

# நாயகி சொன்னவுடன் கடலில்,அருவியில்,சாக்கடையில் குதிப்பது
அதன் பின் நாயகி அழுது புரண்டு நாயகனை தேடும் போது
அவர் அஞ்சு நிமிஷம் கழிச்சு மேல வர்றது....

# அப்புறம் நாயகி ஒரு மீசை, அல்லது ஒரு பேய் முகமூடி
போட்டு நாயகனிடம் காட்டும் போது அவர் சிரிப்பது அப்புறம்
அந்த மீசை,மூகமூடியை கழட்டியவுடன் நாயகியை பார்த்து
பயப்படுவது.....

தயவு செய்து யாரும் இப்படி இனிமே எடுக்காதிங்க நானும்
ரெண்டு வயசில் இருந்து இதை பார்த்துட்டு வரேன்...இந்த
ரெண்டு அற்புத காட்சிகளும் இந்த படத்திலும் இருக்கிறது
என்பது படத்துக்கு பெரிய பலம்.

யாரை வெளுத்துகட்டுறார்....

வெளுத்துகட்டு.... ஹீரோ பத்து வயசில் நாயகிக்கு தாலி
கட்டுறார்... இருபது வயசில் கோவில் கட்டுறார்... அப்புறம்
சென்னைக்கு வந்தவுடன் துணியை மாற்றி கட்டுகிறார்....
அவ்ளோ தான்.....

படத்தில் ஒன்னுமே நல்லா இல்லையானு கேட்கலாம்....
சில காட்சிகள் கொஞ்சம் புதுசா இருந்தது...பல காட்சிகள் அரத
பழசா இருந்தது. புதுமுக கதிர் அருந்ததியை அருவி காட்சியில்
நன்றாக மோப்பம் பிடித்தார்.பாட்டி கூல்ட்ரிங்க்ஸ் சீன் நல்லா இருந்தது. ஒரு பையன் எம்.ஜி.ஆர் பாட்டை மாற்றி பாடுவது நன்றாக இருந்தது.... !!ஆனா இது எல்லாம் விட பட கடைசியில் தலைவலி வருது பாருங்க... முடியலைங்க...!

இந்த படத்தை பார்த்தா நம்ம ராஜ்கிரண் என்ன சொல்லி இருப்பார்னு பார்ப்போம்.....


" தக்காளி... ஒரு படத்துக்கு காசு கொடுத்து டிக்கெட் எடுத்தா
இருவுது படத்தை காட்டறாங்க.... இங்க பாரு வேட்டியே
மடிச்சேன்னு வை...தக்காளி..எலும்பை உருவி படையல்
போட்டுருவேன்....சோலையம்மா மசாலா ரெடி பண்ணி வை..!!"


ஜெட்லி பன்ச்:

வெளுத்துகட்டு - வெளுத்து கட்டிட்டாங்க படம் பார்த்தவங்களை!!


தியேட்டர் நொறுக்ஸ்:

# ஒருத்தர் நான் டிக்கெட் எடுத்துட்டு வரும் போது சிரிச்சார்...
ஒரு வேளை பட சம்பந்த ப்பட்ட ஆளா இருக்குமோனு டவுட்
வந்தது....படம் பார்த்த இருபது நிமிஷத்தில் அது கன்பார்ம்
ஆச்சி... அவர் ஒருத்தர் தான் படம் முழுவதும் கைதட்டி
ரசிச்சார்.....

# நாயகி நாயகனிடம் "நான் என்ன சொன்னாலும் உடனே
செய்வியா..." "என்ன புள்ள செய்யணும் இப்பவே சொல்லு"
படம் பார்த்து கொண்டிருந்த ஆட்டோகார நண்பர்...

"ஏம்மா பெட்ரோல் விலையை தம்பிகிட்ட சொல்லி குறைக்க
சொல்லுமா...."

# ஆட்டோகார நண்பர்கள் இந்த காவியத்தை பார்த்து விட்டு

" சவாரி போயிருந்தா 200 300 கிடைச்சுருக்கும்பா...."

