Saturday, March 28, 2009

நம்ம ஊரு காமெடி- பார்ட் இரண்டு


யாருடன் கூட்டணி?

லட்சிய தி மு க தலைவர் விஜய த.ராஜேந்தர் நேற்று வெளியிட்ட அறிக்கை: இலங்கை தமிழர் பிரச்சனைக்கு நாடாளுமன்ற தேர்தலில் தீர்வு காண வேண்டும் என்று வலியுறித்தி வருகிறேன். இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக குரல் குடுக்க என் சிறு சேமிப்பு துறை தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். தேர்தல் கூட்டணி அமைப்பது பற்றி லட்சிய தி மு க பொது கூட்டம் இருபத்தி ஒன்போதில் சென்னை தி.நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கிறது.
நம்ம கமெண்ட்: " என்ன இருந்தாலும் உங்களக்கு ரொம்ப பெரிய மனசுங்க... யாரும் செய்யாத ராஜினாமா வ நீங்க செஞ்சுடிங்க".

நம்ம ஊரு காமெடி - ஒன்று


சரத்குமார் கட்சியும் பாரதிய ஜனதா கட்சியும் தொகுதி பங்கிட்டுக்காக நடத்திய பேச்சுவார்த்தை (கற்பனை).......


இல.கணேசன்: வாங்க வாங்க.. சரத் என்ன தனியா வந்துஇருகிங்க? கட்சி நிர்வாகிகள் வரலையா?

சரத்: ராதிகா தாநே ..? 'அரசி' ஷூட்டிங் போய் இருக்காங்க.

இல.கணேசன்: இருக்கறது நாப்பது தொகுதி. இதை எப்படி பிரிச்சிகிறது?

சரத்: எனக்கு இரண்டு தொகுதி கொடுத்துருங்க. மீதி நுப்பதி எட்டும் உங்க கட்சிக்கு !

இல.கணேசன்: அய்ய்..... எங்களுக்கு இரண்டு போதும் . நுப்பதி எட்டு இல் நீங்கதான் நிக்கணும்!

சரத்: அதெல்லாம் முடியாதுங்க , நீங்க பாட்டுக்கு சீட் கொடுத்துட்டு போய்டுவிங்க ... அங்கே நிறுத்தறதுக்கு நாங்க எங்க போய் ஆளை தேடுறது!

இல.கணேசன்:(மெதுவாக) கரெக்டா, நாம் பேச வேண்டியத இவரு பேசறாரு....

(உரக்க) அதெல்லாம் முடியாது. எங்களுக்கு இரண்டு. மீதியெல்லாம் உங்கள்ளுக்குதான்.

சரத்(கடுப்பாகி):'கூட்டணி பேச்சு வார்த்தை தொகுதி பங்க்கிட்டினால் முறிந்தது' நு பத்திகைக்காரங்களுக்கு சொல்லிடிங்க. எங்கல்லுகும் சுயமரியாதை இருக்குல்ல.... யார் நாங்க எதிர்பார்க்கிற சீட் தரங்கோல அவன்கோலடதான் கூட்டணி! நான் வாரேங்க!.

நன்றி: ஜூனியர் விகடன்.
நம்ம கமெண்ட்: "ஐயோ ஐயோ இது உண்மையா கூட இருக்கலாம்."

Monday, March 23, 2009

வில்லனாகிறார் ஆர்யா

நான் கடவுள் படத்தில் தனது ஆக்ரோஷமான நடிப்பை வெளிபடித்திய ஆர்யா முதல் முறையாக தெலுங்கு படத்தில் வில்லனாக அறிமுகம் ஆகிறார். தெலுங்கு தேசத்தின் இளம் நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் படமொன்றில் ஆர்யா வில்லனாக நடிக்கிறார். நான் கடவுள் தெலுங்கு பதிப்பில் அவரின் நடிப்பை பார்த்து டைரக்டர் குணசேகர் (கில்லி புகழ்) ஆர்யாவை தன் படத்தில் புக் செய்து விட்டார். வில்லனாகவும் ஆர்யா கலக்க நாம் வாழ்த்துவோம்.

