Friday, April 30, 2010

சுறா - நடந்தது என்ன??

சுறா - நடந்தது என்ன??

ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்.
சுறா படத்துக்கு நான் கிட்டதட்ட பல தடவை யோசிச்சு தான் டிக்கெட் எடுத்தேன்.ஆனா டிக்கெட் எடுத்த நாளில் இருந்து வீட்டில் கரண்ட் இல்லை. நேற்று உச்சக்கட்டமாக மூணு நிமிஷம் கரண்ட் இருக்கும் அப்புறம் அஞ்சு நிமிஷம் கரண்ட் இல்லாமா போய்டும்.இது போன்ற சில சம்பவங்கள் நடந்தது....! இது தான் BUTTERFLY EFFECT ஆ??


சுறா, நான் விஜய் கிட்ட இருந்து ஒரு யதார்த்த சினிமாவோ
இல்லை உலக சினிமாவோ சத்தியமா எதிர்ப்பார்த்து இந்த
படத்துக்கு போகலங்க.ஓரளவுக்கு மசாலா அப்புறம் காமெடி
இருக்கும் என்று நினைத்தேன்....ஆனால் சுறா ப்ரையில்
மசாலா கொஞ்சம் ஓவர் ஆயிடுச்சு ப்ளஸ் சுறாவும் ஐஸ்
இல்லாம கெட்டு போச்சு.

சுறா - புட்டா?? லட்டா??

சரி கதைக்கு வருவோம்....விஜய் படத்தில் கதையா என்று
நீங்கள் டர்ராக வேண்டாம்.சும்மா மேலோட்டமா சொல்றேன்...
விஜய் ஒரு குப்பத்தில் தலைவர் ரேஞ்சில் இருக்கிறார் அந்த
குப்பத்தை வளைத்து போட்டு தீம் பார்க் கட்ட மந்திரி கில்
நினைக்கிறார்.ஆனால் விஜய் கில்லிடம் இன்னும் ஆறு மாசத்தில்
குப்பத்தில் வீடு கட்டி காண்பிப்பதாக சாவல் விடுகிறார். வீடு கட்ட
போறார்னு நீங்க விஜயை மேஸ்தரியோ இல்லை கொத்தனாரோ
என்று நினைத்து விட வேண்டாம். மந்திரி கில்லிடம் இருந்தே
பணத்தை எடுத்து...ஆஆவ்வ்......கண்ணை கட்டுதா...சரி ஸ்டாப்
பண்ணிக்கிறேன்!!

விஜய், மாஸ் ஹீரோ அப்படின்னு பார்ம் ஆயிட்டாரு.பக்கம்
பக்கமா வசனம் பேசி தள்ளுறார்,அதுவும் மக்களை பார்த்து
அவர் பேசும் வசனங்கள்...ஐயோ! ஆனா ஒரு விஷயம் கண்டிப்பா
சொல்லியே ஆகணும் ரியாஸ் கான் விஜயை அடிக்க கை ஓங்கும்
சீனும் அந்த வசனமும் மரண மாஸ்.ஆனா என்ன பல இடங்களில்
தளபதி போக்கிரி மேனரிசத்தை பின்பற்றி இருக்கிறார்.


யார்னு கண்டுபிடிங்க பார்க்கலாம்??

தமன்னா, வழக்கமா விஜய் படத்தில் வரும் நாயகி தான்.
பாடல் காட்சிகளில் மட்டும் உதவி இருக்கிறார்.பாட்டில் எல்லாம்
சின்ன trouser இல் வருகிறார் மற்றபடி பெருசா சொல்ல ஒண்ணுமில்லை.வடிவேலு, அண்ணே பயங்கர அவுட் ஆப் பார்மில்
இருக்கிறார் என்று மட்டும் தெரிகிறது. சில காட்சிகளில் மட்டும்
சிரிக்க வைக்கிறார் மற்ற காட்சிகளில் எரிச்சலே....!!

நாங்க பழைய படத்தை டி.வி.யிலோ இல்ல டி.வி.டி.யிலோ வாங்கி பார்த்துக்கறோம்னு டைரக்டர் கிட்ட சொல்லுங்கப்பா.... அரத பழசான காட்சிகளை தூசி தட்டி எடுத்து... ஏன்...??விஜய் தீடிர்னு அப்போ அப்போ மிமிக்ரி எல்லாம் செய்றாரு,அதுவும் கோர்டில் ஏதோ தீடிர்னு அசத்த போவது யார்னு பார்த்த மாதிரி இருந்துச்சி. வில்லனின் அல்லக்கையில் ஒருவராக வரும் இளவரசு வாயை திறந்தாலே விஜய் புகழ் பாடுகிறது(தலைவலிடா சாமி!!).தளபதி இந்த படத்திலும் நன்றாக பறக்கிறார் இதில் உச்சக்கட்டமாக மூன்று காட்சிகளில் பறந்து அடியாட்களை பொரட்டி எடுக்கிறார்.

