Wednesday, April 14, 2010

வாடா - உலக சினிமாவுக்கு ஒரு சவால்!!

வாடா - ஒரு முன்னோட்டம்.

"வாடா" அப்படின்னு ஒரு படம் வர்ற வெள்ளிக்கிழமை ரீலீஸ்
ஆக போகுதுங்க.கடந்த ரெண்டு வாரமாவே பேப்பர்இல் விளம்பரம்
வந்துகிட்டுருக்கு.என்னது வடைனு வச்சிருந்த டீ கடைக்கு வர்ற
கூட்டமாவது வந்திருக்குமா....??
ஹலோ படம் ரீலீஸ் ஆகட்டும், நைட் ஒன்பது மணிக்கு டாஸ்மாக்ல பின்னுர கூட்டம் மாதிரி பிச்சுக்க போகுது பாருங்க.....!!

(கிழே இருக்கும் படத்தை பார்த்து மெரசல் ஆனால் கம்பெனி
பொறுப்பல்ல.....எனக்கு ஒரு டவுட் தான் இந்த படத்தில் சுந்தர்.சி
அவர்கள் எத்தனாவது கிரில் வண்டி ஓட்டுகிறார்?? தெரிந்தவர்கள்
சொல்லவும்)இந்த படத்தின் மீது எனக்கு எப்படி ஈர்ப்பு வந்ததுன்னா....மர்மதேசம் படம் பார்க்க வூட்லண்ட்ஸ் தியேட்டருக்கு போனேன்.படம் முடிஞ்சு வெளியே வரும் போது தான் வாடா படத்தின் ஸ்டில்லை வாசல்ல கவனிச்சேன்...
அப்பதான் முடிவு பண்ணேன் இந்த படத்தை மிஸ் பண்ண கூடாதுனு.உடனே அங்கே நின்ன செக்யூரிட்டியிடம் "அண்ணே வாடா படத்துக்கு எப்பணே ரிசர்வ் ஸ்டார்ட் பண்ணுவீங்க??" என்று கேட்டேன்.அவர் என்னை டெர்ரர்ஆக
பார்த்து வேறு பக்கம் திரும்பி கொண்டார்."இந்தாங்கணே 200 ரூவா எனக்கு வெள்ளிக்கிழமை ஒரு அஞ்சு டிக்கெட் எடுத்து வச்சிக்கிங்க,கண்டிப்பா வருவேன்"என்று அங்கிருந்து கிளம்பினேன்.


இப்ப என்ன பிரச்சனைனா நண்பர்களை படத்துக்கு கூப்பிட்டா
ஒருத்தன் என்னனா எங்க ஆயா வுட்டுக்கு போறேன், இன்னொருத்தன் என் நட்பே வேணாம்னு போய்ட்டான்.....மச்சி நீ வாடா,மாமே நீ வாடா என்று யாரை கூப்பிட்டாலும் எஸ் ஆகி போகிறார்கள்.அதுக்கு அப்புறம் யாரையும் கூப்பிடல. நாலு டிக்கெட் எக்ஸ்ட்ரா இருக்குங்க...கவுண்டர்லலாம் டிக்கெட் கிடைக்காது எல்லாமே பல்க் புக்கிங் பண்ணீட்டாங்க.அதனால யாருக்காவது இந்த காவியத்தை பார்க்கனும்னு தீடிர்னு தோணிச்சுனா என்னை காண்டக்ட் பண்ணுங்க.

வாடா அப்படின்னு மரியாதை இல்லாம டைட்டில் வச்சா எவன் தியேட்டருக்கு வருவான் அப்படின்னு நீங்க நினைக்கிறது தப்பு."வாடா"வின் அர்த்தம் நாயகி நாயகனை பார்த்து வாடா என்று அன்பாக கூப்பிடவதாக இருக்கும் என்று ஸ்டில்லை பார்த்து நினைத்தேன் ஆனால் ட்ரைலரை பார்த்தவுடன் தான் தெரிந்தது அப்படி இல்லை என்று.சுந்தர் அவர்கள் வில்லனை வாடா வாடா என்று பெண்டு எடுப்பார் என்று தெரிகிறது.


