Monday, April 26, 2010

சுறா எக்ஸ்க்ளுசிவ் காட்சிகள்.

சுறா காட்சிகள் ஒரு கற்பனை.

டிஸ்கி:


விஜய்க்கு இருக்குற மாஸ்க்கு இப்படிப்பட்ட காட்சிகள் தான் அவுருக்கு வேணும் என்பது என் ஆசை.மற்றபடி விஜய் அல்லது அவர் ரசிகர்களை கோபப்படுத்த எழுதுவில்லைன்னு சொன்னா நம்பவா போறீங்க.....
சரி நாம சுறாவுக்கு போவோம்....!!

*****************************************


இடம்: ஸ்ரீ ஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம்.

HSLV TFC3 என்ற ராக்கெட்டை மூன்று வருடம் கஷ்டப்பட்டு உருவாக்கி விண்ணில் விட காத்து இருக்கின்றர் நம் நாட்டு விஞ்ஞானிகள். இன்னும் ராக்கெட் விட பத்து நிமிஷம் இருக்கு நாம அதுக்குள்ள விஜய் இன்ட்ரோ
சீன் பார்த்துட்டு வந்துடுவோம்.

இடம்: பழவேற்காடு பீச்

ஊரே ஒட்டு மொத்தமா பீச்சில் காத்து இருக்கிறார்கள்.அப்படியே
கடலுக்கு போகஸ் பண்றோம்.அங்கே ஒரு சின்ன கட்டுமரத்தில்
வடிவேலு "என்னயா இவன் எறா புடிச்சிட்டு வரதுக்கு இவ்ளோ
நேரம் ஆகுது" என்று அலுத்து கொள்கிறார்.அப்படியே கடலுக்கு
அடியில் போறோம்.அங்கே ஒரு 30 அடி சுறா ஒன்னு விஜயை
தாண்டி போகுது.விஜய் அதை ப்ரீயா விட்டுட்டு பின்னாடி வர்ற
சின்ன சுறாவோட சண்டை போடுறாரு.கடைசியில் பார்த்தா அது
சின்ன பசங்க யாரோ பீச்சில் விளையாடிட்டு விட்டுட்டு போன சுறா
பலூன் பொம்மை.இருந்தாலும் ஒபெநிங்காக விஜய் அசால்ட்டா
எந்த வித பில்ட்-அப்பும் இல்லாம சுறாவை தோள் மேல்
போட்டு கொண்டு கரைக்கு வருகிறார்.ஆனா இன்ட்ரோ
சாங் உண்டு அதனால .ரசிகர்கள் யாரும் டென்ஷன் ஆக
வேண்டாம். நாம அதுக்குள்ள அங்கே போயிட்டு வந்துருவோம்.
**************************************

மறுபடியும் இடம் :ஸ்ரீ ஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம்.


ராக்கெட் விட்டு நுப்பது செகண்ட் கழித்து.....

"ஹோ ..மை காட்" என்று தலைமை விஞ்ஞானி நாசர் தலையில் அடித்து கொள்கிறார்.அருகில் இருக்கும் அவரது உதவியாளர் தமன்னா "என்ன சார் ஆச்சு??" நாசர் கண்ணாடியை கழற்றி "ராக்கெட்க்கு பெட்ரோல் போட மறந்துட்டேன்மா அது இன்னும் மூணு நிமிஷத்தில் கடலில் விழுந்துரும், நேத்து நைட் என் காரில் பெட்ரோல் இல்லைன்னு கொஞ்சம் ராக்கெட்இல் இருந்து எடுத்தேன்.. " '"அய்யோயோ" என்று கதறுகிறார் தமன்னா."இந்த ப்ராஜெக்ட் மட்டும் தோல்வி அடைஞ்சா நம்ம நாட்டுக்கே பெரிய அவமானம் ஆயிடும்" "சார் நீங்க ஒன்னும் கவலைப்படாதிங்க என் ஆளு பழவேற்க்காட்டில் தான் இருக்கார்...அவர் சுறா மாதிரி நம்ம பிரச்சனையை சால்வ் பண்ணிடுவார்".


இன்ட்ரோ பாட்டு முடிந்தவுடன்.தமன்னா விஜய்க்கு போன் பண்ணி ராக்கெட் மேட்டரை கூறியவுடன் பழவேற்காடு ஏரியா சலசலக்கிறது.
ஊரே கூடி நிற்கிறது நடுவில் நம்ம தளபதி விஜய் அவர்கள் பேச
ஆரம்பிக்கிறார்.....

