Friday, April 30, 2010

சுறா - நடந்தது என்ன??

சுறா - நடந்தது என்ன??

ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்.
சுறா படத்துக்கு நான் கிட்டதட்ட பல தடவை யோசிச்சு தான் டிக்கெட் எடுத்தேன்.ஆனா டிக்கெட் எடுத்த நாளில் இருந்து வீட்டில் கரண்ட் இல்லை. நேற்று உச்சக்கட்டமாக மூணு நிமிஷம் கரண்ட் இருக்கும் அப்புறம் அஞ்சு நிமிஷம் கரண்ட் இல்லாமா போய்டும்.இது போன்ற சில சம்பவங்கள் நடந்தது....! இது தான் BUTTERFLY EFFECT ஆ??


சுறா, நான் விஜய் கிட்ட இருந்து ஒரு யதார்த்த சினிமாவோ
இல்லை உலக சினிமாவோ சத்தியமா எதிர்ப்பார்த்து இந்த
படத்துக்கு போகலங்க.ஓரளவுக்கு மசாலா அப்புறம் காமெடி
இருக்கும் என்று நினைத்தேன்....ஆனால் சுறா ப்ரையில்
மசாலா கொஞ்சம் ஓவர் ஆயிடுச்சு ப்ளஸ் சுறாவும் ஐஸ்
இல்லாம கெட்டு போச்சு.

சுறா - புட்டா?? லட்டா??

சரி கதைக்கு வருவோம்....விஜய் படத்தில் கதையா என்று
நீங்கள் டர்ராக வேண்டாம்.சும்மா மேலோட்டமா சொல்றேன்...
விஜய் ஒரு குப்பத்தில் தலைவர் ரேஞ்சில் இருக்கிறார் அந்த
குப்பத்தை வளைத்து போட்டு தீம் பார்க் கட்ட மந்திரி கில்
நினைக்கிறார்.ஆனால் விஜய் கில்லிடம் இன்னும் ஆறு மாசத்தில்
குப்பத்தில் வீடு கட்டி காண்பிப்பதாக சாவல் விடுகிறார். வீடு கட்ட
போறார்னு நீங்க விஜயை மேஸ்தரியோ இல்லை கொத்தனாரோ
என்று நினைத்து விட வேண்டாம். மந்திரி கில்லிடம் இருந்தே
பணத்தை எடுத்து...ஆஆவ்வ்......கண்ணை கட்டுதா...சரி ஸ்டாப்
பண்ணிக்கிறேன்!!

விஜய், மாஸ் ஹீரோ அப்படின்னு பார்ம் ஆயிட்டாரு.பக்கம்
பக்கமா வசனம் பேசி தள்ளுறார்,அதுவும் மக்களை பார்த்து
அவர் பேசும் வசனங்கள்...ஐயோ! ஆனா ஒரு விஷயம் கண்டிப்பா
சொல்லியே ஆகணும் ரியாஸ் கான் விஜயை அடிக்க கை ஓங்கும்
சீனும் அந்த வசனமும் மரண மாஸ்.ஆனா என்ன பல இடங்களில்
தளபதி போக்கிரி மேனரிசத்தை பின்பற்றி இருக்கிறார்.


யார்னு கண்டுபிடிங்க பார்க்கலாம்??

தமன்னா, வழக்கமா விஜய் படத்தில் வரும் நாயகி தான்.
பாடல் காட்சிகளில் மட்டும் உதவி இருக்கிறார்.பாட்டில் எல்லாம்
சின்ன trouser இல் வருகிறார் மற்றபடி பெருசா சொல்ல ஒண்ணுமில்லை.வடிவேலு, அண்ணே பயங்கர அவுட் ஆப் பார்மில்
இருக்கிறார் என்று மட்டும் தெரிகிறது. சில காட்சிகளில் மட்டும்
சிரிக்க வைக்கிறார் மற்ற காட்சிகளில் எரிச்சலே....!!

நாங்க பழைய படத்தை டி.வி.யிலோ இல்ல டி.வி.டி.யிலோ வாங்கி பார்த்துக்கறோம்னு டைரக்டர் கிட்ட சொல்லுங்கப்பா.... அரத பழசான காட்சிகளை தூசி தட்டி எடுத்து... ஏன்...??விஜய் தீடிர்னு அப்போ அப்போ மிமிக்ரி எல்லாம் செய்றாரு,அதுவும் கோர்டில் ஏதோ தீடிர்னு அசத்த போவது யார்னு பார்த்த மாதிரி இருந்துச்சி. வில்லனின் அல்லக்கையில் ஒருவராக வரும் இளவரசு வாயை திறந்தாலே விஜய் புகழ் பாடுகிறது(தலைவலிடா சாமி!!).தளபதி இந்த படத்திலும் நன்றாக பறக்கிறார் இதில் உச்சக்கட்டமாக மூன்று காட்சிகளில் பறந்து அடியாட்களை பொரட்டி எடுக்கிறார்.

படத்தில் ஒரு காட்சியில் விஜய் எஸ்.எம்.எஸ் காமெடியை வடிவேலு யூஸ் பண்ணிருப்பாரு... அதாவது இன்டெர்வல் விட்டாங்கன்னு வெளியே வந்தேன்ப்பா பயங்கர அடி என்று விஜய்யிடம் வடிவேலு சொல்லுவார்....ஏன் என்று விஜய் கேட்பார்.. நான் படம் பார்த்தது பஸ்சில் ஆச்சே என்று வடிவேலு கூறுவார்.

ஒரே சந்தோசம் அம்பது ரூபாயோடும் அலைச்சல் இல்லமாலும்
பார்த்தது தான்.காரணம் மாயாஜால் போலாம்னு நினைச்சோம்
ரெண்டு டிச்கேட்க்கு கிட்ட தட்ட மூண்ணுருக்கு மேல் மிச்சம்!!


இம்சை அரசன் இந்த படத்தை பார்த்து இருந்தா என்ன சொல்லி இருப்பாரு:

மக்களே உங்களுக்கு ஒரு நற்செய்தி...வாடா படம் வரவில்லையே என்ற ஆதங்கம் இனி இல்லை.ஆகையால் மக்களே சமாதி நிலை அடைய வாடா படம் வர்ற வரைக்கும் காத்திருக்க வேண்டாம்...
ஹ்ம்.. இப்போதே படையெடுங்கள் சுறா ஓடும் தியேட்டருக்கு!!

சுறா - சூர மொக்கை!!

தம்பி டீ இன்னும் வரல.....!!


இந்த விழிப்புணர்வு பல பேரை சென்று அடைய உங்கள் ஓட்டுகளை
தாறுமாறாக குத்துமாறு கேட்டுகொள்கிறோம்!!


ஜெட்லி....

Monday, April 26, 2010

சுறா எக்ஸ்க்ளுசிவ் காட்சிகள்.

சுறா காட்சிகள் ஒரு கற்பனை.

டிஸ்கி:


விஜய்க்கு இருக்குற மாஸ்க்கு இப்படிப்பட்ட காட்சிகள் தான் அவுருக்கு வேணும் என்பது என் ஆசை.மற்றபடி விஜய் அல்லது அவர் ரசிகர்களை கோபப்படுத்த எழுதுவில்லைன்னு சொன்னா நம்பவா போறீங்க.....
சரி நாம சுறாவுக்கு போவோம்....!!

*****************************************


இடம்: ஸ்ரீ ஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம்.

HSLV TFC3 என்ற ராக்கெட்டை மூன்று வருடம் கஷ்டப்பட்டு உருவாக்கி விண்ணில் விட காத்து இருக்கின்றர் நம் நாட்டு விஞ்ஞானிகள். இன்னும் ராக்கெட் விட பத்து நிமிஷம் இருக்கு நாம அதுக்குள்ள விஜய் இன்ட்ரோ
சீன் பார்த்துட்டு வந்துடுவோம்.

இடம்: பழவேற்காடு பீச்

ஊரே ஒட்டு மொத்தமா பீச்சில் காத்து இருக்கிறார்கள்.அப்படியே
கடலுக்கு போகஸ் பண்றோம்.அங்கே ஒரு சின்ன கட்டுமரத்தில்
வடிவேலு "என்னயா இவன் எறா புடிச்சிட்டு வரதுக்கு இவ்ளோ
நேரம் ஆகுது" என்று அலுத்து கொள்கிறார்.அப்படியே கடலுக்கு
அடியில் போறோம்.அங்கே ஒரு 30 அடி சுறா ஒன்னு விஜயை
தாண்டி போகுது.விஜய் அதை ப்ரீயா விட்டுட்டு பின்னாடி வர்ற
சின்ன சுறாவோட சண்டை போடுறாரு.கடைசியில் பார்த்தா அது
சின்ன பசங்க யாரோ பீச்சில் விளையாடிட்டு விட்டுட்டு போன சுறா
பலூன் பொம்மை.இருந்தாலும் ஒபெநிங்காக விஜய் அசால்ட்டா
எந்த வித பில்ட்-அப்பும் இல்லாம சுறாவை தோள் மேல்
போட்டு கொண்டு கரைக்கு வருகிறார்.ஆனா இன்ட்ரோ
சாங் உண்டு அதனால .ரசிகர்கள் யாரும் டென்ஷன் ஆக
வேண்டாம். நாம அதுக்குள்ள அங்கே போயிட்டு வந்துருவோம்.
**************************************

மறுபடியும் இடம் :ஸ்ரீ ஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம்.


ராக்கெட் விட்டு நுப்பது செகண்ட் கழித்து.....