நிறைய நண்பர்களுக்கு விண்ணை தாண்டி வருவாயா படம் பார்த்த அன்னைக்கு தூக்கம் வரலன்னு சொன்னாங்க.நான் வாடா படத்தின் ட்ரைலரை பார்த்ததில் இருந்து தூக்கம் அடியோடு போச்சுங்க!!
ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு பீலிங்க்ஸ்!!
அதுவும் கடைசியில் பைக் மேல... முடியல....நீங்களும் முடிஞ்சா பாருங்க....வாடா படத்தின் சிறப்பம்சங்கள் சில:


# படத்தை பார்க்காம நாம எந்த ஒரு தப்பான முடிவுக்கும் வர
கூடாது.ஆனா இந்த படத்தை பத்தி முடிவு பண்ண அந்த பைக்
சீன் ஒன்னு போதும்னு நினைக்கிறேன்.இந்த படம் குவாட்டர்
அடித்து செல்ல சிறந்த படம் என்று டாஸ்கர் குழுவால் பரிந்துரை
செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

# மேலும் வாடா படம் கண்ணம்மாபேட்டை சுடுகாடு பிலிம் பெஸ்டிவலில் திரையிட தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல்.வாடா படத்துக்கு இதை விட ஒரு சிறப்பான அறிமுகம் கிடைக்காது என்று ஊருக்குள் பேசி கொல்கிறார்கள்.


# நீண்ட நாட்கள் கழித்து தமிழ்சினிமாவில் வாடா படத்தில் தான் போட் சேசிங் காட்சிகள் வருகின்றனவாம்.அந்த காட்சியை கேரளாவில் உள்ள அளப்பியில் எடுத்து உள்ளனர்.அந்த காட்சிகளை பார்ப்பவர்களுக்கு மயிர் கூச்சரியலனாலும் வேற ஏதாவது கூச்சரிய வாயிப்பிருக்கு!! தலைவலியை சொன்னேன்ங்க....


# சுந்தர்.சி அவர்கள் இந்த படத்தில் கெட்-அப் மாற்றியுள்ளார்...
அட நீங்க வேற சூப்பர் பாக்கு கலரில் ப்ளீச் செய்து இருக்கிறார்னு
சொன்னேன்ங்க.

# மேல உள்ள ஸ்டில்லை பார்த்தாலே இது ஒரு வித்தியாசமான படம்னு உங்களுக்கு புரிஞ்சுருக்கும்...எப்படினா எப்பவும் தமிழ்சினிமாவில் ஹீரோ மட்டும் தான் கோலி மேல காலை வச்சி ஹீரோயினி மேல உழுவார் ஆனா இதில் கூடவே காமெடியனும் சேர்ந்து விழுவுது தான் படத்தின் சிறப்பு!!

# வாடா படம் உலகப்படங்களுக்கு இணையாக எடுத்து உள்ளனர் என்று ஏதோ ஒரு வட்டம் தெரிவிக்கிறது.அதிலும் மொக்கை போட
விவேக் இருப்பது படத்துக்கு கூடுதல் பலம்.நாயகி படம் முழுவதும்
தாராள கொள்கையை கடைப்பிடிப்பார் என்று கண்டிப்பாக எதிர்ப்பார்க்கலாம்.திரும்பவும் சொல்றேன் போனா வராது வந்தா போகாது கடைசி நாலு டிக்கெட் தான் இருக்கு கடைசி நாலு டிக்கெட் தான் இருக்குது.வாடா என்ற மெகா அதிரடி காவியத்தின் நாலு டிக்கெட் எக்ஸ்ட்ரா இருக்கு. விருப்பமுள்ளவர்கள்
மற்றும் வாழ்வில் வெறுப்படைந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.யார் முதலில் வருகிறார்களோ அவர்களுக்கு டிக்கெட் அளிக்கப்படும்.கடைசி நேரத்தில் டிக்கெட் கேட்பதை தவிர்க்கவும்.


