Wednesday, May 5, 2010

டெலிபோன் ஓட்டு கேட்கலாம் வாங்க.......!!

யார் யார் என்ன பேசுறாங்க...


நம் நாட்டின் நாடாளுமன்றத்தில் இந்த டெலிபோன் ஓட்டு கேட்கும்
விவகாரம் பூதகரமாக வெடித்து கொண்டிரிக்கிறது என்று பேப்பர்
படிக்கும் உங்கள் எல்லாருக்கும் தெரிந்திருக்கும்...நாம இங்க
ஓட்டு கேட்க போவதும் சில வி.ஐ.பி. களின் டெலிபோன் தான்...
இதெல்லாம் சும்மா ஒரு லுலுயாக்கு தான் என்பதை பணிவுடன்
தெரிவித்து கொள்கிறேன்.....எதுக்கு சீரியஸ்ஆ நாம பேசிட்டு...

************************************************************

தல அஜித்:

மறுமுனையில்: என்னப்பா தீடிர்னு போன் பண்றே...??

அஜித்: ஐயா, பேப்பர்க்காரன் பால்போடுறவன் எல்லாம் மிரட்டுறாங்க
ஐயா...!!

மறுமுனையில்: என்னனு??

அஜித்: அடுத்த படம் ஹிட் படமா குடுக்கலைனா பேப்பர்காரன்
பேப்பர் போட மாட்டானாம் பால்க்காரன் பால் ஊத்த மாட்டானாம்
ஐயா...நீங்க தான்யா ஏதாவது செய்யணும்...

மறுமுனையில்: ஒண்ணு உன் அடுத்த படத்துக்கு நூறாவது நாள்னு பேர் வை, இல்லை அடுத்தது நான் ஆண்புலினு ஒரு படம் பண்றேன் அதுல நீ தான் ஹீரோ....கண்டிப்பா நூறு நாள் ஓட்டிடலாம்....

அஜித் : ???


**************************************

கே.எஸ்.ரவிக்குமார்

கே.எஸ்.ரவிக்குமார் : ஹலோ பாய்...பிரெஞ்சுல நாலு , இரானியன்ல அஞ்சு எடுத்து வைங்க பையனை அனுப்புறேன்....

மறுமுனையில் : என்ன சார் அடுத்த படம் ஸ்டார்ட் பண்ண போறீங்க போல...?

கே.எஸ்.ரவிக்குமார் : ஆமாம் பாய்...ஒரு நடிகர் சிக்கி இருக்காரு கதையை ஓகே பண்ணனும் சீக்கரம் டி.வி.டி.யை அனுப்புங்க.....

**************************************************

பார்த்திபன்

மறுமுனையில் : என்ன சார் எல்லா ஆடியோ ரீலீஸ்ளையும் உங்க படம் பேப்பர்ல வருது....பயங்கர பிஸியோ?

பார்த்திபன்: சொன்ன நம்புங்க நான் பிஸியா தான் இருக்கேன், நட்பு முறையில் தான் ஆடியோ ரீலீஸ் பங்சன்னுக்கு போறேன்....

மறுமுனையில்: போனா படத்தை பத்தி பேசுனும் ஆனா நீங்க நடிகையை பத்தி மட்டும் தான் பேசுறிங்க...அதுவம் ரெட்டை சுழியில் ரொம்ப ஜொள் ஊத்திடுச்சு.....

பார்த்திபன் : அழகை பாராட்டுறேன் சார் அதில் என்ன தப்பு.....*

***************************************************

விஜய்

மறுமுனையில்: தளபதி, சுறா எல்லா சென்டர்ளையும் செம வசூல்...

விஜய் : அப்புடியா நல்லது....நூறு நாள் கன்பார்ம்ஆ??

மறுமுனையில் : நூறு நாளுக்கு மேலேயே ஓட்டனும்னு அப்பா சொல்லி இருக்காரு....ஏதோ ராஜாலீலைனு ஒரு படம் டெய்லியும் பேப்பர்ல விளம்பரம் வருதாமே...அதை விட நாம பெருசா பண்ணனும் அப்படினு சொல்லி இருக்காரு.......செலவு தான் அதிகமா ஆகும்

விஜய் : பேப்பர் விளம்பரத்துக்கு தானே...?