"ஹோ ..மை காட்" என்று தலைமை விஞ்ஞானி நாசர் தலையில் அடித்து கொள்கிறார்.அருகில் இருக்கும் அவரது உதவியாளர் தமன்னா "என்ன சார் ஆச்சு??" நாசர் கண்ணாடியை கழற்றி "ராக்கெட்க்கு பெட்ரோல் போட மறந்துட்டேன்மா அது இன்னும் மூணு நிமிஷத்தில் கடலில் விழுந்துரும், நேத்து நைட் என் காரில் பெட்ரோல் இல்லைன்னு கொஞ்சம் ராக்கெட்இல் இருந்து எடுத்தேன்.. " '"அய்யோயோ" என்று கதறுகிறார் தமன்னா."இந்த ப்ராஜெக்ட் மட்டும் தோல்வி அடைஞ்சா நம்ம நாட்டுக்கே பெரிய அவமானம் ஆயிடும்" "சார் நீங்க ஒன்னும் கவலைப்படாதிங்க என் ஆளு பழவேற்க்காட்டில் தான் இருக்கார்...அவர் சுறா மாதிரி நம்ம பிரச்சனையை சால்வ் பண்ணிடுவார்".


இன்ட்ரோ பாட்டு முடிந்தவுடன்.தமன்னா விஜய்க்கு போன் பண்ணி ராக்கெட் மேட்டரை கூறியவுடன் பழவேற்காடு ஏரியா சலசலக்கிறது.
ஊரே கூடி நிற்கிறது நடுவில் நம்ம தளபதி விஜய் அவர்கள் பேச
ஆரம்பிக்கிறார்.....

" நம்ம நாட்டு விஞ்ஞானிங்க செய்ஞ்ச ராக்கெட் பெட்ரோல் இல்லாம
கடலில் விழ போகுதாம்...அந்த ராக்கெட் விலை எவ்ளோ தெரியுமா
300 கோடி"....

"300 கோடியா" என்று வாய்பிளக்குறார் வடிவேலு.

தொடர்ந்து விஜய் "நாம 50,000க்கு புது வண்டி வாங்கினாலே
ஓட்டறதுக்கு முன்னாடி அதை போய் சென்ட்ரல் எதிரே இருக்கிற
பாடிகாட் முனிஸ்வரன் கோயில்ல கொண்டு போய் பூஜை போட்டு தான் எடுக்குறோம், ஆனா நம்ம நாட்டு விஞ்ஞானிங்க 300கோடிக்கு வண்டி செய்ஞ்சிட்டு பாடிகாட் கோயில்ல பூஜை போடாம ராக்கெட்டை விட்டா எப்படி போகும்னு கேக்குறேன்..."

"அப்படி கேளு ராசா" என்று ஒரு கிழவி கைத்தட்ட ஆரம்பித்தவுடன் சுத்தி நிக்கும் கூட்டம் விண்ணை பிளக்க கைதட்டுகிறது....

மேலும் விஜய் "அப்புறம் நம்ம கிட்டவந்து காப்பாத்துனா எப்படி?,
இதுக்குதான்........"

அப்போது ஒரு சிறுவன் வீட்டுக்குள் சென்று விஜய் மேலும் மொக்கை போடுவதை நிறுத்த அடுத்த வாரம் தீபாவளிக்கு வாங்கி வைத்திருந்த பட்டாசுகளில் இருந்து நாலு ராக்கெட்டை எடுத்து வருகிறான்..

"இந்தாங்க மாமா என்னால முடிஞ்சது' என்று அந்த சிறுவன்
நாலு தீபாவளி ராக்கெட்டையும் விஜயிடம் கொடுக்கிறான்.
விஜய் அவனை கட்டிபிடித்து "யாருக்கும் வராத ஐடியா உனக்கு
வந்திருக்கு"... உடனே சுத்தி நின்ன எல்லோரும் அவர் அவர்
வீட்டுக்குள் சென்று ஆளுக்கு நாலு ராக்கெட் எடுத்து வந்து
விஜயிடம் கொடுக்கிறார்கள்.

ஆகமொத்தம் நூறு தீபாவளி ராக்கெட்டை முதுகில் கட்டி கொள்கிறார் நம்ம விஜய். அப்புறம் கெட்-அப் சேன்ஜ்க்காக நெற்றியில் சிகப்பு கர்சீப்பை கட்டி கொள்கிறார். அதுதவிர நிஜ ராக்கெட்டில் பெட்ரோல் நிரப்ப இருபது லிட்டர் பெட்ரோல் கேனையும் எடுத்து கொள்கிறார்.முதுகில் இருக்கிற ராக்கெட்
அந்த சிறுவனால் பற்ற வைக்கப்படுகிறது.


விஜய் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட்டை சேஸ் பண்ணி கொண்டு மேல
பறக்கிறார். ராக்கெட் பக்கத்தில் விஜய் போனவுடன் கையில் இருக்கும் பெட்ரோல் கேனின் மூடியை கழற்றி ராக்கெட்டில் உள்ள பெட்ரோல் டேங்கை சுத்தியும் முத்தியும் ரெண்டு ரவுண்டு அடித்து தேடுகிறார். ஆனா பாருங்க ராக்கெட்டில் எங்கே பெட்ரோல் டேங்க் இருக்குனு தெரியல......!!ராக்கெட் வேற பெட்ரோல் இல்லாம சாய ஆரம்பிக்குது, தளபதி என்ன பண்ணலாம்னு யோசிக்கிறார். உடனே நெற்றியில் இருந்து சிகப்பு கர்சீப்பை எடுத்து ஒரு முனையை ராக்கெட் தலையில் உள்ள சின்ன கிளாம்பில் கட்டுகிறார். கர்ச்சீப்பின் மறுமுனையை வாயில் வைத்து பல்லால் கடித்து கொண்டு ராக்கெட்டை டோ (tow) செய்து கொண்டு போகிறார்.இங்கே தான் கேமராவை நாலு ரவுண்டு சுத்தி விஜய் ராக்கெட்டை டோ பண்ணிட்டு போறதை காட்றோம். அப்படியே டோ பண்ணிட்டே விண்வெளி வரை போய் ராக்கெட்டை பத்திரமாக விட்டு வருகிறார்.


இங்கே ஸ்ரீஹரி கோட்டாவில் ராக்கெட் வெற்றிகரமாக பயணம் முடித்ததற்கு ஆள் ஆளுக்கு கட்டி பிடித்து கொள்கிறார்கள்.நம் விஞ்ஞானிகள் மற்றும் நாட்டின் மானத்தை காப்பாற்றுகிறார் இளைய தளபதி டாக்டர் விஜய்!!

இது தான் சுறா மாஸ்....

(உங்கள் குரல்: முதல்ல கர்சீப்பை தடை செய்யுங்கப்பா......)

தடை செய்ஞ்சா, அப்புறம் எப்படி விஜய் தலைக்கு தொப்பி
போட்டுட்டு முட்டிக்கு கிழே கர்சீப் கட்டிட்டு வில்லு படத்தில்
வர்ற மாதிரி மாறுவேஷத்தில் வில்லன்களை வேட்டையாட
போவாரு...??

உங்களுக்கு இந்த இடுகை பிடித்திருந்தால் தாறுமாறாக ஓட்டும்
பின்னூட்டமும் குத்தவும் என்று கேட்டு கொள்கிறேன்.


நன்றி : indiaglitz

ஜெட்லி....(சரவணா....)

Tuesday, April 20, 2010

பக்கத்துக்கு வீட்டு உளவாளியும் பொம்மையும்!!

SPY NEXT DOOR VS PHOONK 2


SPY NEXT DOOR :

நான் ஜாக்கிசானின் தீவிர ரசிகன் என்பது நீங்கள் அறிந்ததே.இந்த படத்தின் டி.வி.டி பல மாதங்கள் முன்னே வந்தாலும் தியேட்டரில் தான் பார்ப்பது என்று எதிர்ப்பார்த்து காத்திருந்தேன்.இந்த படம் ரகசிய போலீஸ் என்று தமிழில் வெளிவந்துள்ளது.ஆனா தியேட்டரில் தான் கூட்டம் இல்ல ஒரு வேளை சரத்குமார்,நக்மா நடிச்ச ரகசிய போலீஸ் படம்னு நினைச்சிட்டாங்க போல என்று நீங்க தப்பா திங்க் பண்ண கூடாது. உண்மையான காரணம் படத்தின் ரீலீஸ் பல தடவை அறிவிக்கப்பட்டு தள்ளி போனதே!!

சரி படத்துக்கு வருவோம், அருமையான கதைங்க...
அதாவது ஜாக்கி ஒரு உளவாளி ஆனால் பக்கத்துக்கு
வீட்டில் இருக்கும் பெண்ணுக்கு தெரியாது.ரெண்டு பேரும்
உயிருக்கு உயிராக லவ்வுகிறார்கள்.ஆனா பாருங்க அந்த
பொண்ணு கல்யாணம் பண்ண ஒரு கண்டிஷன் போடுது.
அது என்னனா ஜாக்கியை அந்த பொண்ணோட மூணு
பசங்களுக்கும் புடிக்குனும்னு அப்பதான் நம்ம கல்யாணம்
நடக்கும்னு சொல்லுது....மீதி வெள்ளித்திரையில் காணவும்!!


ஜாக்கி வழக்கம் போல் இல்லைனாலும் ஸ்டன்ட்இல் கலக்குகிறார்.
ஜாக்கி கிட்ட வேற என்ன எதிர்ப்பார்க்க போறோம் அவர் ஸ்மைல்
தான்,நன்றாக ரசிக்கலாம்.ஜாக்கியை சின்ன பசங்க படுத்தும் பாடு
செம!! அந்த சின்ன பொண்ணு ரொம்ப க்யுட்.ஜாக்கி ரசிகர்களுக்கு
இந்த படம் தலைவாழை விருந்து இல்லைனாலும் கையேந்தி
பவனில் நல்ல சாப்பாடு சாப்பிட்ட திருப்தி கிடைக்கும்!!

கூடிய விரைவில் ஜாக்கி ரசிகர்களுக்கு விருந்தாக வருகிறது
karate kid !!