வாடா படத்தை டாவா பார்க்க சீக்கிரம் அணுகவும்.....!!

வாருங்கள் வாடா படத்தை பார்ப்போம் சமாதி நிலையை அடைவோம்!!


வாடா படத்தின் முன்னோட்டத்தை உங்களுக்கு அளித்தது என் வாழ்நாள் பாக்கியமே. இந்த விழிப்புணர்வு மேலும் பல பேரை சென்று அடைய ஒட்டு போடவும்.மேலும் இந்த உலகப்படத்தை பற்றி டவுட் ஏதேனும் இருந்தால் பின்னூட்டத்தில் தெளிவுப்படித்தி கொல்லவும்


ஜெட்லி.....

50 comments:

Sukumar Swaminathan said...

ஹை. தல நாந்தான் பார்ச்ட்டு.. எனக்கு ஒரு டிக்கட்டு...

ஈரோடு கதிர் said...

எதுக்கும் சுந்தர்.சி ய ட்ரை பண்ணிப்பாருங்களேன்...

அண்ணாமலையான் said...

எதுக்கும் கெவருமெண்டு ஆஸ்பத்திரி பக்கம் போ ராசா.. எதாச்சும் இஸ்த்துக்கினு கெடக்கற பேசண்ட்டுக்கு மோட்சம் வாங்கி கொடுத்த புன்னியமாது கெடைக்கும்

Anbu said...

அண்ணே..எனக்கு ஒரு டிக்கெட் தாங்க..

வால்பையன் said...

காசை வெட்டி போட்டு நட்பை முறிச்சிக்கலாம்!

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
This comment has been removed by the author.
♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

எப்படி இப்படியெல்லாம் . கலக்கல்

ஜெட்லி said...

@Sukumar Swaminathan

உங்க தைரியம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணே....
கூடிய விரைவில் உங்களை காண்டக்ட் பண்றேன்...

ஜெட்லி said...

@ ஈரோடு கதிர்

அட நீங்க வேற அண்ணே....
அவருக்கே இந்த படம் எப்போ நடிச்சதுன்னு தெரியலையாம்.....

ஜெட்லி said...

@ அண்ணாமலையான்

நல்ல ஐடியா....ட்ரை பண்றேன்...!!

ஜெட்லி said...

@ Anbu


வா வா அன்பு...ரெடியா இருக்கு...

அஹமது இர்ஷாத் said...

ரொம்ப மரியாதயான படம்...

ஜெட்லி said...

@ வால்பையன்

சரி விடுங்க அண்ணே...வாடா போக வேணாம்...

ஜெட்லி said...

@ ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said


எல்லாம் அவன் செயல்....

@ அஹமது இர்ஷாத்

ஆமாம் ஆமாம்....

ர‌கு said...

ஆனாலும் உங்க‌ளுக்கு தைரிய‌ம்தான்....ப‌ட‌ம் பாத்த‌துக்க‌ப்புற‌ம், இந்த‌ ப‌ட‌த்துக்கா கூப்புட்ட‌ன்னு ம‌த்த‌ நாலு பேரும் உங்க‌ளை சாத்த‌க்கூடாதுன்னு எல்லாம் வ‌ல்ல‌ 'மேதை'யை வேண்டிக்கொள்கிறேன் ;)

Chitra said...

First Red Alert - poster
Second Red Alert - trailer
Third Red Alert - title
Fourth Red Alert - pose/still from the movie..........
நீங்கள் எல்லோரும் படம் பார்க்கும் முன்னே, எனது அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறேன்.

♠ ராஜு ♠ said...

படத்தப் பார்த்துட்டு வெளிய வாங்கண்ணே.. அப்புடியே றெக்கை கட்டி பறக்குற மாதிரி இருக்கும்.

ஜெட்லி said...

@ர‌கு

வேண்டிக்கோங்க ரகு....
அப்படியே படத்துக்கும் வந்துடுங்க...

