ஒரு கொடுமை ரெண்டு கொடுமைனா பரவாயில்லை....
ஊருப்பட்ட கொடுமைகள் நாட்டுல நடந்துட்டு இருக்குங்க!!
அது உங்கள் பார்வைக்கு....
********************************************
முக்கிய அ(பி)ட்டு செய்திகள்:
ராஜலீலை கடந்த சனிக்கிழமை நூறாவது நாள் வெற்றி விழாவை
கொண்டாடியது....!!
இந்த வெற்றி தொடர்பான அறிக்கை உங்கள் பார்வைக்கு:
ராஜலீலை,இந்த படத்துக்கெல்லாம் இப்படி ஒரு விளம்பரம்
போடுறது கலிகாலம்னு தான் சொல்லணும்.இருந்தாலும்
ராஜலீலை நூறாவது நாள் வெற்றியை போற்றும் விதமாக அகில
உலக தேவநாதன் ரசிகர் மன்ற சார்பில் ரசிகர்கள் அனைவரும்
கிடைக்கும் முட்டு சந்துகளில் பீர் பந்தல் அமைத்து மக்களுக்கு
சேவை செய்யுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.
***************************************
மேதை (தலைவர் இஸ் பேக்):
இந்த படம் ரீலீஸ் ஆகாதுனு நினைச்சேன் பார்த்தா புது புது ஸ்டில்ஆ ரீலீஸ் பண்றாங்க.எனக்கு பயமா இருக்கு...இந்த படத்தை பார்த்து நான் விமர்சனம் பண்ணலன்னா என்னை விமர்சகர் இல்லைன்னு இந்த நாடு சொன்னாலும் சொல்லும்.(இப்ப மட்டும் நீ விமர்சகரா?? நல்ல கேள்வி.)
இன்னும் அவர் லிப்-ஸ்டிக் போடறதை விடல பாருங்க!!
சுறாக்கு சரியான போட்டி மேதை படம்தான் என்று ஊருக்குள்ள
பேசிக்கிறாங்க!!
***************************
என் கணவர் அனுமதியுடன்
"திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்..."
நடிகை ரம்பா பேட்டி.....
நீங்க நடிப்பிங்க....யார் பார்க்கறது??
போய் புள்ளக்குட்டிய படிக்க வைங்கம்மா....!!
*************************************
சென்னையை தவிர மற்ற ஊர்களில் அறிவிக்கப்பட்ட மின்வெட்டு..
ஆனால் எங்கள் ஏரியாவில் அறிவிக்கபடாத மின்வெட்டு, கரண்ட் போச்சுன்னா வர்ற ஆறு மணி நேரம் ஆகுது.....அதுவே பக்கத்தில் இருக்கும் பெரிய அடுக்கக வீடுகளில் பளிச்னு லைட் எரியுது.....
நம்மை மாதிரி ஏழைகளுக்கு ஸ்பென்சர் தான் சொர்க்கம்..
அஞ்சு ரூபாய் பைக் டோக்கன் கொடுத்துட்டு ரெண்டு மணி நேரம்
ஏ.சி.யில் கடலை போடலாம்.பார்த்தா இப்போ அங்கயும் கரண்ட்
கட் பண்றாங்கனு சொல்றாங்க.....என்னத்த சொல்றது......
எனக்கு ஒரு டவுட்ங்க நம்ம ஊர்ல மட்டும் தான் இப்படி கரண்ட்
கட் பண்றாங்களா இல்ல பக்கத்துக்கு ஸ்டேட்ளையும் இப்படி தான் நடக்குதா.......??
***********************************************
பொது அறிவு கேள்வி:
பெசன்ட் நகர் பீச்சில் மணல் மேடு மற்றும் சிறு பள்ளம் மாதிரி
காட்சி தரும் இந்த படத்துக்கு என்ன காரணமாக இருக்கும்??
a . வேற்றுகிரகவாசிகள் வந்த வாகனத்தின் தடமா??
b . NDTV நடத்திய க்ரீனதொன் நிகழ்ச்சியின் தடமா??
அடுத்த GREENATHON நிகழ்ச்சி நடத்த திரும்பவும் மண் கூட்டி
சிற்பம் செய்ய தேவையில்லை என்று அப்படியே விட்டு விட்டு
சென்று விட்டார்களோ என்னவோ...ரைட்,அதெல்லாம் நமக்கு
எதுக்கு பீச்சுக்கு போனமா கடலையை போட்டமா சாரி பார்த்தாமோ
என்று வந்து கொண்டே இருப்போம்!!