படத்தில் ஒரு காட்சியில் விஜய் எஸ்.எம்.எஸ் காமெடியை வடிவேலு யூஸ் பண்ணிருப்பாரு... அதாவது இன்டெர்வல் விட்டாங்கன்னு வெளியே வந்தேன்ப்பா பயங்கர அடி என்று விஜய்யிடம் வடிவேலு சொல்லுவார்....ஏன் என்று விஜய் கேட்பார்.. நான் படம் பார்த்தது பஸ்சில் ஆச்சே என்று வடிவேலு கூறுவார்.

ஒரே சந்தோசம் அம்பது ரூபாயோடும் அலைச்சல் இல்லமாலும்
பார்த்தது தான்.காரணம் மாயாஜால் போலாம்னு நினைச்சோம்
ரெண்டு டிச்கேட்க்கு கிட்ட தட்ட மூண்ணுருக்கு மேல் மிச்சம்!!


இம்சை அரசன் இந்த படத்தை பார்த்து இருந்தா என்ன சொல்லி இருப்பாரு:

மக்களே உங்களுக்கு ஒரு நற்செய்தி...வாடா படம் வரவில்லையே என்ற ஆதங்கம் இனி இல்லை.ஆகையால் மக்களே சமாதி நிலை அடைய வாடா படம் வர்ற வரைக்கும் காத்திருக்க வேண்டாம்...
ஹ்ம்.. இப்போதே படையெடுங்கள் சுறா ஓடும் தியேட்டருக்கு!!

சுறா - சூர மொக்கை!!

தம்பி டீ இன்னும் வரல.....!!


இந்த விழிப்புணர்வு பல பேரை சென்று அடைய உங்கள் ஓட்டுகளை
தாறுமாறாக குத்துமாறு கேட்டுகொள்கிறோம்!!


ஜெட்லி....

57 comments:

Sangkavi said...

அவுட் ஆ...

மோகன் குமார் said...

கலக்கல் ஜெட்லி. பல நேரம் படங்களை விட உங்க விமர்சனம் நல்லா இருக்கு. நண்பர் கார்க்கியை நினைச்சா கவலையா இருக்கு

Ram said...

இருந்தாலும் நீங்க அசத்த போவது யார - நிகழ்ச்சி ய அசிங்க படுத்தி இருக்க வேணாம்., :( மன வருத்தமா இருக்கு :)

மோகன் குமார் said...

//Your comment has been saved and will be visible after blog owner approval.//


ஏன்????

Bala said...

superrrrrrrrrrr vimarsanam, Ana en thalivan sunder.c padam vaada VA kurai sonnathu entha tamilanum yethuka matan

Kannan said...

same blood.

Mrs.Menagasathia said...

அப்போ படம் புட்டுக்கிச்சா?????

தமிழ் வெங்கட் said...

ஜெட்லி...இதுக்கு வில்லே,வேட்டைகாரனே பராவாயில்லைன்னு சொல்லுங்க..நான் தப்பிச்சேன்...ஆனால் என் பையன் மாட்டிகிட்டான்..!

Siva Ranjan said...

super.. puttukicha...

பிரபாகர் said...

சுறா!

மொத்தத்தில் அவுட் என தெரிகிறது... விஜய், கடந்த சில படங்களாகவே பார்க்கல பாஸ்... உங்க படம் ஒன்னு பாக்கனும்னு ஆசையா இருக்கு... முயற்சி பண்ணுங்களேன்...

பிரபாகர்...

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

பதிவர்கள் கவனத்திற்கு - (எல் நீனோ EL NINO) !!! http://wwwrasigancom.blogspot.com/2010/04/16-el-nino.html

முகிலன் said...

எதிர்பார்த்த ரிசல்ட் தான்.. நன்றி ஜெட்லீ

ஜெட்லி said...

@ மோகன் குமார்


மிக்க நன்றி அண்ணே....
கார்க்கி தான் படத்தை நினைச்சு கவலைபடனும்....

ஜெட்லி said...

@ Sangkavi

சந்தேகமே இல்லை...

ஜெட்லி said...

@ Ram

மன்னிச்சுக்குங்க ராம்....இனிமே அது போல்
கம்பேர் செய்ய மாட்டேன்!!

ஜெட்லி said...

@ Bala

சரி சரி...ப்ரீயா விடுங்க பாஸ்.....

ஜெட்லி said...

@ Kannan

நீங்களுமா....

ஜெட்லி said...

@ Mrs.Menagasathia
@ Siva Ranjan

அப்படி தான் பேசிக்கிறாங்க.....

ஜெட்லி said...

