Friday, May 28, 2010

சிங்கம் - சொக்க வைக்கும் தங்கமா??

சிங்கம் - சொக்க வைக்கும் தங்கமா??

" டேய் ஒரு டாஸ்மாக்ல ஜில் பீர் இல்லனா அஞ்சு டாஸ்மாக்ல
தேடி பார்க்குறோம்,அங்கயும் இல்லனா பாருக்கு போய் குடிக்குறோம்
அது மாதிரி தான்டா வாழ்க்கையும் புதுசா புதுசா தேடனும் அப்பதான் வாழ்க்கை புதுசா இருக்கும்....."


இந்த மாதிரி தாங்க நம்ம சூர்யாவும் சிங்கம் படத்தில் கேப் விடாம வசனம் பேசுறார். சிங்கம் சூர்யாக்கும் வேல் சூர்யாக்கும் ரெண்டு வித்தியாசம் தான் ஒண்ணு மீசை இன்னொன்னு போலீஸ் டிரஸ். மற்றபடி வேலில் பார்த்த சூர்யாவை பார்த்த மாதிரி தான் இருந்தது...

(மேலே உள்ள படத்துக்கும் விமர்சனத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை...அது ரசிகர் மன்ற பேனர்....)


சென்னையில் பெரிய தாதாவாக பிரகாஷ்ராஜ் ஆள்கடத்தல்,
மற்றும் புதிதாய் பில்டிங் கட்டுபவர்களை மிரட்டி பணம் பறிப்பது
தான் வேலை. தூத்துக்குடி நல்லூரில் நம்ம சூர்யா எஸ்.ஐ.
அவரின் சொந்த ஊர் அது. பிரகாஷ்ராஜ் சென்னையில் நடக்கும்
ஒரு கேஸ் நிபந்தனை ஜாமீன் விஷயமாக நல்லூரில் வந்து
கையெழுத்து போட வேண்டுமாம். அங்கே சூர்யாவுக்கும்
பிரகாஸ்ராஜ்க்கும் மோதல் ஸ்டார்ட் ஆகிறது. உடனே பிரகாஷ்
தன் பவர் மூலம் சூர்யாவை தன் கோட்டையான சென்னைக்கு
மாற்றுகிறார்.....பின்பு என்ன என்பதே கதை திரைக்கதை அனைத்துமே..

சிங்கம் படம் ட்ரைலர் டி.வி.யில் பார்த்தவுடன் மற்றும் ரேடியோவில்
கேட்டவுடன் முடிவுபண்ணிவிட்டேன்....அது படத்துக்கு போகும் போது
மெடிக்கல் கடையில ரெண்டு ரூபாய்க்கு பஞ்சு வாங்கிட்டு போனும்
என்பது தான். டி.வி.யில் பார்க்கும் போதே காது ஜவ்வு கொஞ்சம்
லைட்டா கிழிஞ்ச மாதிரி தான் இருந்தது......


அனுஷ்கா பத்தி கண்டிப்பா சொல்லணும்ங்க...சும்மா பிச்சு உதறாங்க..
அதுவும் அவங்க வசனம் ஒண்ணும் ஒண்ணும் செம...அதே போல்
தந்தை நாசரிடம் லைசன்ஸ் காமெடி சூப்பர்.....

சாம்பிள்:

அனுஷ்கா தங்கச்சி : சிங்கம் உன்னை பார்த்து ஜொள்ளு விடுறாரா??

அனுஷ்கா : நாம jewel காணோம்னு கம்ப்ளைன்ட் பண்ணோம்
அதனால ஜொள்ளு விடுறாரு...

அது மட்டும் இல்லாமல் சூர்யா சென்னை வந்தவுடன் தான்
ராஜினாமா செய்து ஊருக்கு போக போவதாக கூறும் போது
பள்ளமான பீச் மணலில் நின்று கொண்டு சூர்யா கிட்ட ஒரு
அஞ்சு நிமிஷம் மொக்கை போடுவாங்க பாருங்க...அதில் இருந்து
சூர்யா வில்லன்களை வேட்டையாட கிளம்பி விடுவார்....

காமெடிக்கு விவேக் இருந்தாலும் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்... அதுக்கு அனுஷ்கா பண்ற காமெடியே நன்றாக இருந்தது. பிரகாஷ் ராஜ் வழக்கமா வர்ற வில்லன் தான் கில்லி படத்தில் பார்த்த மாதிரி இருந்தது... ஆனா எல்லோருக்கும் சரி சமமா வசனத்தை பிரிச்சு கொடுத்து இருக்கிறார் இயக்குனர் ஹரி. குறிப்பா பிரகாஷ்ராஜ் பேசுற அந்த "கோழி முட்டை போடும் போது தான் எடுக்கணும்...அதுக்கு முன்னாடியே @$@$# நொண்டினா
கோழி செத்துடும்".சூர்யா செம மாஸ் ஹீரோவாக இருக்கிறார். ஆனால் என் பயமெல்லாம் எங்கே இவரும் கூடிய விரைவில் விஜய்,விஷால் லிஸ்ட்இல் சேர்ந்து விடுவரோ என்பது தான். சூர்யா சிங்கம் தான் ஒத்துக்குறோம் அதுக்காக பறந்து அடிக்கும் போது சிங்கத்தை காட்டுவது, சிங்கம் போல் பிராண்டுவது எல்லாம் கொஞ்சம் ஓவர்.அதே போல் கோபம் வந்தால் கையில் நெருப்பு ஏறுவது( நெருப்பு தானே அது இல்லைனா சிங்கம் கலரா ???)

ப்ரியன் ஒளிப்பதிவு பற்றி சொல்லவே வேண்டாம், பக்கா.
ஒண்ணு ரெண்டு பாட்டு தான் கொஞ்சம் நல்லா இருந்தது.
படம் முதல் பாதி கொஞ்சம் கலகலப்பா போச்சு,ரெண்டாவது
பாதியும் வேகமா தான் போச்சு ஆனா எனக்கு கிளைமாக்ஸ்ல
கண்ணு சொருக ஆரம்பிச்சுருச்சு....அப்புறம் பல யூகிக்க முடிந்த
திருப்பங்கள் என்றாலும் ஓகே.சராசரி மசாலா படம் கொஞ்சம்
கண் எரிச்சல்.ஆனா நான் ஹரி கிட்ட இருந்து இன்னும் எதிர்ப்பார்த்தேன்..


சிங்கம் - ஜொலிக்கும் கவரிங் தங்கம்!!தியேட்டர் நொறுக்ஸ் :

# நான் பார்த்த தியேட்டரில் சூர்யாவை விட அனுஷ்காக்கு அதிக
கைதட்டும் விசிலும்....


# படம் ஆரம்பிச்சுவுடன் முதல் பைட் எல்லாம் கொஞ்சம் ஓவர்ஆக
இருந்தது மற்றும் முதல் பாட்டு "நானே இந்திரன்" பத்தி சொல்லவே
வேணாம்.... பாட்டு பாதியில் ஓடி கொண்டிருக்கும் போதே கரண்ட்
கட் ஆகி போச்சு.... உடனே தியேட்டரில் நம்ம ஆளுங்க ஆள்
ஆளுக்கு கமெண்ட் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க....

* "அஞ்சு நிமிஷம் லைட் ஆப் பண்ணுவோம் வெளியே போறவங்க
போலாம்...."

* விஜய் ரசிகர்: "சுறா இன்ட்ரோ பாட்டே நல்லா இருக்கும்டா..
சுறா படத்தை போடுங்க..." என்று கத்தினார்..
கூட வந்த அவர் நண்பர்கள் "அய்யோயோ...சுறாவா"...

# jewel காணாம போச்சுன்னு சூர்யா வீட்டுக்கு அனுஷ்கா கம்ப்ளைன்ட்
பண்ண வருவாங்க....அப்போ அனுஷ்கா உயரத்துக்கு சூர்யா சரிசமமா நின்னுட்டு இருப்பார்....இதை பார்த்த முன்இருக்கை நண்பர்
" எங்கே சூர்யா உன் காலை காட்டு.." என்று கத்தினார்.

# "காதல் வந்தாலே பாட்டு ஆரம்பிக்கும் போது பின்இருக்கை
நபர் டைமிங்காக "வாடா மாப்பிள்ள..." என்று பாடியது தியேட்டரில்
அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தியது.

# அனுஷ்காவும் சூர்யாவும் கொஞ்ச நேரம் பேசினாலே இங்கே நம்ம
ஆளுங்க "சரி சரி டிரஸ் மாத்திக்கிட்டு பாட்டு போட்டு ஆடுங்க..." என்று நக்கல் பண்ண ஆரம்பித்துவிடுகிறார்கள்.......

இந்த விமர்சனம் பல பேரை சென்று அடைய உங்கள் பொன்னான
ஓட்டை குத்தவும்....

ஜெட்லி... (சரவணா...)

Saturday, May 22, 2010

மாஞ்சாவேலு , கனகவேல் காக்க - இரு பார்வை.

மாஞ்சாவேலு


அருண் விஜய் ஏதோ ஸ்கை டைவிங் எல்லாம் கத்துக்கிட்டு
இருக்கார் என்று பேப்பரில் படித்தேன்.ஆனால் படத்தின்
முதல் காட்சியை பார்த்தவுடன் அது உறுதியானது. குருவி
படத்தில் விஜய் ரயிலை பிடிக்க பறந்த மாதிரி அருண் விஜய்யும்
பின்னி மில் கட்டிடத்தில் மாறி மாறி பறக்கிறார். ஹையோட
நாமாதான் வந்து சிக்கிடோமோ என்று யோசிக்கும் வேளையில்
படம் கலகலப்பாக நகர ஆரம்பிக்கிறது......