PHOONK 2: (பொம்மை 2 )நான் PHOONK படத்தின் முதல் பார்ட் பார்க்கவில்லை ஒரு வேளை பார்த்து இருந்தால் இந்த பார்ட்டை பார்த்து இருக்க மாட்டேன் என்று நினைக்கிறேன். சுதீப்,இவரு கன்னட ஹீரோவாச்சே டான்ஸ் எல்லாம் நல்லா ஆடுவாரு U2 வில் பார்த்து இருக்கேன்.மற்றபடி இது ஒரு திகில் படம் என்று தான் பார்க்கசென்றேன்.பார்த்த பின் தான் தெரிந்தது ஒதுங்குவதற்கு ஏற்ற படம் என்று அதாவது வெயிலில் இருந்து ஒதுங்குவதற்கு என்று எடுத்து கொள்ளவேண்டும்.யுவர் ஆனர்!!

படத்தை பார்த்தால் முதல் பாதி முழுவதும் கொட்டாவியை தவிர வேறு ஆவி எதுவும் வர்ற மாதிரி தெரியலை.அதே ஆதிக்காலத்து தமிழ் படத்தில் வருவது போல் ஒற்றை பங்களா,புதுசா குடி வராங்க,கூட ஒரு வேலைக்காரி,அங்கே புதுசா வரும் வாட்ச்மேன்,அந்த பங்களா பக்கத்தில் வேறு வீடு எதுவும் இருக்காது காடு தான் இருக்கும்,அப்புறம் அந்த பங்களாவை மேலிருந்து கீழும் ஒரு சைடுஇல் இருந்து இன்னொரு சைட்லயும் அப்போ அப்போ மாத்தி மாத்தி காட்டறாங்க......முடியலல....

அப்போ படத்தில் பயமே இல்லையானு கேட்டா இருக்குனு தான் சொல்லணும் ரெண்டாவது பாதி ஓரளவுக்கு பயம் இருக்கு.ஆனா என்ன அதுவும் ஒரு template பேய் படம் காட்சிகள் தான்.எனக்கு நிறைய விஷயம் படத்தில் புரியல அந்த பொம்மைக்கு எப்படி உயிர் வருது?? அந்த அந்நியன் ரெமோ மாதிரி வர்ற பேய் பொம்பளை யாரு??


பயமே என்னை கண்டா பயப்படும்னு சொல்ல நான் மிர்ச்சி சிவா இல்லங்க. ஆனா என் பயமெல்லாம் phoonk 3 னு ஒரு படம் வந்துட கூடாதுனு தான். இதை பார்த்ததுக்கு 13 ஆம் நம்பர் வீடு படத்தை இன்னொரு தடவை பார்த்து இருக்கலாம்.கிளைமாக்ஸ் படத்தில் செம காமெடிங்க அந்த பேய் அங்கே அங்கே அப்போ அப்போ கண்ட கண்ட இடத்தில் அட் ஏ டைம் வந்து நிக்குமாம்.ஆனா மாடியில் இருந்து கிழே விழுந்து உடனே செத்துடுமாம். அப்புறம் இயக்குனர் பேர் போடுவாங்களாம் நாம வீட்டுக்கு போய்டுனுமாம்!!(பேய் படத்தில் லாஜிக் பார்த்த ஜெட்லி வாழ்க!!)

தயவு செய்து யாராவது இந்த படத்தின் இயக்குனர் மிலிந்த் அவர்களுக்கும்,தயாரிப்பாளர் ராம் கோபால் வர்மா அவர்களுக்கும் யாவரும் நலம் படத்தின் டி.வி.டி.யை அனுப்பி வைங்கப்பா...அதை பார்த்தாவது கொஞ்சம் வித்தியாசமா பேய் படம் எடுக்கறாங்கலான்னு பார்ப்போம். இன்னும் மூஞ்சியில் வெள்ளை பௌடரை அடித்து கொண்டு பேய் படம் பண்ணிருக்கோம் என்று எத்தனை காலம் தான் ஏமாத்துவாங்கனு தெரியலைங்க!!

இந்த படத்தை பார்த்து வந்த நம்ம நாட்டமை விஜயகுமார்
என்ன தீர்ப்பு சொல்றார்னு பார்ப்போம்:

"என்றா கண்ணு ஏதோ பேய் படம்னு சொன்னாங்க,ஆனா நான் பள்ளிக்கூடம் போகும் போது பார்த்த படம் மாதிரியில்ல இருக்குது.படத்தில் மியூசிக் போட்டவனை இந்த ஊரை விட்டே தள்ளி வைக்கிறேன்.அந்த பய பயம் காட்டுறேன்னு சொல்லி என் தூக்கத்தை கெடுத்துட்டான்.இனிமே யாரும் இவன்கூட இனிமே டாஸ்மாக் கடையில கட்டிங் போடகூடாது,வாட்டர் பாக்கெட் கொடுக்க கூடாது...இது தான் என்ற தீர்ப்பு... பசுபதி உட்றா வண்டியை!!"


தியேட்டர் நொறுக்ஸ்:

# வூட்லண்ட்ஸ் தியேட்டரில் தான்ங்க படத்தை பார்த்தேன்...
இன்டெர்வெல்லில் வாடா படத்தின் ஸ்டில்லை மறுபடியும்
பார்க்க நேர்ந்தது.அதில் சுந்தர்.சி அவர்களின் ஸ்டில் என்னை
பார்த்து கண்டிப்பா முதல் நாள் படம் பார்க்க வாடா என்று
அழைப்பது போல் இருந்தது.# வாடா படம் எப்போ ரீலீஸ் ஆகும் என்று கேட்டதுக்கு டிக்கெட்
கிழிப்பவரிடம் சரியான பதில் இல்லை.சரி வாடா படத்தை நீங்க
பார்ப்பீங்களா?? என்று கேட்டதுக்கு வீட்டில் தன்னை நம்பி தான்
தன் குடும்பம் இருக்கிறது என்று சொன்னார்.சரி அப்போ ஆபரேட்டர் பார்ப்பாரா??னு கேட்டேன்.அவரு படம் போட்டுட்டு தூங்க போய்டுவாரு என்றார்.அப்போ யார்தான் படம் பார்ப்பாங்கனு கேட்டேன்.அங்கே வேலை செய்யும் நாலு ஆயாக்கு மட்டுமே அந்த தைரியம் இருக்கு என்றார்.


மறுபடியும் சொல்றேன் வாடா போறோம்.அது எந்த வருஷம்
ஸாரி வாரம் ரீலீஸ் ஆனாலும் சரி.ரசிகர்களுக்கு வேண்டுகோள்:
வாடா படம் ரீலீஸ் தாமதமாவதால் யாரும் தீக்குளிக்கவோ
அல்லது எண்ணெய் தேய்த்து குளிக்கவோ வேண்டாம் என்று
கம்பெனி சார்பாக கேட்டு கொள்கிறோம்.


உங்களுக்கு இந்த இடுகை பிடித்திருந்தால் ஓட்டும் பின்னூட்டமும்
தாறுமாறாக போடவும்!!


ஜெட்லி....

Saturday, April 17, 2010

ஆத்தா, நான் செயினை பிடிச்சி இழுத்துட்டேன்

"டேய் ஹரி, என்னாடா இவ்வளவு கூட்டம் நிக்குது?" கேட்டான் பாலா


"நாம போகப்போறது திருவனந்தபுரம்-கவுஹாத்தி எக்ஸ்ப்ரஸ், இதெல்லாம் கொல்கொத்தா போகிற கூட்டமா இருக்கும், அதோ ட்ரைன் வந்திடுச்சி பாரு" என்றபடி பையை எடுத்து முதுகில் மாட்டிக் கொண்டேன்


"டேய், கோச் நம்பர் S7 தானே?" கேட்டான் ப்ரசன்னா


"என்னடா இது? சார்டையும் காணும், போர்டையும் காணும்?" மீண்டும் கேட்டான்


"அதெல்லாம் அந்த பக்கம் இருக்கும்னு நினைக்கிறேன், அதோ பாரு, சாக்பீஸ்ல எழுதி இருக்காங்க, S1, S2, S3" இது நான்


"என்னடா மொத்த ட்ரைனும் ஒரே அழுக்கா இருக்கு, கூட்டம் வேற நிரம்பி வழியுது?" மீண்டும் பாலா


"அதெல்லாம் வெயிட்டிங் லிஸ்டா இருக்கும்டா, நம்ம கம்பார்ட்மெண்ட் காலியா இருக்கும் பாரு" என்ற என்னை அவன் பார்த்த பார்வை சொல்லிக் கொள்ளும்படி இல்லை


"அதுதாண்டா S7, ஓடு"


"ஹலோ, கொஞ்சம் வேகமா ஏறுங்க, ட்ரைன் கிளம்பிடப் போகுது"


"கியா?"


"யோவ் வேகமா ஏறு, ஜல்தி, அந்தர் ஜாவ்"எப்படியோ, அடித்துப்பிடித்து உள்ளே ஏறி விட்டோம்,


"டேய், சீட் நம்பர் என்ன?"


"49, 52, 54 அப்புறம் 18, 19, 22, இதோ இருக்கு பாரு"


"என்னடா, பத்து பேரு உக்காந்திருக்காங்க?"


"ஹலோ, கொஞ்சம் எந்திரிக்கிறீங்களா? இது எங்க சீட்டு"


"இங்க வந்து உக்காருப்பா, இவிட ஸ்தலம் உண்டு"


"நாங்க உட்காருவது இருக்கட்டும், உங்க சீட் நம்பர் என்ன?"