இன்னொரு நண்பரை பார்த்து

" படம் சூப்பர்ஆ இருக்கும்னு கூட்டிட்டு வந்தாண்டா.... வெளியே
வாடா நீ தான் முதல் டெட் பாடி....."

என்று நண்பரை கலாய்க்க ஆரம்பித்தார்....

# இன்டெர்வல் அப்போ...ஒருத்தர்..."ஆப்பரேட்டர்... செகண்ட் ஹாப்
வேற ஏதாவது நல்ல படத்தை போடுங்க..." என்று கத்தினார்...
அனைவரது முகத்திலும் புன்னகை...


# இன்டெர்வல்க்கு பின் ஒரு காட்சியில் இரு பெண்கள் பிக்னி
உடையில் வருவார்கள்..அதை பார்த்தா பின் சீட்டுகாரர்
"அம்பது ரூபாய்க்கு இது போதும்டா ..." என்று டிக்கெட்
அமௌன்ட்டை கூறினார்.

# இனிமே டாக்டர்ங்க தூக்கம் வராத நோயாளிக்கு இந்த படத்தோட
டிக்கெட்டை கொடுத்து அனுப்ப வாய்ப்பு இருக்கு....சும்மா கண்ணு
சொருவுது....!!

# ஒரு மொக்கை சீனில் கலாய்க்க சிலர் கை தட்டினர்...நான்
உடனே விசில் அடித்தேன்...முன்னாடி இருந்தவர்..." தம்பி
சும்மா இருப்பா...ஏற்கனவே தலை வலிக்குது..நீ வேற...!" என்று
ரொம்ப டச்சிங்கா சொன்னார்.


# இன்டெர்வல் காட்சியில் நாயகனும் நாயகியும் மாறி மாறி
அழுவாங்க... " இந்த படத்தை பார்த்துட்டு நாங்க தான் அழுவனும்..."
என்று சொல்லிகொண்டே கதவை நோக்கி போனார்.

# ஒரு காட்சியில் வரும் வசனம்

"நல்ல வேலை நம்மை தேடி வராது...நாமதான் தேடி போனும்" என்று
நாயகன் ஒருவருக்கு அட்வைஸ் செய்வார்...இதை பார்த்த நம்ம
ஆளு....

" நல்ல படம் நம்மளை தேடி வராது...நாமதான் வேற தியேட்டர்
போனும்..." என்று டைமிங்காக அடித்து விளாசினார்.

# ஒரு ஷேர் ஆட்டோகாரர் படத்தின் இன்டெர்வல் நடுவே நண்பர்களிடம்

"நாம ஆளுக்கு நூறு ரூபாய் போட்டு 1500 பேர் சேர்ந்து ஒரு மாசத்தில் இதை விட நல்ல படம் எடுப்போம்டா"....

இன்டெர்வல் அப்போ நிறைய விளம்பரங்கள் வந்தது...

" சீக்கரம் படத்தை போடுங்கப்பா...."


" யோவ்...படத்தை விட இதுவே மேல்யா..." என்றார் அவரின்
நண்பர்.....

# படம் ரொம்ப லோ பட்ஜெட் போல.....ஒரு காட்சியில் ரோட்டில்
போறவர் ஷூட்டிங் பார்க்கும் ஆர்வத்தில் குறுக்கே வந்தாலும்
அவரை ஓரமாக இழுக்கும் காட்சி கூட பதிவாகி இருந்தது...
ஏன் டைரக்டர் சார்...சந்திரசேகர் சார் பிலிம் ரோல் கம்மியா
தான் கொடுத்தாரா??....


இந்த விழிப்புணர்வு பல பேரை சென்று அடைய உங்கள் பொன்னான
வாக்கினை போடுமாறு கேட்டு கொள்கிறோம்....

ஜெட்லி...(சரவணா...)

47 comments:

♠ ராஜு ♠ said...

AC தான் காரணம். SAC இல்லைன்றீங்க..! ரைட்டு.

அப்பறம் அந்த ”பெட்ரோல் விலை ஆட்டோக்காரர்” நம்ம கூடச் சேர்ந்தவரா இருப்பாப்பல போல!
:-)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வெளுத்து கட்டிட்டாங்களா உங்களை. உங்களை நினச்சா சிப்பு சிப்பா வருது. இன்னுமா விஜய் பேமிலிய நீங்க நம்புறீங்க...