நூல் எப்படி இருக்கு :

கார்த்திக் போலீஸ் அதிகாரி அவரின் தம்பி அருண் விஜய்
ரெண்டு பேருக்கும் பொதுவான எதிரியாக வாகை சந்திரசேகர்
கார்த்திக்கை போட்டு தள்ளுகிறார் சந்திரசேகர். அருண் விஜய்
எப்படி பழி வாங்கினார் என்பது மட்டும் அல்ல கதை கூடவே
நிறைய ஐட்டம் இருக்கு. பல எதிர்ப்பார்த்த திருப்பங்களும் சில எதிர்ப்பாராத திருப்பங்களுடன் படம் வேகமாவே நகர்கிறது.

டான்ஸ், பைட் என்று அருண் விஜய் நல்லாவே செய்திருக்கிறார்...
பக்கா கமர்சியல் ஹீரோவாக இந்த படத்தில் வெற்றி பெற்றுரிக்கிறார்
என்றே சொல்ல வேண்டும். கதாநாயகிக்கு பெருசா சொல்ல ஒண்ணும் இல்லைனாலும் (படத்தில் நடிக்கிற வாய்ப்பை தான்ங்க சொன்னேன்!!) பாட்டுக்கு மட்டும் வந்து உதவி இருக்கிறார்.அவங்கக்கிட்ட ரொம்ப பிடிச்சதே ஷார்ப்பா இருக்கிற அந்த ரெண்டு...... கண்ணு தான்ங்க...!!


கார்த்திக் கிட்ட தட்ட இவர் தான் படம் முழுவதும் ஆட்சி செய்றார்.
இவ்ளோ நாள் எங்கையா போனான் இந்த மனுஷன் அப்படின்னு
கேட்க வச்சுருக்கார். உண்மையில் மறுபடியும் ரொம்ப நாள் கழிச்சு
கார்த்திக் கலகலப்பா வந்து போகிறார். அதுவும் அவர் அக்னி நட்சத்திரம் ராஜா ராஜாதி ராஜா பாட்டுக்கு டான்ஸ் ஆடுவது செம....பிரபு கடைசியில் ரெண்டு சீன் வந்தாலும் நச்னு வந்திட்டு போறார்.அப்புறம் வில்லன்...வாகை சந்திரசேகர் ஏதாவது புதுசா பண்ணுவார்னு பார்த்தா அவர் இன்னும் 1980 வில்லன் மாதிரி தாங்க இருக்கிறார். சும்மா கிழட்டு சிங்கம் மாதிரி விக்க்கு டை அடித்து ஊறுமுறார் பொருமுறார் அவ்ளோதான்...இருந்தாலும் ரொம்ப நாள் கழிச்சு வில்லனா நடிச்சிருக்கிறார்... மன்னிச்சு விட்ருவோம்...

சந்தானம், வழக்கம் போல் நன்றாக தான் இருந்தது.அதே மலை
மலை கூட்டணி காமெடி இந்த தடவை கூட ஷகீலாவும்...
அதுவும் கடைசியில் வரும் நாடோடிகள் சம்போ சிவா சம்போ
காமெடி செம....மனோகரை அடுப்பாக யூஸ் பண்ணும் காமெடி
லக லக !!

ஒரு பக்கா மசாலா படத்தை அடிபிடிக்காமல் கிளறி கொடுத்து இருக்கிறார் இயக்குனர் வெங்கடேஷ். சில இடங்களில் மட்டும் கொஞ்சம் காரம் ஓவர். எப்படி தான் முறைச்சி பேசினாலும் பாட்டை தவிர வேறு எதுவும் தேறவில்லை. உங்களுக்கு போர் அடிக்குதா பொழுது போகலைன்னா மாஞ்சாவேலு தாரளமா போலாம், என்டர்டைன்மென்ட் கியாரண்டி!! பைட் தான் கொஞ்சம் ஓவர்ஆ இருந்திச்சு.மற்றபடி லாஜிக் பார்ப்பவர்களுக்கும் அதிமேதாவிகளுக்கும் மாஞ்சாவேலு கையை அறுத்துவிடும்.மாஞ்சாவேலு - மசாலா டீலு.


தியேட்டர் நொறுக்ஸ்:

# சிக்ஸ் டிக்ரீஸ் இரவு காட்சி போயிருந்தேன்...பத்து மணிக்கு படம்
என்றார்கள் ஆனால் அந்த டைம் போடவில்லை.....போக போக
பார்த்தால் மஞ்சுளா, விஜயகுமார் , அப்புறம் மாணிக்கம் படத்தில
நடிச்சாங்களே அந்த அக்கா, ஸ்ரீகாந்த் என்று வந்து அமர்ந்தார்கள்...
அப்புறமும் படம் போடவில்லை சொன்ன டைம் படம் போடலைன்னு
கடுப்பா இருந்தது. பத்து நிமிடம் கழித்து பார்த்தால் படத்தின் ஹீரோ
வந்து கொண்டிருந்தார் கையில் சிறு கட்டுடன்.... வி.ஐ.பி.களுக்காக
படம் லேட் ஆக போடுவதை வன்மையாக கண்டிக்கிறேன்.


# தியேட்டரில் பாதி பேருக்கு மேல் பட தொடர்பு உடையவர்கள்
தான் வந்திருந்தார்கள். ஒரு அல்லக்கை கூட்டம் வந்து மொக்கை
சீனுக்கெல்லாம் விசில் அடித்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


# ஸ்ரீகாந்த் கிட்ட எனக்கு ஒரு கேள்வி கேட்கணும்னு ஆசையா
இருந்தது, சரி எதுக்கு வம்புனு கேட்கல...நான் கேட்க நினைச்சது
"உங்க படம் குற்றபிரிவை நீங்களாவது பார்த்தீங்களா??"...!!


# படம் முடித்து வண்டி எடுக்க வரும்போது அங்கே இருந்த
தியேட்டர் ஊழியர்கள் படம் எப்படி இருக்கு என்று கேட்டனர்..
"பார்க்கலாம்" என்றேன் நான். உடனே ஒரு ஊழியர் "நல்லா
இருக்குனு சொல்லுங்க சார் பாவம் அவரு" என்றார்....

மாஞ்சாவேலுவை கனகவேல் காப்பாத்திட்டார் ஆனா கனகவேல் காக்க படத்தை ???

*********************************

கனகவேல் காக்க

வெள்ளிக்கிழமை ஆறு படம் ரீலீஸ் ஆச்சு....நான் ஏன் சார் முதல்ல
இந்த படத்துக்கு போனேன்?? ரெண்டு காரணம் நான் கரண் படம்
தியேட்டரில் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு அடுத்தது பா.ராகவன்
அவர்களின் வசனம்.கரண் ஒரு அற்புதமான நடிகர்னு நமக்கு தெரியாதது அல்ல.
ஆனா கனகவேல் காக்க படத்தில் கொஞ்சம் ஓவர் பில்ட் அப்போடு
வந்து இருக்கிறார். ஹரிப்ரியா சூப்பர் கதாநாயகி, ரியாக்சன்னா
என்னவென்று கேட்கிறார். சொல்லி கொள்ளும் படி வேறு எதுவும்
அவரிடம் இல்லை.


அன்று இந்தியன் நேற்று ரமணா இன்று கனகவேல் காக்க என்று
நீங்கள் விளம்பரம் பார்த்து இருக்கலாம். கான்செப்ட் வேணும்னா
அந்த ஸ்டைலில் இருக்கலாம் ஆனா படம்...ஹ்ம்..சுத்தம்...
கரண் கோர்ட்டில் டவாலி ஆக இருக்கிறார் அங்கே தப்பும்
கிரிமினல்களை களை எடுக்கிறார். அதற்கு பிளாஷ்பேக் சொல்லுகிறார்....ஆனால் எதிலும் சுவாரசியம் தான் இல்லை.
இதான் அடுத்து நடக்க போகுதுனு நேத்து பிறந்த குழந்தை
கூட சொல்லிவிட கூடிய ஒரு அற்புதமான திரைக்கதை....

பா.ராகவன் அவர்களின் வசனம் சில இடங்களில் மட்டுமே
கவனிக்க வைக்கிறது. படத்தில் முதல் நூப்பது நிமிஷம் மரண
மொக்கை. அப்புறம் கொஞ்சம் போச்சு...திரும்பவும் இன்டெர்வல்
முடிந்து படம் ஸ்டார்ட் ஆனவுடன்....முடியல....


இவங்க சொல்ல வந்த மெசேஜ் நல்ல மெசேஜ் என்றாலும்
சொன்ன விதம் ஆஆவ்வ்வ்...கொட்டாவி தரும் விதம் காரணம்
அரத பழசான காட்சி அமைப்புகள்...கண்ட இடத்தில் பாட்டு...
சரி போதும்னு நினைக்கிறேன்....

அப்புறம் படத்தில் ஒரு வசனம் வரும்.....

காட்டுக்குள தாடி வச்சிக்கிட்டு செய்றது மட்டும் தவம் இல்ல
நாட்டுக்குள்ள நான் செய்யறதும் தவம் என்று கரண் சொல்வார்...

நான் ஒரு லைன் எக்ஸ்ட்ரா சேர்த்துக்க ஆசைப்படுறேன்....

தியேட்டருக்குள் இந்த படத்தை பார்ப்பதும் ஒரு மாபெரும் தவம் தான்......


கனகவேல் காக்க : பழனி மொட்டை.


படம் பார்க்க போறவங்களை கனகவேல் காக்க !!

இந்த விழிப்புணர்வு பல பேரை சென்று அடைய ஓட்டை போடவும்...ஜெட்லி...(சரவணா...)

நன்றி: indiaglitz

Wednesday, May 19, 2010

லைலா புயலும் கந்தசாமி கோயிலும்!!

திருவான்மியூர் டூ திருப்போரூர் - அதிகாலை பயணம்.


தோம் தோம் தித்தித்தோம் தொலைவில் இருந்து சந்தித்தோம்......

- அள்ளி தந்த வானம்.


புயல் பேர் காரணம் ஒரு சிறு ஆராய்ச்சி:

நிறைய பேருக்கு ஏன் புயலுக்கு லைலானு பேரு வச்சாங்கன்னு ஒரு டவுட் இருக்கு.அது சிம்பிள் மேட்டர். லைலா நடிச்ச படம் பேரு அள்ளி தந்த வானம். இப்ப நமக்கு வானம் மழையை அள்ளி தருது....இது தான் காரணம்...