" நம்ம நாட்டு விஞ்ஞானிங்க செய்ஞ்ச ராக்கெட் பெட்ரோல் இல்லாம
கடலில் விழ போகுதாம்...அந்த ராக்கெட் விலை எவ்ளோ தெரியுமா
300 கோடி"....

"300 கோடியா" என்று வாய்பிளக்குறார் வடிவேலு.

தொடர்ந்து விஜய் "நாம 50,000க்கு புது வண்டி வாங்கினாலே
ஓட்டறதுக்கு முன்னாடி அதை போய் சென்ட்ரல் எதிரே இருக்கிற
பாடிகாட் முனிஸ்வரன் கோயில்ல கொண்டு போய் பூஜை போட்டு தான் எடுக்குறோம், ஆனா நம்ம நாட்டு விஞ்ஞானிங்க 300கோடிக்கு வண்டி செய்ஞ்சிட்டு பாடிகாட் கோயில்ல பூஜை போடாம ராக்கெட்டை விட்டா எப்படி போகும்னு கேக்குறேன்..."

"அப்படி கேளு ராசா" என்று ஒரு கிழவி கைத்தட்ட ஆரம்பித்தவுடன் சுத்தி நிக்கும் கூட்டம் விண்ணை பிளக்க கைதட்டுகிறது....

மேலும் விஜய் "அப்புறம் நம்ம கிட்டவந்து காப்பாத்துனா எப்படி?,
இதுக்குதான்........"

அப்போது ஒரு சிறுவன் வீட்டுக்குள் சென்று விஜய் மேலும் மொக்கை போடுவதை நிறுத்த அடுத்த வாரம் தீபாவளிக்கு வாங்கி வைத்திருந்த பட்டாசுகளில் இருந்து நாலு ராக்கெட்டை எடுத்து வருகிறான்..

"இந்தாங்க மாமா என்னால முடிஞ்சது' என்று அந்த சிறுவன்
நாலு தீபாவளி ராக்கெட்டையும் விஜயிடம் கொடுக்கிறான்.
விஜய் அவனை கட்டிபிடித்து "யாருக்கும் வராத ஐடியா உனக்கு
வந்திருக்கு"... உடனே சுத்தி நின்ன எல்லோரும் அவர் அவர்
வீட்டுக்குள் சென்று ஆளுக்கு நாலு ராக்கெட் எடுத்து வந்து
விஜயிடம் கொடுக்கிறார்கள்.

ஆகமொத்தம் நூறு தீபாவளி ராக்கெட்டை முதுகில் கட்டி கொள்கிறார் நம்ம விஜய். அப்புறம் கெட்-அப் சேன்ஜ்க்காக நெற்றியில் சிகப்பு கர்சீப்பை கட்டி கொள்கிறார். அதுதவிர நிஜ ராக்கெட்டில் பெட்ரோல் நிரப்ப இருபது லிட்டர் பெட்ரோல் கேனையும் எடுத்து கொள்கிறார்.முதுகில் இருக்கிற ராக்கெட்
அந்த சிறுவனால் பற்ற வைக்கப்படுகிறது.


விஜய் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட்டை சேஸ் பண்ணி கொண்டு மேல
பறக்கிறார். ராக்கெட் பக்கத்தில் விஜய் போனவுடன் கையில் இருக்கும் பெட்ரோல் கேனின் மூடியை கழற்றி ராக்கெட்டில் உள்ள பெட்ரோல் டேங்கை சுத்தியும் முத்தியும் ரெண்டு ரவுண்டு அடித்து தேடுகிறார். ஆனா பாருங்க ராக்கெட்டில் எங்கே பெட்ரோல் டேங்க் இருக்குனு தெரியல......!!ராக்கெட் வேற பெட்ரோல் இல்லாம சாய ஆரம்பிக்குது, தளபதி என்ன பண்ணலாம்னு யோசிக்கிறார். உடனே நெற்றியில் இருந்து சிகப்பு கர்சீப்பை எடுத்து ஒரு முனையை ராக்கெட் தலையில் உள்ள சின்ன கிளாம்பில் கட்டுகிறார். கர்ச்சீப்பின் மறுமுனையை வாயில் வைத்து பல்லால் கடித்து கொண்டு ராக்கெட்டை டோ (tow) செய்து கொண்டு போகிறார்.இங்கே தான் கேமராவை நாலு ரவுண்டு சுத்தி விஜய் ராக்கெட்டை டோ பண்ணிட்டு போறதை காட்றோம். அப்படியே டோ பண்ணிட்டே விண்வெளி வரை போய் ராக்கெட்டை பத்திரமாக விட்டு வருகிறார்.