********************************
அ.இ.ச.ம.க தலைவர் சரத்குமார் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் இருந்து சில வரிகள்....
அ.இ.ச.ம.கட்சியின் பொதுக்கூட்டம் வரும் 18 ஆம் தேதி கோவையில்
நடக்கிறது..................... இதில் தொலைநோக்கு பார்வையோடு நாட்டு
மக்கள் நன்மை கருதி பல்வேறு 'முக்கிய' தீர்மானங்கள் நிறைவேற்ற
ப்பட உள்ளன....!
நாலு powerful telescope வாங்க போறங்களா ,கட்சியை கலைக்க போறாங்களானு எல்லாம் கேட்க கூடாது!!
வர்ட்டா....
***********************************************
நாட்டுக்கு மிக அவசியமான செய்திகளை உங்களுக்கு அள்ளி
தந்ததில் மகிழ்ச்சி.....உங்களுக்கு வளந்த மாதிரி பிறருக்கும்
பொது அறிவு வளர ஒட்டு போடவும்..... :))
ஜெட்லி.....
33 comments:
பொ.அ. அப்டேட் பண்ணியாச்சு:)
சூப்பர் காமெடி BOSS...
KEEP IT UP...
MANO
//ராஜலீலை கடந்த சனிக்கிழமை நூறாவது நாள் வெற்றி விழாவை
கொண்டாடியது....!!//
தல, இதைப் பத்தி நானும் எழுதணுமுண்ணு, நாலாவது வாட்டி பாத்தபோதே நினைச்சேன். முந்திக்கிட்டீங்க! இருந்தாலும் எடுத்த எடுப்புலேயே இப்படியொரு சூப்பர் நியூஸ் கொடுத்ததுக்காக ரொம்ப ’தேங்க்ஸ்’.
////நாலு powerful telescope வாங்க போறங்களா ,கட்சியை கலைக்க போறாங்களானு எல்லாம் கேட்க கூடாது!!////
JETLI IS BACK!
NEWER AND BETTER NEWS!
Ramba, Rajaleelai, Ramarajan and Sarath Kumar - All in one post!
kalakkal!
கலக்(குற)கல் செய்திகள் தம்பி...
என்ன படமுங்க... உங்க தலைவர் ராமராஜனோடது!!
ராம ராஜன் ஸ்டில் அசத்துது
ஹாஹ்ஹா, எல்லாமே சூப்பர் ஜெட்லி :)))
//சுறாக்கு சரியான போட்டி மேதை படம்தான் என்று ஊருக்குள்ள
பேசிக்கிறாங்க//
பின்ன?
@ வானம்பாடிகள்
மிக்க நன்றி ஐயா....
@ MANO
thanks mano...
@ சேட்டைக்காரன்
என்னது நாலாவது வாட்டி பார்த்தியா...??
நான் ஒரு வாட்டி கூட பார்க்கலப்பா :((
@ Chitra
நான் இங்கே தான் இருக்கேன் எங்கே போனேன்??
ரசித்ததற்கு நன்றி
@ துபாய் ராஜா
நன்றி அண்ணே ...
@எட்வின்
மேதை...
ஸ்டில் எல்லாம் பாருங்க...மிரண்டுடுவிங்க....
@ மோகன் குமார்
எல்லாம் தலைவர் செயல்...!!
@ ரகு
நன்றி....மேதை முதல் நாள் முதல் ஷோ போறோம்...!!
* தல, ஆனாலும் கூச்சபடாம நின்னு ராஜ லீலை போஸ்டரை படம் எடுத்தீங்க பாருங்க அங்க நிக்கறீங்க நீங்க....
*இந்த சரத்குமார் தொல்லை தாங்க முடியலை தல...
*கண்டிப்பா மேதை படத்துக்கு நல்லா ஓபனிங் இருக்கு தல...
////////என் கணவர் அனுமதியுடன்
"திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்..."
நடிகை ரம்பா பேட்டி.....
நீங்க நடிப்பிங்க....யார் பார்க்கறது??
போய் புள்ளக்குட்டிய படிக்க வைங்கம்மா....!!///////
சரியாக சொன்னீங்க !
அனைத்தும் கலக்கல் . சற்று வித்தியாசமான முயற்சிதான் வாழ்த்துக்கள் !