@ தமிழ் வெங்கட்

அட விடுங்க வாலிப வயசு....இதெல்லாம் தூசு...

ஜெட்லி said...

@ பிரபாகர்

என் போட்டோவை இதுவரைக்கும் நீங்க பார்த்தது இல்லையா
அண்ணே....மெயில் பண்ணி வைக்கிறேன்.....
மற்றபடி வேற படமெல்லாம் கஷ்டம் தான்!!

ஜெட்லி said...

@ முகிலன்

நன்றி முகிலன்

Prasanna R said...

Allakai: Boss, boss....

Vijay: Ennada sappae?

Allakai: Unagalae ozhichukatate oru kootamae varudhu Jetli Saran blog padichuttu.

Vijay: Eduthu veiydaa Sura pada projectaraa ottuda adhae.

Allakai: Neengae oru vinyaniee boss

தமிழ் உதயம் said...

முன்னெல்லாம் கல்கில விமர்சனம் படிச்சிட்டு தான், ஒரு படத்துக்கு போறதா வேண்டாம்மான்னு முடிவு பண்ணுவேன். இப்போ உங்க விமர்சனத்தை பார்த்துட்டு முடிவு பண்றேன்.

டம்பி மேவீ said...

நல்ல வேளை நான் பிழைத்து கொண்டேன்....

சரி சரி ...ரசிய சிநேகிதி படம் பார்த்து சாந்தி அடையுங்க

சேட்டைக்காரன் said...

விமர்சனம் நல்லாயிருக்கு! நல்ல வேளை, படிச்சதாலே தப்பிச்சேன். :-))

ஜீவன்(தமிழ் அமுதன் ) said...

///கலக்கல் ஜெட்லி. பல நேரம் படங்களை விட உங்க விமர்சனம் நல்லா இருக்கு.//


sss...repeettu ;;)

On7June said...

super.... itha padichum naan sunday padatha paaka poraen.... :(

கே.ஆர்.பி.செந்தில் said...

//நல்ல வேளை நான் பிழைத்து கொண்டேன்....//


நானும்தான்

ரோஸ்விக் said...

சுறா (மீன்) அப்புடித்தான் கொலைவெரில கடிக்கும்னு உங்களுக்கு தெரியாதா ஜெட்லி... :-)

ரோஸ்விக் said...

போற போக்கைப் பார்த்தா விஜய் படத்துக்குப் போவியா போவியா-னு அவனவன் செருப்பால அடிச்சுக்கிரப் போறான் போல... :-))

Sri said...

super machi...aduthadhu marana mokkai thaan..

hasan said...

hi jetli, i like thAt rocket scene in this movie but yean anthamathiri yella scene-um illa?
pesama neyum nanum,love,comedy,extra-ordinary fightscene vendamnu VIJAY kitta MANU KODUKALAM...!
the dance steps vijay used in this movie were already done by ACTOR ALLUARJUN....SO, NO APPRECIATION FOR HIS DANCE...

அக்பர் said...

நானும் ஏதோ பஞ்சாப் சிங்குதான்னு நினைச்சேன். கெட்டப் சேஞ்ச் சூப்பர்.

நீங்க என்ன எழுதினாலும் நாங்க பார்த்தாகணும்.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

தலைவரே இந்தபடத்துல இருக்கிறது யாருன்னு கேள்விய கேட்டுப்புட்டீங்களே.. நானும் யாருடா இந்த குடுகுடுப்பக்காரன்ன்னு பார்த்தா நம்ம தளபதி.. என்ன கொடுமை இது ஜெட்லி....

Chitra said...

/////சுறா ப்ரையில்
மசாலா கொஞ்சம் ஓவர் ஆயிடுச்சு ப்ளஸ் சுறாவும் ஐஸ்
இல்லாம கெட்டு போச்சு.////


.......ஜெட்லி அவதாரின் எச்சரிக்கை ரிப்போர்ட் - வாசிப்பது - அந்த போட்டோவில் இருக்கும் மர்ம ஆசாமி. :-)

இளைய கவி said...

//சுறா - சூர மொக்கை!!

தம்பி டீ இன்னும் வரல.....!!
//

இந்த 2 வரி போதும் எதுக்கு இவ்வள்வு டைப் பண்ணீங்க ??? ரொம்ப நாள் கழிச்சு ஒரு நல்ல சந்தர்ப்பம் வாய்விட்டு சிரிக்க, என்ன கொடுமைன்னா இப்போ மணி அதிகாலை 4:38

chezhian said...

கேட்க ஆள் இல்லேன்னா

என்ன வேண்டும்னா சொல்லுறதா


பாருங்க வில்லு குருவி வேட்டைக்காரன் வரிசையில்

super hit

ஜெட்லி said...

@ Prasanna R

நல்ல கற்பனை....@ தமிழ் உதயம்

நிஜமாதான் சொல்றீங்களா??