மறுமுனையில் : அது இல்ல தலைவா....படம் பார்க்க நம்ம ஆளுங்களே டெர்ரர் ஆகுறாங்க....எவனோ ஒருத்தன் முதல் நாளே படம் பார்க்கறதுக்கு குவாட்டர் அடிச்சுட்டு வீட்டில் போய் தூங்கலாம்ட்டு பரப்பி விட்டுட்டான்....

விஜய் : அதனால என்ன படத்துக்கு வரவங்களுக்கு குவாட்டரும்
கோழி பிரியாணியும் கொடுத்துடுங்க.....தமிழனுக்கு என் படத்தை
பார்த்தாவது வயிறு நிறையட்டும்.....

(என்னா ஒரு வில்லத்தனம்!!)

****************************************

அ.இ.ச.ம.கட்சி தலைவர் சரத்குமார்

மறுமுனையில் : என்ன தலைவரே யாரை கேட்டு ஏழாம் தேதி
மின்வெட்டு ஆர்ப்பாட்டம் அறிவிச்சிங்க??

சரத்குமார்: ரெண்டு நாளா வீட்ல கரண்ட் இல்ல...அதனால வீட்டு
வாட்ச்மன்கிட்ட கலந்து பேசிட்டு ஆர்ப்பாட்டம் அறிக்கை கொடுத்துட்டேன்...ஏன் என்ன பிரச்சனை...??


மறுமுனையில்: இன்னும் ரெண்டு நாள்ல எங்கே இருந்து ஆளுங்கள
பிடிக்கிறது தலைவரே....இன்னும் ஒரு வாரம் கழிச்சு அறிவிச்சிருக்கலாம்....

சரத்குமார்: யோவ்,அன்னைக்கு ஷூட்டிங் வேற இல்ல....டைம் பாஸ்
பண்ண வேண்டாமா....வழக்கம் போல விழுப்புரம் பக்கத்தில்
இருந்து ஆளுங்களை கூட்டிட்டு வாங்க....

******************************************************

ஜெட்லி

மறுமுனையில் : என்னடா பண்ற ...

ஜெட்லி : வழக்கம் போல சும்மாதான் இருக்கேன்....

மறுமுனையில்: மோட்சத்தில் புதுசா ஒரு அட்டு படம் போட்டிருக்காங்கடா

ஜெட்லி : என்ன மலையாளமா??

மறுமுனையில்: இங்கிலீஷ் டப்பிங்னு நினைக்கிறேன்...படம் பேரே சூப்பர்...மதன மாளிகையில் மயக்கும் கள்ளி....

ஜெட்லி: டேய்.... காலையிலே உனக்கு வேற வேலை இல்லையாடா...
போடா போய் பொழப்பை பாரு.. என்று மோட்சத்தை அடைய ஆயுத்தமானேன்!!

************************************************

டி.ஆர் :

மறுமுனையில் : சார் வீராசாமி பார்ட் 2 முதல் scheduleயோட ஸ்டாப்
ஆயிடுச்சு.....உங்களை தான் சார் நம்பி இருக்கேன்...

டி.ஆர் : எம்மா மும்...நான் என்ன சதாரணா படமா எடுத்துட்டு இருக்கேன்...வீராசாமி வெற்றியை விட நமக்கு பெரிய வெற்றி
வேணும்னா காத்துகிட்டு தான் இருக்கணும்.....படம் ரீலீஸ் அப்போ எல்லோரும் மூக்கு மேல விரலை வைக்கணும்....

மறுமுனையில் (கிராஸ் டாக்) : அப்போ காப்ரேஷன் கக்கூஸ்ல படத்தை ரீலீஸ் பண்ணுங்க.......

டி.ஆர் : டேய் யார்ரா அது நடுவுல.... u r suppressing deppressing
supervising a tamilan..... நான் தமிழன் டா.....நான் தமிழன் மும்ஸ்...
எங்கேடா பேக்கரியில் ஆர்டர் கொடுத்த பப்ஸ்.....!!


********************************************


உங்களுக்கு இந்த இடுகை பிடித்திருந்தால் உங்கள் ஓட்டை தாறுமாறாக குத்துமாறு கேட்டுகொள்ளப்படுகிறது...!!


ஜெட்லி....(சரவணா....)