வழிப்போக்கன் said...

டப்பா படம் பார்த்து விமர்சனம் போடறதுல ஜெட்லி கிட்ட யாருமே மோத முடியாது... ;-)

முரளிகண்ணன் said...

தியேட்டர் கமெண்டுகள் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கின்றன.

Mohan said...

விஜய் படத்தையே இப்போதெல்லாம் யாரும் நம்பி பார்க்க போவதில்லை. ஆனாலும் S.A.C படத்தை நம்பிப் பார்த்து எழுதிய இந்தப் படத்தின் விமர்சனத்திற்கு நன்றி. தியேட்டர் நொறுக்ஸ் நன்றாக இருந்தது.

MANO said...

விமர்சனம் சூப்பர் அப்பு.

மனோ

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

இப்படி ஒரு நல்ல நொறுக்ஸ் கிடைக்கும்னா இந்த மாதிரி மொக்கை படம் எத்தனை வேணும்னாலும் பாக்கலாம்......ஜெட்லி!

கே.ஆர்.பி.செந்தில் said...

மொக்கை திலகம் ஜெட்லி வாழ்க.. எல்லோரையும் காசு மிச்சம் புடிக்க வைத்த ஜெட்லி வாழ்க..

ரமி said...

கணபதி ராமா?? அட ராமா...........

வவ்வால் said...

Evlo valichalum valikkatha pola nadikka epdipaa mudiyuthu!

Ithu varai paatha mokkai padathuku selavu panna kaasellam sertha oru nalla padam eduthirkalam jetli!

Munna ellam mappu overa achuna relax aaga ganapathi ram,jeyanthi theatre pakkam than othunguven. But koottam kuraiva iruntha ganapathila ac poda maattane!

VISA said...

கட்டி வச்சு வெளுத்துட்ட

shortfilmindia.com said...

:) உன் வலி எனக்கு மட்டும்தான் புரியும்.. ம்ஹும்..

கேபிள் சங்கர்

ப்ரியமுடன் வசந்த் said...

தியேட்டர் நொறுக்ஸ் கலக்கல்

//"நல்ல வேலை நம்மை தேடி வராது...நாமதான் தேடி போனும்" என்று
நாயகன் ஒருவருக்கு அட்வைஸ் செய்வார்...இதை பார்த்த நம்ம
ஆளு....

" நல்ல படம் நம்மளை தேடி வராது...நாமதான் வேற தியேட்டர்
போனும்..." என்று டைமிங்காக அடித்து விளாசினார்.//

இதுமாதிரியான உங்க கலக்கல் நொறுக்ஸ்க்காகவே எச்ஏசிய இன்னொரு படம் எடுக்க சொல்லலாமா பாஸ்?

அக்பர் said...

செமத்தியா கலாய்ச்சிருக்கிங்க.

அதிலும் தியோட்டர் நொறுக்ஸ் பயங்கர டெர்ரர்.

பாவம் பாஸ் சந்திரசேகர் கொஞ்சம் விட்டு வையுங்க.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

நா வரல இந்த விளயாட்டுக்கு.. வர்ட்டா

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

தம்பி உனது கடமையுணர்ச்சி என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது..!

நன்றி..1

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

////////நல்ல படம் நம்மளை தேடி வராது...நாமதான் வேற தியேட்டர்
போனும்..." என்று டைமிங்காக அடித்து விளாசினார்.
/////////


நெத்தியடி . பதிவு அதிக அலசல்கள் . அருமை . பகிர்வுக்கு நன்றி

ஆகாயமனிதன்.. said...

முதல்வர் கனவு விஜய்க்கு இல்லை...S .A .C க்குத்தான்..

சரவணகுமரன் said...

:-)

rk guru said...

நடிகர் விஜய் ஒரு பலூன் கத்து கொஞ்சம் கொஞ்சமாக இருந்குது...

இராமசாமி கண்ணண் said...