நேத்து உருவான புயலுக்கு எங்கள் சிரிப்பழகி மற்றும் கன்னகுழி தேவதை லைலாவின் பெயரை புயலுக்கு சூட்டியதற்கு அகில உலக லைலா முன்னேற்ற சங்கம் சார்பில் வானிலை மையத்துக்கு எங்கள் நன்றியினை தெரிவித்து கொள்கிறோம். மேலும் நாட்டு மக்கள் நலம் காண மேலும் பல அமலா, மதுபாலா, நிலா ,ஷகீலா புயல்கள் தொடர்ந்து வர வேண்டும் என்று எல்லாம் வல்ல முருகனை வேண்டிகொண்டு என் சிறிய பயண குறிப்பு உங்கள் பார்வைக்கு...

*************************************கடந்த வெள்ளிக்கிழமை மறுபடியும் ரெண்டு வார இடைவெளிக்கு
பின் மீண்டும் திருப்போரூர் கோவிலுக்கு செல்ல நானும் நண்பனும்
முடிவெடுத்தோம்.அடிக்கிற வெயிலுக்கு பயந்து அதிகாலை ஐந்து
மணிக்கே கிளம்ப முடிவு செய்தோம்.வெயிலுக்கு மட்டும் அல்ல அதிகாலை பயணம் என்பதே ஒரு சுகம் தான். சரியாக 5.20 க்கு நண்பனை நீலாங்கரையில் உள்ள அவனது வீட்டில் பிக்அப் செய்து கொண்டு ஈ.சி.ஆரில் பறந்தோம்.கடந்த ரெண்டு தடவை போகும் போதும் சோழிங்கநல்லூர் ரைட் கட்டிங் எடுத்தோம்..போர் அடித்து விட்டது அதனால் இந்த தடவை கோவளம் ரைட் கட்டிங் எடுப்போம் என்று வண்டியை நேராக விரட்டினேன்.
முட்டுக்காடு படகு குழாம்,அந்த காலைவேளையில் அருமையாக
இருந்தது.வாத்துகளும்,மீன் பிடிக்க சின்ன கட்டுமரத்தில் மீனவர்களும் என்று இயற்கை காட்சிகள் சூப்பர். ஒரு பறவை ஒன்று வண்டி ஓட்டும் போது கிராஸ் செய்ஞ்சு போச்சு பாருங்க....செம...


கோவளத்தில் இருந்து வலதுபுறம் திரும்பி கேளம்பாக்கம் ரோடை பிடித்தோம். அங்கே குட்டை மீன்களை சிலர் விற்பனைக்கு ரோட்டில் போட்டு இருந்தனர். மீன்கள் மற்றும் நண்டுகள் உயிரோடு இருந்தன. கோவிலுக்கு போவதால் நாங்கள் வாங்கவில்லை. கோவளம் கேளம்பாக்கம் ரோடு கொஞ்சம் ஆபத்தான வளைவுகள் கொண்டது என்பதை போக போக புரிந்து கொண்டேன்.கடந்த வெள்ளியோடு நான் திருப்போரூர் கந்தசாமி கோவிலுக்கு இதுவரை மூன்று தடவை சென்று வந்திருக்கிறேன்.முதல் ரெண்டு வெள்ளியில் கோவிலில் விக்ரம் நடித்த கந்தசாமி படம் ஒரு வாரம் கழித்து தியேட்டர் எப்படி இருந்ததோ அப்படி இருந்தது....அதாவது காலியா...ப்ரீயா இருந்ததுனு சொல்ல வந்தேன்.ஆனா இந்த தடவை போகும் போது முதல் நாள் கந்தசாமி படம் மாதிரி செம கூட்டம்... விசாரித்த பின்பு தான் தெரிந்தது கார்த்திகை விரதம் என்று...!


திருப்போரூர் கோவிலுக்கு நான் மூணு விசயத்துக்காக போறேங்க..
ஒண்ணு, அதிகாலை பயணம். ரெண்டு, அந்த கோவில் குளத்தில்
உள்ள மீன்களுக்கு பொறி இதர வகைகளை அளிக்க. மூன்று,
முருகனை தரிசிக்க. அது ஏன்னு தெரியலங்க திருவான்மியூர்,
மயிலாப்பூர் குளத்தை சுத்தி வேலி போட்டு சாதாரண மக்கள்
உபயோகிக்க வழி இல்லாம பண்ணீட்டாங்க....போன மாதம்
ஒரு தடவை மயிலாப்பூர் குளத்துக்கு சென்று மீனுக்கு பொறி
போடலாம் என்று போனேன்.... அங்கே இருந்த வாட்ச்மன் ஓவர்ஆ
அதெல்லாம் போடகூடாது கூச்சல் போட ஆரம்பித்தான்....
ஆனா நான் பொறி பாக்கெட் காலி பண்ணிட்டு தான் போனேன்...
மயிலாப்பூர் மீன் ஒண்ணு ஒண்ணும் ஆறு கிலோ இருக்கும்
போல எப்பா....பார்க்கவே பயங்கரமா இருந்தது..!!


திருப்போரூர் கோவிலில் பயங்கர கூட்டம்...சிறப்பு தரிசனமே நிரம்பி வழிந்தது.அப்புறம் இந்த தடவை தான் புளியோதரை வித்துக்கிட்டு இருந்தாங்க...அஞ்சு ரூபாய்...சூப்பர்ஆ இருந்தது. அது என்னமோ தெரியலை கோவில் புளியோதரை டேஸ்டே தனிதாங்க....!!

நாவலூர் சைட் வரும் போது NRK னு ஒரு கொட்டாய் தியேட்டர்
பார்த்தேன். அங்கே ஒரு படம் பார்க்க வேண்டும் என்று ஆவல்
தூண்டுகிறது.... காரணம் இதுவரைக்கும் நான் எந்த கொட்டாய்
தியேட்டருக்கும் போனதில்லைங்க(டேய்..அதான் வாரம் வாரம்
தியாகராஜா தியேட்டருக்கு போறியேடா!) சரி சரி ப்ரீயா விடுங்க...
நான் பள்ளியில் படிக்கும் போது திருமலை கொட்டாய் என்று
கொட்டிவாக்கத்தில் இருந்தது. எந்நேரமும் அட்டு படம் தான்
போடுவாங்க(முருகா..!!) அதனால அங்கே போறதுக்கு வாய்ப்பு கிடைக்கில!!(நம்பணும்).ஆனா இங்க நல்ல படங்கள் போடுறாங்க ஒரு நாள் போய் பார்க்க வேண்டும்!! வித்தியாசமான அனுபவமா இருக்கும்....


அப்புறம் என்ன ராஜீவ் காந்தி சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில்
பொங்கல் வடையுடன் முடித்து வீடு வந்து சேர்ந்தோம். நீங்களும்
ஒரு நாள் அதிகாலை வேளையில் திருப்போரூர் போய் ட்ரை
பண்ணி பாருங்க.....முருகன் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்..!!


ஜெட்லி...

Monday, May 17, 2010

சிங்கம் பாட்டும் கில்மானந்தாவின் தெளிவுரையும் :

சிங்கம் பாட்டும் கில்மானந்தாவின் தெளிவுரையும் :

கேட்டாலே பதறவைக்கும் பாடல்கள்:சிங்கம் பாட்டு... அடடா இப்படி ஒரு பாட்டை கேட்டு எவ்ளோ நாளாச்சு.... ரேடியோவில் தான் முதல் தடவை கேட்டேன்.அதுக்கு அப்புறம் சிங்கம் பாட்டு போட்டவுடன் வேறு அலைவரிசைக்கு மாற்றிவிடுகிறேன்...பாட்டு எல்லாம் அவ்வளவு ஜூப்பரு...!!படம் வேற சன் பிக்சர்ஸ் வாங்கிருக்கு.... இருந்தாலும் எனக்கு ஹரி மேல நம்பிக்கை இருக்கு....நாங்கெல்லாம் இதுக்கு முன்னாடி சூர்யா நடிச்ச எம்.ஜி.ஆர் படத்தையே ரெண்டு தடவை பார்த்திருக்கோம் அதாங்க வேல் படம். ஹரி ஒரு நல்ல மசாலா கொடுப்பார் என நம்புவோம்.

தேவிஸ்ரீபிரசாத்தின் இசைப்பற்றி வேறு ஒன்று சொல்வதற்கு இல்லை....!!

*****************************************


சந்தனக்காடு கௌதமன் அவர்கள் அடுத்து மகிழ்ச்சி என்று
புது படத்தை இயக்குகிறார் என்று அனைவருக்கும் தெரிந்த
செய்தி. திரு நீல.பத்மநாபனின் தலைமுறைகள் நாவலை தான்
படமாக்குகிறார் என்று தெரிந்துகொண்டேன். எனக்கு படம்
பார்க்கும் முன் நாவலை படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
புத்தக கண்காட்சியில் கேட்டபோது அந்த நாவல் இப்போது ஸ்டாக்
இல்லை என்று சொல்லிவிட்டார்கள்....