27 comments:

Chitra said...

ஜெட்லி....(சரவணா....):

hello? hello? hello?

(நீங்கள் டயல் செய்த வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளார். சிறிது நேரத்துக்கு பின், டயல் செய்யவும். )
ha,ha,ha,ha,ha...

புலவன் புலிகேசி said...

செம கலாசல் தல....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நீங்கள் டயல் செய்த ஜெட்லி இட்லியுடன் ஒரு புல் சாப்பிட்டு மட்டை ஆகிவிட்டார்.

வானம்பாடிகள் said...

அந்த மறுமுனையில் யாருன்னு தெரிஞ்சாகணும்.:))

ர‌கு said...

ஹாஹ்ஹா...டி.ஆர்.தான் டாப்பு

காஷ்மீர் தீவிர‌வாதிங்க‌கிட்ட‌ த‌மிள்ள‌ பேச‌ற‌வ‌ரை மிஸ் ப‌ண்ணிட்டீங்க‌ளே!

அகல்விளக்கு said...

ஹாஹாஹா..

எல்லாமே டாப்பு மச்சான்....

MANO said...

தல, சூப்பர் பதிவு.

மனோ

முகிலன் said...

சூப்பர் ஜெட்லி..

manoj said...

எதற்கு ஆண்புலினு தலைப்பு பெண்சிங்கம் பாகம்-2 சரியாக இருக்கும். அவர் நடி(ட)க்க ....

சந்தனமுல்லை said...

செம ROTFL!

அக்பர் said...

அந்த டி. ஆர் க்ராஸ்டாக் ரொம்ப சூப்பர்.

கலக்கல் ஜெட்லி.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

டக்கருதான் டாப் டக்கருதான்.. காமெடிதான் சூப்பர் காமெடிதான்.. ஜெட்லிதான் சூப்பர் ஜெட்லிதான்..

ILLUMINATI said...

விஜய்,k.s.r நல்லா இருந்தது பாஸ்.நடத்துங்க... :)

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

பலரின் உரையாடல்களை மிகவும் ரசிக்கும் வகையில் பதிவாக தந்திருக்கிறீர்கள் . மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி !

ஜெட்லி said...

@ Chitra

என்னைய ஓட்டு கேக்குறிங்களா....

ஜெட்லி said...

@புலவன் புலிகேசி

நன்றி முருகவேல்...


@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்


நமக்குள்ள இருக்கட்டும்....பப்ளிக் பப்ளிக்

ஜெட்லி said...

@ வானம்பாடிகள்

உங்களுக்கு தெரியாததா ஐயா...


@ ர‌கு


அவரை ப்ரீயா விட்டாச்சு....

ஜெட்லி said...

@ அகல்விளக்கு

நன்றி மாமே

@ MANO


நன்றி mano

ஜெட்லி said...

@ முகிலன்

நன்றி முகிலன்


@manoj

no comments

ஜெட்லி said...

@சந்தனமுல்லை

நன்றி

@ அக்பர்

அது அவசரத்தில் அடித்தது....நிறைய பேருக்கு அது
பிடித்திரிக்கிறது.....

ஜெட்லி said...

@ Starjan ( ஸ்டார்ஜன்

எதுவும் பாடலாசிரியார் ஆக போறீங்களா??

நன்றி

ஜெட்லி said...

@ILLUMINATI


நன்றி


@♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫


நன்றி

தமிழ் உதயம் said...

.ஏதோ ராஜாலீலைனு ஒரு படம் டெய்லியும் பேப்பர்ல விளம்பரம் வருதாமே...அதை விட நாம பெருசா பண்ணனும் அப்படினு சொல்லி இருக்காரு.....இத நீங்க விடமாட்டீங்களா.

நாஸியா said...

வீராசாமி பார்ட் 2 வந்தாலும் நாங்க தியேட்டர்ல போய் பாப்போம்ல!

Mrs.Menagasathia said...

செம கலக்கல்!!

ராஜ நடராஜன் said...

//அஜித்: ஐயா, பேப்பர்க்காரன் பால்போடுறவன் எல்லாம் மிரட்டுறாங்க
ஐயா...!!//

ஒட்டு!அசல்!யார்?

DREAMER said...

டக்கர் Talk..! அருமை..!

-
DREAMER