ஜெட்லி said...

@ Chitra

படம் பார்க்கறதுக்கு முன்னாடியேவா....

ஜெட்லி said...

@ ♠ ராஜு ♠

பையா படம் வசனமா.....
பார்ப்போம்

MANO said...

அண்ணே... எனக்கு ஒரு டிக்கெட்.

மனோ

துபாய் ராஜா said...

தங்களுக்கும்,குடும்பத்தாருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு மற்றும் சித்திரை விசு திருநாள் நல்வாழ்த்துக்கள்.

பின்னோக்கி said...

வழக்கமா, படம் ரிலீஸ் ஆன பின்னாடிதான் துவைச்சு காய வைப்பீங்க. இப்ப படம் ரிலீஸ் ஆகுறத்துக்கு முன்னாடியேவா ??.. பாவங்க சுந்தர் :)

சேட்டைக்காரன் said...

வாடா படத்தைப் பற்றி சற்றும் வாடாமல் வதங்காமல் நீங்கள் எழுதியிருக்கிற பதிவைப் படித்ததும் இதைப் பார்க்காமல் இருப்பதற்கு விஜயவாடாவுக்கோ, பெஜவாடாவுக்கோ ஓடினால் என்ன என்று தோன்றியது. :-))

புலவன் புலிகேசி said...

குஷ்பு வர்றாங்களான்னு கேட்டுப் பாருங்க ஜெட்லி...

மோகன் குமார் said...

ஜெட் லி இன்னிக்கு செம பார்ம்ல இருக்கீங்க; சிரிச்சு முடியலை; இதே மாதிரி நிறைய பதிவுகள் காமடி கலந்து எழுதவும்; அட்டகாசம்

வானம்பாடிகள் said...

இப்பல்லாம் பட வரமுன்னையே கமுக்க ஆரம்பிச்சாச்சா:)). நடத்துங்க

G.D.Aswin said...

kandipa first day first show pa...

sem exam ah bunk adichitu po poren

டம்பி மேவீ said...

தல எந்த தியேட்டர்ன்னு சொல்லுங்க ...நான் அங்கே ஆஜர்

அக்பர் said...

கண்டிப்பா படம் பார்த்தே ஆவணும்.

அமிர் said...

வீட்டுக்கு ஒரே புள்ளைன்னே...வேணாம்னே

ILLUMINATI said...

அது என்ன கணக்கு பாஸ்......
தூக்கிட்டு...... ச்சே ச்சே...... துணைக்கு நாலு பேர்?சும்மா,ஜெனரல் நாலட்சுக்கு கேட்டேன்.....
:)

ramalingam said...

போடா. ஸாரி பாஸ் உணர்ச்சிவசப்பட்டுட்டேன்.

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

i think

வா = வருத்தபடாத வாலிபர் சங்கம்

டா = டாவடிபோர் சங்கம்

(எதோ என்னால முடிஞ்சது )

ஜெட்லி said...

@ MANO

நிசமா வரீங்களா??


@துபாய் ராஜா

வாழ்த்துக்கள் அண்ணே

ஜெட்லி said...

@ பின்னோக்கி

நானா அப்படி பண்ணுவேன்....
படத்தை பார்த்து வேற விமர்சனம் பண்ணனுமா??@சேட்டைக்காரன்


பதிவுக்கேவா....?? நாமெல்லாம் கலங்ககூடாது நண்பா

ஜெட்லி said...

@ புலவன் புலிகேசி

கண்டிப்பா வரமாட்டங்கனு நினைக்கிறேன்...:)))@ மோகன் குமார்

பாராட்டுக்கு நன்றி அண்ணே.....
நான் அதை தான் ட்ரை பண்றேன்...

ஜெட்லி said...

@ வானம்பாடிகள்

வேற என்ன பண்றது ஐயா....
எல்லாம் ஒரு எச்சரிக்கை மணி தான்!!


@ G.D.Aswin

அஸ்வின்...எக்ஸாம் நல்லப்படியா எழுதுப்பா...