இங்கே ஸ்ரீஹரி கோட்டாவில் ராக்கெட் வெற்றிகரமாக பயணம் முடித்ததற்கு ஆள் ஆளுக்கு கட்டி பிடித்து கொள்கிறார்கள்.நம் விஞ்ஞானிகள் மற்றும் நாட்டின் மானத்தை காப்பாற்றுகிறார் இளைய தளபதி டாக்டர் விஜய்!!

இது தான் சுறா மாஸ்....

(உங்கள் குரல்: முதல்ல கர்சீப்பை தடை செய்யுங்கப்பா......)

தடை செய்ஞ்சா, அப்புறம் எப்படி விஜய் தலைக்கு தொப்பி
போட்டுட்டு முட்டிக்கு கிழே கர்சீப் கட்டிட்டு வில்லு படத்தில்
வர்ற மாதிரி மாறுவேஷத்தில் வில்லன்களை வேட்டையாட
போவாரு...??

உங்களுக்கு இந்த இடுகை பிடித்திருந்தால் தாறுமாறாக ஓட்டும்
பின்னூட்டமும் குத்தவும் என்று கேட்டு கொள்கிறேன்.


நன்றி : indiaglitz

ஜெட்லி....(சரவணா....)

50 comments:

Chitra said...

என்ன கொடுமை சரவணா, இது? ஹா,ஹா,ஹா,ஹா......

jodhi said...

mass hero dr.vijay rockzzzz

பிரபாகர் said...

தம்பி,

காலையில சிரிக்க வெச்சி வயித்துவலி வர வெச்சிட்டீங்க!

பிரபாகர்...

dondu(#11168674346665545885) said...

என் கணினி குரு முகுந்த அனுப்பிய மின்னஞ்சல் கீழே.

கதைப்படி விஜய்க்கு ஒரு சீன நண்பர் உள்ளார். அவர் ஒரு விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரை சந்திக்க விஜய் மருத்துவமனை செல்லும் போது சீன நண்பர் விஜய் காதில் "நிக் மா கியா கிஹ் மியா கியா மங்க் ஷங்க் டா கங்க்" எனச் சொல்லிவிட்டு இறந்து போகிறார். விஜய் இதற்கு அர்த்தம் கண்டறிவதற்காக சுறா போல் சீனாவுக்கு கடலில் சைக்கிளில் செல்கிறார். வழியில் இன்னொரு சைக்கிளில் வரும் தம்மன்னாவை சந்திக்கிறார். வழியில் 6 பாட்டு 3 பைட்டு போடுகிறார். கடைசியில் கிளைமாக்ஸில் சீன நண்பர் இறக்கும் போது சொன்ன வார்த்தைகளின் அர்த்தத்தை கண்டுபிடிக்கிறார். அது என்னவென்றால்

"அட நாயே ஆக்சிஜன் டியூப்பிலருந்து கைய எடுடா லூசு"

அன்புடன்,
டோண்டு ராகவன்

வெற்றி said...

நல்ல கற்பனை..lol :)

வெற்றி said...

@dondu(#11168674346665545885)

இது ஒரு பழைய சர்தார்ஜி ஜோக்கு சார்..ஏதாவது புதுசா ட்ரை பண்ணவும் :)

தமிழ் உதயம் said...

இப்ப பதிவர்களுக்கு விஜய் தான் தீனியா.

வானம்பாடிகள் said...