திரு நீல.பத்மநாபனின் தலைமுறைகள் நாவல் தற்போது விற்பனையில் உள்ளதா?? எந்த பதிப்பகம் விலாசம் தெரிந்தால் சொல்லவும்.....அல்லது உங்களிடம் தலைமுறைகள் நாவல் இருந்தால் இரவல் கொடுங்கள்.... கண்டிப்பாக திருப்பி கொடுத்துடுவேன்......சென்னையில் இருந்தால் நலம்... மெயில் பண்ணுங்க போன் நம்பருடன் -
jetliidli@gmail.com

******************************************

இந்த வாரம் வெள்ளிக்கிழமை அரை டஜன் தமிழ் படங்கள்
வருகிறது. வெள்ளிக்கிழமை எந்த படம் போறதுனு தெரியல.
கரண் நடித்திருக்கும் கனகவேல் காக்க என் கவனத்தை ரெண்டு
விஷயத்தில் ஈர்த்தது. முதலில் பா.ராகவன் என்று பேப்பர் விளம்பரத்தில் படித்தேன்...நம்ம எழுத்தாளர் பா.ராகவன் சார் தான் வசனம் என்று நினைக்கிறேன், சரியா தப்பா என்று தெரியவில்லை..தெரிந்தவர்கள் ஊறுதிப்படுத்தவும். அடுத்தது தணிக்கை குழு இந்த படத்தை பார்த்து பாராட்டி இருக்கிறார்கள் என்று படித்தேன்........

iron man 2 வேற வருது...அது கண்டிப்பா போகணும்...அப்புறம்
மாஞ்சா வேலு சந்தானத்துக்காக போலாம்.... நான் இன்னும்
மலை மலை படமே பார்க்கலை...என்பதை இங்கு சொல்லி கொள்ள விரும்புகிறேன் !!

************************************

சமீபத்தில் ஒரு பண்பலை அலைவரிசையில் சில பாடல்களை
கேட்க நேர்ந்தது...ஒண்ணு ஒண்ணும் சமுதாய கருத்துள்ள பாட்டுக்கள்.இந்த பாடல்கள் இவங்களுக்கு மட்டும் எங்கே இருந்து கிடைத்தது என்று தேடி கொண்டிரந்த போது டி.வி.யில் கோரிபாளையம் ட்ரைலர் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது...அந்த படத்தில் உள்ள பாடல்களில் சில வரிகள் உங்களுக்காக....

"ஆப்பக்காரி ஆப்பக்காரி அஜால் குஜால் ஆப்பக்காரி
மாட்டிக்கிட்ட மஜா கச்சேரி"....

வேற பாட்டு சேம் மூவி

"ஒட்ட ஒடசல் ஈயபித்தளைக்கு பேரிச்சம்பழம்
என் உசிரை பிழியிற பொண்ணு கலர் ஆரஞ்சு பழம்"


இந்த மாதிரி சமுதாய கருத்துள்ள பாடல்களை கேட்கும் போது உடம்பு தானா சிலிர்த்துக்குது.எப்படி இப்படியெல்லாம் பாட்டு எழுதுறாங்கனு தெரியல....யாரு எழுதுனாங்கன்னு சொல்ல விரும்பல.....அதுவும் பாட்டு புல்லா டபுள் மீனிங் தான்.என்ன சமுதாய கருத்தா?? என்று நீங்கள் நினைப்பது புரியாமல்
இல்லை ஆனா அது இல்லை,நான் என்ன சொல்ல வரேன்னா கூடிய விரைவில் நானும் பாடலாசிரியர் ஆக வாய்ப்பு இருக்கு என்பதை மட்டும் இங்கே ஆணித்தரமாக சொல்லி கொள்ள விரும்புகிறேன், தொடர்ந்து இந்த மாதிரி பாடல்கள் வந்தால்.....!!

*********************************************

கில்மாவின் வைகாசி சிறப்பு தெளி(ந்த)வுரை :

நீண்ட நாள் ஆராய்ச்சிக்கு பின் என் குரு கில்மானந்தா அவர்களின்
ஒரு அற்புத பொக்கிஷ பொருளுரை உங்கள் பார்வைக்கு...

"ரெண்டுல தான் ஒண்ண தொட வரியா
தெனம் ரெண்டுல தான் ஒண்ண தொட வரியா"


"டுபுக்கு டுபுக்கு டுபுக்கு பண்ணாதே....
சலுக்கு சலுக்கு சலுக்கு பண்ணாதே...."

பாடல் வரி இடம் பெற்ற படம் கிரி....குவாட்டர் கட்டிங் அடித்த பிறகு கில்மானந்தாவின் தெளிந்த உரை(தெளிவுரை) உங்கள் பார்வைக்கு.....

"ரெண்டுல ஒண்ண தொட வரியா அப்படினா யாரும் தப்பா
நினைக்கக்கூடாது....அதாவது நாம் எந்த ஒரு விஷயத்திலும்
ரெண்டு பக்கம் சாயாமல் ஒரே பக்கம் இருக்க வேண்டும்
என்று பொருள்..அதை தான் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என்கிறோம்."

"தினம் ரெண்டுல தான் ஒண்ண தொட வரியா - ரெண்டாவது வரியில் மனிதன் எப்படி வாழவேண்டும் என்று அவர்கள் விளக்கி உள்ளனர். அதாவது நம் அன்றாட வாழ்வில் எந்த ஒரு முடிவு எடுக்கவும் யோசிக்க கூடாது...ரெண்டில் ஒன்றை தினமும் தேர்ந்து எடு என்று அர்ஜுனுக்கு மட்டுமில்லாமல் நமக்கும் மிக பெரிய பாடத்தை கற்று கொடுத்திருக்கிறாள் இந்த கன்னட பைங்குருவி குத்து ரம்யா...."


"டுபுக்கு டுபுக்கு டுபுக்கு பண்ணாதே...
சலுக்கு சலுக்கு பண்ணாதே...."

டுபுக்கு என்பதற்கு 'தொந்தரவு' என்று ஒரு அர்த்தம் இருக்கு என்றும் நம்ம தஞ்சாவூர் கோவில் கல்வெட்டில் பதிந்து இருப்பதாக மூணு நாள் முன்னாடி கட்டிங் கோபால் எமக்கு தந்தி அடித்தார்... சலுக்குனா ஓவர்ஆ இல்லை பிகு இல்லை சீன் என்று எது வேண்டுமானாலும் வைத்து கொள்ளலாம்....இந்த பாட்டை தினமும் காலை எழுந்தவுடன் வீட்டில் போடுங்கள்....நமது இளைய சமுதாயம் விளங்கிவிடும்.....!!ஹோ....கில்மா ஜே ரவ...!!

************************************************

இது போல் மேலும் நாட்டுக்கு பல அதிமுக்கிய விஷயங்களை
மக்களுக்கு பரப்ப ஓட்டு போடுங்கள்.....


ஜெட்லி....

Friday, May 14, 2010

நான் அவள் அது......

நான் அவள் அது......!!


(டிஸ்கி : இந்த கதை உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டுள்ளது.....கதையை படிச்சுட்டு பயமா இருந்ததா இல்லை
மொக்கையா இருந்ததான்னு நீங்க தான் சொல்லணும்..)


________________________________நானும் எனது நண்பர்கள் டேவிட்,ராம்,ராஜா,சதீஷ் ஆகியோர்ஒரு மாதம் முன்பே கொடைக்கானல் போவதாக முடிவு செய்து இன்று கொடைக்கானல் காற்றை சுவாசித்து கொண்டிருக்கிறோம்.சீசன் டைம் என்பதால் எளிதில் எங்களுக்கு ஹோட்டல் கிடைக்கவில்லை,அங்கும் இங்கும் அலைந்து கொஞ்சம் ஒதுக்கு
புறமாக ரிசார்ட்டில் ஒரு அறை கிடைத்தது. நாங்கள் தங்கிருந்தஇடம் ரொம்ப அமைதியாக ஆள் நடமாட்டம் இன்றி காணப்பட்டது.


என்னை பத்தி நானே சொல்லிக்க கூடாது, நான் எவ்வளவு தான் சரக்கு அடித்தாலும் சுய நினைவோடு தான் இருப்பேன். என் நண்பன் டேவிட் மிகுந்த இறை பக்தி உடையவன் தினமும் தூங்கும் முன் பைபிள் படித்து விட்டுதான் தூங்குவான். மீதி மூன்று நண்பர்களும் அரட்டை அடிப்பதில் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல.டேவிட் தவிர எங்கள் அனைவருக்கும் குடி பழக்கம் உண்டு, எல்லாம் அளவோடு தான். முதல் நாள் எங்கு போவது என்று ஒரே குழப்பம். ராம் ஒரு இடம் சொல்றான் சதீஷ் வேற இடம் சொல்றான். எங்களுக்குள் குழப்பம் அதனால் நான் ஒரு முடிவு எடுத்து, முதலில் நாம்சூசைட் பாயிண்ட் செல்வோம் என்றேன்.சூசைட் பாயிண்ட் இதை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.அங்கு நானும் நண்பர்களும் சென்று கம்பியின்அருகில் சும்மா சேட்டை, பிகர்களை நோட்டம் விட்டு எங்கள்பொழுதை களித்தோம்.ஒரு கட்டத்தில் ராஜா தன் செல்போன் கேமராவில் படங்களை எடுத்து மகிழ்ச்சி அடைந்தோம். நான்
படம் எடுக்க மீதி நால்வரும் போஸ் கொடுத்தார்கள், நான் எடுத்த வீடியோவை preview பார்க்கவில்லை,ஒரு வேளை பார்த்து இருந்தால் அந்த நொடியே நாங்கள் சென்னைக்கு கிளம்பி இருப்போம்... அந்த படத்தில் என் நண்பர்களுக்கு பின்னால் ஒரு சிறுமி தலவெறி கோலத்தில் பின்னாடி உள்ள சிறு மலையில் ஏறுவது தெரிந்தது. ஆனால் அந்த சிறுமி நேரில்
யார் கண்ணுக்கும் தெரியவில்லை.


பொழுது சாய்ந்ததும் நாங்கள் அறைக்கு சென்றோம்,ஊர் சுற்றிய களைப்பில் அனைவரும் சோர்ந்து படுத்து இருந்தோம். ராஜா மது பாட்டில் எடுத்ததும் அனைவரும் உற்சாகமாக ரவுண்டு கட்டி சரக்கு ஏற்ற ஆரம்பித்தோம். டேவிட் வழக்கம் போல் பைபிள் படித்து விட்டு படுக்கைக்கு சென்றான்.மது முடிந்த பின் சிறிது நேரம் டாபிக் போட்டு பேசி அப்படியே எங்களை அறியாமல் தூங்கிவிட்டோம்.