Sunday, March 22, 2009

ஜெயில் அனுபவங்கள்
என்னடா இவன் எப்போ ஜெயில்க்கு போனான்னு யோசிக்காதிங்க நண்பர்களே, நம்ம சென்ட்ரல் ஜெயில் இப்போ பொது மக்கள் பார்வையிட அனுமதிக்க படுகிறார்கள். நானும் போய் பார்த்தேன், ஆனா எதனலா நான் பார்க்க போனேன்னு எனக்கு தெரியல? நாம அங்க போய் என்ன பாக்க போறம்னு யோசிச்சேன் ...... ஆனால் என்னோட நண்பன் "டேய் அது பிரிட்டிஷ் காலத்துல கட்டின ஜெயில் மச்சான் போய் பாக்கலாம்னா" சரி போய் பாப்போம்ட என்று நாங்கள் இருவரும் சென்றோம்.
நானும் என் நண்பனும் மதிய வேளையில் சென்ட்ரல் ஜெயில் சென்றோம் , அங்கு பார்த்தால் மக்கள் வெள்ளம் என்னடா இவளோ பேர் வந்துருக்காங்க
என்று நான் நினைத்தேன். ஜெயில் உள்ளே போகும் வழியில் சிறு சிறு ரோட்டு கடைகள் இருக்கின்றன. முதலில் விசாரணை அறை எங்களை வரவேற்றுது ஆனா நம்ம பசங்க சும்மா ஜெயில் முழுவதும் கிறுக்கி வைத்து இருக்கிறார்கள் ஒரு வெள்ளை சுவரையும் காண முடியவில்லை. ஜெயில் முழவதும் குப்பை மேடு ஆக காட்சி தருகிருது. குப்பை போட்டது ஜெயில் முழவதும் கிறுக்கி வச்சுது எல்லாம் சுற்றி பார்க்க வந்தவர்கள் என்பதுதான் வேதனை.முதலில் ஒரு ஜெயில் பிளாக் பார்த்தோம் அப்பவே எனக்கு புரிஞ்சிடிச்சி என்னத்த நாம இங்க பார்க்க போறம்னு. ஏன் என்றால் நான் 'ஒரு மனிதன்(கைதி) எப்படி துன்ப அடைந்து இருப்பான்' என்று பார்க்க வந்தது போல் எனக்கு விளங்கியது.அப்புறம் நான் அப்படியே சும்மா நின்னு சுற்றி பார்த்ததோடு சரி போய் ஒரு ஒரு ஜெயில் அறைகளாக போக விரும்பவில்லை.


சரி என்னடா இவளோ சனம்னு பார்த்த அதுல கால் வாசி பேர் பீச்,பார்க் போகின்ற காதல் ஜோடிகளும், சரக்கு அடித்து மட்டை ஆகின்ற கேடிகளும் சென்ட்ரல் ஜெயில் வந்து இருக்கிறார்கள். ஆனால் முக்கா வாசி பேர் உண்மையாக சென்ட்ரல் ஜெயில் பார்க்க வந்து இருக்கிறார்கள். நீங்களும் டைம் கிடைச்ச போய் பாருங்க கண்டிப்பா உங்களகுள் பீலிங்க்ஸ் வரும்.

Friday, March 20, 2009

அருந்ததீ பட விமர்சனம்

அருந்ததீ தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்த படம். தெலுங்கில் செம ஹிட் அதையே சூட்டோட சுட தமிழுக்கு நம்ம ராமநாராயணன் அவர்கள் டப் செய்து ரிலீஸ் பண்ணியாச்சு. சரி படத்துக்கு வருவோம், அருந்ததீ படம் வழக்கமான தெலுங்கு மசாலா படமானு கேட்டா? ம்ம் கண்டிப்பா இருக்கு. ஆனா அருந்ததீ வந்து கொஞ்சம் மாயா மந்திர கதை பிளஸ் இது ஹீரோயின் சார்ந்த கதை. படம் ஸ்டார்டிங் நல்லாத்தான் இருந்தது கொஞ்சம் த்ரில்ல கொஞ்சம் சஸ்பென்ஸ். ஆனா போக போக அந்த த்ரில் இல்ல. நம்ம யாவரும் நலம் படதுகிட்ட அருந்ததீ படம் எடுபடல. அதுவும் முக்கியமான எடத்துல அந்த மொக்கை தெலுங்கு டப்பிங் பாட்டை போற்றுரனுங்க. மற்றபடி அனுஷ்கா, சாயாஜி, சோனம் அனைவரும் அருமையாக நடித்து இருக்கிறார்கள். படத்தில் வரும் அந்த கந்தர்வ கோட்டையின் பிரமாண்ட மாளிகை நம்மை வியக்க வைக்கிறது அதுவே சில நேரங்களில் நம்மை சலிப்படைய செய்கிறது.அனுஷ்கா இளைய தளபதி விஜயின் அடுத்த படத்தின் நாயகி, அருந்ததீயாக செம கலக்கு கலக்கிறார் படத்தில் முதன் முதலில் அந்த கோட்டையில் அனுஷ்கா செல்லும் காட்சியில் நமக்கு பயம் வருகிறது. ராணியாக வரும் அனுஷ்கா அழகும் வீரமும் ஆகா காட்சி தருகிறார். வில்லன் சோனு தன் வேலையை கச்சிதமாக செய்திரிகிறார்.


சாயாஜி நம்ம அனுஷ்கவ வில்லன் கிட்ட இருந்து காப்பத்த உதவி செய்கிறார், ஒரு தடவை இரண்டு தடவை இல்ல பல தடவை உதவி பண்றார் நம்ம சாயாஜி.வில்லன் அனுஷ்காவை நெருங்கும் போதல்லாம் படம் பார்ப்பவர்கள் நினைப்பார்கள் "எங்கட சாயாஜி காணோம் " என்று கேட்கும் அளவுக்கு உதவி செய்து உயிர் விடுகிறார் சாயாஜி. படம் சுமார்.
Monday, March 16, 2009

எல்லாருக்கும் வணக்கம்

நண்பர்களே நாம் நமது புதிய வலைபதிவை இனிதே தொடங்கியாச்சு.
இந்த வலைப்பதிவில் நாம் நமது எண்ணங்களை inithey பகிரிந்து கொள்வோம்.