"அதெல்லாம் எதுக்கு? உங்க சீட்டுல உக்காருங்க"


"அதை நாங்க பாத்துக்கறோம், உங்க சீட்டு நம்பர் சொல்லுங்க"


"அதெல்லாம் இல்லப்பா, இதோ டிடிஆர் சைன் பண்ணி கொடுத்துருக்கார் பாரு"


"அவரு ஃபைன் கட்டினதுக்கு தான் சைன் பண்ணிக் கொடுத்துருக்கார், சீட்டு குடுக்கல"


"அதெல்லாம் தெரியாது, நான் எர்ணகுளம் வரை உக்காந்து தான் வருவேன்"


உட்கார்ந்திருந்த பத்து பேரில் ஐந்து பேரை எழுப்பி விட்ட பின்னும் எழுந்திருக்காமல் அடம் பிடித்த மலையாள குண்டர் ஒருவருக்கும் எனக்கும் இடையே நடந்த உரையாடல் அது


"ஹரி, டிக்கெட் குடு, டிடிஆர் வர்றார்" கேட்டான் ப்ரசன்னா


"சார், இந்தாங்க எங்க டிக்கெட்டு" வாங்கி, கையெழுத்திட்டுக் கொடுத்துவிட்டு நகரத் தொடங்கினார்


"ஹலோ சார், ஒரு நிமிஷம், எங்க சீட்டு எங்க இருக்கு?"


"இப்போ கொடுத்தேனே, 18, 19, 22, அதோ இருக்கு பாருங்க"


"அது இருக்கு, ஆனா அதுல நாலு பேரு உக்காந்து இருக்காங்களே, கொஞ்சம் கிளியர் பண்ணிக் குடுத்துட்டுப் போங்க"


"என்னால இதுதான் சார் பண்ண முடியும், உங்களால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்குங்க" சொல்லியபடியே நின்றிருந்த கூட்டத்தில் ஒவ்வொருவரிடமும் ஃபைன் (??) வாங்கியபடியே நகர்ந்து போனார் அவர்"டேய் ப்ரசன்னா, இங்க வந்து உக்காரு, எர்ணாகுளம் வரை தானே, அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம், பாலா, அங்க அவுங்க மூணு பேரும் என்ன பண்ணாறாங்கன்னு பார்த்துட்டு வரலாம் வா" என்று கூட்டிக்கொண்டு போனேன், அங்கே நிலைமை இன்னும் மோசம், பத்து பேரும், ஆளுயர ட்ரம் ஒன்றும், ஆளவந்தார் கொலை வழக்கில் வருவது போன்று இரு ட்ரங்கு பெட்டிகளும் எங்களை வரவேற்றன


"அங்கிள், தினேஷு, கார்த்தி, எங்க இருக்கீங்க?"


"இதோ இருக்கோம்பா" ட்ரம்முக்கு பின்னாலிருந்து குரல் வந்தது, எட்டிப்பார்த்தபோது, மாடிப்படி மாது போல் சுருட்டி மடக்கிக் கொண்டு, உக்கார்ந்திருந்தனர் மூன்று பேரும்.


"என்னாச்சி அங்கிள்? இப்படி உக்காந்திருக்கீங்க? அவுங்கள எழுப்பி விட வேண்டியது தானே?"


"பாவம்பா, உக்காந்துட்டு போகட்டும்""உக்காந்துட்டு போகட்டுமா? சென்னை வரைக்குமா? இதெல்லாம் சரிப்படாது, நீங்க அங்க போய் லோயர் பர்த்துல உக்காருங்க, நாங்க இங்க பாத்துக்கறோம், கார்த்தி, நீயும் அவர் கூட போ, டேய் தினேஷு, நமக்கு என்ன பர்த்துடா?"


"ரெண்டு அப்பர், ஒரு மிடில்"


"சரி, நீ அந்த அப்பர்ல ஏறிப்படு, பாலா வா, இந்த மிடில் பர்த்தைப் போடுவோம், ஹலோ, கொஞ்சம் எந்திரிங்க, நான் பர்த்து போடணும்"


"எதுக்கு எந்திரிக்கணும்? ரூல்ஸ் படி, ராத்திரி ஒன்பது மணிக்கு முன்னாடி மிடில் பர்த்து போடக்கூடாது, தெரியுமா?"


"உங்க சீட் நம்பர் என்ன சார்?"


"சீட் நம்பர் இல்லை, ஜெனரல் டிக்கெட்டு தான்"


"ரூல்ஸ் படி நீங்க இந்த கம்பார்ட்மெண்ட்ல இருக்கவே கூடாது, வெளீல குதிச்சிடறீங்களா?"


"சரி ரூல்ஸ் வேண்டாம், மனிதாபிமானம்னு ஒன்னு இருக்கில்ல, அவுங்க இடத்திலிருந்து யோசிச்சி பாருப்பா"


"நான் அவங்க இடத்திலிருந்து யோசிச்சா, என் பிரச்சனையை யாரு பாக்குறது? நான் நாளைக்கு காலைல அஞ்சு மணிக்கு சென்னைல இறங்கி, ஆறரை மணிக்கு ஆபீஸ் போகணும், நீ கூட வருவியா? சொல்லுயா?"


"இல்லப்பா, நான் எதுவும் பேசலை, சபரிமலைக்கு போயிட்டு வரும்போது இப்படி பேசறியே, போய் என்ன பிரயொஜனம்?"


"யோவ், டிக்கெட் எடுக்காம ட்ரைன்ல ஏறி உக்காந்து வர்றவனுக்கு இடம் குடுக்குறதுக்கும், நான் சபரிமலைக்கு போய்ட்டு வர்றதுக்கும் என்ன சம்பந்தம்? உனக்கு ரொம்ப ஆத்திரமா இருந்தா, போய் டிடிஆர் கிட்ட கம்ப்ளைண்ட் பண்ணு, புதுசா நாலு ட்ரைன் விடச் சொல்லு"


இது பர்த்தைப் போட்டுப் படுத்த பாலாவுக்கும், இன்னொரு மலையாள குண்டருக்கும் நடுவேயான உரையாடல்.


இப்படியே, வெயிலும் வேர்வையும், சண்டையும் கூச்சலுமாக எர்ணாகுளம் வந்து சேர்ந்தது வண்டி, எர்ணாகுளத்தில் நின்ற வண்டியில், ஏற்கனவே இருப்பவர்கள் போதாதென்று, இன்னும் ஐம்பது பேர் பெரிய பெரிய பெட்டிகளுடன் ஏறி வந்தனர்,


"யோவ், வழி விடுங்கையா, குழந்தையை நசுக்காதீங்க, உள்ளே போக விடுங்க, லக்கேஜை வழியிலருந்து எடுங்க, அம்மா பார்த்து ஏறுங்க" இரண்டு குழந்தைகளை கையில் பிடித்தபடி வந்தது ஒரு முஸ்லிம் குடும்பம்,


"உங்க பார்த்து நம்பர் என்ன சார்?"


"65-70"


"அது அந்த கடைசில இருக்கு, கொஞ்சம் இப்படி வந்து உக்காருங்க, ட்ரைன் கிளம்பினப்புறம் போகலாம், இவங்க இப்போதைக்கு வழி விட மாட்டாங்க, பாலா, பர்த்தை இறக்கி விடு" அவர்களை உக்கார வைத்துவிட்டு மீண்டும் அந்தப் பக்கம் போனேன், முந்தைய கூபேயில் இன்னொரு சபரிமலை கோஷ்டி,


"என்ன சாமி, இவ்வளவு கூட்டமா இருக்கு" கேட்டேன் நான்


"அட, நீங்க வேற சாமி, நாங்க போகும்போது இதே வண்டிதான், இதைவிட அதிகமா கூட்டம் இருந்தது, நீங்க எந்த வண்டில போனீங்க?"


"நாங்க போகும் போது கொல்லம் ஸ்பெஷல்ல போனோம், எந்த பிரச்சனையும் இல்லை"


"நல்லவேளை தப்பிச்சீங்க"


எங்கள் சீட்டில் போய் உக்கார்ந்தேன், ஒரு வழியாகக் கிளம்பியது வண்டி, ஒரு பத்து நிமிடம் கழிந்தது, அங்கே இருந்து வேகமாக வந்தான் பாலா,


"ஹரி இது வேலைக்காவது"


"என்னாச்சி?"


"அடுத்த கம்பார்ட்மென்டலருந்து கும்பல் கும்பலா வர்றாங்க, உக்காந்திருக்கேன், ஒருத்தன் வந்து மடில உக்கர்றான், இன்னொருத்தன் காலுக்கு கீழ பொட்டிய வைக்கிறான், நிக்க கூட இடமில்ல"


"என்ன பண்ணலாம்கிற, டிடிஆரை காணும், ஆர்பிஎப்ஐயும் காணும்"


"அதெல்லாம் நம்பி பிரயோஜனமில்ல, இரு வர்றேன்" சொல்லிவிட்டு நேரே பக்கத்து கூபேக்கு சென்றான்,


"சாமி, திரிசூர் வந்தவுடனே செயின புடிச்சி இழுக்கப் போறேன், போலீஸ் வந்தா பேசணும், வருவீங்களா?"


"அதுக்கெதுக்கு திரிசூர் வரை போகணும், இங்கேயே இழுங்க சாமி, நாங்க பத்து பேர் இருக்கோம், நீங்க ஆறு பேரா? போதுமே, யார் வந்தாலும் பேசலாம்" என்றார் அவர்


"பிரசன்னா. அந்த செயின இழுடா" என்றான், அவன் ஆனமட்டும் முயன்றும் அது அசைந்து கொடுக்கவில்லை,


"சரி அதை விடு, அந்த கூபெல ஒண்ணு இருக்கு" என்றபடியே போய் செயினை இழுத்தான் பாலா, எர்ணாகுளம் - திரிசூர் இடையே நடுக்காட்டில் நின்றது வண்டி, இறங்கி ஓடி வந்தார் கார்டு, எங்கள் பெட்டி அருகே வந்து மேலும் கீழும் பார்த்தார்,


"ஹலோ, இங்க வாங்க, நாங்க தான் இழுத்தோம்" ஜன்னலில் கையை நீட்டிக் கத்தினோம்


"எதுக்காக இழுத்தீங்க"


"எதுவா இருந்தாலும் உள்ள ஏறி வந்து பேசுங்க" என்றான் பிரசன்னா


நிரம்பி வழிந்து கொண்டிருந்த கம்பார்ட்மெண்டை பார்த்தவர், புரிந்து கொண்டார்,


"சரி, திரிசூர் வந்ததும் சரி பண்ண ஏற்பாடு பண்றேன், கொஞ்சம் அதுவரை அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க" என்று சொல்லிச் சென்றார் கார்டு,


நானும் பாலாவும் ஒவ்வொரு சீட்டிலும் இருந்தவர்களிடம் (முன்பதிவு செய்தவர்களிடம் மட்டும்), நிலைமையை விளக்கிச் சொன்னோம், பக்கத்து பெட்டிகளில் நிலைமையை பார்க்கலாம் என்று போனால், அங்கே எந்த சீட்டிலும் முன்பதிவாளர்கள் இருந்த மாதிரி தெரியவில்லை, "சரிதான் நாம் தான் தனியா பிரச்சனைய பேஸ் பண்ணியாகணுமா, பாத்துக்கலாம்" என்றபடியே திரும்பி வந்தோம்.