சிறிது நேரத்தில் டேவிட் என்னை எழுப்பினான் நான்

"ஏன்டா தூக்கத்தை கெடுக்குற" என்று அலுத்து கொண்டு கேட்டேன்.


அவன் முகம் வெளிறி போய் இருந்தது. 'என்னடா' என்றேன், அதற்கு அவன்
" டேய் இங்க என்னமோ இருக்குடா, யாரோ கழுத்தை புடிச்சி நெரிக்கிற மாதிரி இருக்குடா, என் மார்ல யாரோ உட்கார்ந்து அமுக்குற மாதிரி இருக்குடா" என்று புலம்பி தள்ளினான்.


"குடிச்சது நாங்க ஆனா நீ உளர்ற அதெல்லாம் ஒண்ணும் இல்ல போய் படுத்து தூங்கு" என்று அவனை சமாதான படுத்தி நான் என் தூக்கத்தை தொடர்ந்தேன்.


டேவிட் திரும்பவும் பைபிள் எடுத்து படிக்க ஆரம்பித்தான்.திரும்பவும் அவனுக்கு யாரோ ரூமில் நடப்பது போன்று தோன்றியது. எங்களை எழுப்பினான் நான் சலித்து கொண்டே "என்னடா" என்றேன் .

"டேய் மச்சான் இந்த ரூம்ல என்னவோ இருக்கு வாங்க சென்னைக்கு போய்டலாம்" என்றான்.

டேவிட் சொன்னதை கேட்டு அனைவரும் சிரித்தனர். "டேய் தண்ணி அடிச்ச நாங்களே சும்மா இருக்கோம் உனகேன்னட ஆச்சு" என்று கேலி செய்தனர். அனைவரும் தூங்க சென்றனர்.டேவிட் அன்று இரவு தூங்கவில்லை.


மறுநாள் காலையில் டேவிட்க்கு பயங்கர ஜுரம் அடித்தது. என்னிடம் வந்து தான் திருச்சியில் இருக்கும் தன் அத்தை வீட்டுக்கு போவதாக கூறினான்.


"அவன் போன போகட்டும் நாம என்ஜாய் பண்ணுவோம்" என்று
சதீஷ் அனைவரையும் உற்சாக படுத்தினான்.நாங்களும் சரி அவனுக்கு உடம்பு சரியில்லை என்று அனுப்பிவைத்தோம்.


அடுத்த நாள் நாங்கள் டால்பின் நோஸ் மற்றும் சில இடங்களை பார்த்து எங்கள் அறைக்கு திரும்பினோம்.மீண்டும் மது உற்சாகம் களைகட்டியது, அறையில் இருந்த அந்த பெரிய டேபிள்லில் வட்டம் போட்டு அரட்டை அடித்து டைம் போனதே தெரியவில்லை.அப்போது ராஜா தூங்க டைம் ஆச்சுன்னு டி.வி யை ஆப் செய்தான்.அப்போது தான் அந்த வீபரிதம் ராஜாவின் கண்ணுக்கு தெரிந்தது, ஆப் செய்த டி.வி யை உற்று நோக்கினான் அதில் ஒரு சிறுமி தலை விரி கோலத்துடன் hanger மாட்டும் இடத்தில் தொங்கி கொண்டு இருந்தாள்.திரும்பி பார்த்தால் ஒன்றும் தெரியவில்லை,டி.வி யை பார்த்தால், அந்த சைடு சிறுமி தொங்கி கொண்டு இருந்தவள் கிழே இறங்க ஆரம்பித்தாள். ராஜாவுக்கு பயம் வந்து என்னிடம் கூறினான்.நாங்கள் ஆப் பண்ண டி.வி யை பார்த்த போது அந்த சிறுமி எங்கள் அருகில் வந்து விட்டதை பார்த்து திகில் அடைந்தோம். அந்த சிறுமி தலைவிரித்து ஒரு சோக முக பாவனையில் இருந்தது.கண்டிப்பா அவள் மனுஷியில்லை என்று நாங்கள் அனைவரும் உணர்ந்தோம்.
அவள் அருகே வந்தாள் நண்பர்கள் அனைவருக்கும் போதை இறங்கி பயம் வந்து விட்டது,


அவள் நேரே வந்து என் கழுத்தை பிடித்து
"நேத்து காலையில வீடியோ எடுத்த இல்ல அத அழி" என்றாள்.


எனக்கும் என் நண்பர்களுக்கும் எந்த வீடியோ என்று தெரியவில்லை தைரியம் வந்து சதீஷ் "முதல்ல அவன விடு" என்றான்.அந்த சிறுமி கேட்கவில்லை, நான் அந்த சமயம் என் கையில் கிடைத்த கம்பியால் டி.வி யை பார்த்து அந்த சிறுமி இருக்கும் பக்கம் கம்பியை வீசினேன் . அந்த கம்பி அவள் மேல் பட்டு அவள் அழ ஆரம்பித்தாள்.


அந்த சிறுமி எங்களிடம்
'இங்க இருக்காதிங்க மொதல்ல கிளம்புங்க' என்று எச்சரிக்கை விடுத்தாள். நண்பர்கள் அனைவரும் அழும் நிலைக்கு வந்து விட்டனர். நான் அந்த வீடியோவை அழித்து விட்டதாக கூறினேன் .


அப்போதும் அந்த சிறுமி "இங்க இருந்து போய்டுங்க உங்க நல்லதுக்கு தான் சொல்றேன்" என்றாள்.


நாங்கள் நால்வரும் டர்ராகி வெளியில் வந்து , யாரைவது உதவிக்கு அழைக்கலாம் என்றால் ஒரு ஆளையும் காணோம். ரிசார்ட்டில் வேலைக்கு இருப்பவர்கள் இரவில் தங்கள் வீட்டுக்கு சென்று விடுவது வழக்கமாம் .நாங்கள் மேலும் பயம் கொண்டு ரோட்டில் ஓரத்தில் உக்காந்து இரவு பொழுதை கழித்தோம். என் வாழ்க்கையில் இந்த சம்பவம் ஓர் உண்மையை உறைத்தது அது ஆவி இருக்கிறது என்று.மறுநாள் காலையில் வேலைக்கு வந்த நடுத்தர வயது உடைய நபரிடம் நாங்கள் இது மாதிரி ஒரு சிறுமியை கண்டதாக கூறினோம் . அதுக்கு "அவர் சும்மா தண்ணி போட்டு உளறாதிங்க தம்பி" என்றார்.தான் அறையை போய் சுத்தம் செய்வதாக கூறி அறைக்கு சென்றார் நாங்கள் பயந்து போய் அறைக்கு செல்லவில்லை.


அறைக்கு சென்ற நபர் உடனே வெளியில் வந்து
"நேத்து நைட் என்ன பண்ணிங்க" என்றார்.


"ஒண்ணும் இல்லன நாங்க பாட்டுக்கு சரக்கு சாப்பிட்டு தூங்க போனோம் அப்பதான் அந்த பொண்ணு வந்து ..." என்று இழுத்தேன் .உடனே அந்த நபர் "போய் அந்த டேபிள்லை பாருங்க" என்றார்.நாங்கள் அனைவரும் சென்று டேபிளில் என்ன என்று பார்த்தோம் . நாங்கள் அனைவரும் மூச்சடைத்து நின்றோம், அடுத்த நொடி பெட்டி பையை எடுத்து ஊருக்கு கிளம்பினோம்.


அறையில் இருந்த அந்த டேபிள் மீது ஒரு பெண்ணின் கூந்தல் முடி கொத்தாக இருந்தது.முற்றும்.


(இது ஒரு மீள் பதிவு கதை - சில மாற்றங்களுடன்)


ஜெட்லி....(சரவணா...)


Tuesday, May 11, 2010

உலகப்பட வரிசையில் குருசிஷ்யன் !!

குருசிஷ்யன் - சைட் பார்வை


"வாழ்க்கையே ஒரு விளையாட்டு...
நம்ம உடம்பு தான் மைதானம்...
அந்த உடம்பில் யார் வந்து விளையாடிட்டு போனா என்ன...."

இந்த வாழ்க்கை தத்துவத்தை படத்தில் உதிர்த்தவர் நமது
ஷகீலா என்பதை இங்கே பெருமையுடன் தெரிவித்து கொள்கிறேன்.
அகில உலக காஞ்சிபுரம் தேவநாதன் ரசிகர் மன்றம் சார்பில்
எங்கள் வாழ்த்துக்களை இயக்குனருக்கு தெரிவித்து கொள்கிறோம்.இது ஒரு சிறந்த படம்ங்க....ஹலோ ஒரு நிமிஷம் முழுசா படிச்சுட்டு அப்புறம் ஆன்லைன்ல டிக்கெட் புக் பண்ணுங்க. உண்மையிலே இது ஒரு சிறந்த படம் எதுக்குன்னு கேட்டிங்கனா தள்ளிட்டு போறதுக்கு இது ஒரு சிறந்த படம்னு சொல்ல வந்தேன்.நான் பார்த்த தியேட்டரில் என்னையும் சேர்த்து நூப்பது பேர் தான் இருந்தோம்.அப்ப உங்களுக்கே புரிஞ்சிருக்கும். ஏன்டா, தயாரிப்பாளர் கோடி கோடியா பணம் போட்டு படம் எடுத்தா அதை இப்படியா சொல்லுவே என்று நீங்கள் யாராவது கேட்கலாம். ஆனா இந்த குரு சிஷ்யன் படத்தை பார்த்தா நீங்க இப்படி கேட்க மாட்டிங்கனு இருநூறு சதவீதம் நான் நம்புறேன்.