//
இந்த விழிப்புணர்வு பல பேரை சென்று அடைய உங்கள் பொன்னான
வாக்கினை போடுமாறு கேட்டு கொள்கிறோம்....//

:-).

hasan said...

ha ha ha ha ha ithuku ambasamuthiram ambani poi-irukalam...!
next wat movie u r going to watch?

வானம்பாடிகள் said...

பேசாம தியேட்டர் நொறுக்செல்லாம் காமடி சீனுக்கு யூஸ்பண்ணிக்கிட்டா மொக்கை படம் கூட கொஞ்சம் தேறும் போலயே:))

ஜெட்லி... said...

@♠ ராஜு ♠

//AC தான் காரணம். SAC இல்லைன்றீங்க..! //

இந்த பன்ச் நல்லா இருக்கே.....


@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

//இன்னுமா விஜய் பேமிலிய நீங்க நம்புறீங்க...
//

நான் நம்பி லாம் போல அண்ணே.....

ஜெட்லி... said...

@ வழிப்போக்கன்...


ஹா ஹா....நடத்துங்க...


@ முரளிகண்ணன்

நன்றி அண்ணே...


@Mohan

தலைவரே....நான் நம்பி லாம் போகல....
ஏதோ எங்க ஏரியா தியேட்டரில் ஓடுதே....
நாமே பார்க்கலைனா யார் பார்க்கறதுனு தான் போனேன்.....

ஜெட்லி... said...

@MANO


நன்றி மனோ...


@பெயர் சொல்ல விருப்பமில்லை


அது சரி தான் அண்ணே....


@கே.ஆர்.பி.செந்தில்


ஏன்....??

ஜெட்லி... said...

@ ரமி

ரைட்டு...ப்ரீயா விடுங்க....
இந்த படத்தை போய் சத்யம் தியேட்டரிலயே பார்க்க
முடியும்....ஏதோ அம்பதோட போச்சுனு விடவேண்டியது தான்...


@VISA

நன்றி அண்ணே..... வெளுக்க வேண்டிய படம் தான் இது....

ஜெட்லி... said...

@வவ்வால்

இன்னைக்கு அதிசயமா ஏ.சி. போட்டான்.....
மப்பு தெளியே இந்த படம் வேணும்னா ட்ரை
பண்ணி பாருங்க...


@ப்ரியமுடன் வசந்த்


ஹ்ம்...சொல்லலாம்...பார்க்க நான் ரெடி...

ஜெட்லி... said...

@shortfilmindia.com


நாம பார்க்காத மொக்கையா அண்ணே.....


@அக்பர்


நான் கலாய்க்கில....நடந்ததை சொன்னேன்....
நன்றி அக்பர்...

ஜெட்லி... said...

@Starjan ( ஸ்டார்ஜன் )


ஏன்...எஸ் ஆகுரிங்க...@உண்மைத் தமிழன்(15270788164745573644)


இப்படியே உசுபேத்தி விடுங்க....

ஜெட்லி... said...

@!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫

@சரவணகுமரன்

@rk guruநன்றி....

ஜெட்லி... said...

@ஆகாயமனிதன்


எனக்கும் அப்படி தான் தோணுது.....


@இராமசாமி கண்ணண்

நன்றி...

ஜெட்லி... said...

@hasan

அம்பானி போய் இருக்கலாம்...மிஸ் பண்ணிட்டேன்...
அடுத்தது முமைத் கான் நடித்த பவுர்ணமி நாகம்
போலாம்னு இருக்கேன்..... :))...


@வானம்பாடிகள்

சரியாதான் சொல்றீங்க....
இந்த மாதிரி படத்துக்கு கமெண்ட் இல்லைனா
ரொம்ப போர் அடிக்க ஆரம்பிச்சுரும்....

அமர பாரதி said...

வெளு வெளுன்னு வெளுத்துட்டீங்க. இந்த வாரம் விகடன்ல எஸ்.ஏ.சி யோட பேட்டிய படிச்சீங்களா? இது அவரோட சொந்தக் கதையாம். 16 வயசு வரைக்கும் அவரு கையில கத்திய வச்சிக்கிட்டு அலைவாராம். நகத்துக்கு பேரு "கத்தி" அப்படின்னு தப்பா அவருக்கு யோரோ சொல்லிக் கொடுத்துட்டாங்க போல.