எர்ணாகுளத்தில் ஏறிய இன்னொரு குடும்பம் எங்கள் கூபெயின் மற்ற இருக்கைகளை பதிவு செய்திருந்தனர், அவர்களிடம் சென்று செயின் இழுக்கப்பட்ட விஷயத்தை சொன்னபோது, அதில் இருந்த பெரியவர் சொன்னார்


"அதெல்லாம் எதுக்குப்பா, இங்க எதுவும் பிரச்சனை பண்ண வேண்டாம், அட்ஜஸ்ட் பண்ணிட்டு போயிடுவோம், சென்னைல போய் கமிஷனரை பாத்து புகர் குடுக்கலாம்" என்றார்


"இருக்கிற கூட்டத்துல மூச்சு திணறி சென்னை போறதுக்குள்ள செத்துப் போயிடுவோமான்னு பயமா இருக்கு, நீங்க இப்படி சொல்றீங்க, ஆமா கமிஷனர் இதுக்கு என்ன பண்ண முடியும்?" என்ற பதில் சொல்லாமல், அவருடைய இருக்கைகளில் உக்கார்ந்திருந்தவர்களை எழுப்பும் வேலையை பார்க்கச் சென்றார்


அப்போது வந்தார் IRCTC யின் கடமை தவறா ஊழியர், "சப்பாத்தி, பரோட்டா, பிரியாணி, எக் மசாலா" என்றபடியே கூட்டத்தில் நடுவே நின்று மெனுவை ஒப்பித்தார்,


"ஹலோ, என்ன பண்றீங்க?"


"டின்னருக்கு ஆர்டர் எடுக்கறேன்"


"ஆர்டரா, அவுங்களை அடுத்த ஸ்டேஷன்ல இறக்கி விட்டுடுவாங்க, நீங்க அன்-ரிசர்வ்டு கம்பார்ட்மெண்டல தான் கொண்டுபோய் குடுக்கணும்" என்றதை மதிக்காமல் எழுதிக்கொண்டார் "S7 Seat 26 - Parotta + Egg masala"


திரிசூர் வந்தது, வண்டி நின்றது, இன்னும் ஒரு நூறு பேர் ஏறினார்கள், நான் செயினை கையில் பிடித்து நின்றிருந்தேன், சரியாக வண்டி நகரத் தொடங்கியவுடன் இழுத்தேன், இரண்டு டிடிஆர்கள், நான்கு ரயில்வே காவலர்கள் அவசரமாக ஓடி வந்தனர், வந்தவர்கள் வாசலில் நின்றிருந்தவர்களை மட்டும் விலக்கி விட்டு கை காட்டினர், வண்டி நகரத் தொடங்கியது, நான் மீண்டும் இழுத்தேன்,


"யாரது திரும்ப இழுத்தது?" என்றபடியே உள்ளே ஏறி வந்தனர்,


"நாங்க தான் சார்" என்றபடியே முன்னே சென்றோம்


"எதுக்காக இழுத்தீங்க?" என்றார்


"வேணும்னு இழுக்கலை, கூட்டத்தில நிக்க முடியாம பேலன்சுக்கு புடிச்சேன் அது செயினா போச்சி" என்றேன்


"என்ன விளையாடுறீங்களா?"


"பின்ன என்ன சார், இவ்வளவு கூட்டத்துல எப்படி சென்னை போய் சேர்றது? முதல்ல வந்த டிடிஆர் எங்களை என்ன வேணும்னா பண்ணிக்க சொல்லிட்டு போயிட்டாரு, அதுதான் எங்களால முடிஞ்சத பண்ணினோம்" என்றான் பிரசன்னா. அதன் பின் எதுவும் பேசாமல் எல்லாரையும் இறக்கி விட்டனர்,


"ஜல்தி, ஜல்தி, ஜல்தி"


"உங்க சீட் நம்பர் என்ன?"


"க்யா?"


"ஆப்கா சீட் நம்பர்?"


"ஜெனரல் டிக்கெட்"


"அப்புறம் எதுக்கு நீ நின்னு நாட்டமை பண்ற? கீழ இறங்கு"


"சார், இங்க வந்து பாருங்க, டாய்லெட் உள்ளே நாலு பேரு இருக்காங்க"


"இந்த பேக் யாரோடது? இந்தப் பொட்டி?"


இடமே ஒரே கலவரமாக மாறிப்போனது, எல்லாரையும் இறக்கி விட படாதபாடுபட்டுகொண்டிருக்கும்போது "சார் கொஞ்சம் வழி விடுறீங்களா, கை கழுவிக்கிறேன்" என்றபடியே எச்சில் கையோடு வந்தார் ஒரு மலையாள குண்டர், வந்த ஆத்திரத்தில் அவரையும் பிடித்து வெளியே தள்ளி விடலாமா என்று தோன்றியது. (எங்கூர்ல மலையாளிகள் பத்தி ஒரு கதை சொல்லுவாங்க)


ஒரு வழியாக எல்லாரையும் இறக்கி விட்டு, இரண்டு புறமும் கதவை பூட்டிய பின் வண்டி கிளம்பியது, வந்து சேர்ந்தார் பழைய டிடிஆர்,


"என்ன சார் இப்படி பிரச்சனை பண்ணிட்டீங்க?"


"நீ ஒரு கவுர்மென்ட் சர்வெண்டு, நீயே, என்ன வேணும்னா பண்ணிக்குங்கனு சொல்லிட்டு போயிட்ட, அப்புறம் நாங்க என்ன தான் பண்றது?"


"நான் ஏற்கனவே நேத்தே கம்ப்ளையின்ட் கொடுத்திருந்தேன், அது தான் வந்தாங்க?"


"என்னது, நீ கம்ப்ளெயின்ட் குடுத்தியா? அப்புறம் ஏன் இவ்வளவு நேரம் வராம இப்போ வந்தாங்க? அதுவும் நேத்து குடுத்தா இன்னிக்கு வர்ராங்களா? மரியாதையா போயிடு" நிஜமாகவே கடுப்பாகிப்போனான் பிரசன்னா


அரைமணி நேரம் கழித்து மீண்டும் நின்றது வண்டி, இந்த முறை வேறு ஏதோ பெட்டியில் செயினை இழுத்திருக்கிறார்கள், இப்போது வண்டி பின்னோக்கி செல்லத் தொடங்கியது "என்னடா, திரும்பவும் கோட்டையத்துக்கே போகுதா வண்டி, நாம அடிக்கடி செயின் இழுக்குறோம்னு, ஏறின இடத்திலேயே இறக்கி விடப்போறங்களா?" பத்து நிமிடங்களுக்கு பின் மீண்டும் கிளம்பியது


அடுத்து வந்தது ஆலவாய், மீண்டும் ஐம்பது பேர், மீண்டும் செயின், மீண்டும் ரயில்வே போலீஸ், இந்த முறை இரண்டு பக்கத்து vestibule கதவுகளையும் மூடிவிட்டு சென்றுவிட்டார். நாலு மணியிலிருந்து கத்திக்கொண்டே வந்ததால், தாகம் எடுக்க தண்ணீரைத் தேடியபோது தான், ஒட்டுமொத்த கம்பார்ட்மென்டிலும் யாரிடமும் இல்லாதது தெரிந்தது. கோபத்தில் சாப்பாட்டுக்கும் ஆர்டர் கொடுக்காமல் விட்டது இப்போது உரைத்தது, சரி முகத்தையாவது கழுவலாம் என்று போனால் அங்கே குழாயில் காற்று தான் வந்தது. இரண்டு புறமும் மூடப்பட்ட ஷட்டர்களும் அதற்கு அந்தப்புரம் கேட்ட அவர்களின் கோபக்குரல்களும் ஏதோ கோத்ராவை ஞாபகப்படுத்த, மலை இறங்கிய களைப்பில் கண்ணை சுற்றும் தூக்கத்தையும் விரட்டி விட்டு உக்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம் மூன்று பேரும்.


ஒரு வழியாய் பாலக்காடு வந்தது, இறங்கி ஓடிப்போய் எல்லாருக்கும் ஜன்னல் வழியே தண்ணீர் வாங்கிக் கொடுத்த குழப்பத்தில் கையிலிருந்து இருபது ரூபாய் கொடுக்க வேண்டியதாகிவிட்டது. இப்போது மூன்று போலீஸ்காரர்கள் கம்பார்ட்மென்டில் ஏறினர். உதவி செய்ததற்கு நன்றி சொல்லிவிட்டு பேசிக்கொண்டிருந்தபோது "இதல்லாம் எங்களால ஒண்ணும் பண்ண முடியாதுங்க, நீங்க தான் உங்க பாதுகாப்புக்கு பொறுப்பு, இங்க நாம இறங்க சொல்லிட்டோம் ஆனா ஆந்திரா போயிட்டா அப்புறம் அவங்கள எதுவும் பண்ண முடியாது, ஆலவாய்க்கு முன்னாடி வண்டி நின்னுதே, அப்போ செயின் இழுத்தது நான்தான், S2 கூட்டத்தை என்னாலையே எதுவும் பண்ண முடியல, அது தான் செயின இழுத்தேன்" என்று சொல்லி வயிற்றில் புளியைக் கரைத்தார். பாலக்காட்டில் வெஜிடபிள் பிரியாணி என்ற பெயரில் ஒரு வஸ்துவை வாங்கி பாதி சாப்பிட்டு முடியாமல் மீதியை வீசி எறிந்தோம்.