அகில கெரகம் சுந்தர்.சி நாறபணி மன்றம் சார்பாக இந்த விமர்சனத்தை வழங்குவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.படத்தோட கதை பத்தி சொல்ல ஒண்ணும் இல்ல. ஆனா இந்த படத்தை பார்த்தவுடன் அதன் திரைக்கதையை எங்க பக்கத்துக்கு வீட்டு அஞ்சு வயசு பையன் கூட சொல்லிவிடுவான் என்பது படத்தின் ஹைலைட். சுந்தர்.சி வழக்கம் போல் சூப்பர் பாக்கு தலையுடன் வருகிறார் . படம் முழுவதும் கழுத்தில் ஒரு துண்டை சுற்றி கொண்டு வருகிறார். தீடிர்னு ஒரு சீனில் முதுகு பின்னாடி இருந்தெல்லாம் துண்டு எடுக்கிறார்....(விசாரிச்சேன்...ஸ்டைலாம்!!)
சத்யராஜ் சார் உங்களுக்கும் விஜயகாந்த்க்கும் ஏதாவது பிரச்சனைனா பேசி தீத்துக்க வேண்டியது தானே...அதுக்குன்னு அவரோட ஈத்து போனா பழைய அரசியல் டயலாக் பேசி ஏன் கடுப்பு ஏத்துரிங்க??அதுவும் இல்லாம எங்க தல அஜித்தை வேறு கிண்டல் பண்றீங்க...படத்தில் சத்யராஜ் பேரு காலுங்க....
அதுக்கு அவர் சொல்ற காரணம் தலைன்னு ஒருத்தர் இருக்கும் போது கால்னு ஒண்ணு இருக்க கூடாதா என்பார்.....சத்யராஜ்,கிட்டத்தட்ட ஒரு ஏழு எட்டு வருஷமா இதே மாதிரி இதே விக் வச்சி நடிச்சிட்டு வர்றார்....முடியல...இந்த கதாநாயகி நடிச்ச மூணு படத்தையும் இந்த பிரபஞ்சத்தில் பார்த்த ஒரே ஆள் நானாக தான் இருப்பேன் என்று நம்புகிறேன். படத்துக்கு படம் பேர் மாத்துறாங்க ஆனா முகத்தில் மட்டும் எந்த படத்திலும் ரியாக்சன் மாத்த மாட்டறாங்க.....வேற ஒண்ணும் சொல்றதுக்கு பெருசா இல்லைன்னு சொல்லமுடியாதுனு ஸ்டில்லை பார்த்தால் உங்களுக்கே தெரிஞ்சிருக்கும். அநேகமா இது தான் அந்த அம்மணிக்கு கடைசி படமாக இருக்கும் என்று நம்புகிறேன், காரணம் இதுக்கு முன்னாடி நடிச்ச ரெண்டு படமும் சூப்பர் டூப்பர் ஹிட்ஒ ஹிட்ங்க.(இந்திரவிழா, நான் அவனில்லை 2 ). பேசாம கிரணையாவது நாயகியாக போட்டிருக்கலாம்...!!


சந்தானம் இவர் மட்டும் இல்ல..இன்டெர்வல் முன்னாடியே வெளியே வந்திருப்பேன். சந்தானம் காமெடி உண்மையிலே நல்லா இருந்தது.ஆனா அதுக்காக முழு படமெல்லாம் பார்க்கமுடியாது.நான் கிளைமாக்ஸ்க்கு முன்னாடியே வெளிநடப்பு செய்ஞ்சிட்டேன் என்பதை இங்கே சொல்லி கொள்கிறேன் யுவர் ஆனர்!!

சக்தி சிதம்பரம், ஐயா நீங்க ஒரு படமெடுக்க அந்த டைம்மில்
வந்த பத்து படங்களில் இருந்து சீனை எடுத்து நீங்கள் ஒரு
படம் எடுத்துடுறீங்க....மசாலா படம் நாங்க பார்ப்போம் அதுக்காக
ஓவர் மசாலா படமெல்லாம் பார்க்க முடியாது.....அப்புறம் ஒரு
சின்ன request தயவு செய்து நீங்க இனிமே ரஜினி பட டைட்டில்
யூஸ் பண்ணாதீங்க....!!

தியேட்டர் நொறுக்ஸ்:

#படத்தில் இன்டெர்வல்க்கு பிறகு ஒரு காட்சி...எப்பா எப்படி
இப்படி யோசிக்கிறாங்கனு தெரியல அதுவும் இல்லாம ஒரு
பாட்டு வரும் பாருங்க "தம்பி இல்லடா,இவன் தாயை போலடா"னு
அப்படியே தாரை தாரையா கண்ணீர் வர மாதிரி இருந்தது...
காரணம் அம்பது ரூபாய் வீணா போச்சே!!

# படத்திலே மிகவும் பிடித்த இடம் ராஜ்கபூரும் நாயகியும் நடிச்ச ரேப் சீன்தான். ஆனா கொஞ்ச நேரத்தில் அந்த காட்சி முடிந்து விட்டது என்பது கொடுமையான விஷயம்.இந்த சீனுக்கு ஒருத்தர் தியேட்டரில் கைதட்டினார்....சத்தியமா நான் அவன் இல்லைங்க....


# ஈவ்னிங் ஷோ இன்டெர்வல் அப்பவே நாலைந்து பேர் இந்த
காவியத்தை பார்த்து மட்டையாகி விட்டார்கள்.


# இன்டெர்வல் ஆரம்பிச்சதில் இருந்து ஒரு முக்கா மணி நேரம்
சந்தானம் வரவே மாட்டார்(நடுவில் சும்மா ஒரு சீனில் வருவார்) அவ்ளோ தான் போல வீட்டுக்கு போய்விடலாமா என்று நினைத்து கொண்டிருக்கும் போதே பெண் வேடத்தில் சந்தானம் வரும் காட்சி வந்தது......ஆனா பாருங்க அப்போ தான் ஒரு ஜோடி வேற வெளியே போறாங்க...அந்த பெண் கடைசி வரை ஸ்க்ரீனை பார்த்து கொண்டே போனாள்....இதிலிருந்து நாம் பெறும் நீதி :

இதுக்குதான் வேலை முடிஞ்சவுடன் அவசரமா போக கூடாது!!


படத்தை தலைவர் கவுண்டர் பார்த்து இருந்தா என்ன
சொல்லிருப்பார்.....


"படமாடா இது, என்னாமா டகால்டி காட்றானுங்க,...காவியம்டோய் !! இதுக்கு தான் நான் அந்த சூப்பர் பாக்கு மண்டையன் நடிச்ச படத்தை பார்க்குறது இல்லை.... சும்மா வீட்ல இருந்தவனை கூட்டிட்டு வந்து...தலைவலி கொடுத்துட்டாங்க....."


குரு சிஷ்யன் - போதும்டா சாமி!!


சுந்தர்.சி ரசிகர்கள் மற்றும் ரத்தத்தின் ரத்தங்கள் யாரும் கவலை
கொள்ள வேண்டாம் என்று கேட்டு கொள்கிறோம்...கூடிய விரைவிலே நம்மை மகிழ்விக்க வாடா படம் வரும் என்று நம்பிக்கை கொள்வோம்!!


இந்த விழிப்புணர்வு பல பேரை சென்று அடைய ஓட்டு போடுங்கள்...

ஜெட்லி...(சரவணா...)

Monday, May 10, 2010

ஒரு விபத்தும் ஒரு மரணமும் சில செய்திகளும்

ஒரு விபத்தும் ஒரு மரணமும் சில செய்திகளும்

கடந்த வாரம் ரெண்டாம் தேதி அடையாறை சேர்ந்த மஞ்சித் சிங் அவர்களின் குடும்பத்துக்கும் மற்றும் நண்பர்களுக்கும் ஓர் அதிர்ச்சியான செய்தி, அது பெசன்ட் நகரில் ஆல்காட் பள்ளி அருகே கொஞ்சம் ரோட்டின் நடுவே இருக்கும் மரத்தில் மோதி அவர்களது மகன் பவித் சிங் இறந்து விட்டார் என்பதே....

இருபத்தொரு வயதான இளைஞர் பவித் சிங்கின் மரணம் அவரது
குடும்பத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.ஆனால் பவித்சிங்கின்
குடும்பத்தினரும் நண்பர்களும் சோகத்திலும் மனம் தளராமல் தங்கள் மகன் ,நண்பன் மற்றவர்களுக்கு ஒரு செய்தியை விட்டு சென்றுள்ளார் என்று அதற்கான விழிப்புணர்வு பிரசாரத்தை நேற்று நடத்தினார்கள். பவித்சிங் விட்டு சென்ற செய்தி "சீட் பெல்ட் அணிந்து கார் ஒட்டவும்" WEAR A SEATBELT !!__________________________________________________


நேற்று பெசன்ட் நகரில் பவித்சிங் சீட் பெல்ட் விழிப்புணர்வு பிரசாரத்தில் அடையார் காவல் நிலைய டி.சி. செந்தாமரை கண்ணன்
அவர்கள் கலந்து கொண்டு பவித்சிங் படத்துக்கு மெழுகுவர்த்தி
ஏற்றி வைத்து காரில் வருவோருக்கு சீட் பெல்ட் அணிவதின்
அவசியத்தை வலியுறுத்தினார்.மேலும் பல காவல்துறை அதிகாரிகள்
கலந்து கொண்டனர்.பவித்சிங்கின் நண்பர்கள் மற்றும் உறவினர்களும்
பொதுமக்களுக்கு துண்டு பிரச்சாரங்கள் மற்றும் காரில் ஸ்டிக்கர்
ஒட்டி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.

___________________________________________இதில் பாராட்டபட வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன.
மகன் இறந்த ஒரு வாரத்தில் இப்படி ஒரு விழிப்புணர்வு பிரசாரம்
வைத்து அதை பொதுமக்களுக்கு எடுத்து சென்றதுக்கு ஒரு ராயல்
சல்யுட்!! மேலும் அவர்கள் பவித்சிங் சாலை பாதுகாப்பு டிரஸ்ட்
ஏற்படுத்தி அதன் மூலம் பள்ளி கல்லூரிகளுக்கு சென்று விழிப்புணர்வு பிரசாரம் செய்ய போகிறார்கள் என்று நோட்டீஸ்சில்
போட்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


****************************************************


அப்புறம் நான் நேற்று விழிப்புணர்வு பிரசாரத்துக்கு சென்றபோது அங்கே பந்தபஸ்துக்கு வந்த ஒரு கான்ஸ்டபில் கூறிய செய்தி என்னை அதிர்ச்சி அடைய வைக்கவில்லை என்றாலும் அவர் கூறியது உண்மையாக இருந்தால் அந்த விபத்துக்கும் மரணத்துக்கும் அந்த ஒற்றை மரம் மட்டும் காரணமல்ல என்பதை தவிர இங்கு வேறு எதுவும் பதிவு செய்ய விரும்பவில்லை.....