புலவன் புலிகேசி said...

அது கணபதி ராம் தியேட்டர் தான? எஸ்.ஏ.சி சொந்தக்கதைன்னு சொல்லிக் கிட்டுத் திரிஞ்சாரு ஆனா அது இப்ப அவருக்கு சோகக் கதை ஆயிருச்சா!

In search of said...

ஜெட்லி...

படம் மொக்கைதான். ஆனா உங்க விமர்சனம் சூப்பர். உங்களோட மத்த படத்து விமர்சனத விட இது தான் எனக்கு ரொம்ப புடிச்சிருந்தது.

உண்மை சொல்லுங்க தியேட்டர் நொறுக்ஸ் உண்மையா? இல்லை அதுவும் உங்க கை வண்ணமா?

ஜெட்லி... said...

@அமர பாரதி

ஆ.வி.யில் படித்தேன்....
பேட்டி நல்ல காமெடியாக இருந்தது....
அதை படிச்சும் நீ படத்துக்கு போனியானு கேட்க்காதிங்க....

ஜெட்லி... said...

@புலவன் புலிகேசி

ஹ்ம்...சொந்த கதை சோக கதை....

ஜெட்லி... said...

@In search of

//உண்மை சொல்லுங்க தியேட்டர் நொறுக்ஸ் உண்மையா? இல்லை அதுவும் உங்க கை வண்ணமா?
//


உண்மையில் நடந்தது தான்.... வேணும்னா நீங்களும் படம் போய் பாருங்க...கண்டிப்பா உங்களுக்கு நேரடியாகவே நொறுக்ஸ் கிடைக்கும்....!!

பரிதி நிலவன் said...

விஜய் குடும்பமே ஒரு கொலவெறியோட கிளம்பிட்டாங்க போல!

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

அண்ணே இப்படி பாக்கற படத்தை எல்லாம் மொக்கைன்னு 50 ருவா டிக்கட் வாங்கிட்டு சொன்னா எப்படி? நீங்களும் ஒரு படம் எடுத்துப்பாருங்க அப்ப தெரியும் அவங்க படற கஷ்டம். ப்ச் உங்க கிட்டேர்ந்து இத எதிர்பார்க்கல.;)

----

//" யோவ்...படத்தை விட இதுவே மேல்யா..."///

யா யா,,,!!

dheva said...

//இன்டெர்வல் அப்போ நிறைய விளம்பரங்கள் வந்தது...

" சீக்கரம் படத்தை போடுங்கப்பா...."


" யோவ்...படத்தை விட இதுவே மேல்யா..." என்றார் அவரின்
நண்பர்...../


வயிறு வ்லிக்குதுப்பா..சிரிச்சு சிரிச்சு.... செம கலாட்டாவான பதிவு தம்பி....!ஹா...ஹா..ஹா....!

அத்திரி said...

மொக்கை படம்னும் தெரிஞ்சி தியேட்டருக்கு போய் பாக்குற உங்கள் தைரியத்தை பாராட்ட வார்த்தையே இல்லை

ராம்ஜி_யாஹூ said...

atthiri's comment is excellent

Kousalya said...

ஒரு காமெடி படம் பார்த்த மாதிரி இருந்தது உங்க விமர்சனம்!! ரொம்ப சிரித்துவிட்டேன், வேற வழியில்லை உங்களை தொடர ஆரம்பித்துவிட்டேன் !

வெடிகுண்டு வெங்கட் said...

வருங்கால தமிழக கவர்னரை கிண்டல் செய்கிறீர்களா?


வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்.

"உளவாளியும், கத்துக்குட்டியும் From Paris With Love 2010 - சினிமா விமர்சனம்

பாலா said...

நண்பரே உங்களுக்கு ஒரு விருது வழங்கி இருக்கிறேன். மறுக்காமல் வந்து பெற்றுக்கொள்ளுங்கள் என் தளத்தில்
நன்றி...

http://balapakkangal.blogspot.com/2010/07/blog-post_06.html