வாங்கிய தண்ணீரிலேயே கையை கழுவி விட்டு படுத்து தான் தெரியும், காட்பாடியில் யாரோ ஒருவர் வந்து கலை சுரண்டும் போது தான் விழிப்பு வந்தது. பார்த்தால் பெட்டி முழுவதும் ஆட்கள். "திரும்பவும் ஆரம்பதிலேருந்தா? நம்மால முடியாதுடா சாமி" என்று எழுந்து ஒடுக்கிக் கொண்டு அமர்ந்தோம்.


அரட்டை அடித்துக்கொண்டு வந்ததில் பெரம்பூர் வந்ததே தெரியவில்லை, பெரம்பூரில் சிக்னலில் நிற்கும்போதே இறங்கியவரிடம் "கமிஷனர் ஆப்பீஸ் இங்கே மாத்திட்டங்களா சார்?" என்ற கேள்விக்கு பதில் இல்லை.


இப்படியாக நாலரை மணிக்கு வந்து சேரவேண்டிய வண்டி ஏழரை மணியோடு சென்ட்ரல் வந்தது. சென்ட்ரலில் மொத்த கம்பார்ட்மெண்டும் காலியாக, காத்திருந்த கூட்டம் வந்து கும்மியது. நல்லவேளையாக அதிகம் தள்ளுமுள்ளு இல்லாமல் இறங்குவதற்கு முடிந்தது.


"டேய் ஹரி, நீதானே இந்த ட்ரைன்ல டிக்கெட் எடுத்தது, உன்னை தான் அடிக்கணும்"


"நான் என்னடா பண்ணுவேன், ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே பார்த்தாலும், இந்த வண்டில மட்டும் தான் டிக்கெட் கிடைச்சது, ஆனா சபரிமலையை ஏறி இறங்கினதை விட இந்த ட்ரைன் தான் சாகசம் அதிகமா இருந்தது"


"டேய் சதிஷு, ஏன்டா எதுவுமே பேசாம வர்ற?"


"எத்தனை தடவை கேட்டேன், நான் செயின புடிச்சு இழுக்கறேன்னு, ஒரு தடவையாவது குடுத்தீங்களா?"


"கவலைபடாதே சதீஷு, அடுத்த வருஷமும் இதே வண்டில டிக்கெட் எடுக்குறேன், அப்போ நீ புடிச்சி இழுக்கலாம்"


"வேணாம் பாலா, அடுத்த தடவை நாம அன்ரிசர்வ்டு டிக்கெட் எடுத்து ஸ்லீப்பர் கிளாஸ்ல ஏறுறோம், டிக்கட் எடுத்தவங்களை புடிச்சி வெளில தள்றோம்"


பின்குறிப்பு
இதே பிரசன்னா தான் என்னை "ஏஜண்டு சொதப்பிட்டண்டா, டிக்கெட் கன்பர்ம் ஆகல, பேசாம ஒரு அன்ரிசர்வ்டு டிக்கெட் எடுத்து வந்துடு" என்று கல்கத்தா அழைத்த அருமை நண்பன
சங்கர்

Wednesday, April 14, 2010

வாடா - உலக சினிமாவுக்கு ஒரு சவால்!!

வாடா - ஒரு முன்னோட்டம்.

"வாடா" அப்படின்னு ஒரு படம் வர்ற வெள்ளிக்கிழமை ரீலீஸ்
ஆக போகுதுங்க.கடந்த ரெண்டு வாரமாவே பேப்பர்இல் விளம்பரம்
வந்துகிட்டுருக்கு.என்னது வடைனு வச்சிருந்த டீ கடைக்கு வர்ற
கூட்டமாவது வந்திருக்குமா....??
ஹலோ படம் ரீலீஸ் ஆகட்டும், நைட் ஒன்பது மணிக்கு டாஸ்மாக்ல பின்னுர கூட்டம் மாதிரி பிச்சுக்க போகுது பாருங்க.....!!

(கிழே இருக்கும் படத்தை பார்த்து மெரசல் ஆனால் கம்பெனி
பொறுப்பல்ல.....எனக்கு ஒரு டவுட் தான் இந்த படத்தில் சுந்தர்.சி
அவர்கள் எத்தனாவது கிரில் வண்டி ஓட்டுகிறார்?? தெரிந்தவர்கள்
சொல்லவும்)இந்த படத்தின் மீது எனக்கு எப்படி ஈர்ப்பு வந்ததுன்னா....மர்மதேசம் படம் பார்க்க வூட்லண்ட்ஸ் தியேட்டருக்கு போனேன்.படம் முடிஞ்சு வெளியே வரும் போது தான் வாடா படத்தின் ஸ்டில்லை வாசல்ல கவனிச்சேன்...
அப்பதான் முடிவு பண்ணேன் இந்த படத்தை மிஸ் பண்ண கூடாதுனு.உடனே அங்கே நின்ன செக்யூரிட்டியிடம் "அண்ணே வாடா படத்துக்கு எப்பணே ரிசர்வ் ஸ்டார்ட் பண்ணுவீங்க??" என்று கேட்டேன்.அவர் என்னை டெர்ரர்ஆக
பார்த்து வேறு பக்கம் திரும்பி கொண்டார்."இந்தாங்கணே 200 ரூவா எனக்கு வெள்ளிக்கிழமை ஒரு அஞ்சு டிக்கெட் எடுத்து வச்சிக்கிங்க,கண்டிப்பா வருவேன்"என்று அங்கிருந்து கிளம்பினேன்.


இப்ப என்ன பிரச்சனைனா நண்பர்களை படத்துக்கு கூப்பிட்டா
ஒருத்தன் என்னனா எங்க ஆயா வுட்டுக்கு போறேன், இன்னொருத்தன் என் நட்பே வேணாம்னு போய்ட்டான்.....மச்சி நீ வாடா,மாமே நீ வாடா என்று யாரை கூப்பிட்டாலும் எஸ் ஆகி போகிறார்கள்.அதுக்கு அப்புறம் யாரையும் கூப்பிடல. நாலு டிக்கெட் எக்ஸ்ட்ரா இருக்குங்க...கவுண்டர்லலாம் டிக்கெட் கிடைக்காது எல்லாமே பல்க் புக்கிங் பண்ணீட்டாங்க.அதனால யாருக்காவது இந்த காவியத்தை பார்க்கனும்னு தீடிர்னு தோணிச்சுனா என்னை காண்டக்ட் பண்ணுங்க.

வாடா அப்படின்னு மரியாதை இல்லாம டைட்டில் வச்சா எவன் தியேட்டருக்கு வருவான் அப்படின்னு நீங்க நினைக்கிறது தப்பு."வாடா"வின் அர்த்தம் நாயகி நாயகனை பார்த்து வாடா என்று அன்பாக கூப்பிடவதாக இருக்கும் என்று ஸ்டில்லை பார்த்து நினைத்தேன் ஆனால் ட்ரைலரை பார்த்தவுடன் தான் தெரிந்தது அப்படி இல்லை என்று.சுந்தர் அவர்கள் வில்லனை வாடா வாடா என்று பெண்டு எடுப்பார் என்று தெரிகிறது.


நிறைய நண்பர்களுக்கு விண்ணை தாண்டி வருவாயா படம் பார்த்த அன்னைக்கு தூக்கம் வரலன்னு சொன்னாங்க.நான் வாடா படத்தின் ட்ரைலரை பார்த்ததில் இருந்து தூக்கம் அடியோடு போச்சுங்க!!
ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு பீலிங்க்ஸ்!!
அதுவும் கடைசியில் பைக் மேல... முடியல....நீங்களும் முடிஞ்சா பாருங்க....வாடா படத்தின் சிறப்பம்சங்கள் சில:


# படத்தை பார்க்காம நாம எந்த ஒரு தப்பான முடிவுக்கும் வர
கூடாது.ஆனா இந்த படத்தை பத்தி முடிவு பண்ண அந்த பைக்
சீன் ஒன்னு போதும்னு நினைக்கிறேன்.இந்த படம் குவாட்டர்
அடித்து செல்ல சிறந்த படம் என்று டாஸ்கர் குழுவால் பரிந்துரை
செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

# மேலும் வாடா படம் கண்ணம்மாபேட்டை சுடுகாடு பிலிம் பெஸ்டிவலில் திரையிட தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல்.வாடா படத்துக்கு இதை விட ஒரு சிறப்பான அறிமுகம் கிடைக்காது என்று ஊருக்குள் பேசி கொல்கிறார்கள்.


# நீண்ட நாட்கள் கழித்து தமிழ்சினிமாவில் வாடா படத்தில் தான் போட் சேசிங் காட்சிகள் வருகின்றனவாம்.அந்த காட்சியை கேரளாவில் உள்ள அளப்பியில் எடுத்து உள்ளனர்.அந்த காட்சிகளை பார்ப்பவர்களுக்கு மயிர் கூச்சரியலனாலும் வேற ஏதாவது கூச்சரிய வாயிப்பிருக்கு!! தலைவலியை சொன்னேன்ங்க....


# சுந்தர்.சி அவர்கள் இந்த படத்தில் கெட்-அப் மாற்றியுள்ளார்...
அட நீங்க வேற சூப்பர் பாக்கு கலரில் ப்ளீச் செய்து இருக்கிறார்னு
சொன்னேன்ங்க.