ஜெட்லி said...

@ டம்பி மேவீ

உங்களுக்கு ரகசிய சிநேகிதி மேல் என்ன வெறி
நண்பா......நான் இந்த மாதிரி அட்டு படங்களை
பார்ப்பதில்லை....:))


@ சேட்டைக்காரன்

நீயே இப்படி சொன்ன எப்படிப்பா.....

ஜெட்லி said...

@ ஜீவன்(தமிழ் அமுதன்


நன்றி அண்ணே


@ On7June

போயிட்டு வாங்க தம்பி....
திங்கள்க்கிழமை போன் பண்ணி அந்த கொடுமையை
பகிர்ந்துக்குவோம்.....!!

ILLUMINATI said...

அப்பு,என்ன இதுக்கே இப்படி மலைச்சு போயிட்டிங்க?இன்னும் சுறாவ காக்க காவல்காரன் வரணுமே... :)

ஜெட்லி said...

@ கே.ஆர்.பி.செந்தில்

ஏதோ என்னால் முடிந்தது...நன்றி...


@ரோஸ்விக்

இல்லை..தெரிஞ்சி தான் போனேன்....ஆனா இந்த
அளவுக்கு இருக்கும்னு நினைக்கில அண்ணே....

வருங்காலத்தில் நீங்க சொல்ற மாதிரி தான் நடக்கும்னு
நினைக்கிறேன்.....இன்சூரன்ஸ் போட்டாலும் ஆச்சரியம்
இல்லை....

ஜெட்லி said...

@ Sri

நன்றி...அடுத்த படம் காவல்காரன் அதாவது பாடிகாட் ரீமக்
பார்க்கிற மாதிரி இருக்கும்னு நினைக்கிறேன்....சித்திக் மேல
நம்பிக்கை வைக்கலாம்....

ஜெட்லி said...

@ hasan

டான்ஸ் கூட காப்பியா...
தகவலுக்கு நன்றி நண்பா...


@ அக்பர்

கண்டிப்பா பாருங்க...சொல்லுங்க...

ஜெட்லி said...

@ Starjan ( ஸ்டார்ஜன் )

ஹா ஹா...நன்றி


@ Chitra

நடத்துங்க...

ஜெட்லி said...

@ இளைய கவி

நன்றி இளைய கவி....
படத்தின் பாதிப்பு மக்களுக்கு தெரிய வைக்கவே
முன்னே உள்ள வரிகள்...

ஜெட்லி said...

@ chezhian

ஹீ ஹீ....சூப்பர் டூப்பர் ஹிட் தான் பாஸ்...

புலவன் புலிகேசி said...

வழக்கம் போல மொக்கை..நான் இவன் படம் பாக்கறதே இல்ல...

King said...

அந்தோணி யார் படக் கதையும் இது தானே

பனங்காட்டான் said...

என் படத்த பாக்க முன்னாடி, ஒரு தடவைக்கு ரெண்டு தடவ யோசிங்க. அப்புறம் பாத்துட்டீங்கண்ணா யோசிக்க நீங்க இருக்க மாட்டிங்க!!!

கிரேட் எஸ்கேப்!

படத்த பாக்கமயே விமர்சனம் எழுதியிருந்தேன். பரவால்ல விஜய் காப்பாத்திட்டார்!

ஸ்ரீராம். said...

எச்சரிக்கைக்கு நன்றி. ஆனால் எச்சரிக்கைகள் எல்லாரையும் காப்பாற்றுவதில்லை...!

பின்னோக்கி said...

அடடா ! வேட்டைக்காரனே பராவாயில்ல போலயிருக்கே :)

sridharan said...

ஒரே மாதிரி நடிக்கவும் ஒரு talent வேணுமில்ல.........இனிமே vijay படம் பாக்குறது risk தான்....

It is a new Social site that combines *Facebook, Twitter, Youtube,Myspace, Linked-in and more...All on one page


It is Free to Join with this link http://Join.YourNight.com/srdhrn

ர‌கு said...

த‌ன‌க்கு தானே வ‌லி ஏற்ப‌டுத்திக்க‌ற‌து கூட‌ ஒரு போதை த‌ருமாம்...அந்த‌ வியாதி உங்க‌ளுக்கு இருக்குன்னு நினைக்கிறேன் ஜெட்லி...எதுக்கும் டாக்ட‌ர் விஜ‌ய்யை கான்டாக்ட் ப‌ண்ணுங்க‌ ;))

karthi said...

thank you

kanagu said...

/*சுறா - சூர மொக்கை!!*/

இதே தாங்க தோணுச்சு படத்த பாக்கும் போது ஒவ்வொரு சீனுக்கும்....

ஜெட்லி said...

பின்னூட்டம் ஈட்ட அனைவருக்கும் நன்றி....