Tuesday, April 6, 2010

ப்ளாக் அண்ட் வைட் ஜலகலகண்டர்!!

ப்ளாக் அண்ட் வைட் ஜலகலகண்டரின் தீர்க்கதரிசனங்கள்!!

நேத்து காலையிலே வழக்கம் போல தான் விடிஞ்சுது,வழக்கம்
போல அதை நான் பார்க்கவில்லை என்பது வேறு விஷயம்.
சரியா ஏழே காலுக்கு மணி என் செல் சிணுங்கியது.யார்ப்பா
அது தூக்கத்தை கெடுக்குறது என்று நினைத்தவாரே எடுத்தால்
நெருங்கிய நண்பன்.சும்மாவே மொக்கை போடுவான் இப்போ
காலையிலே வேற போன் பண்றானே ஏதாவது முக்கியமான
விஷயமா இருக்கும்னு நம்பி "என்னடா அர்ஜென்ட் மேட்டர்ஆ"
என்று கேட்டேன்.அடுத்து அவன் சொன்ன விஷயம் பயங்கர
சீரியஸ் மேட்டர்ங்க.....


அதாவது வர்ற 17 ஆம் தேதி முதல் செல்போன் எல்லாம் வேலை செய்யாது என்றான்.எனக்கு இந்த செய்தியை கேட்டவுடன் சந்தோசம் வந்தது அதாவது இனிமே யாருக்கும் மிஸ்ட் கால் கொடுக்க வேணாம், மாங்கு மாங்குனு forward msg அனுப்ப வேணாம் என்று நினைத்தேன்.


சரி இந்த விஷயத்தை யார் அவன்கிட்ட சொன்னதுன்னு கேட்டா
"அது சீக்ரெட்..செல்போன் வொர்க் ஆகலன்னா யார்னு சொல்றேன்"
அப்படினுட்டான்!!ஒருவேளை நாசாவில் இருந்து அவன் நண்பன் யாராவது சொல்லி இருப்பாங்களோ என்று நினைச்சேன்.... ஆனா அடுத்த செகண்ட்ஏ அதுக்கு வாய்ப்பில்லைன்னு புரிஞ்சுது காரணம் என் கூட இல்லை பழகுறான்!!

ஆகமொத்தத்தில் தூக்கத்தை கலைச்சு விட்டுட்டான்.அப்புறம்
திருப்பியும் கொஞ்சம் நேரம் கழிச்சு போன் பண்ணி "இன்னொரு
விஷயம் கூட சொன்னாருடா...". "என்ன 2012 ல உலகம் அழிய
போகுதா??" என்றேன். "அதை பத்தி அடுத்த வருஷம் சொல்றேன்
அப்படின்னு சொன்னாரு.....இது வேற,அதாவது இன்னும் ஒரு
மாசத்துல தமிழ்நாட்டில் பிரபலமானவங்க ஒருத்தர் செத்துடுவார்
அப்படின்னு சொன்னாரு டா...." என்றான்.

அப்பதான் எனக்கு கன்பார்ம் ஆச்சி நண்பன் ஏதோ ப்ளாக் அண்ட் வைட் ஜலகலகண்டரின் நாடி ஜோசியம் பார்க்க போயிருப்பான் என்று. போன வார பேப்பரில் கூடிய விரைவில் பத்து இலக்கு செல்போன் நம்பரை எல்லாம்
பதினோரு இலக்காக மாற்ற போகிறார்கள் என்று படித்தேன்.இங்கே ஏதோ ஒரு ஜலகலகண்டர் என்னன்னா போன் வொர்க் ஆகாது என்று அருள் வாக்கு கொடுத்து இருக்கிறார்..பார்ப்போம்!!ஆனா அவர் சொன்ன மாதிரி போன் வொர்க் ஆகலைனா சந்தோஷப்பட கூடியவர்களில் இளைய தளபதி விஜயும் ஒருவராக இருப்பார்.காரணம் உங்களுக்கு தெரியாதது அல்ல, சுறா படம் வேற வருது பல forward msg வரும்.....வேற ஒன்னும் சொல்றதுக்கு இல்ல....!!


ஏப்ரல் பூல் பண்ண யாராவது சொல்லி இருப்பாங்கப்பா....நீ வேற ஏற்கனவே கோவா விளம்பர மேட்டரில் நல்லா முட்டாள் ஆயிட்டே என்று நீங்கள் நினைத்தால் நான் சொல்வதருக்கு ஒன்றுமில்லை.கோவா விஷயத்தில் நான் எப்போவோ முட்டாள் ஆயிட்டேன் அது ஏற்கனவே அவங்க போட்ட விளம்பரம் "வெற்றிகரமாக ஓடிக்கொண்டிரிக்கிறது"!!

***********************************************

"ஹோ...கில்மா ஜே ரவ" !!


ஜெட்லி

13 comments:

Chitra said...

ஸ்ஸ்ஸ்ஸ்...... அப்பாஆஆஆஆ........ முடியல....... நீங்க கோவா படத்துக்கு காசு கொடுத்து பார்த்து ஏமாந்து நொந்த ஆளு, விளம்பரம் எல்லாம் ஜுஜுபி........ சரிதானே.......

அக்பர் said...

அப்படியா பாஸ்.

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

நீங்க அதிகமா யோசிக்கிறீங்க போங்க !

வடிவேலன் ஆர். said...

ரொம்பவே அடிபட்டிங்க போல தல

Yoganathan.N said...

//ஆனா அடுத்த செகண்ட்ஏ அதுக்கு வாய்ப்பில்லைன்னு புரிஞ்சுது காரணம் என் கூட இல்லை பழகுறான்!!//

ஹிஹிஹி... சரி, உலகம் உண்மயிலே அழியப் போகுதா பாஸ்... நான் இன்னும் எதயுமே அனுபவிக்கல, அதான் கேட்டேன்... :P

துபாய் ராஜா said...

"உன்னைப் பற்றி சொல். உன் நண்பர்களைப் பற்றி நான் சொல்கிறேன்." என்ற பொன்மொழி நினைவிற்கு வந்தது. :))

ஜெட்லி said...

@ சித்ரா...

சரிதான்....

ஜெட்லி said...

@ Yoganathan.N

இன்னைக்கே கவுன்ட்டவுன் ஸ்டார்ட் பண்ணுங்க பாஸ்...

கார்த்திகைப் பாண்டியன் said...

தம்பி.. ஒரு தொடர்பதிவு எழுத கூப்பிட்டு இருக்கேன்.. கொஞ்சம் என்னன்னு பாருங்க..:-)))

ர‌கு said...

விடுங்க‌ ஜெட்லி, 'த‌ம்பிக்கு இந்த‌ ஊர்'லாம் பாத்தீங்க‌, அதுக்கு 'கோவா'ல‌ கிடைச்ச‌ அடி கொஞ்ச‌ம் க‌ம்மிதான்னு நினைக்கிறேன் ;)

ILLUMINATI said...

Hi friend,it seems that the legacy continues...... :)

விக்னேஷ்வரி said...

:)

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

நல்லா ஏமாந்துட்டீங்க போங்க..

நன்றி..