இல்லையே. கதைய மாத்திட்டாங்களாம். ராக்கெட்ட காப்பாத்தறது இருக்கட்டும் முதல்ல படத்த காப்பாத்தணும். இதென்ன சின்னப்புள்ளத்தனமான்னு. அப்புறம் மொக்கையிலும் மொக்கை படமானாலும் தனியா பார்க்கிற தில்லு ’ஜெட்’லிய விட்டா வேற கதியில்லைன்னு வந்து கெஞ்சி, ’ஜெ’ட்லி முதுகில விஜய் உப்பு மூட்ட தொங்கி ’ஜெட்’லி ஒரே கிக்குல ராக்கெட்ட தாண்டி போக விஜய் கர்சீப் கட்டி இழுத்துட்டு போறாமாதிரியாம்ல.:)). அப்பாடா படம் தேறாம நம்ம பங்குக்கு ஏதோ பண்ணிட்டம்ல;

அக்பர் said...

கலக்கல் ஜெட்லி.

கதை ரொம்ப லாஜிக்கோட இருக்கு.
விஜய்க்கு மட்டுல்ல எல்லா மாஸ் ஹீரோக்களுக்கும் ஏற்ற கதை.

ர‌கு said...

இன்னும் ப‌ட‌மே வ‌ர‌ல‌, அதுக்குள்ள‌ ஆட்ட‌த்த‌ ஆர‌ம்பிச்சிட்டீங்க‌ளா?....எது எப்ப‌டியிருந்தாலும் முத‌ல் நாள் பாத்துட்டு, அதே சூட்டோடு விம‌ர்ச‌ன‌ம் எழுதி எங்க‌ளையெல்லாம் காப்பாத்து ராசா ;))

க.பாலாசி said...

அட... இந்த கதயும் சூப்பருங்க... நடத்துங்க....

ஜெட்லி said...

@சித்ரா...

கொடுமை இல்லைங்க..இப்படி நடந்தா நல்லாதானே இருக்கும்...

ஜெட்லி said...

@ jodhi

அஜித் பேன்ஆ....தெரியுது தெரியுது...

ஜெட்லி said...

@ பிரபாகர்

நம்ம ஊரு மருந்து அனுப்பி வைக்கவா??
மிக்க நன்றி அண்ணே....

ஜெட்லி said...

@ வெற்றி

நன்றி வெற்றி..

@ தமிழ் உதயம்

இப்ப மட்டும் இல்ல எப்பயுமே அவர்தான்னு
பேசிக்கிறாங்க.....

ஜெட்லி said...

@வானம்பாடிகள்

ஐயா,நானாத்தான் வந்து உங்க வலையில் சிக்கிட்டேனா...?

ஜெட்லி said...

@அக்பர்

அப்ப நாலு ஹீரோகிட்ட போய் கதை சொல்லி...
ஓகே பண்ணிட வேண்டியது தான் அக்பர்..

ஜெட்லி said...

@ ர‌கு

கண்டிப்பா போடுவேன்னு நினைக்கிறேன்...
பார்ப்போம்..

ஜெட்லி said...

@ க.பாலாசி

நன்றி தலைவரே...

suma said...
This comment has been removed by a blog administrator.
MANO said...

படிக்க படிக்கவே கிறு கிறுன்னு வருது... SCREENல பார்த்தா?

SUPER COMEDY BOSS...


MANO

வித்யா said...

LOL:))

prabhu said...

neega summa comedy pannadiga.. ithu tha padathoda original story...

ithula vijay ku punch dialogueye illaye.. athu mattum iruntha adutha "PERARASU" neega tha....

கார்க்கி said...
This comment has been removed by the author.
மோகன் குமார் said...

எங்கே விமர்சனம் ஒன்னும் காணும்?

Mrs.Menagasathia said...

செம காமெடி!!

ராஜேஷ் said...

என்னாட தலைவழி சாரி தளபதி
சுறா பாட்டு வெளில உட்டுடாரு
நம்ம ஏரியா கலகட்டுலயேனு கவலையா
இருந்தேன் தல
ரொம்ப டாங்சு... பா

செ.சரவணக்குமார் said...

சிரிச்சு முடியல தலைவரே. இப்பவே ஆரம்பிச்சுட்டீங்களா?

ஜாக்கி சேகர் said...

அசத்திட்டிங்க தம்பி..

கார்க்கி said...

விஜய் படம் வந்தால் தயாரிப்பாளர் தொடங்கி தியேட்டரில் சமோசா விற்பவன் வரை காசு பார்ப்பான் என்று சொல்வார்கள். இப்போது பதிவர்கள் ஹிட்ஸ் பெறவும் விஜய் உதவுகிறார். இன்று மட்டும் இது 5வது பதிவு விஜய் பற்றி. இன்னும் நாலு நாள் இருக்குவ் :)))))))

ஜெட்லி said...