# மேல உள்ள ஸ்டில்லை பார்த்தாலே இது ஒரு வித்தியாசமான படம்னு உங்களுக்கு புரிஞ்சுருக்கும்...எப்படினா எப்பவும் தமிழ்சினிமாவில் ஹீரோ மட்டும் தான் கோலி மேல காலை வச்சி ஹீரோயினி மேல உழுவார் ஆனா இதில் கூடவே காமெடியனும் சேர்ந்து விழுவுது தான் படத்தின் சிறப்பு!!

# வாடா படம் உலகப்படங்களுக்கு இணையாக எடுத்து உள்ளனர் என்று ஏதோ ஒரு வட்டம் தெரிவிக்கிறது.அதிலும் மொக்கை போட
விவேக் இருப்பது படத்துக்கு கூடுதல் பலம்.நாயகி படம் முழுவதும்
தாராள கொள்கையை கடைப்பிடிப்பார் என்று கண்டிப்பாக எதிர்ப்பார்க்கலாம்.திரும்பவும் சொல்றேன் போனா வராது வந்தா போகாது கடைசி நாலு டிக்கெட் தான் இருக்கு கடைசி நாலு டிக்கெட் தான் இருக்குது.வாடா என்ற மெகா அதிரடி காவியத்தின் நாலு டிக்கெட் எக்ஸ்ட்ரா இருக்கு. விருப்பமுள்ளவர்கள்
மற்றும் வாழ்வில் வெறுப்படைந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.யார் முதலில் வருகிறார்களோ அவர்களுக்கு டிக்கெட் அளிக்கப்படும்.கடைசி நேரத்தில் டிக்கெட் கேட்பதை தவிர்க்கவும்.


வாடா படத்தை டாவா பார்க்க சீக்கிரம் அணுகவும்.....!!

வாருங்கள் வாடா படத்தை பார்ப்போம் சமாதி நிலையை அடைவோம்!!


வாடா படத்தின் முன்னோட்டத்தை உங்களுக்கு அளித்தது என் வாழ்நாள் பாக்கியமே. இந்த விழிப்புணர்வு மேலும் பல பேரை சென்று அடைய ஒட்டு போடவும்.மேலும் இந்த உலகப்படத்தை பற்றி டவுட் ஏதேனும் இருந்தால் பின்னூட்டத்தில் தெளிவுப்படித்தி கொல்லவும்


ஜெட்லி.....

Monday, April 12, 2010

பொது அறிவு செய்திகள்

ஜெட்லி வழங்கும் பொது அறிவு செய்திகள் (12.4.10)

ஒரு கொடுமை ரெண்டு கொடுமைனா பரவாயில்லை....
ஊருப்பட்ட கொடுமைகள் நாட்டுல நடந்துட்டு இருக்குங்க!!
அது உங்கள் பார்வைக்கு....

********************************************
முக்கிய அ(பி)ட்டு செய்திகள்:

ராஜலீலை கடந்த சனிக்கிழமை நூறாவது நாள் வெற்றி விழாவை
கொண்டாடியது....!!இந்த வெற்றி தொடர்பான அறிக்கை உங்கள் பார்வைக்கு:

ராஜலீலை,இந்த படத்துக்கெல்லாம் இப்படி ஒரு விளம்பரம்
போடுறது கலிகாலம்னு தான் சொல்லணும்.இருந்தாலும்
ராஜலீலை நூறாவது நாள் வெற்றியை போற்றும் விதமாக அகில
உலக தேவநாதன் ரசிகர் மன்ற சார்பில் ரசிகர்கள் அனைவரும்
கிடைக்கும் முட்டு சந்துகளில் பீர் பந்தல் அமைத்து மக்களுக்கு
சேவை செய்யுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

***************************************

மேதை (தலைவர் இஸ் பேக்):


இந்த படம் ரீலீஸ் ஆகாதுனு நினைச்சேன் பார்த்தா புது புது ஸ்டில்ஆ ரீலீஸ் பண்றாங்க.எனக்கு பயமா இருக்கு...இந்த படத்தை பார்த்து நான் விமர்சனம் பண்ணலன்னா என்னை விமர்சகர் இல்லைன்னு இந்த நாடு சொன்னாலும் சொல்லும்.(இப்ப மட்டும் நீ விமர்சகரா?? நல்ல கேள்வி.)


இன்னும் அவர் லிப்-ஸ்டிக் போடறதை விடல பாருங்க!!
சுறாக்கு சரியான போட்டி மேதை படம்தான் என்று ஊருக்குள்ள
பேசிக்கிறாங்க!!

***************************

என் கணவர் அனுமதியுடன்
"திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்..."
நடிகை ரம்பா பேட்டி.....


நீங்க நடிப்பிங்க....யார் பார்க்கறது??
போய் புள்ளக்குட்டிய படிக்க வைங்கம்மா....!!

*************************************

சென்னையை தவிர மற்ற ஊர்களில் அறிவிக்கப்பட்ட மின்வெட்டு..
ஆனால் எங்கள் ஏரியாவில் அறிவிக்கபடாத மின்வெட்டு, கரண்ட் போச்சுன்னா வர்ற ஆறு மணி நேரம் ஆகுது.....அதுவே பக்கத்தில் இருக்கும் பெரிய அடுக்கக வீடுகளில் பளிச்னு லைட் எரியுது.....

நம்மை மாதிரி ஏழைகளுக்கு ஸ்பென்சர் தான் சொர்க்கம்..
அஞ்சு ரூபாய் பைக் டோக்கன் கொடுத்துட்டு ரெண்டு மணி நேரம்
ஏ.சி.யில் கடலை போடலாம்.பார்த்தா இப்போ அங்கயும் கரண்ட்
கட் பண்றாங்கனு சொல்றாங்க.....என்னத்த சொல்றது......

எனக்கு ஒரு டவுட்ங்க நம்ம ஊர்ல மட்டும் தான் இப்படி கரண்ட்
கட் பண்றாங்களா இல்ல பக்கத்துக்கு ஸ்டேட்ளையும் இப்படி தான் நடக்குதா.......??

***********************************************
பொது அறிவு கேள்வி:

பெசன்ட் நகர் பீச்சில் மணல் மேடு மற்றும் சிறு பள்ளம் மாதிரி
காட்சி தரும் இந்த படத்துக்கு என்ன காரணமாக இருக்கும்??


a . வேற்றுகிரகவாசிகள் வந்த வாகனத்தின் தடமா??

b . NDTV நடத்திய க்ரீனதொன் நிகழ்ச்சியின் தடமா??

அடுத்த GREENATHON நிகழ்ச்சி நடத்த திரும்பவும் மண் கூட்டி
சிற்பம் செய்ய தேவையில்லை என்று அப்படியே விட்டு விட்டு
சென்று விட்டார்களோ என்னவோ...ரைட்,அதெல்லாம் நமக்கு
எதுக்கு பீச்சுக்கு போனமா கடலையை போட்டமா சாரி பார்த்தாமோ
என்று வந்து கொண்டே இருப்போம்!!


********************************

அ.இ.ச.ம.க தலைவர் சரத்குமார் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் இருந்து சில வரிகள்....


அ.இ.ச.ம.கட்சியின் பொதுக்கூட்டம் வரும் 18 ஆம் தேதி கோவையில்
நடக்கிறது..................... இதில் தொலைநோக்கு பார்வையோடு நாட்டு
மக்கள் நன்மை கருதி பல்வேறு 'முக்கிய' தீர்மானங்கள் நிறைவேற்ற
ப்பட உள்ளன....!


நாலு powerful telescope வாங்க போறங்களா ,கட்சியை கலைக்க போறாங்களானு எல்லாம் கேட்க கூடாது!!

வர்ட்டா....

***********************************************
நாட்டுக்கு மிக அவசியமான செய்திகளை உங்களுக்கு அள்ளி
தந்ததில் மகிழ்ச்சி.....உங்களுக்கு வளந்த மாதிரி பிறருக்கும்
பொது அறிவு வளர ஒட்டு போடவும்..... :))

ஜெட்லி.....

Tuesday, April 6, 2010

ப்ளாக் அண்ட் வைட் ஜலகலகண்டர்!!

ப்ளாக் அண்ட் வைட் ஜலகலகண்டரின் தீர்க்கதரிசனங்கள்!!

நேத்து காலையிலே வழக்கம் போல தான் விடிஞ்சுது,வழக்கம்
போல அதை நான் பார்க்கவில்லை என்பது வேறு விஷயம்.
சரியா ஏழே காலுக்கு மணி என் செல் சிணுங்கியது.யார்ப்பா
அது தூக்கத்தை கெடுக்குறது என்று நினைத்தவாரே எடுத்தால்
நெருங்கிய நண்பன்.சும்மாவே மொக்கை போடுவான் இப்போ
காலையிலே வேற போன் பண்றானே ஏதாவது முக்கியமான
விஷயமா இருக்கும்னு நம்பி "என்னடா அர்ஜென்ட் மேட்டர்ஆ"
என்று கேட்டேன்.அடுத்து அவன் சொன்ன விஷயம் பயங்கர
சீரியஸ் மேட்டர்ங்க.....


அதாவது வர்ற 17 ஆம் தேதி முதல் செல்போன் எல்லாம் வேலை செய்யாது என்றான்.எனக்கு இந்த செய்தியை கேட்டவுடன் சந்தோசம் வந்தது அதாவது இனிமே யாருக்கும் மிஸ்ட் கால் கொடுக்க வேணாம், மாங்கு மாங்குனு forward msg அனுப்ப வேணாம் என்று நினைத்தேன்.


சரி இந்த விஷயத்தை யார் அவன்கிட்ட சொன்னதுன்னு கேட்டா
"அது சீக்ரெட்..செல்போன் வொர்க் ஆகலன்னா யார்னு சொல்றேன்"
அப்படினுட்டான்!!ஒருவேளை நாசாவில் இருந்து அவன் நண்பன் யாராவது சொல்லி இருப்பாங்களோ என்று நினைச்சேன்.... ஆனா அடுத்த செகண்ட்ஏ அதுக்கு வாய்ப்பில்லைன்னு புரிஞ்சுது காரணம் என் கூட இல்லை பழகுறான்!!