சரி அந்த ரோட்டின் நடுவே இருந்த மரத்தை என்ன பண்ணாங்க??
அந்த மரத்தை விபத்து நடந்த அடுத்த நாளே வெட்டி விட்டனர்.
ஒரு உயிர் போறதுக்கு முன்னாடியே வெட்டி இருக்கலாம்....
சமூக ஆர்வலர்களின் கருத்து என்னவென்று அறிய ஆசை...
காரணம் அடையாரில் பழமுதிர் நிலையம் முன்னே இருக்கும்
ஒரு மரத்தை பார்க்கிங்காக வெட்டினார்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். அந்த மரம் பாதி வெட்டப்பட்ட நிலையிலே தான் உள்ளது....எதுவும் கேஸ் இருக்கா இல்லை திரும்பவும் அந்த மரம் வளர வாய்ப்பு இருக்கானு எனக்கு தெரியல....


நான் அதற்காக ரோட்டில் இடையுறாக நிற்கும் மரத்திற்கும்,
ரோட்டின் ஓரத்தில் சாய்ந்து விழ போகும் மரத்திற்கும் வக்காலத்து
வாங்கவில்லை. ஓரமாக இருக்கும் மரங்கள் அப்படியே இருக்கட்டும்
ஆனால் அதுவே விழும் நிலையில் இருந்தால் உயிர் பலிக்கு முன் உடனடியாக வெட்டுவது நல்லது தான்.சில பல மாதங்களுக்கு முன்
அசோக் நகரில் ஒரு உதவி இயக்குனர் மரம் விழுந்து பலியானதை
நாம் இன்னும் மறந்திருக்க மாட்டோம் என்று நினைக்கிறேன்.


**************************************

மரணம் எப்போ வரும்னு யாராலும் சொல்லமுடியாது...வீட்டை
விட்டு வெளியே போனால் திரும்பி வீட்டுக்கு வருவதே இப்போதுள்ள
நடைமுறையில் பெரிய விஷயம்.....இதுக்கு டிராபிக் மற்றும்
அதிக போக்குவரத்து தான் காரணமா?? சத்தியமா இல்லை.
ரேஷ் டிரைவிங் தான் மிக முக்கிய காரணம்.ரேஷ் டிரைவிங்கால்
ஒழுங்கா போற அடுத்தவனையும் வண்டியை விட்டு ஏத்தி விடுகிறார்கள் என்பது தான் கொடுமை.....


இன்னைக்கு காலையில் கூட ஒரு நல்லவர் ப்ளஸ் வல்லவர்
காரில் செல்போன் பேசியப்படியே டிராபிக் போலீஸ் இருந்தும்
அவர் செய்கையை பார்க்காமல் போனில் பேசியப்படியே ஒரு
சைட் மட்டும் பார்த்த கொண்டு முன்னேறி வந்ததை என்னனு
சொல்றது.....இந்த அல்லு கிளம்ப காரணம் அவர் பாக்காத சைடில் நானில்லை பைக்கில் ரைட் எடுக்க நின்னுக்கிட்டு இருந்தேன்...!!


இதனால சொல்ல வரது என்னன்னா காரில் போறவங்க சீட்
பெல்ட்டை போடுங்க, பைக்கில் போறவங்க ஹெல்மெட்டை போடுங்க,தமிழிஷ் மற்றும் தமிழ்மணத்தில் கணக்கு
இருப்பவர்கள் ஓட்டை போடுங்க..... நன்றி....


ஜெட்லி...(சரவணா...)Friday, May 7, 2010

இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்!!!

இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்
நீண்ட நாட்கள் கழித்து கௌபாய் படம் என்றவுடன் தியேட்டருக்கு ஓடினேன்.அது வேறு அல்லாமல் சிம்புதேவன் அவர்களின் இயக்கம் வேறு...கண்டிப்பா சிரிக்கலாம் என்ற தைரியத்தில் போனேன்.....
சிம்பு ஏமாற்றவில்லை!!


கதைனு ஒண்ணும் பெருசா இல்லை ஆதிகால கௌபாய் கதைதான்.
இரும்பு கோட்டை முரட்டு சிங்கமும் கிட்டத்தட்ட இல்ல இது
ஒரு spoof மூவி தான் என்று சொல்ல வேண்டும்.சும்மா பிரிச்சு
மேய்ந்து இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.படம் ஆரம்பத்தில் காட்டப்படும் தூக்கு தண்டனை நிறைவேற்றும் இடத்தில் "இங்கு குரல்வளை நெரிக்கப்படும்" என்ற வாசகமும்,நாளிதழின் பெயர் "தின ஒப்பாரி" , "பாஸ்மாக்- குடி குடியை ரேப் பண்ணும்" , "சப்போலோ மருத்துவமனை" , கோவில் ஐயர்க்கும் கௌபாய் தொப்பி என்று எல்லா இடத்திலும் அக்மார்க் சிம்புதேவன் குறும்புகள்.

சிங்கமாக லாரன்ஸ், அப்பாவியாகவும் வீரனாகவும் கேரக்டர் செய்வது இவருக்கு புதிதில்லை என்றாலும் ரசிக்கலாம். அதென்ன மூணு நாயகி இருந்த தான் நடிப்பேன் என்று எதுவும் கண்டிஷன் போடுவாரா மனுஷன் எங்கையோ மச்சம் இருக்கு...!! பத்மப்ரியா, ஏற்கனவே எனக்கு புடிக்காத நடிகையில்
இவரும் ஒருவர், படத்தின் கதாநாயகியும் இவர்தான்.சந்தியா எதுக்கு வருகிறார் எங்கே போகிறார் என்று அவுருக்கே வெளிச்சம்.

லட்சுமிராய், வெள்ளைக்காரி பாட்டில் நன்றாக திறமையை வெளிப்படித்தியுள்ளார் கண்டிப்பா நடிப்பு திறமையை சொல்லவில்லை என்பதை இங்கே சொல்லி கொள்ள விரும்பிகிறேன் யுவர் ஆனர்!!
சாய்குமார்... சில காட்சிகளில் ரசிக்க வைக்கிறார் பல காட்சிகளில்
எரிச்சல் படவைக்கிறார் மனுஷன். நாசர், இவர் தான் மெயின் வில்லன்...இவர் பெயர் கிழக்குகட்டை. எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறாங்கனு தெரியிலப்பா....செம...


அப்புறம் கணக்கு வழக்கு இல்லாமல் நிறைய குணசித்திர நடிகர்கள்
படத்தில் இருக்கிறார்கள்.குறிப்பிட்டு சொல்லணும்னா மௌலி,
வி.எஸ்.ராகவன், இளவரசு,மனோரமா ......தியேட்டரில் மொத்தம்
மூணு பேரு இன்ட்ரோக்கு தான் செம கைத்தட்டு முதலில்
லட்சுமி ராய் அடுத்து எம்.எஸ்.பாஸ்கர் அப்புறம் நீண்ட நாள்
கழித்து நம்ம செந்தில் அவர்களுக்கு...

எம்.எஸ்.பாஸ்கர் கூட translater ஆக வரும் 'ஜாவா' மூர்த்தியாக அறை எண்ணில் வந்து ஊரையே விலைபேசுவாரே அவரே தான் செம....சான்ஸ்ஏ இல்லைங்க மனுஷன் பின்னி பெடல் எடுக்கிறார்...அதுவும் கடைசியில் புதையல் எடுக்க போகும்போது பாஸ்கர் கிழே தவறி விழும்போது அவரது செய்கை...சூப்பர்.


படத்தில் சூப்பர்ஆக இருக்குனு சில காட்சி தவிர எல்லாத்தையும்
சொல்லலாம்.படத்தில் பாடல்கள் பெரும் பின்னடைவு பாடலே
இல்லாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.ஆனால்
பின்னணி இசையில் சபேஷ் முரளி அவர்கள் பிரித்து மேய்ந்து
இருக்கிறார்கள்.முத்துராஜ் அவர்களின் செட்டிங் மற்றும் அழகப்பன் அவர்களின் கேமரா என்று அனைத்தும் சூப்பர்....வச்ச குறி தப்பாது என்று அடைமொழியோடு படத்தை விளம்பரம்
செய்து இருந்தார்கள், அது சரிதான் வச்ச குறி தப்பவில்லை.
படத்தில் ரசிக்கும் முக்கியமா சிரிக்கும் படியா பல காட்சிகள் இருக்கிறது எல்லாத்தையும் சொல்ல விரும்பலை....குறிப்பா அணுஆயுத ஒப்பந்தம், லாரன்ஸ் நிழல் வேகம், புதையல் எடுக்க போகும் காட்சி என்று அனைத்து காட்சிகளும் உங்களுக்கும் பிடிக்கும்னு நினைக்கிறேன் தியேட்டரில் போய் பாருங்க....பாடல்கள், ஓரிரு காட்சிகள் மற்றும் கிளைமாக்ஸ் போன்றவை
படத்துக்கு திருஷ்டி மாதிரி....


இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் - சிரிக்க வைக்கும் தங்கம்!!தியேட்டர் நொறுக்ஸ்:

# அணுஆயுத ஒப்பந்தம் காட்சியில் நம்ம வி.எஸ்.ராகவன் சார்
ஒரு டவுட் கேப்பாரு பாருங்க...ஹையோ..இப்ப நினைச்சாலும்
சிரிப்பு வருதுங்க....அதுக்காகவே இன்னொரு தடவை படத்துக்கு போலாம்...தியேட்டரில் செம ரெஸ்பான்ஸ்....