@ suma

ஒன்னும் புரியலைங்கோ....

@ MANO

ஸ்க்ரீனில் பார்த்தா நாலு அஞ்சு ஊறுதி ஆயிடும் மனோ...

ஜெட்லி said...

@ வித்யா

நன்றி..


@ prabhu

ஹா ஹா....பேரரசு பெரிய ஆளுப்பா....நான் அவர்க்கிட்ட நெருங்கறது
ரொம்ப கஷ்டம்...

ஜெட்லி said...

@ வித்யா

நன்றி..


@ prabhu

ஹா ஹா....பேரரசு பெரிய ஆளுப்பா....நான் அவர்க்கிட்ட நெருங்கறது
ரொம்ப கஷ்டம்...

kanavugal said...

அண்ணே இன்னொரு தமிழ் படம் (தயாநிதி அழகிரியோட படம்) எடுக்குற அளவுக்கு உங்ககிட்ட திறமை இருக்குன்னே...

ஜெட்லி said...

@ மோகன் குமார்

ரெட்டை சுழி போல அண்ணே...
டைரக்ட்ஆ சுறா தான்...!

ஜெட்லி said...

@ Mrs.Menagasathia

நன்றி...!

@ ராஜேஷ்

படம் வந்தா இன்னும் களைக்கட்டும்னு நினைக்கிறேன் ராஜேஷ்....

ஜெட்லி said...

@ செ.சரவணக்குமார்

இன்னும் மூணு நாள் தானே இருக்கு....ஸ்டார்ட் தி மியூசிக்...

ஜெட்லி said...

@ ஜாக்கி சேகர்

நன்றி அண்ணே....

ஜெட்லி said...

@ கார்க்கி

ஏன் கார்க்கி,சைக்கிள் டோக்கன் போடரவரை விட்டுட்டீங்க...!!
ரெண்டு மாசம் முன்னாடி அஜித் கூட தான் உதவனாரு.... :))

ஜெட்லி said...

@kanavugal

உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு பாஸ்...!!

forever said...

Kathai romba arumaiya vanthruku ...
nejamave ithu mathiri scenes padathula iruka vaippu irukku...:-D

தமிழ் வெங்கட் said...

பிரமாதம யோசிக்கிறீங்க....பேசாமா நீங்களே திரைக்கதை வசனம் எழுதி இந்த படத்தை டைரக்ட் பண்ணுங்க நம்ம
சன் பிக்சர்கிட்ட சொல்லி படத்தை டாப்10ல் கொண்டுவந்தடலாம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

perarasuvoda assistanta neenga?

saleem said...

நாகரீக மில்லாம இப்படி ஒருத்தன தரை குறைவா எழுதுரியே நீயெல்லாம் பதிவுக்கு லாயக்கு இல்லடா நீ போயி ஆடு மேய்க்க போடா சொரிப்பயலே

ஜெகதீஸ்வரன். said...

சூப்பர் கதைங்க,....

சுராவுக்கு கதை தேடிக்கிட்டு இருந்தவங்க இதை ஆட்டைய போட்டுடப் போராங்க. எதுக்கும் காப்பிரைட்டுக்கு சொல்லி விட்டுங்க.

சங்கர் said...

நாகரிகமும் பண்பாடும் உடைய திருவாளர் saleem அவர்களுக்கு,

ஆடு வளர்ப்பது நல்ல லாபகரமான தொழில் தான், தற்போது செய்து கொண்டிருக்கும் தொழிலை விட்டுவிட்டு, நீங்கள் அதை செய்யலாம்

ஜெட்லி said...

@ forever

நன்றி நண்பரே ...பார்ப்போம்

@தமிழ் வெங்கட்
ஏன் சார் வம்புல மாட்டி விடுறிங்க??

ஜெட்லி said...

@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)


சத்தியமா இல்லை சார்...

ஜெட்லி said...

@ saleem

நன்றி நாகரீகம் மிக்கவரே....
முடிஞ்சா ஒரிஜினல் ஐ.டி.யுடன் வரவும்....

ஜெட்லி said...

@ ஜெகதீஸ்வரன்

ஹா ஹா....அதுக்கு யாரு செலவு செய்றது...