ஆகமொத்தத்தில் தூக்கத்தை கலைச்சு விட்டுட்டான்.அப்புறம்
திருப்பியும் கொஞ்சம் நேரம் கழிச்சு போன் பண்ணி "இன்னொரு
விஷயம் கூட சொன்னாருடா...". "என்ன 2012 ல உலகம் அழிய
போகுதா??" என்றேன். "அதை பத்தி அடுத்த வருஷம் சொல்றேன்
அப்படின்னு சொன்னாரு.....இது வேற,அதாவது இன்னும் ஒரு
மாசத்துல தமிழ்நாட்டில் பிரபலமானவங்க ஒருத்தர் செத்துடுவார்
அப்படின்னு சொன்னாரு டா...." என்றான்.

அப்பதான் எனக்கு கன்பார்ம் ஆச்சி நண்பன் ஏதோ ப்ளாக் அண்ட் வைட் ஜலகலகண்டரின் நாடி ஜோசியம் பார்க்க போயிருப்பான் என்று. போன வார பேப்பரில் கூடிய விரைவில் பத்து இலக்கு செல்போன் நம்பரை எல்லாம்
பதினோரு இலக்காக மாற்ற போகிறார்கள் என்று படித்தேன்.இங்கே ஏதோ ஒரு ஜலகலகண்டர் என்னன்னா போன் வொர்க் ஆகாது என்று அருள் வாக்கு கொடுத்து இருக்கிறார்..பார்ப்போம்!!ஆனா அவர் சொன்ன மாதிரி போன் வொர்க் ஆகலைனா சந்தோஷப்பட கூடியவர்களில் இளைய தளபதி விஜயும் ஒருவராக இருப்பார்.காரணம் உங்களுக்கு தெரியாதது அல்ல, சுறா படம் வேற வருது பல forward msg வரும்.....வேற ஒன்னும் சொல்றதுக்கு இல்ல....!!


ஏப்ரல் பூல் பண்ண யாராவது சொல்லி இருப்பாங்கப்பா....நீ வேற ஏற்கனவே கோவா விளம்பர மேட்டரில் நல்லா முட்டாள் ஆயிட்டே என்று நீங்கள் நினைத்தால் நான் சொல்வதருக்கு ஒன்றுமில்லை.கோவா விஷயத்தில் நான் எப்போவோ முட்டாள் ஆயிட்டேன் அது ஏற்கனவே அவங்க போட்ட விளம்பரம் "வெற்றிகரமாக ஓடிக்கொண்டிரிக்கிறது"!!

***********************************************

"ஹோ...கில்மா ஜே ரவ" !!


ஜெட்லி

Friday, April 2, 2010

பையா - என் பார்வையில்

பையா வித் குப்பனும் சுப்பனும்!!


ரொம்ப நாள் கழிச்சு நம்ம நண்பர்கள் குப்பனையும் சுப்பனையும்
படம் விட்டு வீட்டுக்கு வரும் போது பார்த்தேன்...அந்த வரலாறு
முக்கியம் வாய்ந்த உரையாடல்கள் உங்கள் பார்வைக்கும்!!


குப்பன்: என்ன மாமே பையா பார்த்துட்டு வர போல??

ஜெட்லி: இதெல்லாம் கேள்வியாடா வெள்ளிக்கிழமை ஆனா நமக்கு வேற என்ன வேலை.

குப்பன்: எங்கே தியாகராஜாவா?

ஜெட்லி: இல்லைப்பா...கணபதிராம்..

சுப்பன் : என்னடா எப்பவும் அங்கே தான் போவ...தீடிர்னு கணபதிராம் போய்ட்ட...

ஜெட்லி: அந்த தியேட்டர் வர வர செம கலீஜ்ஆ இருக்குப்பா...அதான்...


குப்பன்:சரி பையா என்ன கதை...

ஜெட்லி: பெங்களூரில் படம் ஆரம்பிச்ச உடனே கார்த்தி தமன்னாவை பார்க்குறாரு....

குப்பன்: பார்த்தவுடனே லவ்வா??

ஜெட்லி: லவ் வராம வேற என்னய்யா வரும்....அப்புறம் தீடிர்னு தமன்னா சென்னை போக கார்த்தி கார்ல ஏறுறாங்க...

குப்பன்: ஏய்..நிறுத்து நிறுத்து...கார்த்தி என்ன டிரைவரா...?

ஜெட்லி: இல்லப்பா...EC படிச்சுட்டு வேலை தேடுவாரு...ஆனா படம் புல்லா கார் தான் ஓட்டுவாரு...

சுப்பன்:அப்புறம் தமன்னாவை துரத்திட்டு வில்லன் குரூப் வருமா??ஜெட்லி: டேய் சுப்பா எனக்கு முன்னாடியே படம் பார்த்துட்டியா
நீ??

சுப்பன் : அட போப்பா...இது கூட தெரியாம காலம்காலமா தமிழ்சினிமாவில்
இப்படி தானே வருது....

குப்பன்: கார்த்தி எப்படி ஜெட்லி...?

ஜெட்லி: மனுஷன் பின்னி பெடல் எடுக்கறாரு...இவர் படத்தில்
காமெடியன்ஏ தேவை இல்லை...அவர் வசனம் பேசினாலே
சிரிப்பு வருது.....

குப்பன்: பைட்??

ஜெட்லி: படம் பார்க்க போகும் போது வெளியே ரசிகர் மன்ற பேனரில் மாவீரன் கார்த்தி அப்படின்னு போடும் போதே மைல்ட்ஆ டவுட் ஆனேன்.....

சுப்பன்: ஏன் மாமே??

ஜெட்லி: பின்னே....இருபது பேர் ரவுண்ட் கட்டி நின்னாலும் ஒரு அடி வாங்கமா பறந்து பறந்துல அடிக்கிறாரு....

சுப்பன்: பைட் கொஞ்சம் ஓவர்ஒ...

ஜெட்லி: ரொம்ப ஓவர்...

குப்பன்: அப்புறம் வேற ஏதாவது படத்தை பத்தி சொல்றது...

ஜெட்லி: இன்டெர்வல் ப்ளாக்கில் கார்த்தி தமன்னாவிடம் "அவுங்க உன்னை தேடி வரல என்னை தேடி வந்து இருக்காங்க..." என்று ஏக பில்ட் அப் பண்ணுவார்.சரி நானும் பாம்பே பிளாஷ்பேக் பயங்கரமா இருக்கும்னு பார்த்தா சண்டைகோழி முதல் பாதியை பத்து நிமிஷம் பார்த்த
மாதிரி இருந்தது....என்ன கொடுமை குப்பா இது...

சுப்பன் : அய்யயோ....பொதுவா லிங்குசாமி படத்தில் வில்லனுக்கு
ரோல் சூப்பர்ஆ இருக்குமே....இதில் மிலிந்த் சோமன் எப்படி??

ஜெட்லி : நானும் உன்னை மாதிரி தான் நினைச்சேன்...பார்த்தா
மிலிந்த் சோமன் வில்லனும் பயங்கர மொக்கை ஆயிட்டார்.
லிங்குசாமி ஏன் இப்படி பண்ணார்னு தெரியல. சாம்பிள்க்கு
ஒரு சீன் சொல்றேன் கேளு....டோல்கேட்டில் மிலிந்த்தும்
அவர் ஆட்களும் கார்த்தியை தேடுவாங்க...ஆனா நம்ம
கார்த்தி ஒரு குடை புடிச்சிட்டு அவங்களை தாண்டி போய்
நின்னு டிமிக்கி கொடுப்பார்(மூஞ்சு தெரியாதாம்).

குப்பன்: என்ன கொடுமை ஜெட்லி இது....

ஜெட்லி: ஆனா ஒரு சீன் மனசை ரொம்ப தொட்டிச்சு...
தமன்னாவை அவங்க பாட்டி வீட்டில் விட்டுட்டு வரும் போது
கார்த்தி நண்பியிடம் போனில் பேசும் சீன் உண்மையலே செம...
லவ் பீலிங்க்ஸ்.....

சுப்பன்: அப்புறம் வேற என்ன ஸ்பெஷல்...

ஜெட்லி: வேற யாரு யுவன் ஷங்கர் ராஜா....செம கலக்கு கலக்கியிருக்கிறார்.அப்புறம் கேமராமேன் மதி நல்லா
பண்ணி இருக்காரு.

சுப்பன்: யோவ் என்னய்யா நீ தமன்னாவை பத்தி ஒன்னுமே
சொல்லலை....

ஜெட்லி: தமன்னா பத்தி நிறைய சொல்லலாம்....பாடல் காட்சியில்
நல்லா திறமை காட்டியிருக்காங்க....கூடிய விரைவில் தமன்னா
முன்னேற்ற பேரவைன்னு யாராவது ஆரம்பிச்சாலும் ஆச்சரியம்
இல்லை.அதுவும் பாட்டி வீட்டில் ஒரு டிரஸ்இல் தேவதை மாதிரி
இருப்பாங்க......

குப்பன்: சரி சரி தொடச்சுக்கோ...தியேட்டர்ல ரெஸ்பான்ஸ் எப்படி....

ஜெட்லி : மிக்ஸ்ட் ரெஸ்பான்ஸ் தான்ப்பா.....

சுப்பன் : நீ என்ன சொல்ற...??

ஜெட்லி : நமக்கு தேவை டைம்பாஸ்....சில காட்சிகள் தவிர
நல்லா டைம்பாஸ் ஆச்சுனு தான் சொல்லணும்......நமக்கு
பொழுது போன சரி...ஆனா செகண்ட் ஆப்.....மட்டும் கொஞ்சம்
பொறுத்துக்கோ குப்பா.....


குப்பன்,சுப்பன்: சரி அப்ப இன்னைக்கு நைட் ஷோ போய்
குந்திக்க வேண்டியது தான்.....


ஜெட்லி.....