ஜெட்லி said...

@ டம்பி மேவீ

வூட்லண்ட்ஸ் தான் நண்பரே...

ஜெட்லி said...

@ டம்பி மேவீ

வூட்லண்ட்ஸ் தான் நண்பரே...

ஜெட்லி said...

@ அக்பர்

ஆமா ஆமா...பார்க்கணும்..

ஜெட்லி said...

@ அமிர்

அப்ப சரி...அதுவும் நல்லது தான்....

ஜெட்லி said...

@ ILLUMINATI

நான் எதுக்கோ எழுதுனேன்...நீங்க என்னவோ
கணக்கு பண்றீங்க....

ஜெட்லி said...

@ ramalingam

இப்படியெல்லாம் உணர்ச்சிவசப்பட்டு தியேட்டர் பக்கம்
போய்டாதிங்க...!!


@உலவு.காம்

உங்கள் சேவைக்கு நாட்டுக்கு தேவை நண்பரே.....

ஜாக்கி சேகர் said...

இப்ப என்ன பிரச்சனைனா நண்பர்களை படத்துக்கு கூப்பிட்டா
ஒருத்தன் என்னனா எங்க ஆயா வுட்டுக்கு போறேன், இன்னொருத்தன் என் நட்பே வேணாம்னு போய்ட்டான்.....மச்சி நீ வாடா,மாமே நீ வாடா என்று யாரை கூப்பிட்டாலும் எஸ் ஆகி போகிறார்கள்.//

எப்படியும் உங்கள் முயற்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்...

முகிலன் said...

மரண மொக்கைப் படமா இருந்தாலும் தைரியமாப் போயி பாத்துட்டு வர்ற ஜெட்லீக்கே இந்த கதின்னா, நம்ம கதியை எல்லாம் கற்பனை கூட செஞ்சி பார்க்க முடியலையே/

கடைக்குட்டி said...

உங்க ட்ரைலர் நெம்ப டரியலா இருகே ஜெட்டு.... :-)

பருப்பு said...

அய்யா ஜெட் லீ அவர்களே,

உங்களையெல்லாம் என் மானஷீக குருவா நெனச்சு யாரு கிட்டயும் சொல்லாம கொள்ளாம ஒரு வலைப்பதிவ ஆரம்பிச்சிருக்கேன்..என் அழைப்பை ஏற்று மறுக்காம நீங்க வந்து நான் பிரபல பதிவராக ஐடியா கொடுக்கணும்

என் முகவரி http://cute-paruppu.blogspot.com/

அழைப்பிதழை புறக்கணிப்போர் மீது சட்டப்படி ஒன்னும் பண்ண முடியாது...அதனால வந்துரங்களேன்

என்றும் என்றென்றும் அன்புடன்
சிஷ்யன் பருப்பு
கத்தார்

DREAMER said...

//மேலும் வாடா படம் கண்ணம்மாபேட்டை சுடுகாடு பிலிம் பெஸ்டிவலில் திரையிட தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளது.//
எதுக்குங்க, படத்தை பாத்துட்டு, அப்படியே குழிதோண்டி உள்ளே படுத்துக்கவா..?

//நாயகி படம் முழுவதும்
தாராள கொள்கையை கடைப்பிடிப்பார்.//
கடைசியா நீங்க போட்டிருக்கிற படத்துலே மூணு பேரோட பளுவையே தனியாளா தாக்குபிடிக்கிறார், இதில்லாம தாராள கொள்கையை கடைப்பிடிப்பது கூடுதல் விஷயம்தான்...

உங்களிடம் டிக்கெட் வாங்கப்போகும், அந்த நாலு பேருக்கு நன்றி..!

-
DREAMER

யாசவி said...

உங்களுக்கு சுந்தர் சீ பிடிக்காதா?

வாடா உங்கள் வாயை அடைக்கும் !!!


இவண்

அகில உலக சுந்தர் சி ரசிகர் மன்னிக்க நற்பணி மன்றம்

சிங்கை கிலை