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .
really intersting pa..
neengal pesama eluthalara agalam.....
why are you hiding your talents inside??
In Bangalore also there is regular un sheduled power cut da.ily
///"தலைவர் இஸ் பேக்."///
அருமையான செய்தி. நூறாவது நாள் போஸ்டருக்காக காத்திருக்கிறேன்.
ஒரு சின்ன திருத்தம். சுறாவுக்கு மேதை போட்டியல்ல. மேதைக்கு சுறா போட்டி.
நான் இருக்கும் ஊரில் பவர் கட்டே இல்லை..
ராமராஜன் படம் வருதா.. இன்னுமா இவரை இந்த ஊரு நம்பிக்கிட்டு இருக்கு?
// Sukumar Swaminathan said...
* தல, ஆனாலும் கூச்சபடாம நின்னு ராஜ லீலை போஸ்டரை படம் எடுத்தீங்க பாருங்க அங்க நிக்கறீங்க நீங்க....
//
இதுல என்னங்க கூச்சம் இருக்கு..போஸ்டர் ஓட்டுன
அவுங்களேக்கே இல்ல...நமக்கு ஏன்....
@♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫
நன்றி சங்கர்....
@♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫
நன்றி சங்கர்....
@ G.D.Aswin
பார்க்கலாம் அஸ்வின்....
வாழ்த்துக்கும் ஊக்கத்துக்கும் நன்றி..
@ ஷாஜி
தகவலுக்கு நன்றி....
@ Bala De BOSS
கண்டிப்பா நூறு ஓடிச்சுனா ஸ்பெஷல் பதிவு வரும் நண்பா....
@ முகிலன்
நீங்க கொடுத்து வச்சவர் பாஸ்.....
மேதை படம் வரட்டும்...அப்புறம் பேசுவோம்....
//மேதை (தலைவர் இஸ் பேக்)//
அட என்னப்பா,ஒரு செகண்ட்ல ஜெர்க் ஆயிட்டேன்.என்னது சிக்ஸ் ‘பேக்’கான்னு?அப்புறம் பாத்தா......
//இந்த படம் ரீலீஸ் ஆகாதுனு நினைச்சேன் பார்த்தா புது புது ஸ்டில்ஆ ரீலீஸ் பண்றாங்க.எனக்கு பயமா இருக்கு...//
விடுங்க பாஸ்....வாழ்கையில சில மரண அடிகள் விழத்தான் செய்யும்....
//இப்ப மட்டும் நீ விமர்சகரா?? நல்ல கேள்வி.//
நீ என் ரகம்யா....ஆனா,இத எல்லாம் ஊருக்குள்ள சொல்லிட்டு திரியாதையா....
//சுறாக்கு சரியான போட்டி மேதை படம்தான் என்று ஊருக்குள்ள
பேசிக்கிறாங்க!!//
இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.சுறாவுக்கு இணை சுறாவே....
எத எதோட கம்பேர் பண்ணிக்கிட்டு?
மிக முக்கியமான செய்திகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
கரகாட்டக்காரன் பட நாயகன் நடிக்கும் புதுப் படத்திற்கு முதல் நாள் விமர்சனம் எழுதலைன்னா !!!!!!!! பாருங்க...
வார்த்தை தவறி விட்டீர்கள்...ராஜலீலை நூறாவது நாள் பதிவுக்கு நல்ல படமாகப் போடுவதாக வாக்களித்திருந்தீர்கள்...!
@ ILLUMINATI
சுறாக்கு இணை சுறாவா,,,,
உங்க கொலைவெறி புரியுது பாஸ்...
@ பின்னோக்கி
ரீலீஸ் ஆனா கண்டிப்பா எழுதுவேன்...
@ ஸ்ரீராம்
எங்கே இருந்து நல்ல படம் போடுறது.....
ஸ்டில் கிடைக்கிலங்க....
//தொலைநோக்கு பார்வையோடு நாட்டு
மக்கள் நன்மை கருதி பல்வேறு 'முக்கிய' தீர்மானங்கள் நிறைவேற்ற
ப்பட உள்ளன....!//
இதுக்கான அர்த்தம், மாநாட்டுக்கு கூட்டம் வரலைன்னா, தூரத்தலு நடந்து போறவங்களை டெலஸ்கோப் மூலமா பார்த்துக்கிட்டே பேசுவாங்கன்னு நினைக்கிறேன்.
-
DREAMER
Post a Comment