# ஒரு காட்சியில் லாரன்ஸ் பத்மப்ரியா வீட்டுக்கு விருந்துக்கு
போய் இருப்பார் அப்போது அங்கே ஒரு ஈசல் ஒன்று சவுண்ட்
கொடுத்து கொண்டே இருக்கும்..அதை லாரன்ஸ் சுட்டுவிடுவார்..
உடனே டெல்லி கணேஷ் "ஒரு உயிரை கொல்றது பாவம் இல்லையா?" என்று கேட்பார் அதுக்கு லாரன்ஸ் பதில் சொல்வாரு
பாருங்க அது தான் மரண மாஸ். இந்த காட்சிக்கு முன்னாடி
இருக்கை நபர் "நாராயண இந்த ஈ தொல்லை தாங்கலடா" என்று
கத்தினார்.

# இன்டெர்வெல்லில் வேறு ஒரு நபர் அவர் நண்பரிடம் "ஏன்டா விஜய் நடிச்சு இருந்தா சூப்பர்ஆ,நல்ல காமெடியா இருந்துருக்கும் இல்ல"என்று ஆதங்கத்தை வெளிப்படித்தினார்..... "நடிச்சா நல்லா தான் இருக்கும் ஆனா மாட்டாரே" என்று அவர் நண்பர் பதில் அளித்தார்.....


இந்த தகவல் பல பேரை சென்று அடைய உங்கள் பொன்னான
ஓட்டுக்களை போட்டு ஆதரவு அளிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது....


ஜெட்லி....(சரவணா....)


Wednesday, May 5, 2010

டெலிபோன் ஓட்டு கேட்கலாம் வாங்க.......!!

யார் யார் என்ன பேசுறாங்க...


நம் நாட்டின் நாடாளுமன்றத்தில் இந்த டெலிபோன் ஓட்டு கேட்கும்
விவகாரம் பூதகரமாக வெடித்து கொண்டிரிக்கிறது என்று பேப்பர்
படிக்கும் உங்கள் எல்லாருக்கும் தெரிந்திருக்கும்...நாம இங்க
ஓட்டு கேட்க போவதும் சில வி.ஐ.பி. களின் டெலிபோன் தான்...
இதெல்லாம் சும்மா ஒரு லுலுயாக்கு தான் என்பதை பணிவுடன்
தெரிவித்து கொள்கிறேன்.....எதுக்கு சீரியஸ்ஆ நாம பேசிட்டு...

************************************************************

தல அஜித்:

மறுமுனையில்: என்னப்பா தீடிர்னு போன் பண்றே...??

அஜித்: ஐயா, பேப்பர்க்காரன் பால்போடுறவன் எல்லாம் மிரட்டுறாங்க
ஐயா...!!

மறுமுனையில்: என்னனு??

அஜித்: அடுத்த படம் ஹிட் படமா குடுக்கலைனா பேப்பர்காரன்
பேப்பர் போட மாட்டானாம் பால்க்காரன் பால் ஊத்த மாட்டானாம்
ஐயா...நீங்க தான்யா ஏதாவது செய்யணும்...

மறுமுனையில்: ஒண்ணு உன் அடுத்த படத்துக்கு நூறாவது நாள்னு பேர் வை, இல்லை அடுத்தது நான் ஆண்புலினு ஒரு படம் பண்றேன் அதுல நீ தான் ஹீரோ....கண்டிப்பா நூறு நாள் ஓட்டிடலாம்....

அஜித் : ???


**************************************

கே.எஸ்.ரவிக்குமார்

கே.எஸ்.ரவிக்குமார் : ஹலோ பாய்...பிரெஞ்சுல நாலு , இரானியன்ல அஞ்சு எடுத்து வைங்க பையனை அனுப்புறேன்....

மறுமுனையில் : என்ன சார் அடுத்த படம் ஸ்டார்ட் பண்ண போறீங்க போல...?

கே.எஸ்.ரவிக்குமார் : ஆமாம் பாய்...ஒரு நடிகர் சிக்கி இருக்காரு கதையை ஓகே பண்ணனும் சீக்கரம் டி.வி.டி.யை அனுப்புங்க.....

**************************************************

பார்த்திபன்

மறுமுனையில் : என்ன சார் எல்லா ஆடியோ ரீலீஸ்ளையும் உங்க படம் பேப்பர்ல வருது....பயங்கர பிஸியோ?

பார்த்திபன்: சொன்ன நம்புங்க நான் பிஸியா தான் இருக்கேன், நட்பு முறையில் தான் ஆடியோ ரீலீஸ் பங்சன்னுக்கு போறேன்....

மறுமுனையில்: போனா படத்தை பத்தி பேசுனும் ஆனா நீங்க நடிகையை பத்தி மட்டும் தான் பேசுறிங்க...அதுவம் ரெட்டை சுழியில் ரொம்ப ஜொள் ஊத்திடுச்சு.....

பார்த்திபன் : அழகை பாராட்டுறேன் சார் அதில் என்ன தப்பு.....*

***************************************************

விஜய்

மறுமுனையில்: தளபதி, சுறா எல்லா சென்டர்ளையும் செம வசூல்...

விஜய் : அப்புடியா நல்லது....நூறு நாள் கன்பார்ம்ஆ??

மறுமுனையில் : நூறு நாளுக்கு மேலேயே ஓட்டனும்னு அப்பா சொல்லி இருக்காரு....ஏதோ ராஜாலீலைனு ஒரு படம் டெய்லியும் பேப்பர்ல விளம்பரம் வருதாமே...அதை விட நாம பெருசா பண்ணனும் அப்படினு சொல்லி இருக்காரு.......செலவு தான் அதிகமா ஆகும்

விஜய் : பேப்பர் விளம்பரத்துக்கு தானே...?

மறுமுனையில் : அது இல்ல தலைவா....படம் பார்க்க நம்ம ஆளுங்களே டெர்ரர் ஆகுறாங்க....எவனோ ஒருத்தன் முதல் நாளே படம் பார்க்கறதுக்கு குவாட்டர் அடிச்சுட்டு வீட்டில் போய் தூங்கலாம்ட்டு பரப்பி விட்டுட்டான்....

விஜய் : அதனால என்ன படத்துக்கு வரவங்களுக்கு குவாட்டரும்
கோழி பிரியாணியும் கொடுத்துடுங்க.....தமிழனுக்கு என் படத்தை
பார்த்தாவது வயிறு நிறையட்டும்.....

(என்னா ஒரு வில்லத்தனம்!!)

****************************************

அ.இ.ச.ம.கட்சி தலைவர் சரத்குமார்

மறுமுனையில் : என்ன தலைவரே யாரை கேட்டு ஏழாம் தேதி
மின்வெட்டு ஆர்ப்பாட்டம் அறிவிச்சிங்க??

சரத்குமார்: ரெண்டு நாளா வீட்ல கரண்ட் இல்ல...அதனால வீட்டு
வாட்ச்மன்கிட்ட கலந்து பேசிட்டு ஆர்ப்பாட்டம் அறிக்கை கொடுத்துட்டேன்...ஏன் என்ன பிரச்சனை...??


மறுமுனையில்: இன்னும் ரெண்டு நாள்ல எங்கே இருந்து ஆளுங்கள
பிடிக்கிறது தலைவரே....இன்னும் ஒரு வாரம் கழிச்சு அறிவிச்சிருக்கலாம்....

சரத்குமார்: யோவ்,அன்னைக்கு ஷூட்டிங் வேற இல்ல....டைம் பாஸ்
பண்ண வேண்டாமா....வழக்கம் போல விழுப்புரம் பக்கத்தில்
இருந்து ஆளுங்களை கூட்டிட்டு வாங்க....

******************************************************

ஜெட்லி

மறுமுனையில் : என்னடா பண்ற ...

ஜெட்லி : வழக்கம் போல சும்மாதான் இருக்கேன்....

மறுமுனையில்: மோட்சத்தில் புதுசா ஒரு அட்டு படம் போட்டிருக்காங்கடா

ஜெட்லி : என்ன மலையாளமா??

மறுமுனையில்: இங்கிலீஷ் டப்பிங்னு நினைக்கிறேன்...படம் பேரே சூப்பர்...மதன மாளிகையில் மயக்கும் கள்ளி....

ஜெட்லி: டேய்.... காலையிலே உனக்கு வேற வேலை இல்லையாடா...
போடா போய் பொழப்பை பாரு.. என்று மோட்சத்தை அடைய ஆயுத்தமானேன்!!

************************************************

டி.ஆர் :

மறுமுனையில் : சார் வீராசாமி பார்ட் 2 முதல் scheduleயோட ஸ்டாப்
ஆயிடுச்சு.....உங்களை தான் சார் நம்பி இருக்கேன்...

டி.ஆர் : எம்மா மும்...நான் என்ன சதாரணா படமா எடுத்துட்டு இருக்கேன்...வீராசாமி வெற்றியை விட நமக்கு பெரிய வெற்றி
வேணும்னா காத்துகிட்டு தான் இருக்கணும்.....படம் ரீலீஸ் அப்போ எல்லோரும் மூக்கு மேல விரலை வைக்கணும்....

மறுமுனையில் (கிராஸ் டாக்) : அப்போ காப்ரேஷன் கக்கூஸ்ல படத்தை ரீலீஸ் பண்ணுங்க.......

டி.ஆர் : டேய் யார்ரா அது நடுவுல.... u r suppressing deppressing
supervising a tamilan..... நான் தமிழன் டா.....நான் தமிழன் மும்ஸ்...
எங்கேடா பேக்கரியில் ஆர்டர் கொடுத்த பப்ஸ்.....!!


********************************************


உங்களுக்கு இந்த இடுகை பிடித்திருந்தால் உங்கள் ஓட்டை தாறுமாறாக குத்துமாறு கேட்டுகொள்ளப்படுகிறது...!!


ஜெட்லி....(சரவணா....)